Wednesday, November 2, 2011

விஜயிற்காய் தீக்குளிக்க தயாரான பதிவர் - வேலாயுத வெறி!

பதிவின் நோக்கம்: இச் சம்பவத்தோடு தொடர்புடைய பதிவரை அவதூறு செய்வதோ அல்லது தனி மனிதத் தாக்குதல் நிகழ்த்துவதோ அல்ல. 
விஜய் ரசிகர்கள் பதிவினைப் படித்த பின் உங்கள் கருத்துக்களை முன் வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சே! கேவலமா இருக்கு! எம் தமிழ்ச் சமூகத்தின் தீவிர வெறியினை நினைத்தால்!

ஒரு மனிதனது தனி மனித ஆசாபாசங்களுக்குள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இப் பதிவினை எழுதவில்லை. ஒவ்வோர் மனிதர்களுக்கும் ஒவ்வோர் விதமான உணர்வுகள் இருக்கும். ஒவ்வோர் மனிதனின் ரசனைகளும் அவனது உள் மன உணர்வுகளைப் பொறுத்து வேறுபட்டுக் கொள்ளும். நடிகர்கள் மீதான ரசனையும் ஒரு அளவோடு இருந்தால் சமூகத்தில் உள்ள ஏனைய மக்களுக்கு வெறுப்பினை வரவைக்காது என்பது யதார்த்தம். எந்த ஒரு விடயமும் அளவுக்கு மீறி தீவிர வெறித்தனத்தோடு நோக்கப்படுகையில் தான் அவை விபரீதமான முடிவினைத் தருகின்றது.
ஒரு நடிகரைத் தெய்வமாகவும், தம் வாழ்வில் காவல் நாயகனாகவும் நோக்குவதற்கு அப்பால்; மனிதாபிமான உணர்வோடும், உளவியல் ரீதியிலும் நோக்கப் பட வேண்டிய விடயம் இது. கடந்த வார இறுதியில் வர்ணங்கள் நிறைந்த ஆலயத்தில் பூஜையின் போது அடிக்கப்படும் பெயர் கொண்ட பதிவர் ஒருவர்; அஜித் ரசிகராக தன்னை பிரகடனப்படுத்தி, விஜயின் வேலாயுதம் படம் பற்றிய பார்வையினை எழுதியிருந்தார். இதனால் குறிப்பிட்ட பதிவரின் பதிவில் ஒன்று கூடிய விஜய் ரசிகர்கள் பின்னூட்டம் மூலம் சொற் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆரோக்கியமான சொற் போர் என்றால் பரவாயில்லை. இறுதியில் மணியோடு இணைந்த கலர் புல்லான பெயர் கொண்ட பதிவர் விஜய் ரசிகர்களை நோக்கி ஒரு சவால் விட்டிருந்தார்.

"மங்காத்தா வெற்றி பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வோம் எனும் நிலமையில் அஜித் ரசிகர்கள் இருந்தார்கள்." "உங்கள் விஜயிற்காக உங்களால் என்ன செய்ய முடியும்?" எனக் கேட்டிருக்கிறார் கலர் புல்லான பெயர் கொண்ட பதிவர். அந்த விஜய் ரசிகரோ; "என்ன வேண்டுமானாலும் எங்கள் விஜய் அவர்களுக்காக செய்வோம்" என வார்த்தைகளை விட, கலர்புல்லான பெல் பதிவர் கேட்ட கேள்வி "உங்கள் விஜய் அவர்களுக்காக உங்களால் தீக்குளிக்க முடியுமா?" விஜய் ரசிகரின் உணர்வினை இதற்குப் பிறகு நான் சொல்லவா வேண்டும்?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
பொங்கி எழுந்தார். "நான் தீக்குளித்துக் காட்டுவேன்! வேலாயுதம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகன் தீக்குளித்தான் என வரலாறு சொல்ல வேண்டும் என்பதற்காக தீக்குளிப்பேன்" என உணர்ச்சிக் கொதிப்பில் முட்டாள்த்தனமாக அறிக்கை விட, அங்கே பார்வையாளர்களாக பதிவினைப் படித்துக் கொண்டிருந்த பதிவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அப் பின்னூட்டங்கள் யாவும் கலர்புல்லான பெயர் கொண்ட பதிவரால் அழிக்கப்பட்டது. உணர்ச்சிக் கொதிப்பில் கொந்தளித்த விஜய் ரசிகப் பதிவருக்கும் ஒரு சில நண்பர்கள் அறிவுரை சொல்லி தீக்குளிக்கும் எண்ணத்தை கை விடும் படி எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தார்கள்.

என்னுடைய கேள்வி என்னவென்றால்; ஈழத்தில் போர் நடந்தால் தீக்குளிக்கிறீங்க. தூக்குத் தண்டனை என்றால் தீக்குளிக்கிறீங்க. அடக் கறுமம், இப்போது நடிகருக்காகவும் தீக்குளிக்கத் துணிந்திருக்கிறீங்க. உங்களைப் பற்றியும், உங்களைப் பெற்று வளர்த்த பெற்றோரைப் பற்றியும் ஒரு நிமிடமாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீங்களா? நடிகர் விஜய் அவர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என அறிக்கை விட்ட, மௌன ஒலியோடு தொடர்புடைய ஊர் பெயரைக் கொண்ட அன்பு உள்ளமே! உங்களிடம் ஒரு கேள்வி! ஏன் இந்த முட்டாள் தனமான முடிவு? தீக்குளித்தலுக்கு உள்ள அர்த்தம் என்னவென்று தெரியுமா?
நடிகனுக்கு ரசிகனாக இருப்பது வேறு! அதன் உச்சபட்ச வெளிப்பாடாக பால் ஊற்றுகின்றீர்கள். பட்டாசு கொழுத்துகின்றீர்கள். போயும், போயும் பல வருடங்களாக நாளை நீங்கள் நன்றாக வாழ வேண்டும் எனும் நோக்கில் உங்கள் பெற்றோரால் ஊட்டி வளர்க்கப்பட்ட உங்கள் உடலை அல்லவா சிதைத்து தீயில் வெந்து சாகத் துணிகின்றீர்கள்? தமிழனின் கலாச்சாரத்தில், தமிழர் தம் வரலாற்றுப் பாதையில் தீக்குளித்தலுக்கு இருந்த அர்த்தம் உங்களைப் போன்ற அரை வேக்காடுகளால் திசை மாறுகின்றது. கொஞ்சமாவது உங்கள் மண்டையில் உள்ள களி மண் மூளையை உருட்டிப் பிரட்டி சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
நீங்கள் தீக்குளித்தால் உங்கள் பெற்றோரை, உங்களுக்காய் வாழ நினைப்போரை, உங்கள் சகோதரர்களை காலம் பூராகவும் இளைய தளபதி விஜய் அவர்களா வந்து பார்த்துக் கொள்ளுவார்? ஹி...ஹி.. அடக் கறுமம்! சின்னப் பசங்களுக்கு இருக்கிற சிந்திக்கிற அறிவு கூட உங்களைப் போன்ற தீவிர வெறியர்களுக்கு இல்லையே! தளபதி விஜய் அவர்களுக்காய் தீக்குளித்தார் என்று உங்கள் பெயருடனும் போட்டோவுடன் பத்திரிகையில் செய்தி வரும். இதற்கு உச்சபட்ச பரிசாக விஜய் அவர்கள் தன்னுடைய நிதியிலிருந்து சில இலட்சம் ரூபாக்களை உங்களின் இறுதிக் கிரியைகளுக்காகவும், உங்கள் பெற்றோருக்காவும் வழங்குவார். சில நாட்களில் உங்கள் பெயர் வரலாற்றிலிருந்து மறைந்து விடும். இந்தக் கொடுமை தேவையா?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
அட...இதற்காகவா உங்கள் உடலை மாய்த்துக் கொள்ளப் போகின்றேன் என்று அறிக்கை விடுகின்றீர்கள்? நீங்கள் இறந்த பின்னர் நடிகர் விஜய் வந்தா உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளப் போகின்றார்? ஹி...ஹி...நீங்கள் என்னதான் உணர்சிக் கொதிப்பில் இவ்வாறான முடிவுகளை எடுத்தாலும், படம் வெற்றி பெறுகிறதோ அல்லது தோல்வியடைகிறதோ விஜய் வாங்கும் சம்பளத்தில் எப்போதாவது ஒரு பைசாவாச்சும் குறைந்திருக்கிறதா? இல்லை அஜித் வாங்கும் சம்பளத்தில் குறைந்திருக்கிறதா? எவ்ளோ பெரிய காமெடி பண்ணுறீங்க! தீக்குளிக்கப் போகும் உங்களை நினைத்தால் சிரிப்புச் சிரிப்பா வருது. 

இறுதியாக தீவிர ரசிகர்கள் என்ற பெயர் தாங்கி வலம் வரும் உங்களிடம் நான் முன் வைக்கும் ஒரு கோரிக்கை. ஒரு சராசரி மனிதன் எனும் நிலையிலிருந்து கேட்கின்றேன். 

நடிகர்களுக்காக தீக்குளிக்கிறேன், செடில் குத்தி காவடி எடுக்கிறேன், கால் வலிக்க நடைப் பயணம் போகின்றேன் என்றெல்லாம் அறிக்கை விடும் உங்களிடம் இச் சமூகத்திற்காக நல் நோக்கத்தோடு ஒன்றை மாத்திரம் கேட்கிறேன். ஊர் தோறும் உள்ள நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று திரண்டு சிறு தொகைப் பணத்தினை உங்கள் ஊர் கடைகளில் வாங்கி, மாதாந்தம் கஷ்டப்பட்டும் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உங்கள் ஊர் ஏழை மாணவரின் கல்வி முயற்சிக்காக செலவு செய்யலாமே! உதவலாமே! உங்களால் முடியாததா? 

நடிகருக்காய் உயிரை விட விரும்பும் ரசிகர்களே! உங்கள் தலைவரின் பெயரால் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என நினைக்க கூடாதா? இந் நேரத்தில் நீங்கள் சொல்லலாம். மாதாந்தம் பணத்தினை திரட்டுவது சிரமமாக இருக்கும் என்று. தலை ரசிகர்களும் சரி, தளபதி ரசிகர்களும் சரி, நீங்கள் ஒரு நல்ல நோக்கத்தோடு செயற்படப் போகின்றீர்கள் என்று கூறி உங்கள் ஊர்ப் வணிக நிறுவனங்களிடம் உங்கள் திட்டங்களைச் சொல்லிப் பாருங்கள்! அதற்கு நிச்சயம் கைம் மேல் பலன் கிடைக்கும்! 
ரசிகர்களாக இருங்கள்! தீவிர வெறியர்களாக இருக்காதீர்கள்! 

பிற் சேர்க்கை: இச் சம்பவதோடு தொடர்புடைய - தீக்குளிக்கத் தயார் என அறிக்கை விட்ட பதிவர், தீக்குளித்தால்: 
அவர் நடிகர் விஜய் அவர்களுக்காக ஆத்மார்த்த உணர்வோடு தீக்குளிக்கவில்லை. இன்னோர் பதிவருடன் சவால் விட்டே தீக்குளித்தார் எனும் உண்மையினை அம்பலப்படுத்தும் பின்னூட்டங்கள் மூலம் பெறப்பட்ட ஸ்கிரீன் சொட் ஆதாரங்கள் வெளியிடப்பட்டு அவரின் உண்மை நிலை உலகறியச் செய்யப்படும் என்பதனை மிக மிக வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றேன்!தேவை ஏற்படின் தமிழக பொலிசாருக்கும் இந்தப் பின்னூட்டங்களையும், குறிப்பிட்ட பதிவரின் விபரங்களையும் அனுப்பி வைக்க நண்பர்களின் உதவியினை நாடவுள்ளேன்.
நிரூபனின் நாற்று www.thamilnattu.com
பெரு மதிப்பிற்குரிய தல தளபதி ரசிகர்களே! பதிவினை முழுமையாகப் படித்தீர்களா? இப்படியான ரசிகர்களை சாரி வெறியர்களையா நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள்? உங்களோடு வலம் வந்து, நடிகர்களுக்கே அபகீர்த்தி ஏற்படுத்தி தம் உடலை மாய்த்துக் கொள்ளத் துடிக்கும் இத்தகைய தீவிர வெறியர்களுக்கு நீங்களும், உங்கள் ரசிகர் மன்றங்களும் சொல்லும் பதில் என்ன?
thamilnattu.com இன் ஒரிஜினல் பதிவு, அனுமதியின்றி காப்பி செய்யப்பட்டுள்ளது
பிற் சேர்க்கை: யாரும் குறித்த பதிவர் மீது தனி மனிதத் தாக்குதல் நிகழ்த்தும் வகையில் பின்னூட்டம் எழுத வேண்டாம். பதிவினைப் படித்த பின்னர், புரிந்துணர்வோடு சம்பவத்தோடு தொடர்புடைய பதிவருக்கு அறிவுரை கூறும் வகையில் பின்னூட்டம் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும். 

இப் பதிவினை எழுதி முடிக்கையில் வடபழநி முருகன் ஆலயத்தில் வேலாயுதம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் செடில் (முள் காவடி) காவடி எடுக்கிறார்கள் எனும் செய்தியும் வெளியாகியிருக்கிறது. முருகா! நீ தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்!
**********************************************************************************************************************
இன்றைய தினம் வெளியாகிய மற்றைய பதிவினைப் படிக்க:

வண்டலூர் பையனை ஏமாற்றிய லண்டன் தமில் பெண்!

************************************************************************************************************************

60 Comments:

M.R said...
Best Blogger Tips

தன் உயிரை மாய்த்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை ,

K.s.s.Rajh said...
Best Blogger Tips

என்ன இது சின்னபுள்ளத்தனமாக இருக்கு நண்பர்களே....முதலில் நல்ல மனநல மருத்துவராக போய் பாருங்கள்.......

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

//தல தளபதி ரசிகர்களே! பதிவினை முழுமையாகப் படித்தீர்களா?//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தலதளபதி எங்கள் தலைவர் சந்தானம் தான், அப்பிடின்னே, பதிவு எங்களுக்கா எழுதியிருக்கீங்க?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

தீவிர ரசிகர்களுக்கு சரியான சவுக்கடி...

திருந்துங்கடா...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

ஒவ்வொரு நடிகரும் தேவை மச்சான்... ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பியல்புகள் இருக்கிறது, அவரவர் அவரவருக்கு முடிந்த விதத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார்கள், இதில் ஒருவர் அவரது ரசனைக்கு பிடித்த நடிகருக்கு ரசிகராகிறார். விஜய்யா-அஜித்தா என்கிற மோதல் எப்போதுமே தனிமனித விருப்பு வெறுப்புகளுடன் நடக்கும் மோதலே, அந்த மோதலை எப்போதும் நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். எனக்கு சோறு பிடிக்கும் உனக்கு ரொட்டி பிடிக்கும், சோறு பெருசா ரொட்டி பெருசான்னு போடுற சண்டையும் இதுவும் ஒண்ணுதான்.. நடிகர்களாக விஜய், அஜித் இருவர் மீதும் நமக்கு தீவிர விமர்சனகள் இருந்தது. மங்காத்தா, வேலாயுதம் ரெண்டுமே அந்த விமர்சனகளை துடைத்து எறிந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இதுக்கும் மேல, விஜய் பெருசா, அஜித் பெருசான்னு சண்ட போடுறவங்கள யாரும் கண்டுக்க தேவையில்லைங்குறது என்னோட தாழ்மையான கருத்து.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபன் விஜயை தாகி பதிவு போட்டதுக்காக டீ குடிக்க வேண்டும் தயாரா? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நல்ல நோக்கத்து,க்காக எழுத;ப்பட்ட பதிவு இது எல்லோருக்கும் சரியாய் போய்ச்சேர வேண்டும்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
//நிரூபன் விஜயை தாகி பதிவு போட்டதுக்காக டீ குடிக்க வேண்டும் தயாரா? ஹி ஹி//

அண்ணே, அப்போ நீங்க என்ன குடிக்கணும், பெட்ரோலா?

Anonymous said...
Best Blogger Tips

ம்ம்... தீ குளிக்க தேவையான பெற்றோலும் தீப்பெட்டியும் அப்பன்ர உழைப்பாய் தான் இருக்கும்.அதை வாங்கி எவனோ ஒரு ........ க்காக தீக்குளிக்குதுகள்.. அவன் அங்க ஏசி ரூமுக்க படுத்துக்கிடப்பான்... தன்ர படம் ஓடோனும் எண்டதுக்காய் தன்ர புள்ள குட்டிய கூட அவன் வெயிலுக்க விட தாயாரில்ல..இதுகள் என்னடாண்டா..... அடச்சே!

யார் அந்த நபர் எண்டு எனக்கு தெரியாது ..ஆனா ரசிகர் எண்ட போர்வையில இருக்குற வெறியர்களுக்கு நான் போட்ட கமெண்ட் பொருந்தும் ...

settaikkaran said...
Best Blogger Tips

இப்படி உப்புப்பெறாத விஷயத்துக்கெல்லாம் தீக்குளிக்கிறேன் என்பவர்களுக்கு, அறிவுரைகள் உதவுமா? :-(

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

ஹல்லோ மச்சி, சொல்கிறேன் என்று குறை நினைக்காதே!இந்தப் பதிவால் எவ்விதமான பிரியோசனமும் இல்லை! இது சாதாரண நண்பர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும்!

மற்றும்படி, நீ குறிப்பிட்ட தீவிர ரசிகர்கள் + வெறியர்களுக்கு எந்தவிதமான தகவல்களும் இதில் இல்லை! காரணம் ஏன் என்பதை விளக்குகிறேன்!கேள்!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்
நானும் இப்படியான தீவிர ரசிகர்களை கண்டிச்சிருக்கிறேன்... ஒரு ரசிகனாய் இருப்பதில் தவரில்லை ஆனா இப்படியான மனநோயாளிகளை என்ன செய்யலாம்..??

சில  வேளை அவர் டீ குடிப்பேன்னு சொல்வதற்கு பதிலாக தீ குளிப்பேன்னு தவறுதலாக சொன்னாரா..??ஹி ஹி படிச்சவங்ககூட இப்படி இருப்பது மனவருத்தத்தை தருகின்றது...

காட்டான் said...
Best Blogger Tips

கந்தசாமியின் கருத்தே என் கருத்தும்...

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

முதலில், அந்த வெறித்தனமான ரசிகர்கள் சாதாரண மனோ நிலையில் இருக்கமாட்டார்கள்! சாதாரணமாக சொல்லி அவர்களுக்குப் புரியவைக்கவும் முடியாது! இந்நிலையில் நீயோ நக்கல் நையாண்டியாக, இடையிடையே ஹி ஹி ஹி ... ஹா ஹா ஹா போட்டு சொல்லியிருக்கிறாய்!

இப்படிச் சொல்லி அவர்களுக்குப் புரியும் என்று நீ நினைகிறாயா? புரியவே புரியாது! அப்படியானவர்களை மீண்டும் ஒரு முறை கிண்டலடித்தோடு இப்பதிவின் நோக்கம் முடிந்துவிடும்! அவ்வளவுதான்!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

வெறித்தனமான ரசிகர்கள் பற்றிக் கவலைப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு வெறியூட்டும், நடிகர்கள் + இயக்குனர்கள் பற்றியே நீ கண்டிக்கவேண்டும்! தீக்குளிப்பவர்களை எடுத்துப்பார்த்தால்,அவர்கள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது பெருநகரங்களில் ஆடம்பரமாக வாழ்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்! அனைவரும் ஏழைகள்!

இந்நிலையில் சாதாரண அப்பாவிகளை வெறியர்களாக மாற்றும்விதமாக, படங்களில் பஞ்ச் வசனங்களையும், காட்சிகளையும் அமைக்கும் இயக்குனர்களையும் நடிகர்களையும் நீ வன்மையாக கண்டிக்க வேண்டும்! ஏனென்றால் அவர்கள் படித்தவர்கள்! அவர்களுக்கு உறைக்கிறமாதிரி சொன்னால் தான் புரியும்!

மச்சி, நீ செய்வாயா?

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

ரசிகர்களுக்கு வெறியூட்டுவதில் விஜையைவிட, வல்லவர் ரஜினி! ஒவ்வொரு படங்களிலும், அவர்பேசும் வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு வெறியூட்டும் விதமாக உள்ளன என்பதை நான் சொல்லித்தான் நீ அறியவேண்டுமா என்ன?

ஆகவே உன்னுடைய முதலாவது கண்டனம் ரஜினியை நோக்கியதாகவே இருக்கவேண்டும்!

மச்சி, நீ ரஜினியைக் கண்டித்து ஒரு பதிவு போடுவாயா?

தனிமரம் said...
Best Blogger Tips

என்னத்தைச் சொல்ல இப்படியான உள்ளங்களுக்கு!????

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் மக்கள் வாழ்வதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

மச்சி, போதைவஸ்துக்கு அடிமையானவர்கள், ஒரு நாளைக்கு போதைப் பொருள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் படும்பாடு இருக்கிறதே! சொல்லிமாளாது! அப்படியான பலரை நான் நேரில் பார்த்துள்ளேன்!

அவ்வளவு ஏன்? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ஒருவருக்கு, குறிப்பிட்ட நேரத்தில், ஒரு சிகரெட் கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம்! அந்த நேரத்தில் அவர்படும் பாடு இருக்கிறதே! கொலையும் செய்வார்!
என்னுடைய கடையில் வந்து 50 சதம் சிகரெட்டுக்காக கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சுவார்கள்!

இதுபோலத்தான் ஒரு நடிகரால் வெறியூட்டப்பட்ட ஒரு ரசிகன், ஒரு படத்தில் அந்த நடிகர் வெறியூட்டும் விதமாக நடிக்காவிட்டால், ஏமாந்து போகிறான்!

ரஜினியின் எந்திரன் படத்தின் போதும், விஜையின் காவலன் படத்தின் போதும், ரசிகர்கள் பட்டபாடு இருக்கிறதே! அறியவில்லையா நீ?

எமது வலையுலகிலும் பலர் “ ஏமாந்து போனோம்! ஏமாந்து போனோம்” என்று புலம்பினார்கள்! குறிப்பாக எந்திரன் படத்தில், ரஜினி சண்டை போடாதது + அவருக்கு நல்ல ஓபனிங் இல்லாதது + கலாபவன்மணிக்குப் பயந்து ஓட்டமெடுப்பது போன்றவை ரசிகனை கடுமையாக ஏமாற்றியது!

இதுபற்றி வலையுலகில் பலர் கவலைப்பட்டு எழுதியதையும் பார்த்தேன்!

மச்சி, நீ சாதாரண ரசிகர்களைத் திருத்துவது கிடக்கட்டும்! முதலில் வலையுலகில் இருக்கும் வெறியர்களை உன்னால் திருத்த முடியுதா? என்று பார்!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

மச்சி, விஜய் - காவலன் மாதிரி தொடர்ச்சியாக 4 படங்களில் நடித்தாலோ, ரஜினி - எந்திரன் மாதிரி 4 படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலோ, அவர்களது ரசிகர்களில் பலர் தீக்குளிப்பார்கள்!

இந்த யதார்த்தத்தை உன்னால் மறுக்க முடியுமா?

செங்கோவி said...
Best Blogger Tips

சும்மா ஏதோ கிண்டல் பதிவுன்னு பார்த்தால், நிஜமாகவே தீக்குளிக்கக் கிளம்பிட்டாங்களா..விளங்கிரும்..சீக்கிரம் குளிக்கச் சொல்லுங்க.

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

மச்சி, ரசிகர்களுக்கு மோசமாக வெறியூட்டுபவர்கள் என்ற ரீதியில் ரஜினி, விஜய், அஜித் இந்த மூன்றுபேரையும் நீ கண்டித்து ஒரு 4 பதிவுகள் போட்டுப்பாரு!

ஹி ஹி ஹி ஹி

ஓட்டுக்கள் குறையும்!
ஹிட்ஸுகள் குறையும்!
பலர் எதிரிகள் ஆவர்!

வலையுலகில் உனது பெயர் கெட்டுப்போகும்!

ஹி ஹி ஹி இதுதான் மச்சி உண்மை!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களைப் பார்த்து நீ எள்ளல் கலந்த தொனியில் பதிவு போட்டிருக்கிறாய்! குறிப்பாக,

“ ஹி...ஹி.. அடக் கறுமம்! சின்னப் பசங்களுக்கு இருக்கிற சிந்திக்கிற அறிவு கூட உங்களைப் போன்ற தீவிர வெறியர்களுக்கு இல்லையே! ”

“ ஹி...ஹி...நீங்கள் என்னதான் உணர்சிக் கொதிப்பில் இவ்வாறான முடிவுகளை எடுத்தாலும், படம் வெற்றி பெறுகிறதோ அல்லது தோல்வியடைகிறதோ விஜய் வாங்கும் சம்பளத்தில் எப்போதாவது ஒரு பைசாவாச்சும் குறைந்திருக்கிறதா?”

போன்ற வாக்கியங்களில் காணப்படும் எள்ளல் தொனி, குறிப்பட்ட வெறித்தனமான ரகிசர்களை மேலும் கோபப்படுத்துமே தவிர, ஒருபோதுமே மாற்றி யோசிக்க வைக்காது!

இப்பதிவு, நோயாளிகளைப் பார்த்து டாக்டர் நையாண்டி செய்வதுபோல இருக்கிறது!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

மச்சி, வெறித்தனமான ரசிகர்கள், திருந்த வேண்டும் என்று உண்மையிலேயே நீ ஆசைப்பட்டால், முதலில் நீ என்ன செய்யவேண்டும் தெரியுமா? அதிகளவான வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட + அதிகளவில் ரசிகர்களுக்கு வெறியூட்டுகின்ற ரஜினியைக் கண்டித்து நீ ஒரு பதிவு போட வேண்டும்!

ஹி ஹி ஹி அப்படி ஒரு பதிவு போட்டுப் பார்! அப்புறம் தெரியும்!

அதுவும் சாதாரணமாக போடக் கூடாது! தலைப்பே சென்சேஷனலா இருக்கணும்!

“ தமிழன் அல்லாத ரஜினி, தமிழர்களின் சூப்பர்ஸ்டாராக இருப்பது, அவரின் திறமையாலா? தமிழர்களின் மடமையாலா? “

இப்படி தலைப்பு வைக்க வேண்டும்! ஹி ஹி ஹி அப்புறம் தெரியும்! வலையுலகில் எவ்வளவு வெறியர்கள் இருக்கிறார்கள் என்று!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

மச்சி, இன்னொரு வேண்டுகோள்! இந்தப் பதிவு விஜய் ரசிகர்களைக் குறிவைத்து நீ போட்டிருப்பதால், பலர் வந்து நல்ல பிள்ளை போல, அச்சா கமெண்டுகள் போடுகிறார்கள்! காரணம் இவர்களுக்கு விஜய்யைப் பிடிக்காது!

ஆனால் இவர்களும் வேறு நடிகர்களின் வெறியர்களாகவே இருப்பார்கள்! அதனால்தான் சொல்கிறேன்! நீ, ரஜினி, அஜித் இவர்களையும் கண்டித்து + கிண்டலடித்து ஒரு பதிவு போட்டுப் பார்! அப்புறம் தெரியும்!

ஹி ஹி ஹி ஹி அவ்வளவு ஏன்? சந்தானத்தைக் கண்டித்து ஒரு பதிவு போட்டுப் பார்! அப்புறம் தெரியும் வலையுலகில் எத்தனை “ சந்தான வெறியர்கள்!” இருக்கிறார்கள் என்று!

ஹி ஹி ஹி ஹி !!!!

SURYAJEEVA said...
Best Blogger Tips

பெட்ரோல் விலை வாசி உயர்வு,
மூன்று அப்பாவி தமிழர்களின் தூக்கு தண்டனை நிலுவை..
கூடங்குளம் மக்கள் போராட்டம்..
கல்பாக்கம் கதி...
கருப்பு பண பட்டியல் வெளியிடுவார்களா மாட்டார்களா..
தமிழக மாணவர்களுக்கு அனைத்து புத்தகங்களும் கிடைக்கது விட்டதா?
கால்வாயில் ஓடாமல் ரோட்டில் ஓடும் சாக்கடை..
வேலை வாய்ப்பு தருவதில் ஊழல்...
இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்..
இருந்தாலும்
இந்த ஒரு வார காலமாய் தமிழகத்தை உலுக்கிய மிகவும் பெரிய பிரச்சினை..
வேலாயுதமா? ஏழாம் அறிவா?
போங்கடா....

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்.அட்டகாசமான,உணர்வூட்டும் பதிவு.இது தான்(தீ குளிப்பது) படித்த முட்டாள் செய்யும் வேலையோ?எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு ஏங்கித் தவிக்கையில் கட அவுட்டுக்கு பாலாபிஷேகம்,விந்தை உலகம் இது!

Unknown said...
Best Blogger Tips

என்னத்த சொல்ல இப்படியும் சிலர் ஆண்டவன் தான் காப்பாத்தணும்

Anonymous said...
Best Blogger Tips

நல்ல ரசிகருக்கும் வெறியருக்கும் உள்ள சிறிய எல்லைக்கோடு அறியாமையால் இப்படி அடிக்கடி தாண்டப்படுவது வேதனை தான் சகோதரம்...

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

//ரசிகர்களாக இருங்கள்! தீவிர வெறியர்களாக இருக்காதீர்கள்!//
இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்?
மிகத்தேவையான நல்ல பதிவு!

உணவு உலகம் said...
Best Blogger Tips

உங்கள் ஆதங்கம் புரிகிறது.புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டுமே!

ஆகுலன் said...
Best Blogger Tips

//தமிழனின் கலாச்சாரத்தில், தமிழர் தம் வரலாற்றுப் பாதையில் தீக்குளித்தலுக்கு இருந்த அர்த்தம் உங்களைப் போன்ற அரை வேக்காடுகளால் திசை மாறுகின்றது. கொஞ்சமாவது உங்கள் மண்டையில் உள்ள களி மண் மூளையை உருட்டிப் பிரட்டி சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா?//

எனக்கு யார் இப்படி தீ குளிக்க போறன் எண்டு சொன்னது எண்டு தெரியாது..அனாலும் அவருக்கு வன்மையான கண்டனங்கள்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...
Best Blogger Tips

அட முட்டாப்பசங்களா? இது நடிகர்களின் ரசிகர்களுக்கு
வர வர பிற்சேர்க்கை அழகாகிக் கொண்டு வருகிறது. கவனம் பதிவை மிஞ்சி விட போகிறது

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

VANAKKAM THALAI

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

NALAMA??

Unknown said...
Best Blogger Tips

அந்த மன நோயாளிக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்...இப்படி ஒரு புள்ளைய பெத்ததுக்கு அந்த குடும்பத்துக்கு தேசிய விருது கிடைக்க வேணும்...நன்றி!

Unknown said...
Best Blogger Tips

தளபதி வாழ்க!!
வேலாயுஇதம் மாபெரும் வெற்றி வெற்றி :)

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ.... இப்படியும் வெறியர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்...


இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

K said...
Best Blogger Tips

நண்பா, ரசிகர்களை விமர்சிப்பதைவிட ரசிகர்களுக்கு வெறியூட்டும் நடிகர்களை விமர்சிப்பதே நல்லது என்று நினைக்கிறேன்!

Unknown said...
Best Blogger Tips

என்ன நிரூபன் பீதிய கிளப்புரீங்க.....
நாங்கல்லா ஓசியில டீ வாங்கிக்குடுத்தா குடிப்போம்..

ஹேமா said...
Best Blogger Tips

தற்சமயத்திற்க்கு மிகவும் மிகவும் தேவையான பதிவு !

suvanappiriyan said...
Best Blogger Tips

நல்ல மன நல மருத்துவரை பார்க்கச் சொல்லுங்கள்.

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நண்பரே!
வேலாயுதம் படம் தீபாவளி அன்றே பார்த்தேன்.
விஜயின் ஆடல்,பாடல்,சண்டையை ஆரவாரமாக கை தட்டி ரசித்த அவரது ரசிகர்கள்,
ரத்தத்தின் ரத்தமே...
உடன் பிறப்பே...என்ற பாடலுக்கு தியேட்டரில் மயான அமைதி காத்தார்கள்.
ஒரு ரசிகன் கூட கை தட்டவில்லை.
இந்தக்காட்சி என்னை மிகவும் அதிசயிக்க வைத்தது.
நடிகன் பின்னால் தமிழ்நாடு இனி போகாது என்று சிறு ந்ம்பிக்கை பிறந்தது.

மகேந்திரன் said...
Best Blogger Tips

என்ன கொடுமை நண்பரே,
தொழில்நுட்பம் வளர்ந்தும்,
முன்னேற்றப்பாதையில் செல்ல எத்தனிக்கும்
இளைய சமுதாயத்தினர் மத்தியில்
இப்படியும் புல்லுரிவிகளா????

களைத்தெறியவேண்டும் ....

கார்த்தி said...
Best Blogger Tips

// ரசிகர்களாக இருங்கள்! தீவிர வெறியர்களாக இருக்காதீர்கள்!

இது கருத்து!!! யார் அந்த பதிவர் மைந்தன் சிவா தானே!!! எனக்கு உண்மையா யார் எண்டு தெரியாதுப்பா!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

மைந்தா என்னப்பா ஆச்சு இங்கை உன் பெயர் ரொம்பவும் அடிபடுகிறதே ஓடிவந்து கொஞ்சம் விபரம் சொல்லப்பு

R.Puratchimani said...
Best Blogger Tips

you are 1000% correct.

//மச்சி, ரசிகர்களுக்கு மோசமாக வெறியூட்டுபவர்கள் என்ற ரீதியில் ரஜினி, விஜய், அஜித் இந்த மூன்றுபேரையும் நீ கண்டித்து ஒரு 4 பதிவுகள் போட்டுப்பாரு!//
Guys leave ajith, he has already closed his fan clubs.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

ஸலாம் சகோ.நிரூபன்,
விழிப்புணர்வு ஊட்டி அறிவூட்டும் பதிவு. கேட்டுத்திருந்தினால் நலம். வேற என்னத்த சொல்ல.

அப்புறம் நான் சொல்ல நினைத்ததை சகோ.சூர்யாஜீவா நச்சுன்னு சொல்லி இருக்கார்.

அந்த பின்னூட்டத்தை அப்படியே காபி பேஸ்ட் பண்ணி என் கூகுள் பிளஸ் பக்கத்தில் ஷேர் பண்ணி இருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி

// ரசிகர்களாக இருங்கள்! தீவிர வெறியர்களாக இருக்காதீர்கள்!

இது கருத்து!!! யார் அந்த பதிவர் மைந்தன் சிவா தானே!!! எனக்கு உண்மையா யார் எண்டு தெரியாதுப்பா!
//

மச்சி பதிவினைப் படித்த பின்னர் தானே இங்கே கமெண்ட் போடச் சொன்னேன்,

மைந்தனின் பெயர் பதிவில் வரவில்லையே...
ஏனய்யா..

N.H. Narasimma Prasad said...
Best Blogger Tips

சொல்வதற்கு ஒன்றும் இல்லை நண்பரே.

Yoga.S. said...
Best Blogger Tips

அது ஏன் எங்கேயோ குத்தினால்,வேறெங்கோ வலிக்கிறது??????ஹி!ஹி!ஹி!!!!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மச்சி பதிவை தேடிப்பிடிச்சு கருத்திட வேண்டியிருக்கிறது.. ஹ..ஹ.. (இந்த நேரம் உள்ள பதிவுக்கு வாக்கு மட்டுமே)

ம.தி.சுதா said...
Best Blogger Tips

வாயில தாராளமா வருது மச்சி... அடிச்சால் எல்லாம் நாறிடும்...

மச்சி எந்த ரசிகனும் இதை ஏற்றுக் கொள்ளுறானில்லை... இப்போ தேடுவதற்கு என்னிடம் ஆதாரமுமில்லை..

கலைஞர் ஈழமக்களுக்காக பணம் சேர்த்த போது தளபதி ஐம்பது ஆயிரம் தான் கொடுத்தார் என்று நாம் இருந்த ஊரில் கலைஞர் செய்தி அறிக்கையில் கேட்டேன்...

முடிந்தால் அந்த ரசிகரை உறுதிப்படுத்தச் சொல்லுங்கள்

Rajeevan said...
Best Blogger Tips

namathu thamil sumukam enke pothu endu theriyalla. nenikka nenikka vethanaiya iruku. poium poi oru nadikanukkaka theekulikiran eppaiyavathu thanda samukathukkaka eathum seithuiruppana endu theriyalla.

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

ப்ரெஞ்சுக்காரன் கமெண்டுகளை நீக்கவும்..இவன் விஜய் வெறியனாக இருப்பான் என நினைக்கிறேன்

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

ப்ரெஞ்சுக்காரன் தேவையில்லாமல் ரஜினியை அவதூறாக பேசியிருக்கிறார்..குரிப்பிட்ட சில கமெண்டுகளை நீக்குங்கள்...சர்ச்சை வேண்டாம்..

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Rajeevan said...
Best Blogger Tips

@Rajeevan
YAR INTHA FRENCHKARAN? MUTHALLA AVAN ORU THAMILAN ENDU AVANUKKU NENIPPU VARAVENDUM. EPPADIYANA THARUTHALAIKAL EPPATHAN THIRUNTHA POKUTHUKALO THERIYALLA.

Rajeevan said...
Best Blogger Tips

Thayavu seithu oruvarai oruvar kurai sollvathai niruthividdu, Aakaporvamai ethaiyavathu sollungal. Frenchkaranakaddum illai veru yarakaddum muthalla entha "Heroism"thai viddu thallungal. ungada herovai pattri kathaithal eppadi kopam varuthe eppeyachum ungada thmilenam alinthu kondu irukkum pothu kopam vanthu irukka? eppathan nenga ellam thiruntha poringa......?????????

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails