Tuesday, February 14, 2012

Rise of the planets of Apes - ஆங்கில பட விமர்சனம்

கோலிவூட்/கோலிவுட்/ஹாலிவூட்/ஹோலிவூட்/ஹொலிவூட் பட விமர்சனம்:
மிருகத்திற்கு மனித அறிவு வந்தால் எப்படி இருக்கும்?  அறிய ஆவலா? வாருங்கள்!
மனிதர்களுக்கு மிருக அறிவு வந்துட்டா,நம்ம மனிதனுக்கும் மிருக்கத்திற்குமே வித்தியாசம் தெரியாதுன்னு சொல்லுவாங்க. தீவிரவாதிங்களாகவும், கொடூர வெறி பிடித்த கொல வெறியர்களாகவும், அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொல்லும் தீவீர வெறியர்களாகவும் மனிதர்கள் மிருக புத்தி மற்றும் சைக்கோ குணம் கொண்டு இந்த உலகத்தில் வாழ்ந்திருப்பதை நாம் அவதானித்திருக்கிறோம்.  ஒரு மிருகத்திற்கு மனிதக் குணம் அல்லது ஆறாம் அறிவு கிடைத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் இந்தப் படம் பற்றிய விமர்சனத்துள் நுழைவோம்.
Rise of the planets of the Apes: அமெரிக்காவில் உள்ள ஓர் பயோ டெக்னாலஜி ஆய்வு கூடத்தில விஞ்ஞானியாக இருப்பவர் தான் படத்தோட பிரதான கதாநாயகன் வில் ரொட்மன் (Will Rodman). சிம்பன்ஸி குரங்கிற்கு மனித அறிவிற்கு ஒப்பான ஒரு ஜீனை (மரபணுவை) ஏத்தி குரங்குகளையும் மனுசரைப் போன்ற அறிவு உள்ளவர்களாக மாத்தினால் என்னாகும் எனும் நோக்கில் ஓர் ஆராய்ச்சியினை தான் பணி புரியும் கம்பனிக்காக செய்யுறாரு வில். குரங்கிற்குள் ஆறாம் அறிவினைப் புகுத்தும் முயற்சி வெற்றியளிக்கும் நேரத்தில, சிம்பன்ஸியின் பலமோ டபுள் மடங்காகி ஆய்வு கூடத்தினையே துவம்சம் செய்யும் நிலையில் அந்த சிம்பன்ஸியை சுட்டுக் கொல்லுறாங்க விஞ்ஞானிங்க. 

சுட்டுக் கொன்ன தாய்க் குரங்கு கர்ப்பமாயிருந்து இறக்கும் போது ஓர் ஸிம்பன்ஸியை பிரசவித்து விட்டு இறந்து விட, அதனை விஞ்ஞானி வில் எடுத்து தன்னோட வீட்டில வளர்க்க ஆரம்பிக்கிறாரு. அந்தக் ஸிம்பன்ஸிக்கு சீசர் என்றோர் பேரும் வைச்சு, தன்னோட செல்ல புள்ளை போல பாலூட்டி சீராட்டி வளர்க ஆரம்பிக்கும் போது, மொதல் நாளிலையே ஸ்ம்பன்ஸிக்குள் அதீத மூளைப் பவர், பலம் இருப்பதனைக் கண்டு வியக்கிரார். இதற்கான காரணம் தாம் சீசரின் தாய்க்கு கொடுத்த மரபணு சிகிச்சைகளின் விளைவுகள் தான் என்பதனை உணர்ந்து சீசர் மூலம் தனக்கு சில நன்மைகள் கிடைக்கும் எனும் நினைப்பில் தன் வீட்டில் சீசரை பக்குவமாக வளர்க்க ஆரம்பிக்கிறாரு விஞ்ஞானி வில்.

விஞ்ஞானி வில் அவர்களின் தந்தையார் நோய் வாய்ப்பட்டு இருக்கவே, வைரஸ் மூலமா அவருடைய உடம்பின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருக்கு என்பதனை உணர்ந்து தன்னோட தந்தைக்கும் குரங்கிற்கு கொடுத்த அதே மரபணு பவர் மருந்தினைக் கொடுத்து டெஸ்ட் பண்ணிப் பார்க்கிறாரு. என்ன ஆச்சரியம், விஞ்ஞானியின் தந்தையாரும், நலமாகவும், முன்பு இருந்ததை விட உஷாராகவும் மாறிட்டாரு. நீண்ட நாட்களாக வீட்டினுள் அடைந்து கிடந்த சீசர் ஸிம்பன்ஸிக்கு வெளியே ஓடி விளையாடனும், சைக்கிள் ஓட்டிப் பார்க்கனும் என்றெல்லாம் ஆசை வருகிறது. இப்படியான சூழலில் ஸீஸர் ஓர் நாள் வெளியே செல்லும் போது அடுத்த வீட்டுக்காரனுக்கு துன்பத்தினை ஏற்படுத்தி சிறு காயத்திற்கு ஆளாகுது ஸிம்பன்சி.

சீசரின் காயத்தினைப் போக்கிட வைத்தியசாலைக்கு சீசரை எடுத்துச் செல்கிறார் வில்.வைத்தியாசாலையில் பணி புரியும் மருத்துவிச்சி கரோலினாவிற்கும், விஞ்ஞானிக்கும் சீசர் மீதான அக்கறையில் நெருக்கம் ஆரம்பிச்சு, காதலில் முடிஞ்சிடுது. ஒரு நாள் வில்லின் தந்தையார் கார் ஓட்ட முயற்சிக்கிறாரு. அவரோட பலம் டபுள் மடங்காகி, காரை ஸ்ராட் செய்ய முன்னாடியே அடுத்தடுத்து நிற்கும் கார்களை உடைக்குமளவிற்கு பவர் புல்லாகிடுறாரு. இதனால அடுத்த வூட்டுக்காரங்களின் கார் சேதமாகிட, வயதான வில்லின் அப்பாவினை அடுத்த வீட்டுக்காரங்க அடிச்சிடுறாங்க. 
அனுமதியின்றி நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட விமர்சனம்
தன்னோட எசமானின் தகப்பனை அடுத்த வூட்டுக்காரங்க அடிப்பதனைப் பார்த்த ஸிம்பன்ஸிக்கு கோபம் கோபமா வந்திடுச்சு. இதனால ஓடோடிப் போயி அடுத்த வூட்டுக்காரங்க மேல தன்னோட கோபத்தை தீர்த்திடுச்சு. தகவல் போலீஸுக்குப் போக, போலீஸ் விலங்குகள் பராமரிப்பு நிலையத்தை அழைச்சு, மனிதர்கள் வாழும் இடத்தில் சீசரை வளர்ப்பது தவறென்று சொல்லி;  ஸிம்பன்ஸியை எடுத்துட்டுப் போகச் சொல்லிடுறாங்க. சீசரும் தன்னோட எஜமானைப் பிரிந்த கவலையில் தனிமையில் ஏனைய ஸ்ம்பன்ஸிங்க கூட இருக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனால் ஏனைய குரங்குகளில் இருந்து வித்தியாசமா இருக்கும் இந்த குரங்கினைப் பார்த்து மத்த குரங்குங்க எல்லாம் ரகளை பண்ண ஆரம்பிக்கிறாங்க.
இப்படியான சூழலில் ஸிம்பன்சி சீசரோ , தனக்கு உள்ள அறிவினை வைத்து, ஏனைய ஸிம்பன்ஸிகளுக்கும் தன்னையொத்த அறிவினைக் கொடுத்தால் எப்படி இருக்கும் எனச் சிந்திக்கிறது. ஏனைய ஸிம்பன்சிங்க கூட நட்பாக முயற்சிக்குது.ரகசியமாக, தான் வாழும் விலங்குகள் தடுப்பு நிலையத்திலிருந்து எஸ்கேப் ஆகி, தன் எசமானின் வீட்டிற்குள் நுழைந்து தனக்கு என்ன மருந்து கொடுத்து தன்னோட அறிவினை அதிகரிச்சாங்களோ, அதே அறிவினை தன் சகபாடிகளுக்கும் கொடுக்கும் நோக்கில் மரபணு மருந்துகளை திருடிட்டு வந்து தன்னோட காப்பகத்தில் உள்ள ஸிம்பன்ஸிகளுக்கும் பரவச் செய்திடுது. இதன் பின்னர் என்ன நடக்கும்? இது தானுங்க படத்தோட முக்கிய பாயிண்டே. அதாவது குரங்குகளுக்கு மனித அறிவு வந்தா எப்பூடி இருக்கும்? அதனை படத்தோட பின் பாதி சொல்லுது. ஸீசரும் ஒரு கட்டத்தில பேச ஆரம்பிக்குது. 
நிரூபன்
படம் பற்றிய சில சுவாரஸ்யங்கள்: 
இந்தப் படத்தினை 20Th Fox Century நிறுவனத்தினர் தயாரித்து, ஆகஸ்ட் 05 2011ம் ஆண்டு ரிலீஸ் செஞ்சிருக்காங்க. Avatar படத்திற்கு கிராபிஸ் பண்ணிய அதே நிறுவனம் தான் இந்தப் படத்திற்கும் மிகவும் சூப்பர், டூப்பர் கிராபிக்ஸ் பண்ணி, ஸிம்பன்சிகள் நிஜமாகவே எம் கண் முன்னே நிற்பது போன்ற காட்சிகளை உருவாக்கியிருக்காங்க. ஸிம்பன்ஸி சீசர் ஒவ்வோர் தடவையும் வெளியே போகும் போது, தான் சுதந்திரமாக ஓடி விளையாட எஜமானிடம் பர்மிஷன் கேட்கும் காட்சி சூப்பரா இருக்குமுங்க. படத்தோட நாயகன் வில் உம், நாயகி கரோலினாவும், கிச்சு கிச்சு மூட்டும் டைம்மில் சீசர் குறுக்கிட்டு; நாயகிக்கு கொடுத்தது போல தனக்கும் முத்தம் வேண்டும் என கேட்கும் காட்சி சுவாரஸ்யம்.
www.thamilnattu.com நாற்று நிரூபன்
தன்னை யார் யார் எல்லாம் என்ன வழியில் துன்புறுத்தினாங்களோ, அவறையெல்லாம் மனதில் வைத்து சீசர் பழிவாங்கும் காட்சி, மற்றும் சண்டைக் காட்சிகளின் போது, மனித மூளைக்கு நிகராக திட்டமிட்டு மனிதர்களைப் பழிவாங்கும் காட்சிகள் யாவும் பார்வையாளர்களாகிய உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. ஹாலிவூட் இயக்குனர் Rupert wyatt அவர்கள் 1963ம் ஆண்டு வெளியாகிய Planet of the Apes நாவலை அடிப்படையாக வைத்து இப் படத்தினை இயக்கியிருக்கிறார். Patric Doyle அவர்கள் தன் இசையின் மூலம் இடையிடையே ஒரு த்ரிலிங் படம் பார்ப்பது போன்ற உணர்வினை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருப்பார் என்பதில் ஐயமில்லை.
இப் படத்தில், ஹாலிவூட் நடிகர்களான, நடிகர் James Franco, நடிகை Freida Finto, மற்றும், John Lithgow, Brian Cox, Tom Felton, Andy Serkis ஆகியோருடன், மேலும் சில நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். வசூலில் 93 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் குவித்திருக்கிறது இப் படம்.

இப் படத்தின் ட்ரெயிலரினைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:


105 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இப் படத்தினை முழுமையாக ஆன்லைனில் கண்டு களிக்க இங்கே கிளிக்கவும்:

இப் படம் பற்றிய தகவல்கள் சில வீக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

13 Comments:

Thava said...
Best Blogger Tips

வணக்கம் நண்பரே,
சில வேலை காரணமாக சரியாக வலைக்கு வர இயலவில்லை..
தங்களது விமர்சனம், சொல்ல என்ன இருக்கிறது..வழக்கம் போல அருமை..இப்பொழுது எல்லாம் சரியாக படங்கள் பார்ப்பதில்லை..வாய்ப்பு கிடைப்பின் பார்க்கிறேன்.என் நன்றிகள்.

K said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் மாமா!

உங்களுக்கும் உங்கள் பிரியமான பிரியாவுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

K said...
Best Blogger Tips

105 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இப் படத்தின் ட்ரெயிலரினைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்: ////////

தமிழ் இலக்கணத்தில் பொருள் மயக்கம் என்று ஒரு பிரிவு இருக்கு! இவ்வரிகளைப் படிக்கும் போது, அதுதான் நினைவுக்கு வருது!

படத்தின் ட்ரெயிலரே 105 நிமிடங்களா? அப்போ படம்?

K said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருக்கு! ஒரு சின்ன திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும்! சொன்னால் ஏற்றுக்கொள்வாயோ தெரியாது! சொல்ல விரும்பல!

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

வணக்கம் நண்பரே,
சில வேலை காரணமாக சரியாக வலைக்கு வர இயலவில்லை..
தங்களது விமர்சனம், சொல்ல என்ன இருக்கிறது..வழக்கம் போல அருமை..இப்பொழுது எல்லாம் சரியாக படங்கள் பார்ப்பதில்லை..வாய்ப்பு கிடைப்பின் பார்க்கிறேன்.என் நன்றிகள்.
//

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

வணக்கம் நிரூபன் மாமா!

உங்களுக்கும் உங்கள் பிரியமான பிரியாவுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!
//

வணக்கம் மாப்பிளை,
என்னது பிரியமான பிரியாவோ? அவா எங்கே இருக்கா?
அவ்வ்வ்வ்

வாழ்த்துக்களுக்கு நன்றி,
உங்களுக்கும், பார்வதிக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

தமிழ் இலக்கணத்தில் பொருள் மயக்கம் என்று ஒரு பிரிவு இருக்கு! இவ்வரிகளைப் படிக்கும் போது, அதுதான் நினைவுக்கு வருது!

படத்தின் ட்ரெயிலரே 105 நிமிடங்களா? அப்போ படம்?
//

இந்தப் பொருள் மயக்கம் ஏலவே இன்னோர் பட விமர்சனத்திலையும் வந்திருக்கு. நான் பின்னர் திருத்தியிருக்கிறேன்.

இப்போது மாற்றி விட்டேன். நன்றி மாப்ளே

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

விமர்சனம் நல்லா இருக்கு! ஒரு சின்ன திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும்! சொன்னால் ஏற்றுக்கொள்வாயோ தெரியாது! சொல்ல விரும்பல!
//

நீங்க சொல்லுங்க, நாம திருத்துறோமுங்க.

ஹேமா said...
Best Blogger Tips

காதலர் தினத்தில குரங்குப் படமோ நிரூன்ர தியேட்டரில !

இந்திரா said...
Best Blogger Tips

ஹீரோவின் தந்தையை அதட்டிய பக்கத்து வீட்டுக்காரன் விரலை கடித்துவிட்டபின், அந்த வயதானவரை கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு பார்வை பார்க்குமே... என்ன ஒரு குரூரப் பார்வை..
சான்ஸே இல்ல..

Yoga.S. said...
Best Blogger Tips

Good morning NIROO(u?)PAN!very good comment,thank u!!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

செம விமர்சனம் மச்சி. முன்னோட்டம் சொல்லப்பட்டுள்ள விதம் நன்றாக இருந்தது. எல்லாம் கச்சிதம்.

ஆன்லைனில் பார்க்க லிங்க் கொடுத்திருக்கிறீர். அதுவும் நல்ல ஐடியா. நானும் இதை ஃபாலோ பண்ண முயற்சிக்கிறேன். IDEA THEFT பிரச்சினை ஆகிவிடுமா? ஹி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்
செம விமர்சனம் மச்சி. முன்னோட்டம் சொல்லப்பட்டுள்ள விதம் நன்றாக இருந்தது. எல்லாம் கச்சிதம்.

ஆன்லைனில் பார்க்க லிங்க் கொடுத்திருக்கிறீர். அதுவும் நல்ல ஐடியா. நானும் இதை ஃபாலோ பண்ண முயற்சிக்கிறேன். IDEA THEFT பிரச்சினை ஆகிவிடுமா? ஹி ஹி
//

ஐயோ, பாஸ்
அப்படியெல்லாம் நான் பேச மாட்டேன்! நல்ல விடயங்களை யார் வேண்டுமானாலும் பகிரலாம்! தொடருங்கள்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails