Tuesday, February 28, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் கலர்புல் பார்ட்டி - 28/02/2012

ஆபாசானந்தா மேல சத்தியமா இப் பதிவானது ஆபாசப் பதிவு இல்லை என்று சொன்னாலும் நம்பவா போறீங்க? வாருங்கள்! கலர் கலராய் இன்றைய டியூஸ்டே பார்ட்டியை கலக்குவோம். 
மகிந்தரை காப்பாற்ற அனைவரும் மன்றாடுங்களாம்! 
பதிவின் இறுதியில் ஒரு முக்கிய அறிவிப்பு இருக்குங்க. 
முற் பகல் செய்யின் பிற் பகல் விளையும் என்பது நம்ம ஆன்றோர் வாக்குங்க. இந்த வாக்கிற்கு எம் கண் முன்னே அர்த்தம் கிடைக்கும் காலம் வந்து விட்டது என மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மக்களின் உள்ளங்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டன. இன்றைய தினம் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில்; லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு பதில் கிடைக்கும் என்பதனை உணர்ந்த இலங்கையின் அரசியல்வாதியான எம்.ஆர்.எம்.அப்துல்காதர் அவர்கள் மகிந்தரையும், இலங்கையின் நல் வளர்ச்சியினையும் கருத்திற் கொண்டு, இந்த வாரம் முழுவதும் நாடு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்திருக்கிறாருங்கோ! 
உஷாரைய்யா! உஷாரு! இலங்கையின் சனாதிபதி முதல், சல்லாப அரசியல் நடாத்தும் மந்திரிகள் வரை, தாம் செய்த பாவங்களுக்கு பிரதிபலன் கிடைத்திட கூடாதெனும் ஆசையில் தலை கீழா நின்னு பிரார்த்தனை செய்யா குறையாக தவிச்சிட்டிருக்காங்களாம். முடிஞ்சா மேற்குலக மந்திரிங்களை மடக்கி தம் பக்கம் இழுக்கலாம் எனும் நோக்கில ஊத்திக் கொடுக்கும் பார்ட்டியும் வைச்சிருக்காங்க. அடக்குமுறை நாயகனுக்கு ஆப்பு கன்போர்ம் என்றால் இப்போ ஊத்தி குடுக்கிறவங்க, இனிமே கூட்டியும் கொடுப்பாங்களோ? 

ஜெயாவின் ஆட்சியில் இருண்ட மாநிலமாக தமிழ்நாடு! 
பதிவின் இறுதியில் ஒரு முக்கிய அறிவிப்பு இருக்குங்க. பார்க்க தவற வேணாம்.
அதிமுக ஆட்சி காலத்தில அன்னை தமிழகம் இருண்ட மாநிலமாக மாறிட்டதாக தொல்.திருமாவளவன் அவர்கள் புலம்பியிருக்காரு. அடப் போங்க, திருமா சார்! 
திமுக காலத்தில மாத்திரம் தமிழகம் ஒளிர்ந்திட்டிருந்திச்சுதா? 2G ஊழலில் ஒரு குடும்பம் மாத்திரம் தானே ஓகோன்னு ஒளிர்ந்திட்டிருந்திச்சு. வரலாறு முக்கியம் சார். இல்லேன்னா கலைஞர் ஐயா கோவிச்சுக்க போறாரு!

அனல் பறக்கும் பேச்சால் இஸ்ரேலை அடக்க நினைக்கும் ஈரான்:

எங்களைத் தொட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்த இடம் தெரியாதவாறு, பூண்டோடு அழித்து விடுவோம் எனச் சூளுரைத்துள்ளார் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஹமது வஹிதி. அப்பாடா...இப்படி ஒரு வார்த்தையை கேட்டதும் அமெரிக்கா ஈரானுக்கு அசாத்திய சப்போர்ட் கொடுக்க ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லையே! அப்புறம் என்னங்க, ஈரானின் பின் புலத்தில அமெரிக்கா இருந்தா சொல்லவா வேணுமுங்க.

சோக்கு செம சோ(ஜோ)க்கு:

நாம படிச்ச பள்ளிக்கூட்டத்தில கூட்டாளிப் பையன் ஒருத்தன் டாய்லெட்டினுள் ஒரு திருவிளையாடல் செய்தானுங்க. என்னா மேட்டர் என்று தானே யோசிக்கிறீங்க. அவன் பெருசா ஒண்ணுமே பண்ணலைங்க. "உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்” அப்படீன்னு பசங்க சிறுநீர் கழிக்கும் இடத்தில எழுதி வைச்சிட்டானுங்க.

நமீதாவுக்கு பிடித்த நல்ல வார்த்தை:

நமீதா மேடத்திற்கு தமிழில் பிடித்த வார்த்தை எது தெரியுமாங்கோ? மச்சான்ஸ் என்ற வார்த்தை தான் நம்ம நமீ மேடத்திற்கு ரொம்ப ரொம்ப புடித்த தமிழ் வார்த்தையாமுங்க. மெது மெதுவாக தமிழ் கத்துக்க ஆரம்பித்த அம்மணி, அண்மையில் அம்புலி பாடல் வெளியீட்டு விழாவின் போது ஹாய் மச்சான்ஸ் என ரசிகர்களை செல்லமாக அழைத்து ப்ளையிங் கிஸ் கொடுத்திருக்காராம். இந்த கண் கொல்(ள்)ளா காட்சியை அருகே இருந்து பார்த்த இயக்குனர் சேரனோ, ஒரு நிமிடம் அசந்து போயிட்டு, அம்மணியிடம் மச்சானுக்கு அர்த்தம் என்னான்னு கேட்டிருக்காரு!
அம்மணியும், நட்பு அப்படீன்னு சொல்லியிருக்காரு! இனிமே நமிதாவுக்கு நாம எல்லாம் நண்பர்களாகிட்டோம் என நினைத்து நமீதா ரசிகர்கள் சந்தோசப்பட்டுக்க வேண்டியது தானுங்க. ஏன்னா அம்மணி உங்க எல்லோரையும் மச்சான் என்று சொல்லிட்டாங்க இல்லே!!!
பதிவர் முரண்:

அடுத்த வீட்டு சிவப்பு சட்டை குட்டி
அனுதினமும் கண்ணால் ஜாடை காட்டி
படுக்கையிலே கனவு தந்து புரள சொன்னாள்
பார்வையாலே காதல் சொன்னேன் - பாவையுமே
பாதணியை காண்பித்தாள் - கண்ணில் நீரை வர வைத்தாள்!!
(பாதணி - செருப்பு)

பதிவர் ஜோதிடம்:

காட்டுக்குள் இருக்கும் பதிவருக்கு அண்மை காலமாக ஓர் தீராத ஆசையாமுங்க.குளிருக்குள் உடம்பு பூரா போர்த்திட்டு இருக்கிறவருக்கு வெயில் காலம் வந்திட்டா ஒரே கொண்டாட்டாம் தானாம். தன்னோட தேசிய உடையில காத்தோட்டமா சம்மர் காலத்தில ஊரெல்லாம் அலைஞ்சாலும், காட்டு வாசிக்கு தீராத ஆசையா லுங்கி கட்டிட்டு ஊர் சுத்தனும் அப்படீன்னு ஓர் ஆசை இருக்காம். இதனால கிப்ஸ் பனியனும், லுங்கியும் போட்டுக்கிட்டு கிளு கிளுப்பா ஊரெல்லாம் போய் வரனும் எனும் ஆவல் பொங்க காட்டூஸ் இப்போ தமிழகத்திற்கு கிளம்ப போறாராம்! தன்னோட தமிழக பயணம் வெற்றிகரமாக அமைந்தால் ஹன்சிகாவிற்கு கோயில் கட்டி, லுங்கி மாலை போட்டுக்கிறதாக பதிவர் காட்டூஸ் இப்போ பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருக்காராம். மாம்ஸ்...பார்த்துங்க; லுங்கி மாலை வாங்குவதா நெனைச்சு -ங்கி மாலை வாங்கி போட்டு உதை வாங்கிடாதீங்க.

பதிவர் பலி பாடல்:

கட்டழகி கண்ணம்மா கவிதை ஒண்ணு சொல்லம்மா
பொட்டழகி பொன்னம்மா உன் பொண்ணை வர சொல்லம்மா
உதட்டழகி, உடலழகி, இடையழகி, மொழியழகி என பலருங்க வந்தாலும்
இதயத்திலே குடியிருக்கும் உயிரழகிக்கு நிகராய் யாரும் வருவாங்களா?

பதிவர் குசும்பும் குழப்பமும்:
ஊசி இணைப்பு:

நாம ரொம்ப சோகமா இருக்கும் போது, சந்தோசமான காட்சிகளைப் பார்த்தா சோகங்கள் எல்லாமே பறந்தோடிப் போயிடும் அப்படீன்னு சொல்லு வாங்கோ. ஆனால் ரொம்பவும் சோகமான ஒரு ஆங்கிலப் பாடலைப் பார்த்தா சந்தோசம் தானா வரும் என்று மேலை நாட்டு நண்பர்கள் சொல்லுறாங்கோ. அந்தப் பாடலில் அப்படி என்னதான் இருக்கு என்று அறிய, நீங்களும் ஒருவாட்டி இங்கே கிளிக் செய்து, அப் பாடலைப் பார்த்து மகிழலாம் அல்லவா?

ஏலவே ஒருவாட்டி, கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி பதிவினை ஒலிப் பதிவாக கொடுத்திருந்தேன்.நேரமின்மையால் தொடர்ச்சியாக இப் பதிவினை ஒலிப் பதிவாக கொடுக்க முடியலை.  மன்னிக்கவும் நண்பர்களே. சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக இப் பதிவினை ஒலிப் பதிவாக தர முயற்சிக்கிறேன். ஏலவே வெளியான பதிவின் ஒலிப் பதிவினை கேட்காதவர்கள் இங்கே கிளிக் செய்து கேட்டு மகிழலாம். 

ஒரு முக்கிய அறிவிப்பு:

நண்பர்களே, வீணாண சர்ச்சைகள், சிலரின் வயித்தெரிச்சலை தவிர்க்கும் நோக்கிலும், கட்டுப்பாடுகள் இன்றி தன்னிச்சையாக எழுதும் நோக்கிலும்; இம் மாதத்துடன் தமிழ்மண கட்டண சேவையிலிருந்தும், தமிழ்மணத்திலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்திருக்கிறேன்.இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி,
வணக்கம்!!

37 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபா!(bon appetit)நன்றாக சாப்பிடுங்கள்!!!!///ஒரு முக்கிய அறிவிப்பு:///கொஞ்சம் லேட்டோ?????அப்புறம்,அந்தப் பதிவர் பாவமில்லையா?நீ..............ண்ட நாட்களாக பதிவுகள் எதுவும் போடவுமில்லை.அண்மையில் கூட ஒரு பதிவர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் வேறு அவரின் வண்டவாளத்தை(மண்டை) போட்டுடைத்து விட்டது.கிளம்பும் நேரத்தில் பாவம் விட்டுவிடுங்கள்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

"ப்ளேன் கிஸ்" கொடுத்திருக்காராம்.////அது,ப்ளையிங்(Flying Kiss) கிஸ்!பறக்கும் முத்தம்.(அதிராவுக்குப் பதிலாக நான்!அதிரா வேலைக்குப் போயிருப்பா!எனக்குத்தான் வேலை இல்லையே?ஹி!ஹி!ஹி!!!)

K said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி!

என்னது மாமாவ காப்பாத்த மன்றாடணுமோ? இரு நான் மன்றாடுறன்! சரியோ எண்டு பார்!

அப்பனே பிள்ளையாரே, மருதமடு மாதா, நல்லூர்கந்தா, அல்லாஹ் ரஹுமானே, புத்த பெருமானே, வற்றாப்பளை அம்மாளச்சி, புதூர் நாகதம்பிரானே, நல்லூர் கந்தா, செல்வச்சந்நிதி முருகா, நயினாதீவு நாக பூஷணியே, தெல்லிப்பளை துர்க்காதேவியே, ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரரே,

எங்கட மஹிந்த மாமாவ காப்பாத்துங்கோ! அவரை உந்த நாசமா போன அமெரிக்காகாரன் தணிக்கப் போறானாம்! கடவுளே, அவரை எப்படியாவது காப்பாத்தப்பா!

போதாக்குறைக்கு உந்த புலம்பெயர்ந்த செம்மரியளும் கத்திக்கொண்டு இருக்குதுகள்! அதுகளின்ர வாய முதல்ல அடை கந்தா!

கடவுளே, எப்படியாவது மாமா சனத்தைக் கொண்டத எல்லாரும் மறந்திடோணும்! சரணடைஞ்சாக்களை கொண்டதையும் எல்லாரும் மறந்திடோணும்! கடவுளே, எப்படியாவது எங்கட மாமாவ காப்பாத்தப்பா!

உனக்கு தேங்காய் உடைக்கிறன்! தூக்கு காவடி எடுக்குறன்! செடில் காவடி எடுக்குறன்! பத்து பவுணில சங்கிலி போடுறன்! பத்துநாளைக்கு விரதம் புடிக்கிறன்! எப்படியாவது மாமாவ காப்பாற்றப்பா!

( மச்சி, இந்த பிரார்த்தனை போதுமா? )

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

//Yoga.S.FR said...

"ப்ளேன் கிஸ்" கொடுத்திருக்காராம்.////அது,ப்ளையிங்(Flying Kiss) கிஸ்!பறக்கும் முத்தம்.(அதிராவுக்குப் பதிலாக நான்!அதிரா வேலைக்குப் போயிருப்பா!எனக்குத்தான் வேலை இல்லையே?ஹி!ஹி!ஹி!!!///

கற்பூரம் மாதிரி யோகா அண்ணன், இவ்ளோ சீக்கிரம் ட்ரெனிங் முடிச்சிட்டார்:)) என்னிடமிருந்துதான்:))

---------------------------

//பத்து பவுணில சங்கிலி போடுறன்! //

இதில் 5 பவுண் என்னுடையது, நினைவிருக்கட்டும்:)))

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
வணக்கம் நிரூபா!(bon appetit)நன்றாக சாப்பிடுங்கள்!!!!///ஒரு முக்கிய அறிவிப்பு:///கொஞ்சம் லேட்டோ?????அப்புறம்,அந்தப் பதிவர் பாவமில்லையா?நீ..............ண்ட நாட்களாக பதிவுகள் எதுவும் போடவுமில்லை.அண்மையில் கூட ஒரு பதிவர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் வேறு அவரின் வண்டவாளத்தை(மண்டை) போட்டுடைத்து விட்டது.கிளம்பும் நேரத்தில் பாவம் விட்டுவிடுங்கள்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!//

வணக்கம் ஐயா,
நல்லா இருக்கீங்களா?
அடிக்கடி பதிவு போட முடியாத சூழல். நான் என்ன பண்ண முடியும்?
அவ்வ்வ்வ்வ்

அந்தப் பதிவினைப் பார்த்தேன். போட்டோவில கூட தள்ளாடாம போஸ் குடுத்திருக்காரில்லே!
அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

"ப்ளேன் கிஸ்" கொடுத்திருக்காராம்.////அது,ப்ளையிங்(Flying Kiss) கிஸ்!பறக்கும் முத்தம்.(அதிராவுக்குப் பதிலாக நான்!அதிரா வேலைக்குப் போயிருப்பா!எனக்குத்தான் வேலை இல்லையே?ஹி!ஹி!ஹி!!!)
//

அவ்வ்வ்வ்வ்..
நான் நினைச்சேன்! ப்ளேன்னா ஐ மீன் வெறுமையா கொடுக்கிற முத்தம் அப்படீன்னு எழுதுவோம் என்று! அந்த நினைப்பில தான் எழுதினேன். ஆனால் நீங்க ப்ளையிங் கிஸ் பத்தி சொல்லிட்டீங்க.

அவ்வ்வ்

நான் சொல்ல வந்தது ஆங்கில முத்தம் அல்ல...
Plain முத்தம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

வணக்கம் மச்சி!

என்னது மாமாவ காப்பாத்த மன்றாடணுமோ? இரு நான் மன்றாடுறன்! சரியோ எண்டு பார்!
//

என்ன தான் தலைகீழா நின்னு மன்றாடினாலும் அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை மாமா மறந்திட்டார் போல இருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

/Yoga.S.FR said...

"ப்ளேன் கிஸ்" கொடுத்திருக்காராம்.////அது,ப்ளையிங்(Flying Kiss) கிஸ்!பறக்கும் முத்தம்.(அதிராவுக்குப் பதிலாக நான்!அதிரா வேலைக்குப் போயிருப்பா!எனக்குத்தான் வேலை இல்லையே?ஹி!ஹி!ஹி!!!///

கற்பூரம் மாதிரி யோகா அண்ணன், இவ்ளோ சீக்கிரம் ட்ரெனிங் முடிச்சிட்டார்:)) என்னிடமிருந்துதான்:))

---------------------------

//பத்து பவுணில சங்கிலி போடுறன்! //

இதில் 5 பவுண் என்னுடையது, நினைவிருக்கட்டும்:)))
//

ஹே...ஹே..
ப்ளையிங் கிஸ்....ப்ளேன் கிஸ்ஸிற்கு செமையா விளக்கம் கொடுத்திருக்கேனில்ல!

இப்போ மறுவாதையா பத்துப் பவுணையும் நிரூபனின் கல்யாண மொய்யா என் கழுத்தில போடுங்க!
எப்பூடி

Anonymous said...
Best Blogger Tips

அழகிய பலி பாடல் + விருந்து + சிரிப்பை வரவழைக்கும் வரிகள்...

தமிழ்மணம்...Up to you bro...

பதிவர் ஜோதிடம் அழகாக/கிளு கிளுப்பா(!!!) சொல்லி விட்டீர்கள்...


தொடருங்கள்...

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் நண்பா . நலமா ?
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது மச்சி உண்மைதான் . எப்பிடியும் மாமாவுக்கு அஆப்பு த்தான் இந்தியாவுக்கு ஊத்தி கூட்டி கொடுத்து இந்தியாவை மாமா தன்பக்கம் வச்சிருக்கிறது கொஞ்சம் இடிக்குது

நிரோஜ் said...
Best Blogger Tips

வீணாண சர்ச்சைகள், சிலரின் வயித்தெரிச்சலை தவிர்க்கும் நோக்கிலும், கட்டுப்பாடுகள் இன்றி தன்னிச்சையாக எழுதும் நோக்கிலும்; இம் மாதத்துடன் தமிழ்மண கட்டண சேவையிலிருந்தும், தமிழ்மணத்திலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்திருக்கிறேன்////

நல்ல முடிவு .. !!!


///அடக்குமுறை நாயகனுக்கு ஆப்பு கன்போர்ம் என்றால் இப்போ ஊத்தி குடுக்கிறவங்க, இனிமே கூட்டியும் கொடுப்பாங்களோ? ///

எதோ ஊர் உலகத்துல நடக்காத மாதிரி பேசி கொண்டு இருக்குறீங்க?? என்ன நடந்தாலும் இந்த முறை சரியான முறையிலே ஆணிய புடுங்குவாங்க

நிரோஜ் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

/// இந்தியாவுக்கு ஊத்தி கூட்டி கொடுத்து இந்தியாவை மாமா தன்பக்கம் வச்சிருக்கிறது கொஞ்சம் இடிக்குது///

எண்டாலும் இந்தியா அதன் முடிவை இன்னும் சொல்ல வில்லையே .. இவங்கள் தானே இந்தியா சப்போர்ட் பண்ணும எண்டு சொல்லுராங்க.

Yoga.S. said...
Best Blogger Tips

நிரோஜ் said...

@Mahan.Thamesh

/// இந்தியாவுக்கு ஊத்தி கூட்டி கொடுத்து இந்தியாவை மாமா தன்பக்கம் வச்சிருக்கிறது கொஞ்சம் இடிக்குது///

எண்டாலும் இந்தியா அதன் முடிவை இன்னும் சொல்ல வில்லையே .. இவங்கள் தானே இந்தியா சப்போர்ட் பண்ணும எண்டு சொல்லுராங்க./////

நடுநிலை?!வகித்து இரண்டு பக்கமும் பெயர் வாங்கும் எண்ணம்!

Yoga.S. said...
Best Blogger Tips

ஆபாசானந்தா மேல சத்தியமா இப் பதிவானது ஆபாசப் பதிவு இல்லை.////நான் தான் அவசரக்குடுக்கையா "புழை" கண்டு புடிக்கிறன் பேர்வழி எண்டு,"பல்ப்"பு வாங்கீட்டன் போலயிருக்கே???இதில வேற அதிராப் பொம்பிள பாத்தியளே,பாத்தியளே என்ரை ட்ரையினிங் எண்டு....................ஹி!ஹி!ஹி!!!!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

அஞ்சு பவுணில வள்ளிக்கு,பெண்டனோட சங்கிலி,பத்துப் பவுணில சங்கிலி........................ஒருவேளை இங்கிலாந்தில பவுண்சில சம்பாதிக்கிறதால இருக்குமோ??(ச்சும்மா!)

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்!
பதிவர் ஜோசியம் எங்கயோ இடிக்குது கோயில் ஹான்சிகாவுக்கு கட்டப்போறாரா??? ஹீஹீ விளங்கிடும் 

தனிமரம் said...
Best Blogger Tips

தமிழ்மணத்தில் இருந்து வெளியேறுவது பற்றி  மீள்பரிசீலனை செய்யுங்க பாஸ் .என்விருப்பம் வெளியேறக்கூடாது என்பதே!

K said...
Best Blogger Tips

தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் பல்லு உடைப்பன் நிரூ!

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...பல் இல்லாமப் போனா நீங்கள் வடிவில்ல.அதால தமிழ்மணத்தோட சந்தோஷமா இருங்கோ !

மகிந்தருக்காக பிரார்த்திக்கிறதோ.ஒரேயடியா சந்தோஷப்படவும் பயமாக்கிடக்கு !

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

என்னங்க நிரூபன், இன்னைக்கு (29-2-12) உங்களுக்கு பிறந்த நாளாமே. ஒரு பதிவுல படிச்சேன். சொல்லவே இல்லை. மொதல்லயே தெரிஞ்சிருந்தா பெரிய்ய்ய்ய்ய்ய பார்ட்டி, கூடவே யானை பிரியாணி பண்ணியிருப்பமில்ல?

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன் வாசித்தேன். வாழ்த்துகள்..
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன் வாசித்தேன். வாழ்த்துகள்..
வேதா. இலங்காதிலகம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh
இப்போ இந்தியாவினாலும், கைவிடப்பட்ட நிலையில் அல்லவா இலங்கை இருக்கிறது;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@நிரோஜ்

எதோ ஊர் உலகத்துல நடக்காத மாதிரி பேசி கொண்டு இருக்குறீங்க?? என்ன நடந்தாலும் இந்த முறை சரியான முறையிலே ஆணிய புடுங்குவாங்க//

பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா, நல்லதே நடக்கனும் என்பது தானே தமிழர்களின் ஆவல்.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிரோஜ்

/ இந்தியாவுக்கு ஊத்தி கூட்டி கொடுத்து இந்தியாவை மாமா தன்பக்கம் வச்சிருக்கிறது கொஞ்சம் இடிக்குது///

எண்டாலும் இந்தியா அதன் முடிவை இன்னும் சொல்ல வில்லையே .. இவங்கள் தானே இந்தியா சப்போர்ட் பண்ணும எண்டு சொல்லுராங்க.
//

இது கருத்து!

அப்படீன்னா Backup இற்கு இந்தியா இருக்கு என்று சொல்லுவதெல்லாம் ஜுஜூப்பீ........

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

நடுநிலை?!வகித்து இரண்டு பக்கமும் பெயர் வாங்கும் எண்ணம்!
//

அதெல்லாம் இனிமே நடக்காது என்று நினைக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

ஆபாசானந்தா மேல சத்தியமா இப் பதிவானது ஆபாசப் பதிவு இல்லை.////நான் தான் அவசரக்குடுக்கையா "புழை" கண்டு புடிக்கிறன் பேர்வழி எண்டு,"பல்ப்"பு வாங்கீட்டன் போலயிருக்கே???இதில வேற அதிராப் பொம்பிள பாத்தியளே,பாத்தியளே என்ரை ட்ரையினிங் எண்டு....................ஹி!ஹி!ஹி!!!!!!!!!!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

வணக்கம் பாஸ்!
பதிவர் ஜோசியம் எங்கயோ இடிக்குது கோயில் ஹான்சிகாவுக்கு கட்டப்போறாரா??? ஹீஹீ விளங்கிடும்
//

ஒரு நடிகை பக்தரை பார்த்து இப்படி நீங்க பேசலமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

தமிழ்மணத்தில் இருந்து வெளியேறுவது பற்றி மீள்பரிசீலனை செய்யுங்க பாஸ் .என்விருப்பம் வெளியேறக்கூடாது என்பதே!
//

கொஞ்சம் பொறுமை காப்போம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் பல்லு உடைப்பன் நிரூ!
//

அவ்வ்வ்வ்

போடாங் கொய்யாலே! எனக்கு பல்லு இருந்தா தானே நீ உடைக்க மச்சி!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூ...பல் இல்லாமப் போனா நீங்கள் வடிவில்ல.அதால தமிழ்மணத்தோட சந்தோஷமா இருங்கோ !

மகிந்தருக்காக பிரார்த்திக்கிறதோ.ஒரேயடியா சந்தோஷப்படவும் பயமாக்கிடக்கு !
//

எனக்கும் தமிழ்மணத்திற்கும் பிரச்சினை ஒண்ணுமே இல்லைங்க! நீங்க ஏதோ நான் தகராறு பண்றதா சொல்றீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி
என்னங்க நிரூபன், இன்னைக்கு (29-2-12) உங்களுக்கு பிறந்த நாளாமே. ஒரு பதிவுல படிச்சேன். சொல்லவே இல்லை. மொதல்லயே தெரிஞ்சிருந்தா பெரிய்ய்ய்ய்ய்ய பார்ட்டி, கூடவே யானை பிரியாணி பண்ணியிருப்பமில்ல?//

தங்கள் அன்பிற்கு நன்றி ஐயா, ஆனால் ஒரு வயசு ஒவ்வோர் வருடமும் கம்மியாகுதே என்று கவலை தானே கிடைக்குது! அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@kovaikkavi
வணக்கம் நிருபன் வாசித்தேன். வாழ்த்துகள்..
வேதா. இலங்காதிலகம்.//

நன்றி வேதா.

athira said...
Best Blogger Tips

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன்... பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி, இன்றுபோல் இனிதே வாழ வாழ்த்துகிறோம்.

இந்த பிறந்தநாள் முடிய முன்பே... திருமண நாளையும் குறித்திட வாழ்த்துக்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ... பிறந்த நாள் பரிசு கப்பல்ல வருது.

ஊ.கு:
என்னோட சேர்ந்துதானே யோகா அண்ணனும் அமளிப்பட்டார்:).. நிரூபனுக்குப் பிறந்தநாளோ என, பிறகேன் இண்டைக்கு இன்னும் வாழ்த்தவில்லை:)).. அவர் சும்மாதானே இருக்கிறார்(கவனிக்கவும் இதை நான் சொல்லல்ல:)) வந்து சும்மா வாழ்த்தியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
--------------------------

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி ///

உந்தக் கண்ணாடியைக் கழட்டும்வரை, ஒண்ணுமே தெரியாதுதான்... எனச் சொல்லிடுங்கோ நிரூபன், நான் நேரடியாச் சொன்னால் பிரச்சனையாகிடும்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு....

நிரோஜ் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

///நடுநிலை?!வகித்து இரண்டு பக்கமும் பெயர் வாங்கும் எண்ணம்!///

இருக்கலாம். இந்தியா மௌனம சாதிப்பதும் நல்லதே எண்பது என் கருத்து

நிரோஜ் said...
Best Blogger Tips

@நிரூபன்

///அப்படீன்னா Backup இற்கு இந்தியா இருக்கு என்று சொல்லுவதெல்லாம் ஜுஜூப்பீ........///

சும்மா வாய் பேச்சு. அந்த வாயும் இல்லாட்டி இவங்கள எல்லாம் நாய் தூக்கி கொண்டு போயிடும்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails