Wednesday, February 29, 2012

கல்லூரி நினைவுகளும் கண் முன்னே நிற்கும் கவிதைகளும்

என் சிந்தனையை சிறகடித்த சிட்டுக்கள் - சுகந் தரும் ரணங்கள்!
அவள் கையிலிருந்து லெட்டரும், தின் பண்டமும், என் கைக்கு தாவியது. கொஞ்சம் வெட்கப்பட்டு, லெட்டரை என் கையினுள் திணித்து விட்டு, ஓடி விட்டாள். நான் கொஞ்ச நேரம் என்னை மறந்தவனாய் அக் காலத்தில் பேமஸான "உயிரே...உயிரே இது தெய்வீக சம்பந்தமோ" பாடலை மீட்டியவாறு கற்பனையில் மூழ்க ஆரம்பித்தேன். அப்போது அருகே வந்த நண்பன் கனியன், என்னைச் சுய நினைவிற்கு கொண்டு வந்தான். அந் நேரம் தான் கையில் ஆர்த்திகா கொடுத்த லெட்டர் இருக்கிறதே என்று உணர்ந்து லெட்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னை கெடுத்த பெண்கள் தொடரின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
முத்துப் போன்ற தன் கையெழுத்தால் என்னைச் சொக்க வைக்கும் சொல் அலங்காரம் கொண்டு சிக்கனமாய் இரு பக்கத்தில் ஓர் கடிதம் வரைந்திருந்தாள் அவள். கடிதத்தைப் பிரித்துப் படிக்க முன்பதாகவே எனக்கு காதல் போதையில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந் நேரம் அச் சம்பவம் ஓர் எதிர்பாராத நிகழ்வாய் அமைந்தது. மனம் ப்ரியத்துடன் நினைத்துக் கொண்டிருந்த, ப்ரியமானவள் என்னிடம் வந்து தன் ப்ரியத்தை ஒப்புவித்த இனிய நாள் அது. என் வாழ்க்கை பாதையில் பெப்ரவரி மாசம் 14ம் திகதி, 16 வருடங்களுக்கு முன்னரான நாட்களை எளிதில் மறக்க முடியாது. காதலெனும் போதை செய்யும் மாயா ஜாலங்கள் பலவாறாக வகைப்படும். இப்பொழுதும் அந்தச் சம்பவத்தை நினைக்கையில் அடி வயிற்றில் ஒரு வித அமிலம் சுரந்து என் உடலை குளிர்விக்கிறதே! "இது தான் காதல் - இது தான் கல்லூரி நினைவுகளா?" என மீண்டும் - மீண்டும் நினைக்க வைத்து என்னை ஏங்க வைக்கிறது இந் நினைவுகள்.

                                                                                                                                         11.02.1996
என் ப்ரியமான நிரூபனுக்கு, உங்கள் ப்ரியமுள்ள ஆர்த்திகா எழுதுவது,
நான் உங்கள் விழியோர விம்பத்தை தரிசித்து அனு தினமும் ஆதவனைக் கண்ட தாமரையாய் அகம் மகிழ்கிறேன். அது போல நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். நீண்ட நாளாய் என் மனதில் நீங்கள் பதியமிட்ட காதல் விதை இப்போது முளை கொள்ள ஆரம்பித்திருக்கிறது. கடைக் கண் பார்வையால் இந்த ஆர்த்திகாவை அசைத்த நீங்கள் காதலைச் சொல்லியும் அசத்துவீங்க என நினைத்திருந்தேன். ஆனால் என் நினைவுகளை மாத்திரம் அசைத்து விட்டு, நிஜப் பொழுதில் இதயத்து துடிப்பை மாத்திரம் அதிகரித்து ஏக்கத்தை கூட்டி விட்டு விலகிச் செல்வது போல நடித்தீங்க.

ஆனாலும் உங்கள் எண்ணமெல்லாம் என் மேல் தான் உள்ளதெனும் உண்மையினை புரியாதிருக்க நான் என்ன சிறுமியா?எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை. கடிதம் மூலம் என் முடிவை சொன்னாலும் ஒரு வேளை பிலிம் காட்டும் நோக்கில் என் கடிதத்தை ஊரெல்லாம் காட்டி விட்டு, காதலை குப்பையில் போட்டு விடுவீங்க என பயந்திட்டிருந்தேன். ஆனால் அபிநயா தான் உங்களுக்கும் என் மீது பிரியம் இருப்பதாக ஊகித்து சொன்னாள். எப்படி என்று தானே யோசிக்கிறீங்க?
வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் வரிசை கிரமமாக குறிப்பெடுத்து, ஒவ்வோர் நாளும் நான் என்ன ஆடை அணிந்து வருகிறேன் என அறிந்து வைத்து அதற்கு மச்சிங்காக நீங்களும் உடை உடுத்தி வருவீங்களே! அந்த ஒரு காரணம் போதாதா?
வகுப்பறையில் ஆசிரியர் கேள்வி கேட்கும் போது, யார் முதலில் விடை சொல்லுவது எனப் போட்டி வருகையில் என்னை ஒரு தரம் பார்த்து விட்டு, விடை சொல்ல எழுந்த நீங்கள் மௌனமாய் அமர்ந்து நான் பதிலுரைக்கும் அழகை ரசிப்பீர்களே! அந்தக் காரணம் போதாதா?
கோயில் திருவிழாவில் நான் போகும் பாதையெல்லாம் நீங்களும் வந்தீங்களே! நான் வாங்கி குடித்த அதே ராஜா ஐஸ்கிரீமை நீங்களும் வாங்கி சுவைத்த படி கடைக் கண்ணால் என்னை பார்த்தீங்களே! இப்படி பல காரணங்கள்! ஒன்று தெரியுமா நிரூ! என்னுடைய விஞ்ஞான பாட நோட்ஸ் கொப்பியை (நோட்டு புக்கு) வாங்கி நீங்கள் தவற விட்ட குறிப்புக்களை எழுதியது மட்டுமன்றி, நான் தவற விட்ட குறிப்புக்களையும் உங்கள் மென்மையான கையெழுத்தால் எழுதி கொடுத்தீங்களே! இதுவும் எனக்கு உங்கள் மீதான காதலை உரைப்பதற்கு உறுதுணையாக இருந்ததுங்க.

எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. I LOVE YOU NIRUPAN. NIRUPAN LOVE WITH ARTHTHIKA. மறைக்காமல் உங்கள் மன உணர்வை பதில் கடிதத்தில் சொல்லுங்கள். நீங்கள் என்னை வெறுத்தாலும் உங்களுக்காய் இவ் உலகில் நானிருப்பேன் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்!

மறு மடல் கண்டு, உங்கள் இருதயம் குளிரும் பதில் கடிதத்துடன் சந்திருக்கும் வரை விடை பெறுகிறேன்.
                                                                                                இப்படிக்கு;
                                                                                            உங்கள் அன்பிற்காக ஏங்கும்;
                                                                                             ஆர்த்திகா.

இவ்வாறு ஓர் கடிதம் எழுதி தந்தாள். கூடவே தன் மனசையும் காகிதத்தில் பத்திரப்படுத்தி அனுப்பினாள் ஆர்த்திகா. அன்று முதல் என் தூக்கம் போய் விட்டது. அந்தப் பதின்ம வயதில் அவள் நினைப்பில் என் கால்கள் என்னை ஆகாயத்தில் பறக்க வைக்கும் நோக்கில் உந்தித் தள்ள ஆரம்பித்தன. அவளை நினைக்கையில் எனக்குள் ஓர் இனம் புரியாத மாற்றம் உருவாகியது. அந்த மாற்றம் பற்றியும், என் பதில் கடிதம் எப்படி அமைந்தது தொடர்பிலும் அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.

பிற் சேர்க்கை: "என்னை கெடுத்த பெண்கள்" எனும் தலைப்பில் இத் தொடரினை எழுதி வந்தேன். கெடுத்த எனும் சொல் ஆபாசம் எனப் பலர் முகம் சுளிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து இப்போது புதிய தலைப்பில் இத் தொடரினை தொடர்கிறேன்."

பெண்ணையும் கவிதைக்கு பலர் ஒப்பிடுகிறார்கள். உண்மையில் பெண்ணும் ஓர் கவிதை தான். ஆதலால் தலைப்பில் கவிதை என்று வைக்கலாயிற்று. 

52 Comments:

athira said...
Best Blogger Tips

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன்... பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி, இன்றுபோல் இனிதே வாழ வாழ்த்துகிறோம்.

இந்த பிறந்தநாள் முடிய முன்பே... திருமண நாளையும் குறித்திட வாழ்த்துக்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ... பிறந்த நாள் பரிசு கப்பல்ல வருது.

ஊ.கு:
என்னோட சேர்ந்துதானே யோகா அண்ணனும் அமளிப்பட்டார்:).. நிரூபனுக்குப் பிறந்தநாளோ என, பிறகேன் இண்டைக்கு இன்னும் வாழ்த்தவில்லை:)).. அவர் சும்மாதானே இருக்கிறார்(கவனிக்கவும் இதை நான் சொல்லல்ல:)) வந்து சும்மா வாழ்த்தியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

athira said...
Best Blogger Tips

அங்க வாழ்த்திட்டுத் திரும்ப முன் இங்க பதிவு போட்டிட்டார், பிறந்தநாள் என்றதால திட்ட முடியேல்லை:)).

ஆர்த்திகாட கடிதத்தை, நிரூபன் தன் ஸ்டைலில் கொஞ்சம் மாத்தி எழுதியிருப்பதுபோல ஒரு பீலிங்ஸ்ஸ் வருதெனக்கு:))...

என்னதான் ஞபகங்கள்.. அதுகள் இதுகள்.. காதல் எனப் புலம்பினாலும்...

எல்லா அணிலையும் மரமேற விட்ட கதையாக்கிடக்கே:))

Thava said...
Best Blogger Tips

சில நாட்களுக்கு பிறகு தங்களது வலைக்கு வந்தேன்..மனம் மகிழ வழக்கம் போல ஓர் அழகான பதிவை படித்தேன்,,உணர்வுகளை எழுத்துக்களாக போட்டிருக்கீங்க..மிக்க நன்றி நண்பரே..தொடருங்கள்..

பி.கு : இப்பல்லாம் பெருசா இணையத்து பக்கம் வர முடியவில்லை..வந்தாலும் கண்ணுக்கு எட்டிய பதிவுள் ஓரிரண்டை வாசிக்கதான் முடியுது..தங்களது வலைக்கும் அடிக்கடி வர முடிவதில்லை.மன்னிக்கவும்.

Yoga.S. said...
Best Blogger Tips

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன்.////அவளை நினைக்கையில் எனக்குள் ஓர் இனம் புரியாத மாற்றம் உருவாகியது.///hi!hi!hi!!!ha!ha!haa!!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன்... பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி, இன்றுபோல் இனிதே வாழ வாழ்த்துகிறோம்.

இந்த பிறந்தநாள் முடிய முன்பே... திருமண நாளையும் குறித்திட வாழ்த்துக்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ... பிறந்த நாள் பரிசு கப்பல்ல வருது.

ஊ.கு:
என்னோட சேர்ந்துதானே யோகா அண்ணனும் அமளிப்பட்டார்:).. நிரூபனுக்குப் பிறந்தநாளோ என, பிறகேன் இண்டைக்கு இன்னும் வாழ்த்தவில்லை:)).. அவர் சும்மாதானே இருக்கிறார்(கவனிக்கவும் இதை நான் சொல்லல்ல:)) வந்து சும்மா வாழ்த்தியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
//

அவ்..

முதற் கண் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
திருமண நாள் குறிக்க அவங்க ஓக்கே சொல்லனுமே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெகு விரைவில் சந்தோசமான சேதி கிடைக்கும் என நம்புவோம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அங்க வாழ்த்திட்டுத் திரும்ப முன் இங்க பதிவு போட்டிட்டார், பிறந்தநாள் என்றதால திட்ட முடியேல்லை:)).

ஆர்த்திகாட கடிதத்தை, நிரூபன் தன் ஸ்டைலில் கொஞ்சம் மாத்தி எழுதியிருப்பதுபோல ஒரு பீலிங்ஸ்ஸ் வருதெனக்கு:))...

என்னதான் ஞபகங்கள்.. அதுகள் இதுகள்.. காதல் எனப் புலம்பினாலும்...

எல்லா அணிலையும் மரமேற விட்ட கதையாக்கிடக்கே:))
//

ஹே...ஹே..
என்ன பண்ண,
அணில்கள் என்றால் மரம் ஏறித் தானே ஆகனுமுங்க.
அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
அங்க வாழ்த்திட்டுத் திரும்ப முன் இங்க பதிவு போட்டிட்டார், பிறந்தநாள் என்றதால திட்ட முடியேல்லை:)).//

இன்னைக்கு கோவிச்சுக்கிட்டா சாமி குத்தம் ஆகிடும். ஆகவே கோவிச்சுக்க வேணாம் அக்கா...

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஆர்த்திகாட கடிதத்தை, நிரூபன் தன் ஸ்டைலில் கொஞ்சம் மாத்தி எழுதியிருப்பதுபோல ஒரு பீலிங்ஸ்ஸ் வருதெனக்கு:))...
//

உண்மை தான் அக்கா,
கொஞ்சம் வர்ணம் பூசியிருக்கேன்! கண்டு பிடிச்சதற்கு பரிசாக சொக்கிலேட் கேக் அனுப்பி வைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

சில நாட்களுக்கு பிறகு தங்களது வலைக்கு வந்தேன்..மனம் மகிழ வழக்கம் போல ஓர் அழகான பதிவை படித்தேன்,,உணர்வுகளை எழுத்துக்களாக போட்டிருக்கீங்க..மிக்க நன்றி நண்பரே..தொடருங்கள்..

பி.கு : இப்பல்லாம் பெருசா இணையத்து பக்கம் வர முடியவில்லை..வந்தாலும் கண்ணுக்கு எட்டிய பதிவுள் ஓரிரண்டை வாசிக்கதான் முடியுது..தங்களது வலைக்கும் அடிக்கடி வர முடிவதில்லை.மன்னிக்கவும்.
//

நண்பா, இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு.
நேரம் இருக்கும் போது வாருங்க
தங்கள் அன்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன்.////அவளை நினைக்கையில் எனக்குள் ஓர் இனம் புரியாத மாற்றம் உருவாகியது.///hi!hi!hi!!!ha!ha!haa!!!!!//

வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா,
என்னது..அவளை நினைக்கையிலா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிச்சுப்புடுவேன் பிச்சு!
எவளை நினைக்கையில்? ஆளுக்கு ஆசையை பாருங்க;-)))

jgmlanka said...
Best Blogger Tips

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிருபன்..
இன்று உங்கள் தளத்துக்குள் வந்த பின் தான் பிறந்த நாள் என்று தெரியும்..
வாழ்விலும், வலைத்தளத்திலும்
வானுயர வளர என் நல் வாழ்த்துக்கள்..

பதிவு மிக அழகு.. தொடர வாழ்த்துக்கள்
ஆமா.. நிஜமாவே ஆர்த்திகா தானா.. இல்ல...:)

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ, முதலில் எனது அன்பான பிறந்ததின வாழ்த்துக்கள்.எல்லோரையும் அன்புடன் அரவணக்கும் உங்கள் நல்ல மனதிற்கு ஏற்ப உங்கள் வாழ்வும் என்றும் சிறப்பாகவே அமையும். எல்லா இன்பங்களும் பெற்று நலமே வாழ வாழ்த்துகிறேன்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

//பிற் சேர்க்கை: "என்னை கெடுத்த பெண்கள்" எனும் தலைப்பில் இத் தொடரினை எழுதி வந்தேன். கெடுத்த எனும் சொல் ஆபாசம் எனப் பலர் முகம் சுளிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து இப்போது புதிய தலைப்பில் இத் தொடரினை தொடர்கிறேன்."//

நிரூபன், ஆபாசம், கில்மா.... போன்றவையெல்லாம் ஒரு விடயத்தை ஒவ்வொருவரும் பார்க்கும் கோணத்திலும் தங்கியுள்ளது. நிர்வாணாமாக ஒரு ஆணையோ பெண்ணையோ ஒரு ஓவியர், ஒரு வைத்தியர், சாதாரணமான ஒரு சராசரி மனிதன், ஒரு காமுகன் என ஒவ்வொருவரும் பார்க்கும்போதும் தோன்றும் எண்ணங்கள், உணர்வுகள் மாறுபடும். மறவர்கள் கூறுவது எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த எண்ணினால் கழுதையை சுமந்த கதைபோலவும் வந்துவிடும்.

Yoga.S. said...
Best Blogger Tips

செல்வராஜா பெற்றெடுத்த செல்வமே! வன்னிப் பெருநிலப் பரப்பின் அடலேறே! ஆர்த்திகாவின் ஆசை மணாளனே! பல்சுவைப் பதிவு தரும் கதம்பமே! இன்றைய நன்னாளில் பல்கலையும் பெற்று,கனவுக்கன்னி வாழ்க்கைத் துணையாக எதிர்வரும் காலத்தில் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ எல்லாம் வல்லவனை இறைஞ்சுகிறேன்,பெருந்தகையே!

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...

@Yoga.S.FR
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன்.////அவளை நினைக்கையில் எனக்குள் ஓர் இனம் புரியாத மாற்றம் உருவாகியது.///hi!hi!hi!!!ha!ha!haa!!!!!//

வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா,
என்னது..அவளை நினைக்கையிலா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிச்சுப்புடுவேன் பிச்சு!
எவளை நினைக்கையில்? ஆளுக்கு ஆசையை பாருங்க;-)))§§§§§§§ஏதோ நான் பதிவிட்டது போல்????பிச்சுப்புடுவேன் பிச்சு!(ச்சும்மா!)

K said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி! பொன் அனிவேர்சர்!

இனிய 6 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

ஹி ஹி ஹி ஹி மச்சி - உனக்கு 4 வருசத்துக்கு ஒரு முறைதானே பர்த்த்டே வரும்? உனக்கு இப்ப 24 வயசு! ஸோ, இது உன்னுடைய 6 வது பிறந்த நாள் தானே?

மிண்டும் வாழ்த்துக்கள் மச்சி

K said...
Best Blogger Tips

மச்சி, உனக்கு பிறந்தநாள் பரிசொண்டு தரத்தானே வேணும்? ம்...... என்ன தரலாம்? என்னட்ட கன காலமா, ஒரு 5 பவுண் சங்கிலி இருக்கு! நான் யாழ்ப்பாணத்தில் இருந்து 95 ம் ஆண்டு இடம்பெயர்ந்து வரும் போது, நாவற்குழி பாலத்தடியில கண்டெடுத்த சங்கிலி! அதை உனக்கு போட்டுவிடப் போறன் மச்சி! :-)

( ஹி ஹி ஹி ஹி ஹி சத்தியமா அந்த 5 பவுண் சங்கிலிய நாவற்குழி பாலத்துக்கு கீழதான் எடுத்தனான்! வேற யாராவது உரிமை கோரினால்..... அதுக்கு நான் நோ பொறுப்பாளி :-) )

K said...
Best Blogger Tips

அவள் கையிலிருந்து லெட்டரும், தின் பண்டமும், என் கைக்கு தாவியது. //////

மச்சி, பறிச்சுத்திண்டு போட்டு, கைக்குத் தாவியது எண்டு கதையா விடுறாய்?

K said...
Best Blogger Tips

கடிதத்தைப் பிரித்துப் படிக்க முன்பதாகவே எனக்கு காதல் போதையில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. /////

மச்சி, போதைல எப்புடி பறக்க முடியும்? கீழ விழுந்துகிடக்கத்தான் முடியும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்

K said...
Best Blogger Tips

நான் உங்கள் விழியோர விம்பத்தை தரிசித்து அனு தினமும் ஆதவனைக் கண்ட தாமரையாய் அகம் மகிழ்கிறேன். ////////

மச்சி, அவள் சொன்னது தன்னோட பழைய லவ்வர் ஆதவனைக் காணும்போது, எப்புடி சந்தோசமா இருந்திச்சோ, அதே மாதிரித்தானாம் உன்னைப் பார்க்கும் போதும் இருந்திச்சு! ஹி ஹி ஹி ஹி இது விளங்காமலா நீ வானத்தில் பறந்தாய்?

K said...
Best Blogger Tips

வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் வரிசை கிரமமாக குறிப்பெடுத்து, ஒவ்வோர் நாளும் நான் என்ன ஆடை அணிந்து வருகிறேன் என அறிந்து வைத்து அதற்கு மச்சிங்காக நீங்களும் உடை உடுத்தி வருவீங்களே! அந்த ஒரு காரணம் போதாதா?////////

ஹி ஹி ஹி ஹி ஹி இதைப் படிக்கும் போது பழைய நினைவெல்லாம் வருகுது! பெட்டையள் என்னதான் கலர் கலரா உடுத்தினாலும், கறுப்பு ஸ்கேர்ட்டும், வெள்ளை ப்ளவுஸும் அணியும் போது, அதன் அழகோ அழகு! அவ்வளவு நல்லா இருக்கும்!

ஆனால் எமது தமிழ்ப் பெண்களுக்கு இந்த ரசனை கிடையாது! கடும் கலரிலதான் உடுக்குங்களப்பா! ஆனால், இந்த ப்ளக் அண்ட் வைட் கம்பினேஷன்ல சிங்களத்தியள் உடுப்பாளவை! பார்க்கவே நல்லா இருக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

( ஹி ஹி ஹி ஹி ஹி இண்டைக்கு எல்லாரிட்டையும் வேண்டிக்கட்டப் போறென் )

K said...
Best Blogger Tips

இந்த பிறந்தநாள் முடிய முன்பே... திருமண நாளையும் குறித்திட வாழ்த்துக்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ... பிறந்த நாள் பரிசு கப்பல்ல வருது.///////

கப்பல் எந்த ரூட்டாலயாம் போவுது? ஃபிரான்ஸ் பக்கம் வந்தால் கடத்துவோம்! சொல்லி வையுங்கோ! :-)

Anonymous said...
Best Blogger Tips

Many more Happy returns of the day....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரம்...

தலைப்பை மாற்றியதற்கு நன்றி...

ரசித்தேன்...தொடரட்டும் நினைவுகளும் ..கவிதைகளும்...

Yoga.S. said...
Best Blogger Tips

பூனையின்ரை வீட்டைக் காணேல்ல!!!

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் பிறந்தநாள் விழா நாயகனே.இன்நாளில் சகல சம்பத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துகின்றேன். தனிமரம்.

தனிமரம் said...
Best Blogger Tips

அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் என்று எப்போது ஆர்த்திக்காவுக்கு அன்புள்ள நிரூபன் எழுதுவார். ஏங்கி நிற்கின்றேன் எடுத்துக் கொண்டே படிக்கின்ற வயசில் பாதை மாறிப்போய்  விடுவான் பண்டிதர் என்று விதானையார் வீட்டில் போட்டுக் கொடுக்க. ஹீ ஹீ அடுத்த பதிவு எப்போது வரும்  ????

தனிமரம் said...
Best Blogger Tips

பாவி மக்கா நாங்க படிக்கும் போது எல்லாம் மேலதிக வகுப்பு 5 நாட்களில் இருந்து 3 நாட்களா குறைந்து விட்டது இவர் மட்டும் 7 நாட்களும் சைட் அடித்திருக்கிறார். 

Yoga.S. said...
Best Blogger Tips

/////"காதலி பிரியவதனா" போய்விட்டாள் புலம்பெயர்ந்து என்று புலம்பும் அன்பு தம்பி நிரூபன்////இதென்ன புதுக்கதையா இருக்கு???ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...
Best Blogger Tips

இப்படி எல்லாம் உருகி உருகி காதலிக்க எல்லாருக்கும் வரம் கிடைக்காது மச்சி. ஹீ நாங்க எல்லாம் மச்சாள்மார்களுடன் முட்டி மோதுவம். ஹீ ஹீ

Yoga.S. said...
Best Blogger Tips

தனிமரம் said...

இப்படி எல்லாம் உருகி உருகி காதலிக்க எல்லாருக்கும் வரம் கிடைக்காது மச்சி. ஹீ நாங்க எல்லாம் மச்சாள்மார்களுடன் முட்டி மோதுவம். ஹீ ஹீ!////ஹும்..........குடுத்துவச்ச ஜென்மம்!

Yoga.S. said...
Best Blogger Tips

வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் வரிசை கிரமமாக குறிப்பெடுத்து, ஒவ்வோர் நாளும் நான் என்ன ஆடை அணிந்து வருகிறேன் என அறிந்து வைத்து.....////ஏழு நாளும் பள்ளிக்கூடம் போன ஆக்கள் உலகத்திலயே இவை ரெண்டுபேர் மட்டுந்தான்!

தனிமரம் said...
Best Blogger Tips

/////"காதலி பிரியவதனா" போய்விட்டாள் புலம்பெயர்ந்து என்று புலம்பும் அன்பு தம்பி நிரூபன்////இதென்ன புதுக்கதையா இருக்கு???ஹி!ஹி!ஹி!!!
//யோகா ஐயா இது எல்லாம் பழைய பதிவில் கும்மியடித்த போது இப்பத்தான் தெரியும் ஆர்த்திக்கா என்று இன்னொரு செட்டப்பு இருக்கு இந்த மைனர் மாப்பிள்ளைக்கு என்று .ஹீ ஹீ பயபுள்ள அடிக்க வருவான் நான் ஓடப்போறன் அடுப்படிக்கு .ஹீ ஹீ

தனிமரம் said...
Best Blogger Tips

வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் வரிசை கிரமமாக குறிப்பெடுத்து, ஒவ்வோர் நாளும் நான் என்ன ஆடை அணிந்து வருகிறேன் என அறிந்து வைத்து.....////ஏழு நாளும் பள்ளிக்கூடம் போன ஆக்கள் உலகத்திலயே இவை ரெண்டுபேர் மட்டுந்தான்!
// அதிலதான் மாப்பிள்ளை என்ஜினியர் ஆகிவிட்டார்.ஹீ

தனிமரம் said...
Best Blogger Tips

தனிமரம் said... 

இப்படி எல்லாம் உருகி உருகி காதலிக்க எல்லாருக்கும் வரம் கிடைக்காது மச்சி. ஹீ நாங்க எல்லாம் மச்சாள்மார்களுடன் முட்டி மோதுவம். ஹீ ஹீ!////ஹும்..........குடுத்துவச்ச ஜென்மம்!
// தலையில் இப்ப குட்டும்போது ஜென்மம் மறு பாதி தேடும் ஹீ ஹீ மச்சாள் இல்லஅவ்வ்வ்வ்

Yoga.S. said...
Best Blogger Tips

தனிமரம் said...

தனிமரம் said...

இப்படி எல்லாம் உருகி உருகி காதலிக்க எல்லாருக்கும் வரம் கிடைக்காது மச்சி. ஹீ நாங்க எல்லாம் மச்சாள்மார்களுடன் முட்டி மோதுவம். ஹீ ஹீ!////ஹும்..........குடுத்துவச்ச ஜென்மம்!
// தலையில் இப்ப குட்டும்போது ஜென்மம் மறு பாதி தேடும்.ஹீ ஹீ மச்சாள் இல்ல.அவ்வ்வ்வ்////எல்லாம் "முற்பிறப்பில"செய்த புண்ணியம் தான்!!!ஹி!ஹி!ஹி!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

தனிமரம் said...

வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் வரிசை கிரமமாக குறிப்பெடுத்து, ஒவ்வோர் நாளும் நான் என்ன ஆடை அணிந்து வருகிறேன் என அறிந்து வைத்து.....////ஏழு நாளும் பள்ளிக்கூடம் போன ஆக்கள் உலகத்திலயே இவை ரெண்டுபேர் மட்டுந்தான்!
// அதிலதான் மாப்பிள்ளை என்ஜினியர் ஆகிவிட்டார்.ஹீ!!!////அப்பிடியெண்டால்(எ/இஞ்சினியர்)கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கோணும்!ஹி!ஹி!ஹி!!!!

Anonymous said...
Best Blogger Tips

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன் annaa ... பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி, இன்றுபோல் இனிதே வாழ வாழ்த்துகிறோம் annaa.

Unknown said...
Best Blogger Tips

நிரூபன்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காட்டான் said...
Best Blogger Tips

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிரூபன்..!!

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...இதே காதல் நிறைவோடு என் றும் சந்தோஷமாய் இருக்க அக்காச்சியின் அன்புப் பிறந்த நாள் வாழ்த்துகள் !

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் ஹேமா!///ஹேமா said...

நிரூ...இதே காதல் நிறைவோடு என்றும் சந்தோஷமாய் இருக்க அக்காச்சியின் அன்புப் பிறந்த நாள் வாழ்த்துகள் !////அப்ப இந்த ஜென்மத்தில கலியாணம் இல்லை எண்டுறியள்????ஹி!ஹி!ஹி!!!!

Marc said...
Best Blogger Tips

மிக அருமையான சுவாரசியமான பதிவு வாழ்த்துகள்

மகேந்திரன் said...
Best Blogger Tips

அன்புச் சகோதரர் நிரூபன்,
மிக அசாதாரமான நாளில் பிறந்ததாலோ என்னவோ..
உங்களின் எண்ணங்களிலும் பதிவுகளிலும்
எப்போதுமே ஒரு வித்தியாசம் எத்தனித்துக் கொண்டிருக்கும்...

என் அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா..
விரைவில் மணக்கோலம் பூண்டிட
இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

KANA VARO said...
Best Blogger Tips

"என்னை கெடுத்த பெண்கள்" எனும் தலைப்பில் இத் தொடரினை எழுதி வந்தேன். கெடுத்த எனும் சொல் ஆபாசம் எனப் பலர் முகம் சுளிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து இப்போது புதிய தலைப்பில் இத் தொடரினை தொடர்கிறேன்."//

உங்கள் பணி தொடரட்டும்..

Anonymous said...
Best Blogger Tips

முகநூலில் பிறந்த நாள் வாழ்த்து போட்டிருந்தேன். இங்கும் என் வாழ்த்துகள் நிருபனுக்கு --இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகுக.
வேதா. இலங்காதிலகம்.

shanmugavel said...
Best Blogger Tips

நிரூ நலமா? பருவ வயதில் பலருக்கும் ஏற்படும் அனுபவங்கள்,சுவாரஸ்யம்,தலைப்பு மாற்றியது சரிதான்.கொஞ்சம் லேட்டாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ரிஷி said...
Best Blogger Tips

தமிழ்மண நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள போன் நம்பர் யாராவது கொடுக்க முடியுமா? அவசரத் தேவை.

Yoga.S. said...
Best Blogger Tips

ரிஷி said...

தமிழ்மண நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள போன் நம்பர் யாராவது கொடுக்க முடியுமா? அவசரத் தேவை.////ஏண்ணே???பேங்கிலேருந்து காசை அதிகமா புடிங்கிட்டாங்களோ????

ஜேகே said...
Best Blogger Tips

தலைவரே .. பிறந்த நாளுக்கு பிறகு பதிவ காணேல்ல? என்ன ஆச்சு?

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

நிரூபன் said...
Best Blogger Tips

@ரிஷி
தமிழ்மண நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள போன் நம்பர் யாராவது கொடுக்க முடியுமா? அவசரத் தேவை.//

நண்பரே, தமிழ்மண நிர்வாகிகளின் தொலைபேசி இலக்கம் இல்லை நண்பா,
அவர்களின் மின்னஞ்சல் தான் இருக்கிறது.

admin@tamilmanam.com

நிரூபன் said...
Best Blogger Tips

பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும்ல், கருத்துரை வழங்கிய நட்புக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails