Wednesday, February 8, 2012

என்னை கெடுத்த சிட்டுக்கள் - சூடான & சுவையான சுய சொறிதல்

எல்லோருக்கும் வணக்கமுங்க; 
பள்ளி செல்லும் மாணவர்களை ஏற்றி, இறக்கும் சேவையில் ஆண்களுக்குத் தனியான பேருந்தும், பெண்களுக்குத் தனியான பேருந்தும் இருப்பதால், என்னால் ஆறாங் கிளாஸ் ஆரம்பத்தில் ஆர்த்திகாவை, அபிநயாவை பார்க்க முடியலை. கண்டிப்பாக இவங்க ரெண்டு பேரில் ஒருத்தியை சந்தித்தால் தான் சைந்தவியைப் பத்தி அறிய முடியும் என்ற ஆவலில் காத்திருந்தேன். ஒரு நாள் பெண்களை ஏற்றி இறக்கும் பஸ் பஞ்சராகிட்டுதுங்க. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது, என்னைக் கெடுத்த பெண்கள் தொடரின் ஐந்தாவது பாகமாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும். 
 பாகம் 05:

பஸ்ஸினுள் எனக்கு பின்னே ஆர்த்திகாவும், அபிநயாவும் வந்து நின்னாங்க. அவங்களிடம் பேசனும் என்று எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருந்திச்சு. அதே டைம்மில நெஞ்சோ லப், டப் லப் டப் என்று பயத்தினால் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. நம்மூரில் ஒரு வழக்கம் இருக்குங்க. ஆறாம் கிளாஸ் வந்திட்டா பொண்ணுங்க கூட பசங்க முகம் பார்த்து பேச மாட்டாங்க. அது மட்டுமில்லைங்கோ, ஆறாங் கிளாஸில இருந்து பத்தாம் கிளாஸ் வரைக்கும்; ஐ மீன் பொண்ணுங்க எல்லாம் பருவமடைந்து வெட்கம் மறந்து ஆண்கள் முகம் பார்த்து பேசத் தயாராகும் வரை யாருமே பொண்ணுங்க கூட பேச ட்ரை பண்ண மாட்டாங்க.இந்தக் காரணத்தினால் அன்று ஆர்த்திகாவுடனும், அபிநயாவுடனும் பேசக் கிடைத்த சான்ஸை மிஸ்ட் பண்ணிட்டேன்.

அப்புறமா, ஒவ்வோர் நாளும் நான் பாடசாலை பஸ்ஸில் இடது பக்கமா, வீதியால் செல்லும் போது வேம்படி மகளிர் கல்லூரியை பார்த்துக் கொண்டு செல்வதற்கு ஏத்த மாதிரி நிற்கத் தொடங்கினேன். அப்படி நிற்பதற்கான காரணம் ஆர்த்திகா, பாடசாலை விட்டு வந்து பஸ்ஸில் ஏறுவதற்காக வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்னாடி நிற்பாங்க. நானும் அவங்களைப் பார்த்து சிரிக்கலாம் என்ற ஆசை தானுங்க. இந்த ஆசை ஏழாம் கிளாஸ் படிக்கும் போது தொடங்கிச்சு எனலாம். சைந்தவியை பத்திய நினைப்பு ஏதுமின்றி சைலண்டாக என் நாட்கள் நகர்ந்திச்சு. ஒவ்வோர் நாளும் பஸ் வேம்படி மகளிர் கல்லூரியை தாண்டிச் செல்லும் போது, என் கண்கள் ஆர்த்திகாவை தேட ஆரம்பிக்கும்.

ஆர்த்திகாவின் கண்களும், என் கண்களும் பஸ் ஓடும் வேகத்தினையும் கடந்து சந்தித்துக் கொள்ளும் போது மனதிற்குள் ஓர் ஒளி வீச்சு பரவும். என்னை அறியாமலே என் அடி வயிற்றில் ஓர் அமிலம் சுரப்பது போன்று குளிர் தண்ணீர் சுரந்து வயிறெல்லாம் குளிர ஆரம்பிக்கும். ஆனால் எட்டாம் கிளாஸ் வரைக்கும் ஆர்த்திகா கூட பேசிக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. அந்த நாள் பார்வைக்கு எனக்கு அர்ததம் என்று அறிவதை தவிர்த்து; ஆர்த்திகா மறுபடியும் என்னை பார்க்க மாட்டாங்களா என்று என் மனம் ஏங்க ஆரம்பிக்கும். இப்படியான சூழலில் எட்டாம் கிளாஸ் படிக்கும் போது, நான் டியூசனுக்குச் மறுபடியும் போக ஆரம்பிச்சேன். அப்போது தான் ஆர்த்திகாவை மீட் பண்ணும் சான்ஸ் கிடைக்கும் என நினைத்து கற்பனையில் மிதந்தபடி நானும் டியூசன் கிளாஸில் உட்கார்ந்தேன்.

என் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போடும் வண்ணம் ஓர் சேதி கிடைச்சுதுங்க, ஆர்த்திகாவிற்கு காய்ச்சல்.அதனால அவங்க பள்ளிக் கூடத்திற்கு வரமாட்டாங்க, டியூசனுக்கும் இனிமே வரமாட்டாங்க அப்படீன்னு ஒரு பொண்ணு டியூசன் மாஸ்டரிடம் சொல்லிச்சு. ஆர்த்திகாவைப் பார்க்கும் ஆவலில் நான் டியூசனுக்குப் போனேன். ஆனால் அவங்க டீயூசனுக்கு வரமாட்டாங்க அப்படீன்னு எனக்கு இடியாய் ஓர் சேதி கிடைக்குது. "என்ன இழவுடா இது" என்று எனக்குள் நானே நொந்து கொண்டேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் ஆர்த்திகா டியூசனுக்கு வந்தாங்க. அடிப் பாவி! காய்ச்சல் என்றால் மெலிந்து வாடிப் போயிடுவாங்க. உனக்கு ஒரு மாசம் காய்ச்சல் என்றால் எம்புட்டு மெலிஞ்சிருப்பாய். ஆனால் நீ மெலியலையே! கொளு கொளு என்று ரோஜா பட ஹீரோயின் மதுபாலா மாதிரி இருக்கிறியே என நினைத்தேன்,
அவங்க டீயூசனுக்கு வந்தது தான் தாமதம். காய்ச்சல் மாறிடுச்சே என ஒரு புன்னகை பூத்தவாறு எல்லோருக்கும் சாக்கிலேட் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு தன்னோட பொறந்த நாள் அப்படீன்னு சொல்லி சாக்லேட் கொடுத்தாங்க. எனக்கு ஒரு சந்தேகம் இருந்திச்சு. இவளுக்கு பொறந்த நாள் இன்னைக்கு இல்லையே என நினைத்தேன். ஆனால் இவள் ஏன் இன்னைக்கு சாக்கிலேட் கொடுக்கிறாள் என ஒன்னும் தெரியாத பாப்பாவாய் யோசித்தேன். அதற்கான விடை ஒரு சில மாதங்களில் கிடைத்தது. ஆர்த்திகா எட்டாம் கிளாஸ் முடிய முன்பதாக மீண்டும் பிறந்த நாளிற்கு சாக்கிலேட்டுடன் வந்தாள். மொதல் பொறந்த நாளுக்கு சாக்கிலேட் கொடுக்கும் போது கிளாஸ் எடுத்த அதே வாத்யார் தான் இப்போதும் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கேட்டார்! "உமக்கு மட்டும் எப்படி ஒரு வருடத்தில் ரெண்டு பொறந்த நாள் வரும் அப்படீன்னு? அவள் தலையை குனிந்து வெட்கப்பட்டு ஓர் பதில் சொன்னாள்! 

அந்தப் பதில் கேட்டு வகுப்பறையே சிரிப்பொலியால் அதிர்ந்தது. அது என்ன பதில் என்று அறிய ஆவலா? காத்திருங்கள்! அடுத்த பாகம் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான தொகுப்பாக உங்களை நாடி வரும். 
************************************************************************************************************************
இப் பதிவினூடாக புன்னகை வலை வலைப் பதிவிற்குப் போய் வருவோமா வாசக உள்ளங்களே? "என்றும் 16" எனும் பெயரில் சகோதரி ஒருவர் "புன்னகை வலை" எனும் வலைப் பதிவினை எழுதி வருகின்றார். அறிவியல், கவிதை, உளவியல், சுகாதார தகவல்கள் எனப் பல் சுவைப் பதிவுகளைப் புன்னகை வலையூடாக எழுதி வருகின்ற சகோதரி என்றும் 16 அவர்களது வலைப் பூவின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?
பெண் பதிவர்கள் மத்தியில் நகைச்சுவைப் பதிவர்கள் இல்லையே என்று ஆதங்கப்படுவோர் யாராக இருப்பினும் புன்னகை வலை வலைப் பூவிற்கு கண்டிப்பாக சென்று படித்துப் பாருங்கள். நிச்சயமாக இவரது பதிவுகளின் நகைச்சுவை உணர்வு பற்றிப் புரிந்து கொள்வீங்க.
புன்னகை வலை வலைப் பதிவிற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
************************************************************************************************************************

படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை

14 Comments:

K.s.s.Rajh said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்
////மீண்டும் பிறந்த நாளிற்கு சாக்கிலேட்டுடன் வந்தாள். மொதல் பொறந்த நாளுக்கு சாக்கிலேட் கொடுக்கும் போது கிளாஸ் எடுத்த அதே வாத்யார் தான் இப்போதும் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கேட்டார்! "உமக்கு மட்டும் எப்படி ஒரு வருடத்தில் ரெண்டு பொறந்த நாள் வரும் அப்படீன்னு? அவள் தலையை குனிந்து வெட்கப்பட்டு ஓர் பதில் சொன்னாள்!

அந்தப் பதில் கேட்டு வகுப்பறையே சிரிப்பொலியால் அதிர்ந்தது. அது என்ன பதில் என்று அறிய ஆவலா? காத்திருங்கள்!////

எல்லாப் பசங்களுக்கும் இப்படி டவுட்டுக்கள் வருது பாருங்களேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////என்ன இழவுடா இது" என்று எனக்குள் நானே நொந்து கொண்டேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் ஆர்த்திகா டியூசனுக்கு வந்தாங்க. அடிப் பாவி! காய்ச்சல் என்றால் மெலிந்து வாடிப் போயிடுவாங்க. உனக்கு ஒரு மாசம் காய்ச்சல் என்றால் எம்புட்டு மெலிஞ்சிருப்பாய். ஆனால் நீ மெலியலையே! கொளு கொளு என்று ரோஜா பட ஹீரோயின் மதுபாலா மாதிரி இருக்கிறியே என நினைத்தேன்,////

ஹி.ஹி.ஹி.ஹி............

Yoga.S. said...
Best Blogger Tips

அவள் தலையை குனிந்து வெட்கப்பட்டு ஓர் பதில் சொன்னாள்! ///இத வேற நான் சொல்லணுமாக்கும்???ஹி!ஹி!ஹி!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

ஒவ்வோர் நாளும் நான் பாடசாலை பஸ்ஸில் இடது பக்கமா,வீதியால் செல்லும் போது வேம்படி மகளிர் கல்லூரியை பார்த்துக் கொண்டு செல்வதற்கு ஏத்த மாதிரி நிற்கத் தொடங்கினேன்./////அடப்பாவி!என்னைய மாதிரியே கேரதீவு பஸ்ஸில ஏறோணுமெண்டு பெல் அடிச்ச உடன ஓடோடெண்டு ஓடி முனிசிப்பலுக்கு முன்னால நிக்கிற மாதிரி.........................!

சசிகுமார் said...
Best Blogger Tips

ஓவர் சேட்டை பண்ணி இருக்கீங்க போல...

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

சும்மா பூந்து விளையாடியிருக்கீங்க போல. பிஞ்சில பழுத்த பழம்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

// ஆர்த்திகாவின் கண்களும், என் கண்களும் பஸ் ஓடும் வேகத்தினையும் கடந்து சந்தித்துக் கொள்ளும் போது மனதிற்குள் ஓர் ஒளி வீச்சு பரவும். என்னை அறியாமலே என் அடி வயிற்றில் ஓர் அமிலம் சுரப்பது போன்று குளிர் தண்ணீர் சுரந்து வயிறெல்லாம் குளிர ஆரம்பிக்கும். //

ஓ ... இது தான் லவ் ஜுரத்திற்கு சிம்ப்டம்ஸோ?

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

அப்போ முதல் காய்ச்சல்ல சம்திங் ராங் ... ஹி ஹி

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

அன்னிக்கு தான் அவங்க புதுசா பொறந்தாங்களோ???

Anonymous said...
Best Blogger Tips

படத்தில் உள்ளவர் தான் ஆர்த்திகாவா? -:)

புன்னகை வலை நேற்று தானே அறிமுகம் செய்தீர்கள்?

தொடருங்கள் கண்ண லீலைகளை...

விச்சு said...
Best Blogger Tips

அழகான பொண்ணுதான கெடுத்திருக்கு. பரவாயில்ல.அப்புறம்... ஆங் மதுபாலா அழகா இருக்காங்க.

MoonramKonam Magazine Group said...
Best Blogger Tips

பதிவுக்கு நன்றி!
நட்புடன்
மூன்றாம் கோணம்

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

இன்னமும் நீங்கள் இதுமாதிரி எழுதவேண்டுமா? (பன்றி, பசு என்றோ எங்கேயோ நீங்கள் எழுதிருந்ததை வாசித்த ஞாபகம்).

(இந்தக் comment பிடிக்காவிட்டால் தூக்கிவிடவும்)

நிரூபன் said...
Best Blogger Tips

@எஸ் சக்திவேல்
இன்னமும் நீங்கள் இதுமாதிரி எழுதவேண்டுமா? (பன்றி, பசு என்றோ எங்கேயோ நீங்கள் எழுதிருந்ததை வாசித்த ஞாபகம்).

(இந்தக் comment பிடிக்காவிட்டால் தூக்கிவிடவும்)
//

வணக்கம் அண்ணா,
நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.
முடிந்தால் பேஸ்புக்கில் ஓர் மெசேஜ் கொடுக்கவும்.

அனுபவங்களைத் தானே எழுதுகிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails