Monday, September 12, 2011

மஹிந்தரின் மமதையும் மண் கவ்வப் போகும் இந்திய மத்திய அரசும்!

ஈழப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகப் போராடிய விடுதலை அமைப்புக்களின் போராட்ட வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் இந்தியா எவ்வளவு தூரம் உதவியதோ, அதே போன்று இன்றைய கால கட்டத்தில் போராட்ட அமைப்புக்களை வேரோடு கிள்ளி எறிவதற்கும் இந்திய மத்திய அரசு தன்னாலான முழுமையான பங்களிப்புக்களையும் வழங்கியுள்ளது.  இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் ராஜீவ் காந்தி விடயமும், சோனியா அம்மையாரின் ரத்தத்திற்கு ரத்தம் என்கின்ற பழி வாங்கும் படலத்தினையும் தான் காங்கிரஸ் அரசு கையாண்டு வருகின்றது என்று கருதும் பல்லாயிரக்கணக்கானோருக்கு சோழியன் குடுமி சும்மா ஆடாது எனும் யதார்த்தம் மட்டும் தெரியவில்லை. நிரூபன் 

அனுமதியின்றி www.thamilnattu.com இலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் இலங்கை மீதான கரிசனைக்கு அன்றும் சரி இன்றும் சரி, பிரதான காரணமாக இருக்கும்- மறைந்திருக்கும் உண்மை யாதெனில் இலங்கையின் இயறகைத் துறைமுகமான திருகோணமலைத் துறைமுகம் மீதான தீராத காதலாகும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மேலைத்தேச- கீழைத்தேச நாடுகளிற்கு நடுவேயும் அமைந்துள்ள இந்த இயற்கைத் துறைமுகம் தான் இந்தியாவின் கண்களுக்கு உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு அம்சமாகும், இதனால் தான் "நீ எனக்கு இயற்கைத் துறைமுகத்தை எழுதிக் கொடு" நன் உனக்கு புலிகளைப் பூண்டோடு அழிப்பதற்கான சகல வசதிகளையும் செய்து தருகின்றேன் என்று 2008-2009ம் ஆண்டில் இந்திய ராஜதந்திரிகளை இலங்கைக்கு அனுப்பி ரகசியப் பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகிருந்தன.அனுமதியின்றி www.thamilnattu.com இலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது
மேற்படி சம்பவங்கள் பழைய விடயங்கள் என்றாலும் வரலாறு முக்கியம் என்பதால் இங்கே இரண்டு பந்திகளுக்குள் உள்ளடக்கியிருக்கிறேன். மோட்டுச் சிங்களவன் என்று தமிழர்களால் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற சிங்கள இன மக்கள் "இஞ்சியினைக் கொடுத்து மிளகினை வாங்குமளவிற்கு" பொருளாதார விடயங்களில் சாமர்த்தியமான திறமைசாலிகள் என்பதனை மீண்டுமொரு தரம் நிரூபித்திருக்கிறார்கள். அது தான் ஈழ யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆரம்பமான இந்திய மத்திய அரசு மீதான புறக்கணிப்பு விடயங்களாகும்.  இலங்கை திருகோணமலைத் துறைமுகத்தினைத் தருவதாக இந்தியாவிற்குக் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதற்கு முன்பதாக இந்தியாவினை தன் நலன் சார் நடவடிக்கைகளில் இருந்து விரட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட போரில் சிதைவடைந்த இலங்கையினை மீளக் கட்டியெழுப்புவதற்கான போக்குவரத்துச் சாதனங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் என அனைத்துமே தரமற்றவை என்று குற்றஞ்சாட்டி இந்தியாவுடனான தொடர்பினை விலக்கி வைக்கத் தொடங்கியது.

அனுமதியின்றி www.thamilnattu.com இலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது
சீன அரசுடன் யுத்த காலத்தில் இருந்த நெருக்கத்தினை விட தன் நெருக்கத்தினை இலங்கை அரசு மேலும் மேலும் இறுக்கமாக்கி, அம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் விமான நிலையக் கட்டுமானங்களுக்கு ஊழியர்களும், தொழில் நுட்பவல்லுனர்களும் தேவை எனும் நோக்கில் சீனாவில் உள்ளோரைக் குறைந்த கூலியில் இலங்கையில் வேலைக்கு அமர்த்தலாம் எனும் பொய் கூறி இலங்கைக்குள் கொண்டு வந்தார்கள் இலங்கையின் தொழிற் துறை அமைச்சர்கள். வடக்கு கிழக்கில் பெற்றோலிய நிறுவனங்களை அமைத்து இந்தியாவின் வியாபார நலன்களைப் பெருக்க உதவுவதாக கூறிய இலங்கை அமைச்சர்கள், திடீரெனச் சீனாவினை வடக்கு கிழக்கில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களோடு ஒன்றிணைந்த செயற்பாட்டளாராக கடமையாற்ற அழைப்பு விடுத்தார்கள்.
அனுமதியின்றி www.thamilnattu.com இலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது
மேற் கூறிய விடயங்கள் கூட இந்திய அரசிற்கு ஏமாற்றத்தினை அளிக்கவில்லை. மாறாக அண்மையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அந்தமான் தீவுகளில் உள்ள இந்தியக் கடற்படை மையங்களையும், இந்து சமுத்திரத்தின் ஊடாக நிகழும் இந்தியக் கடற்படையின் விநியோக(வழங்கல்களை) செயற்பாடுகளையும் கண்காணிப்பதனை ஊர்ஜிதப்படுத்திய இந்தியக் கடற்படையினர், சீனக் கப்பலைப் பின் தொடர்ந்து சென்ற போது, இலங்கை தனது நாட்டுக்குள் குறிப்பிட்ட கப்பலைத் தரை தட்ட உதவி செய்து தனது சீன விசுவாசத்தினை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
(அன்று ராஜீவ் காந்தியைத் துப்பாக்கிப் பிடியால் அடித்த அதே இராணுவத்திற்கு, நிகழ்காலத்தில் வன்னிக் களமுனையில் 2008-2009ம் ஆண்டு காலப் பகுதியில் வழி நடத்தல் செய்த இந்திய இராணுவம்)
இவையெல்லாம் இந்திய அரசிற்கு மிகுந்த ஏமாற்றத்தினை அளித்து நிற்கையில் இலங்கையின் சால்வைச் சகோதரர்கள் சீனாவுடனான நெருக்கத்தைப் பெருக்கி, இந்தியாவினைக் கை கழுவி விடும் செயலில் தான் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். போர்க் குற்ற வழக்கு, மனித உரிமைகளை மீறல் என ஐநா சபை மூலம் மஹிந்த ராஜபக்ச மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என பலவும் மஹிந்தரின் வயிற்றில் புளியைக் கரைத்திருந்த நிலையிலும், இந்தியா சீனா எனும் இரண்டு கைப் பிள்ளைகளின் உதவியோடு ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தீர்மானங்களினைத் தனக்குச் சாதகாமாக்கி வந்துள்ள இலங்கை அரசிற்கு எதிராக தன் ஆதரவினைக் காட்டாது எதிர்ப்பினை அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறது இந்தியா.நிரூபன்
அனுமதியின்றி www.thamilnattu.com இலிருந்து காப்பி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவின் தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களால் நிகழ்த்தப்படும் உணர்வெழுச்சிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை இந்திய அரசிற்கு இல்லையே என்று நையாண்டி செய்து, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களை அழிக்க விரும்பின் "உங்களின் போர் வீரர்களை எங்கள் நாட்டிற்கு அனுப்புங்கள், வேண்டுமானால் பயங்கரவாதத்தினை எப்படி ஒழிப்பது என்று" என்று பாடம் நடத்துகிறோம் என்றும், சவால் விட்ட, போர் வெற்றி மமதையில் நிற்கும் மஹிந்த அரசு,  வரலாற்றுத் துரோகமிழைத்த இந்திய மத்திய அரசிற்கு நல்லதோர் பாடத்தினை அண்மைய நாட்களில் புகட்டி வருகின்றது.

எதிர் காலத்தில் சீன அரசின் இந்திய இராணுவ நிலைகள் பற்றிய கண்காணிப்பிற்குப் பகடைக் காயாக இருந்து தனது பௌத்த விசுவாசத்தினை இலங்கை காட்டுவதற்கு முன்னோடியாக இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முழுமையான பராமரிப்பு வேலைகளை சீனாவிற்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது இலங்கை அரசு.

இதனைத் தான் தமிழில் "செய்ந் நன்றி மறப்பதென்று" சொல்லுவார்களோ?
எண்ணம்- எழுத்து: செல்வராஜா நிரூபன்.
************************************************************************************************************************************
பதிவுலகில் அரசியல், மொக்கை, குத்து வெட்டுப் பதிவுகள் எனப் பல வகையான பதிவுகளைப் படித்துச் சோர்ந்து போய்க் கிடக்கும் உள்ளங்களிற்கு மென்மையான உணர்வுகள் கொண்ட ஆன்மீகப் பதிவுகள், பயணக் கட்டுரைப் பகிர்வுகள் தான் சம நிலையில் மன உணர்வினைப் பேணிட வழிகாட்டியாக விளங்குகின்றன.
தன்னுடைய மணிராஜ் எனும் வலைப் பூவின் வாயிலாக ஆன்மீகத் தகவல்களையும்,  சிறப்பு மிக்க தல யாத்திரைக் குறிப்புக்களையும், வெளி நாட்டுச் சுற்றுலாத் தகவல்களையும் அருமையான கண் கவர் புகைப்படங்களோடு "மணிராஜ்" எனும் வலைப் பூவில் பகிர்ந்து வருபவர் தான் இராஜராஜேஸ்வரி அவர்கள்.
இராஜராஜேஸ்வரி அவர்களின் மணிராஜ் வலைப் பூவிற்குச் செல்ல:
http://jaghamani.blogspot.com/
***************************************************************************************************************************************
உறவுகளின் கவனத்திற்கு: சமீப காலமாக இன்ட்லி ஓட்டுப் பட்டையில் என் வலைப் பதிவின் ஊடாக ஓட்டளிக்க முடிவதில்லை எனும் உங்களின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து, இப் பதிவிற்கு இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன்.  இன்ட்லியில் ஓட்டளிக்க: 

127 Comments:

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

புதிய தகவலா இருக்கே, இருந்தாலும் சீனா இலங்கை உறவு, இந்தியாவுக்கு பெரிய சிக்கல்தான்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஹே ஹே ஹே ஹே நான்தான் முதல் முதல்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

தமிழ்மணம் இணைக்க முடியலை..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அடேங்கப்பா! அலசல் அபாரம்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////எண்ணம்- எழுத்து: செல்வராஜா நிரூபன்////

ஏன் பாஸ் எதாவது படம் இயக்குற திட்டம் இருக்கோ...இப்பவே சில இயக்குனர்கள் பாணியில் எண்ணம்-எழுத்து.என்று போடுறீங்க.அப்படி இயக்கினால் எனக்கு நடிக்க ஒரு ரோல்தாங்க.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...
Best Blogger Tips

விரிவான அலசல்.அருமையாக உள்ளது பாஸ்

Mahan.Thamesh said...
Best Blogger Tips

இப்போதைக்கு வோட்டு

Unknown said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி நண்பா

M (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

நடுநிலை தவறாத பார்வை. கலக்குங்க நண்பரே. ஈழம் பற்றிய புரிதலை உங்கள் பார்வையினூடு இன்னும் மேம்படுத்திக்கொள்ள ஆவல். - பகிர்வுக்கு நன்றி

K said...
Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்!:///

வாவ், பின்னீட்டிங்க!

K said...
Best Blogger Tips

நச்!

K said...
Best Blogger Tips

ரைட்டு!

K said...
Best Blogger Tips

அட!

K said...
Best Blogger Tips

பரவாயில்லையே!

K said...
Best Blogger Tips

வெளங்கிரும்!

K said...
Best Blogger Tips

கலக்கல் மாப்ளே!

K said...
Best Blogger Tips

சும்மா சொல்லக் கூடாது! அட்டகாசம்!

K said...
Best Blogger Tips

பதிவு போட்டது நன்றி!

K said...
Best Blogger Tips

தமிழ்மணத்துல இணைச்சதுக்கு நன்றி!

K said...
Best Blogger Tips

இண்ட்லியில் இணைச்சதுக்கு நன்றி!

K said...
Best Blogger Tips

தமிழ் 10 ல ச்ப்மிட் பண்ணினதுக்கு நன்றி!

K said...
Best Blogger Tips

நியூஸ் லெட்டர் அனுப்பினதுக்கு நன்றி மாப்ளே!

K said...
Best Blogger Tips

அடங்கோ!

K said...
Best Blogger Tips

வாராங்கோ!

K said...
Best Blogger Tips

போராங்கோ!

K said...
Best Blogger Tips

இச்!

K said...
Best Blogger Tips

பச்!

K said...
Best Blogger Tips

பதிவ படிச்சியா?

K said...
Best Blogger Tips

அது கெடக்குது கழுதை!

K said...
Best Blogger Tips

அட்டகாசம் மாப்ளே ( என்னது மாப்ப்ளையா? உன்னோட பொண்ணக் குடுப்பியா? )

K said...
Best Blogger Tips

31 வது வடை எனக்கா?

K said...
Best Blogger Tips

32 வது இடை உனக்கா?

K said...
Best Blogger Tips

எப்படி உங்களால மட்டும் முடியுது நிரூபன் சார்?

K said...
Best Blogger Tips

மேற்படி கமெண்டுகளுக்கு மன்னிக்கவும் நிரூபன் சார்! இப்படி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகா ( ? ) கமெண்டு போடுறதுதானாம் இப்ப ட்ரெண்டு! ஊரோடு ஒத்து ஓட வேண்டாமோ?

K said...
Best Blogger Tips

நிரூபன் சார், நீங்க கேக்கலாம், இம்புட்டு கஷ்டப்பட்டு ஆய்வு செஞ்சு பதிவு போட்டிருக்கேனே’ இப்படியா கமெண்டு போடுவே’ன்னு!

இதை ஏன் சார், எங்கிட்ட கேட்டுக்கிட்டு....!!!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் மாப்பிள காத்திரமான(ஒருகாவும் எழுதிப்பார்க வில்லை அதுதான் அப்படி எழுதி பார்தேன்யா ஹி ஹி) இதில ஒந்தியாவின் நிலமைதான் ஆப்பிழுத்த குரங்கின் நிலை..!!?

அதே வேளை இலங்கை சீனாவுடன் குழைவதற்கு காரணம்.. ஜனநாயகமற்ற சீனாவை ஒருவரும் கட்டுப்படுத்த முடியாது.. ஆகையால் அவர்கள் கண்மூடித்தனமாய் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.. இதில இந்தியாவின் நிலமையை பாருங்கள் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அத்துடன் 6கோடிக்கு மேட்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள் இவர்களின் அழுத்தத்தால் அங்கு நிலமை எப்படியும் மாறலாம்ன்னு பக்ஸ சகோதரர்களுக்கு தெரியும்.. இப்ப இலங்கைக்கு தேவை ஒரு கண்ணை மூடிக்கொண்டு தங்களை ஆதரிப்பவர்களே... இந்த இடத்தில் இலங்கை சீனா பக்கம் சாய்தது ஆச்சரியமே இல்லை அதேவேளை இது இந்தியாவிற்கு சப்பாத்துக்குள் மாட்டின சிறுகல்லைப்போல குடைச்சல் கொடுக்கப்போகின்றது.. முற்பகல் செய்யின்...,.

K said...
Best Blogger Tips

பர்ஸ்ட் நைட் ரூமில்....

மனைவி - என்னங்க, வந்தீங்க, 10 செக்கண்ட் இருந்துட்டு கெளம்புறீங்க?

பதிவர் - எனக்கு எதையும் ஷார்ட்டா முடிச்சுத்தான் பழக்கம்! நீ படுத்து தூங்கு! நாளைக்கும் ஒரு 10 செக்கன் பார்த்துக்கலாம்!

K said...
Best Blogger Tips

வணக்கம் மாப்பிள காத்திரமான(ஒருகாவும் எழுதிப்பார்க வில்லை அதுதான் அப்படி எழுதி பார்தேன்யா ஹி ஹி) இதில ஒந்தியாவின் நிலமைதான் ஆப்பிழுத்த குரங்கின் நிலை..!!?

அதே வேளை இலங்கை சீனாவுடன் குழைவதற்கு காரணம்.. ஜனநாயகமற்ற சீனாவை ஒருவரும் கட்டுப்படுத்த முடியாது.. ஆகையால் அவர்கள் கண்மூடித்தனமாய் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.. இதில இந்தியாவின் நிலமையை பாருங்கள் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அத்துடன் 6கோடிக்கு மேட்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள் இவர்களின் அழுத்தத்தால் அங்கு நிலமை எப்படியும் மாறலாம்ன்னு பக்ஸ சகோதரர்களுக்கு தெரியும்.. இப்ப இலங்கைக்கு தேவை ஒரு கண்ணை மூடிக்கொண்டு தங்களை ஆதரிப்பவர்களே... இந்த இடத்தில் இலங்கை சீனா பக்கம் சாய்தது ஆச்சரியமே இல்லை அதேவேளை இது இந்தியாவிற்கு சப்பாத்துக்குள் மாட்டின சிறுகல்லைப்போல குடைச்சல் கொடுக்கப்போகின்றது.. முற்பகல் செய்யின்...,.////

பதிவுலகின் கள நிலவரம் தெரியாமல், இம்மாம்பெரிய கமெண்டு போட்ட, காட்டான் அவர்களை கண்டிக்கிறேன்! ஹி ஹி ஹி!!!!

Rizi said...
Best Blogger Tips

மிகத்தெளிவா சொல்லியிருக்கிங்க நிரூபன்..

K said...
Best Blogger Tips

பதிவுலகின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் படி, கமெண்டு போடுவது எப்படி?

யூ டியூப்புல பெப்சி உமா பண்ணின நெறைய ப்ரோகிராம் இருக்கு! அதனை நாள் பூரா உக்காந்து பார்க்கவும்!

அதுல உமா சொல்லுவாங்க, ‘ ஆஹா, ஓஹோ, ஆ... ஊ... சமத்து, புச்சுக்குட்டி, கன்னுக்குட்டி, வெல்டன், சூப்பர் ‘

இந்த மாதிரி, சிங்கள் வார்த்தைகள் நிறையவே சொல்லிக்குடுப்பாங்க!

அதுல ஒவ்வொண்ணா உருவி எடுத்து, பின்னூட்டம் பெட்டியில போடுங்க!

அப்புறம் என்ன? நீங்களும் பிரபல பதிவர்தான்!

தனிமரம் said...
Best Blogger Tips

நீண்ட விரிவான ஆய்வைச் செய்திருக்கிறீகள் இதன் தாற்பரியம்
புரிவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளனும் எப்போதும் மோட்டுச் சிங்களவன் என்று என்னியே நம் அறீவீலித்தனத்தை அடுத்தவரிடம் அடைவு வைத்துவிட்டோம். இந்திய மத்திய அரசின் செயலைக்காட்டியே தமிழரை மடக்கும் சகோதரர்களுக்குத் தெரியும் சீனா கழுத்தை அறுக்காத நண்பன் என்றும் குள்ளநரி வேலை செய்யும் மற்றப் பஞ்சோந்தி யாரு என்றும் இதில் கானமல்போவது தமிழரின் இருப்பும் இனமும்தான்!

தனிமரம் said...
Best Blogger Tips

என்னபாஸ் அரசியல் குறும்படம் எடுக்கிறீங்களா எண்ணம் எழுத்து எழுதுறீங்க.
 ஆக்கம் /செய்யுள் என்றும் போடலாமே காப்பி பேஸ்ட் செய்யமாட்டினம் ஓ தமிழ் புரியாதோ காப்பி போஸ்ட் செய்வதற்கு:

தனிமரம் said...
Best Blogger Tips

மோட்டுச் சிங்களவன் என்ற பதம் தேவையா சகோ / இங்கே நான் முரன்படுகின்றேம் இப்படி  நீங்கள் தரம் குறையலாமா? 
ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது சில கற்பனா திறன் இருக்கனும்  அதில்தான் மொழிப்புலமை மேன்படும் ஐயா !
.ஏட்டுக்கல்வி தெரியாது தனிமரத்திற்கு சபையில் போசும்போது மங்களம் /இடக்கமுடக்க செயல்படுவது /நாகரிகம் இல்லாமல் உள்குத்து இப்படிக் குத்துவது வருத்தமான விடயம் !
தவறு எனின் மன்னிக்கவும்!
ஓ தனிமரம் சகோதரமொழிக்கு வக்காலத்து வாங்குது என்று செம்பை நெளித்து விடாதீர்கள் ஏற்கனவே தனிமரம் கல்லடிபடுகுது .
பகிர்விற்கு நன்றி!
 கலக்கல்!
சூப்பர்!
அறை எண் -3
த.ம 10 
 தொடருங்கள்!
செம மச்சி!

K said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் சார்! இப்பதிவில் சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் உள்ளன! படிக்கும்போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது!

அவற்றைச் சுட்டிக்காட்டினால், கோபிப்பீர்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் நிரூபன் சார்! இப்பதிவில் சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் உள்ளன! படிக்கும்போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது!

அவற்றைச் சுட்டிக்காட்டினால், கோபிப்பீர்களா//

நீங்கள் சொல்லுங்க சார்,
நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்.

K said...
Best Blogger Tips

இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் ராஜீவ் காந்தி விடயமும், சோனியா அம்மையாரின் ரத்தத்திற்கு ரத்தம் என்கின்ற பழி வாங்கும் படலத்தினையும் தான் காங்கிரஸ் அரசு கையாண்டு வருகின்றது என்று கருதும் பல்லாயிரக்கணக்கானோருக்கு சோழியன் குடுமி சும்மா ஆடாது எனும் யதார்த்தம் மட்டும் தெரியவில்லை. ///

இதில் ஒரு உண்மை இருக்கிறது! ராஜீவ் காந்தி சம்பவம் நடந்திருக்காவிட்டால், இந்தியா புலிகளுக்கு உதவிசெய்து, தமிழீழமே கிடைத்திருக்கும் என்று சில அப்பாவிகள் எண்ணுகிறார்கள்!

1991 மே மாதத்துக்கு முன்னரேயே, பல தடவைகள் இந்திய மத்திய அரசு, புலிகளுக்கும் சரி, ஈழத்தில் போராடிய ஏனைய அமைப்புக்களும் சரி, தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தது!

ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்!

‘ கடலினில் கடல்புறா பயணங்கள் போனது!
சிறிலங்கா ராணுவம் பொறி வைக்கலானது!
இந்திய அரசது ஏன் துணை போனது?
இடியுடன் பெரு மழை ஏன் உருவானது? ’

( டி.எல்.மஹாரஜன் பாடிய பாடல் )

K said...
Best Blogger Tips

மோட்டுச் சிங்களவன் என்று தமிழர்களால் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற சிங்கள இன மக்கள்....////

இவ்வரிகளுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! மோட்டுச் சிங்களவன் என்பது தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

தமிழனைவிட என்ன பெரிய அறிவுக்கொழுந்தா சிங்களவன்?

தனது நாட்டையும், மொழியையும் அந்நியனுக்கு காலாதி காலமாக அடகு வைப்பவன் தான் சிங்களவன்!

இலங்கையை சர்வதேச ரீதியில் “ அது” க்கு சிறந்த நாடு என்றுதான், இலங்கை உல்லாசப் பயணத்துறையே விளம்பரம் செய்கிறது!

மஞ்சள் துண்டுக்கு தாலியறுத்த மோடன் தான் சிங்களவன்!!

ஆட்சி அதிகாரத்துக்காக, பெத்த தகப்பனையே, உயிரோடு சமாதிகட்டிய கொடூரன் காசியப்பனை - வீராதி வீரன் என்று போற்றிப் புகழ்வது தான் சிங்களவன் குணம்!

அவ்வளவு ஏன், தமிழனைப் பற்றி சிங்களவன் எப்படி எடைபோட்டிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியாதா?

சந்திரிகா பகிரங்கமாகவே சொல்லவில்லையா, தமிழரை கள்ளத் தோணிகள் என்று!

நான் இப்போது சொல்கிறேன்! சிங்களவன் மோடன் தான் என்று!

K said...
Best Blogger Tips

இன்று உலக நாடுகள் எங்கும் தமிழன் பரவி இருப்பதாலும், உயர்வான நாகரீகமும், அதியுச்ச பண்பும் கொண்ட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்களுடன் சகஜமாக பழகுவதாலும், இப்போது தமிழனுக்கு எல்லாமே தெரிந்துவிட்டது!

தமிழனுக்கு நன்கு தெரியும் நல்ல நாகரீகமுள்ள மக்கள் யார் என்று?

நிரூபன் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் சிங்களவன் உங்களுக்கு உயர்வாக தெரியலாம்!

ஆனால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒரு போதுமே, சிங்களவனை நல்ல நாகரீகம் தெரிந்தவன் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!

புலம்பெயர்மக்களைப் பொறுத்தவரையில், சிங்களவன் உலகில் எங்கோ ஒரு கடைக்கோடியில் இருக்கும், மதவாதம் மிக்க, பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிகள்! அவ்வளவுதான்!!

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

புதிய தகவலா இருக்கே, இருந்தாலும் சீனா இலங்கை உறவு, இந்தியாவுக்கு பெரிய சிக்கல்தான்...//

ஆமாம் பாஸ்...
உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

ஹே ஹே ஹே ஹே நான்தான் முதல் முதல்...//

ஆமா பாஸ்............

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

தமிழ்மணம் இணைக்க முடியலை..//

இணைச்சாச்சு பாஸ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

அடேங்கப்பா! அலசல் அபாரம்//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

ஏன் பாஸ் எதாவது படம் இயக்குற திட்டம் இருக்கோ...இப்பவே சில இயக்குனர்கள் பாணியில் எண்ணம்-எழுத்து.என்று போடுறீங்க.அப்படி இயக்கினால் எனக்கு நடிக்க ஒரு ரோல்தாங்க.ஹி.ஹி.ஹி.ஹி//

உங்களத் தான் மெயின் ஹீரோவாகப் போடலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன் பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

விரிவான அலசல்.அருமையாக உள்ளது பாஸ்//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

இப்போதைக்கு வோட்டு//

நன்றிங்க மாப்பு.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

இப்போதைக்கு வோட்டு//

நன்றிங்க மாப்பு.

K said...
Best Blogger Tips

ஈழத்தமிழனுக்கு ஒரு துன்பம் என்றால் கடல்கடந்து வாழும் தமிழகத் தமிழன் துடிக்கிறான்! தீயில் வீழ்ந்து சாகிறான்!

சகோதர இனமக்கள் என்று சொல்லப்படும் சிங்களவனுக்குத் துடிக்குமா? அவன் தனது ஜனாதிபதியைக் கண்டித்து ஊர்வலம் போவானா?

தமிழனுக்கு தீர்வைக் கொடுக்கச்சொல்லி எப்போதாவது சிங்களவன் ஆட்சியாளரை வலியுறுத்தியிருக்கானா?

கிரீஸ் பூதங்களை ஒழித்து தமிழனை நிம்மதியாக இருக்க விடும்படி எந்தச் சிங்களவனாவது கேட்டிருக்கானா?

தமிழன் கொத்துக் கொத்தாக செத்து மடியும் போது கிரிபத் ஆக்கிச் சாப்பிட்டவன் தான் சிங்களவன்!

யாழ்ப்பாணத்தில் இருக்கும் நீங்கள் சிங்களவனுக்கு ஆராத்தி எடுக்கலாம்! ஆனால் வெளிநாட்டு மக்கள் அப்ப்டியல்ல!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூதானம் சர்க்கரை!

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

பகிர்வுக்கு நன்றி நண்பா//

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Real Santhanam Fanz

நடுநிலை தவறாத பார்வை. கலக்குங்க நண்பரே. ஈழம் பற்றிய புரிதலை உங்கள் பார்வையினூடு இன்னும் மேம்படுத்திக்கொள்ள ஆவல். - பகிர்வுக்கு நன்றி//

உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.
என்னால் முடிந்தவரை உங்களுக்கு காத்திரமான தகவல்களைத் தர முயற்சி செய்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்!:///

வாவ், பின்னீட்டிங்க!//

வணக்கம் சார்,
வாருங்க சார்,
பதிவைப் படிச்சீங்களா சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
முற்பகல் செய்யின்...,//

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
முற்பகல் செய்யின்...,//

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி பாஸ்.

K said...
Best Blogger Tips

மஹாவம்சம் சொல்கிறது “ ஒரு சிங்கத்துக்கும் ஒரு பெண்ணுக்கும் “ பிறந்த குழந்தைகளும், அவர்களது வழித்தோன்றல்களும்தானாம் சிங்கள இனம்!2011 ல் கல்விகற்கும் ஒரு சிங்களக் குழந்தையும் இதைத்தான் படிக்கப்போகிறது!

3011 ல் கல்விகற்கப் போகும் ஒரு சிங்களக்குழந்தையும் இதைத்தான் கற்கப்போகிறது!

அவர்கள் மஹாவம்சத்தை மாற்றிவிடுவார்களா என்ன?

நிரூபன் said...
Best Blogger Tips

@Raazi

மிகத்தெளிவா சொல்லியிருக்கிங்க நிரூபன்..//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
இதில் கானமல்போவது தமிழரின் இருப்பும் இனமும்தான்//

ஆமாம் நண்பா,உங்களின் கருத்துக்களுக்கு நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

என்னபாஸ் அரசியல் குறும்படம் எடுக்கிறீங்களா எண்ணம் எழுத்து எழுதுறீங்க.
ஆக்கம் /செய்யுள் என்றும் போடலாமே காப்பி பேஸ்ட் செய்யமாட்டினம் ஓ தமிழ் புரியாதோ காப்பி போஸ்ட் செய்வதற்கு://

பாஸ்..இந்த ஐடியா ஓக்கே தான்,
நான் செய்யுள் எழுதவில்லையே..

என்ன பண்ண?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
மோட்டுச் சிங்களவன் என்ற பதம் தேவையா சகோ / இங்கே நான் முரன்படுகின்றேம் இப்படி நீங்கள் தரம் குறையலாமா?
ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது சில கற்பனா திறன் இருக்கனும் அதில்தான் மொழிப்புலமை மேன்படும் ஐயா !
.ஏட்டுக்கல்வி தெரியாது தனிமரத்திற்கு சபையில் போசும்போது மங்களம் /இடக்கமுடக்க செயல்படுவது /நாகரிகம் இல்லாமல் உள்குத்து இப்படிக் குத்துவது வருத்தமான விடயம் !
தவறு எனின் மன்னிக்கவும்!//

இதில் தவறு ஒன்றும் இல்லை நண்பா.
உங்களுக்கு விரிவான விளக்கம் தருகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்!

‘ கடலினில் கடல்புறா பயணங்கள் போனது!
சிறிலங்கா ராணுவம் பொறி வைக்கலானது!
இந்திய அரசது ஏன் துணை போனது?
இடியுடன் பெரு மழை ஏன் உருவானது? ’

( டி.எல்.மஹாரஜன் பாடிய பாடல் //

தீயினில் எரியாத தீபங்களே..
எம் தேசத்தில் உருவான................

K said...
Best Blogger Tips

"இஞ்சியினைக் கொடுத்து மிளகினை வாங்குமளவிற்கு" பொருளாதார விடயங்களில் சாமர்த்தியமான திறமைசாலிகள் என்பதனை மீண்டுமொரு தரம் நிரூபித்திருக்கிறார்கள். ////

இதில் என்ன பெரிய சாதனை செய்து கிழித்துவிட்டார்கள்! உலகப் புகழ்பெற்ற ஒரு இயற்கைத் துறைமுகத்தை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, நியாயத்துக்காக போராடிய தமிழனை அழிக்க உதவி பெற்றதுதான் சாமர்த்தியமா?

இது ஒரு சாதனையா?

ஃபிரான்ஸ் நாடு, ஈஃபில் டவரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களைகளையும், அமெரிக்காவுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, பதிலாக, ஏதாவது வாங்கிக்கொண்டால் அது சாதனையா?

பிரித்தானிய அரசு பக்கிங்காம் அரண்மனையைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, பதிலாக ஏதாவது பெற்றுக்கொண்டால் அது சாதனையா?

ஒருவேளை திருகோணமலை துறைமுகத்தை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியிருந்தால், சிங்களவனைப் பாராட்டலாம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

மோட்டுச் சிங்களவன் என்று தமிழர்களால் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற சிங்கள இன மக்கள்....////

இவ்வரிகளுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! மோட்டுச் சிங்களவன் என்பது தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

தமிழனைவிட என்ன பெரிய அறிவுக்கொழுந்தா சிங்களவன்?

தனது நாட்டையும், மொழியையும் அந்நியனுக்கு காலாதி காலமாக அடகு வைப்பவன் தான் சிங்களவன்!//

சார், இவ் இவத்தில் நிற்க.

நான் இங்கே மேற்கோளிட்டிருக்கும் வசனம், தமிழர்களால் காலாதி காலமாக மோட்டுச் சிங்களவன் என்று அழைக்கப்படும் சிங்களவன் தனது சமார்த்தியத்தினைப் பயன்படுத்தி இஞ்சியினைக் கொடுத்து- பெறுமதி கூடிய மிளகினை வாங்குவது போல....
அரசியல் விடயத்திலும்,
நாங்கள் அவனை மோட்டுச் சிங்களவன் என்று சொல்லிக் கொண்டிருக்க,
அவனோ தந்திரமாக காய் நகர்த்துகிறான் என்பதனைச் சுட்டத் தான் இவ் வசனத்தை இங்கே பாவித்தேன்.

காலதி காலமாக நாம் சிங்களவனை மட்டம் தட்டி, அவன் மோட்டுச் சிங்களவன் என்று சொல்லிச் சொல்லி எம் காலத்தினக் கடத்துவதோடு, பல விடயங்களிலும் கோட்டை விடுகின்றோம்.

இந்தனை விளக்கத் தான் மோட்டுச் சிங்களவன் என்ற பதத்தினை யூஸ் பண்ணினேன்.

இப் பதில் நேசன் எழுப்பிய வினாவிற்கும் பொருத்தமாக அமையும் நண்பா.

K said...
Best Blogger Tips

இந்தியா, புலிகளை அழிக்க உதவியது ஏனென்றால், புலிகள் தனிநாடு அமைத்து திருகோணமலை துறைமுகம் அவர்களது கைகளுக்க்ச் சென்றுவிட்டால், அவர்கள் ஒருபோதுமே அதனை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!

ஆனால் சிங்களவனிடம் இலகுவாக வாங்கிவிடலாம்!

அதான் சொன்னனே மஞ்சள் துண்டுக்கு தாலியறுத்த.......!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw


இன்று உலக நாடுகள் எங்கும் தமிழன் பரவி இருப்பதாலும், உயர்வான நாகரீகமும், அதியுச்ச பண்பும் கொண்ட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்களுடன் சகஜமாக பழகுவதாலும், இப்போது தமிழனுக்கு எல்லாமே தெரிந்துவிட்டது!

தமிழனுக்கு நன்கு தெரியும் நல்ல நாகரீகமுள்ள மக்கள் யார் என்று?

நிரூபன் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் சிங்களவன் உங்களுக்கு உயர்வாக தெரியலாம்!

ஆனால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒரு போதுமே, சிங்களவனை நல்ல நாகரீகம் தெரிந்தவன் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!

புலம்பெயர்மக்களைப் பொறுத்தவரையில், சிங்களவன் உலகில் எங்கோ ஒரு கடைக்கோடியில் இருக்கும், மதவாதம் மிக்க, பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிகள்! அவ்வளவுதான்!!//

நண்பா,
நான் மீண்டும் சொல்கிறேன்.
இங்கே சிங்களவனை உயர்த்தி நான் குறவில்லை,.
மாறாக நாம் அவனை மோடன் என்று எள்ளி நகைத்துக் கொண்டிருக்க.
அவனோ எம்மை விடச் சாதுரியமாக அரசியல் விடயங்களில் ஈடுபடுகின்றான் என்பதனைத் தான் இங்கே விளித்திருக்கிறேன் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

"இஞ்சியினைக் கொடுத்து மிளகினை வாங்குமளவிற்கு" பொருளாதார விடயங்களில் சாமர்த்தியமான திறமைசாலிகள் என்பதனை மீண்டுமொரு தரம் நிரூபித்திருக்கிறார்கள். ////

இதில் என்ன பெரிய சாதனை செய்து கிழித்துவிட்டார்கள்! உலகப் புகழ்பெற்ற ஒரு இயற்கைத் துறைமுகத்தை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, நியாயத்துக்காக போராடிய தமிழனை அழிக்க உதவி பெற்றதுதான் சாமர்த்தியமா?

இது ஒரு சாதனையா?//

மீண்டும் சொல்கிறேன்,
இந்தியாவிடம் தமிழனை அழிப்பதாக கூறி உதவி வாங்கி விட்டு,
இயற்கைத் துறைமுகத்தை எழுதித் தருவதாக உறுதி மொழி கொடுத்து விட்டு,
சீனாவின் பக்கம் இலங்கை பல்டி அடித்து,
இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத நிலமையினைத் தான் சாதுரியம் என்று சொன்னேன்.

இப்போது புரிகிறதா நண்பா?

K said...
Best Blogger Tips

@நிரூபன்

காலதி காலமாக நாம் சிங்களவனை மட்டம் தட்டி, அவன் மோட்டுச் சிங்களவன் என்று சொல்லிச் சொல்லி எம் காலத்தினக் கடத்துவதோடு, பல விடயங்களிலும் கோட்டை விடுகின்றோம்.:////

எதில் எதிலெல்லாம் தமிழன் கோட்டை விட்டான் என்று கொஞ்சம் விரிவாக சொல்லவும்! அவசியம் பதில் தரவும்!

K said...
Best Blogger Tips

மாறாக நாம் அவனை மோடன் என்று எள்ளி நகைத்துக் கொண்டிருக்க.
அவனோ எம்மை விடச் சாதுரியமாக அரசியல் விடயங்களில் ஈடுபடுகின்றான் ////

எம்மைவிட சாதுரியமாக சிங்களவன் என்ன செய்து கிழித்தான் என்று அறிய ஆவல்! ஒரு ஐந்து உதாரணம் கூறவும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
@நிரூபன்

காலதி காலமாக நாம் சிங்களவனை மட்டம் தட்டி, அவன் மோட்டுச் சிங்களவன் என்று சொல்லிச் சொல்லி எம் காலத்தினக் கடத்துவதோடு, பல விடயங்களிலும் கோட்டை விடுகின்றோம்.:////

எதில் எதிலெல்லாம் தமிழன் கோட்டை விட்டான் என்று கொஞ்சம் விரிவாக சொல்லவும்! அவசியம் பதில் தரவும்//

ஓக்கே...
இந்திய இலங்கை ஒப்பந்தம்,
சமாதானப் பேச்சுவார்த்தைகள்.
புலிகளுக்கெதிரான உலகளாவிய பிரச்சாரம் (கதிர்காமர் முன்னெடுத்தது)

ஆயுதக் கப்பல் விநியோக வழங்கல் பாதைகளை சிங்களவன் அறியமாட்டான் என நம்பிய நாம், அவன் அறிந்து தாக்குதல் நடத்திய போது கோட்டை விட்டோம்,

இன்னும் வேணுமா சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

புலிகளிடமிருந்து இலகுவில் விலை போகக் கூடியோரை,
புலிகளுக்காக பணி புரிந்தோரை தம் வசப்படுத்தியது...........

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சுனாமிக் கட்டமைப்பு,

தாய்லாந்தில் ஏழாம் கட்டப் பேச்சுக்களின் போது இடம் பெற்ற மயக்க நாடகங்கள் (கருணா மேட்டர்)
இவை எல்லாம் அவன் தந்திரமா?
இல்லை சூழ்ச்சியா?

இல்லை அவனின் மோட்டுப் புத்திகளா ஐடியா மணி சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சமாதான காலத்தில் தம் உளவுப் பிரிவினர், ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரை வன்னிக்குள் அனுப்பி என்ன செய்தான் சிங்களவன் சார்?

ஏன் சார் எத்தனை விமானக் குண்டு வீச்சுக்களை புலிகளின் வீடியோ செய்திப் பிரிவுகள் வெளி உலகிற்கு காட்டும் வசதிகள் வருவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் நிகழ்த்தி விட்டு- அதாவது 2001 இற்கு முற்பட்ட காலப் பகுதியில் நிகழ்த்தி விட்டு புலிகளின் முகாம் மீதான வெற்றிகரத் தாக்குதல் என்று சிங்களவன் பரப்புரை செய்து வெற்றி பெறலையா சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

நாகர்கோவில் பாடசாலைத் தாக்குதல்,
நவாலி சென்பீற்றர் தேவாலய தாக்குதல்,
மன்னார் மடுமாதா தேவாலய தாக்குதல்
இதில் பாதிரியார் சாட்சி சொன்ன போது சிங்களவன் பொய்ப்பிக்கவில்லையா மணி சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

செஞ்சோலைப் படுகொலைகளுக்கு என்ன நடந்தது மணி சார்?

வெளிநாட்டு கண்காணிப்புக் குழு கூட உறுதிப்படுத்திய போதும்,
வவுனியாவில் கிசிச்சை பெற்ற மாணவிகளை கைது செய்து, மூளைச் சலவை செய்து- பேட்டியளிக்க வைத்து புலிகளுக்கு எதிராகப் பரப்புரை செய்து ஐநா, மனித உரிமை அமைப்புக்கள் மூலம்
புலிகள் சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கின்றார்கள் என்று சிங்களவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வெற்றி பெறவில்லையா சார்?


இன்னும் வேணுமா?

இல்லை போதுமா சார்?

K said...
Best Blogger Tips

நல்லா இருக்கு, ரொம்பவே நல்லா இருக்கு!! இருதரப்பாருக்கும் நடந்த போரில், ஒரு அரசு என்ற வகையில், சில நாடுகள், இலங்கை அரசின் கைகளைப் பலப்படுத்த, அதனைக்கொண்டு ( சுயபலத்தினால் அல்ல ) சாதித்த உப்புக்கும் பெறாத அல்ப விஷயங்களை வைத்துக்கொண்டு, சிங்களவனை புத்தி சாலி என்று சொல்லிவிட்டீர்களே!

நன்றாக இருக்கிரது உங்கள் பார்வையும் ஆய்வும்!

நடந்த சண்டையில் சிறு பின்னடைவை நாம் கண்டுவிட்டோம்! அவ்வளவுதான்! அதற்காக தமிழனைவிட, சிங்களவன் புத்திசாலி என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்!

எனக்கு இப்போது பல சந்தேகங்கள் வருகின்றன!

ம்.....!!

K said...
Best Blogger Tips

நீங்கள் ஒருவனோடு சண்டைக்குப் போகிறீர்கள்! அவன் இன்னும் பத்துப் பேரை கூட்டிக்கொண்டு வந்து உங்களை அடித்து, துவைத்துவிட்டான்!

அந்த நேரத்தில் போய், ஆஹா என் எதிரி எவ்வளவு சாமர்த்தியமாக என்னை விழுத்திவிட்டான்! அவனல்லவோ புத்திசாலி என்று புகழ்வீர்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

நல்லா இருக்கு, ரொம்பவே நல்லா இருக்கு!! இருதரப்பாருக்கும் நடந்த போரில், ஒரு அரசு என்ற வகையில், சில நாடுகள், இலங்கை அரசின் கைகளைப் பலப்படுத்த, அதனைக்கொண்டு ( சுயபலத்தினால் அல்ல ) சாதித்த உப்புக்கும் பெறாத அல்ப விஷயங்களை வைத்துக்கொண்டு, சிங்களவனை புத்தி சாலி என்று சொல்லிவிட்டீர்களே!

நன்றாக இருக்கிரது உங்கள் பார்வையும் ஆய்வும்!

நடந்த சண்டையில் சிறு பின்னடைவை நாம் கண்டுவிட்டோம்! அவ்வளவுதான்! அதற்காக தமிழனைவிட, சிங்களவன் புத்திசாலி என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்!

எனக்கு இப்போது பல சந்தேகங்கள் வருகின்றன!

ம்.....!!//

உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள் சார்,
நான் இங்கே சொல்வது என்னவென்றால்,
நாம் விட்ட ஒவ்வோர் தவறுகளையும் சிங்களவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினான் என்பதற்கு உதாரணமே.........


இன்னும் புரியவில்லை என்றால்....


நாம் மோடன் என்று கூறிக் கொண்டிருக்க,
சிங்களவனோ....எமக்குத் தெரியாமல் தந்திரத்தால் உலக நாடுகளை வளைத்துப் போட்டு பல கருமங்களைச் சாதித்திருக்கிறான் சார்.

சார், இன்னோர் சிறிய உதாரணம் சொல்கிறேன்.

ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள் சமாதான காலத்தில் எழுதிய கட்டுரை ஒன்று படித்திருப்பீர்கள்.
ஏன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் லண்டன் அலெக்‌ஷாண்ட்ரா பலசில் மாவீரர் நாளின் போது 2005ம் ஆண்டு நிகழ்த்திய உரையினைக் கேட்டிருப்பீங்க தானே...

புலிகளின் குரல் கூட அதனை வன்னியில் மீள் ஒலிபரப்புச் செய்திருந்தார்கள்....
அவர் கூட பல எளிய உதாரணங்களைக் கூறி சிங்களவனை மதிப்பிட்டதையுமா நீங்கள் மறுக்கின்றீர்கள்/ நிராகரிக்கின்றீர்கள்?

K said...
Best Blogger Tips

சிங்களவன் சண்டை போட்டவிதமே தவறு! அதனால்தான் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பறிகொடுத்தோம்! செத்துச் செத்து மடிந்தது எம்மின மக்கள் என்று தெரிந்தும் சிங்களவன் ஜெயித்துவிட்டான் என்பதற்காக, அவனைப் பாராட்டுகிறீர்களே!

இதைவிடவா, தமிழனின் மனவுறுதியைக் குலைப்பதற்கு ஒரு பதிவு தேவை!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw


சிங்களவன் சண்டை போட்டவிதமே தவறு! அதனால்தான் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பறிகொடுத்தோம்! செத்துச் செத்து மடிந்தது எம்மின மக்கள் என்று தெரிந்தும் சிங்களவன் ஜெயித்துவிட்டான் என்பதற்காக, அவனைப் பாராட்டுகிறீர்களே!

இதைவிடவா, தமிழனின் மனவுறுதியைக் குலைப்பதற்கு ஒரு பதிவு தேவை!//

நண்பா, தமீழத் தேசியத் தலைவர் கூட சிங்களவனையோ அல்லது எதிரியை மட்டமாக நினைத்தல் தவறு, எப்போதும் எமக்குச் சமனாக நினைத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கே நான் கூறுவதை, வைத்து அவனைப் பாராட்டுவதாக எடுக்க வேண்டாம்,

ப்ளீஸ் புரிந்து கொள்ளவும்,

சிங்களவன் தந்திரமாக, நாம் அவனைத் தரம் தாழ்த்திப் பேசிய போது எப்படிச் செயற்பட்டான் என்பதனையே விளக்கியிருக்கிறேன்.

மற்றும் படி சிங்களவன் பற்றிய முழுமையானா ஆய்வினை நான் இங்கே மேற்கொள்ளவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பா,
இவ் இடத்தில் மதிப்பிற்குரிய தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களின்
பேச்சின் லிங்கினைத் தருகிறேன்,
முதல் மூன்று நிமிடங்களையும் ஒரு தடவை கேட்டுப் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=zUGZz7v5898

K said...
Best Blogger Tips

அப்படியானால் சிங்களவனின் பலவீனங்களை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்தவில்லையா? அதற்கெல்லாம் உதாரணம் சொல்ல மாட்டீர்களா?

நாம் சண்டையில் தோற்றுவிட்டோம் என்பதற்காக, முன்னர் நாம் பெற்ற வெற்றிகள் எல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா?

தோற்றுப்போன கவலையில் இருக்கும் மக்களைப் பார்த்து, வருந்தாதீர்கள் நாங்கள் ஒன்றும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர்! என்றோ ஒருநாள் வெல்வோம்! அமைதியான முறையில் எமது நியாயங்களை சர்வதேசத்தில் எடுத்துச் சொல்லுவோம்! எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையூட்டுவது நல்லதா?

அல்லது, சிங்களவன் புத்திசாலி! அவன் சாதித்துவிட்டான் என்று அவனைப் புகழ்ந்து, பாராட்டி, எமது மக்களின் மனவுறுதியைக் குலைப்பது நல்லதா?

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பா,
ஒரு சிறிய கதை சொல்கிறேன்,
உதாரணத்திற்கு X எனும் நபர் ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
அந்தப் பாடசாலையில் உள்ள 32 மாணவர்களில் ஒரு மாணவியை மட்டும் மக்கு....மண்டையில் ஏறாத மோடு என்று சொல்லி, தன்னால் இயன்ற வரை அம் மாணவியை நெறிப்படுத்த முயற்சி செய்கிறார்.

குறித்த Y என்ற மாணவியோ படிப்பில் மக்காகவே இருக்கிறார்.
பின்னர் திடீரெனப் பார்த்தால் அம் மாணவி முதலிடத்திற்கு வருகிறார்.

ஸோ..............இவ் இடத்தில் அம்மாணவியை புகழ வேண்டும் எனும் நோக்கத்தில் அல்லாது, அம் மாணவியின் முயற்சி,
ஒருவரை நாம் மட்டம் தட்டும் வேளையில் அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதனை விளக்கிக் கூறவே
மக்காக இருந்த மாணவி சாதித்து விட்டார் என்று பாராட்டலாம் அல்லவா..

அதே போலத் தான் இங்கேயும்,,,,,,,,,,,,,,,,,,,,,,சிங்களவர்களின் செயலை மாத்திரம் விளித்தேனேயன்றி................

தோற்றுப் போன மக்களைத் தரம் தாழ்த்தவில்லை,
புரிந்து கொள்ளவும் நண்பா...

எம்முடைய வெற்றிகளைப் பற்றித் தானே நான் பதிவுகள் எழுதத் தொடங்கிய போது, நிரூ இது இப்போது தேவையா என்று என்னிடம் கேட்டீர்கள்?

K said...
Best Blogger Tips

இன்று ஈழத்தமிழினமும் + தமிழக உறவுகளும் ஒன்று சேர்ந்து, முழுக்க முழுக்க ஜனநாயக முறையில், சர்வதேசத்துடன் கைகோர்த்து, இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, இலங்கை அரசே விஎஇ பிதுங்கிக் கொண்டிருக்கும் போது,

அவற்றை விபரித்து மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

இந்த நேரத்தில் சிங்களவனின் புத்திசாலித்தனம் எமக்குத் தேவையா?

அவன் தனது புத்திசாலித்தனத்தால், தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுத்தால், நாம் பாராட்டுவதில் ஒரு நியாயம் இருக்கிறது!

இப்போதைய சூழலில், 2011 ம் ஆண்டில் தமிழந்தான் புத்திசாலி என்பதை உங்களால் கணிப்பிட முடியாமல் போனது ஏன்?

சிங்களவன், உங்கள் கூற்றின் படி புத்திசாலி என்றால் 2009 மே 18 உடன் அவனது புத்திசாலித்தனம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம்!

முதல்ல யார் வர்ரான் என்பது முக்கியமல்ல!

கடைசியில யாரு ஜெயிக்கிறான் என்பதுதான் முக்கியம்!

2009 மே 18 என்பது முடிவோ, கடைசியோ அல்ல!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

இன்று ஈழத்தமிழினமும் + தமிழக உறவுகளும் ஒன்று சேர்ந்து, முழுக்க முழுக்க ஜனநாயக முறையில், சர்வதேசத்துடன் கைகோர்த்து, இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, இலங்கை அரசே விஎஇ பிதுங்கிக் கொண்டிருக்கும் போது,

அவற்றை விபரித்து மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

இந்த நேரத்தில் சிங்களவனின் புத்திசாலித்தனம் எமக்குத் தேவையா? //

சார்,

மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்கு,
சிங்கள்வன் எங்கெல்லாம் சாதுரியமாகச் செயற்பட்டான் எனும் விடயங்களும் ஒரு வகையில் உதவியாக இருக்கும் தானே சார்?
அதில் என்ன தவறு சார்?

K said...
Best Blogger Tips

சார்,

மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்கு,
சிங்கள்வன் எங்கெல்லாம் சாதுரியமாகச் செயற்பட்டான் எனும் விடயங்களும் ஒரு வகையில் உதவியாக இருக்கும் தானே சார்?
அதில் என்ன தவறு சார்?////

தோல்விகளில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனக்கும் தெரியும்!

அப்படியானல், அவ்விதமான கட்டுரைகளை ஏன் நீங்கள் எழுதக்கூடாது! ( பாதுகாப்பு பிரச்சனை பற்றி என்னிடம் சொல்லக் கூடாது! )

நீங்கள் ஒரு புத்திசாலி என்ற வகையில், நாலும் தெரிந்தவர் என்ற வகையில், தற்போதைய சூழலில் தமிழர்களாகிய நாம் எப்படி எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று, ஏன் நீங்கள் ஐடியா தரக்கூடாது?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சார்,

மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்கு,
சிங்கள்வன் எங்கெல்லாம் சாதுரியமாகச் செயற்பட்டான் எனும் விடயங்களும் ஒரு வகையில் உதவியாக இருக்கும் தானே சார்?
அதில் என்ன தவறு சார்?////

தோல்விகளில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனக்கும் தெரியும்!

அப்படியானல், அவ்விதமான கட்டுரைகளை ஏன் நீங்கள் எழுதக்கூடாது! ( பாதுகாப்பு பிரச்சனை பற்றி என்னிடம் சொல்லக் கூடாது! )

நீங்கள் ஒரு புத்திசாலி என்ற வகையில், நாலும் தெரிந்தவர் என்ற வகையில், தற்போதைய சூழலில் தமிழர்களாகிய நாம் எப்படி எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று, ஏன் நீங்கள் ஐடியா தரக்கூடாது?//

ஆம் நண்பா, நிச்சயமாக நான் இவற்றினைத் தொகுத்து எழுதுகின்றேன்.
ஆனால் நான் புத்திசாலி அல்ல...

நானும் ஒரு சாதாரண மனிதன்,
புத்திசாலிக்கு எப்போதும் ஏதும் நிகழலாம்... நண்பா...

K said...
Best Blogger Tips

நிரூபன் சார், வன்னியில் கொத்துக் கொத்தாக மக்கள் செத்துவிழுந்த கோபம் இன்னமும் ரணமாக நெஞ்சில் கொதிக்குது! போதாக்குறைக்கு இறுதியாக நாம் பறிகொடுத்த செங்கொடி வரை எத்தனை பிஞ்சுகளைப் பலிகொடுத்துவிட்டோம்?

இவை எல்லாவற்றையும் நினைக்கும்போது, சிங்களவனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! இதெல்லாம் ஒவ்வொரு தமிழனதும் உணர்வுதானே!

இந்த நேரத்தில் எமக்கெல்லாம் ஆறுதல் தேவை! மன அமைதிதேவை!

எனவே அந்த நோக்கில் ஏதாவது எழுதுங்க சார்! நேத்திக்கு நீங்க போட்ட பதிவு, மிகவும் ஆறுதலாக இருந்தது!

கோபத்தில் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால், அதைப் பொருட்படுத்த வேண்டாம்!

ஆனால் உங்களுக்கான பணி இன்னமும் ஓய்ந்துவிடவில்லை!

சிங்களவனின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது! இலங்கையின் இறையாண்மையை அவன் விட்டுக்கொடுத்து பல வருஷங்கள் ஆச்சு!

இதைப்பற்றி கட்டுரை போடுங்க சார்!

kobiraj said...
Best Blogger Tips

இந்தியனும் சீனா காரனும் இலங்கை பகடை காயாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் .எது எப்படியோ இலங்கை தொடர்ந்தும் இறையாண்மை இன்றி அடி பணிந்தே செல்ல போகிறது .

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

நிரூபன் சார், வன்னியில் கொத்துக் கொத்தாக மக்கள் செத்துவிழுந்த கோபம் இன்னமும் ரணமாக நெஞ்சில் கொதிக்குது! போதாக்குறைக்கு இறுதியாக நாம் பறிகொடுத்த செங்கொடி வரை எத்தனை பிஞ்சுகளைப் பலிகொடுத்துவிட்டோம்?

இவை எல்லாவற்றையும் நினைக்கும்போது, சிங்களவனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! இதெல்லாம் ஒவ்வொரு தமிழனதும் உணர்வுதானே!

இந்த நேரத்தில் எமக்கெல்லாம் ஆறுதல் தேவை! மன அமைதிதேவை!

எனவே அந்த நோக்கில் ஏதாவது எழுதுங்க சார்! நேத்திக்கு நீங்க போட்ட பதிவு, மிகவும் ஆறுதலாக இருந்தது!

கோபத்தில் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால், அதைப் பொருட்படுத்த வேண்டாம்!

ஆனால் உங்களுக்கான பணி இன்னமும் ஓய்ந்துவிடவில்லை!

சிங்களவனின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது! இலங்கையின் இறையாண்மையை அவன் விட்டுக்கொடுத்து பல வருஷங்கள் ஆச்சு!

இதைப்பற்றி கட்டுரை போடுங்க சார்//

கண்டிப்பாக இது தொடர்பாக பல பதிவுகள் எழுதுகின்றேன் சார்,
கண்டிப்பாக மக்களின் மன உணர்வினைப் புரிந்து கொண்டு, எம்முடைய கடந்த காலங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் பற்றிய பதிவினை எழுதுகின்றேன் சார்.

உங்களின் விமர்சனங்களுக்கும்,
வாதத்திற்கும் மிக்க நன்றி சார்.

K said...
Best Blogger Tips

இதைப்பற்றி கட்டுரை போடுங்க சார்//

கண்டிப்பாக இது தொடர்பாக பல பதிவுகள் எழுதுகின்றேன் சார்,
கண்டிப்பாக மக்களின் மன உணர்வினைப் புரிந்து கொண்டு, எம்முடைய கடந்த காலங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் பற்றிய பதிவினை எழுதுகின்றேன் சார்.

உங்களின் விமர்சனங்களுக்கும்,
வாதத்திற்கும் மிக்க நன்றி சார்.:////

உங்களுக்கும் ரொம்ப நன்றி சார்!

குடிமகன் said...
Best Blogger Tips

Follow widget –ஐ பழுது சீக்கிரம் பாருங்கள் நிரூ.. நான் பலமுறை முயன்றும் நாற்று வாங்க முடியவில்லை..

சுதா SJ said...
Best Blogger Tips

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
"இஞ்சியினைக் கொடுத்து மிளகினை வாங்குமளவிற்கு" பொருளாதார விடயங்களில் சாமர்த்தியமான திறமைசாலிகள் என்பதனை மீண்டுமொரு தரம் நிரூபித்திருக்கிறார்கள். ////

இதில் என்ன பெரிய சாதனை செய்து கிழித்துவிட்டார்கள்! உலகப் புகழ்பெற்ற ஒரு இயற்கைத் துறைமுகத்தை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, நியாயத்துக்காக போராடிய தமிழனை அழிக்க உதவி பெற்றதுதான் சாமர்த்தியமா?

இது ஒரு சாதனையா?

ஃபிரான்ஸ் நாடு, ஈஃபில் டவரையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களைகளையும், அமெரிக்காவுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, பதிலாக, ஏதாவது வாங்கிக்கொண்டால் அது சாதனையா?

பிரித்தானிய அரசு பக்கிங்காம் அரண்மனையைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, பதிலாக ஏதாவது பெற்றுக்கொண்டால் அது சாதனையா?

ஒருவேளை திருகோணமலை துறைமுகத்தை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியிருந்தால், சிங்களவனைப் பாராட்டலாம்!///


இது கமெண்ட்ஸ்

Jana said...
Best Blogger Tips

உண்மையான விடயம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சீனாவின் இந்திய எல்லைகளைச்சுற்றிவளைக்கும் ''ஒபரேசன் முத்துமாலை'' கடந்த வருடத்துடன் முழுமையை அடைந்துள்ளது.
இதேவேளை இலங்கையின் சீன விஸ்வாசம் இந்தியாவுக்க புதுமையான ஒன்றல்ல.. இந்திய சீன யுத்தத்திலேயே இலங்கை இந்தியாவுக்கு தன் நிலையை தெளிவாக விளக்கி இருந்தது.
இலங்கை விடையத்தில் தொடர்ந்தம் தவறான கொள்கைவகுப்பாளர்களினால் இன்று இந்தியா பல விடயங்களில் தன் தலையில் தானே மண்ணை போட்டுவிட்டு நின்கின்றது

சுதா SJ said...
Best Blogger Tips

எனக்கு தெரியாத விடயங்கள் பலத்தை தெரிந்து கொண்டேன்.... சிங்களவன் எப்போதுதான் உருப்படியா ஏதாவது செய்து இருக்கான்....

சுதா SJ said...
Best Blogger Tips

இந்தியா அரசுக்கு இலங்கை அரசி மீது உள்ள அக்கறை நீங்கள் சொல்லியது போலவே
"ஆடு நனையுது என்று ஓநாய் அழுதிச்சாம்"

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Unknown said...
Best Blogger Tips

விஷயம் சீரியஸ், முழிக்க வேண்டியவங்க சீக்கிரம் முழிக்கணும், இல்லை அவனுகளுக்கு இன்னொரு அடிமையா இருக்க வேண்டியது தான்..

Prabu Krishna said...
Best Blogger Tips

என்னமோ பண்ணித் தொலைக்கட்டும் சகோ. இந்தியா மீதான பிடிப்பே போய்விட்டது போன்று தோன்றுகிறது எனக்கு.

vanathy said...
Best Blogger Tips

சீனா நிறைய இடங்களில் தலையை நுழைத்து விட்டது. இனிமேல் யாரும் எதுவும் செய்ய முடியாது.

ஆகுலன் said...
Best Blogger Tips

இவங்கள் இவ்வளவு செய்தும் ஒரு நாடும் ஒன்றுமே செய்ய வில்லை...

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்....

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மாப்ள.. சாட்டையடி பதிவு ...

shanmugavel said...
Best Blogger Tips

//இலங்கையின் சால்வைச் சகோதரர்கள் சீனாவுடனான நெருக்கத்தைப் பெருக்கி, இந்தியாவினைக் கை கழுவி விடும் செயலில் தான் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். //

தன் மீதான குற்றச்சாட்டை வலுவிழக்கச்செய்யும் தந்திரமா? ஆனாலும் தப்புவது கஷ்டம்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...
////நிரூபன் said...
செஞ்சோலைப் படுகொலைகளுக்கு என்ன நடந்தது மணி சார்?

வெளிநாட்டு கண்காணிப்புக் குழு கூட உறுதிப்படுத்திய போதும்,
வவுனியாவில் கிசிச்சை பெற்ற மாணவிகளை கைது செய்து, மூளைச் சலவை செய்து- பேட்டியளிக்க வைத்து புலிகளுக்கு எதிராகப் பரப்புரை செய்து ஐநா, மனித உரிமை அமைப்புக்கள் மூலம்
புலிகள் சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கின்றார்கள் என்று சிங்களவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வெற்றி பெறவில்லையா சார்?


இன்னும் வேணுமா?

இல்லை போதுமா சார்///

பாஸ் எனக்கு ஒரு கேள்வி இது தவராக இருந்தால் மன்னிக்கவும்..நீங்கள் மேலே சொன்ன விடயத்தில் புலிகள் என்ன செய்தார்கள் உங்களுக்கும் உண்மை என்ன என்று தெரியும் வன்னியில் வாழ்ந்த மக்கள் ஒவ்வொறுவருக்கும் உண்மை என்ன வென்று தெரியும்..

ஆனால் பலியாகியது என்னவோ அப்பாவி உயிர்கள் தானே.இதில் யாரை குற்றம் சொல்லி என்ன பயன்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இந்தியாவுக்குத் தலைவலிதான்.

நல்ல விரிவான அலசல்.

Anonymous said...
Best Blogger Tips

நன்றாக அலசி இருக்கிறீர்கள் நிரூபன்... சீன அரசும் இந்தியா வைப்போல் இலங்கையை ஒரு துருப்பு சீட்டாகத்தான் பார்க்கிறது...

செங்கோவி said...
Best Blogger Tips

ராஜீவ் காலத்திற்கு முன்வரை, இந்தியா புலிகளை சாக்காக வைத்துக்கொண்டு, இலங்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. புலிகளுக்கு இந்தியா செய்த உதவி, தமிழர் நலனுக்காகவா..நிச்சயம் இல்லை, அது தன் அரசியல் ஆதாயத்திற்காகவே செய்தது..

செங்கோவி said...
Best Blogger Tips

ஆனால் ராஜீவிற்கு இது பற்றி எந்தப் புரிதலும் இருந்தது போல் தெரியவில்லை..அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, புலிகள் மீதே பாய்ந்தார்..அதனால் இழப்பு இப்போது இரு தரப்புக்கும் தான்..

செங்கோவி said...
Best Blogger Tips

இனப்படுகொலை நடக்கும்போதே இந்தியாவை பக்சே சீண்ட ஆரம்பித்துவிடார்கள்..இந்தியா இங்கே ‘நாங்கள் உதவவில்லை’ என்றால் அடுத்த நாளே ‘இந்தியாவிற்கு நன்றி’ என்று கோத்தபய மீடியாவிடம் சொல்வார்..

சீன ஆதரவுடன் வெற்றி பெற்றுவிட்டு, இந்தியாவுக்கு ஆப்பு வைப்பது என்பது அப்போதே பக்சேக்களாம் முடிவு செய்யப்பட்டு விட்டது.

இப்போது இந்தியா............காட்டான் மாமா சொன்னது போல் ஆப்பசைத்த குரங்கின் நிலையில்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

ஆழ்நோக்கு பார்வையுடன்
அழகுடனே படைப்பு
சகுனியின் சதியில்
சிக்கப்போகிறார்கள்
இந்தியாவும் சீனாவும்.

சகோதரி இராஜராஜேஸ்வரியின்
அறிமுகம் நன்று.
வாழ்த்துக்கள் சகோதரி.

மாய உலகம் said...
Best Blogger Tips

செங்கோவி said...
ஆனால் ராஜீவிற்கு இது பற்றி எந்தப் புரிதலும் இருந்தது போல் தெரியவில்லை..அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, புலிகள் மீதே பாய்ந்தார்..அதனால் இழப்பு இப்போது இரு தரப்புக்கும் தான்..//

மாய உலகம் said...
Best Blogger Tips

உங்களது அலசலை மெச்சுகிறேன் பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

நல்ல அலசல்....!

சந்தியா said...
Best Blogger Tips

நல்லதொரு அரசியல் ஆய்வு

இனிமேல் இளமைத் தோற்றத்தில் நடிப்பதில்லை-அஜித் அதிரடி முடிவு

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்! கடந்த இரண்டு நாளாய் பதிவுலகு பக்கம் வர முடியவில்லை.. வந்த சிறு நேர இடைவெளியிலும் உங்க பதிவு மட்டும் தான் படிச்சன், ஆனா கமெண்ட் போட முடியவில்லை.. இதுக்கும் கமென்ட் போடவேண்டும் போல இருக்கு ஆனா நேரம் போதவில்லை.. மீண்டும் சந்திக்கிறன்...

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said... Best Blogger Tips [Reply To This Comment]

//// மாறாக நாம் அவனை மோடன் என்று எள்ளி நகைத்துக் கொண்டிருக்க.
அவனோ எம்மை விடச் சாதுரியமாக அரசியல் விடயங்களில் ஈடுபடுகின்றான் ////

எம்மைவிட சாதுரியமாக சிங்களவன் என்ன செய்து கிழித்தான் என்று அறிய ஆவல்! ஒரு ஐந்து உதாரணம் கூறவும்!///

மணி சார் சிங்களவன் தனக்குள்ள என்ன தான் அடிப்பட்டு வெட்டுக்குத்து பட்டாலும் தமிழன் என்று வரும் போது ஒன்றாக சேர்ந்து நிண்டு கும்முறானே.. இந்த விடயத்தில் அவன் சாதுரியமானவன் தான்..தமிழன் இந்த விடயத்தில் .................. (நான் சொல்லி தெரியவேண்டியதில்லை..)

Unknown said...
Best Blogger Tips

பதிவு அசத்தல்

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நேற்றே போட வேண்டிய பின்னூட்டம் தாமதமாக இன்று.ராஜபக்சே, இந்தியா பற்றியெல்லாம் கடந்த இரண்டு வருடங்களாகவே முன் வைக்கும் விமர்சனங்களையே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்.தமிழகம்,சீனா என்ற இரண்டு மாறுபட்ட நிலைகளில் காங்கிரசின் மத்திய அரசு விழித்துக்கொண்டுள்ளதா என்ற கேள்வியை விட ஆசிய கடல் சார்ந்த பொருளாதார சூழலில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.இலங்கை கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக எதிர்ப்புக்களையும் தாண்டி தனது சதுரங்கத்தை நன்றாகவே ஆடி வந்திருக்கிக்கிறது.பான் கி மூன் போர்க்குற்ற அறிக்கையை ஐ.நாவின் மனித உரிமைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.இலங்கைக்கு 38 நாடுகள் ஆதரவு என பெரிஷ் வியன்னா டீ பார்ட்டி இந்த வாரம் கொடுக்கப் போகிறார்.நாம் வானொலி அலைக்கற்றைகளைப் போல் சில சமயம் குரல் உயர்த்தியும்,சோர்ந்த நிலையாக தாழ்ந்தும் மூலைக்கு ஒன்றாக குரல் எழுப்பிக்கொண்டுள்ளோம்.தலைமைத்துவம் இல்லாத கப்பலாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.கரை சேரும் காலம் தெரியவில்லை.ஆனாலும் கரை சேருவோம் என்ற நம்பிக்கையை விடாமல் இருப்போம்.

Unknown said...
Best Blogger Tips

எது எப்படியோ எனக்குப்
புரியவில்லை ஆனால்
ஒன்று மட்டும் உறுதி
அது இந்திய அரசு
ஏமாறப்போவது.

புலவர் சா இராமாநுசம்

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

எதிர் காலத்தில் சீன அரசின் இந்திய இராணுவ நிலைகள் பற்றிய கண்காணிப்பிற்குப் பகடைக் காயாக இருந்து தனது பௌத்த விசுவாசத்தினை இலங்கை காட்டுவதற்கு முன்னோடியாக இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முழுமையான பராமரிப்பு வேலைகளை சீனாவிற்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது இலங்கை அரசு.
எப்படி முடியபோகுதோ?ம் ... என்னத்த சொல்ல

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails