Tuesday, September 13, 2011

பயங்கரவாதிகளை உருவாக்குவோர் யார்?

உலக சமூகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பெரும்பான்மையானோர் அடக்கப்படும் மக்களுக்கு எதிராகவும், ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த சம்பவங்களைத் தான் வரலாற்றுப் பக்கங்கள் எமக்குப் பாடமாய்ச் சொல்லி நிற்கின்றது. விடுதலை வேண்டிப் போராடும் ஒரு இனத்தினது ஆணி வேரைப் பூண்டோடு அறுத்து எறியவும், அதன் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யவும் பயங்கரவாதம் என்ற ஒரு சொல் பிரபல்யமான ஒரு சொல்லாக உலக அரங்கில் பயன்படுத்தப்பட்டு வருவதனை நாம் அனைவரும் அறியாதவர்கள் அல்ல. பயங்கரவாதிகள்- தீவிரவாதிகளுக்கான வரைவில்லக்கணமானது பொதுவானதாக இருந்தாலும், ஆதிக்கவாத அரசுகள் தமது தேவைக்கு ஏற்றாற் போல அச் சொற்களை மாற்றி விடுகின்றன.

"வறுமைக்கு எதிரான யுத்தம் உயர்வானது
கல்வியின்மைக்கு எதிரான யுத்தம் உயர்வானது
அடிமை முறைக்கெதிரான யுத்தம் உயர்வானது- ஆனால்
சுதந்திரம் கேட்டுக் குரலெழுப்பும் மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் யுத்தம்
கேவலமனது! கொடூரமானது, மன்னிக்க முடியாதது!
இப்படிப்பட்ட யுத்தம் மனித குலத்தால் வெறுக்கப்பட வேண்டியது,
உலகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டியது!" எனக் கூறும் மனித உரிமை வல்லுனர்கள் பார்வையில், பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மக்களது வாழ்வியலினூடே உருவாகின்ற பயங்கரவாதியைப் பற்றிப் பேசுகின்ற ஒரு குறும்படம் தான் "பனிச்சமரம் பழுத்திருக்கு!

இலங்கையின் போர் இடம் பெற்ற பகுதிகளில் நிகழ்ந்த கண் மூடித் தனமான விமானக் குண்டு வீச்சுப் பற்றி அறியாதோர் இருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். கண் மூடித் தனமான விமானக் குண்டு வீச்சில் கணவனைப் பறி கொடுத்த மீனாட்சி எனும் கதாபாத்திரம், தனது பிள்ளைகளான முத்து, பவானி ஆகிய இருவரையும் தன் சுய முயற்சியின் அடிப்படையில் வளர்த்தெடுக்க நினைக்கும் போது, நிகழ்கின்ற அவலங்களைச் சொல்லுகின்ற குறும்படம் தான் இந்தப் பனிச்ச மரம் பழுத்திருக்கு.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த கணவனை இழந்த பெண்களுக்கு, அவர்களின் வாழ்க்கையினை முன்னேற்றுவதற்கான சிறிய அளவிலான சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சிகள் வழங்கப்பட்டாலும், அநேக மக்களுக்கு அச் சுய தொழிலினைப் பெற்றுக் கொள்வதென்பது கடினமாக அமைந்து கொள்கிறது.

இந் நிலையில் தன் கணவனை விமானக் குண்டு வீச்சின் மூலம் பறி கொடுத்த மீனாட்சி அவர்கள், தன் பிள்ளைகளின் வயிற்றுப் பசியினைப் போக்குவதற்காக, உணவிற்கு வழியின்றி, தண்ணீரை மட்டும் குடிக்கக் கொடுத்து, "நாளைக்கு கண்டிப்பாக அம்மா எங்கேயாச்சும் வேலைக்குப் போய்" பிள்ளைகளுக்கு உணவு வாங்கி வருகின்றேன் என்று கூறிப் பிஞ்சுகள் இருவரினதும் மனதினைத் தேற்றித் தூங்க வைத்திருக்கும் காட்சிகள் கண் முன்னே எம் ஈழத்தின் போர்க் கால வறுமை நிலையினைக் காட்சிப்படுத்தி நிற்கின்றது.

மீனாட்சியின் தோழி மூலம் நெல்லுக் குற்றும் வேலையொன்று கிடைக்கப் பெறுகையில், "என்ரை பிள்ளைகளுக்கு இன்றைக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்திட்டீங்கள்" என்று மீனாட்சி கையெடுத்துக் கும்பிடும் காட்சி யதார்த்த நிலையாக கணவனை இழந்த ஒரு பெண்ணின் பொருளாதார நிலையினை விளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  தன் நிலையினையும், உணவேதுமின்றிப் பட்டியினால் வாழும் தன் இரு பிஞ்சுகளின் நிலையினையும் உணர்ந்த மீனாட்சி, தனது தோழியின் உதவியுடன் உரலில் நெல்லுக் குற்றிச் சம்பாதிப்பதற்காக வேலைக்குச் செல்கின்றா. 

அங்கே கொடுக்கப்படும் பாணினை வாங்கி உண்பதா, வேணாமா என ஐயம் கொண்டவராய்
"அந்த வீட்டிலையும் வேலை செய்யச் சொல்லிப் பொட்டு, சாப்பாட்டும் தந்திட்டு, தாற சம்பளத்தில மாத்திரம் சாப்பாட்டுக் காசினைக் கழிச்சவங்கள்"
இவையள் அப்படி இல்லைத் தானே? என்று தன் பிள்ளைகளுக்காக சிறு தொகைப் பணம் ஈட்டிப் பட்டியினால் வாடும் பிள்ளைகளின் வயிற்றுப் பசியினைப் போக்க நினைக்கும், மீனாட்சி அவர்கள், வேலை செய்யச் சென்ற இடத்தில் வழங்கப்பட்ட சிறு பாண் துண்டினைக் கூடத் தன் பசியினைப் பொருட் படுத்தாதவராய், பத்திரப்படுத்தி, தன் பிள்ளைகளின் பசிக்கு உதவும் எனும் நோக்கில் சேலைத் தலைப்பில் முடிந்து வைக்கும் காட்சியில் நீங்கள் ஒரு கணம் உணர்வுகளோடு ஒன்றித்துப் போய்விடுவீர்கள். 

நெல்லுக் குற்றி முடிந்ததும், வீட்டிற்காக தன் நாட் கூலியினைப் பெற்று வர மீனாட்சி தயாராகும் வேளையில் மீனாட்சியின் இரு பிள்ளைகளும், பசிக் கொடுமையின் காரணத்தால், உணவின்றி, வாடியபடி,  அயல் வீட்டுப் பிள்ளைகளோடு பனிச்சம் பழம் பிடுங்கப் போகின்றார்கள். இங்கே இயக்குனர் க.ரமேஸ் அவர்கள்; 
இத்தனை துயர் நிறைந்த சூழலிலும், தமது வயிற்றுப் பசியினையும் பொருட்படுத்தாது, முதலில் பிடுங்கிய பன்னிச்சம் பழத்தினைத் தன் தாயிற்காக தன் சட்டைப் பையினுள் பக்குவப்படுத்தும் சிறார்களின் ஊடாக ஏழ்மையிலும் தாய்ப் பாசத்தினைத் தொலைத்திடாத உணர்வினை அருமையாகப் படமாக்கியிருக்கிறார்.

தன் அன்றாட வேலை முடித்து வீடு திரும்பும் மீனாட்சி, தன் இரு பிள்ளைகளும் பன்னிச்சம்பழம் பிடுங்கப் போய் வீடு திரும்பாத சேதியினை அறிந்து கொள்கிறா. பின்னர் தன் பிள்ளைகளுடன் பனிச்சம் பழம் பிடுங்கப் போன அயல் வீட்டுப் சிறுவர்களையும் அழைத்துச் சென்று, தன் பிள்ளைகளைத் தேடத் தொடங்குகையில், இலங்கை அரசின் யுத்த விமானங்கள் தமது மிலேச்சத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலை ஆரம்பிக்கின்றன. 

பிள்ளைகளைக் காணாது விமானக் குண்டு வீச்சின் நடுவே ஓடுகின்ற தாயையும்; தம்மைச் சுற்றி எனன் நடக்கின்றது என்று அறியாது தூக்கத்திலிருக்கும் சிறுவர்களின் நிலையினையும் காட்டி, ஒரு பயங்கரவாதி எவ்வாறு உருவாகின்றான் என்பதற்கு நியாய பூர்வமான விளக்கத்தினையும் இறுதிக் காட்சிகளில் அற்புதமாக இயக்குனர் ரமேஸ் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் முடிவினைப் படம் பார்க்க வேண்டும் எனும் ஆவலில் உள்ள அன்பு உள்ளங்களிற்காக இங்கே சொல்லாது தவிர்க்கின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்- தமிழர் தாயகப் பகுதியில் திரைப்படங்களைத் தயாரிப்பதற்குப் பெயர் போன புலிகளின் நிதர்சனம் நிறுவத்தினர் இந்தப் "பனிச்சமரம் பழுத்திருக்கு"குறும் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். 

ஜெஸ்மின், நீதன், சாதுரியன், மது, நாகம்மா, கவி, ராணி, திரேசம்மா முதலிய கலைஞர்களின் நடிப்பானது, எம் மண் வாசனையினை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிற்கிறது. நிலவனின் ஒளிப்பதிவிலும், தவநீதன், சுதன்; தவசீலன் ஆகியோரின் ஒளியமைப்பிலும் வெளிவந்திருக்கிற குறும்படம் தான் இந்தப் பனிச்சமரம் பழுத்திருக்கு. 

வினோவின் படத் தொகுப்பு, காட்சிகளை மிகவும் உணர்வு பூர்வமாக எம் முன்னே காட்சிப்படுத்தி நிற்கிறது. இயக்குனர் ரமேஸின் நேர்த்தியான இயக்கத்தில் உருவான இக் குறும்பத்திற்கான கதையினைச் செம்பருத்தி அவர்கள் எழுதியிருக்கிறார். 

இசைத் தென்றலின் இசை, காட்சிகளின் உயிரோட்டமான நகர்விற்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறது.

ஆதவன் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் இயக்கத்தில் வன்னிப் பகுதியில் 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட இக் குறும்படத்திற்கு, தென் இந்தியத் திரைப்பட இயக்குனர்- உதிரிப் பூக்கள் திரைப்படம் புகழ்- மகேந்திரன் அவர்கள் ஆலோசனையினையும், வழி காட்டலினையும் வழங்கியிருக்கிறார்.

பனிச்சமரம் பழுத்திருக்கு: உலக நாடுகளின் மொழியில் பயங்கரவாதிகளின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணத்தினையும், தமிழ் மக்களின் மொழியில் ஒரு போராளியின் உருவாக்கத்திற்கான காரணத்தினையும் தத்ரூபமாகப் பேசி நிற்கிறது. 

வெறும் பதினாறு நிமிடங்கள் நேர அளவை கொண்ட பனிச்சமரம் பழுத்திருக்கு குறும் படத்தைக் கண்டு களிக்க: 
முதலாவது பாகத்தினைப் பார்க்க:

இரண்டாவது பாகத்தினைப் பார்க்க:

*********************************************************************************************************************************
பதிவுலகில் சொந்தப் பெயரில் எழுதும் பதிவர்களை விடப் புனை பெயரில் எழுதும் பதிவர்களின் பெயர்களில் சிறப்பினைக் கொடுக்கும் பெயர்கள் என்றால், பன்னிக்குட்டி ராம்சாமி, ஓட்டவடை நாராயணன், மங்குனி அமைச்சர்_ _ _ _ _ எனப் பல பெயர்கள் வந்து கொள்ளும். இத்தகைய கும்தலக்கடி கும்மாப் பெயர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டு, அண்மையில் பதிவுலகத்தினுள் நுழைந்திருப்பவர் தான் யானைக் குட்டி ஞானேந்திரன். 

புது முகமாக இருந்தாலும், அனைவரும் ரசிக்கும் படியான சிரிக்க + சிந்திக்க வைக்கக் கூடிய பதிவுகளைத் தந்து கொண்டிருக்கிறார் யானைக் குட்டி ஞானேந்திரன்.
யானைக் குட்டி ஞானேந்திரனை வரவேற்று, ஊக்கமளிப்பது பதிவர்களாகிய எம் கடமையல்லவா?
சகோதரன் யானைக் குட்டி ஞானேந்திரனின் யானைக் குட்டி வலைப் பதிவிற்குச் செல்ல:
**********************************************************************************************************************************

40 Comments:

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

நல்ல முயற்சி பாஸ் ..இவ்வாறு குறுகிய மட்டத்தினராலே பார்க்கப்பட்டிருக்கும் இவ்வாறான குறும்படங்களை தொடர்ந்து வெளிக்கொணர்வது...தொடர்க

குறும்படம் ஏற்க்கனவே பார்த்திருந்தேன்...

செங்கோவி said...
Best Blogger Tips

கமர்சியல் சினிமாக்களில் சொல்ல முடியாத விஷயங்களையும் வெளிக்கொண்டுவர, இந்தப் படம் உதவி இருக்கின்றது..

செங்கோவி said...
Best Blogger Tips

//அங்கே கொடுக்கப்படும் பாணினை வாங்கி உண்பதா, வேணாமா என ஐயம் கொண்டவராய்
"அந்த வீட்டிலையும் வேலை செய்யச் சொல்லிப் பொட்டு, சாப்பாட்டும் தந்திட்டு, தாற சம்பளத்தில மாத்திரம் சாப்பாட்டுக் காசினைக் கழிச்சவங்கள்"//

நிதர்சனமான, வலி நிறைந்த கேள்வி..

செங்கோவி said...
Best Blogger Tips

மரியாதைக்குரிய இயக்குனர் மகேந்திரனுக்கும் நன்றி சொல்வோம்.

காட்டான் said...
Best Blogger Tips

நான் ஏற்கனவே பார்த்த படம் என்றாளும் உங்கள் விமர்சனம் என்னை மீண்டும் படத்தை பார்க்க தூண்டுகிறது..

காட்டான் said...
Best Blogger Tips

மீனாட்சியின் தோழி மூலம் நெல்லுக் குற்றும் வேலையொன்று கிடைக்கப் பெறுகையில், "என்ரை பிள்ளைகளுக்கு இன்றைக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்திட்டீங்கள்" என்று மீனாட்சி கையெடுத்துக் கும்பிடும் காட்சி யதார்த்த நிலையாக கணவனை இழந்த ஒரு பெண்ணின் பொருளாதார நிலையினை விளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மனசை பிழியும் இடமிது நானே நேரில் இப்படியான சம்பவங்களை பார்திருக்கிறேன். பாவம் அவர்கள் வாழ்கை.. அன்மையில் ஒரு ஒரு புரோகிறாம் பார்தேன் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களால் தனது அண்ணன் பலிவாங்கப்பட்டதை பார்த தம்பி எப்படி தீவிர வாதியாக மாறுகிறார்கள் என.. இப்படியான படங்களை நீங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்வேண்டும்..

K said...
Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

படம் பார்த்து பின்னர் எனது கருத்தை சொல்கிறேன் சார்! யானைக்குட்டி ஞாநேந்திரன் சாருக்கு எனது வாழ்த்துக்கள்!

காட்டான் said...
Best Blogger Tips

கடைசிக்காட்சி கண்களை குழமாக்கியது எனக்கு இந்த படத்தை மீண்டும் பார்கும் மன தைரியம் இல்லைத்தான்.. இதற்கு பிறகு அவன் தீவிரவாதின்னா..??? மன்னிச்சுகோங்க.. இதுக்கு மேல எழுதினா கெட்ட வார்த்தைதான் எழுதோனும்..!!!???? போட்டு வாரேன்யா ..

காட்டான் said...
Best Blogger Tips

பாத்திரங்களை அப்பாச்சி அடுக்குமிடம்,நெல்லை குத்திக்கொண்டே கண்ணீரை துடைகுமிடம்.. யதார்த வாழ்கையை எம் கண்முன்னே கொண்டுவந்த இயக்குனரை பாராட்டுகிறேன்..

காட்டான் said...
Best Blogger Tips

நன்றி நிரூபன்..

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

பயங்கரவாதிகள்- தீவிரவாதிகளுக்கான வரைவில்லக்கணமானது பொதுவானதாக இருந்தாலும், ஆதிக்கவாத அரசுகள் தமது தேவைக்கு ஏற்றாற் போல அச் சொற்களை மாற்றி விடுகின்றன.

மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

Anonymous said...
Best Blogger Tips

இருமுறை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் சகோதரம்...எத்தனை முறை பார்த்தாலும் கடைசியில் கலங்கி போகிறோம்...முடிவை கொடுக்காமல் விட்டது நல்லது...நிரூபன்...

Ashwin-WIN said...
Best Blogger Tips

ஆணித்தரமான கருத்தை சொல்லியிருக்கிற குறும்படம்.
அதை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி சகோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ... வீடியோ பார்க்க நேரமில்லை. இப்போ வருகை பதிவும், வாக்குகள் மட்டுமே.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

ஏற்கனவே பார்த்த படம்தான்..ஆனால் உங்கல் விமர்சனம் அற்புதம் பாஸ்.

பனிச்சம் பழத்தி ஞாபகப்படுத்திவிட்டீர்களே....என்ன ஒரு அருமையான பழம்...அதன் சுவைக்கு ஈடாகுமா...

மகேந்திரன் said...
Best Blogger Tips

ஏற்கனவே கண்டிருக்கிறேன் சகோ...
உங்கள் முயற்சிகளில் இது ஒரு மைல்கல்.

புதிய அறிமுக பதிவருக்கு
என் வாழ்த்துக்கள்.

ஆகுலன் said...
Best Blogger Tips

பத்திரப்படுத்தி, தன் பிள்ளைகளின் பசிக்கு உதவும் எனும் நோக்கில் சேலைத் தலைப்பில் முடிந்து வைக்கும் காட்சியில் நீங்கள் ஒரு கணம் உணர்வுகளோடு ஒன்றித்துப் போய்விடுவீர்கள். ///

இதை வாசிக்கும் போது அவர்களது உணர்வுகளை நினைத்துபார்க்க முடியவில்லை...................

நாம் எல்லாம் வாழ்கை பிடிக்க வில்லை எண்டு சொல்வதில் அர்த்தம் இல்லை.....

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நானும் பார்த்திருக்கிறேன்.இதை எத்தனை முறை பார்த்தாலும் கடைசியில் கலங்கி போகிறோம்...

நல்ல முயற்சி...

athira said...
Best Blogger Tips

பனிச்சம்பழமோ நிரூபன்? நான் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லையே...

நான் ரொம்ப நல்ல பொண்ணு, 6 வயசிலிருந்தே:)), தொடர்ந்து அரசியலாத் தலைப்புப் போட்டு என்னையும் ஒரு ......... ஆக்கிடப்போறீங்க:))), அப்படி ஆனால்... முதல் வேலையை “நாற்றில”தான் ஆரம்பிப்பேன்:))).

...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஎப்:)))

Unknown said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றிங்க நண்பா!...வாழ்த்துக்கள் யானைக்குட்டி பதிவருக்கு!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

யானைக்குட்டியை அறிமுகப்படுத்திய பதிவுலகின் சிங்கக்குட்டிக்கு வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

உங்களின் இன்னொரு கிளாச்சிக் பதிவு..

நேரமின்மை காரணமாய் படம் பார்க்க இயலவில்லை படம் பார்த்து விட்டு சொல்லுகிறேன்

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Mathuran said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி நிரூபன்
நான் இன்னமும் இந்த குறும்படத்தினை பார்க்கவில்லை. இனித்தான் பார்க்கப்போகிறேன்

M.R said...
Best Blogger Tips

நண்பருக்கு வணக்கம்

வெளியே செல்வதால் காணொளி வந்து பார்க்கிறேன் நண்பரே .

தாங்கள் அறிமுகம் செய்திருக்கும் பதிவருக்கு வாழ்த்துக்கள்

வாக்களித்தேன் அனைத்திற்கும்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

கலங்கச் செய்யும் குறும்படமே!
பகிர்வுக்கு நன்றி.

KANA VARO said...
Best Blogger Tips

நல்ல விளக்கம்.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இயக்குனருக்கு வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

யானை குட்டிக்கும் வாழ்த்துக்கள்...

கவி அழகன் said...
Best Blogger Tips

அடக்கபட்டும் எவையும் ஒருநாள் வெடித்து சிதறும் என்பது உலக நியதி

சுதா SJ said...
Best Blogger Tips

பிந்தி வந்துட்டேன் போல , வீடியோ கலக்கல் உங்கள் பதிவை போலவே

சசிகுமார் said...
Best Blogger Tips

உண்மை தான்.........

தம்பி கூர்மதியன் said...
Best Blogger Tips

மக்கா குறும் படம் அதிகமாக பார்க்கும் பழக்கம் கொண்டவன் நான்.. குறும்படத்தை நான் பொதுவாக பயங்கரமாக விமர்சிப்பவன்.. இந்த குறும்படம் மனதை கனக்க வைத்தது. அந்த பையன் தூங்கி எழுந்து பையில் இருந்த பழத்தை எடுத்து பார்த்தபோதே முடிவை கணிக்க முடிந்தது. நான் கணிக்க முடிந்த்துக்கு காரணம் உன் தலைப்பும் தான் மச்சி..

கடைசி டேக் லைன் பேக்ரவுண்ட் வாய்சில் உச்சரிக்கப்பட்டது மிகவும் உண்மை. இதையே சில நாட்களுக்கு முன்னர் பார்த்திருந்தால் தீராத கோப கனல் உருவாகி இருக்கும்.. இப்போது என்னை அறியாமல் விழிகளில் நீர்.. நன்றி நிரூ..

Jana said...
Best Blogger Tips

ம்ம்ம்.... கனக்கவைக்கும் குறும்படம். பார்த்திருக்கின்றேன். மெலம் சில குறும்படங்கள் சம்பந்தமான பட்டியலை தங்கள் மெயிலுக்கு அனுப்புகின்றேன்.

shanmugavel said...
Best Blogger Tips

குறும்படங்கள் முக்கியமானவை சகோ! விரிவாக பேச முடியவில்லை.

Angel said...
Best Blogger Tips

இந்த குறும்படத்தை முன்பே பார்த்திருக்கிறேன் .
உங்கள் எழுத்துக்களில் வாசிக்கும்போது மனம் வலிக்குது

குறையொன்றுமில்லை. said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி. நான் இப்பதான்
பார்க்கிரேன்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
Best Blogger Tips

என்ன சொல்வது !!!நெகில்வாய்...இருக்கிறேன்..
நன்றி ! நன்றி !நன்றி !நன்றி !நன்றி !!!
எம் பதிவு உலக தங்ககங்கள்... சிங்கங்கள் .......
தங்களின் வாழ்த்துக்களும் , ஆசிர்வாதங்களும்,
என்னை மேம் மேலும் ஊக்கம் கொடுக்கின்றது .....
இதோ...
இந்த ...சந்தோசங்களையும் ..மகிழ்சிகளையும்
கொஞ்சம் அசை போட்டு விட்டு,,,,
தங்களை தனிதனியய் நன்றி பாரட்டுவேன்.....
இனியவன் ,
அன்புடன் ,
யானைக்குட்டி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
Best Blogger Tips

திரு, நிரூபன் அவர்களக்கு ,
இந்த...சின்னபயல் "யானை குட்டியை "
தாங்கள் அறிமுகபடுத்தி ....என்னை போன்ற
மொக்கை பதிவரை முக்கியமான பதிவராக ...
பொறுப்புள்ள ...பதிவராக மாற்றிய தங்கள்
அன்புக்கும் ,நட்புக்கும் நான் என்ன செய்வேன் !!!!
மேன் மக்கள் என்றும் மேன் மக்கள்தான் ....
நன்றி !நன்றி !நன்றி !
இனியவன் ,
அன்புடன் ,
யானைக்குட்டி

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails