Friday, September 23, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 04

இத் தொடரின் கடந்த பாகங்களைப் படிக்க..........
மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
மார்கழி மாதத்தில் பாடசாலை விடுமுறை விட்டதும் பல திட்டங்கள் போட்டுப் பட்டங்கள் கட்டி ஏற்றத் தொடங்கிடுவோம். அதுவும் கழுசான் அவிழ்ந்து விழும் பருவத்தில் பட்டங்களைக் கட்டி வயற் தரை முழுதும் ஓடி, ஓடிப் பட்டம் ஏற்றிய அனுபவங்களை எளிதில் மறந்து விட முடியாது. ஆட்களின் உயரங்களுக்கேற்ப பட்டங்களின் வகைகள் பலவாறாய் அமைந்து கொள்ளும். 
சிறியவர்கள் என்றால், தையல் நூலில் ஏற்றக் கூடிய சீனன், பாம்பன் முதலிய பட்டங்களைத் தான் ஏற்றுவார்கள். பெரியவர்கள் அல்லது கொஞ்சம் வயதான நபர்கள் நைலோன் நூல் அல்லது ஈர்க்குப் பிரி நூலில் பட்டங்களினை ஏற்றத் தொடங்குவார்கள். மார்கழியில் சூடு பிடிக்க்கும் பட்டத் திருவிழா களை கட்டி; மழை வெள்ளம் எல்லாம் ஓடி ஆடி விளையாடிய களைப்புக்கள் தீரத் தைத் திருநாளை எதிர் பார்த்துக் காத்திருக்கும். (ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் பட்டமேற்றல் ஒரு தனித் திருவிழாப் போன்று கொண்டாடாப்படும்.)

தைப் பொங்கலன்று தான் பட்டமேற்றல் சூடு பிடிக்கும். தை மாதத்தில் உதிக்கும் திசையில் இருக்கும் உதயனுக்கு நன்றி சொல்லும் நாளைத் தமிழர்கள் நன் நாளாக அனுஷ்டிப்பார்கள். வாசலில் கோலம் போட்டு, மாவிலை வைத்து தோரணம் கட்டி, வயலரிசியில் இருந்து பொங்கிப் படைத்து மகிழ்வார்கள். எப்போது இந்தப் பொங்கல் முடியும், எப்போது பானையிலிருந்து பொங்கலை இறக்குவார்கள் என ஆவலாக இளையோர்கள் பார்த்திருப்பார்கள். 

பொங்கிப் படைத்து உண்டு மகிழ்ந்ததும்,  பட்டமேற்றும் கூட்டணி வயல் வரம்புகளினூடாகப் படையெடுக்கத் தொடங்கும். பட்டம் ஏற்றுவதற்காக வயல் வரம்பினூடாக ஓடும் போது சில வேளை நெற் கதிர்களினை இளையர்கள் தவறுதலாக மிதித்து விடுவார்கள். வயற்காரன் கண்ணில் நெற் கதிர்களை மிதிப்பது தட்டுப் பட்டால்(தென் பட்டால்), அதன் பின்னரான நிலமை சூர சங்காரமாகத் தான் இருக்கும். 

இத்தகைய வசந்த கால வாழ்வினை இயற்கை அன்னை அனுபவிக்கத் தந்திருந்தாலும், ஒரு காலத்தோடு அந்த வளங்களை மீண்டும் கையகப்படுத்திக் கொண்டாள். எங்கள் வாழ்வின் வசந்தங்கள் எப்போதும் கிராமத்துக் காற்றினைத் தழுவியபடி தான் இருந்தது.  இலகுவில் பிரிக்க முடியாதவர்களாய் மண் வாசனையோடு எம் மவர்கள் செம் புழுதியில் ஒட்டியிருந்தார்கள். "நகரத்தில் வாழ்வதில் சுகம் அதிகம் இருக்கெனப் பலர் கூறி வாழ்ந்த காலத்தில்; ’கிராமத்தில் வாழ்வதில் தான் அலாதி இன்பம் இருக்கென" அன்று நாம் மகிழ்ந்திருந்த காலங்கள் அவை. 

வன்னியில் வீட்டுக்கு ஒரு மாடு,வளர்ப்பார்கள். எல்லோர் வீடுகளிலும் என்று சொல்வதிலும் பார்க்க அதிகமான வீடுகளில் வீட்டுக்கு ஒரு மாடிருக்கும். அதனை விடச் சிலர் பட்டியாக(கூட்டமாக) மாடு வளர்ப்பார்கள். காலையில் மாடுகளை அவிழ்த்து விட்டால், பழக்கப்பட்ட மாடுகள் தானாகவே மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் செல்லும். பின்னர் மாலையில் கட்டைக்கு(மாட்டுப் பட்டிக்கு) வரும். மாட்டுத் திருடர்களிடமிருந்து மாடுகளைக் காப்பதற்காய் மாடுகளுக்கு குறி சுட்டிருப்பார்கள். 

மாடு வளர்க்கும் குடும்பத்தின் முதல் எழுத்தும், அவர்களின் பிள்ளைகளின் எழுத்துக்களும் தான் இந்தக் குறிகளில் அடங்கும். SN, SJ என என் அப்பா என் நினைவாகவும், அக்காவின் நினைவாகவும் மாடுகளிற்கு குறி சுட்டு வைத்திருந்தார். மாடுகளிற்கு செல்லப் பெயர்களாக கறுப்பி, சிவப்பி, லஸ்சுமி, சரசு, செல்வி, குங்குமம், எனப் பல பெயர்களை வைத்து அழைத்து மகிழ்வார்கள். யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.

இதே போல மாட்டு வண்டிச் சவாரி மீது ஆர்வமுள்ளவர்கள், எருமை மாட்டினைக் கொம்பு சீவிச் வளர்ப்பார்கள். மாட்டு வண்டிச் சவாரி யாழ்ப்பாண மாவட்டத்திலும், கிழக்கிலங்கையின் மட்டக்களப்பிலும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. இந்தச் சவாரிப் போட்டியினை ரசிப்பதற்காக ஊரே அலையெனத் திரண்டு, சவாரித் திடலில் விழாக் கோலம் பூண்டு மகிழும். வன்னியில் சவாரிப் போட்டி நடை பெறுவதற்கேற்ற இடமாக கிளி நொச்சி சவாரித் திடலும், முழங்காவில் சவாரித் திடலும் மட்டுமே இருந்தது.(நான் அறிந்த வரை) 


வன்னியின் வனப்பு மிகு ஊர்களில் இருந்து இச் சவாரி மீது பிரியம் கொண்டவர்கள் எருமை மாட்டினைக் கொம்பு சீவி வளர்த்துச் சவாரிக்கேற்றாற் போல வேகமாக ஓடும் வகையில் பயிற்சி கொடுத்துப் பழக்கப்படுத்தி வைத்திருப்பார்கள். சவாரியன்று பல ஊர்களிலிருந்தும் அழைத்து வரப்படும் மாடுகள், சவாரிக்காக சவாரித் திடலில் இறக்கப்படும். 

மாடுகளை வேகங் கொள்ள வைப்பதற்காய் போதையேற்றும் குடி வகைகளை(சாராயம்) மாடுகளுக்கு பருக்குவார்கள். இக் குடிவகைகளினைக் குடித்தும் மாடு வேகமாக ஓடாது வெருளத் தொடங்குகிறது என்றால், மாட்டின் பின் பக்கத்தில் ஊசியால் குத்துவார்கள். 


மாட்டு வண்டிலில் மாடுகளைப் பூட்டிய பின்னர் சவாரிக்கான மணி அடிக்கத் தொடங்கியதும் வண்டிலோடு சேர்ந்த மாடுகளை, சவாரியாளர் மாட்டின் பின் பக்கத்தில் அடி கொடுத்து, வேகமாக ஓட வைப்பார்கள். 

இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியில் சவாரிக்காக மாடுகளை வளர்த்ததுவும் நெஞ்சில் பதிந்து போன நினைவுகளாக மட்டும் எம் கண் முன்னே நிற்கின்றன. கால வோட்ட மாற்றத்தில் கரைந்துருகி, காலனவன் பிடியில் எம் மண் சிக்கியி பின்னர் இவை எல்லாமே, காட்சிகளாக மாறி விட்டன. வசந்த கால வாழ்வாக நாம் நினைத்து ஓடி ஆடித் திரிந்த வன்னியின் காடுகள் புடை சூழ்ந்த அழகு மிகு சோலைகள் எல்லாம் இன்று பல ஆயிரம் சேதிகளைத் தன்னகத்தே கொண்டு மௌனித்துப் போயிருக்கிறது. எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.................................

                                                              எச்சங்கள் தொடர்ந்தும் எழுத்தாக வரும்...........

******************************************************************************************************************************
பதிவர் அறிமுகம் பகுதியின் வாயிலாக இன்று நாம் தரிசிக்கப் போகும் பதிவரின் வலைப்பு தான் "முனைங்." என்னங்க பெயரைக் கேட்டதும் ஆச்சரியமாக இருக்கா. ஆம் சகோதரன் சாருஜன் அவர்கள் தன்னுடைய வலைப் பதிவில் பல சுவையான விடயங்களையும், புதிய பொது அறிவு - அறிவியற் தகவல்களையும், தன் உணர்வுகளையும் பகிர்ந்து வருகின்றார்.

சகோதரன் சாருஜன் அவர்களின் முனைங் வலைப் பதிவிற்குச் செல்ல:
********************************************************************************************************************************


இன்ட்லியில் ஓட்டளிக்க:

55 Comments:

K said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி! ஓட்டுக்கள் போட்டுட்டேன்! பதிவுக்கான படங்களை அருமை! அந்த தொழில் நுட்பம் சொல்லித்தந்தமைக்கு நன்றி!

பதிவு பற்றி பின்னர் கமெண்டு போடுகிறேன்! வெளியூருக்குப் போகிறேன்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

சாராயம்- டாஸ்மாக்/////ஊரைப் பார்த்தேன்!அது போக, நேற்று முன் தினம் ஏதோ பார்க்கச் சொன்னீர்கள்,அது இன்று வரை என்னால் முடியவில்லை!பேஸ்புக்கில் கணக்கு வேண்டுமோ,அது எனக்கு இல்லையே?அடுத்து,"டாஸ்மாக்" என்பதன் பொருள் சாராயம் அல்லவென்று ஏலவே விளக்கம் கொடுக்கப்பட்டதே,மறந்து விட்டீர்களா?

சசிகுமார் said...
Best Blogger Tips

இன்னும் எத்தனை உயிர்கள் தான் மாண்டிருக்கிறதோ?

Unknown said...
Best Blogger Tips

நினைவுகளின் ஊடே செல்லும் கட்டுரையும் படங்களும் அருமை
சகோ!

புலவர் சா இராமாநுசம்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இனிய நினைவுகளைப் பகிர்ந்து விட்டுக் கடைசியில் இன்றைய மெய்ம்மையைக் கூறி முடித்திருக்கிறீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

மலரும் நினைவுகளா? பேஷ், பேஷ்

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் மாப்பிள கதையை அழகாய் நகர்த்தி செல்கிறீர்கள்.. பட்டத்தை பற்றி கூறி எனையும் எனது சிறுவயதுக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள்..  எட்டு மூலப்பட்டம் செய்து அதை ஏற்ற வயல் வெளிகளில் தம்பிபியுடன் சண்டையிட்டு கடைசியில் அவன் பட்டத்தையே கிளித்துப்போட்டது ஏனோ ஞாபத்தில் வருகின்றது..!!!

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள அண்ண சொல்வதை கேட்டீர்களா?? டாஸ்மார்க் ஒரு மது சப்ளை செய்யும் ஒரு நிறுவனம்.. மதுக்கடைகளும் அதன் பெயரிலேயே இயங்குகின்றது.. ஹி ஹி ஹி

Unknown said...
Best Blogger Tips

நினைவுகள் அருமை ஒரு முறை இறந்த காலத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள், நிகழ்காலம் தான் சுடுகிறது...

SURYAJEEVA said...
Best Blogger Tips

எப்ப முடியும்னு காத்திருக்கிறேன், முடிந்த பின் மொத்தமாய் படிப்பதற்கு

தனிமரம் said...
Best Blogger Tips

கந்தக் காற்றில் கலந்து போனதை தேடும் தொடரின்  அடுத்த அங்கத்திற்காக காத்திருக்கின்றேன்!

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் சார் ,

Anonymous said...
Best Blogger Tips

////"நகரத்தில் வாழ்வதில் சுகம் அதிகம் இருக்கெனப் பலர் கூறி வாழ்ந்த காலத்தில்; ’கிராமத்தில் வாழ்வதில் தான் அலாதி இன்பம் இருக்கென" /// ஓம் சார் இதை அனுபவத்தினூடாக அறிந்தவர்களுக்கு தான் இன்னமும் கிராம புறங்களின் அருமை புரியும்..

கிராம புறங்களின் சுத்தமான காற்றும், அங்கே வாழும் மக்களின் அன்பான உபசரிப்பும், ஒற்றுமையும் ,அன்னியோன்னியமும் எந்த நகரப்புற வாழ்விலும் கிடைக்காது என்பது என் அனுபவத்தினூடாக உணர்ந்த உண்மை சார்..

Anonymous said...
Best Blogger Tips

பட்டம் விடுதல் ,தை திருநாள் பொங்கல்,அடுத்த சில நாட்களிலே வரும் மாட்டு வண்டி சவாரி (கோண்டாவிலில் நடக்கிறது ) என்று அத்தனையும் நினைவில் நிற்கிறது ..மீண்டும் உங்கள் எழுத்து வர்ணனைகள் மூலம் மீண்டும் அந்த நினைவுகளை பதிவினூடாக ஏற்ப்படுத்தியுள்ளீர்கள்..நன்றி சார் ..

Anonymous said...
Best Blogger Tips

சாருஜனுக்கு வாழ்த்துக்கள்

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

அன்பு நிரூ, உண்மையிலேயே இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. மீண்டும் பொய் இரண்டு நிமிடங்கள் அந்த வன்னி மண்ணில் வாழ்ந்து விட்டு வந்த அனுபவம் கிடைத்தது. அத்தோடு அதற்கொத்த படங்களையும் இணைத்திருப்பது இன்னும் சுவாரஸ்யம். என்னதான் சுவாரஸ்யம் இருந்தாலும் இறுதியில் வன்னியின் நிலை (தற்போதைய நிலை) எம் அனைவருக்கும் ஒரு நெஞ்சில் ஏற்றப்படும் ஊசிதான்.

அழகான பதிவிற்கு வாழ்த்துக்கள். அதைவிட இதுவொரு ஆவணப் பதிவும் கூட என்பது காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. .

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

தொடருங்கள், சில இடங்களில் மனம் கலங்குகிறது....

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////தைப் பொங்கலன்று தான் பட்டமேற்றல் சூடு பிடிக்கும். தை மாதத்தில் உதிக்கும் திசையில் இருக்கும் உதயனுக்கு நன்றி சொல்லும் நாளைத் தமிழர்கள் நன் நாளாக அனுஷ்டிப்பார்கள். வாசலில் கோலம் போட்டு, மாவிலை வைத்து தோரணம் கட்டி, வயலரிசியில் இருந்து பொங்கிப் படைத்து மகிழ்வார்கள். எப்போது இந்தப் பொங்கல் முடியும், எப்போது பானையிலிருந்து பொங்கலை இறக்குவார்கள் என ஆவலாக இளையோர்கள் பார்த்திருப்பார்கள். ////

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...வந்ததே..............

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் அசத்தலாக நம் மண்வாசனைப்பதிவு.....கலக்குங்க....வாழ்ந்த வாழ்கையை மீட்டிப்பார்ப்பதில் உள்ள சுகமே தனிதான்..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் தமிழ் 10 ஓட்டு போட மக்கர் பன்னுது பாருங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

சாராயம்- டாஸ்மாக்/////ஊரைப் பார்த்தேன்!அது போக, நேற்று முன் தினம் ஏதோ பார்க்கச் சொன்னீர்கள்,அது இன்று வரை என்னால் முடியவில்லை!பேஸ்புக்கில் கணக்கு வேண்டுமோ,அது எனக்கு இல்லையே?அடுத்து,"டாஸ்மாக்" என்பதன் பொருள் சாராயம் அல்லவென்று ஏலவே விளக்கம் கொடுக்கப்பட்டதே,மறந்து விட்டீர்களா?//

மன்னிக்க வேண்டும் ஐயா,
டாஸ்மாக் பற்றிய விடயத்தை மறந்து விட்டேன்.
தற்போது தவறினைத் திருத்தி விட்டேன்.
வேலை பிசியிலும், அவசரத்திலும் சரி பார்க்காமல் எழுதி விட்டேன்.

சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

நேற்று முன்தினம் என்ன விடயம் என்று சொல்லவில்லையே?

நான் சொன்ன ஆங்கிலப் படமா?

அதற்கு எக்கவுண்ட் தேவை இல்லை.

யோகன் அரு... - - - -
பாரிஸ் என்று ஒரு பேஸ்புக் முகவரியினை ஐடியா மணி ப்ளாக்கிலிருந்து பார்த்தேன்.
அது நீங்கள் தான் என்று நினைத்து அட் பண்ணியிருந்தேன்.
அதான் கேட்டிருந்தேன்.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

இப்பதான் உங்கள் உண்மையான எழுத்து வன்மையைக் காண்கிறேன். தொடருங்கள்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

அந்தநாள் ஞாபகங்களைச் சொல்லிச் சென்றவிதம் அபாரம் இறுதியில் உரமாகிப்போன நம்மவர் சோகத்தைத்தொட்டு அற்புதமான படைப்பு.

காந்தி பனங்கூர் said...
Best Blogger Tips

பதிவு ஆங்காங்கே மனதை வருடி செல்கிறது. தமிழ் மணம் 17. கலக்குங்க நிரூபன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே! தொடர் சோகமா போகுது.

rajamelaiyur said...
Best Blogger Tips

//
தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips [Reply To This Comment]

மாப்ளே! தொடர் சோகமா போகுது.

//

ஆமாம்

கவி அழகன் said...
Best Blogger Tips

உள்ளேன் ஐயா

Anonymous said...
Best Blogger Tips

எங்க வீட்ல மாடு மேய்க்க தான் போவாய்னு திட்டலையேன்னு கொஞ்சம் வருத்தம்...இந்த Concrete Jungle க்கு பை பை சொல்லலாமுல்ல..

ஒரு மகேந்திரன் ..ஒரு பாலு படம் இலங்கையில பார்க்கிற மாதிரி நகருது.. உணர்வுகளின் வெளிப்பாடு...

தொடருங்கள் சகோதரம்...

Riyas said...
Best Blogger Tips

தொடருங்கள் நிரூபன்..

இணையத்தள வடிவமைப்பு அழகாகயிருக்கு,,

மகேந்திரன் said...
Best Blogger Tips

மனதை வருடும் யதார்த்தப் பதிவு
இயல்பாக செல்கிறது சகோ...
தொடர்ந்து வருகிறோம்.

shanmugavel said...
Best Blogger Tips

வாழ்க்கமுறையை அழகாக படம் பிடிப்பதோடு மனதில் சங்கடத்தையும் தருகிறது சகோ! தொடருங்கள்.

செங்கோவி said...
Best Blogger Tips

கிராமத்துக்காட்சிகள் கண்முன் விரிகின்றன நிரூ...அருமையான வர்ணனை.

செங்கோவி said...
Best Blogger Tips

எல்லா ஊர்லயும் படிக்கலேன்னா மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டுறாங்களே ஏன்?

செங்கோவி said...
Best Blogger Tips

பலே பிரபு உண்மையில் பலே பிரபு தான்.

Yoga.s.FR said...
Best Blogger Tips

மைந்தன் சிவா said...

ஓட்டிட்டேன்.////தலைநகரிலுமா?????

கோகுல் said...
Best Blogger Tips

மாடுகளை வேகங் கொள்ள வைப்பதற்காய் போதையேற்றும் குடி வகைகளை(சாராயம்) மாடுகளுக்கு பருக்குவார்கள். இக் குடிவகைகளினைக் குடித்தும் மாடு வேகமாக ஓடாது வெருளத் தொடங்குகிறது என்றால், மாட்டின் பின் பக்கத்தில் ஊசியால் குத்துவார்கள். //

பாவங்க!

ஜெயசீலன் said...
Best Blogger Tips

இப்படியெல்லாம் இருந்ததா யெம்மக்கள் இருந்த இடம்...

Yoga.s.FR said...
Best Blogger Tips

செங்கோவி said...

எல்லா ஊர்லயும் படிக்கலேன்னா மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டுறாங்களே ஏன்?/////அது படிக்காதவங்களுக்குன்னு ஒதுக்குன வேல,அதான்!

மாய உலகம் said...
Best Blogger Tips

யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.//

சேம் பிளட் மாம்ஸ்

மாய உலகம் said...
Best Blogger Tips

எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்....//

இந்த உலகமே இதற்கு என்ன பதில் சொல்ல போகிறதோ... இந்த ஆறா வடுவை எந்த வார்த்தையை சொல்லி ஆற்ற முடியும்... எத்தனை சரித்தரங்களை... இந்த கொடூர தரித்திரங்கள் கொன்று குவித்துவிட்டனவே..... இறைவன் ஒருவன் உண்டென்றால்... நல்லோர்களின் வாக்குகள் உண்மையென்றால்.... ஆத்மாக்கள் இருப்பது உண்மையென்றால் தீங்கிழைத்தவர்கள் எக்காலத்திற்கும் விமோசனம் இல்லாமல் அழிவை மேற்கொள்ளட்டும்.... இந்த எச்சக்களையால் வேறு என்ன சொல்ல முடியும் நண்பா....

மாய உலகம் said...
Best Blogger Tips

இன்றைய பதிவில் அறிமுகமான சகோதரன் சாருஜன் அவர்களின் முனைங் வலைப்பூவிற்க்கு வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

நம்மையும் கூட்டிச் செல்லும் நினைவலைகள்....

sarujan said...
Best Blogger Tips

நன்றி சகோதரா என்னை அறிமுகப்படுத்தியமைக்கு

sarujan said...
Best Blogger Tips

((ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் பட்டமேற்றல் ஒரு தனித் திருவிழாப் போன்று கொண்டாடாப்படும்)) எனது ஊரில் நடை பெரும் அந்த நினைவை மீட்டிப் பார்த்தேன் மிகவும் பசுமையாக உள்ளது . பதிவு அருமை அனைத்து நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளது

sarujan said...
Best Blogger Tips

கந்தசாமிக்கு எனது நன்றி

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

வேதனையான பதிவு.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

@ரெவெரி

பாலு பிறந்து வளர்ந்தது இலங்கை, மட்டக்களப்பில் :-)

Mathuran said...
Best Blogger Tips

பட்டம் விடுவது ஒரு தனி சுகம் பாஸ்.. அருமையா எழுதி இருக்கிறீங்க.. பழைய நினைவெல்லாம் அப்பிடியே கண்ணுக்கு முன்னால நிக்குது

Mathuran said...
Best Blogger Tips

பட்டம் விடுவது ஒரு தனி சுகம் பாஸ்.. அருமையா எழுதி இருக்கிறீங்க.. பழைய நினைவெல்லாம் அப்பிடியே கண்ணுக்கு முன்னால நிக்குது

Mathuran said...
Best Blogger Tips

//வயற்காரன் கண்ணில் நெற் கதிர்களை மிதிப்பது தட்டுப் பட்டால்(தென் பட்டால்), அதன் பின்னரான நிலமை சூர சங்காரமாகத் தான் இருக்கும். //

ஹா ஹா ரொம்பவே அனுபவம் இருக்கு பாஸ்

Mathuran said...
Best Blogger Tips

//யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.//

அடிக்கடி நான் கேட்ட வார்த்தை பாஸ் இது.. ஹி ஹி

Mathuran said...
Best Blogger Tips

அருமையான பதிவு பாஸ்.. மீண்டும் அந்த நாட்களுக்கே போய் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு.. தொடர்ந்து எழுதுங்கள்.

இப்போது எங்கள் பாரம்பரியங்கள் எல்லாமே தொலைந்துபோய்விட்டதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது

Mathuran said...
Best Blogger Tips

சாருஜனுக்கு வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...
Best Blogger Tips

மலரும் நினைவுகளில் மயங்கிவிட்டேன். நன்றி.

Mohammed Sajeer said...
Best Blogger Tips

Intha idathithil valavendum pol ullathu.....

unmayaha solla veandum endral antha suhathai naan anupaviththathe illai!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails