Thursday, September 22, 2011

தமிழக உள்ளூராட்சித் தேர்தலும், தத்தளிக்கும் உதிரிக் கட்சிகளும்!

மீண்டுமோர் அந்தரங்க நாடகம்
எம் தெருக்களிலும்,
உக்கிப் போன சுவர்களிலும்
அரங்கேறத் தொடங்கியிருக்கிறது!
ஒவ்வோர் தடவையும் 
தேர்தல் பருக்கைகள் 
எறியப்படும் போது
தம் எச்சில் கையால் வணக்கமிட்டு
ஏழைகளின் வாக்கினை நோட்டமிட்டு
மக்கள் பணியில் மகத்துவமுடையோராய்
நாட்டம் கொண்டு நிரூபனின் நாற்று வலை
பச்சோந்திகளாய் வாசல் தேடி வந்து
பரமபத கூத்தடிக்கும் அரசியல்வாதிகள்-இன்று
உள்ளூர் வேட்பாளர்கள் ஊடாக
வாக்குரிமை கேட்டு வாங்குதற்காய்
வாசல் நோக்கி வருகிறார்கள்!
"இலவசங்கள் கொடுத்தோம்,
ஈடு இணையில்லாத சேவைகளை
இப்போது மக்களுக்கு கொடுக்கின்றோம்"
என இனிமையான
மொழி பேசிக் கொண்டு வருவதனால் 
இம் முறை www.thamilnattu.com
அதிமுக பக்கம் அதிக வெற்றியென்று
எங்கோ அசரீரீ கேட்கிறது
அதன் பின்னே செவிமடுக்கையில்
பல அவலக் குரல்களும் ஒலிக்கின்றது!

டைந்த கட்சியை ஒட்ட வைக்கும் திமுக

கண்களில் நீர்வராக் குறையாக 
இப்போது கலைஞரின் நிலை!
ஆட்டத்தில் இன்னும் 
அசராமல் ஆடிக் கொண்டிருக்கும்
அசாத்திய மனோ நிலை!
நம்பினேன் கனிமொழியை
நாளை நம் மாநிலத்தின்
கவர்னராய் ஆக்கலாம் என
மனச் சிறையில் வெம்பினேன்;
என் ஆசையோ திஹாரின் 
கொடுஞ் சிறையில்
நிராசையாய் ஆகி விட்டதே!
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
கட்சியும் உடைந்து போய்
கானகம் செல்லும் நிலையில்
காத்திருந்த கலைஞரின்
எஞ்சியுள்ள மானத்தை
ஸ்பெக்ட்ரம் ஊழலோ
ஸ்டில் போட்டுக் காண்பித்தது!

செம் மொழி மூலம்
மக்களின் மனதை மயக்க
கவிதை பாடி நிரூபனின் நாற்று வலை
 உள்ளூர்த் தேர்தலில்
என் கட்சியும் வெற்றியீட்டும்
எனும் நம்பிக்கை கொண்டோனாய்
வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன்!

தனித்துப் போட்டியிடுகின்றோம்
தமிழை வைத்துப் பிழைத்திடுவொம்!
உள்ளூராட்சியில் வென்று
ஸ்பெக்ட்ரம் மூலம் சிபிஐ
உருவிய கோவணத்தை
மீட்டெடுத்து
திமுகவிற்கு வேகம் 
கொடுக்கிறேன் பார்த்திருங்கள்!!


சரமால் களமிறங்கும் அதிமுக!

இலவசமாய் ஏகப்பட்ட
பொருள் கொடுத்தோம்
அதற்குப் பரிகாரமாய் 
மக்கள் மனங்களினை
பரவசமாய் வென்று விட்டோம்,
இன்னும் ஐந்தாண்டென்ன 
அடுத்த காலாண்டிற்கு
அரியணை எம் பக்கம் தான்;

லாப்டோப் கொடுத்தோம்,
லட்சுமிகடாட்சம் பெற்று
மங்கையர் வீட்டில் மகிழ்ந்திட
லட்சம் லட்சமாய்
மிக்ஸிகள் கொடுத்தோம்,
சின்னத்திரை கேபிள் வசதியை
எளிமையாக்கி
சிறந்த குல மாதரை
சீரியல் மூலம் கெடுத்தோம்!

ஈழ மக்கள் விடயத்திலும்
இன உணர்வு கொண்டோராய்
இன்று நாம் பிறந்து விட்டோம்,
இனிமேல் வெற்றி எம் பக்கமே,
திமுக நிலையோ துன்பக் கதையே!
தனித்துப் போட்டியிட்டு நிரூபனின் நாற்று
இரட்டை இலையின் வாசத்தை
மணக்கச் செய்வோம்!
தமிழகமெங்கும் தலைவியின் பெயரால்
உணர்சிக் கவிதை பாடுவோம்!!

திரிக் கட்சிகளின் உல்டாக் காமெடி!

அரசியல் சதுரங்க நாடகத்தில்
நாம் தான்
அனைவரையும்
சிரிக்க வைக்கும்
காமெடி நடிகர்கள்!
தனித்துப் போட்டியிட்டு
வெற்றி பெறுவோம் என
பெருத்த கட்சிகள் கூச்சலிட்டாலும்,
எம்மை விலக்கி நாற்று வலைப் பதிவு
வைத்து விட்டு
வெற்றியீட்டல் சாத்தியமாகுமா?

தமிழகமே திரண்டு
ஆளுங் கட்சிக்கு ஓட்டளித்தாலும்
எங்கள் ஆதரவு இல்லையேல்
ஆளுங் கட்சியும்
நிலைத்து வாழும்
நிலையதனை இழந்து விடும்!

அடிக்கடி பஞ்ச் வசனம் சொல்லி
சட்ட சபையை அதிர வைப்போம்,
அண்ணன் வைகோவும், ராமதாஸுடனும்
இணைந்து அசத்தலாய் நிரூபனின் நாற்று வலை
காமெடி சீன் அரங்கேற்றி
அனைவரையும் சிரிக்க வைப்போம்!
************************************************************************************************************************
இன்று பதிவர் அறிமுகம் பகுதி பன்முகத் திறமை கொண்ட ஓர் வலைப் பதிவரினைப் பற்றிய அறிமுகத்தினைத் தாங்கி வருகின்றது. பதிவுலகிற்குப் புதியவராகவும், அதே வேளை ப்ளாக்கர் டிப்ஸ், பதிவர்களுக்குத் தேவையான தொழில் நுட்பத் தகவல்கள், அரசியல்- சமூக நலன் சார் விடயங்களைத் தன் வலையில் பகிர்ந்து வரும்; "வைரை சதிஷ்" அவர்களின் வலைப் பூவினைத் தான் இன்று நாம் தரிசிக்கப் போகின்றோம். 

வைரை சதிஷ் அவர்களின் வலைப் பதிவிற்குச் செல்ல:
http://vairaisathish.blogspot.com/
****************************************************************************************************************************

69 Comments:

Mathuran said...
Best Blogger Tips

அப்பாடா இன்னிக்காவது முதலாவதா வந்தமே,,,

இருங்க படிச்சிட்டு வாறன்

Mathuran said...
Best Blogger Tips

////கண்களில் நீர்வராக் குறையாக
இப்போது கலைஞரின் நிலை//

நேரம் வரும்போது அதுவும் வரும் பாஸ்

Mathuran said...
Best Blogger Tips

////கண்களில் நீர்வராக் குறையாக
இப்போது கலைஞரின் நிலை//

நேரம் வரும்போது அதுவும் வரும் பாஸ்

Mathuran said...
Best Blogger Tips

//தனித்துப் போட்டியிடுகின்றோம்
தமிழை வைத்துப் பிழைத்திடுவொம்!//

தமிழ் ஒன்றுதானே அவருக்கு வாழ்வாதாரம்

காட்டான் said...
Best Blogger Tips

கலக்கலான கவிதை மாப்பிள.. வாழ்த்துக்கள்.. இப்ப இந்த தேர்தல்கலெல்லாம் ஊழல் செய்வதற்கு பிரதிநிதிகளை தேர்தெடுப்பது போலாகிவிட்டது.. என்ன இருந்தாலும் திமுக நாங்க எதிர்பார்பதை விட அதிக இடங்களை வெல்லுமென்றே நினைக்கிறேன்.. ஏனென்றால் அவர்களுக்கு ஒவ்வொரு ஊர்களிலும் மக்களுக்கு தெரிந்த தலைவர்கள் இருக்கிறார்கள் அம்மா கட்சியில் அப்படி ஒரு தலைவர்களை வளர விடுவதில்லை.. இந்த தேர்தலில் அந்தந்த ஊர் பிரச்சனைகளே முன்வைக்கபடும்.. ஆகையால் அதிகமான சுயேச்சைகளும் வெல்வார்கள்.. மற்ற கட்சிகளுக்கு அல்வா காத்திருக்கின்றது.. ஹி ஹி ஹி

Unknown said...
Best Blogger Tips

அருமை நிரூ

எதுகை மோனையில் உங்கள் வார்த்தை விளையாட்டில் கொஞ்சம் தமிழக நிலவரத்தையும் சொன்ன விதம் அருமை

காட்டான் said...
Best Blogger Tips

இந்த தேர்தலில் தமிழை வைச்சும் பிழைக்க முடியாது.. ஈழ தமிழரை வைச்சும் பிழைக்க முடியாது.!!!!

Mathuran said...
Best Blogger Tips

என்னமோ.. தமிழக சினிமா ஒரு டிவி சீரியல் போல விட்டகுறை தொட்டகுறையாவே போய்க்கிட்டிருக்கு

அது கிடக்கட்டும்.. அந்த முதலாவது போட்டோவில இருக்கிறது யார்

Unknown said...
Best Blogger Tips

கருத்து சொல்லீட்டேன்..

தமிழ்மணம் இன்னும் இணைக்க முடியலை ஓட்டு அப்பறமா

Mathuran said...
Best Blogger Tips

வைரை சதீஸூக்கு வாழ்த்துக்கள்

maruthamooran said...
Best Blogger Tips

////தேர்தல் பருக்கைகள்
எறியப்படும் போது
தம் எச்சில் கையால் வணக்கமிட்டு
ஏழைகளின் வாக்கினை நோட்டமிட்டு
மக்கள் பணியில் மகத்துவமுடையோராய்
நாட்டம் கொண்டு நிரூபனின் நாற்று வலை
பச்சோந்திகளாய் வாசல் தேடி வந்து
பரமபத கூத்தடிக்கும் அரசியல்வாதிகள்-இன்று
உள்ளூர் வேட்பாளர்கள் ஊடாக
வாக்குரிமை கேட்டு வாங்குதற்காய்
வாசல் நோக்கி வருகிறார்கள்!/////

யதார்த்தமான வரிகள் நிரூ...!

தேர்தல்கள் மக்களை அதிகம் ஏமாற்றியே வந்திருக்கிறது. எப்போதாவது மக்கள் சுதாகரித்துக் கொள்கிறார்கள்.

சில நாட்களுக்குப்பின்னார் மிகவும் அருமையான பதிவு நிரூவிடமிருந்து!!

shanmugavel said...
Best Blogger Tips

நல்லாருக்கு!எப்போ எழுதுனீங்க!பழசா? தமிழ்மணத்துல இணைச்சா புது இடுகைகள் காணப்படவில்லைன்னு வருது!

காட்டான் said...
Best Blogger Tips

கண்களில் நீர்வராக் குறையாக

இப்போது கலைஞரின் நிலை!

ஆட்டத்தில் இன்னும்

அசராமல் ஆடிக் கொண்டிருக்கும்

அசாத்திய மனோ நிலை!

ஆமா மாப்பிள நாங்க எதை அவரிடம் இருந்து எடுக்கிறோமோ இல்லையோ இந்த வயதிலும் அசராத அவரின் உழைப்பை பின்பற்றலாம்..!!!??

மாய உலகம் said...
Best Blogger Tips

நண்பர் வைரை சதிஷ்க்கு வாழ்த்துக்கள்

Anonymous said...
Best Blogger Tips

ஜெயா back to form...நீங்களும் தான் சகோதரம்...

Anonymous said...
Best Blogger Tips

வைரை சதீஸூக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...
Best Blogger Tips

:)) :((

shanmugavel said...
Best Blogger Tips

வெற்றி வெற்றி தமிழ்மணம் இணைச்சுட்டேன்.ஓட்டும் போட்டுட்டேன்.

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ??

Unknown said...
Best Blogger Tips

உள்ளூராட்சி தேர்தல் என்பதால் மாநகராட்சிகள் தவிர, இந்த தேர்தல்களில் பெரும்பாலும் கட்சி சார்பு பலர் பார்ப்பதில்லை.நேரடியாக ஒட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூராட்சி வேட்பாளர்களில், நன்கு செயல் படுபவர்கள் பெரும்பாலும் கட்சி சார்பின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.மற்ற சில காரணிகளும் இதில் உண்டு.

M.R said...
Best Blogger Tips

அரசியல் சூழ்நிலையை கவிதையாய்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...
Best Blogger Tips

நண்பர் வைரை சதீஷ்க்கு வாழ்த்துக்கள்

காட்டான் said...
Best Blogger Tips

வைரை சதிஷ்க்கு வாழ்த்துக்கள்...

செங்கோவி said...
Best Blogger Tips

இந்தத் தேர்தலில் கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

செங்கோவி said...
Best Blogger Tips

ஜெ. ஆளுங்கட்சியாக இருப்பதால், யார் தயவும் தேவையில்லை என்று நினைக்கின்றார்.

SURYAJEEVA said...
Best Blogger Tips

ஒரே குஷ்டமப்பா... அந்த 49 'o' எங்க அப்படின்னு தான் தேடிகிட்டு இருக்கு மனசு

செங்கோவி said...
Best Blogger Tips

//நம்பினேன் கனிமொழியை
நாளை நம் மாநிலத்தின்
கவர்னராய் ஆக்கலாம் என
மனச் சிறையில் வெம்பினேன்;//

அது தானே எல்லா அழிவுக்கும் அடிப்படை.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வேதனையும் கோபமும்தான் வருகிறது என்னாத்தை சொல்ல...!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

தமிழ்நாடு இவர்களால் நாரிப்போயி கிடக்கு!!!!

Unknown said...
Best Blogger Tips

தேர்தல் பற்றிய கவிதை என்பதாலோ என்னவோ அத்தனை நவரச சுவைகளும் கவிதையில் விரவி கிடக்கின்றன.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஓட்டு போட்டாச்சு ஹே ஹே ஹே...

Yoga.s.FR said...
Best Blogger Tips

உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி வேண்டியதில்லை!ஏனெனில்,அந்த,அந்த ஊரில் பரிச்சயப்பட்டவர்களே அனேகமாக தேர்வு செய்யப்படுவது உண்டு!ஊர்ப் பிரச்சினை தெரிந்திருப்போருக்கே வாய்ப்பு அதிகம்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

இந்த(கொலைஞர்)சகாப்தம் முடிந்தது!

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பஸ் ))

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பஸ் ))

Anonymous said...
Best Blogger Tips

///மீண்டுமோர் அந்தரங்க நாடகம்
எம் தெருக்களிலும்,
உக்கிப் போன சுவர்களிலும்//ம்ம் உக்கி நவிந்து பிய்ந்து போய் எல்லோ கிடக்கிறது இவர்கள் பாதம் பட்டு

Anonymous said...
Best Blogger Tips

///ஆட்டத்தில் இன்னும்
அசராமல் ஆடிக் கொண்டிருக்கும்
அசாத்திய மனோ நிலை!// அவர் எங்கே ஆடுகிறார், அது தானாய் ஆ(ட்)டுது

Anonymous said...
Best Blogger Tips

///சின்னத்திரை கேபிள் வசதியை
எளிமையாக்கி
சிறந்த குல மாதரை
சீரியல் மூலம் கெடுத்தோம்!/// பாருங்கோ நக்கலை )))

Nirosh said...
Best Blogger Tips

நியாமான முறையில் கவிநயம் வாழ்த்துக்கள்...!

--------------------

"ஒரு பிரபல பதிவாளர் பற்றிய ம் ஆ.. பதிவு" காண எனது வலைத்தளம் வாருங்கள்.

http://skavithaikal.blogspot.com/2011/09/blog-post_8105.html

நட்புடன்,
நா.நிரோஷ்.

Anonymous said...
Best Blogger Tips

///அடிக்கடி பஞ்ச் வசனம் சொல்லி
சட்ட சபையை அதிர வைப்போம்,
அண்ணன் வைகோவும், ராமதாஸுடனும்
இணைந்து /// ம்ம் வைக்கோவிடம் இதை எதிர்பார்க்கலை (((

எப்பிடி இருக்க வேண்டிய மனுஷன் ....!

Anonymous said...
Best Blogger Tips

புது பதிவருக்கு வாழ்த்துகள் ..

தனிமரம் said...
Best Blogger Tips

அம்மாவிற்குத்தான் ஆதரவு ஆட்சியில் இருப்போர்தானே வெற்றியீட்டுவது இயல்பு!
பாவம்தாத்தா கட்சியையும் விடமுடியாது கனிமொழியையும் விடமுடியாது தவிப்பு!
கூட்டனிகள் எப்போதும் கூத்தனிதான்!

தனிமரம் said...
Best Blogger Tips

சகபதிவாளருக்கு வாழ்த்துக்கள்!

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்!ஒருத்தர் விடாம போட்டுத்தாக்கிட்டிங்க
போங்க!

கோகுல் said...
Best Blogger Tips

அவர் வைரை சதீஷ் அல்ல,"வைர" சதிஷ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

மொத்தத்தையும் கிழிச்சிட்டீங்களே?

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பிட்டு கட்சிகளை புட்டு வச்சுடிங்களே...

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

இன்றைய அறிமுக சதீஷ்க்கு வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

கவிதைகளும் கார்ட்டூன்களும் கலக்கல் சகோ...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

50

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

அதிலும் கலைஞ்சறு YES WE CAN சொல்ற கார்ட்டூன் செம...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

வைரை சதீஷ் என்னுடைய வலைப்பூவில் உயர்திரு 420வது ஆளாக இணைந்தவர்... அவருக்கு எனது வாழ்த்துக்கள்...

K said...
Best Blogger Tips

மச்சி, அசத்தலோ, அசத்தல்! கவிஞராகிட்டே! வாழ்த்துக்கள்!

உணவு உலகம் said...
Best Blogger Tips

ஆத்தாட், அரசியல் களம் இறங்கியாச்சா?

cheena (சீனா) said...
Best Blogger Tips

அனின் நிரூபன் - வைரை சதீஷிற்கு நல்வாழ்த்துகள் - நல்லதொரு பணியினைச் செய்து வருகிறார். ஊராட்சித் தேர்தல் பற்றிய நாட்டு நடப்பின் கவிதை அருமை. உள்ளதை உள்ளபடி சொல்லும் கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

KANA VARO said...
Best Blogger Tips

அரசியலுக்கு ஒரு கவிதை.. பலே

நிரூபன் said...
Best Blogger Tips

@cheena (சீனா)
அனின் நிரூபன் - வைரை சதீஷிற்கு நல்வாழ்த்துகள் - நல்லதொரு பணியினைச் செய்து வருகிறார். ஊராட்சித் தேர்தல் பற்றிய நாட்டு நடப்பின் கவிதை அருமை. உள்ளதை உள்ளபடி சொல்லும் கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

வாங்கோ சீனா ஐயா,

முதன் முறையாக என் வலையில் கருத்துக்களைப் பதிந்திருக்கிறீங்க.
உங்களைன் அன்புடன் வரவேற்கிறேன்.

உங்களின் மேன்மையான கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள் ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran

கவிதைகளும் கார்ட்டூன்களும் கலக்கல் சகோ...//

பாஸ்...
மன்னிக்க வேண்டும்,
கவிதை மாத்திரம் என்னுடையது,


கார்ட்டூன்கள் அனைத்தும் கூகிள் ஆத்த செஞ்ச புண்ணியத்தில் தேடி எடுத்தவை.

Unknown said...
Best Blogger Tips

உங்களது கவிதைகள் சூப்பர் நண்பா

என்னை இந்த பதிவுலகில் அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி நண்பா

Mahan.Thamesh said...
Best Blogger Tips

கவிதையும் படங்களும் அருமை சகோ

Mahan.Thamesh said...
Best Blogger Tips

நண்பர் வைரை சதீஷ்க்கு வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் said...
Best Blogger Tips

ஓட்டு கேட்கும் ஓநாய்களை காய்ச்சியெடுத்த விதம் அருமை நண்பரே.

Unknown said...
Best Blogger Tips

மாப்ள அழகுற கொட்டிய கா விதை(!) நச்!...அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

சூப்பர் பாஸ்...........நல்லா சொல்லி இருக்கீங்க...........

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நச்சென்று தமிழக அரசியல் நிலவரம் அசத்திட்டிங்க.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வரவர உங்க எழுத்துநடை மெருகேறீட்டுவருகிறது. வாழ்த்துக்கள்

aotspr said...
Best Blogger Tips

உங்கள் கவிதை சூப்பர்.அனைத்தும் உண்மை.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Unknown said...
Best Blogger Tips

என்னை இந்த பதிவில் அறிமுகப்படுத்தியதற்க்கும்,இந்த பதிவுலகத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கும்
நன்றி நீருபன் அண்ணா.

மற்றும் என்னை பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

வரவர உங்க எழுத்துநடை மெருகேறீட்டுவருகிறது. வாழ்த்துக்கள்//

உங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பும், ஊக்கமும் தான் இதற்கெல்லாம் காரணம் ஐயா.

மிக்க நன்றி.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails