Monday, September 16, 2013

என்னது அம்மா குடிநீரா? ஜெயலலிதாவின் கேவலங் கெட்ட செயல்!


தமிழக அரசியலில் அம்மா ஜெயலலிதாவின் அதிரடிப் புரட்சி! அம்மா குடிநீர்! 

சின்ராசு: ஏலேய் செல்ராசு ஒனக்கு ஒரு லேட்டஸ் நியூஸ் தெரியுமா?
செல்ராசு: என்ன மாம்ப்ளே? சொன்னாத் தானே புரிஞ்சுக்கலாம். 
சின்ராசு: மார்க்கட்டில இப்போ அம்மா குடிநீருன்னு புதுசா வந்திருக்காமில்லே
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

செல்ராசு: என்ன இலவசமா கொடுக்கிறாங்களா? கூறு கெட்ட பயலே! நீ காசு கொடுத்து தான் வாங்கனும்! 
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

இனி விடயத்திற்கு வருவோம்! 

உலக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஓர் அதிரடிப் புரட்சி செய்திருக்கிறார் தமிழகத்தின் தங்கத் தலைவி செல்வி ஜெயலலிதா! ஒரு நாட்டில் எவ்வளவு மக்கள் தொகை என்பதை உணர்ந்து, அம் மக்கள் மத்தியிலிருந்து எப்படிப் பணத்தை வாரிச் சுருட்டலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக அம்மா குடிநீரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் மான்பு மிகு செம்மல் ஜெயலலிதா! இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

பல நாடுகளிலும் குடி நீரை நாம் காசு கொடுத்து வாங்கும் நிலை இருந்தாலும் குடிநீர் விநியோகத்தில் எந்த ஒரு அரசும் நேரடியாக வியாபார தந்திரங்களை நுழைப்பதில்லை! நீர்ப்பாசன, குடி நீர் சபை ஊடாகத் தான் இப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்! 
தண்ணீருக்குத் தமிழகத்தில் பஞ்சமா? என எல்லோரும் வியக்கும் வண்ணம் அம்மா குடிநீரை அறிமுகப்படுத்தியுள்ளார் செல்வி! பலருக்கும் பயன்படும் வண்ணம் பொதுச் சேவையாக ஒரு நன்னீர் விநியோகத் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் மக்களும் சந்தோசமடைவார்கள்! நாடும் செழிக்கும்! அடப் போங்க மக்கள்ஸ், 

மக்கள் பணத்தை எவ்வாறெல்லாம் சுருட்டலாம் என்பதற்கு இந்த அம்மா குடி நிரூம் ஓர் உதாரணம்!

இன்னும் கொஞ்ச காலத்தில் அம்மா மின்சாரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை!

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails