Thursday, September 26, 2013

நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங்கப்பட்ட இன்னோர் முகம்!

கோடம்பாக்க வரலாறு பல நடிகைகளின் வாழ்வைக் குழி தோண்டிப் புதைத்திருப்பதாக கூறுகிறார்கள். சினிமாவில் ஜொலித்தால் பேரும் புகழும் எப்படிக் கிடைக்குமோ, அதே போல சில விடயங்களை விவகாரமாக்கினால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கண் முன்னே பல நடிகைகளின் பெயர்கள் வந்து போகும். 

ஏற்கனவே டர்ட்டி பிக்ஸர் என்றும், ஒரு நடிகையின் வாக்கு மூலம் என்றும் இருவேறு பட்ட நடிகைகளின் துன்பம் நிறைந்த வாழ்வியலைப் பற்றிப் பேசுகின்ற படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் டர்ட்டி பிக்ஸர் சில்ஸ் ஸ்மிதா பற்றி நிறையவே சொல்லிச் சென்றது. 

இவ் வரிசையில் வந்திருக்கும் படம் தான் ‘ஒரு நடிகையின் வாக்கு மூலம்”. கிராமத்திலிருந்து வந்து ஒரு நடிகையின் வீட்டில் அம்மாவும், மகளும் பணி புரிகிறார்கள். அந்த நடிகையுடன் அட்ஜஸ்ட்மெண்ட் வேண்டி இயக்குனர் நடிகை வீட்டிற்கு வருகிறார். வரும் போது அவ் நடிகையின் வீட்டில் வேலையாட்களாக இருக்கும் அம்மாவையும் மகளையும் பார்க்கிறார். அப்புறம் சினிமாவில் நீங்க நடிச்சால் நன்றாக இருக்குமே என ஆசை வார்த்தை சொல்லி விட்டுச் செல்கிறார். 

நம்மாளுங்க சும்மாவே பட்டாம் பூச்சி மனசினுள் பறக்க - ரெக்கை கட்டிப் பறப்பதில் திறமையானவங்க. இவ் வரிசையில் ஒருத்தர் உசுப்பேத்தினால் சொல்லவா வேண்டும்? நடிகையின் வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் அம்மாவிடமும், சக நண்பரிடமும் அந்த நடிகையின் நடத்தை பற்றி பப்ளிஷிட்டி பண்ணுகிறார் கிராமத்துப் பைங்கிளி. 

அப்புறம் என்ன கிராமத்துப் பைங்கிளியும், அம்மாவும் வீட்டை விட்டு விரட்டப்படுகிறார்கள். பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்து நடிகையாகிறார் கிராமத்துப் பைங்கிளி. அப்புறம் ஓர் தொழிலதிபர் வலையில் விழும் நடிகையின் வாழ்வில் தொழிலதிபரின் மகன் குறுக்கிடுகிறார். 
நடிகை - தொழிலதிபர் - அவர் மகன் என போராட்டம் நிறைந்த கதைக் களத்தில் நடிகைக்கு என்ன ஆகிறது என்பதே படத்தின் மையக் கதை. 

லோ பட்ஜெட்டில் ரொம்பவே சினிமா யதார்த்தத்தினைச் சொல்லியிருக்கிறார்கள். சூடான காட்சிகள் அதிகம் நிறைந்த படம். 
படத்தின் ட்ரெயிலரை இங்கே இணைத்துள்ளேன். படம் பார்க்க விரும்புவோர் யூடியூப்பில் தேடினால் பார்க்கலாம். 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails