Sunday, September 15, 2013

கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்!

ஆத்திரத்தால் நாத்திறத்தை இழந்த அபலை!

அவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான். அவளோ அவனைத் திரும்பித் திரும்பி முறைத்துப் பார்த்தபடி நடந்தாள். சன நடமாட்டமற்ற ஒரு வீதியின் திருப்பம் வர அவன் அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். "ஹலோ சாருகா!! உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" எனச் சொன்னான். 
"ஏன் சனியனே ஒனக்கு இன்னைக்கு வெட்டி வேலை ஏதும் கிடைக்கலையே? ஏன் எனக்குப் பின்னாடி அலைஞ்சு என்னோட மானத்தை வாங்குறாய்? யாராச்சும் அறிஞ்சவங்க, தெரிந்தவங்க பார்த்திட்டா என்னா நினைப்பாங்க? நீர் அக்கா தங்கச்சியோடை பிறக்கலையா? இவ்வாறாக பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசி முடித்தாள்! (நன்றி சூரியன் எப்.எம் - தமிழ்நாடு)
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

அவன் ஒரே ஒரு வார்த்தை சொன்னான். ‘’போதும் நிறுத்தும்! நீரும் உம்மட வாய்ப் பேச்சும்! நீர் ஏதோ பெரிய சீன் காட்டிப் பேசிட்டு போறீரே? உமக்கும் நெனைப்புத் தான். நான் உமக்குப் பின்னாடி அலைவேன் என்று. அந்த மவுண்ரோட் ஜங்கசினில உம்மடை பர்ஸை விழுத்திட்டுப் போயிட்டீர். அதான் எடுத்திட்டு உமக்கு பின்னாடி குடுக்கலாமேன்னு வந்தேன். இந்தாரும் பிடியும். நீரும் உம்மடை பர்சும்! இவ்வாறு சுலக்‌ஷன் பேசி முடித்தான். அவள் நன்றி என்றோ, மன்னியுங்க என்றோ ஓர் வார்த்தை கூட பதிலுரைக்க முடியாதவளாக மௌனித்து நின்றாள்!
***************************************************************************************************************************
பக(கி)டியும் பாவையும்!
அது ஒரு அழகிய சோலை. அவள் மட்டும் அங்கே தனித்திருக்கிறாள். "இந்த ஆம்பளைங்க குணமே காக்க வைக்கிறது தான். எம்புட்டு வீராப்பு பேசி, நீ டைம்முக்கு வாடி! நான் உனக்கு முன்னாடி வந்திருப்பேன்! அப்படீன்னு ஒன்னுக்கு பத்துவாட்டி போனில சொல்லியிருப்பாரு. ஆனா நான் ஒருத்தி இங்க வந்து காத்திட்டு இருக்கேன். இந்தப் பாவி புள்ள இன்னுமா வரலை" என தனக்குள் தானே சினந்து கொண்டாள் சுடர்மினி.

ஓ! சாரி! சுடர் செல்லம்! நான் வர கொஞ்சம் லேட்டாகிட்டு. வர்ற வழில, இன்னைக்கு ரோட் ஒர்க் நடக்கிறதால, சத்திரம் சந்தியை சுத்தி தான் வந்திச்சு. ரொம்ப ட்ராபிக் அந்தப் பக்கமா இருப்பதால லேட்டாகிட்டுதடா செல்லம்!" என தன் ஆசைக் காதலி சுடரைத் தேற்றியவாறு, அருகே சென்று ஆவலுடன் அணைக்கச் சென்றான் அங்குசன்.

வேணாம்! என அவன் கையை உதறினாள் சுடர்! இல்லைங்க! பரவாயில்லைங்க! நீங்க முன்னாடி இருந்து சொல்லிட்டு வர்ற பொய்களில் இதுவும் ஒன்னு தானேங்க? எனச் சினந்து, வார்த்தைகளைப் பொரிந்து தள்ளினாள் சுடர். 
நான் பொய் சொல்லுறேனா? சிறுக்கி! என்னா பேச்சு பேசுறே! உன்னைப் போல ஒரு பெரிய பொய்யைத் தினமும் என்னோட புத்தகத்தினுள் அம்மாக்குத் தெரியாம மறைச்சு வைச்சுப் பார்க்கிறேனே? அதனை விட இது பொய்யா? அடேய்! கள்வா! படவா! ராஸ்கல்! என்ன சொல்றாய்? எனக் எதிர்க் கேள்வி கேட்டாள் அவள். இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

அவன் சாந்தமாய் அவளைத் தேற்றத் தொடங்கினான்."சுடர்! நீங்க சிரிச்சிட்டிருக்கிறத பார்க்கிறப்போ எப்படியிருக்கு தெரியுமா? 
எப்படி இருக்கு என்று நீங்க சொன்னா தானேங்க தெரியும். "அடுப்பில அப்பளம் பொரிக்கிறப்போ, சத்தம் வர்ற மாதிரி இருக்குங்க." என கிண்டலாய் ஓர் பதிலுரைத்தான் அங்குசன்.
"உனக்குக் கொழுப்படா மவனே! நாக்கறுந்திடும் கவனம்!!" என அங்குசனின் நாவின் சுவையினை உதட்டு முத்தம் மூலம் அறியத் துடித்தாள் அவள். 

இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails