Wednesday, September 18, 2013

அம்மா வாட்டரால் அவதியுறும் ஜே - கருணையின்றி கலங்கும் கனி மொழி!

ருணையின்றி கலங்கும் கனிமொழி!
நிரூபனின் நாற்று வலை
ஆப்பர் கொடுத்தேன்
முதலில் வருவோருக்கு
முன்னுரிமை அடிப்படையில்
முற்பணக் கேள்வியின்றி
அலைக் கற்றையினை 
அரை விலையில் கொடுத்தேன் - அப்பன் 
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது
ஏல அடிப்படையில்
எல்லோருக்கும் பங்குகளை கொடுத்தேன்!

இன்று அரசியலில் ஜொலிக்க முடியாது
அனுதினமும் அழுகின்றேன்!
தப்புச் செய்தவன் தண்ணி குடிக்கனுமாம்
யாரோ ஒரு ஆன்றோன் தமிழில்
எழுதி வைத்து விட்டு போய் விட்டான்,
அப்பன் சொற் கேட்டு ஆட்டையை போட நினைத்து
வெப்பம் மிகுந்த திஹாரில் வெம்பி வாடினேன்
ஜாமீன் கேட்டு ஏமாந்து நொந்தேன்!

இப்போ திமுக அரசியலில்
கருணை கிடைக்காதா என ஏங்குகிறேன் ஏன்?

திரையின்றி கவலையுறும் கலைஞர்!
தூக்கமில்லை! 
கொஞ்ச நாளாய்
என் கற்பனையில் 
ஏதும் தோன்றவில்லை!
ஆட்சிக் கதிரை மட்டும்
அடியேனின் நினைப்பை விட்டு
இன்னும் அகலவில்லை!
உயிர் போகும் நிலை வரின்
பதவியிலே உட்கார்ந்திருக்கையில்
சட்டமன்றக் கதிரையிலே
போக வேண்டுமென எண்ணியிருந்தேன்!
ஆனால் என் கட்சியின் பெயரால்
கரன்சியில் கொள்ளை செய்து
கதிரைக்கும் வைத்து விட்டார்களே ஆப்பு!
ஊழலிலே உலகளாவிய ரீதியில் நாம
தான் டாப்பு என இப்போது பேச்சு! 
மகளைப் பிரிந்த துயர் ஒரு புறம் வாட்டிற்று
ஈழம் பற்றி நான் ஈனப் பிழைப்பு செய்திருக்க
என் பேரன் உதயநிதியோ
ஆளும் தமிழினம் ஏழாம் அறிவில்
அறிக்கை வேறு விட்டிருக்கானே!
முடியலையே! தமிழ்த் தாயே! 
நான் வாடுகிறேன்!
முந்த நாள் பதவி வந்த ஜே செய்யும்
செயல்களால் நொந்து அறிக்கை விட 
வார்த்தைகளைத் தேடுகிறேன்!
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
பாட நோட்டுப் புக்கில் 
என் பெயரை புகுத்தி
தமிழ்க் கவி இதுவென
சுவைக்கச் சொன்னேன் 
அம்மா ஜெயலலிதா இப்போது 
என் பெயரைத் தேடி வைக்கும்
வேட்டினை எதிர்க்க வழியின்றி 
வெம்பி வாடுகின்றேன்!

புத்தியின்றி தடுமாறும் ஜெ!
நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
உலகில் விசித்திர அரசியல் செய்வதில்
தமிழர்கள் விந்தையானோர் 
என்பதற்கு நானுமோர் உதாரணம்! 
கலகம் ஏதுமின்றி 
கலைஞர் குடும்ப(க்)
கட்சி செய்த ரகசிய ஊழலால்
மீண்டும் ஆட்சியில் நுழைந்த 
அதிமுக அன்னை நான்!
ஆனாலும் ஒரு கர்வம் - இந்த கொலைஞர் 
பெயரை தாங்கிய ஏதும் என் முன்னே
இருக்க கூடாது என்பதில் தனி ஆர்வம்!
நிரூபனின் நாற்று வலையிலிருந்து அனுமதியின்றி காப்பி பேஸ்ட் பதிவு
நோட்டு புக்கு முதல்
மருத்துவமனை வரை
நோண்டிப் பார்த்தேன்! 
தமிழகத் தலைவர் என
தான் வாழ்ந்ததற்கு அடையாளமாய்
கலைஞரின் பெயர் தான் 
கண் முன்னே வருகின்றது!

ஆதலால் இப்போது
அம்மா வாட்டர் மூலம்
தமிழக மக்களிடையே
காதல் செய்ய வந்துள்ளேன்!
தற்போது தலமைப் பதவியில் 
நானிருக்கையில்
தமிழினத் தலைவராய் கலைஞர் 
எப்போது தோன்றினார்? ஹே...ஹே.....
மப்பேதும் ஏறி மனுசன் 
பொறித்து வைத்திருப்பாரோ?
தப்பான ஒருவர் பெயர்
என் முன்னே இருக்கும் எனும்
அப்பாவி யோசனையா என் 
மூளையினுள் ஓடுகின்றது?
அறிக்கை விட்டேன்! 
கலைஞர் பெயர் கலந்திருக்கும்
அனைத்தும் தடை செய்யப்பட்டு
திருத்தப்பட வேண்டும்! 
ஆனால் ஒன்றை மட்டும் மறந்து
நறுக்கென வார்த்தை விட்ட பின்னர்
நானும் யோசிக்கிறேன்?
இந் நிலையில் பார்க்கையில்
கலைஞரின் பெயர் தாங்கி நிற்கும்
அவர் பிள்ளைகளை 
விட்டு வைக்கலாமா?
பேதலித்த புத்தியா எனக்கிருகிறது?
இல்லை 
ஆதரித்த மக்கள் பணம் தானே
எனும் நிலையா என்னை இயக்குகிறது?

கையில் பணம் உள்ள வரை
அம்மா வாட்டர் என்ன
அம்மா சோப்பு
அம்மா கண்ணாடி
அம்மா சாறி
அம்மா சல்வார்கமீஸ்
எல்லாமே வருமிங்கே காத்திருங்கள்!
பிற் சேர்க்கை: இங்கே பிரசுரமாகியிருக்கும் கவிதைகளை வசன கவிதை, புதுக் கவிதை மற்றும் மரபுக் கவிதைச் சாயல்கள் கலந்து எழுதியிருக்கிறேன்.
********************************************************************************************************************************

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails