Saturday, September 28, 2013

ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லைட் ஏரியாவும் - கேவலமான உண்மைகள்

மேலைத் தேயத்தில் மூடிய திரைக்குள் இடம் பெறும் நிர்வாண நடனங்களை Strip டான்ஸ் என அழைப்பார்கள். மேலைத் தேசத்தவர்களைப் பொறுத்த வரை பொது வெளியில் வைத்து, ஓர் சமூகத்திற்கு முன்னால் இவ்வாறான நடனங்களை அரங்கேற்ற மாட்டார்கள். 

பொது வெளியில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக ஆடப்படும் நடன வகைக்கு பலே டான்ஸ் என பேர் வைத்துள்ளார்கள் அவர்கள். ஆனால் நம்ம ஊர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி இறை உணர்வை வேண்டிச் செல்லும் ஆலயங்களில் அங்கங்கள் வெளித் தெரிய ஆடப்படும் முழு நீளக் கவர்ச்சி நடனத்திற்கு நம்மவர்கள் வைத்திருக்கும் பெயர் ரெக்கார்ட் டான்ஸ். 
சின்ன மேளம், ஒயிலாட்டம், மானாட்டம் இவை எல்லாவற்றையும் விட முற்று முழுதாக பெண்களை விபச்சாரப் பொருளாக்கி பப்ளிக் ப்ளேஸில் வயது வேறுபாடின்றி அனைவரும் பார்த்து தொலையுங்கள் எனும் நோக்கில் இடம் பெறுகின்றது இந்த மாதிரியான நடனங்கள். 

முன்பெல்லாம் ஊருக்கு ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் இருப்பது போல இப்பொழுதெல்லாம் ஊருக்கு ஊர் ஒவ்வோர் ஊரின் இளைஞர் அணியின் பெயரிலும் இந்த ரெக்கார்ட் டான்ஸ் குறூப் வேறு! 

குறிப்பிட்ட வயதினர் மட்டும் பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒரு மூடிய அறைக்குள் அல்லது மூடிய திரைக்குள் இப்படி ஒரு நிகழ்வு இடம் பெற்றால் சரி வயது வந்தோருக்கான கூட்டத்தின் நிகழ்வு என்று ஒதுக்கலாம். ஆனால் ஒவ்வோர் ஆலயத் திருவிழாக்களின் போதும், ஒவ்வோர் பிரதேச சமூக நிகழ்வுகளின் போதும் பொது வெளியில் இவ்வாறு நிர்வாண நடனம் ஆடப்படுவதை எப்படி எமது சமூக கலாச்சார காவலர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை?

அம்மாள் தொண்டர்கள், ஐயனார் ரசிகர்கள், மாரியாத்த டான்ஸ் டீம், என பல்வேறு பெயர்களில் குறூப் வேறு. இன்னும் கொஞ்ச நாள் போனால் கருணாநிதி டீம், ஜெயா டீம் என ரெக்கோர்ட் டான்ஸிற்கு குறூப் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கே! 
நடனம் ஆடினால் பரவாயில்லை. அங்கே பார்வையாளர்களாக இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளான - சிறுவர்களின் மூஞ்சிகள் அப்படியே தெரியும் வண்ணம் அதை கூட வீடியோ பிடித்து யூடியூப்பில் அப்லோட் பண்ணி இண்டர்நேஷனல் லெவலுக்கு அனுப்புறாங்கப்பா! என்னங்க கலாச்சார காவலர்களே பொது வெளியில் பெண்களை ஆண்கள் விபச்சாரத்திற்கு உள்ளாக்கும் செயலை கண்டுக்க மாட்டீங்களா? பெண்ணியவாதிகளே நீங்கள் எல்லாம் எங்கே போயிட்டீங்க?

சூடான படங்கள், சுவையான செய்திகள், இதனை விட இன்னும் சுவாரஸ்யமான விடயங்களைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

இனி உங்கள் பார்வைக்காக:

* வேற்றுக் கிரகவாசியுடன் செக்ஸ் வைத்த பெண் - பரபரப்பூட்டும் வீடியோ இணைப்புகவர்ச்சியில் கலக்க ஆசைப்படும் லட்சுமி மேனன்
கோச்சடையான் பாடல் ரிலீஸ் விரைவில் 
கூகிளில் அதிகம் தேடப்படும் நஸ்ரியா

கீழே உள்ள போட்டோவில் கிளிக் செய்யுங்கள் - பெறுமதிமிக்க பரிசுகளை வெல்லலாம். 


1 Comments:

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

இது போன்ற ஆடல்பாடல்கள் தடை செய்யப்பட்டாலும் இன்னும் சில இடங்களில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails