Saturday, September 21, 2013

ஈழத் தமிழர்களை செருப்பாலை அடிச்சு நாக்கு பிடுங்க கேள்வி கேட்கனும்!

இது ஒரு ஆக்ரோசமான பதிவு! 
வணக்கம் நண்பர்களே, 
மனித மனங்கள் விசித்திரமானவை என்றே கூறலாம். அதில் இன்னும் விசித்திரமானவர்கள் எம் ஈழ மக்கள்! 


ஈழப் போரின் இறுதிக் காலம் வரை இருந்த போராளிக் கலைஞர்களை எவ்வளவு இழிவாகத் தூற்றித் தம் விரோதத்தை காண்பிக்க முடியுமோ அவ்வளவு தூரம் செயற்பட்ட பெருமைக்குரியவர்கள் ஈழக் கலைஞர்கள்.

இறுதிப் போரின் பின்னர் அரசாங்கப் படைகளின் சித்திரவதைக் கூடத்தினுள் அகப்பட்டவர்கள் யாராக இருப்பினும் இனமானம், தன்மானம், தமிழ்மானம் பற்றி யோசிக்கவே முடியாது. அவ்வளவு தூரம் கொடூரமாகத் தமிழ் மக்களை உலக அகதிகள் விதிகள் அனைத்திற்கும் முரணாக சித்திரவதை செய்து மகிழ்ந்தது அரச இயந்திரமும், அதன் துணைப் படைகளும். 

இந்தக் காலத்தில் வாழ்வா? சாவா எனும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் ஈழப் போரியலுக்காக அன்றாடம் ஊண், உறக்கமின்றித் தொழிற்பட்ட மக்கள், போராளிகள், கலைஞர்கள். அரச இயந்திரம் கூறுவதைச் செவிமடுக்க வேண்டிய கட்டாயம். இந்த நிர்ப்பந்தத்தின் பிரகாரம் பாடகர் எஸ்.ஜி.சாந்தன், ஜெயா.சுகுமார் உள்ளிட்ட ஈழத்தின் முன்னணிப் பாடகர்கள் அரசிற்குச் சார்பான ஒட்டுக் குழுவிற்குச் ஆதரவாகப் பாடல் பாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள். 

இத்தகைய நிலமையில் ஈழத்திற்காக தம் பிள்ளைகளைப் பறி கொடுத்து, தம் வாழ்வை ஈழத்து இசைக் கலை வளர்ச்சிக்காக அர்பணித்த கலைஞர்களை தமிழ் இணையத் தளங்களும், தமிழின ஆதரவாளர்களும் இகழ்ந்தார்கள். துரோகி பட்டம் கொடுத்து கௌரவித்தார்கள். காலம் வேகமாகச் சுழன்று தன் பாதையில் பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

ஆம் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பிரச்சாரத்தில் இதே பாடகர்கள் பிரச்சாரப் பேரிகை முழங்கும் பாடகர்களாக அண்மையில் அவதாரம் எடுத்தார்கள். அப்புறம் என்ன? ஈழத் தமிழர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். மீண்டும் தம் கண்களில் ஒற்றி இப் பாடகர்களை கௌரவிக்க ஆரம்பிக்கிறார்கள். 
இதே தன்மான உணர்வுடன் இக் கலைஞர்களின் மதிப்பினை உணர்ந்து, போருக்குப் பின்னரான அவர்கள் வாழ்வு செழிக்க ஈழத் தமிழினம் உழைத்திருந்தால், தவறேதுமில்லை! ஆனால் வாழ்வு சிறுமைப்பட்ட வேளை இகழ்ந்துரைத்து, தமக்கு தேவை இவர்கள் என்று எண்ணும் போது புகழ்ந்துரைக்கும் இந்த இழி செயலுக்கு இவர்களை நடு வீதியில் வைத்து செருப்பால அடிச்சு நாக்கு பிடுங்க கேள்வி கேட்கனும். ஆனால் கேள்வி கேட்கத் தான் யாருமில்லையே!

ஈழத் தமிழர்களில் நான் உட்பட, அதிகமானோர் சுயநலவாதிகள் என்பதற்கு இச் சம்பவமும் ஓர் எடுத்துக்காட்டு!
இனி உங்கள் பார்வைக்காக:

ஆரம்பம் படத்தில் ஆபாசமா? எதற்கு UA சான்றிதழ்? 
நடிகர் சந்தானத்திற்கு கிடைத்த யோகம் 

ஆபாசப் படம் பார்த்து தற்கொலை செய்த சிறுவன் 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails