Monday, September 9, 2013

திமுக க(ப)ட்சியை அவதூறு செய்தால் களி தின்பீங்க - கொதிக்கும் டிமுக குறூப்

திமுக, கட்சியினரின்  அதிரடிப் பாய்ச்சல்: 

இன்றைய கால கட்டத்தில் இலவசங்களுக்கு மேல் இலவசங்களை வாரி இறைத்து தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியாத கலைஞரின் கட்சியினர் தற்போது சமூக வலைத் தளங்களினூடாகப் புதியதோர் பிரச்சாரப் போரினைக் கையிலெடுத்துள்ளார்கள்.இதன் பிரகாரம்,இளைய தலைமுறையினரைக் குறி வைத்து சமூக வலைத் தளங்கள் ஊடாக திமுக கட்சியின் கருத்துக்களை வலுப்படுத்துவதே கலைஞரின் பெயர் பொறிக்கப்பட்ட திமுக கட்சியினரின் பிரச்சாரப் பீரங்கிப் பேஸ்புக் - டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டதன் நோக்கமாகும்.
கலைஞரின் பேஸ்புக் பக்கத்தில அவரை இழிவுபடுத்தி கமெண்ட் அடிப்போர், இணையத் தளங்களில் திமுக கட்சியினரின் கொள்கைகளை விமர்சிப்போர், கட்சி உறுப்பினர்களை விமர்சிப்போர் எனப் பலரும் குறி வைத்து கலைஞரின் பேஸ்புக் கணக்கு மூலம் எச்சரிக்கப்பட்டு வருவது திமுகவின் அடுத்த கட்ட ஊடக சுதந்திரத்தை அழிக்கும் நடவடிக்கையாக நோக்கப்படுகின்றது. கலைஞரின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்து, ஈழத் தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தும் நடவடிக்கைய விமர்சித்த செயலுக்காக அடியேனுக்கு எச்சரிக்கை அனுப்பியிருக்கிறார்கள் குறித்த பேஸ்புக் கணக்கின் கைம் பிள்ளைகள்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

அது மட்டுமன்றி, திமுக தொடர்பான இழிவான பதிவுகள் நீக்கப்பட வேண்டும் என்றும், இல்லையே இந்தியா வருவதற்குரிய எனது அனுமதி ரத்துச் செய்யப்பட்டு, இந்தியா வரும் போது விமானத்தில் வைத்தே கைது செய்து சிறையில் அடைக்கப்பட நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளார்கள் க(கொ)லைஞரின் கைப் பொம்மைகள்! 
அடப் போங்க அல்லக்கைஸ், நான் எப்போ வர்றேன், என்ன விமானத்துல வாரேன் என்று சொல்லிட்டா வரப் போறேன்? நீங்க நினைச்சதும் புடிச்சு உள்ள போட நான் என்ன புழு பூச்சியா? 
நல்லாத் தான் ரீலு விடுறீங்க சார்! நீங்க இப்படி மிரட்டியதும், நான் ப்ளாக்கை மூடி வைச்சிட்டு உங்க பின்னாடி இலவசத்தை நம்பி வரும் அல்லக்கைஸ் போலவா வரப் போறேன்?இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

இனிமே காரசாரமாக, திமுக கட்சியின் ஒவ்வோர் கொள்கைகள், செயற்பாடுகள் அனைத்தும் விமர்சிக்கப்படும் என்பதனை இத்தால் அறியத் தருகின்றேன்! மாண்புமிகு முதல்வர் ஐயாவின் பேஸ்புக், டுவிட்டர் விஜயம், ஈழ மக்களின் கண்ணீருக்கும், தமிழகத்தில் அகதி முகாம்களில் வாடும் ஈழ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் தக்க பதில் கொடுக்கப்படாவிட்டால் விரட்டப்படும் என்பதனையும் அறியத் தருகின்றேன்! 
ஐயா! தமிழில் நீங்கள் சிறந்தவர். ஆனால் தமிழ் மக்களை வைத்துப் பிழைக்கும் நீங்கள் சிறந்தவரா? 
என்னோட டுவிட்டர் கணக்கை கையகப்படுத்திய உங்க அல்லக்கைஸ் அனைவருக்கும் சவால்! 
உங்கள் பெயரை அவதூறு செய்ய நீங்க தேவலை! உங்க கட்சி தொண்டர்களே போதும்! பொறுத்திருந்து பாருங்கள்! 
இனிமே காரசாரமான விவாதங்களை எதிர்பாருங்கள்! தலைக்கு மேல் மஞ்சள் துண்டைப் போட்டு முகத்தை மறைத்து கண்ணீரைத் துடைக்கவும் தயாராகுங்கள்! 

உங்களுக்கு தில் இருந்தா, நீங்க ஒரு உத்தமர் என்றால், ஈழ மக்களுக்கு டெசோ மாநாடு கூட்டி தமிழீழம் கொடுக்க வேணாம்! தமிழகத்தில் அகதிகளாக உள்ள மக்களுக்கு ஓர் வாழ்வுரிமை கொடுங்கள்! அப்புறமா பேசுவோம் ஐயா! 
அன்பு நண்பர்களே,
உறவுகளே, இணையத்தில் புரட்சி வானொலி அப்படீன்னு ஒண்ணு இருக்குங்க.0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails