Wednesday, September 4, 2013

அல்லாவும் சிவபெருமானும் அண்ணன் தம்பியே - அதிர்ச்சியூட்டும் ஆய்வு

அதிர்ச்சியில் இந்துக்கள் - மகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் வியர்க்க, விறு விறுக்க ஓடி வந்து பதிவைப் படிக்க முன்னாடி “நிரூபன் பயலுக்கு பதிவிற்கு தலைப்பு வைக்க வேறு ஏதுமே சிக்கலையா” அப்படீன்னு மனசிற்குள் திட்டுறீங்களா? கொஞ்சம் பொறுங்க மக்கள்ஸ், பதிவினைப் படிச்சிட்டு அப்புறமா, என்னை திட்டுவது சரியான்னு நீங்களே யோசிப்பீங்க. 
இப்போ இந்தப் பதிவில் நாம இணைத்திருக்கும் போட்டோவில உள்ளவர் யாருன்னு உங்க எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அட... இந்துக்களின் முழு முதற் கடவுள், உமாதேவியாரின் ஆசை நாயகன் அவர் தான் உங்க சிவபெருமான். ஆனால் இந்த சிவபெருமான் பிறப்பால் இஸ்லாமியர் அப்படீன்னு அமெரிக்காவுல ஆராய்ச்சி நடத்தி கண்டறிந்திருக்கிறார்களாம். பதிவுலகில் மதம் பரப்பும் மேனியா அப்படீன்னு ஒரு தொற்று நோய் பல மாதங்களாக பரவி வருவது உங்க யாவருக்குமே நன்றாக தெரியும். ஒரு சில மதவாதிகள் பண்ணும் சித்து விளையாட்டுக்கள் இருக்கே! நீங்க அவங்களுக்குப் பக்கமா நின்னா செருப்பை கழட்டி மூஞ்சிலே அடிப்பீங்க! அம்புட்டு அழகா தங்கள் மதத்தை பரப்புவதற்காக, ஏனைய மதங்களை இழிவு செய்யுறாங்க இந்த மதவாதிகள்.இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

சிவபெருமானின் தலையில் இருக்கும் பிறைச் சந்திரன் இஸ்லாமியர்களின் குறியீடாக இருக்கிறதாம். இதனால் சிவபெருமான் பிறப்பால் இஸ்லாமியர் என்றும், பின் வந்த இந்துக்கள் இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்வின் விளைவாக சிவபெருமானின் மூலாதாரத்தை மறைத்து சிவபெருமான் இந்து அப்படீன்னு பொய் சொல்றாங்க அப்படீன்னு ஒரு மதவாதி எழுதுகிறார். உலகில் ஏகாதிபத்தியத்தின் முதல்வன் அமெரிக்கா, இஸ்லாமியர்களின் எதிரி அமெரிக்கா அப்படீன்னு பல பட்டங்களை அமெரிக்காவிற்கு அள்ளி வழங்கி, அமெரிக்காவை எல்லா விடயங்களிலும் எதிரியாக நோக்கும் இஸ்லாமிய மதவாதிகள் அமெரிக்க ஆராய்ச்சியாளர் சொல்லும் கருத்துத் தமக்கு சாதகமாக இருக்கே என நினைத்து தங்கள் செப்படி வித்தையினைக் கட்டுகிறார்கள்.
அது மட்டுமா? இயேசு நாதரும் ஒரு இஸ்லாமியராம். இதையும் அந்த அமெரிக்கப் பேராசிரியர் சொல்லியிருக்கார் அப்படீன்னு சைட் கேப்பில் கெடா வெட்டிப் பொங்கல் வைக்கிறாங்கோ. சங்க இலக்கியங்களில் முருகக் கடவுளர் வழிபாடு பற்றிய பல சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சங்க காலத்திற்குப் பின்னர், தோன்றிய இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றியவராக சிவபெருமானைச் சுட்டியிருப்பது எவ்வளவு மடமைத்தனம் என்று இந்த மதவாதிகளின் ஞானக் கண்ணுக்குத் தெரியவில்லைப் போலும்.
என்னங்க ஆச்சரியப்படுறீங்க, முருகன் கூட இஸ்லாமியர் என்று பேசிக்கிறாங்க. ஏன்னா முருகக் கடவுளருக்கு வள்ளி, தெய்வயானை அப்படீன்னு இரண்டு ஆசை நாயகிகள் இருக்காங்கள் இல்லையா. இந்த முருகக் கடவுளரும் ஏழு நாயகிகளை ஆசை நாயகிகளாக ஆக்கிக் கொள்ளலாம் எனும் கொள்கையில் வந்தவர் என்பதால் அவரும் ஓர் இஸ்லாமியர் தானாம். அப்புறம் உங்க தொப்பையப்பன், அவர் தானுங்க பிள்ளையார் இருக்காரே! அவரும் ஒரு இஸ்லாமியர் தானாம். ஏன்னா அவரோட நெற்றியில் பிறை வடிவில் விபூதி அடையாளம் இருக்கிறதாம்.
பார்த்தீர்களா? நாம் அனைவரும் இஸ்லாமியர்கள் தான்! 
சந்தேகமே வேணாம்! அமெரிக்கப் பேராசிரியர் சொன்னதா எந்த மதம் பரப்பும் பதிவர் எழுதுகிறாரோ இல்லையோ நாம் அனைவரும் இஸ்லாம் மதத்தவர்கள் தான்!
இன்று முதல் எங்கள் மூலாதார மதமாக விளங்கும் இஸ்லாத்தைப் பின்பற்றி மோட்சம் அடைவோம் பதிவர்களே! வாருங்கள்! ஒன்றாக கூடுங்கள்!

2 Comments:

Unknown said...
Best Blogger Tips

நண்பரே சிவபெருமான் இஸ்லாத்தை சார்ந்தவர் என்ற தகவலை வழங்கியமைக்கு நன்றி. அனால் நீங்கள் இஸ்லாத்தை பற்றி தவறாக புரிந்து எழுதியுள்ளீர்கள். நான் எழுத்துக்களை மதிக்கும் ஒரு தமிழன். பிறை;இஸ்லாத்தின் குறியீடு அல்ல, அது இஸ்லாமியர்கள் நாட்காட்டிக்காய் பயன்படுத்துவது. அதுமட்டுமல்ல, இயேசு பற்றி குர்ஆனில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது., இவ்வாறு எதுவித ஆராய்ச்சியும் இல்லாமல் ஒரு மதத்தை பற்றி இழிவாக பேசுவது தானா தாங்கள் தமிழிற்கு தரும் மரியாதை ?
சகோதரரே முடிந்தால் தங்களின் வேத நூலை முழுமையாக படித்து பாருங்கள்.. அதிலும் இஸ்லாம் பற்றிய குறிப்புகள் மறைக்கப்பட்டிருக்கும்.
தயவு செய்து பொழுது போக்கிற்காக மதங்களுக்கிடையில் சர்ச்சைகளை கிளப்பாதீர்கள்.

Unknown said...
Best Blogger Tips

ஒரு விடயத்தை ஆராயாமல் எந்த கூற்றையும் சொல்வது தவறு காரணம் உலகின் இறைவன் என்பவர் ஒருவர் என்பதில் ஆத்திக கொள்கை கொண்டோருக்கு மாற்று கருத்து இருக்காது அந்த இறைவன் யார் என்று அறிவது தான் முக்கியம் இதற்கு ஆராய்ச்சி அவசியம் எனவே எதையும் நன்கு ஆராயாமல் பதிவிட வேண்டாம் குரானின் தமிழ் பிரதியையும் படியும்கள் இந்து வேதம்கள் நான்கையும் படியும்கள் கிறிஸ்தவ வேதகம்களியும் படியும்கள் ஆராயுங்கள் பின் பதிவிடும்கள்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails