Saturday, January 28, 2012

ஈழச் சிசுவை கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம்!

தயவு செய்து பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்!!
நாற்று வலைப் பதிவினை நாடி வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கம், தமிழன் என்கின்ற தனித்துவமான இனக் கட்டமைப்பினுள், காலந் தோறும் பிரதேசவாதங்களும், மதவாதங்களும் தலை விரித்தாடுவது விரும்பத்தக்க விடயமல்ல. ஒன்றுபட்ட இனமாக தம்மிடையேயான பேதங்களைக் களைந்து தமிழன் ஓரணியின் கீழ் நின்றிருந்தால் இந் நேரம் வென்று நிமிர்ந்த தலை முறையாக இந்தப் பூமியில் நாம் நிமிர்ந்திருப்போம். பிரதேசவாதம், சாதியம், போர் ஆகியவை தொடர்பான மாற்றுக் கருத்துக்களை வலையுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் எழுதி வந்தேன். நண்பர்களான சிபி செந்தில்குமார், கந்தசாமி, ஓட்டவடை நாராயணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த வகையறாப் பதிவுகளை கொஞ்ச காலம் தொடருவதில்லை என ஒதுக்கி வைத்திருந்தேன். 
இப்போது வலையுலகில் மீண்டும் பிரதேசவாதம் தலை விரித்தாடத் தொடங்குகின்றது.வடக்கான் என்றும், யாழ்ப்பாணத்தான் என்றும், மட்டக்களப்பான் என்றும், தமிழகத்தான், ஈழத்தான் எனவும் பிரிவினை வாதிகள் தமது சுய சொறிதல்களை அரங்கேற்றத் தொடங்கி விட்டார்கள். அவரவர்க்கு அவரவர் வழியில் பதில் சொல்லுவது தான் சாலச் சிறந்தது என்பதால் ஏலவே நான் எழுதத் தொடங்கி முதலாவது பாகத்துடன் முற்றுப் பெறாது தொக்கி நிற்கும் ஈழச் சிசுவை கொன்றொழித்த பிரதேசவாதம் தொடரினை இன்று முதல் ஆரம்பத்திலிருந்து தொடரவுள்ளேன். ஆட்டம் ஆரம்பமாகின்றது. நான் ரெடி! நீங்க ரெடியா? 

றிவிப்பு: பதிவிற்குள் நுழைய முன் - இந்தப் பதிவின் நோக்கம் ஈழப் போராட்டத்தைப் பற்றிய ஆராய்வது அல்ல. இந்தப் பதிவின் ஊடாக ஈழப் போரின் வீழ்ச்சிக்கு பிரதேச வாதம் எவ்வாறு பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை மாத்திரமே ஆராயவுள்ளேன்.வாசகர்களும், பதிவர்களும் பதிவோடு தொடர்புடைய கருத்துக்களைப் பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம். பதிவிற்குத் தொடர்பில்லாத கருத்துக்களைப் பகிர்ந்து, பதிவின் நோக்கத்தினைத் திசை திருப்ப மாட்டீங்க எனும் நம்பிக்கையில் இந்த விவாத மேடை எனும் பகுதியினை- மீண்டும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

மீண்டும் ஒரு தடவை!! இப் பதிவினூடாக முதன்மைப் படுத்தப்பட இருப்பது போராட்டம் அல்ல, பிரதேசவாதம் பற்றிய பார்வையே, என்பதனை வாசகர்கள் அனைவரும் கருத்திற் கொள்ளவும்.

ஈழம் எனச் சிறப்பிக்கப்படும் பூமி எது என்று எல்லோருக்கும் தெரியும். இலங்கைத் தீவிற்குரிய பண்டைய இலக்கிய நயம் மிக்க பெயர் ஈழம். ஈழத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளாக வடகிழக்கு மாகாணங்களையும், தென் - மேல் மாகாணங்களையும், மத்திய மலை நாட்டினையும் குறிப்பிடலாம். வட கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை முதலிய இடங்களில் தமிழர்கள் பெரும் பான்மையாகவும், பூர்விகமாகவும் வாழ்ந்தாலும்- அந்தப் பிரதேசங்களைச் சார்ந்து வாழும் மக்களிடையே பண்பாட்டு அடிப்படையிலும், மொழி உச்சரிப்பு (pronunciation or Slang) அடிப்படையிலும் வேறுபாடுகளும், சில உட்பூசல்களும் காணப்படுகின்றன. தேசிய ரீதியில் தமிழர்கள் ஒன்று பட்டு ஒரு குடையின் கீழ் நிற்கிறார்கள். ஆனால் இந்த உட்பூசல்களை சிலர் தம் சுய இலாபங்களுக்காக தூண்டி குளிர் காய்கிறார்கள்.

பிரதேசவாதம் எனப்படுவது இனத்தால் ஒன்றுபடுவதற்கு தடையாக விளங்கும் ஓர் விடயம் அல்ல. ஆனால் எம் தமிழர்களின் பரம்பரைக் குணம்- பிரிந்து வாழுதல் ஏனைய மனிதர்களோடு ஒட்டி வாழாது தங்களைத் தாங்களே உயர்ந்தவர்களாக நினைத்து தற் பெருமையுடன் வாழுதலாகும். இந் நிலமையின் காரணத்தால் எம் தமிழர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஒரு விடயம் தான், தமக்குள்ளே வேற்றுமைகளைக் கையாளத் தொடங்கியமை. ’ஈழம் எனும் கோட்பாட்டின் கீழ் எல்லோரும் ஓரணியில் நின்று போராடினார்களே! என்று உங்கள் மனங்களில் கேள்விகள் எழலாம். ஈழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் எல்லோரும் ஓரணியில் நின்றார்கள் என்று இங்கே சொல்ல முடியாது. குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களைத் தவிர்த்து பலரிடம் வேற்றுமைகள் நிரம்பி இருந்தன.  இவற்றினைத் தனித் தனியே ஆராய முற்படுவது அழகல்ல. நமது அழுக்கினை நாமே தோண்டி மணந்து பார்ப்பதற்குச் சமனாகும்.

இந்த வேற்றுமைகள் எங்கே இருந்து பிறந்தன என்றால், எமது சமூகங்களிடம் இருந்து கிராமங்கள் வாயிலாகப் பிறந்தது எனலாம். பின்னர் பல்கிப் பெருகி ஒவ்வோர் மாவட்டங்கள் வாயிலாக வளர்ச்சியடைந்து பின் நாளில் (இன்றைய கால கட்டத்தில்) தேசிய ரீதியில்(Nation Wide) நச்சுப் பதார்த்தமாக விருத்தியடைந்துள்ளது. ஈழத்தில் சமூக ரீதியான பிரதேசவாதங்கள் எப்படித் தோற்றம் பெற்றன என்று பார்ப்போம். முதலில் வட கிழக்கில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்.........................................
"அடோய், நிறுத்தடா. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து நீ ஆரம்பிக்கிறியே! இதுவும் பிரதேசவாதம் தானே? எங்கே, உன்னிடம் வேற்றுமை இல்லை என்றால் மட்டக்களப்பில் இருந்தோ அல்லது மன்னாரில் இருந்தோ நீ ஆரம்பி, பார்க்கலாம்!" அப்படீன்னுயாராவது குதர்க்கமாக இங்கே வந்து பேசலாம். இலங்கைப் படத்தின் மேற் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்பதே அவர்களுக்கான பதிலாக இருக்கும்.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!

யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன, இவை பூகோள அடிப்படையில் குடா நாட்டினை அடையாளப்படுத்தும் நோக்கில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே ஒல்லாந்தர்களினால் பிரிக்கப்பட்டிருந்தன. இங்கே வாழும் மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும், எனும் ஆசை இருந்தாலும், இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே! இந்த வேற்றுமைகள் பற்றியும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பிரிவினைகள் பற்றியும் அடுத்த பாகத்தில் அலசுவோமா?
தலைப்பு விளக்கம்: ஈழத்தை எல்லோரும் அன்னையாகச் சிறப்பித்து / வர்ணித்து எழுதுவார்கள். நான் இங்கே ஈழத்தை ஓர் சிசுவாகப் பாவித்து பதிவிற்கான தலைப்பினைத் தெரிவு செய்திருக்கிறேன்.
***************************************************************************************************************
மகிழம்பூச்சரம் பற்றி அறியாதோர் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். பதிவுலகில் மகிழம்பூச்சரம் இருந்தால் எப்படி இருக்கும்? கம கம என்று நறுமணம் வீசும் அல்லவா? கதை, கவிதை, கட்டுரை,சிறுகதை உள்ளிட்ட இலக்கியப் படைப்புக்களையும், பெண்ணியம் தொடர்பான படைப்புக்களையும் சகோதரி "சாகம்பரி" அவர்கள் "மகிழம்பூச்சரம்" எனும் வலைப் பூவில் அழகுறப் பதிந்து வருகின்றார்.
***************************************************************************************************************

76 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!எச்சரிக்கையுடன் கூடிய ஆரம்பம்?நல்லது தான்!நான் "யாழ்ப்பாணி" என்பதில் பெருமை?!யடைகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!!(ஆரம்பிச்சு வச்சுட்டாரு ஐயா!ஹி!ஹி!ஹி!!!!)

Yoga.S. said...
Best Blogger Tips

அதிகாலையில் துயிலெழுவது நான் மட்டும் தான் போலிருக்கிறது!நேசனும் பதிவைப் போட்டுவிட்டு................!(வேலைக்குச் செல்வோர் வார இறுதியில் கொஞ்சம் அதிகம் தூங்குவது வழமைதான்)

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஆரம்பம் நன்றாக இருக்கிறது. அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.

நிரோஜ் said...
Best Blogger Tips

தீவகம் என்பதை தீவகத்தர் என்பதும் இதற்குள் அடங்கும் ... அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

நானில்லாத நேரம் விறுவிறுப்பான தலைப்பெல்லாம் வந்து போயிட்டுதுபோல.... இப்படித்தலைப்பை டக்கு டக்கெனப் போட்டால்.... படிக்கக்கூட முடியாமல் போகுதே நிரூபன்...

நிரூபனை ஆராவது பிடிச்சு புளியில கட்டி வையுங்கோ:).. கடசி ஒரு நாளைக்கு ஒரு தலைப்புப் போட்டால் பறவாயில்லை...

கவனம் நிரூபன் பார்த்து... அதி வேகம் சடுதி மரணம் என்பார்கள்...

ஆகவும் ஸ்பீட்டாகப் போனீங்களெண்டால் ஓரளவில் உங்களுக்கே மனம் சோர்ந்திடும்.

நல்ல தலைப்புக்களை என்றாலும் கொஞ்சம் விட்டால்தானே.. நாமும் அலசி ஆராய்ந்து 4 வெடியாவது:) வைக்கலாம்.

ஓ யுனி தொடங்க முன் அனைத்தையும் எழுதிடோணும் என எதிர்பார்க்கிறீங்களோ? அப்படியாயின் எழுதி எழுதி சேஃப் பண்ணி வைத்தால்.. பின்பு வசதியாக இருக்குமெல்லோ.

சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு:)).... உங்கள் விருப்பம்... ஆனா எனக்கென்ன பயமெண்டால்.. இப்படி வேகமாகப் போயிட்டு, பின்பு ஒதுங்கிப் போய்க் கையை விட்டிடுவீங்களோ என்றுதான்.

ஏனெனில் அடிக்கடி, தினம் தினம் பதிவு போட்டோரெல்லாம் இப்போ சோர்ந்து கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டார்கள், பார்க்க கவலையாக இருக்கு, பழகியோர் எல்லாம் காணாமல் போகிறார்கள்.... அப்படி நீங்களும் ஆகிடக்கூடாதென்றே சொல்கிறேன்.

கொஞ்சம் ஓவராச் சொல்லிட்டனோ?.. சே..சே.. அப்பூடி இருக்காது:).

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் நிரூபன்!எச்சரிக்கையுடன் கூடிய ஆரம்பம்?நல்லது தான்!நான் "யாழ்ப்பாணி" என்பதில் பெருமை?!யடைகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!!(ஆரம்பிச்சு வச்சுட்டாரு ஐயா!ஹி!ஹி!ஹி!!!!)
//

வணக்கம் ஐயா, இனித் தானே எங்களின் நற்குணங்களைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

அப்பவும் இந்த வசனத்தைச் சொன்னீங்க. அழுதிடுவேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FRஅதிகாலையில் துயிலெழுவது நான் மட்டும் தான் போலிருக்கிறது!நேசனும் பதிவைப் போட்டுவிட்டு................!(வேலைக்குச் செல்வோர் வார இறுதியில் கொஞ்சம் அதிகம் தூங்குவது வழமைதான்)
//

அப்படி இல்லை ஐயா,
மொய்க்கு மொய், அருமை, சூப்பர் ஆட்களுடன் கொஞ்ச நாளா மோதி விட்டேன்.
ஸோ...அதால என்னோட பதிவைப் புறக்கணிப்பதாகச் சொல்லிட்டு ரகசியமாகப் படிக்கிறாங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

ஆரம்பம் நன்றாக இருக்கிறது. அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நானில்லாத நேரம் விறுவிறுப்பான தலைப்பெல்லாம் வந்து போயிட்டுதுபோல.... இப்படித்தலைப்பை டக்கு டக்கெனப் போட்டால்.... படிக்கக்கூட முடியாமல் போகுதே நிரூபன்...

நிரூபனை ஆராவது பிடிச்சு புளியில கட்டி வையுங்கோ:).. கடசி ஒரு நாளைக்கு ஒரு தலைப்புப் போட்டால் பறவாயில்லை...

கவனம் நிரூபன் பார்த்து... அதி வேகம் சடுதி மரணம் என்பார்கள்...

ஆகவும் ஸ்பீட்டாகப் போனீங்களெண்டால் ஓரளவில் உங்களுக்கே மனம் சோர்ந்திடும்.

நல்ல தலைப்புக்களை என்றாலும் கொஞ்சம் விட்டால்தானே.. நாமும் அலசி ஆராய்ந்து 4 வெடியாவது:) வைக்கலாம்.
//

வணக்கம் அக்கா,
வாங்கோ..வாங்கோ...

அக்கா, உங்களுக்குப் பிடித்த என்னை கெடுத்த பெண்கள் பகுதி நேற்று மாலை ரிலீஸ் பண்ணினேன்.
அப்புறமா 12 மணி நேரம் கழித்து தான் இந்தப் பதிவினைப் படித்தேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

கவனம் நிரூபன் பார்த்து... அதி வேகம் சடுதி மரணம் என்பார்கள்...

ஆகவும் ஸ்பீட்டாகப் போனீங்களெண்டால் ஓரளவில் உங்களுக்கே மனம் சோர்ந்திடும்.
//

உண்மை தான் அக்கா,
கண்டிப்பாக மனம் சோர்ந்திடும் தான்..
ஆனால் உங்களைப் போன்ற வாசகர்களின் கருத்துக்கள் வரும் போது மனம் சோருமா என்ன?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அப்படியாயின் எழுதி எழுதி சேஃப் பண்ணி வைத்தால்.. பின்பு வசதியாக இருக்குமெல்லோ.

சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு:)).... உங்கள் விருப்பம்... ஆனா எனக்கென்ன பயமெண்டால்.. இப்படி வேகமாகப் போயிட்டு, பின்பு ஒதுங்கிப் போய்க் கையை விட்டிடுவீங்களோ என்றுதான்.

ஏனெனில் அடிக்கடி, தினம் தினம் பதிவு போட்டோரெல்லாம் இப்போ சோர்ந்து கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டார்கள், பார்க்க கவலையாக இருக்கு, பழகியோர் எல்லாம் காணாமல் போகிறார்கள்.... அப்படி நீங்களும் ஆகிடக்கூடாதென்றே சொல்கிறேன்.

கொஞ்சம் ஓவராச் சொல்லிட்டனோ?.. சே..சே.. அப்பூடி இருக்காது:).
//

ஹே...ஹே..
அப்படி எல்லாம் ஓய்ந்து போக மாட்டேன்.

அட்லீஸ் ஆடிக்கு ஒரு பதிவு அமாவாசைக்கு ஒரு பதிவு என்றாலும் எழுதிட்டு இருப்பேனில்லே

நிரூபன் said...
Best Blogger Tips

@நிரோஜ்

தீவகம் என்பதை தீவகத்தர் என்பதும் இதற்குள் அடங்கும் ... அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்
//

வாங்கோ நிரோஜ்,
ஆம்
இவற்றினை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

அனுஷ்யா said...
Best Blogger Tips

இவற்றை அறிய எனக்கு கிடைத்த ஒரு செய்தி தொகுப்பாகவே இதனை பார்கிறேன்.. அதற்க்கு முதல் நன்றி...
இதனை என் எழுத வேண்டாம் என்று தடுத்தார்கள் என்று புரியவில்லை...
நிச்சயம் தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

அனுஷ்யா said...
Best Blogger Tips

athira said...

// இப்படித்தலைப்பை டக்கு டக்கெனப் போட்டால்.... படிக்கக்கூட முடியாமல் போகுதே நிரூபன்...

நிரூபனை ஆராவது பிடிச்சு புளியில கட்டி வையுங்கோ:).. கடசி ஒரு நாளைக்கு ஒரு தலைப்புப் போட்டால் பறவாயில்லை..//

என் கருத்தும் இதுவே நண்பா.. ஏற்கனவே சொல்லியும் விட்டேன்...:)

அனுஷ்யா said...
Best Blogger Tips

மகிழம்பூச்சரம் அறிமுகத்திற்கு நன்றி..
சென்று பார்த்தேன்.. உங்கள் வரிகள் மிகை அல்ல என்று புரிந்தது.. இணைந்தும் இருக்கிறேன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@மயிலன்

மன்னிக்கவும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இன்னும் ஒரு கொஞ்ச நாள் தானே இருக்கு, இந்த மாசம் முடிய,
ஸோ...பெப்ரவரி மாசத்தில இருந்து நாளுக்கு ஒரு பதிவு தான் போடப் போறேன்.

ஓக்கேவா?

அம்பலத்தார் said...
Best Blogger Tips

மிகவும் அவதானத்துடன் ஒவ்வொரு சொற்களும் எழுதப்பட்டிருக்கின்றன. மிகவும் சந்தோசம். நீங்கள் கையில் எடுத்திருக்கும் விடயம் உணர்வுசார்ந்த விடயம். எடுத்தேன் கவிட்டேன் என்றில்லாமல் நிதானமாக விவாதிக்கவேண்டிய விடயம்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நான் பிரதேச, இன வாதங்களை எப்பவுமே எதிர்க்கிறனான். ஆனால் இப்போ சமீபகாலமாக பலரும் கூறுகிற கருத்துக்களால் இந்தவிடயத்தில் அவர்கள் புரிந்துகொள்கிறமாதிரி சில விடயங்களை சொல்லவேண்டி இருக்கிறது. நிரூ இந்தவிடயம்பற்றி நானே ஒரு ஆணித்தரமான சாடல் பதிவிடவேணும் என்று எண்ணியிருந்தன் நீங்கள் தொடங்கிவிட்டியள் தொடருங்கோ நிச்சயமாக மீளாய்வு செய்யப்படவேண்டிய, விவாதித்து தவறுகளை கண்டறிந்து திருத்திக்கொள்ளவேண்டிய விடயம் இது.

Yoga.S. said...
Best Blogger Tips

athira said...நிரூபனை ஆராவது பிடிச்சு புளியில கட்டி வையுங்கோ:)///புளியில(மரம்?)கட்டி வைக்கிற அளவுக்கு????அப்பிடியெல்லாம் நிரூபன் கெட்ட பையன் இல்லையே?ஹி!ஹி!ஹி!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

நான் யாழ்ப்பாணத்தான்,யாழ்ப்பாணத்தான்,யாழ்ப்பாணத்தான்!!!!!!!!!!!!போதுமா???உள்ளே குமுறுவது தெரியாது,அதனால்................

நிரூபன் said...
Best Blogger Tips

@மயிலன்
இவற்றை அறிய எனக்கு கிடைத்த ஒரு செய்தி தொகுப்பாகவே இதனை பார்கிறேன்.. அதற்க்கு முதல் நன்றி...
இதனை என் எழுத வேண்டாம் என்று தடுத்தார்கள் என்று புரியவில்லை...
நிச்சயம் தொடருங்கள்...வாழ்த்துக்கள்.//

ஹே...ஹே..
இதனை எழுத வேண்டாம் என தடுத்தது,
நமது அழுக்குகளை நாமே பகிர்ந்து பிறர் பார்த்து அருவருக்கும் வகையில் இப் பதிவு அமையும் என்பதால் தான் நண்பா.

ஆனாலும் சிலவற்றை சொல்லாமல் இருக்க முடியவில்லையே.

அது தான் மறுபடியும் இத் தொடரை எழுத தொடங்கியிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மயிலன்

மகிழம்பூச்சரம் அறிமுகத்திற்கு நன்றி..
சென்று பார்த்தேன்.. உங்கள் வரிகள் மிகை அல்ல என்று புரிந்தது.. இணைந்தும் இருக்கிறேன்...
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

மிகவும் அவதானத்துடன் ஒவ்வொரு சொற்களும் எழுதப்பட்டிருக்கின்றன. மிகவும் சந்தோசம். நீங்கள் கையில் எடுத்திருக்கும் விடயம் உணர்வுசார்ந்த விடயம். எடுத்தேன் கவிட்டேன் என்றில்லாமல் நிதானமாக விவாதிக்கவேண்டிய விடயம்.
//

நன்றி ஐயா,
உங்களைப் போன்ற பெரியவர்கள் தான் மேலும் பல கருத்துக்களைச் சொல்லி,
இந்த விவாதப் பதிவினைக் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

நான் பிரதேச, இன வாதங்களை எப்பவுமே எதிர்க்கிறனான். ஆனால் இப்போ சமீபகாலமாக பலரும் கூறுகிற கருத்துக்களால் இந்தவிடயத்தில் அவர்கள் புரிந்துகொள்கிறமாதிரி சில விடயங்களை சொல்லவேண்டி இருக்கிறது. நிரூ இந்தவிடயம்பற்றி நானே ஒரு ஆணித்தரமான சாடல் பதிவிடவேணும் என்று எண்ணியிருந்தன் நீங்கள் தொடங்கிவிட்டியள் தொடருங்கோ நிச்சயமாக மீளாய்வு செய்யப்படவேண்டிய, விவாதித்து தவறுகளை கண்டறிந்து திருத்திக்கொள்ளவேண்டிய விடயம் இது.
//

உண்மை தான் ஐயா,
அவரவர்க்கு அவரவர் வழியில் தானே சொல்ல வேண்டும்,
ஆகவே தான் மறுபடியும் இந்த வழியினைக் கையிலெடுத்திருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

athira said...நிரூபனை ஆராவது பிடிச்சு புளியில கட்டி வையுங்கோ:)///புளியில(மரம்?)கட்டி வைக்கிற அளவுக்கு????அப்பிடியெல்லாம் நிரூபன் கெட்ட பையன் இல்லையே?ஹி!ஹி!ஹி!!!!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஐயா...சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.

கொஞ்சம் விட்டா
வாழைக்கும் தாலி கட்டச் சொல்லிடுவீனை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

நான் யாழ்ப்பாணத்தான்,யாழ்ப்பாணத்தான்,யாழ்ப்பாணத்தான்!!!!!!!!!!!!போதுமா???உள்ளே குமுறுவது தெரியாது,அதனால்................
//

இப்படிச் சொல்வதில் தவறேதும் இல்லை ஐயா,
ஆனால் தம்மை இந்த ஊரார் என்று சொல்லிக் கொண்டு,
பிறரை தரம் தாழ்த்தி எள்ளி நகைத்து மகிழ்வோர் இருக்கிறார்களே!

அவர்களின் செயல் தான் தவறு!
அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் அடுத்தடுத்த பாகங்கள் அமையும்.

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...நானும்...நானும்...!

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

//நிரூபன் said...

@Yoga.S.FR

athira said...நிரூபனை ஆராவது பிடிச்சு புளியில கட்டி வையுங்கோ:)///புளியில(மரம்?)கட்டி வைக்கிற அளவுக்கு????அப்பிடியெல்லாம் நிரூபன் கெட்ட பையன் இல்லையே?ஹி!ஹி!ஹி!!!!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஐயா...சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.

கொஞ்சம் விட்டா
வாழைக்கும் தாலி கட்டச் சொல்லிடுவீனை.
அவ்வ்வ்வ்வ்வ்//

புளியில கட்டினால் கொஞ்சம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரோங்கா இருக்கும், அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போய்ப் பதிவு போட்டிடமாட்டார்.... அடுத்து புளியின் குளிர்ச்சியில சூடாகாமல் குளிந்துபோய் நல்ல குளிர்ப் பதிவாப் போடுவார்... எப்பூடி என் கிட்னியா? அவ்வ்வ்வ்:))).

---------------------------

என்னாது, உங்களையெல்லாம் வாழைக்குத் தாலிகட்டச் சொல்லுவமோ? இதுக்கு வாழைமரம்தான் ஒத்துக்கொள்ளுமோ? நோ சான்ஸ்ஸ்ஸ்.. ஆசையைப் பாருங்கோவன்:))))... ம்ஹூம்.. எங்கிட்டயேவா?:))..
--------------------------

அதுதானே என் பேவரிட் தலைப்பு நேற்றோடு போட்டுது... படித்தேன்... அடுத்தது வரட்டும்... கன்னிவெடி.. சே..சே.. என்னப்பா இது..., கண்ணிவெடி வைச்சிடலாம்:))

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

யாழ்ப்பாணத்தாட்களுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்குது தெரியுமோ?:) நான் சொல்லமாட்டேன் சாமீஈஈஈஈஈ:)).

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூ...நானும்...நானும்...!
//

அக்காவும் பின்னாடி நிற்பதாக சொல்லுறீங்க.
அவ்வ்

நன்றி அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

புளியில கட்டினால் கொஞ்சம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரோங்கா இருக்கும், அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போய்ப் பதிவு போட்டிடமாட்டார்.... அடுத்து புளியின் குளிர்ச்சியில சூடாகாமல் குளிந்துபோய் நல்ல குளிர்ப் பதிவாப் போடுவார்... எப்பூடி என் கிட்னியா? அவ்வ்வ்வ்:))).
//

நெடுங்க குளிர்ப் பதிவு போடக் கூடாது அக்கா.
ஏன் என்று கேட்கிறீங்களோ! குளிர் கூடி படிக்கிற ஆட்களுக்கு சன்னி ஆக்கிடாது;-))))

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

என்னாது, உங்களையெல்லாம் வாழைக்குத் தாலிகட்டச் சொல்லுவமோ? இதுக்கு வாழைமரம்தான் ஒத்துக்கொள்ளுமோ? நோ சான்ஸ்ஸ்ஸ்.. ஆசையைப் பாருங்கோவன்:))))... ம்ஹூம்.. எங்கிட்டயேவா?:))..
--------------------------

அதுதானே என் பேவரிட் தலைப்பு நேற்றோடு போட்டுது... படித்தேன்... அடுத்தது வரட்டும்... கன்னிவெடி.. சே..சே.. என்னப்பா இது..., கண்ணிவெடி வைச்சிடலாம்:))
//

செவ்வாய்க்குற்றம் இருந்தா ஊரில வாழைக்கு தானே தாலி கட்டச் சொல்லுறவை
அதுக்குப் பிறகு தானே அம்மன் தாலி கட்டுறவை.

கன்னி வெடியோ..கண்ணிவெடியோ...அடுத்த பாகத்தில கண்டிப்பாக உங்களை அசர வைக்கும் வெடி காத்திருக்கு

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

யாழ்ப்பாணத்தாட்களுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்குது தெரியுமோ?:) நான் சொல்லமாட்டேன் சாமீஈஈஈஈஈ:)).
//

அந்தப் பட்டப் பெயர் தான் அடுத்த பாகத்தில வரும்!

ப....என்ற எழுத்தில தொடங்கி..இடையில சூ...வந்து (ஐ மீன் எழுத்தை சொல்கிறேன்)பி....என்ற எழுத்தில் முடியும்

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

ஹா...ஹா..ஹா... தம்பி கற்பூரம் மாதிரி:), அப்போ வாழைக்குத் தாலிகட்ட விடலாம்:)).

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

எனக்கு இப்பவே சன்னி வந்திடும்போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

நிரூபனுக்குப் பிறந்தநாள் வருகுதெல்லோ? எப்ப நிரூபன்? மாயாவோடு கதைத்ததை நான் ஒட்டுக்கேட்டேன், ஆனா திகதி மாதம் தெரியாது.. ஜனவரி/ பெப்ரவரி என நியாஆஆபகம்:))

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
haa..
haa.
என் பிறந்த நாள் நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும்.

இதில இருக்கு
முடிஞ்சா கண்டு பிடியுங்க பார்ப்போம்

https://www.facebook.com/nirupan1

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

உங்களுக்கு செவ்வாய் தோசமோ நிரூபன்? அப்போ முதல்ல வாழைக்குத் தாலி கட்டுவம், பிறகு பொம்பிளை தேடலாம்... இது எப்பூடி? சூப்பர் ஐடியா இல்லை?:))

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

அடடா பெப்பரு:) 29 ஆ? அவ்வ்வ்வ்வ்வ்? அப்போ எப்ப கொண்டாடுவீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

உங்களுக்கு செவ்வாய் தோசமோ நிரூபன்? அப்போ முதல்ல வாழைக்குத் தாலி கட்டுவம், பிறகு பொம்பிளை தேடலாம்... இது எப்பூடி? சூப்பர் ஐடியா இல்லை?:))
//

ஐயோ...முருகா! இங்கே என்ன நடக்குது!
நான் அப்படி ஒன்னும் சொல்லலையே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

2ம் நம்பர்காரரோ? அவ்வ்வ்வ்வ்வ். சரியான லெவலாக இருப்பீங்களே?.. 2ம் நம்பருக்கு லெவல் அதிகம்:))

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

//ஐயோ...முருகா! இங்கே என்ன நடக்குது!
நான் அப்படி ஒன்னும் சொல்லலையே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

உஸ்ஸ்ஸ்ஸ் புது மாப்பிளை உப்பூடி எல்லாம் கத்தப்பூடா, பிறகு அலுவல் கெட்டுப்போகும்:)).. நான் ரொம்ப அடக்க ஒடுக்கமான:) தம்பி, அவரின் குரலே வெளில வராது என்றெல்லோ சொல்லி வச்சிருக்கிறேன்:)).

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அடடா பெப்பரு:) 29 ஆ? அவ்வ்வ்வ்வ்வ்? அப்போ எப்ப கொண்டாடுவீங்க?
//

இந்த வருஷம் கொண்டாடுவேன்
அப்புறமா 2016

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

2ம் நம்பர்காரரோ? அவ்வ்வ்வ்வ்வ். சரியான லெவலாக இருப்பீங்களே?.. 2ம் நம்பருக்கு லெவல் அதிகம்:))
//

ஒரு பச்சைப் புள்ளையைப் பார்த்து சொல்லுற வார்த்தையா இது?

நான் ரொம்ப அப்பாவிங்க. ஒரு சிம்பிள் பையன்!
நம்புங்க! நெசம் தானே!

ஏனைய ஒரு சில பதிவர்களைப் போல என்னை நானே புகழ்வதில்லை தானே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

அப்போ 2016 இல குட்டிக் குடும்பமாக நிண்டு கேக் வெட்டலாம்... வெட்ட வாழ்த்துக்கள். ஆனா அதுக்கு முன் 2012 டிஷம்பர் வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஹா...ஹா..ஹா... தம்பி கற்பூரம் மாதிரி:), அப்போ வாழைக்குத் தாலிகட்ட விடலாம்:)).
//

ஹே..
ஹே.

ஏன் நான் நல்லா பத்தி எரிவேனா?
அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

எனக்கு இப்பவே சன்னி வந்திடும்போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).
//

எதுக்கும் வீட்டுக்காரரிடம் அத்தானிடம் ஒரு செக் அப் பண்ணிக் கொள்ளுங்க.

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

//நான் ரொம்ப அப்பாவிங்க. ஒரு சிம்பிள் பையன்!
நம்புங்க! நெசம் தானே!

ஏனைய ஒரு சில பதிவர்களைப் போல என்னை நானே புகழ்வதில்லை தானே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நிஜம்தான் நம்பிட்டோம்.

நீங்க புகழ்ந்தால் எங்கட கை என்ன புளியங்காய் ஆயப் போயிடுமோ:).... பின்னூட்டம் போட்டே, உங்கட வாயை அடக்கிட மாட்டோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) எங்கிட்டயேவா?:).

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

ஐ 49.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அப்போ 2016 இல குட்டிக் குடும்பமாக நிண்டு கேக் வெட்டலாம்... வெட்ட வாழ்த்துக்கள். ஆனா அதுக்கு முன் 2012 டிஷம்பர் வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))//

அவ்வ்வ்வ்வ்வ்

2012 இல் ஒன்னுமே நடக்காதுங்க
அப்புறமா கலியாணம் கட்டின உடனே குழந்தைங்க பெத்துக்குவது இப்போ பாஷன் இல்லை தானே..
அதால கொஞ்சம் ஊர் சுத்துவம்,
!

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

//உங்களின் எண்ணக் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.!//

ஐ.... 50. மீ போய் ரீ ஊத்தப்போறேன்? நிரூபனுக்கும் வேணுமோ? வேணுமெண்டால் கிச்சினுக்குள் போய் ஊத்திக் குடியுங்கோ OK?:)

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அப்போ 2016 இல குட்டிக் குடும்பமாக நிண்டு கேக் வெட்டலாம்... வெட்ட வாழ்த்துக்கள். ஆனா அதுக்கு முன் 2012 டிஷம்பர் வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))
//

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@athiraஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நிஜம்தான் நம்பிட்டோம்.

நீங்க புகழ்ந்தால் எங்கட கை என்ன புளியங்காய் ஆயப் போயிடுமோ:).... பின்னூட்டம் போட்டே, உங்கட வாயை அடக்கிட மாட்டோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) எங்கிட்டயேவா?:).
//

இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இருந்தேன்.
அவ்வ்வ்வ்வ்வ்

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

//2012 இல் ஒன்னுமே நடக்காதுங்க
அப்புறமா கலியாணம் கட்டின உடனே குழந்தைங்க பெத்துக்குவது இப்போ பாஷன் இல்லை தானே..
அதால கொஞ்சம் ஊர் சுத்துவம்,///

அவ்வ்வ்வ்வ் நல்லாத்தானிருக்கு, அதுக்காக 2016 வரையும் ஊர் சுத்தினா, பிறகு தாத்தாவாகிடுவீங்க... இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லமாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

//இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இருந்தேன்.
அவ்வ்வ்வ்வ்வ்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முன்னாடி என்ன தெரியும் எங்களைப்பற்றி:)) சும்மா எல்லாம் எடுத்துவிடப்பூடா:)

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

/உங்களின் எண்ணக் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.!//

ஐ.... 50. மீ போய் ரீ ஊத்தப்போறேன்? நிரூபனுக்கும் வேணுமோ? வேணுமெண்டால் கிச்சினுக்குள் போய் ஊத்திக் குடியுங்கோ OK?:)
//

எனக்கு ஊத்திக் குடிக்க எல்லாம் டைம் இல்லைங்க.
கூரியரில அனுப்பி வையுங்க. கிடைச்சதும் சூடு ஆற முன்னர் சுட்டிச்சிட்டு டேஸ்ட் பத்தி மெயில் பண்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அவ்வ்வ்வ்வ் நல்லாத்தானிருக்கு, அதுக்காக 2016 வரையும் ஊர் சுத்தினா, பிறகு தாத்தாவாகிடுவீங்க... இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்லமாட்டேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))
//

போங்க. அவனவன் 66 வயசிலையும் ஆமையை நிரூபிக்கிறான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு என்ன 30++ ஆகிடவா போகிறது!
நாம எப்பவும் 18 இல்லே..

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

/இதெல்லாம் முன்னாடி தெரிஞ்சா நான் பேசாம இருந்தேன்.
அவ்வ்வ்வ்வ்வ்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முன்னாடி என்ன தெரியும் எங்களைப்பற்றி:)) சும்மா எல்லாம் எடுத்துவிடப்பூடா:)
//

ஹே...ஹே..
அதையெல்லாம் இங்கே சொல்ல முடியாதுங்க.

ஐ மீன் ஏதும் தெரிஞ்சாத் தானே சொல்ல முடியும்! முன்னாடி!

ad said...
Best Blogger Tips

வணக்கம்.
உண்மையில் சுடச்சுட கொடுக்கப்படவேண்டிய விடயம்.
அண்மையில் குறிப்பிட்ட சிலரின் பதிவுகளைப்பார்த்தேன்.பிரதேசவாதத்தை வெறியுடன் திணித்துப் பதிவிட்டிருந்தார்கள்.(எல்லோரும் அல்ல.)

தமது பிரதேச வாதத்திற்குள் தமிழரின் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளையும் இழுத்துச் சொருகி, பிரதேசவாதத்துடன் கூடிய தீர்வுதான் தேவை என்ற அர்த்தம் தொனிக்க எழுதியிருந்தார்கள்.

ஒரு பதிவோ ரெண்டு பதிவோ அல்ல.தொடர்ச்சியாகப் பல பதிவுகள்.
பார்க்கப்பார்க்க சினம்தான் வந்தது.
கண்டிப்பாக எதிர்ப்பதிவு போட்டேயாகவேண்டுமென்று- புலிகேசி ஸ்டைலில்- ஒரு உள் & வெளி க்குத்துகள் கலந்து ஒரு பதிவு தயார்பண்ணிக்கொண்டிருந்தேன்.

தாங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள்.
அனல்ப்பறக்கட்டும்.

Yoga.S. said...
Best Blogger Tips

பனங்கொட்டை சூப்பி,ஆம்!அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே?அதில் உள்ள சுவை,அதன்பலன்,அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள்!அந்தப் பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து போத்தலில் அடைத்து உலகம் பூராவும் விற்பனை செய்கிறார்கள்!!!

Yoga.S. said...
Best Blogger Tips

"அதிரா"ப் பொம்பிளை லீவில இருக்கிறா போலை?????ஒருமாதிரி நிரூபன் பிறந்த நாளை கதைவிட்டுப் பிடுங்கீட்டா!!!!!நாலு வரியத்துக்கு ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடுறதும் ஒருவகையில எகொனமிக்(பொருளாதாரம்)தான்,ஹி!ஹி!ஹி!!!!

Utube Chef அதிரா:) said...
Best Blogger Tips

//Yoga.S.FR said...

பனங்கொட்டை சூப்பி//

ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் ஆரைத் திட்டுறீங்க? நிரூபனையோ?:)))... நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் சாமீஈஈஈ.. நீங்க வடிவாத் திட்டுங்கோ:))))..... ஆள் இப்ப நித்திரை, விடியமுன் ஓடிடுங்க:))).

4 வருடத்துக்கு ஒருமுறை என்றதாலதான், நிரூபன் லெவல் அடிக்காமல் டேட் சொல்லிட்டார், இல்லையெனில் சொல்லியிருக்கமாட்டார்:))...

ஆள் இப்ப

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்...,,,கம் நிரூபனே.
கொஞ்சம் தேடல் அதிகம்  அதனால் வரவில் மந்தம். இனி பழைய நிரூபனைப் பார்க்கப் போறோம் என்றால்!!!(இடையில் தடம் மாறியது  ஓரே ஆங்கிலப்படம் பார்த்தால் பிரெஞ்சுக்காரன் விரும்ப மாட்டான் இங்கேயும் உண்டு)  தனிமரமும் ரெடி.   கோதாவிற்கு நானும்  ஒரு பனங்கொட்டை. அதிலையும் தீவான் .இந்த தீவான்களுக்குள்ளும் பல பிரதேச வாதம் உண்டு முதலில் 7 தீவும்.  காரைதீவு(நகர்) ,நயினாதீவு,புங்குடிதீவு,அனலதீவு,நெடுந்தீவு ,எழுவைதீவு(புளியந்தீவு) ,வேலனை என்பன ஆனால் இந்த மக்களிடம் கூட ஒவ்வொரு பட்டப்பெயர் அல்லது வன்மம் புங்குடிதீவானுக்கு புகையிலை வித்தவன் என்ற சொல்லாடல் மூலம் தாக்குவது
வேலனை படலைகட்டி என்று தாக்குவது 
காரைதீவான் காகம் பறப்பான் என காதோடு கதைப்பது.  இப்படி பல பேச்சு மொழி வழக்கு இருக்கு என்றாலும் நான் வாழ்க்கைப்பட்டது(தொழில் பார்த்தது அதிகம் மலையகத்தில் )

தனிமரம் said...
Best Blogger Tips

இந்தப்பதிவு பற்றி முன்னரே அதிகம் நேசன்.( இப்ப தனிமரம்) அதிகம் பின்னூட்டம் இட்டு ஓட்டைவடையுடன் மோதியது கடந்தகாலம் என்பதால் நிகழ்காலத்தில் வருவோருக்கு வழிவிட்டு காத்திருக்கின்றேன் தேவைப்படும்போது வேலை நேரத்திலும் ஓடிவருவேன். (யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க  ஹீ ஹீ) 

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவடுகள்

வணக்கம்.
உண்மையில் சுடச்சுட கொடுக்கப்படவேண்டிய விடயம்.
அண்மையில் குறிப்பிட்ட சிலரின் பதிவுகளைப்பார்த்தேன்.பிரதேசவாதத்தை வெறியுடன் திணித்துப் பதிவிட்டிருந்தார்கள்.(எல்லோரும் அல்ல.)
//

ஆகா..இப்போது ஆரம்பித்திருக்கிறோம்.
இனி குடுத்திடுவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவடுகள்

தமது பிரதேச வாதத்திற்குள் தமிழரின் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளையும் இழுத்துச் சொருகி, பிரதேசவாதத்துடன் கூடிய தீர்வுதான் தேவை என்ற அர்த்தம் தொனிக்க எழுதியிருந்தார்கள்.

ஒரு பதிவோ ரெண்டு பதிவோ அல்ல.தொடர்ச்சியாகப் பல பதிவுகள்.
பார்க்கப்பார்க்க சினம்தான் வந்தது.
கண்டிப்பாக எதிர்ப்பதிவு போட்டேயாகவேண்டுமென்று- புலிகேசி ஸ்டைலில்- ஒரு உள் & வெளி க்குத்துகள் கலந்து ஒரு பதிவு தயார்பண்ணிக்கொண்டிருந்தேன்.

தாங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள்.
அனல்ப்பறக்கட்டும்.
//

ஆகா....
இவர்கள் எல்லோருக்கும் இப் பதிவுகளுடன் நிச்சயம் புரிதல் கிடைக்கும் என நினைக்கிறேன்.
பார்ப்போம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

பனங்கொட்டை சூப்பி,ஆம்!அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே?அதில் உள்ள சுவை,அதன்பலன்,அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள்!அந்தப் பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து போத்தலில் அடைத்து உலகம் பூராவும் விற்பனை செய்கிறார்கள்!!!//

அடுத்த பாகத்தில இந்த விடயங்கள் எல்லாம் வரும்! பொறுமை ஐயா! பொறுமை.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

"அதிரா"ப் பொம்பிளை லீவில இருக்கிறா போலை?????ஒருமாதிரி நிரூபன் பிறந்த நாளை கதைவிட்டுப் பிடுங்கீட்டா!!!!!நாலு வரியத்துக்கு ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடுறதும் ஒருவகையில எகொனமிக்(பொருளாதாரம்)தான்,ஹி!ஹி!ஹி!!!!
//

60வது பிறந்த நாள் கொண்டாடுற ஐயாவுக்குத் தான் பொருளாதாரத்தின் அருமை புரிஞ்சிருக்குப் போல.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் ஆரைத் திட்டுறீங்க? நிரூபனையோ?:)))... நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் சாமீஈஈஈ.. நீங்க வடிவாத் திட்டுங்கோ:))))..... ஆள் இப்ப நித்திரை, விடியமுன் ஓடிடுங்க:))).

4 வருடத்துக்கு ஒருமுறை என்றதாலதான், நிரூபன் லெவல் அடிக்காமல் டேட் சொல்லிட்டார், இல்லையெனில் சொல்லியிருக்கமாட்டார்:))...

ஆள் இப்ப
//

அவ்வ்வ்வ்வ்

என்னை நல்லாத் திட்டுங்கோ! எனக்கு கோபமே வராது!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்கொஞ்சம் தேடல் அதிகம் அதனால் வரவில் மந்தம். இனி பழைய நிரூபனைப் பார்க்கப் போறோம் என்றால்!!!(இடையில் தடம் மாறியது ஓரே ஆங்கிலப்படம் பார்த்தால் பிரெஞ்சுக்காரன் விரும்ப மாட்டான் இங்கேயும் உண்டு) தனிமரமும் ரெடி. கோதாவிற்கு நானும் ஒரு பனங்கொட்டை. அதிலையும் தீவான் .இந்த தீவான்களுக்குள்ளும் பல பிரதேச வாதம் உண்டு முதலில் 7 தீவும். காரைதீவு(நகர்) ,நயினாதீவு,புங்குடிதீவு,அனலதீவு,நெடுந்தீவு ,எழுவைதீவு(புளியந்தீவு) ,வேலனை என்பன ஆனால் இந்த மக்களிடம் கூட ஒவ்வொரு பட்டப்பெயர் அல்லது வன்மம் புங்குடிதீவானுக்கு புகையிலை வித்தவன் என்ற சொல்லாடல் மூலம் தாக்குவது
வேலனை படலைகட்டி என்று தாக்குவது
காரைதீவான் காகம் பறப்பான் என காதோடு கதைப்பது. இப்படி பல பேச்சு மொழி வழக்கு இருக்கு என்றாலும் நான் வாழ்க்கைப்பட்டது(தொழில் பார்த்தது அதிகம் மலையகத்தில் )
//

வணக்கம் தனிமரம் சார்,

கொஞ்சம் பொறுமை காக்க கூடாதா.

என்னுடைய அடுத்த பதிவில் சொல்ல இருக்கும் விடயங்களை இப்படிப் போட்டு உடைச்சிட்டீங்களே!

அப்புறமா எப்போதும் ஒரே மாதிரியான பதிவுகளை எழுத முடியாதுங்க.ரசிகர்களுக்கு போர் அடிக்கும்,
அதால சினிமாப் பிரியர்களைப் பத்தியும் நாம நினைச்சுப் பார்க்க வேண்டும் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

இந்தப்பதிவு பற்றி முன்னரே அதிகம் நேசன்.( இப்ப தனிமரம்) அதிகம் பின்னூட்டம் இட்டு ஓட்டைவடையுடன் மோதியது கடந்தகாலம் என்பதால் நிகழ்காலத்தில் வருவோருக்கு வழிவிட்டு காத்திருக்கின்றேன் தேவைப்படும்போது வேலை நேரத்திலும் ஓடிவருவேன். (யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ஹீ ஹீ)
//

முன்னர் ஒரு பாகத்தினை மாத்திரம் ரிலீஸ் பண்ணியிருந்தேன்.

இனி வரும் காலங்களில் ஏனைய பாகங்கள் வெளி வரும்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...
60வது பிறந்த நாள் கொண்டாடுற ஐயாவுக்குத் தான் பொருளாதாரத்தின் அருமை புரிஞ்சிருக்குப் போல.////எங்கிட்டயேவா?தம்பி,அதற்கு இன்னமும் சில ஆண்டுகள் இருக்கின்றன!அப்போதும்"இருந்தால்"அறிவிப்பேன்,வந்து "கொட்டி"விட்டுப் போகவும்!///என்னை நானே பனங்கொட்டை சூப்பி என்று புகழ்ந்து கொண்டேன்,அதிரா!இதனை விடவும் எங்கள் ஊரில் ஒரு"சிறப்பான"பெயரால் அழைப்பார்கள்.

Yoga.S. said...
Best Blogger Tips

@தனிமரம்......யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ஹீ ஹீ!!!////பப்ளிக்கா இப்புடியெல்லாம் சொல்லப்பிடாது!வயதுபோன ஆளுக்கு நேசன் கோப்பி கூட(பச்சத் தண்ணி)குடுக்க மாட்டன் எண்டு நினைச்சு பொம்பிளை தரமாட்டினம் ஹி!ஹி!ஹி!!!!ஐ லைக் ஒல்வேய்ஸ் அண்ணா கோப்பி!!!!

Admin said...
Best Blogger Tips

வணக்கம் நிரு...
நல்ல விடயம் பற்றி எழுதப் போகின்றீர்கள். அடுத்தடுத்த பகுதிகள் ஆரோக்கியமான விவாதமாக அமைவது நல்லதென நினைக்கின்றேன். விவாதமாக இருக்கும் பட்சத்தில் நானும் சில விடயங்களை விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன். இத் தொடரில் பதிவை திசை திருப்பல் சம்பந்தமில்லாத விடயங்களை தவிர்த்து ஆரோக்கியமான விவாதமாக அமையட்டும். அப்போதுதான் சில தெளிவுகள் கிடைக்கும்.

தனிமரம் said...
Best Blogger Tips

@தனிமரம்......யோகா ஐயாவுக்கு காப்பி கொடுக்காதீங்க ஹீ ஹீ!!!////பப்ளிக்கா இப்புடியெல்லாம் சொல்லப்பிடாது!வயதுபோன ஆளுக்கு நேசன் கோப்பி கூட(பச்சத் தண்ணி)குடுக்க மாட்டன் எண்டு நினைச்சு பொம்பிளை தரமாட்டினம் ஹி!ஹி!ஹி!!!!ஐ லைக் ஒல்வேய்ஸ் அண்ணா கோப்பி!!!! //
அண்ணா கோப்பியின் சுவைக்கு புருவும் இல்லை,பில்டர்காப்பியும் இல்லை ஒருவேளை நாக்குக்தான் இந்த காப்பி எல்லாம் குடித்து செத்துப் போச்சோ தெரியாது. ஹா ஹா

யோகா ஐயாவுக்கு தண்ணி என்ன சாப்பாடே போடுவேன் தொடர்ந்து என் ஐயன் கருணையால்.(யூரோ மட்டும் தரமாட்டன் ஹீ ஹு)

தனிமரத்திற்கு பொம்பிள்ளை தரமருத்தோர் பட்டியல் அதிகம் அது பற்றி இன்னொரு தொடர் நிச்சயம் எழுதுவேன் (ஹீ விற்பனை பிரதிநிதிக்கும்,லாரி ரைவர்களுக்கும் சமுகத்தில் ஒரு கணிப்பு இருக்கு ஐயாவுக்கு புரியும் விளக்கம் சொன்னால் 18++ போடனும்  வேனாம்.)

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

பிரதேசவாதம்தான் முக்கிய காரணம், நம் அழிவுக்கு எனத்தான் நான் நினக்கிறேன். பலர் தெரிந்தோ தெரியாமலோ இன்னும் பிரதேசவாதத்திற்கு ஊட்டமளிக்கிறார்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails