Monday, January 2, 2012

ஜெயா மாளிகையில் சசிகலா- நடராஜன் நடாத்திய ஈழ ஆதரவு நாடகம்!

போயஸ் கார்டனுள் புதைந்திருக்கும் ரகசியங்களும்,துலங்கும் மர்மங்களும்!
தமிழக மக்களின் தார்மீக ஆதரவுக் குரலைத் தமக்குச் சாதகமாக்கி அனுதாபம் தேட முற்படும் அரசியல்வாதிகள் ஒரு புறமும், ஈழ மக்களுக்காக இணையற்ற அரசியல் பணிகளைச் செய்யும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மறு புறமும் என; காலச் சக்கர வேகத்திற்கு இணையாக தமிழகத்து ஈழ ஆதரவும் சுழன்று கொண்டிருக்கிறது.  தமிழக மக்கள் மத்தியில் அண்மையில் பரபரப்பினை ஏற்படுத்திய விடயம் தான் சரித்திரத்தில் சந்தோசத் தோழிகளாக இருந்த சசிகலா அம்மையாரும், ஜெயா அம்மையாரும் பிரிந்தமை ஆகும். 
சசிகலா அவர்கள் போயஸ் கார்டனை விட்டு வெளியேற முன்பதாகவே அவரது நடவடிக்கைகளை ரகசிய கமெராக்களின் உதவியோடு ஜெயா அம்மையார் கண்காணித்து வந்ததாகவும், பிரபல பத்திரிகைப் பிரமுகர் ஒருவர் இவ் விடயங்களில் ஜெயா தரப்பிற்குச் சார்பாக வீடீயோக்களைப் பரிசீலனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேற்படி பரபரப்பு விடயங்கள் ஒரு புறமிருக்க, ஜெயா டீவி ஊழியர்கள் சிலர் காரில் வீடியோ சாதனங்களை போயஸ் கார்டனின் மறைவுப் பகுதியிலிருந்து தமது வாகனங்களுக்குள் கொண்டு செல்லும் போது சசிகலாவிற்கு ஆதரவானோர் சிலர் கண்டதாகவும் ஜெயா - சசிகலா விடயத்தினை மேலும் பூதாகரமாக்கும் நோக்கில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதில் எந்தளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது போயஸ் கார்டன் மதிலுக்குத் தான் வெளிச்சம்!

இவ் விடயங்களுக்கும் அப்பால் அண்மையில் வெளியாகியிருக்கும் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விடயம் தான் சசிகலாவின் கணவருக்கும், ஈழ ஆதரவுக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிய செய்திகளாகும். சசிகலா ஜெயா நட்பிற்கு போயஸ் கார்டன் எவ்வளவு தூரம் பங்களிப்பினை நல்கியிருக்கிறதோ; அந்தளவு தூரம் தமிழகத்தில் போலி ஈழ ஆதரவாளர்கள் எனும் போர்வையில் செயற்படும் சில ஈழ ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கான பணப் பரிமாற்றத்திற்கும் போயஸ் கார்டனில் உள்ள சிலரும், அங்கிருந்த முக்கிய பிரமுகர்களான நடராஜனும் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் எனும் செய்தியினை சிபிஐ வெளியிட்டிருக்கிறது.

ஜெயா அவர்களின் சொத்துக்கள் தொடர்பிலும், வருமான வரிகள், வருமானங்கள், செலவீனங்கள் தொடர்பிலும் நம்பகத் தன்மை கொண்டவராக நடராஜன் இருப்பது போன்று; ஈழ ஆதரவுக் குழுக்கள் சிலவற்றினைப் பணப் பரிமாற்றம் மூலம் தூண்டி விட்டு அனல் பறக்கப் பேச வைப்பதிலும் குறியாக நடராஜன் இருந்திருக்கிறார் என தமிழக கியூ பிராஞ் பிரிவினருக்கு சிபிஐ ஊடாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சிபிஐ வலையமைப்பிற்கு மேற்படி விடயங்கள் தெரிய வரும் வரை தமிழகத்தில் உள்ள கியூ பிராஞ் மாநில உளவுத் துறைக்கு இவ் விடயங்கள் தொடர்பாக சிறிதளவு செய்திகளும் எட்டவில்லை என்பதனை அறிந்த சிபிஐ தமிழக கியூ பிராஞ்சின் நடவடிக்கை தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
நோர்வேயினைத் தலமையகமாகக் கொண்டியங்கும் விடுதலைப் புலிகளின்  அனைத்துலகத் தொடர்பகத்தினைச் சேர்ந்த நெடியவன் தலமையிலான குழுவினர் தான் தமிழகத்தில் மீண்டும் ஈழ ஆதரவினை வலுப்படுத்தி, மீளவும் பிரபாகரன் அவர்கள் போரினைத் தொடங்குவார்கள் எனும் பொய்ப் பிரச்சாரத்தினை மேற் கொள்ளுவதற்கு அனல் பறக்கும் பேச்சாளர்கள் சிலரை ஒழுங்கு செய்திருந்ததாகவும், இவர்களின் நடவடிக்கைகளுக்கான பணங்கள் யாவும் சிபிஐ மற்றும் கியூ பிராஞ் போலீஸின் கண்களுக்கு தெரியாது, யாருக்கும் சந்தேகம் வரா வண்ணம் மூன்றாந் தரப்பு ஒன்றினூடாக மிக மிக ரகசியமாக நடை பெற்றதாகவும் சிபிஐ தரப்பு தகவல்களை வெளியிட்டிருக்கிறது. 

இந் நிலையில் சிபிஐ வசம் இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய புள்ளியொருவர் டுபாயில் வைத்து சிக்கியுள்ளார். இதன் மூலம் நடராஜன் உள்ளிட்ட பலரை ஆதாரங்களுடன் அமுக்கும் நடவடிக்கையிலும் சிபிஐ களமிறங்கியிருக்கிறது. போயஸ் கார்டன் தொடர்பில் ஜெயா சசிகலா பிரிவிற்குப் பின்னர் எழுந்திருக்கும் பல்வேறு சர்ச்சைகளிற்கு மத்தியில் ஈழம் தொடர்பான போலி ஆதரவாளர்கள் அல்லது பணத்திற்காக உருவேற்றும் ஆதரவாளர்கள் தொடர்பிலும், அவர்களை வழி நடாத்திய நடராஜன் மற்றும் இதர நபர்களைத் தேடியும் சிபிஐ இப்போது வலை விரித்திருக்கிறது. இந் நிலையில் ஜெயா அம்மையார் தேர்தல் காலத்தில் விசியெறிந்த ஈழ ஆதரவு வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை! 

மிழ் இணையத் தளங்கள், மற்றும் ஆங்கிலத் தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகளின் சாரம்சத்திலிருந்து இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது! 
*************************************************************************************************************
மயிலறகால் உங்களை மென்மையாக வருடுவது போன்று தன் மென்மையான எழுத்துக்களோடு உங்களை வருடும் நோக்கில், உங்கள் வாசிப்புத் திறனை தன் எழுத்துத் தோகை கொண்டு சாந்தப்படுத்தும் நோக்கில் தன் படைப்புக்களை "மயிலிறகு எனும் தளத்தில் பகிர்ந்து வருகிறார் மயிலன்" அவர்கள். 
மயிலன் அவர்களின் தளத்திற்கு நீங்களும் சென்று அவரது படைப்புக்களைப் படித்து மகிழ:
*************************************************************************************************************

16 Comments:

K said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் அவர்களே!

நிவாஸ் said...
Best Blogger Tips

ஹிம்.... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள். அவர்களை அடையலாம் காண்பதும் கடினம்

K said...
Best Blogger Tips

என்னையா ஒரே மர்மமா இருக்கு!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

வணக்கம் நிரூபன் அவர்களே!
//

வணக்கம் மணி அவர்களே,
போட்டோ எல்லாம் மாத்தியிருக்கிறீங்க.
கலக்கலா இருக்கே!
வருக! வருக என்று உங்களையும், ஏனைய நண்பர்களையும் வாசகர்களையும் வரவேற்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிவாஸ்

ஹிம்.... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள். அவர்களை அடையலாம் காண்பதும் கடினம்
//

இவங்களைப் பார்த்து நாமளும் சத்தியராஜ் சார் மாதிரி..
இவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே என்று சொல்லிட வேண்டியது தான்,

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

என்னையா ஒரே மர்மமா இருக்கு!
//

மர்மங்களும், முடிச்சுக்களும் வெகு விரைவில் துலங்கும், அவிழும் என நினைக்கிறேன்.

ad said...
Best Blogger Tips

ஈழமக்கள் பிரச்சனைதான் உலகத்திலுள்ள அனைவருக்குமே அரசியலுக்கு பயன்படுகிறது.என்னதான் மர்மம் துலங்கி என்ன செய்வது.பிறகும் இப்படித்தானே நடக்கப்போகிறது.

அனுஷ்யா said...
Best Blogger Tips

பிறர் கண்ணீரில் சிரிக்கும் கொடுமையே மன்னிக்க முடியாதது..
மன்னார்குடியார் ஒரு படி மேலே போலும்...
கண்ணீரை காசாக்க முயன்று இருக்கிறார்..

இதே போல ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழுணர்வை தூண்டிபார்த்து கலைஞர் பேரனுக்கு வெளிப்படையாக கல்லா கட்டிய முருகதாசும் மன்னிக்கமுடியாதவரே..

தனிமரம் said...
Best Blogger Tips

எல்லாம் அரசியல் ஆகிப்போனதன் விளைவுதான் இப்படியான மர்மங்களுக்கு காரணம் ஆகின்றது தோழி வெளியில்  இனிப்பார்ப்போம் அடுத்த கூத்தை!

அனுஷ்யா said...
Best Blogger Tips

பச்சை நிறத்தில் இருந்த அந்த கடைசி நாலு வரிகள் மிகை எனினும் மனமார்ந்த நன்றிகள்..

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

உங்களுக்கு மட்டும் எங்கிருந்து தலைவரே கிடைக்குது இந்தமாதிரி தகவல் எல்லாம்...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

மயிலுக்கு வாழ்த்துக்கள்...

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம் நிரூபன்!இன்னுமின்னும் எத்தனை,எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ?ஐயாவின் கோட்டையிலிருந்தும் ஏதும் வரக் கூடும்!

சுதா SJ said...
Best Blogger Tips

ஆஹா...... நிருபன் என்ன இது????
இப்படி அதிர்ச்சி கொடுக்கிறீங்க??? அவ்வவ்

சுதா SJ said...
Best Blogger Tips

ஜெயா சசி கும்பலை வெளியேற்றிவிட்டார். இனி பாருங்கள் எத்தனை வழக்கு அவர்கள் மீது பாயப்போகுது என்று... ஹா ஹா (பாய்ந்தாலும் தப்பு இல்லையே.... )

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

போயஸ்கார்டன் சுவருக்கும் கூட உள்ரகசியங்கள் எதுவும் தெரியாது.தெரிந்த ஒரே ஆள் சசிகலா மட்டுமே.ஆனா சின்னாத்தா ஒண்ணாம் நம்பர் கல்லுளிமங்கி:)

உளவுத்துறை செய்திகள் கசிய விடுவதாக இருந்தால் அதன் பின்புலத்தில் வேறு எதிர் மறை செய்திகள் இருப்பதாக அர்த்தம்.

நக்கீரன் முதல் நிரூபன் வரை என்ன என்னமோ ஊதுபத்தி ஏத்துறீங்க.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails