Friday, January 6, 2012

கொடுங்கோலர் மகிந்தரின் அழிவு காலம் நெருங்கி விட்டதா?

இலங்கையின் நவீன துட்டகைமுனு, ஆறாம் பராக்கிரமபாகு எனச் சிங்கள மக்களால் அழைக்கப்படுபவரும், மனிதாபிமானம் நிறைந்த உலக நாடுகளாலும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களாலும் போர்க் குற்றவாளி, கொடுங்கோலர் எனச் சிறப்பிக்கப்படுவரும் தான் இன்றைய இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள்.இந்தியாவிற்கு அடுத்தபடியாக குடும்ப ஆட்சியில் குல விளக்காக இவரது வம்சங்களும், சொந்தங்களும் தான் இன்றைய இலங்கை அரசியலை ஆட்டிப் படைக்கின்றது எனலாம். இலங்கையில் பேச்சுச் சுதந்திரம் முதல், நீங்கள் வீதியில் ஊச்சா இருக்கின்ற நிலமை வரை காரணம் இன்றி ஏதாவது செய்கின்ற போது உங்களையே காரணம் இன்றி காணாமற் போகச் செய்யும் வல்லமை கொண்டவராக விளங்குபவர் தான் இந்த ராஜபக்ஸ.
ராஜபக்ஸ அங்கிள் பற்றி அண்மையில் கிளம்பியிருக்கும் மெகா காமெடி என்ன தெரியுமா? கொடுங் கோலர் மகிந்தரின் ஆட்சி வெகு விரைவில் அடியோடு அழிந்து விடுமாம். மகிந்தரின் குடும்ப ஆட்சி முறை நீங்கி, இலங்கைத் திரு நாட்டிற்கு இன்பம் நிறைந்த நல் வாழ்வு கிடைக்கும் என தமிழக ஜோதிடர் ஒருவர் விஜய் டீவி நிகழ்ச்சியில் புரளியினைக் கிளப்பியிருக்கிறார்.  ஈழத்தின் மிகக் கொடூரம் நிறைந்த இறுதிப் போர் இடம் பெற்ற போது சில ஊடகங்கள் அதிகம் பாவித்த வாக்கியம் தான் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"எனும் தொனிப் பொருள் கொண்ட வாக்கியமாகும்.அதாவது புலிகள் ஆரம்பத்தில் சில தவறுகளைச் செய்திருந்தார்கள் என்றும், அதன் விளைவினால் தான் புலிகளும், அவர்களோடிருந்த மக்களும் துன்பங்களை அனுபவித்து இறந்தார்கள் எனவும் ஈவிரக்கம் இன்றிச் செய்திகளை வெளியிட்டிருந்தன.

ராஜீவ் காந்தியைக் கொன்ற காரணத்தினால் தான் புலிகளின் அழிவு நெருங்கி விட்டது என்றும், அக் காலத்தில் பல கொடுமைகளை இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களினால் அனுபவித்த மக்களைப் பற்றித் துளியளவும் கவலைப்படாது கருத்துக்களை வெளியிட்டிருந்ததன சில ஊடகங்கள். இதில் இந்தியாவில் உள்ள ஹிந்துத்துவாத கட்சியோ இன்னும் ஒரு படி மேலே போய், ராஜீவ் கொலையின் முழுப் பங்களிப்பிற்கும் புலிகள் தான் காரணம் எனவும் கூறி, அதற்கான பின் விளைவுகள் தான் அவர்களுக்கு இறுதிப் போரில் கிடைக்கின்றது என்றும் கூறியிருந்தார்கள். இந் நிலையில் இஸ்லாமியர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? தமது மதத்தினை அவமதித்து, தமது மக்களை அவமதித்த காரணம் தான் புலிகளின் பின்னடைவுக்கு காரணம் என்று!

மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பாசிசவாதிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? புலிகள் கருத்துச் சுதந்திரத்தினை அனுமதிக்கவில்லையாம். அதன் விளைவு தான் இந்தப் பின்னடைவிற்கான காரணம் என்று! ஆக புலிகள் பற்றிய சரியான புரிதலற்றவர்கள் எல்லோரும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற அடிப்படையில் தம் வாய்க்கு வந்தவாறு கற்பனைக் கதைகளையெல்லாம் எடுத்துக் கூறி ஈழப் போரின் முடிவிற்கு முடிச்சுப் போட்டார்கள். இன்றைய நிலமையில், புலிகள் பற்றியும், ஈழப் போராட்டம் பற்றியும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்கள் கூட இறுதிப் போரின் போது இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரலவத்தினை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில் இல்லை.

ஈழத்தின் இறுதிப் போர் இடம் பெற்ற காலத்தில் அரங்கேறிய அராஜகங்களையெல்லாம் நன்கு அறிந்த; புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் அனைவரும் இச் சம்பவங்களைப் பற்றிய தமது வருத்தங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அப்படீன்னா ராஜீவ் கொலை, முஸ்லிம்களின் மனங்களைப் புலிகள் புண்படுத்திய நிலமை இவை தான் போரின் பின்னடைவுக்கு காரணம் என்று சில நுண்ணறிவு வாதிகள் ஆய்வுகள் முன் வைக்கும் இந்த வேளையில், என் கேள்வி என்னவென்றால்’ பல அப்பாவி மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற ராஜபக்ஸேவிற்கு எப்போது பின் விளைகள் கிடைக்கும்? ஹே...ஹே! நல்லாத் தான் எல்லோரும் மக்கள் காதில் பூச் சுத்துறாங்க.

புலிகளின் ஒரு சில தவறுகளைச் சுட்டி அவர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களோடு முடிச்சுப் போட்ட பலராலும் ராஜபக்ஸேவின் தலை விதியை நிர்ணயிக்க முடியலையே! இது தான் சுத்து மாத்து வித்தை என்பதா? அப்படீன்னா ஜோதிடமும், சாஸ்திரங்களும், தர்க்க வாதங்களும் பொய்யா? கடவுள் கூட இவ் உலகில் பொய்யா. காரணம் மூன்று இலட்சம் அப்பாவி மக்கள் வன்னியில் இராணுவ ஆக்கிரமிப்பினுள் துன்புறுத்தப்படுகையில் ஏதும் செய்யாதிருந்தனரே! எட்டுக் கோடி தமிழர்கள் ஈழ மக்களினை எண்ணிக் கண்ணீர் வடித்தார்களே! அதற்கான பின் விளைவுகள் இன்னமும் கிடைக்கலையே! நல்லாத் தான் எல்லோரும் ஏமாத்துறாங்கைய்யா. மக்கள் மனங்களையும், மக்களின் மனதில் உள்ள நம்பிக்கைகளையும் புரிந்து கொண்டோர் நம்ம தலையிலே மிளகாய் அரைக்கிறார்கள் இல்லையா?
போங்கைய்யா நீங்களும் உங்க சோதிடமும்! 2009ம் ஆண்டு மே மாதத்துடன் போர் நிறை வடைந்து, இன்றளவில் மனிதப் பேரலவம் நிகழ்து மூன்றாண்டுகளும் ஆகி விட்டது. ராஜபக்ஸே கூட்டம் ஆதிக்கத் திமிரில் இன்றும் தமிழர்களின் உரிமைகளை மறுத்து வருகின்றது. மகிந்த ராஜபக்ஸவோ ஒரு படி மேலே போய் உலகெங்கும் பொய்களைச் சொல்லி தமிழர்கள் சந்தோசமா இருக்கிறாங்கைய்யா என்று கூறி பெருமளவு உதவிகளை வாங்கிட்டு வந்து தங்களின் சிங்கள தேசத்தை அபிவிருத்தி பண்றாங்கப்பா. ஆனால் நாம மட்டும் கடவுள் நம்பிக்கை என்ற பெயராலும், ஜோதிடம் என்ற பெயராலும் மகிந்தருக்கு போர்க் குற்றம் விரைவில் கிடைக்கும். மகிந்தரின் அழிவு 2012இல் ஆரம்பம் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் சொல்லி புரளிகளைக் கிளப்பிட்டிருக்கிறோம்!  ஒரு வேளை இறைவன் என்பதன் உண்மையானால்?????????

பிற்சேர்க்கை: போர்க் குற்றவாளி, தமிழின விரோதி, சூழ்ச்சிக்காரன், மக்களைக் கொன்ற மாபாவி என்றெல்லாம் தமிழ் மக்களால் வர்ணிக்கப்படும் ராஜபக்ஸ அங்கிளை நான் இக் கட்டுரை ஊடாக அவமதித்ததாக நீங்க கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏன்னா கொடுங்கோலர் ராஜபக்ஸ என்று பல இலட்சம் மக்களும் அவரை இப்போது அழைக்கத் தொடங்கி விட்டார்கள் அல்லவா?

****************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் பதிவரின் தளம் "என் மன வானில்" எனும் பெயர் கொண்ட வலைப் பூவாகும். "ஹாலிவூட் ரசிகன்" அவர்கள் தனது என் மன வானில் தளத்தில் உலக சினிமா விமர்சனங்களைப் பகிர்ந்து வருகிறார். ஓய்வாக இருக்கும் போது நீங்களும் அவர் தளத்திற்குச் சென்று வரலாம் அல்லவா?
****************************************************************************************************************

18 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஏதோ ... நம் நாடும், நம்மவர்களும் நன்றாக இருந்தால் சரி.

மிகவும் அருமையான பதிவு. எப்படி பாஸ் உங்களால மட்டும் இவ்வளவு வேகமாக பதிவிட முடிகிறது? ஏதாவது Speech-To-Text ப்ரோகிராம் கண்டுபிடிச்சிட்டீங்களா?

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

இந்தப் பதிவிலும் என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைத்ததற்காக மிகவும் நன்றி நண்பா.

"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு"

Unknown said...
Best Blogger Tips

புலிகளின் பின்னடைவுக்கு துரோகம்தான் காரணம் என்று கூறப்படுகிறது கட்டுரையில் அதை பற்றிய விவரிப்பு இல்லையே!ஏன்?

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

புலிகளின் பின்னடைவுக்கு துரோகம்தான் காரணம் என்று கூறப்படுகிறது கட்டுரையில் அதை பற்றிய விவரிப்பு இல்லையே!ஏன்?
//

நண்பா, இக் கட்டுரையின் மையக் கருத்து, புலிகளின் பின்னடைவு தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை மாத்திரம் உள்ளடக்கி அலசுவதே. ஆதலால் தான் அவ் விடயங்களைப் பற்றிச் சொல்லாது தவிர்த்திருந்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

ஏதோ ... நம் நாடும், நம்மவர்களும் நன்றாக இருந்தால் சரி.

மிகவும் அருமையான பதிவு. எப்படி பாஸ் உங்களால மட்டும் இவ்வளவு வேகமாக பதிவிட முடிகிறது? ஏதாவது Speech-To-Text ப்ரோகிராம் கண்டுபிடிச்சிட்டீங்களா?
//

அண்ணே, அப்படி ஒரு வித ப்ரோகிராமும் என்னிடம் இல்லை, நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் குமரன் கேட்ட இவ்வாறான ஓர் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கேன். எல்லாம் எம் மன உணர்வின் அடிப்படையில் தங்கியிருக்கிறது. ஆர்வமிருப்பின் அந்தப் பதிவினைப் படிச்சுப் பாருங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

இந்தப் பதிவிலும் என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைத்ததற்காக மிகவும் நன்றி நண்பா.
//

நண்பா, இரண்டு பதிவுகளில் ஒரு தளம் என்ற அடிப்படையில் புத்தாண்டிலிருந்து புதிய தளங்களை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். அதன் ஆரம்ப கட்ட முயற்சி தான் இது.

நன்றி .

Admin said...
Best Blogger Tips

சோதிடத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன் இந்தச் சோதிடர்கள் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் பாரிய ஒரு அழிவு நடக்கப்போகிறது. என்று முன் கூட்டியே சொல்லி இருக்கலாம்தானே சோதிடர்கள். என்ன ஐயா இவங்க சோதிடம்.

Admin said...
Best Blogger Tips

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நியாயப் படத்த நினைப்பவர்கள் நிட்சயமாக மனிதர்களாக இருக்க முடியாது. புலி எதிர்ப்பாளராக இருந்தால்கூட அப் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்திருப்பார்கள் அப்பாவி தமிழ் மக்கள் என்ன செய்தார்கள்? ஆனாலும் அந்த வேளையில் அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படம்போது அப்படுகொலைகளை நியாயப்படத்தி தமிழர்களை கேலி செய்து எழுதிய பதிவர்கள்கூட இருக்கின்றனர்.

Anonymous said...
Best Blogger Tips

இந்த ஆளை பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தான் வருது, காலைலயே இவன் முகத்த பார்க்க வச்சுட்டிங்கலே, கூட அந்த அம்மாவுமா,

ஆகுலன் said...
Best Blogger Tips

ஒரு வேளை இறைவன் என்பதன் உண்மையானால்?????????....

இந்த ஒரு வரியே போதும்...

rajamelaiyur said...
Best Blogger Tips

/கொடுங் கோலர் மகிந்தரின் ஆட்சி வெகு விரைவில் அடியோடு அழிந்து விடுமாம். மகிந்தரின் குடும்ப ஆட்சி முறை நீங்கி, இலங்கைத் திரு நாட்டிற்கு இன்பம் நிறைந்த நல் வாழ்வு கிடைக்கும் என தமிழக ஜோதிடர் ஒருவர் விஜய் டீவி நிகழ்ச்சியில் புரளியினைக் கிளப்பியிருக்கிறார்.
///

இது உண்மையானால் ரொம்ப மகிஷ்சியாக இருக்கும்

மகேந்திரன் said...
Best Blogger Tips

புகையிடாமல் வந்த புரளி
உண்மையாகிவிட்டால்
விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையே...

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம், நிரூபன்!"அந்த" நிகழ்ச்சியில் இடைச் செருகலாக "அந்த"வார்த்தை உரைக்கப்பட்டது! நிகழ்ச்சியில் கூடியிருந்தோரின் ராசிகளுக்கு பலன் எப்படியிருக்கும் என்று கூறுவதே அங்கு வந்திருந்த ஜோதிடர்களின்?!பணியாக இருந்தபோதும்,இந்த வார்த்தை ஏன் செருகப்பட்டது என்று தெரியவில்லை!மேலும்,கடந்த ஆண்டு சனி!மாற்றத்தின் போதும் மகிந்தரின் ஜாதகப்படி திடீர் மரணம் ஏற்படுமென்று சொன்னார்கள்!இதில் ஓர் வேடிக்கை என்னவென்றால்,கூட்டத்திலிருந்த ஒரு ஜோதிடர் தன சகபாடிகளையே வாயடைக்கச் செய்தது தான்!அவர் சொன்னது:பலன் சொல்வது லக்கினங்களுக்கே தவிர ராசிகளுக்கு அல்ல!!!!!!! நிற்க;எவ்வாறாயினும்,இப்போது நடக்கும் அரசியல் உலகறிந்தது.உலகில் எந்த அரசு?!மே கொடுத்த வாக்குறுதியை காப்பதில்லை.அதற்கு ஐ. நா செயலர் கூட விதிவிலக்கல்ல.எதிர்வரும் மார்ச் மாத ஐ. நா கூட்டத் தொடரினால் எம் வாழ்வு சிறக்கப் போவதில்லை!பேசிப்பேசி பொழுதைக் கழிப்பது தவிர எவருக்குமே விடிவு கிட்டப் போவதில்லை.பத்திரிகைகள் ஊதிப் பெருப்பிப்பது போல் இலங்கைக்கு எதிராக எந்த உருப்படியான தீர்மானங் களும் வரப் போவதில்லை!வெறும் பரிந்துரைகள் மட்டுமே நிறைவேறும்!காரணம் உலகக் காவலன்!!!!(WORLD POLICE)

K said...
Best Blogger Tips

யோவ், நிரூ, கட்டுரை பயங்கரமா இருக்கு!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

உண்மைதான்.நிரூ.சனிப் பெயர்ச்சி பலன்களின் நானும் இது பற்றி எழுதியிருக்கிறேன்...!!

சசிகுமார் said...
Best Blogger Tips

சீக்கிரம் அழிந்து போகட்டும்....

சுதா SJ said...
Best Blogger Tips

யோசியமா???!!!!!!!!! அவ்வ..... அவங்க வாழ்க்கையே அவங்களுக்கு பார்க்க தெரில்ல, இதில் அடுத்தவங்களுக்கு பாக்கிறாங்களோ!!!! அவ்வ்வ்வ்

ஆனாலும் ஹப்பியான நியூஸ் அவர் வாக்கு பலித்தால் ஹப்பி... பலிக்கோணும் :(

கவி அழகன் said...
Best Blogger Tips

நானும் இந்த நிகழ்ச்ச்ய பார்த்தன் கோபிநாத் இந்த வருட பொது பலன் எப்படி இருக்கும் எண்டு கேட்டார்

அதுக்கு ஒரு ஜோதிடர் இந்த வருடம் தமிழ் பெண்கள் குடும்ப பெண்கள் கலாசார சீரளுவுக்கு தள்ளப்பத்வார்கள் எண்டார்

அதுக்கு கோபிநாத் இது புரளிய கிளப்பிரமதிரி இருக்கு எண்டு சொல்லி அந்த ஜோதிடரின் வாய அடக்கினார்

அதுக்கு பிறகு ஷெல்லி என்ற பிரபல ஜோதிடர் மகிந்த முடியப்போறார் எண்டார் உடன அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் கோபிநாத்

தமிழ் நாட்டு பெண்களை பற்றி சொன்னது பொய்யாக இருப்பினும் அதற்கு காரணம் என்ன எண்டு விசாரித்து ஒரு அக்கறை காட்டாது பக்கத்து நாட்டு பிரச்னைக்கு அக்கறை கொடுத்துள்ளமை

கரிசனையா வேடிக்கையா சுவாரசியமா நிகழ்ச்சி வியாபாரமா எண்டு தெரியல

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails