Friday, January 13, 2012

ஐபோட்டின் உதவியுடன் ஆங்கில அறிவை பெருக்குவது எப்படி?

இந்தப் பதிவானது ஐபோட், ஐபாட், ஐடியூன்ஸ் உள்ளவங்களுக்கு மாத்திரமன்றி; கம்பியூட்டர் உள்ளவங்களுக்கும் ரொம்ப யூஸ்புல் ஆகுமுங்க.
எல்லோருக்கும் வணக்கமுங்க & இனிய தைத் திரு நாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டுமுங்க. 
ஊரில ஏலவே 90 நாளில் இங்கிலீசு பேசுவது எப்படீன்னு ஒரு புக்கு சக்கை போடு போட்டு விற்பனையாகிட்டு இருக்கு. அதை வாங்கிப் படிச்சே ஆங்கில அறிவு வளரலை. இதுல நீ ஐபோட்டை வைத்து ஆங்கில அறிவினை வளர்க்கப் போறியா? ராஸ்கல் அப்படீன்னு எல்லோரும் திட்டுறீங்க இல்லே! ஐபோட் உள்ளவங்களுக்கு மாத்திரம் தான் இந்தப் பதிவா? அப்போ நமக்கெல்லாம் இல்லையா என்று சிலர் எஸ் ஆக ரெடி ஆகிட்டீங்க இல்லே. கவலையை விடுங்க. கம்பியூட்டர் உள்ள எல்லோருக்கும் இந்தப் பதிவு ரொம்ப யூஸ் புல்லா இருக்குமுங்க. ஆனால் IPOD, IPAD, I PHONE உள்ளவங்களுக்கும் இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருக்குமுங்க. வாருங்க. பதிவிற்குள் நுழைவோம்.
நம்மாளுங்க புதுசா கடைக்கு என்ன பொருள் வந்தாலும் பிலிம் காட்டுற நோக்கில வாங்கி தங்களோட சட்டைப் பையினுள் போட்டு அழகு பார்ப்பாங்க பாருங்க! இது தான் தமிழன் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுங்க. ஐபோன், ஐபாட், ஐபோட் ஆகியவற்றில் உள்ள சிறப்புக்களை அறியாமலே நம்மாளுங்க கலர் காட்டும் நோக்கில கையில வைச்சு நோண்டிக்கிட்டிருப்பாங்க; பார்ப்பதற்கு ரொம்பவே கொடுமையாக இருக்கும். ஐபோட்டில, iTunes இல உள்ள PODCAST என்ற ஸ்பெசல் அயிட்டம் பத்தி உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமுங்க?  இலங்கை, இந்திய நாடுகளைப் பொறுத்த வரை நம்மட தாய் மொழியாக நாம தமிழிலே எந் நேரமும் பேசிக் கொண்டிருப்பதால் கஷ்டப்பட்டு காசு செலவு செஞ்சு படிச்ச இங்கிபீசு மொழிப் புலமையோ மந்த கதியில தான் இருக்குமுங்க. 

ஆங்கில சானல்களையும், ஆங்கில ரேடியோக்களையும் கேட்டு எமது உச்சரிப்புக்களை நேர்த்தியாகச் சொல்லப் பழகிக்க பல வழிகள் இருக்கும் போது நம்மாளுங்க, வெள்ளக்காரன் தஸ்க்கு புஸ்க்குன்னு இங்கிபீசு பேசுறான்; எனக்கு அவன் பேசுற ஒன்னுமே புரியலை என்று ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்பதை அவொய்ட் பண்ணி வைச்சுக்குறாங்க.உண்மையில் ஆங்கில டீவி சான்ல்களினூடாக நீங்க உங்க ஆங்கில மொழித் திறமையை விருத்தி செய்ய வேண்டுமானால், Documentaries, மற்றும், விவாத நிகழ்ச்சிகளை கண்டிப்பாகப் பார்க்கனும். அப்படி நிகழ்சி பார்க்கும் போது சரியான முறையில் அவங்க பேசுறதைப் புரிஞ்சுக்கனும் என்றால், வாயசைவை உத்துப் பார்க்கனுமுங்க. உங்களுக்கு தெளிவான புரிதல் ஏற்படும் வரை, கண்டிப்பாக ஆங்கில டீவி சேனல்களைப் பார்க்கும் போது,பேசுறவங்களோட வாயசைவினை உத்துப் பார்த்தால் தான் உங்களுக்கும் ஒரு அன்ட்டஸ்ரான்டிங் கிடைக்குமுங்க.
இந்தப் பதிவு ஐபோட், ஐபாட், அப்புறமா ஐபோன் இல்லாதவங்களுக்கும் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் என நினைத்து எழுதியிருக்கேன். இந்தப் பதிவின் நோக்கம் iTunes ஊடாக உங்களின், உங்க குழந்தைங்களின் ஆங்கில அறிவினைப் பெருக்குவது எப்படி என்று விளக்குவதாகும்.  நம்மாளுங்களில் அதிகம் பேர் பயங்கர சோம்பேறிங்களா இருபபானுங்க. தங்களிடம் உள்ள மியூசிக் ப்ளேயரில் ஒருவாட்டி அப்லோட் பண்ணி வைச்ச சாங்ஸ்ஸையே மறுபடியும், மறுபடியும் கேட்டு சலிப்பு ஏற்படும் வரை அப்லோட் பண்ணிக்க டைம் இல்லைன்னு ரொம்ப பிசியாக அலைஞ்சிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி ஆளுங்களுக்கும் இந்த வசதி ரொம்ப யூஸ்புல்லா இருக்குமுங்க. எல்லோருடைய கம்பியூட்டரிலும் iTunes சாப்ட்வேர் இருக்குத் தானேங்க. இல்லேன்னா உடனடியாக இங்கே கிளிக் செஞ்சு டவுண்லோட் பண்ணிக் கொள்ளுங்க. அப்புறமா உங்களுக்கு வேண்டியது ஒரு ஆப்பிள் ஐடி. 

ஆப்பிள் ஐடியை நீங்க உங்க ஈமெயில் முகவரியின் உதவியோடு இலவசமாகவே ரிஜிஸ்டர் பண்ணிப் பெற்றுக் கொள்ளலாம். ஆப்பிள் ஐடியைப் பெறுவதற்கு இங்கே கிளிக் செஞ்சு கொள்ளுங்க. அடுத்ததாக நீங்க பண்ண வேண்டியது, உங்க ஐபோட்டை அல்லது ஐபோனை iTunes சாப்ட்வேருடன் கம்பியூட்டரூடாக கனெக்ட் பண்ணிக்கனும்.ஐபோட் உள்ளவங்களும் சரி, இல்லே ஐபோட், ஐபோன் இல்லாதவங்களும் சரி முதல் வேலையாக உங்க கம்பியூட்டரில் உள்ள iTunes சாப்ட்வேரின் இடது கைப் பக்கத்தில் உள்ள iTuens Store என்ற ஆப்சனைக் கிளிக் செஞ்சு கொள்ளுங்க. அப்புறமா, ஒரு மெனு கிரியேட் ஆகுமுங்க. அங்கே நீங்க Podcast என்ற ஆப்சனை அழுத்தனமுங்க. இங்கே பார்த்தீங்கன்னா, லாங்குகேஜ் அப்படீன்னு ஒரு ஆப்சன் இருக்குமுங்க. அதில நீங்க கிளிக் செஞ்சா, உங்களுக்கு விருப்பமான மொழியினைக் கற்பதற்குரிய ஆடியோக்களை நீங்க நேரடியாக கேட்டு மகிழலாம். இல்லேன்னா, டவுன்லோட்டும் செஞ்சுக்கலாம்.
இப்போ சொல்லும் விஷயத்தை ரொம்ப கவனமாக நோட் பண்ணிக்குங்க. உங்களுக்கு பிடிச்ச நிகழ்ச்சிகளை நீங்க உங்களுக்கு விரும்பிய மொழியில் நேரடியாகவே கேட்டு மகிழலாம். கம்பியூட்டரில உங்கள் ஐபோட்டில உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சேவ் செஞ்சுக்கனும் என்றால், மொதல்ல உங்களுக்கு பிடிச்ச விடயத்தினை Podcast என்ற மெனுவின் கீழே செலக்ட் பண்ணிக் கொள்ளுங்க. அப்புறமா அந்த நிகழ்ச்சியின் கீழே உள்ள Subscribe  மெனுவில் சப்கிரைப்ஸ் பண்ணிக் கொள்ளுங்க. இங்கே தான் உங்க சோம்பலைப் போக்கிற விடயமே இருக்குங்க. ஐடியூன்ஸில ஒவ்வோர் நாளும் அல்லது ரெண்டு மணி நேரத்துக்கு ஒருவாட்டி ஒவ்வோர் Podcast நிகழ்ச்சிகளை அப்லோட் பண்ணிப் புதுசு புதுசா போட்டுக்குவாங்க. ஸோ...நீங்க உங்களுக்குப் பிடிச்ச நிகழ்ச்சியை சப்ஸ்கிரைப் பண்ணி வைச்சீங்க என்றால், உங்க ஐபோட்டை கம்பியூட்டரோடு கனெக்ட் செய்யும் போது தானாகவே புதிய நிகழ்ச்சியையும் உங்க ஆப்பிள் ஐடியூன்ஸ் அப்லோட் பண்ணிக் கொள்ளுமுங்க. உங்களுக்கு ஏற்படும் நேர விரயமும் தடுக்கப்படும் அல்லவா?
நமக்கு வீட்டில இருக்கும் போது ரேடியோ கேட்க டைம் கிடைக்காது. ஆனால் வெளியே போகும் போது மியூஸிக் ப்ளேயரை காதில மாட்டிக் கொண்டு போவோமுங்க. இப்படியான வேளையில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு அல்லது சமையல் அல்லது செய்தி அல்லது காமெடி அல்லது ஹாலிவூட் நிகழ்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள், கார்ட்டூன் காமெடிகள் எனப் பல வகையான ஏராளமான நிகழ்ச்சிகள் இந்த ஐடியூன் Podcast இல் இலவசமாக கிடைக்குதுங்க. அமெரிக்க, இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலிய ரேடியோக்களின் ஸ்பெசல் நிகழ்ச்சிகளும் இங்கே கிடைக்குதுங்க. உங்க விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி நீங்க சப்கிரைப்ஸ் பண்ணி உங்க ஐடியூனில் சேமித்து, நேரடியாக கேட்டும் மகிழலாம். அல்லது உங்க ஐபோட், ஐபாட், ஐபோனில் சேமித்து பயணம் செய்கையில் கேட்டு மகிழலாம். 

என்னங்கடா கொடுமை, ஆங்கிலத்தில நல்ல விடயங்கள் மட்டும் தான் கிடைக்குதா? அப்போ நம்ம கில்மா மேட்டருங்க எல்லாம் கிடைக்காதா என்று சில பேர் ஏங்குவீங்க. அவங்களுக்கு Adult என்ற பிரிவின் கீழ் காமெடி, கில்மா நடிகர்களின் பேட்டி, மற்றும் சுவையான விடயங்கள் கிடைக்குது. அதனையும் நீங்க கேட்டு மகிழலாம். சிலருக்கு ஆங்கில மொழி படிக்கனும் என்று ஆசை இருக்கும். சிலருக்கு பிரெஞ்சு மொழியை விருத்தி செய்யனும் என்று ஆசை இருக்கும். சிலருக்கு சீன மொழி, சிலருக்கு ஸ்பானிஷ் மொழியை விருத்தி செய்யனும் என்று ஆசை இருக்கும்.ஸோ...இந்த மாதிரி ஆசை உள்ளவங்களுக்கு நல்லதோர் தேர்வு தான் இந்த podcast. உங்க பிள்ளைங்களின் ஐபோட்டில் நீங்க ஆங்கில அறிவினைப் பெருக்கும் விடயங்களைப் பதிந்து கொடுத்தால் சின்ன வயசிலே அவர்களுக்கு ஆங்கில மொழியினைக் கற்க வேண்டும் எனும் ஆவல் ஏற்படும் அல்லவா? 

மற்றுமோர் பதிவில் நீங்கள் ரெக்கார்ட் செய்த உங்களது நிகழ்ச்சி ஒன்றினை ஐடியூனில் எப்படி Podcast ஆகப் பகிர்வது என்று பார்ப்போமா? என்னங்க, எல்லோருக்கும் பதிவு ஈஸியாகப் புரிஞ்சுதா? இல்லே புரியலையா? இப் பதிவு தொடர்பாக உங்களுக்கு சந்தேகங்கள் ஏதாச்சும் இருந்தா வெட்கப்படாது கேளுங்க.

இந்தப் பதிவானது ஐபோட், ஐபாட், ஐடியூன்ஸ் உள்ளவங்களுக்கு மாத்திரமன்றி; கம்பியூட்டர் உள்ளவங்களுக்கும் ரொம்ப யூஸ்புல் ஆகுமுங்க.

சொல் விளக்கம்: இங்கிபீசு - நம்மாளுங்க சிலர் காமெடியாக இங்கிலீஸை இங்கிபீசு அல்லது ஆங்கிலீஸ் அப்படிச் சொல்லிக்குவாங்க. ஸோ...அதனால பதிவில இங்கிபீசு அப்படி கையாள வேண்டி வந்திட்டுது. 
*******************************************************************************************************************
விசேட அறிவித்தல்:
வரும் திங்கட் கிழமை 16.01.2012 அன்று இலங்கை, இந்திய நேரப்படி மதியம், ஐரோப்பிய நேரப்படி காலை உங்கள் நாற்று வலையில், "வலையுலகில் ஒருவருடம் + தமிழ்மண நட்சத்திர வாரம்!" அப்படீன்னு ஓர் சிறப்பு நினைவு மீட்டல் பதிவு வெளிவரக் காத்திருக்கிறது. அனைவரையும் குடும்ப சமேதரராய் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.
*******************************************************************************************************************

25 Comments:

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். யாரைக் கேக்கறதுன்னு ஒரு வெட்கம். இப்போ சரியான ஆளு நீங்க கெடச்சிருக்கீங்க.

ஆமா, இந்த ஐபாட், ஐபேட், ஐபோன் இதுக எல்லாம் என்ன? அதுக என்ன பண்ணும்? கொஞ்சம் வெளக்கமா சொன்னீங்கன்னா புண்ணியமாப் போகும்.

காட்டான் said...
Best Blogger Tips

நம்மளுக்கு இல்லாத அறிவை வளர்க்கலாம் என்கிறீங்க.. முயற்சி செஞ்சா போச்சு. உபயோகமான தகவல் நன்றி நிரூபன்!!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நான் சொன்னனே.. வரவர நிரூபன் நல்ல நல்ல பதிவெல்லாம் போடுறார்... இனிப் பயப்பிடாமல் பொம்பிளை தேடலாம்:).

Jeevanantham Paramasamy said...
Best Blogger Tips

யாரோட இங்கிலீஷ் சரியானதுன்னு சொன்னா நல்லாயிருக்கும்? பிரிட்டிஷ்? அமெரிக்கன்? இந்தியன்?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

ஏன்ணே பிகருகளுடன் கதைத்துக்கொண்டெ இங்கிலீஸ் அறிவை வளர்பது எப்படினு ஒரு பதிவு போடுங்களேன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி

ஆமா, இந்த ஐபாட், ஐபேட், ஐபோன் இதுக எல்லாம் என்ன? அதுக என்ன பண்ணும்? கொஞ்சம் வெளக்கமா சொன்னீங்கன்னா புண்ணியமாப் போகும்.
//

வணக்கம் ஐயா, ஐபோட், ஐபேட் ஐபோன் எனப்படுவது இலத்தினரியல் I லாங்குவேஜ் எனப்படும் மொழியில் இயங்க கூடிய இலத்திரனியல் சாதனங்கள்.

இதில
ஐபோட் எனப்படுவது நீங்க பாட்டு கேட்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் யூஸ் பண்ணிக்கலாம்.
ஐபாட் எனப்படுவது.....ஓர் கணினி போன்று நீங்க போகும் இடமெல்லாம் காவிச் சென்று, உங்களுக்கு பிடித்த விடயங்களை டைப் செஞ்சு சேமிக்கலாம். இன்ரநெட் யூஸ் பண்ணிக்கலாம். அப்புறமா, பாடல், வீடியோக்களையும் பார்க்கலாம்.

ஐபோன் எனப்படுவது....நாம நார்மலா யூஸ் ப்ண்ற அலைபேசி போன்று, யூஸ் பண்ணிக்கலாம். அதே வேளை உங்களுக்குத் தேவையான மேப், டுவிட்டர், பேஸ்புக், ப்ளாக் எல்லாவற்றையும் பார்த்துக்கலாம்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

பதிவு நல்லாயிருக்கு. அப்படியே ஒரு ஐபாட் அனுப்பிட்டீங்கண்ணா இங்கிலீஸு கத்துக்க ஈஸியா இருக்கும்.

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

நம்மளுக்கு இல்லாத அறிவை வளர்க்கலாம் என்கிறீங்க.. முயற்சி செஞ்சா போச்சு. உபயோகமான தகவல் நன்றி நிரூபன்!!
//

நன்றி அண்ணே,
நீங்க பிரெஞ் மொழி நிகழ்ச்சிகளையும் இதனூடாக கேட்கலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நான் சொன்னனே.. வரவர நிரூபன் நல்ல நல்ல பதிவெல்லாம் போடுறார்... இனிப் பயப்பிடாமல் பொம்பிளை தேடலாம்:).
//

அவ்வ்....
நிஜமாவா சொல்லுறீங்க.
அப்போ தேடுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீவானந்தம் பரமசாமி
யாரோட இங்கிலீஷ் சரியானதுன்னு சொன்னா நல்லாயிருக்கும்? பிரிட்டிஷ்? அமெரிக்கன்? இந்தியன்?//

அதிகப்படியானவங்க பிரிட்டிஷ் இங்கிலீஸ் தான் சரியான இங்கிலீஸ் என்று சொல்லிக்கிறாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

ஏன்ணே பிகருகளுடன் கதைத்துக்கொண்டெ இங்கிலீஸ் அறிவை வளர்பது எப்படினு ஒரு பதிவு போடுங்களேன்...
//

கொய்யாலே....ஆளுக்கு ஆசையைப் பாரு. இதில நிறைய வழி சொல்லியிருக்கேன். அதில் ஒன்றை பாலோ பண்ணுங்க மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

பதிவு நல்லாயிருக்கு. அப்படியே ஒரு ஐபாட் அனுப்பிட்டீங்கண்ணா இங்கிலீஸு கத்துக்க ஈஸியா இருக்கும்.

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.
//

அடப் பாவிங்களா;-)))
ஐடியா கொடுத்தா இது வேறை கேட்பீங்களா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஐபோட் இல்லாமலும் இங்கிலீஸ் ஐடியூனின் உதவியுடன் கத்துக்கலாம் பாஸ்.

Unknown said...
Best Blogger Tips

தேவையான தகவல்கள்...ஆனா ஒன்னு நம்ம கிட்ட ஐபாட் இல்லை!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

Nalla thagaval....
Useful post.....

சசிகுமார் said...
Best Blogger Tips

நன்றி....

சேகர் said...
Best Blogger Tips

என்னிடம் ஐ பாடு இல்லை. வாங்கி குடுத்தால் நான் ஆங்கிலம் கற்றுகொல்வேன்..

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,
நலமா?
இதெல்லாம் மற்றவர்கள் பயன்படுத்துவதை
பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பயன்படுத்தியதில்லை.
நல்ல தகவல்களுக்கு நன்றிகள் பல.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!என்னிடம் நீங்கள் குறிப்பிட்ட எதுவுமே இல்லையே,என்ன செய்ய????எனக்குக் கொஞ்சம் இங்கிலிசுபிசு வரும் தான்!யெஸ்,நோ,ஹவ் ஆ யூ?ஐ ஆம் பைன்!இப்படி.இது போதாது இங்கிலாந்து போய்,வர?????ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

யார் அந்த வெள்ளை!?க்காரி???தெரிஞ்சவவோ?தலையில ஹெல்மெட் (அதுதானே?)போடுறா?

Yoga.S. said...
Best Blogger Tips

சேகர் said...

என்னிடம் ஐ பாடு இல்லை. வாங்கி குடுத்தால் நான் ஆங்கிலம் கற்று"கொல்வேன்"..///அப்ப கூட ஒழுங்கா பேசமாட்டீங்க?ஆங்கிலத்தை "கொல்ல"வே செய்வீர்கள் என்றால்?????

Unknown said...
Best Blogger Tips

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மாப்ள...வேலை அதிகம் அதான் வர இயலவில்லை...வேறு ஒன்றும் இல்லப்பா!

Unknown said...
Best Blogger Tips

ஐபோட் - ஐ போடுன்னு தான் நெனப்பேன்..ஹிஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

அனைத்து நண்பர்களுக்கும் இனிய தைத் திருநாள், மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். விக்கி அண்ணா, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நாம் ஒவ்வோர் தொழில் நுட்ப பதிவுகளையும் எழுதுவதன் நோக்கம், பலருக்கு யூஸ் ஆகனும், பலருக்கு இந்த தொழில் நுட்பம் சென்று சேரனும் என்ற அடிப்படையில் தான். மிகுந்த சிரமப்பட்டு, இந்தப் பதிவு தொடர்பாக தேடல் மேற்கொண்டு, ஐபோட் இல்லாம கம்பியூட்டர் உள்ளவங்களுக்கும் இப் பதிவு யூஸ் ஆகும் அப்படீன்னு எழுதியிருந்தேன். ஆனால் பின்னூட்டம் போட்ட அதிகளவான நண்பர்கள் பதிவினைச் சரியாகப் படிக்காதோ அல்லது பதிவு தொடர்பான சரியான புரிதல் இன்றி இப் பத்வானது ஐபோட் உள்ளவங்களுக்கு மாத்திரம் தான் உதவும் என்று பின்னூட்டங்களில் எழுதியிருப்பது கவலையளிக்கிறது.
உங்களுக்கு யூஸ்புல் ஆக இருக்கும் எனும் நோக்கத்தில் தான் தொழில்நுட்பப் பதிவு எழுதினேன். வருகையாளர்களை அதிகரிக்கவோ, அல்லது ஹிட்ஸினை ஏத்தவோ இப்படி ஓர் பதிவினை எழுத வேண்டிய தேவை இல்லை.

ப்ளீஸ்...பதிவினை முழுமையாகப் படித்துப் பாருங்கள். பதிவில் மூன்று இடங்களில் கம்பியூட்டர், மியூஸிக் ப்ளேயர் உள்ளவங்களுக்கும் இந்தப் பதிவு ரொம்ப யூஸ்புல் அப்படீன்னு சொல்லியிருக்கேன். ஆனால் யாருமே அந்த வசனங்களைக் கண்டுக்கிட்டதா தெரியலை. பதிவின் தலைப்பை வைத்து ஐபோட் பாவிக்கிறவங்க மட்டும் ஆங்கிலம் கத்துக்க இந்த டெக்னாலஜி யூஸ்புல் அப்படீன்னு சொல்லிட்டு எஸ் ஆகிட்டாங்க.

தற்போது இப் பதிவின் ஆரம்பத்திலும், நிறைவிலும் சிகப்பு மையால் இப் பதிவின் நோக்கம் பற்றி இரண்டு வசனங்களைச் சேர்த்திருக்கிறேன். புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

@நிரூபன்

அய்யய்யோ ... அப்படி இல்லண்ணே. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து பொட்காஸ்ட் கேக்குற அளவுக்கு பொறுமை இல்ல நமக்கு. எங்கயாவது ட்ராவல் பண்ணும்போது கேட்டாத் தான்.

திருமகள் said...
Best Blogger Tips

நகைச்சுவையாக அறிவியல் விடயங்களை சொல்வது நிருபனிற்கு கை வந்த கலை !
பலருக்கும் உபயோகமான விடயத்தை இலகுவாக புரியும்படி எழுதிய நிருபனிற்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து கலக்குங்கோ...:)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails