Thursday, January 26, 2012

ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான ஐடியாக்கள்!

கணினித் திரையூடாக உங்கள் இதயங்களை இணைத்து, இணைய வலையினூடே இப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! 
தாய்த் தேச உறவுகள் அனைவருக்கும் இனிய குடியரசுத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
ஆங்கிலம் என்றால் நம்மில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத கசப்புணர்வு ஏற்படும். சிலரைப் பார்த்தால் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக எழுத்து, வாசிப்பு ஆகிய துறைகளில் நன்றாக வெளுத்து கட்டுவார்கள். ஆனால் பேசும் போது பம்மிடுவாங்க. இன்னும் சிலரைப் பார்க்கையில் நம்மில் சிலருக்கு "அடடா இவனு ரொம்ப நல்லா இங்கிலீசு பேசுறானே...நம்மால முடியலையே" என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இன்னும் சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் நம்ம டீவி, ரேடியோக்களில் புரோக்கிராம் பண்றவங்க மாதிரி ஒரு வசனம் பேசும் போது மூனு தமிழ்ச் சொற்களையும், நாலு ஆங்கிலச் சொற்களையும் கலந்து கட்டிப் பேசுவாங்க. இவங்க பேசும் இங்கிபீசைக் கேட்டால் நம்மளுக்கு இருக்கிற ஆங்கில அறிவும் பறந்தோடிப் போயிடுமுங்க.
இந்தப் பதிவோட நோக்கம், நமது ஆங்கில அறிவினை அதிகரிப்பதற்கான இலகுவான வழிகளைப் பற்றி அலசுவதாகும்.
பல்தேசக் கம்பனிகளின் தொழிற் புரட்சியானது இன்றைய கால கட்டத்தில் நம் நாடுகளை நோக்கி அதிகளவில் இடம் பெறுகின்றது. இதனால் நாம வேலை தேடிப் போகும் போது ஆங்கிலத்தில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கின்றோம் எனப் பரிசோதிக்கும் முறையினை ஒவ்வோர் கம்பனிகளும் கையிலெடுத்திருக்கிறாங்க. சிலருக்கு எவ்வளது தான் தலை கீழா நின்னாலும் ஆங்கில அறிவினை இம்ப்ரூப் பண்ணிக்கவே முடியாம இருக்கும். இதுக்கான பிரதான காரணம் சில ஈஸியான வழிகள் இருக்கையில் ஆங்கிலத்தை முழுமையாக மனப்பாடம் செஞ்சு கரைத்து குடிச்சிட்டு; வாந்தியெடுப்பது போன்று பேசுவதற்கு ரெடியாகுவது தானுங்க. உங்களில் எத்தனை பேரிடம் 90 நாட்களில் இலகுவாக ஆங்கிலம் படிப்பது எனும் புக் இருக்கிறதோ? அவங்க எல்லோரும் இன்னைக்கே அந்த புக்கை தூக்கி தூர வீசிடுங்க. 

இனி நம்ம ஐடியாக்கள் என்னான்னு பார்ப்போமா?
*எம்மால் இயன்றவரை வழுவின்றி தெளிவான உச்சரிப்புக்களை கையாளப் பழக வேண்டும். எல்லோருக்கும் உச்சரிப்பு விடயத்தில் சில ஆங்கிலச் சொற்களை இலகுவாகச் சொல்ல முடிவதில்லை. இதற்கு நாம என்ன பண்ணிக்கனும் என்றால் Tongue Cleaner வாங்கி நம்மளோட நாக்கில இருக்கிற அழுக்கினை ஒவ்வோர் நாளும் மளித்து எடுக்கனும்.
*அடுத்த கட்டமாக ஆங்கில நிகழ்ச்சிகளின் வீடியோ தொகுப்பினை உன்னிப்பாக பார்க்கனும். வீடியோ தொகுப்புக்களில் டாக்குமென்டரி வகை வீடீயோக்கள் ரொம்பமும் பயனுள்ளவை. Animal Planet, BBC World, National Geography Channel, முதலிய சானல்கள் ரொம்பவே பயனுள்ளவை. இதனை விடவும் உங்களுக்கு தெரிந்த ஆங்கில விவரணச் சித்திரங்களை ஒளிபரப்பும் சானல்களும் ரொம்ப யூஸ்புல்லா இருக்குமுங்க.
*அடுத்த முக்கிய விடயம், நம்ம ரசனைக்கு ஏத்த மாதிரி நம்மளை மிகவும் கவர்ந்த ஆங்கில டீவி நிகழ்ச்சியினை பார்ப்பது. இந்த விடயத்தில் விளையாட்டுப் பிரியர்களுக்கு கிரிக்கட் நேரடி வர்ணனை, மற்றும் இதர நேரடி வர்ணனைகள் ரொம்பவே பயனுள்ளதாக இருக்குமுங்க.

*அடுத்த மிக மிக முக்கியமான விடயம், பேசுவோரின் வாயினை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆங்கிலத்தில் British English உச்சரிப்பு, American English உச்சரிப்பு, ஆஸ்திரேலியர்களின் ஆங்கில உச்சரிப்பு, ஆகியவை கொஞ்சம் வேறுபாடு உடையவை. இதில் பிரித்தானியர்களின் ஆங்கில உச்சரிப்பானது நமக்கு நன்கு பரிச்சயமாகும் வரை எளிதில் புரிந்து கொள்ள முடியாதவாறு இருக்கும். அதுவும் ஆரம்பத்தில் நாம British ஆங்கில உச்சரிப்புக்களை கேட்கும் போது ஒன்னுமே புரியாத மாதிரி, ரொம்ப வேகமாக பேசுவது போல இருக்கும். ஆனால் அவங்க வாயினை உன்னிப்பாக அவதானித்து, கூர்மையாக என்ன பேசுறாங்க என்று கவனித்தால் கண்டிப்பாக நமக்கு அவங்களின் உச்சரிப்பு புரியும்.
*கதைப் புத்தகங்கள், மற்றும் ஆங்கில நூல்களை வாசித்தல். இதுவும் எமது பேச்சுத் திறனை அதிகரிக்க வாய்ப்பாக அமையும். எப்பவுமே சிறிய சிறிய கதைப் புத்தகங்களிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக; கடினமான மொழி நடையில் அமைந்த ஆங்கில நூல்களை வாசிக்க முயற்சிப்பது நன்மை பயக்கும்.கதைப் புத்தகங்களை நாம படிக்கும் போது, அதில் உள்ள உரையாடல் பாணியிலான தகவல்களை கிரகித்துப் படிப்பதும், எமது பேச்சு வன்மையினை அதிகரிக்க வாய்ப்பாக அமையும்.
*இந்த ஐடியாக்களை விட; இன்னும் ஓர் ரொம்ப சூப்பரான + கொஞ்சம் காமெடியான விடயம் இருக்கு.அது என்னவென்று தெரியுமா? கால்சென்டர்களுக்கு போன் செஞ்சு, ஆங்கிலத்தில் உரையாடுவதும், கடலை போடத் தொடங்குவதும் உங்கள் பேச்சு வன்மையினை சபைக் கூச்சமின்றி அதிகரிக்க உதவும். உங்க சொந்தப் பேரில் பேசினால் பல்பு வாங்கிடுவீங்க என்று நினைத்தால், கண்டிப்பாக நீங்க ஒரு புனை பெயரைத் தெரிவு செய்து உரையாடலாம். ஏர்டெல், ஏர்செல், அலைபேசி நிறுவனங்கள், மற்றும் வங்கிகளுக்கு போன் செஞ்சு நீங்க உந்த முறையினை ட்ரை பண்ணிப் பேசிப் பார்க்கலாம்.

*உங்கள் அலுவலகத்தில் அல்லது நீங்கள் காவிச் செல்லும் பையில் கண்டிப்பாக ஒரு ஆங்கில டிக்சனரி வைத்திருங்கள். ஒரு நாளைக்கு பத்துப் புதிய சொற்கள் வீதம் ஒவ்வோர் நாளும் தேடிப் பிடித்து அந்தச் சொல்லுக்கான அர்த்தங்களையும் அறிந்து நினைவில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த ஐடியாவும் உங்களுக்கு கை கொடுக்கும்.

இந்த ஆலோசனைகளை விட, வாசகர்கள் வசம் ஆங்கில மொழிப் புலமையை அதிகரிக்க ஆலோசனைகள் இருந்தால் பின்னூட்டங்கள் ஊடாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
இப் பதிவு யாருக்கும் அறிவுரை கூறும் பதிவு அல்ல. ஐ மீன் இது ஓர் அட்வைஸ் பதிவு அல்ல. என்னுடைய வாழ்வில் நான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.ஆங்கில மொழிப் புலமையினை அதிகரிக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு சிறிதளவேனும் இந்த ஆலோசனைகள் உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும். 


பதிவினைத் தூய தமிழில் எழுத முடியவில்லை. காரணம் பலருக்கு புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கலாம் என்பதால் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்திருக்கிறேன். 
*************************************************************************************************************
பதிவர்களுக்கோர் நற் செய்தி!
பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கின்ற ஓர் செய்தியினை தமிழ் நண்பர்கள் இணையத் தளத்தினர் இன்றைய தினம் வெளியிட்டிருக்கிறார்கள். 
இவ்வளவு நாளும் தமது பதிவுகளை இணைக்க விரும்பும் பதிவர்களின் முழுப் பதிவினையும் திரட்டிக் கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் தளமானது இன்று முதல்; தமிழ் நண்பர்கள் தளத்திலிருந்து உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வருகை தந்து முழுப் பதிவினையும் படிக்கின்ற வசதியினை அறிமுகப்படுத்துகின்றது. 


தமிழ் நண்பர்கள் தளமானது இன்று முதல் திரட்டியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறது. ஆர்வமுள்ள பதிவர்கள் தமிழ் நண்பர்கள் தளத்திற்குச் சென்று, உங்கள் பதிவுகளையும் இணைத்துக் கொள்ள விரும்பின் கீழே உள்ள முகவரியில் கிளிக் செய்யுங்கள்.
http://tamilnanbargal.com/
*************************************************************************************************************

25 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

மிகவும் பயனுள்ள பதிவு. அனைத்து விடயங்களுமே மிகவும் முக்கியமானவை தான்.

எங்க அப்பா சின்னவயசுல காலையில் எழுந்தவுடன் தினமும் 5 புதிய வசனங்கள் படித்துவிட்டு தான் படிக்க புத்தகம் எடுக்க சொல்வார். பதிவை பார்த்தவுடன் அது தான் ஞாபகம் வந்தது.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

தமிழ் நண்பர்கள் நல்லதொரு புதிய முயற்சி. தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அறிமுகம் செய்தமைக்கு நன்றி நிரூபன்.

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பா,
முதல் வருகைக்கு நன்றி
எனக்கு தூக்கம் வருது.
நான் காலையில் பதில் போடுகிறேன்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

எனக்கும் கண்கள் சொக்குது. குட் நைட் ...

மகேந்திரன் said...
Best Blogger Tips

நம்மைப் போன்று அயல்நாடுகளில் பனி புரிவோருக்கு
ஆங்கிலம் மிக அவசியம் அல்லவா.....
மிகவும் பயனுள்ள பதிவு சகோ////

Mahan.Thamesh said...
Best Blogger Tips

ஆங்கிலம் கற்றுகொள்ள உதவும் பயனுள்ள தகவல்கள் நண்பா

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

எங்க அப்பா சின்னவயசுல காலையில் எழுந்தவுடன் தினமும் 5 புதிய வசனங்கள் படித்துவிட்டு தான் படிக்க புத்தகம் எடுக்க சொல்வார். பதிவை பார்த்தவுடன் அது தான் ஞாபகம் வந்தது.
//

சின்ன வயசில என்னோட டீச்சர் தான் எனக்கு இந்த ஐடியாவை சொல்லி கொடுத்தாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்
தமிழ் நண்பர்கள் நல்லதொரு புதிய முயற்சி. தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அறிமுகம் செய்தமைக்கு நன்றி நிரூபன்.//

நன்றியெல்லாம் எதுக்கு நண்பா..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

எனக்கும் கண்கள் சொக்குது. குட் நைட் ...
//

குட் நைட் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

எனக்கும் கண்கள் சொக்குது. குட் நைட் ...
//

குட் நைட் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்
நம்மைப் போன்று அயல்நாடுகளில் பனி புரிவோருக்கு
ஆங்கிலம் மிக அவசியம் அல்லவா.....
மிகவும் பயனுள்ள பதிவு சகோ//////

உண்மை தான் அண்ணர்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

ஆங்கிலம் கற்றுகொள்ள உதவும் பயனுள்ள தகவல்கள் நண்பா
//

நன்றி நண்பா.

Unknown said...
Best Blogger Tips

பயனுள்ள தகவல் நண்பரே.
கவனித்தல்,படித்தல்,பேசுதல் ஆகிய மூன்றையும் கொண்டு மொழி புலமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

எனக்கு பெற்றோர் சொன்ன யோசனை என்ன வென்றால் வீட்டில் வாங்கும் ஆங்கில செய்தி தாளை எடுத்து கொண்டு தினமும் வாய் விட்டு படிக்க வேண்டும்.(குறைந்த பட்சம் 15-20 நிமிடங்கள்).மனதிற்குள் படிப்பது அல்ல.வாய் விட்டு சொற்களை சொல்லி பழக வேண்டும்.

எங்கெல்லாம் அர்த்தம் புரியவில்லையோ,உடனே டிக்சனரி பார்க்க வேண்டும்.

முதலில் கூச்சமாகவும்,சிரமமாகவும் இருந்தது.பழக பழக சரியாகிவிட்டது.

ஆமினா said...
Best Blogger Tips

அருமையான தகவல்... முயற்சிக்கிறேன்

எனக்கு தெரிஞ்ச டிப்ஸ்- தமிழ் ஒரிஜினல் டிவிடியில் ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்துக்களூம் வரும் இல்லையா? அதை கவனித்து எந்தஎந்த வசனங்களுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என கவனிப்பதன் மூலம் துணைக்கு ஆளே இல்லாமல் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@bala srini
வாருங்கள் நண்பரே..
உண்மையில் நல்ல ஆலோசனையினைத் தான் பெற்றோர் கொடுத்திருக்கிறாங்க.

நானும் இன்று வரை ஒரு டிக்சனரி கூடத் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

எனக்கு தெரிஞ்ச டிப்ஸ்- தமிழ் ஒரிஜினல் டிவிடியில் ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்துக்களூம் வரும் இல்லையா? அதை கவனித்து எந்தஎந்த வசனங்களுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என கவனிப்பதன் மூலம் துணைக்கு ஆளே இல்லாமல் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும்.
//

ரொம்ப ரொம்ப சூப்பரான் ஐடியா அக்கா.

நான் இதையும் பதிவில குறிப்பிட்டிருக்கலாம். பதிவு எழுத யோசிக்கும் போது நினைவிற்கு வந்திச்சு இந்த ஐடியா.

ஆனால் சட்டென்று மறந்து போச்சு,

நல்லதோர் ஐடியாவினை கொடுத்திருக்கிறீங்க அக்கா.
ரொம்ப நன்றி.

Thava said...
Best Blogger Tips

என் இனிய காலை வணக்கம் நண்பரே,
நல்ல பயனுள்ள ஐடியாக்களை வாரி வழங்கியுள்ளீர்கள்..இவைகளை இனிமேல் பின்பற்ற முயற்சி செய்கிறேன்.நன்றி.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...
Best Blogger Tips

அருமையான முயற்சி .அவரவர் வேளையில் ஓடிக்கொண்டு இருக்கும்போது நம்மை சுற்றி இருப்பவர்களின் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளும் உங்கள் முயற்சிக்கு என் சிறு உதவி இதோ .இந்த முகவரியில் பார்பவர்கள பயன் அடையலாம்
http://www.talkenglish.com/

ஆகுலன் said...
Best Blogger Tips

அண்ணே பதிவுக்கு நன்றி....சரியாய் சொல்லி இருக்குறீர்கள்..நாம கதைக்கிற ஆக்கள்.......

உங்க ஐடியாவ ட்ரை பண்ணி பாக்குறன்

ad said...
Best Blogger Tips

வணக்கம்.
வாழ்க டமில்.!வளர்க இங்கிலிச்.

ad said...
Best Blogger Tips

இங்கிலிஸ் எழுதலாம்,மனதினுள் படிக்கலாம், ஆனால்...
பேசவென்று ஆரம்பித்தால்தானே ஐயா மேட்டரே ஓவர்.
டங்கு சிலிப்பாகுதுப்பா.
நானும் வருசக்கணக்கா ட்ரை பண்ணி, கடைசியில்-உனக்கு எதுக்குடா இந்த ஆசை-என்று என்னை நானே திட்டிவிட்டு, பென்சன் எடுத்துவிட்டேன்.

இப்போது சார் ஆரம்பித்துவைத்திருக்கிறார்.மீண்டும் ஆரம்பிப்போம்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//*இந்த ஐடியாக்களை விட; இன்னும் ஓர் ரொம்ப சூப்பரான + கொஞ்சம் காமெடியான விடயம் இருக்கு.அது என்னவென்று தெரியுமா? கால்சென்டர்களுக்கு போன் செஞ்சு, ஆங்கிலத்தில் உரையாடுவதும், கடலை போடத் தொடங்குவதும் உங்கள் பேச்சு வன்மையினை சபைக் கூச்சமின்றி அதிகரிக்க உதவும்.//

இதுக்கு மேலே தொடர முடியல.என்னமோ வடிவேலு இல்லாத குறையை நிவர்த்தி செய்றீங்க:)))))

திரைப்பட காமெடிக்கு கதை வசனம் எழுதறவங்க கண்ணுல பட்டா நல்லது:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//சுவடுகள் said... Best Blogger Tips [Reply To This Comment]

இங்கிலிஸ் எழுதலாம்,மனதினுள் படிக்கலாம், ஆனால்...
பேசவென்று ஆரம்பித்தால்தானே ஐயா மேட்டரே ஓவர்.
டங்கு சிலிப்பாகுதுப்பா.
நானும் வருசக்கணக்கா ட்ரை பண்ணி, கடைசியில்-உனக்கு எதுக்குடா இந்த ஆசை-என்று என்னை நானே திட்டிவிட்டு, பென்சன் எடுத்துவிட்டேன்.

இப்போது சார் ஆரம்பித்துவைத்திருக்கிறார்.மீண்டும் ஆரம்பிப்போம்.//

இதோ!உங்களுக்கு எசப்பாட்டு.இரண்டு பேரும் கலக்குங்க:)

ad said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

அலோ.. எச்சுஸ்மி.

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம்
ஆங்கிலம் கற்கும் முறை விளக்கிய விதம் மிக அருமையாக உள்ளது வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு இங்கே http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_25.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails