Wednesday, January 11, 2012

மக்கள் படை மூலம் ஆமிக்கு மரண பீதியை கொடுத்த புலிகள்!

காற் சட்டைக் காலத்தில் 1991ம் ஆண்டில் இது புலிகள் காலம் எனும் இசைப்பேழையில் காசி ஆனந்தனின் பாடல் வரிகளில் தேனிசை செல்லப்பா அவர்கள் இசையமைத்துப் பாடிய பாடலை முணு முணுக்கும் போது மனதில் பல கேள்விகள், பல ஐயங்கள் தோன்றும். ஆனாலும் அந் நேரத்தில் அந்த கேள்விகளுக்கான விடைகளை யாரிடம் கேட்டுப் பெறுவது எனும் சிந்தனையுடன் என் நாட்கள் நகர்ந்தன. "மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம். மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும்..." என்றவாறு அந்தப் பாடல் அமைந்திருக்கும். இப் பாடலில் குறிப்பிடப்படும் மக்கள் படை ஈழத்தில் அப்போது இல்லையே எனும் நிலையில் என் சிந்தனைகள் பின்வருமாறு விரிந்திருந்தது. 
மக்கள் படை என்பது எங்கே இருக்கு? அப்படி ஓர் படை இல்லாம கவிஞர் ஏன் இப்படிப் பாடியிருக்கிறார்? புலிகள் கொரில்லா முறைத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்த காலத்தில் மக்கள் கள முனைக்குச் செல்வதும் இல்லை. தாக்குதலின் பின்னணியில் நின்று பின் தள உதவிப் பணிகள் புரிவதும் இல்லை. போராளிகளின் வித்துடல்கள் வரும் வேளையில் ஒன்று கூடுவதும், நினைவு தினங்கள், வரும் போது அஞ்சலி செலுத்திட ஒன்று கூடுவதும் தான் மக்கள் படையா? இதனை வைத்தா இவ்வாறு எழுதியுள்ளார்? அல்லது புலிகளுக்கு ஆதரவாக இருக்கும் மக்களை வைத்துத் தான் மக்கள் படை என விளித்துள்ளாரா? என்று அப்போதைய என் வயதிற்கு ஏற்றாற் போல சிறு பிள்ளைத்தனமாக யோசித்தேன். 

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமீழம் மலரட்டும்" என தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் சொன்னாரே! அது எப்போது நிகழும்? அந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்றெல்லாம் தேடிய காலங்கள் அவை. இதற்கான அர்த்தம் 1999ம் ஆண்டு தான் எனக்கு கிடைத்தது. வன்னிப் பகுதியினை முற்றாக கைப்பற்றி விடுதலைப் புலிகளைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் இலங்கை இராணுவப் படைகள் 1997ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி ஜெயசிக்குறு எனப் பெயரிடப்பட்ட ஓர் படை நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தனர். இந்தப் படை நடவடிக்கையினூடாக கொழும்பிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான A9 நெடுஞ் சாலையினைத் திறக்கும் நடவடிக்கையிலும் இலங்கை இராணுவத் தரப்பு மும்முரமாக களமிறங்கியிருந்தது.
இந் நேரத்தில் புலிகள் இயக்கத்தினர் இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மெது மெதுவாகத் தம் நிலங்களை இழந்து ஓர் குறுகிய பகுதியினுள் குடி புகுந்தனர். இக் காலப் பகுதியில் புதுக்குடியிருப்பையும், மல்லாவியையும் மையமாக வைத்துத் தான் மக்கள் தமது பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். இனி ஒரு அடி கூட நகர முடியாது என்ற சூழ் நிலையில் வாசலுக்குள் படை வந்து புலிகளின் கழுத்தினை நெரிக்கும் நோக்கில் நின்று கொண்டிருந்தது. அந் நேரத்தில் புலிகள் மன உறுதி தளராதவர்களாக 1999ம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் புதுக்குடியிருப்பு, மல்லாவிப் பகுதிகளில் வசித்து வந்த மக்களிடம் போர்ப் பயிற்சிக்குரிய பிரச்சார நடவடிக்கையினைத் ஆரம்பித்தார்கள்.

மக்களும் ஆர்வத்தோடு, தம் வாசல் வந்த பகையினை வழி மறித்து அடி கொடுத்து வலியுணர்த்தி விரட்டி அடிக்க வேண்டும் எனும் நோக்கில் இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள். மக்களின் விருப்பத்தினை உணர்ந்த புலிகள் எல்லைப் படை எனும் போர்ப் பயிற்சி அணியினை உருவாக்கினார்கள். வன்னிப் பகுதியில் அப்போது உள்ள பொது மக்களில் வயது வந்த அனைவரும் இப் பயிற்சியினை விருப்போடு பெற்று புலிகளால் எதிர்காலத்தில் நிலங்கள் மீட்கப்படும் வேளையில் தாம் அந்த நிலங்களைக் காக்கும் காவலாளிகளாக நின்று கொண்டு, புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பேருதவி செய்யும் பங்காளர்களாக மாறத் தயாராகினார்கள்.
ஓயாத அலைகள் மூன்று படை நடவடிக்கையின் போது 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் படை ஈழத்தில் உதயமாகியது.  ஓயாத அலைகள் மூன்று இடம் பெற்ற 1999ம் ஆண்டு காலப் பகுதியில் ஈழப் போரியல் வரலாற்றில் புலிகள் மக்கள் படையினையும், லெப்டினன்ட் மயூரன் பதுங்கிச் சுடும் அணியினரையும்,ஆட்லறிப் படையின் வீரியத்தினையும் உலக அரங்கிற்கு அறிமுகஞ் செய்திருந்தனர். ஓயாத அலைகள் மூன்று சமரில் நிகழ்ந்த மக்கள் படையின் எழுச்சியினையும், அதன் பின் தள உதவியின் மூலம் கிடைக்கப் பெற்ற பங்களிப்புக்களையும் அடிப்படையாக வைத்து தமிழிழ விடுதலைப் புலிகளின் மகளிர் கலை பண்பாட்டுக் குழுவினர் அலையின் வரிகள் இறுவட்டில் "மக்கள் புரட்சி ஒன்று மண்ணில் வெடித்தது". தமிழ் மானங் காக்க படை விரட்டி அடித்தது...." என்றோர் பாடலை வெளியிட்டிருந்தார்கள்.

காலப் போக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாக இம் மக்கள் படையானது எல்லைப் படை, உள்ளக பாதுகாப்பு படை, பின் தள உதவிப் படை எனப் பிரிக்கப்பட்டு மக்களின் பேராதரவோடு களமுனையில் செயற்படத் தொடங்கியது. 2004-2005ம் ஆண்டு காலப் பகுதியில் புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் விஸ்தரிக்கப்பட்டிருந்த பொழுதில்; புலிகள் தமது மக்கள் படை என்ற பிரிவினுள் உள்வாங்குவதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த மக்களை ஒவ்வோர் பிரிவுகளூடாகவும் அழைத்துப் பயிற்சி வழங்கியிருந்தார்கள். கடற்றொழிலாளர் சமாசம், வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், பனை தென்னை அபிவிருத்திச் சபை, மற்றும் உள்ளூர் சன சமூக நிலையங்கள் ஊடாக மக்களைத் திரட்டி வன்னிப் பகுதிக்கு அழைத்து பயிற்சியினைக் கொடுத்து தமது அடுத்த கட்டப் போராட்டத்திற்கான தயார்படுத்தல்களைத் தொடர்ந்தனர் புலிகள்.

இப் பதிவின் தொடர்ச்சியினைப் படிக்க கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்>>
http://www.thamilnattu.com/2012/01/blog-post_5072.html

இவ் வேளையில் புலிகள் ஈழப் போராட்ட வரலாற்றில் யாழ் குடா நாட்டினை மையமாக வைத்து ஓர் படையினை உருவாக்க நினைத்தார்கள். அது என்ன படை என்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள். 
இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
**********************************************************************************************************
பதிவர் அறிமுகம் பகுதியினூடாக நாம் ஒரு வீட்டிற்குச் செல்லவிருக்கின்றோம். அட என்னங்க நீங்க. "வீடு" எனும் பெயர் கொண்ட வலைப் பதிவிற்குச் சென்றால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு அறிய ஆர்வம் இல்லையா? இதோ; தயாராகுங்கள். பதிவர் சுரேஸ்குமார் அவர்கள் தன்னுடைய வீடு எனும் வலைப் பதிவினூடாக சுவாரஸ்யமான இலக்கியப் பதிவுகளையும்,அனுபவப் பதிவுகளையும்,மற்றும் அறிவியல் பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றார்.
வீடு வலைப் பதிவிற்குச் செல்ல:
http://veeedu.blogspot.com/
***************************************************************************************************************

8 Comments:

சுதா SJ said...
Best Blogger Tips

எல்லைப்படை !!!
எல்லைப்படை பற்றி எனக்கும் கொஞ்சம் நினைவுகள் இருக்கு..
வன்னியில் இருக்கும் போது மாமா,சித்தப்பா எல்லோரும் இரவில் போறவங்க...
அதுதான் இதாக இருக்கும் என்று நினைக்கிறேன்... வடிவாக நினைவு இல்லை :(

மற்றும் படி பதிவில் நிறையை விடயங்கள் சொல்லுறீங்க...
ஆச்சரியமாய் படித்துகொண்டு தொடர்கிறேன் :)

புகைப்படங்கள் பார்க்கும் போதே சிலிர்க்குது பாஸ்..
ஹும்... அது எப்படிப்பட்ட மண் :(

வெத்து வேட்டு said...
Best Blogger Tips

if you post that apeople had ltte's training, it will serve Srilankan Army to guard itself from all the attrocities they committed.
SLArmy can claim because of all these reasons they had to strip search all "civilian looking" people.
People from Mullivaikal shot/shelled at Army that is why Army had to return fire.

Unknown said...
Best Blogger Tips

அறிமுகத்திக்கு நன்றி நண்பா!அந்த பாடல் கிடைத்தால் போட்டிருக்கலாமே? நாங்களும் கேட்டிருப்போம்...கிடைத்தால் அடுத்த பதிவில் போடவும்...

சசிகுமார் said...
Best Blogger Tips

போட்டோக்கள் பார்க்கும் பொழுது தெரிகிறது ஒவ்வொரு மக்களுக்குள்ளும் இருந்துள்ளது விடுதலை தீ...

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!நேற்றுப் பார்க்க(கண்டுபிடிக்க)முடியவில்லை!வெள்ளி சந்திக்கலாம்,பின்னர் குறிப்புத் தருவேன். நன்றி!

K said...
Best Blogger Tips

வித்தியாசமான பதிவை அழகாக தந்திருக்கே மச்சி! வாழ்த்துக்கள்!

K said...
Best Blogger Tips

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//வெத்து வேட்டு said... Best Blogger Tips [Reply To This Comment]

if you post that apeople had ltte's training, it will serve Srilankan Army to guard itself from all the attrocities they committed.
SLArmy can claim because of all these reasons they had to strip search all "civilian looking" people.
People from Mullivaikal shot/shelled at Army that is why Army had to return fire.//

வெத்து வேட்டு!After a long time you come with a valued and unbiased point.Surprise really!

Srilankan government will have a better source of database to prove their argument,but their genocide motives cannot be wiped out of the history as an equal counter argumentative proofs are there in the public domain.

The keys are with the western stage actors who is willing to give a nod or to play their own cards.

Hope history will be written right.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails