Wednesday, January 4, 2012

Dear Frankie - மனதை உருக்கும் உலக சினிமா

போராட்டம் நிறைந்த எம் அன்றாட வாழ்க்கையில் சோகங்களும், சந்தோசங்களும் மாறி மாறிச் சுழல் சக்கரம் போன்று வந்து கொண்டேயிருக்கும். இன்று சிரிக்கும் மன நிலையில் இருக்கையில் நாளை நாம் அழுகின்ற மன நிலையினைப் பெற்றுக் கொள்வோம் என்பது வாழ்க்கையின் யதார்த்தமாகி விட்டது. இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி எம்மைத் துரத்திக் கொண்டிருக்கையில் எம் வாழ்க்கையினைக் கட்டியெழுப்புவதற்காக சின்னச் சின்னச் சந்தோசங்களைச் சில்லறைகளைப் போன்று ஒத்தியெடுத்து நாம் இப் பூமியில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். 
படத்தின் மையக் கரு: ஒன்பது வயதுடைய சிறுவனான ப்ராங்கி (Frankie) தான் இந்தப் படத்தின் கதாநாயகன்.தன்னுடைய தாய்க்கும்,தந்தைக்கும் இடையிலான உறவில் விரிசல் வந்த நிலையினை அறியாது, தன் தந்தை மூலம் தாயார் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய நிலையினை அறியாது தந்தையின் வரவினை எண்ணி வைத்த கண் வாங்காது தாயின் அரவணைப்பில் கடலினைப் பார்த்துக் கொண்டிருக்கும் குட்டிப் பையனாக இங்கே ப்ராங்கி எனும் பாத்திரமேற்று நடித்திருக்கிறார் McElhone அவர்கள். 

தன்னுடைய கணவனுக்கும், தனக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை, கணவனால் தான் துன்புறுத்தப்பட்டுப் பிரிந்திருக்கிறேன் எனும் விடயங்களை வாய் பேச முடியாத தன் ஆசை மகனிடம் சொல்லி அவனது மன நிலையினை மாற்றாது நன்றாக வளர்க்க விரும்பும் தாயாக இப் படத்தில் Emily Mortimer அவர்கள் Lizzie எனும் கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார். நினைவு தெரிந்த நாள் தொடக்கம் தன் தந்தையினைத் தேடத் தொடங்கும் வாய் பேச முடியாத தன் மகனுக்கு தந்தை கப்பலில் வேலை செய்வதாகவும், வெகு விரைவில் வந்து விடுவார் என்றும் கூறிக் கொள்வதோடு தான் கணவரோடு வாழ்ந்து பிரச்சினைக்கு உள்ளாக்கிய வீட்டிலிருந்து தன் மகனையும், தாயாரையும் அழைத்துக் கொண்டு ஸ்கொட்லன்ட் நாட்டின் மற்றுமோர் பகுதியில் வசிக்கத் தொடங்குகிறார் தாயார் Lizzie.

தந்தையினைப் பற்றிய எண்ணங்கள் மனதினைச் சூழ தனிமையில் வாய் பேச முடியாதிருக்கும் ப்ராங்கியிற்கு அவனது தந்தையுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுகின்ற ஓர் போலி வழியினை தாயார் Lizzie அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றார். தபால் நிலையத்திற்குச் சென்று தன் மகன் அனுப்பும் கடிதங்களைச் சேகரித்து தனியே ஓர் இடத்தில் வைத்துப் படித்து மகனின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு தந்தையென்ற ஸ்தானத்திலிருந்து தாயாரே பதில் எழுதி மகனுக்கு அனுப்புகின்றார். காலவோட்டத்தில் பாடசாலை நண்பர்களினால் ப்ராங்கியின் கேட்கப்படும் அவனது தந்தையினைப் பற்றிய கேள்விகள் அவன் மனதைத் துளைத்தெடுப்பதும், தன் தந்தை கரைக்கு வருவார் என்ற நம்பிக்கையில் பள்ளித் தோழர்களை அழைத்துக் கொண்டு கடற் கரைக்குச் சென்று காத்திருப்பதும் ப்ராங்கியின் அன்றாடச் செயற்பாடாகி விடுகிறது.
இதனைப் புரிந்து கொண்ட நடுத்தர குடும்பத்தினைச் சேர்ந்த ப்ராங்கியின் தாயார் Lizzie அவர்கள் தன் வீட்டில் இருக்கவே பிடிக்காது வீட்டை விட்டு தன் மன உணர்வுகளைக் கொஞ்சம் இறக்கி வைக்கலாம் எனும் நோக்கில் குடிபான நிலையத்திற்குச் செல்கின்றார். அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, தன் வாழ்க்கைக்கு ஒளி பிறக்காதா, தன் வறுமை நீங்காதா? தன் மகனின் மன உணர்வில் மாற்றம் கொண்டு வர ஒரு தற்காலிக தந்தை கிடைக்கமாட்டாரா என ஏங்கிக் கொண்டிருக்கிறாள். இந் நிலையில் நைட் கிளப்பிலிருந்து வெளியே வந்த இரு ஜோடிகள் Lizzie அவர்கள் தனிமையில் கண்ணீர் ததும்ப அழுது கொண்டிருப்பதனைக் கண்ணுற்று அவளது கரங்களைப் பற்றி, அவளைத் தம்முடன் அழைத்துச் சென்று அவளது பிரச்சினைகளைக் கேட்டறிகிறார்கள்.
படத்தில் உங்கள் உணர்வுகளை உருக்கும் இடம்:
இங்கே தான் படத்தில் எம் மன உணர்வுகளைக் கலங்கடிக்கின்ற காட்சிகள் வந்து கொள்கின்றன. ஆம் ப்ராங்கியின் தாயாரும் அவளது தோழியும் இணைந்து தற்காலிகமாக ஓர் தந்தையினை ஏற்பாடு செய்தால் ப்ராங்கியின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதோடு,ப்ராங்கி கல்வியில் கவனம் செலுத்துவான் எனவும் எண்ணுகின்றார்கள். இதன் பிரகாரம் ஸ்கொட்லன்டிற்கு அமெரிக்க கப்பலில் வந்திருக்கும் ஒருவரை அழைத்து தற்காலிக தந்தையாக நடிக்குமாறு கேட்கின்றார்கள். தந்தையாக நடிப்பதற்கு இணக்கம் தெரிவித்தவரோ,அதிகளவான பணத்தினைப் ப்ராங்கியின் தாயாரிடம் கேட்கையில் தன் பொருளாதார நிலையினை எடுத்துச் சொல்லி தன் கைவசம் இருந்த பணத்தினைக் கொடுத்து தற்காலிக தந்தையாக நடிக்க ஏற்பாடு செய்கின்றார்.
படத்தின் திருப்பு முனை இடம் பெறும் பகுதி:
ஒரு புறத்தில் தற்காலிக தந்தையினை ப்ராங்கியின் தாயார் ஒழுங்கு செய்கையில் ப்ராங்கியின் நிஜத் தந்தை வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இரு பெரும் புயல்களுக்கு நடுவே சிக்கிக் கதறிக் கொண்டிருக்கும் ப்ராங்கியின் தாயாரின் மனம், தந்தையின் அரவணைப்பிற்காக ஏங்கும் ப்ராங்கியின் மன உணர்வுகள் ஆகியவற்றினை காட்சிகளாக உள்வாங்கி இப் படம் 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளி வந்திருக்கிறது. தந்தையின் அன்பிற்காக ஏங்கும் ப்ராங்கியிற்கும், தற்காலிக தந்தைக்கும், அவனது தயாருக்கும் இடையிலான மனப் போராட்டங்களுக்கான விடைகளை நீங்கள் அறிய வேண்டுமா? உங்கள் விழிகளை ஈரமாக்குகின்ற, உங்கள் கைக் குட்டையில் கண்ணீர்த் துளிகளை ஒத்தியெடுக்க வைக்கின்ற இந்த அழகிய காவியத்தினை நீங்கள் விரும்பினால் ஒரு தடவை பார்க்கலாம் அல்லவா? 
படம் பற்றிய சில நறுக்குகள்:
Shona Auerbach அவர்களின் இயக்கத்தில், Andrea Gibb அவர்களின் எழுத்துருவாக்கத்தில், Alex Heffes அவர்களின் மென்மையான மெலடி இசையில் உருவாகியிருக்கும் இப் படத்தினை Miramax Flims நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் வரும் அதிகளவான காட்சிகள் உங்கள் மனங்களை வருடும் வகையில் உணர்ச்சிகளைக் கோர்வையாக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ப்ராங்கியின் நடிப்பும், ப்ராங்கியின் தாயாராக வரும் Lizzie அவர்களின் நடிப்பும் இப் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய இப் படமானது உலக சினிமா வரலாற்றில் ஏழு விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது.

Dear Frankie: மனதை உருக்கும் ஓர் யதார்த்த சினிமா!
ரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் நேர அளவை கொண்ட;
***********************************************************************************************************
உலக சினிமா விமர்சனங்களை அறிய வேண்டுமா? ஆங்கிலத் திரைப் பட விமர்சனங்களைப் படித்து, நல்ல சினிமாப் படம் எது என நீங்கள் அறிய வேண்டுமா? உங்களுக்காக காத்திருக்கிறது "குமரனின் எண்ணங்களும் திரை வண்ணங்களும் வலைப்பூ". உலக சினிமாப் பட விமர்சனங்களுக்கு என்று தனியான ஓர் வலைப் பூவினை எழுதி வருகின்றார் குமரன் அவர்கள். குமரனின் உலக சினிமா விமர்சனங்களை நீங்களும் படித்துப் பார்க்க:
***********************************************************************************************************

17 Comments:

Thava said...
Best Blogger Tips

அட கடவுளே..எவ்வளவு பெரிய காரியத்தை சைலண்டாக செய்துவிட்டீர்கள் ?? என்னையும் தங்கள் பதிவில்...!! என்ன சொல்ல வேண்டுமென்று வார்த்தைகளை தேடுகிறேன்..அதுவும் தாங்கள் மனதார ரசித்த ஓர் உலக சினிமா விமர்சனத்தில், என் வலையையும் இணைத்து பதிவிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள் ..தங்களை போன்றவர்களே என்னுடைய மிக பெரிய இன்ஸ்பிரஷன்..

இந்த விமர்சனமும் மிகவும் அருமை.. படத்தை இப்பொழுதே பதிவிறக்கம் செய்கிறேன்..நன்றிகள் பல..படம் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்..

Thava said...
Best Blogger Tips

அட கடவுளே..எவ்வளவு பெரிய செயலாக சைலண்டாக செய்துவிட்டீர்கள் ?? என்னையும் தங்கள் பதிவில்...!! என்ன சொல்ல வேண்டுமென்று வார்த்தைகளை தேடுகிறேன்..அதுவும் தாங்கள் மனதார ரசித்த ஓர் உலக சினிமா விமர்சனத்தில், என் வலையையும் இணைத்து பதிவிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள் ..தங்களை போன்றவர்களே என்னுடைய மிக பெரிய இன்ஸ்பிரஷன்..

இந்த விமர்சனமும் மிகவும் அருமை.. படத்தை இப்பொழுதே பதிவிறக்கம் செய்கிறேன்..நன்றிகள் பல..படம் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்..

Jana said...
Best Blogger Tips

படத்தை கண்டிப்பாக பார்த்துவிடவே வேண்டும்... மன்னிக்கவும் தங்கள் பதிவை ஒரு கட்டத்திற்கு மேல் வாசிக்கவில்லை. இது படம் என்hதால் பார்த்துவிடுவதாகவே முடிவு. எப்போதும் சிறுவர்களை மையப்படுத்திவரும் படங்களுக்கு நான் வெறியன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Unknown said...
Best Blogger Tips

பார்க்கவேண்டும் பாஸ்! நன்றி பகிர்தலுக்கு!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
rajamelaiyur said...
Best Blogger Tips

தமிழ் படம்லாம் பார்பதில்லையா ?

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

சார் ... கொஞ்சம் விமர்சனங்கள் மெதுவா எழுதுங்க. உங்க எழுத்து ஸ்பீடுக்கு ஈடு கொடுத்து படம் பார்க்க முடியல.

Riyas said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்.

ஓர் அழகான திரைப்படத்தைப்பற்றிய அழகான பார்வை குழந்தைகள்,சிறுவர்கள் பற்றிய படங்கள் என்னையும் மிகக்கவரும்.

ஒரு பதிவுக்கு கமெண்ட் போட நினைக்கும் போதே மற்றைய பதிவு வந்திடுதே எப்பிடி நிரூபன் இந்த வேகம்.. கிரிக்கட் பதிவுக்கு கமெண்ட் போட வந்தேன். அதற்குள் இது..

உங்க வேகத்துக்கு எங்களால ஓட முடியல்லிங்க..

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம்.
நன்றி.

சுதா SJ said...
Best Blogger Tips

நிருபன் ரியாஸ் சொன்னது போல்.... என்ன ஒரு வேகம்...... அவ்வவ்

சுதா SJ said...
Best Blogger Tips

நிருபன் நான் முதலே சொன்னேன் தானே ஹாலிவுட் படங்கள் எனக்கு பிடிக்காது என்று...

அந்நாள் உங்கள் இந்த விமர்சனம் படித்ததில் இருந்த அந்த படத்தை பாக்கணும் போலவே இருக்கு...

லிங்க் எடுத்து வைத்துள்ளேன்... வாற சண்டே பார்ப்பேன்.

உங்கள் விமர்சனமே சொல்லுது படம் ஏமாற்றாது என்று :))

KANA VARO said...
Best Blogger Tips

நிரூ, நல்ல குடும்பப்படமா இருக்கும் போல!

shanmugavel said...
Best Blogger Tips

சினிமாவை அப்புறம் பார்க்கிறேன்.இதை படித்த பிறகு குடும்ப வன்முறை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது.விளைவுக்கு நீங்களே பொறுப்பு.

கவி அழகன் said...
Best Blogger Tips

வாசிக்கவில்லை பாடம் பார்பதாய் உத்தேசம்

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

///// ப்ராங்கியின் தாயாரும் அவளது தோழியும் இணைந்து தற்காலிகமாக ஓர் தந்தையினை ஏற்பாடு செய்தால் ப்ராங்கியின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதோடு,ப்ராங்கி கல்வியில் கவனம் செலுத்துவான் எனவும் எண்ணுகின்றார்கள். இதன் பிரகாரம் ஸ்கொட்லன்டிற்கு அமெரிக்க கப்பலில் வந்திருக்கும் ஒருவரை அழைத்து தற்காலிக தந்தையாக நடிக்குமாறு கேட்கின்றார்கள். தந்தையாக நடிப்பதற்கு இணக்கம் தெரிவித்தவரோ,அதிகளவான பணத்தினைப் ப்ராங்கியின் தாயாரிடம் கேட்கையில் தன் பொருளாதார நிலையினை எடுத்துச் சொல்லி தன் கைவசம் இருந்த பணத்தினைக் கொடுத்து தற்காலிக தந்தையாக நடிக்க ஏற்பாடு செய்கின்றார்.////


சினிமாவை பார்க்கிறேன்

Unknown said...
Best Blogger Tips

vimarsanam arumai.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

படம் பார்ப்பது போல் இருந்தது விமரிசனம்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails