Monday, January 23, 2012

The Losers : அமெரிக்க உளவு துறைக்கு ஆப்படிக்கும் கேங்!

ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்!
ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா என நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம், இந்தச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் The Losers. 
படத்தின் மையக் கதை: அமெரிக்காவின் CIA உளவு நிறுவனமானது தன் வசமுள்ள நன்கு பயிற்றப்பட்ட அதி சிறந்த வீரர்களை தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள தீவிரவாதக் கும்பலை அழிக்கும் நோக்கில் அனுப்பி வைக்கின்றது. சம நேரத்தில் இந்த ஐவர் குழு தீவிரவாதக் கும்பலின் முகாமினை முற்றுகையிட்டு தாக்குதல் நடாத்த தொடங்கும் போது உதவிக்கு அமெரிக்க போர் விமானமும் விமானத் தாக்குதல் மூலம் தனது பங்களிப்பினை நல்கும் என்பதே திட்டமாகும். கேணல் ப்ராங்கிளின் க்ளே தலமையிலான ஐவர் அடங்கிய குழு தீவிரவாதக் கும்பலின் முகாமினைத் தாக்குவதற்கு முன்பதாக இரகசியமாக வேவு பார்க்கின்றார்கள். அப்போது பணயக் கைதிகளாக அங்கே 25 சிறுவர்களை வேனிலிருந்து (Van) இறக்குகின்றனர் தீவிரவாதக் குழுவினர்.

CIA நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற Black Ops குழுவினர் ஐவரும்,தாக்குதலைத் தொடங்கினால் 25 அப்பாவிச் சிறுவர்களும் கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.ஆகவே விமானத் தாக்குதலை நிறுத்துமாறு வோக்கிடோக்கி மூலம் அறிவிக்கிறார்கள். ஆனால் விமானியோ கேணலின் அறிவுரையினைச் செவிமடுக்காது விமானத்தினை முகாம் இருக்கும் திசை நோக்கிச் செலுத்துகிறார்.விமானம் அமெரிக்காவிலிருந்து பொலிவியா நாட்டின் எல்லையினை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சமயோசிதமாகச் சிந்தித்த கேணல்; விமானம் தாக்குதலைத் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்பதாக ஓடோடிச் சென்று தனது குழுவினர் உதவியுடன் தீவிரவாதக் குழுவினர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் நடாத்தி 25 அப்பாவிச் சிறுவர்களையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வருகின்றார்கள். இதன் பின்னர் விமானம் தனது பங்கிற்கு சகட்டு மேனிக்கு குண்டுத் தாக்குதலை நடாத்துகின்றது.

வெற்றிகரமான தாக்குதல் மூலம் கேணல் Franklin Clay அவர்களின் அணியினரால் மீட்கப்பட்ட சிறுவர்களை ஏற்றி வந்த வாகனமும் விமானக் குண்டுத் தாக்குதலிலிருந்து மயிரிழையில் தப்புகின்றது. இந் நேரத்தில் ஓர் உலங்குவானூர்தியை (ஹெலிகொப்டர்) வரவழைத்து கேணல் ப்ராங்கிளின் அவர்கள் தாம் மீட்ட 25 சிறுவர்களையும் பொலிவிய நாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கின்றார்கள். உலங்குவானூர்தி வானத்தில் பறக்கத் தொடங்க அமெரிக்கப் போர் விமானம் உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடாத்தி அப்பாவி 25 உயிர்களையும் கேணல் ப்ராங்கிளின் மற்றும் அவரது குழுவினரின் கண் முன்னே பறித்தெடுக்கிறது. தம்மால் சிறை மீட்கப்பட்ட 25 அப்பாவிச் சிறுவர்களின் உயிரும், கண் முன்னே தமது அமெரிக்கப் படையால் பறித்தெடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்த ஐவரும் CIA நிறுவனத்தின் மீது தாக்குதல் நடாத்த திட்டமிடுகின்றார்கள். 
இந்த நேரத்தில் மேற்படி ஐவரையும் போட்டுத் தள்ளி, தமக்கு எதிராகச் செயற்படத் திட்டமிடும் குழுவினரின் கதையை முடிக்கும் நோக்கில் அமெரிக்க உளவு நிறுவனமானது Colombiana திரைப்படப் புகழ் Zoe Saldana அவர்களை சிறப்பு அதிகாரியாக (Aisha)பொலிவியாவிற்கு அனுப்பி வைக்கின்றது. CIA நிறுவனத்திற்கு எதிரான தாக்குதலை கேணல் Franklin Clay தலமையிலான குழுவினர் வெற்றிகரமாக நடாத்தி முடித்தார்களா? அல்லது CIA நிறுவனத்தின் விசேட பயிற்சி பெற்ற பெண் அதிகாரி Aisha அவர்கள் CIA நிறுவனத் திட்டப்படி ஐவரையும் போட்டுத் தள்ளினாரா? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழும். ஆனால் நாம் நினைப்பதற்கு மாறாக படத்தினைத் திசை திருப்பியிருக்கிறார் இயக்குனர் Sylvain White அவர்கள். CIA நிறுவன அதிகாரி Aisha அவர்களின் வருகையுடன் படத்தின் கதை நகர்வின் திசை மாறுகின்றது.இது தொடர்பாக அறிய ஆவலா? அப்படியாயின் நீங்கள் படத்தினைப் பார்க்க முயற்சிக்கலாம்.

படம் பற்றிய சில சுவாரஸ்யங்கள்: 
*நடிகர் Jeffrey Dean Morgan அவர்கள் இந்தக் குழுவின் கேணல் தர அதிகாரியாக கேணல் Franklin Clay எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Takers திரைப்பட புகழ் Idris Elba அவர்கள் வில்லியம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன், Aisha எனும் பெயரில் Colombiana திரைப்படப் புகழ் நடிகை Zoe Saldana அவர்களும்,  நடிகர் Chris Evans அவர்கள் Jack எனும் பெயரிலும், நடிகர் Columbus Short அவர்கள் Linwood எனும் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர்களுடன், இன்னும் சில ஹாலிவூட், பொலிவூட் (Bollywood) நடிகர்கள் இணைந்து இப் படத்திற்கு அணி சேர்த்திருக்கிறார்கள்.

*படத்தின் சிறப்பு இசையமைப்பாளர்கள் வரிசையில் A.R.Rahman அவர்கள் தனது சிறப்பு இசையின் மூலம் ஏனைய இசையமைப்பாளர்களிலிருந்து வேறுபட்டு தனது தனித்துவத் தன்மை மூலம் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

*காதல் காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடிகர் Jeffrey dean Morgan அவர்களும், நடிகை Zoe saladana அவர்களும் இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார்கள். அதே நேரம் ஆக்சன் காட்சிகளும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள்.

*துபாய், மியாமி (Miami), இந்தியா, Houston என நகரும் காட்சிகளில் அழகிய இயற்கை காட்சிகளைத் தரிசிக்கும் பாக்கியமும் படத்தினைப் பார்ப்போருக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 
*இந்தியாவில் படத்தின் பிரதான வில்லன் Max அவர்கள் தனது விடுமுறையினைக் கழிக்கும் போது, ஹாலிவூட் மாடல்கள் தமது அழகின் மூலம் அவரைச் சுற்றி நின்று கிறங்கடிக்கிறார்கள்.ரசிகர்களையும் கிறங்கடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 

*படத்தின் வசனங்கள், குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றாற் போல அதிகளவு ஆபாசமின்றி புனையப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவு, ஒலிக் கலவை அனைத்தும் காட்சிகளிற்குச் சறுக்கல் ஏற்படா வண்ணம் அமைந்திருக்கிறது.

*Warner Broos நிறுவனத்தினர் இப் படத்தின் விநியோக உரிமையினைப் பெற்றிருக்கிறார்கள். 

*293 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கபப்ட்டிருக்கும் இத் திரைப்படமானது 23ம் திகதி ஏப்ரல் மாதம் 2010ம் ஆண்டு திரைக்கு வந்திருக்கிறது.


The Losers: உளவு நிறுவனம் மீது உள உறுதியுடன் போர் தொடுக்கும் வீரர்களின் சாகசம்.

இத் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள் வீக்கிப்பீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.

27 Comments:

சசிகுமார் said...
Best Blogger Tips

பதிவு போட்டு ஒரு மணி நேரம் ஆக போகுது இன்னும் முதல் கமென்ட் வரல.... இது நிருபன் பதிவு தானா?? தமிழ்மணமும் 1 தான் காட்டுது.... அதிசயம் தான்....

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

பதிவு போட்டு ஒரு மணி நேரம் ஆக போகுது இன்னும் முதல் கமென்ட் வரல.... இது நிருபன் பதிவு தானா?? தமிழ்மணமும் 1 தான் காட்டுது.... அதிசயம் தான்....
//

இன்னைக்கு பதிவு போட்ட டைம்மிங் மிஸ்ட் ஆகிடுச்சு.
எல்லோரும் ஆப்பிசில் வேலையில் மும்முரமாக ஈடுபடும் டைம்மில பதிவை ரிலீஸ் செஞ்சிட்டேன்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அருமையாக விமர்சிக்கிறீர்கள்!படம் பார்க்கும் மனோநிலை இல்லை.பின்னர் பார்ப்போம்!////நிரூபன் said.......இன்னைக்கு பதிவு போட்ட டைம்மிங் மிஸ்ட் ஆகிடுச்சு.
எல்லோரும் ஆப்பிசில் வேலையில் மும்முரமாக ஈடுபடும் டைம்மில பதிவை ரிலீஸ் செஞ்சிட்டேன்.////கவலை வேண்டாம் வெட்டிப்பசங்க நாம இருக்கமே????ஹ!ஹ!ஹா!!!!!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நான் இது மாதிரி நல்ல விமரிசனம் பார்த்தே திருப்தியடைந்து கொள்கிறேன்!
(தம.3!!)

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>
*காதல் காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடிகர் Jeffrey dean Morgan அவர்களும், நடிகை Zoe saladana அவர்களும் இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார்கள்

hi hi ஹி ஹி ஏதாவது ஆதாரம் இருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

சசிகுமார் said...

பதிவு போட்டு ஒரு மணி நேரம் ஆக போகுது இன்னும் முதல் கமென்ட் வரல.

நிரூபன் ரெகுலரா வைக்கற டைட்டில் இதுல மிஸ்சிங்க், அதனால் டவுட் போல அவ்வ்

Thava said...
Best Blogger Tips

எல்லா வகையான படத்துக்கும் சுவாரஸ்யமா எழுத உங்களால மட்டும்தான் முடியும்...உங்களோட விமர்சனங்களின் வழி நிறைய படங்களை தெரிந்துக்கொள்கிறேன்.நன்றி..இப்படியே நிறைய அறிமுகபடுத்துங்கள்.

Unknown said...
Best Blogger Tips

பார்க்க முயற்சிக்கிறேன் பாஸ்!
நன்றி பகிர்தலுக்கு!

Unknown said...
Best Blogger Tips

//படத்தின் சிறப்பு இசையமைப்பாளர்கள் வரிசையில் A.R.Rahman //

இதுக்காகவே பார்ப்பமில்ல! :-)

K.s.s.Rajh said...
Best Blogger Tips

படிக்கும் போதே சுவாரஸ்யமாக இருக்கு பாஸ் படம் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் பார்த்திட்டால் போச்சி

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அருமை
த.ம-7

அம்பலத்தார் said...
Best Blogger Tips

படம் பார்த்தமோ இல்லையோ படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறமாதிரி எழுதியிருக்கிறியள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் நிரூபன்!அருமையாக விமர்சிக்கிறீர்கள்!படம் பார்க்கும் மனோநிலை இல்லை.பின்னர் பார்ப்போம்!////நிரூபன் said.......இன்னைக்கு பதிவு போட்ட டைம்மிங் மிஸ்ட் ஆகிடுச்சு.
எல்லோரும் ஆப்பிசில் வேலையில் மும்முரமாக ஈடுபடும் டைம்மில பதிவை ரிலீஸ் செஞ்சிட்டேன்.////கவலை வேண்டாம் வெட்டிப்பசங்க நாம இருக்கமே????ஹ!ஹ!ஹா!!!!!
//

வணக்கம் ஐயா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்படீன்னா ப்ளாக்கினை உங்க கிட்ட குத்தகைக்கு கொடுத்திடவா ஐயா?

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

நான் இது மாதிரி நல்ல விமரிசனம் பார்த்தே திருப்தியடைந்து கொள்கிறேன்!
//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

*காதல் காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடிகர் Jeffrey dean Morgan அவர்களும், நடிகை Zoe saladana அவர்களும் இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார்கள்

hi hi ஹி ஹி ஏதாவது ஆதாரம் இருக்கா?
//

அது நீங்க படத்தினைப் பார்க்கும் போது தான் புரியும்.
அவ்வ்வ்வ்வ்

இல்லேன்னா நல்ல சூடான ஸ்டில் போட்டுக்கனும்.
அப்படிப் போட்டா ப்ளாக்கிற்கு வர்றவங்க பயப்படுறாங்க பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

சசிகுமார் said...

பதிவு போட்டு ஒரு மணி நேரம் ஆக போகுது இன்னும் முதல் கமென்ட் வரல.

நிரூபன் ரெகுலரா வைக்கற டைட்டில் இதுல மிஸ்சிங்க், அதனால் டவுட் போல அவ்வ்
//

எம்புட்டு நாளைக்குத் தான் ஒரே மாவை அரைச்சுக் கொண்டிருக்கிறது பாஸ்.

அவ்வ்வ்வ்வ்வ்

சும்மா சின்னதா ஒரு சேஞ்ச் கொடுத்திருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

எல்லா வகையான படத்துக்கும் சுவாரஸ்யமா எழுத உங்களால மட்டும்தான் முடியும்...உங்களோட விமர்சனங்களின் வழி நிறைய படங்களை தெரிந்துக்கொள்கிறேன்.நன்றி..இப்படியே நிறைய அறிமுகபடுத்துங்கள்.
//

தலைவா, எனக்கு வெட்கம் வெட்கமா வருது.
அவ்

எல்லோரும் முயற்சி செய்தாலே இலகுவாக எழுதலாம் பாஸ்.

உங்கள் அன்பிற்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...
/படத்தின் சிறப்பு இசையமைப்பாளர்கள் வரிசையில் A.R.Rahman //

இதுக்காகவே பார்ப்பமில்ல! :-)//

அப்போ பார்த்திட்டாப் போச்சு.
நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

படிக்கும் போதே சுவாரஸ்யமாக இருக்கு பாஸ் படம் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் பார்த்திட்டால் போச்சி
//

நன்றி நண்பா.
நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

படிக்கும் போதே சுவாரஸ்யமாக இருக்கு பாஸ் படம் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் பார்த்திட்டால் போச்சி
//

நன்றி நண்பா.
நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
அருமை
த.ம-7//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

படம் பார்த்தமோ இல்லையோ படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறமாதிரி எழுதியிருக்கிறியள்.
//

நன்றி ஐயா,

டைம் கிடைக்கையில் சும்மா....
பாருங்க.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

இந்த லூசர் என்ற சொல்லாலதான் எங்கட வீட்டில பிரச்சனையே...:)

ஒராளை ஒராள் பார்த்து லூசர் என முணுமுணுத்தாலே போது, மற்றவர் கீழ விழுந்து அழுவார்... அதைச் சரி செய்ய நாம் படும் பாடு அப்பப்பா... அதைவிட லூசர் எவ்ளோ பெட்டர்:))).

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...அப்படீன்னா ப்ளாக்கினை உங்க கிட்ட குத்தகைக்கு கொடுத்திடவா ஐயா? ///நம்மகிட்ட தான் ஒண்ணு இருக்கே,பேருக்கு?????கொஞ்சம் டெவலப் பண்ண வேண்டியிருக்கு,பொறுமையா பாக்கலாம்!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

மிகவும் அட்டகாசமான ஆக்சன் அதிரடி. இந்தப் படமும் கிட்டத்தட்ட The A-Team படம் வெளிவந்த நேரத்தில் ரிலீஸ் ஆனதாக ஞாபகம். அதே போல இரண்டுமே ஒரே கான்செப்டை வித்தியாசமாக கையாண்டு இருக்கின்றன. முடிந்தால் அதையும் பார்த்து விமர்சியுங்கள்.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

அட்டகாசமான அக்சன் படத்திற்கு அட்டகாசமான விமர்சனம் .

நிரோஜ் said...
Best Blogger Tips

அண்டைக்கே டோவ்ன்லோடு பண்ண போட்டுட்டேன் ...பட் எங்கட ஸ்பீட் கு இன்னைக்கு தான் முடிஞ்சது ...

படம் பார்த்தேன் , ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்லா ACTION கலந்த மனதுக்கு நிறைவான திரை படம் ....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails