Monday, January 9, 2012

ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்!

நாற்று வலைப் பதிவினைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,
இணையத்தில் எழுதி வரும் பல்லாயிரக் கணக்கான தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நாம் இலகுவில் அறிய முடியாதவர்களாக இருப்போம். தனிபட்ட மனித விருப்பு வெறுப்புக்களும், பாதுகாப்பு காரணங்களும், தனி நபர் உரிமைகளும் தான் ஒருவரைப் பற்றிய விபரங்களை மறைத்து, அவரது படைப்புக்களினூடாக அந்த எழுத்தாளர் எப்படி இருப்பார் எனும் எண்ணத்திற்கான விடையினை வழங்கி நிற்கின்றது. இந்த வகையில் வலைப் பதிவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட "ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்" என்பது எப்படியிருக்கும் என நாம் அனைவரும் அறிவதற்கு ஆவல் கொண்டிருப்போம் அல்லவா? எமக்கு பிலாசபி பிரபாகரன் என்கின்ற தனி மனிதர் பற்றிய விபரங்கள் இப்போது வேண்டாம். 
பல பதிவர்களுக்கு தன் எழுத்துக்கள் மூலம் நன்கு அறிமுகமான பிலாசபி பிரபாகரனின் மறு பக்கத்தினை அறிய விரும்பின்;அவரினூடாக வெளிப்படும் அவரது எழுத்துக்களை நாம் அலசிப் பார்க்கலாம் அல்லவா? பிரபல பதிவர்கள் என்றாலே, ப்ராப்ளங்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பது வலையுலக நியதி. இதற்கு அமைவாக பல அனானிகளின் தொல்லைகளையும், வேறு சில முகமூடிகளின் தொலைபேசி மிரட்டல்களையும் பிரபாகரன் எதிர் கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விடயம். ஆகவே தான் ப்ராப்ளங்களை அடிக்கடி எதிர் கொள்ளும் பதிவர் என்பதால் ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரன் என்றோர் அடை மொழியினை இப் பதிவிற்குச் சேர்க்க வேண்டியதாகி விட்டது.நாற்று வலைப் பதிவினூடாக "அம்பலத்தார் பக்கங்கள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு.அம்பலத்தார் அவர்கள் வலையுலகப் படைப்பாளிகளின் எழுத்துக்களை விமர்சனமாகத் தொகுத்து தருகின்றார். இப் பதிவினை அம்பலத்தார் பார்வையில் வெளிவரும் பிலாசபி பிரபாகரனின் படைப்புக்கள் பற்றிய குறிப்புக்கள் அலங்கரிக்கின்றது. 

பிரபாகரனின் தத்துபித்துவங்கள்! ஆச்சரியமான பெயரில் ஒரு வலைப்பூ. பிரபாகரனின் தத்துபித்துவங்கள் எனும் பெயருக்கும் "Wine Shop" பானருக்கும் ஏற்ப இங்கே வெளியாகிருக்கும் அதிகளவான பதிவுகளும் மசாலா, சினிமா போன்றவற்றிகு அதிக இடம் கொடுக்கும் ஜனரஞ்சக பதிவுகளாக இருக்கின்றன.எது எதெற்கெல்லாமோ துரோகிப் பட்டம் கொடுக்கும்; எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நம்ம ஈழத் தமிழ் உறவுகள் யாரும் பதிவர் பிரபாகரனின் வலைப் பூவினை நோக்கி,"பிரபாகரனின் தத்துபித்துவங்கள்" என்று பெயரிட்டு Wine Shop பனரிட்டு இந்தமாதிரி பதிவுகளை போட்டு நம்ம தலைவரையும் கொள்கைகளையும் நாறடிக்கிறானே என்று இது வரை போர்க்கொடி தூக்காததும், துரோகிப் பட்டம் கொடுக்காததும் ஆச்சரியம்தான். 

வலைப் பூவின் Wine Shop பானர் அவரது வலைப்பூ பெயருடனும் அவரது கலந்து கட்டிய எழுத்தில் அமைந்த பதிவுகளுடனும் ஒன்றிப் போகும் அளவிற்கு முகப்பு படமாக கொடுத்திருக்கும் அல்லது முட்டிக்கு முட்டி மோதிக் கொள்வது போன்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கும் ஆளவந்தான்  பானர் வலைப்பூவிற்கு நல்ல பொருத்தமானதாக தோன்றவில்லை. இனி அவரது படைப்புக்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா? 

நித்யா: நான் படித்தவரையில் நண்பர் பிரபா ஒரு கதை முயற்சி செய்திருக்கிறார். நித்யா பிரபாகரனது முதலாவது சிறுகதை முயற்சி. அது ஒரு சிறுகதை என்பதைவிட I.T. இளைஞன் ஒருவனது ஆரம்பகால அலுவலக அனுபவப் பகிர்வு என்றே சொல்லலாம். I.T. வேலையிடம் ஒன்றின் அன்றாட நிகழ்வுகளை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்திருப்பது பாராட்டிற்குரியது. ஆரம்பத்தில் சுவாரசியமாக தொடங்கும் கதை போகப்போக தமிழ் பாடப் புத்தகத்தில் வரும் ஈர்ப்புத்தராத எதோ ஒரு பாடம்போல சுவாரசியம் குறைந்து செல்வது போல் தெரிகிறது. ஒரு நல்ல படைப்பானது வாசகனை அதை படிக்கும் ஒருசில நிமிடங்களாவது அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பவிடாது கட்டிப் போடவேண்டும். எனக்கு ஏனோ இக்கதையுடன் பூரணமாக ஒன்றிப்போக முடியவில்லை. கதைக்கு முக்கியம் வார்த்தைப் பிரயோகம்.எவ்வளவு நல்ல கதையையும் சொதப்பலான எழுத்து நடை மோசமானதாக்கிவிடும்.
பிரபா சாதாரண விடயங்களை பதிவிடும்போது கைவசப்படும் அளவிற்கு இங்கு வார்த்தைகளும் வாக்கியங்களும் கதையில் அவருக்கு கைகொடுக்காதது துரதிஸ்டமே. அவர் இக் கதை மூலம் எதைக் கூறவருகிறார் என்பது புரியாமலே கதை நிறைவடைகிறது. நித்யா போன்ற பெண்கள் அடுத்தவரது பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை சொல்லவருகிறாரா?அல்லது மேலதிகாரிகள் கைதேர்ந்த மேய்ப்பர்களாக மனோதத்துவம் தெரிந்தவர்களாக "ஆடுகிற மாட்டை ஆடி பாடுகிற மாட்டை பாடி பால் கறப்பது போல" வேலை வாங்குவதில் வல்லவர்கள் என்று கூறுகிறாரா? புரியவில்லை. கதை எழுதுவதில் அவர் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கடந்து வர வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்றே கூறலாம். 

நான் படித்தவற்றில் பிரபாவினது ஜனரஞ்சக பதிவுகளில் "ஞாநியின் கொலவெறியும் செல்வராகவனின் அறிவுதிருட்டும்...!" சுவாரசியமானதாக இருந்ததுபோதிலும் அடிக்கடி ஞானியின் கருத்துக்களுடன் தன் பதிவுகளின் கருத்துக்களும் ஒத்துப்போவதாக குறிப்பிடுவதன் மூலம் தானும் ஞானி போல திறம்படச் சிந்தித்து எழுதுகிறேன் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்வது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இவ்வாறான விடயங்களில் பிரபாகரன் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பான படைப்புக்களைப் பகிர முடியும்.

"கேரக்டர் – ப்ளேபாய் பரந்தாமன்" எனும் பதிவில் பரந்தாமன் எனும் கரக்டரை ரொம்ப இயல்பாக அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது போல இருந்தது. இந்தப்பதிவு அவரது நித்யா கதையைவிட நன்றாக இருக்கிறது. பெரும்பாலான பதிவுகளிலும் அதிக விடயங்களை சொல்ல முனைந்திருக்கிறார்.இது சாதாரண வாசகர்களிற்கு அனைத்து விடயங்களையும் கிரகித்துக் கொள்வதில் சிரமங்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம். "சினிமா விமர்சனப் பதிவுகள்" அவரது வலைப்பூவின் சிறப்பு அம்சமாக இருக்கிறது. அவரது பதிவுகளையும், வலைப் பூவிற்கு வரும் பின்னூட்டங்களையும்,வாசகர் வட்டத்தையும், பார்க்கும்போது ஒருவிடயம் நன்கு புரிகிறது. "புத்தகங்களை படிப்பதை விட மனிதர்களை படிப்பதில் அதிக விருப்பம்" என பிரபா தனது சுயவிபரத்தில் குறிப்பிட்டு உள்ளதுபோல அவர் வாசகர்களின் நாடி பிடித்து மனநிலை அறிந்து அவர்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்லவர் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை. 
பிரபாகரனின் இணைய எழுத்துலகப் பணி மேலும் தொடரட்டும் என்று உங்கள் அனைவருடனும் இணைந்து வாழ்த்தி,
மீண்டும் மற்றுமோர் விமர்சனப் பதிவினூடாக உங்கள் நாற்று வலைப் பதிவின் வாயிலாகச் சந்திக்கும் வரை, விடை பெற்றுக் கொள்வது;
நேசமுடன்,
அம்பலத்தார்.
நன்றி,
வணக்கம்!

15 Comments:

ஆமினா said...
Best Blogger Tips

அருமையான தரமான விமர்சனம்...
நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் சொல்லியிருக்கீறீர்கள். விமர்சனம் ஒரு படைப்பாளியை உரசி பார்க்கும் உரைக்கல்(கவிஞர் ஷேக்....... வாழ்த்துக்கள்

பணிதொடரட்டும்....

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

நல்ல அறிமுகம்
முன்னனி பதிவர் பிலாஸபி பிரபாகரன் படைப்புகள் குறித்து கொஞ்சம்
கூடுதலாக அறிந்து கொள்ள முடிந்தது
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்களுடன்
த.ம 3

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

அம்பலத்தார் அவர்களே,

எனக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது... உங்கள் வலைப்பூவையும் அடிக்கடி வாசித்ததில்லை... அப்படி இருக்கும்போது நீங்கள் என்னைப் பற்றி இந்த அளவிற்கு தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...

சும்மாக்காட்டி அவரு நல்லவரு வல்லவரு என்று ஜல்லியடிக்காமல் என் எழுத்தில் உள்ள குறைகளை கண்டுபிடித்து Constructive Criticisation செய்ததற்கு மிக்க நன்றி...

sharmi said...
Best Blogger Tips

நல்ல அறிமுகம்... நானும் பிரபாகரனின் எழுத்துக்களின் அபிமானி.

Unknown said...
Best Blogger Tips

சரியான அலசல்...பாராட்டும் ஒரு சில குட்டும் வைத்து பிராபாவை மேலும் செதுக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது பிரபாகிட்ட எனக்கு பிடிச்ச விசயம் நான் கெட்டவன்...கெட்டவன்...என்பார்
நல்லவன் என்று கூறுபவனைவிட கெட்டவன் என்று கூறுபவனிடம் ஒளிவு மறைவு இருக்காது...அதுவே அவரின் எழுத்தில் பிரதிபலிக்கிறது......அதனாலேயே பிரச்சனையும் தேடி வருகிறது....அதெல்லாம் பிரபாவுக்கு கோட்டர் மேல இருக்கிற ஸ்டிக்கர் மாதிரி....

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஒரு நல்ல படைப்பாளியை இன்னும் பட்டை (அந்தப் பட்டை இல்ல. வொயின்ஷாப்னாலே அதத் தான் நினைக்குறாங்க.) தீட்டியதற்கு மிகவும் நன்றி அம்பலத்தார் மற்றும் நிரூபன். தீட்டப்பட்ட வைரம் தானே ஜொலிக்கும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வலைப்பூ விமர்சனம்... நல்ல முயற்சி..
நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் ஆராய்ந்து கூறி பதிவரை கூர்மைப்படுத்தும் விதமாக விமர்சனம் அமைந்துள்ளது.

rajamelaiyur said...
Best Blogger Tips

வித்தியாசமான முயற்சி ...பிரபாகரன் எழுத்துகளில் எப்பொழுதும் ஒரு நகைசுவை உணர்சி இருக்கும் ...

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் ஊடாக அம்பலத்தாருக்கு!"பிலாசபி பிரபாகரன்".அறிந்திருக்கிறேன்.ஆனால்,அவர் தளம் சென்றதில்லை.புரிந்தது!!!!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) திங்கட்கிழமை காலையில, படம் வெள்ளோட்டம் வரும் என சொல்லிப்போட்டு... இங்கின என்னவோ போட்டிருக்கிகே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நிரூபன் வெளில வாங்க... இண்டைக்கு விடமாட்டேன்... வாக்குக் கொடுக்கப்படா, கொடுத்திட்டால் அதைக் காப்பாற்றோணும்:))

நான் இந்தத் திங்களைச் சொல்லவில்லை என்றால்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

K said...
Best Blogger Tips

பிரபா பற்றிய அம்பலத்தாரின் பார்வை சிறப்பாக உள்ளது! அண்மையில் ஈரோடு பதிவர்கள் சந்திப்பின் ஃபோட்டோக்களில் பிரபாவைப் பார்க்க முடிந்தது! “ கடுகு சிறுத்தாலும்.......” பழமொழி நினைவுக்கு வந்தது!

பிரபாவுக்கு` அம்பலத்தாருக்கும், த.ம.நட்சத்திரம் நிரூவுக்கும் வாழ்த்துக்கள்!

அனுஷ்யா said...
Best Blogger Tips

என்னுடைய ஆறு மாத கால பதிவுலக வாழ்க்கையில் முக்கியமானவர் பிரபா..
காரணமென்னவெனில் அவர்தான் என் வலைப்பூவில் இணைந்த முதல் பதிவர்..அதற்கு முன் இணைந்திருந்த பதினொரு பேரும் பதிவுலக வாசகர்கள் மட்டுமே..படு சீரியசாக காதல் கவிதை எழுதுவதாய் நினைத்து நான் எதாவது எழுதி வைக்க,நண்பர் ஒரு சின்ன கமென்ட்டில் மொத்தத்தையும் காலி செய்வார்...
(எ.கா.) அழகியல் உளறல்கள்.....

ஒரு வாசகனாய் அவருடைய தளத்திற்கு நான் ஒரு தொடர் இரசிகன்..அவரது ஒயின் ஷாப் இடுகையின் பாதிப்பில்தான் 'மயில் அகவும் நேரம்' என்ற தொகுப்பு கட்டுரையைத் தொடங்கினேன்..இதை நான் அந்த தொகுப்பின் முதல் பகுதியிலேயே குறிப்பிட்டு இருந்தேன்..

அவரது படைப்புகளில் எனக்கு:
மிகவும் ஈர்த்தது: அவரது ஆசிரியை ஒருவரை தாயாக பாவித்து ஒரு பதிவு..(கல்லுக்குள் ஈரம்..)- பதிவின் தலைப்பு மறந்துவிட்டது...
பிடிக்காதது: கோ திரைப்பட விமர்சனமும் அதற்கு வந்த பின்னூட்டங்களுக்கு அவரளித்த பதில்களும்...

காட்டான் said...
Best Blogger Tips

பிரபாவின் பதிவுகள் சிலவற்றை வசித்திருக்கிறேன் அவர் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை.. நல்லதோர் விமர்சனம் மூலம் என்னை பிரபவின் எழுத்துக்களை படிக்க தூண்டி இருக்கிறீங்க அம்பலத்தார்..

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

@ veedu
// சரியான அலசல்...பாராட்டும் ஒரு சில குட்டும் வைத்து பிராபாவை மேலும் செதுக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது பிரபாகிட்ட எனக்கு பிடிச்ச விசயம் நான் கெட்டவன்...கெட்டவன்...என்பார்
நல்லவன் என்று கூறுபவனைவிட கெட்டவன் என்று கூறுபவனிடம் ஒளிவு மறைவு இருக்காது...அதுவே அவரின் எழுத்தில் பிரதிபலிக்கிறது......அதனாலேயே பிரச்சனையும் தேடி வருகிறது....அதெல்லாம் பிரபாவுக்கு கோட்டர் மேல இருக்கிற ஸ்டிக்கர் மாதிரி.... //

சுருக்கமா அடுத்த ஜாக்கி நான்தான்னு சொல்றீங்க அதானே...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

@ மயிலன்
மயிலன்... இங்க ஒரே நெகிழ்ச்சி...

அம்மா பற்றிய இடுகையை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை...

கோ போன்ற இடுகை மீண்டும் வராது என்று நம்புவோம்...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails