Saturday, March 17, 2012

தீக்குளிக்க தயாராகும் கலைஞர்! தீயை வைக்க தாமதிப்பாரா ஜெயா?

கலைஞர் கலாட்டா - கருத்து கடிவாளம் - கப்ஸிங் ஜிங்கிங் - சொங்கிங் ஜிங்கிடி!

*அண்ணா நூலகம் இடிக்கப்பட்டால் நான் தீக்குளிப்பேன் கலைஞர் ஆவேசம்:
அட போங்க பெரியவரே! இன்னுமா இந்த உலகம் உங்களை நம்பிட்டிருக்கு? சங்கரன் கோவில் தேர்தல் முடிஞ்சா நான் டீ குடிப்பதாக சொன்னதை தீக்குளிப்பதாக யாரோ எழுதிட்டாங்க என்று நீங்க பல்டி அடிச்சாலும் அடிப்பீங்க என்று நமக்கு முன்னாடியே தெரியாதா சார்?
*தென்றலை தீண்டியதில்லை - தீயை தாண்டியிருக்கிறேன் - கலைஞர் எழுதிய திரைப்பட வசனம்:
ஐயோ..ஐயோ..ஐயா கலைஞரே! தென்றலை யாரும் தீண்ட முடியாதுன்னு கவியரசரே முகத்தில் அறையா குறையா வெளக்கம் கொடுத்த பின்னரும், நீங்க உல்டா பண்ணலாமா? என்னது ஆல்ரெடி தீயை தாண்டியிருக்கிறீங்களா? அப்புறம் எதுக்குங்க தீக்குளிப்பு? ஒரு வேளை ஆல்ரெடி தீயை தாண்டியிருப்பதால் இனிமே தீக்குளித்தாலும் இத்துப் போன உடலுக்கு வலிக்காதுன்னு நெனைச்சிருப்பீங்களோ? லைட்டா ஒரு டவுட்டு!

*சனல் 4 காணொளியை பார்த்து கண்ணீர் வடிக்கிறேன் - ஈழ மக்களை வைத்து கபட நாடகம் ஆடி கடிதம் எழுதிட வார்த்தைகளை தேடுகிறேன்:
அப்படிப் போடுங்க அ(ஐ)ய்யா...செம காமெடி பண்றீங்க. போர் நடக்கும் போது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு புறம் கவனத்தை செலுத்திட்டு, மறுபுறம் மகள் கனிமொழியுடன் ஜெகத் கஸ்பார் அடிகளாரையும் கூட்டுச் சேர்த்து நம்ப வைத்து வன்னி மக்கள் கழுத்தறுத்த நீங்க, இப்போ வார்த்தைகளை தேடுறீங்களா? போங்கைய்யா...இனியுமா உங்க அரசியல் பஞ்சு டயலாக் வேலைக்காகும்!

ஓர் நாட்டின் எதிர்காலம் நாளைய இளைஞர்கள் கையில் - கிழிஞ்சுது போங்க. இப்படிச் சொன்னவன் யாருங்க? நம்ம நாடுகளில கட்டையில போற வயசில இருக்கிறவங்க ஆட்சி கட்டிலில் இருப்பதை பார்த்த பின்னரும் இப்படிப் பேசுவது சரியா? 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்காவிட்டால், மத்திய அரசின் ஆதரவை திமுக வாபஸ் வாங்கும்: அடங் கொய்யாலே! என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது என்ற நிலமையில் அல்லவா கலைஞர் ஐயா பேசிக்கிட்டிருக்கிறீங்க. ஒங்க செல்ல மகள் திஹார் வாடி வதங்கும் போது கூட இப்படிப் பேசாத நீங்க சங்கரன் கோவில் எலக்சன் டைம்மில பேசுறீங்க என்பது நமக்கெல்லாம் தெரியாதா என்ன? 

9 Comments:

விழித்துக்கொள் said...
Best Blogger Tips

indha aandin sirandha nagaichchuvai
nigazhchchiyaagave irukkum
nandri

தனிமரம் said...
Best Blogger Tips

கலைஞர் ஒரு குள்ளநரி என்பதை மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகின்றார் தீக்குளிப்பேன் என்று அவர் குளிர்த்தாலே கொஞ்சம் அடுத்த சமுகம் சரி உருப்படியாக இருக்கும் இவர் அரசியலில் வந்த பின்னர் தானே அதிகமாக்கியது தீக்குளிக்கும் வன்முறைக் கலாச்சாரம்!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அப்பன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு,ஒருத்தர் இல்ல மூணு பேர் இல்ல,இல்ல நாலுபேர் காத்துக்கிட்டிருக்காங்க!அந்த நாலுபேர்............(நீங்க எப்புடி வேணா எடுத்துக்கலாம்)............................!

Yoga.S. said...
Best Blogger Tips

அவர் தீக்குளிக்க எங்கு போவார்?????மெரீனா பீச்?/அண்ணா சமாதிப்பக்கம்????

விச்சு said...
Best Blogger Tips

ஏமாற்று வேலை.

ஹேமா said...
Best Blogger Tips

ச்ச...இந்தாளும் ஒரு மனுசனா எண்டு சொல்லிப்போட்டு பேசாம இருக்காம அந்தாளுக்கு ஒரு பதிவு.நேரத்தை வேற எதுக்கும் செலவழியுங்கோ நிரூ !

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
இப்ப இந்தாளப்பற்றி எழுதினாவே படிக்க மனம் வருதில்ல. ;-((

இருதயம் said...
Best Blogger Tips

கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகள் சரியா ....?

http://naanoruindian.blogspot.in/2012/03/blog-post_17.html

சிரிப்புசிங்காரம் said...
Best Blogger Tips

அதெப்பிடிங்க...ஒருத்தருக்கு வாரீசு இல்லேன்னாதான் அடுத்தவங்க கொள்ளி (அதாங்க தீ வைக்கிறது ) வைக்கமுடியும்.. நம்ம கலைஞர் தாத்தாவுக்குதான் ஏராளமா வாரீசு இருக்கே... ராசாத்தி ஒண்ணு பத்தாதா கொள்ளி வைக்கிறதுக்கு..??விட்டா பெரிய வீட்டு குடும்பத்துக்கே அது கொள்ளி வச்சுடுமே... அபுறம்தெரிஞ்சு கொஞ்சம்,தெரியாம கொஞ்சம்,எங்கெங்கெல்லாம் பொதுக்கூட்டம் கல்யாணம்,கருமாதின்னு போனாரோ அங்கெல்லாம் ஒண்ணூ..ஒண்ணு இப்பிடி எராளம் இருக்கும்போது ஜெயலலிதா கொள்ளி வைக்க எப்படீங்க அனுமதிப்பாங்க......

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails