Thursday, March 29, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி -30/03/2012

ஆபாசானந்தா மேல சத்தியமா, இப் பதிவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற பதிவாகும். அச்சப்படாம, வெட்கப்படாம, இப் பதிவினைப் படிக்க, ஆர்வமுள்ள அனைவரும் வரலாம் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன். அனைவருக்கும் வணக்கமுங்கோ!
இந்தியாவைப் புறக்கணிப்போம் - இலங்கை அரசியல் வியாதிகள் ஆவேசம்!

ஈழப் போரின் இறுதிக் காலங்களில் இலங்கையைப் புறக்கணிப்போம் எனும் கோஷங்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்டன. இந்த கோஷங்களைப் பார்த்தும், கேட்டும் சலிப்படைந்த இலங்கையின் இராணுவத் தளபதி மற்றும் அமைச்சர்கள் என்னா சொன்னாங்க என்று எல்லோருக்கும் நெனைவிருக்கு தானேங்க.

கோஷமிடுவோர் அனைவரும் கோமாளிகள் எனும் தொனியில் சில அதிமேதாவிகள் அறிக்கை விட்டிருந்தார்கள்.ஆனால் இன்றளவில் ஐநா தீர்மானத்தின் பின்னர் இலங்கையில் வாழும் தேசப்பற்றுள்ள அமைப்புக்கள் எல்லாம் ஒன்று திரண்டு இந்தியாவைப் புறக்கணிப்போம் எனவும், கோலாவையும், கோதுமை மாவையும் புறக்கணிப்போம் எனவும் கோஷம் போட ஆரம்பித்துள்ளன.
இந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்கும் நாம இப்போ என்ன நினைப்போம் என சிங்கள அரசியல்வியாதிகள் சிந்திக்கவே மாட்டாங்களா? இதைத் தான் தமிழ்ல சொல்லுவாங்களோ! "ஆனைக்கு ஒரு காலம் வந்தா...பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று!"

கலைஞரின் கற்பனா சக்திக்கு எல்லையே இல்லையா?

நேற்றைய தினம் (வியாழக் கிழமை) சென்னை முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி திரு ராமஜெயம் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் வைத்து இனந் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். வழமை போலவே தன் மஞ்சள் துண்டை தோளில் போட்டவாறு ஊடகங்கள் முன்னாடி தோன்றிய கலைஞர் ஐயா...என்னா சொல்லியிருக்காரு தெரியுமா? ராம ஜெயம் கொலையின் எதிரொலி - சீற்றத்தில் தொண்டர்களாம்! தொண்டர்களைச் சமாதானப்படுத்த தனக்கு வழி தெரியலையாம்!
அட தொண்டர்கள் பேசாம சோகத்தில மூழ்கி இருந்தாலும், ஜனங்களே! நீங்கள் பழிக்குப் பழி வாங்க களத்தில எறங்கியே தீரனும் என்று கலைஞர் ஐயா சொல்லிடுவார் போல இருக்கே! என்னா பேச்சு பேசுறாரு! தனக்கு ரொம்ப வயசாயிடுச்சு என்பதை ஐயா அடிக்கடி நினைவுபடுத்துறாரே!

பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன் சிங் உறுதி!
உள்ளூரில உண்ண உணவு இல்லைன்னாலும் பரவாயில்லே, மின்சாரம் வேணும் அப்படீன்னு மக்கள் போராட்டங்களில் ஈடுபடா குறையாக தமிழக அரசின் மின் வெட்டினை எதிர்த்து திட்டிக்கிட்டு இருக்காங்க. ஆனால் உள்ளூரில் இருந்து வெளியூருக்கு அன்பளிப்பா ஐயாயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்திருக்காரு. என்ன கொடுமை சரவணா!
சிங்...அப்படியே அந்த கரண்டை தூக்கி நம்ம மக்களுக்கு கொடுங்க சிங்! மக்கள் பிரச்சினையைப் பார்த்துப்பேன் அப்படீன்னு சொல்லித் தானே ஆட்சியில் ஏறினீங்க. அப்புறம் எதுக்குங்க, உள்ளூர் பிரச்சினையை விட்டுப் புட்டு வெளியூருக்கு உதவி பண்ணலாமேன்னு கிளம்புறீங்க?

சோக்கு! செம ஜோக்கு!

மதில் மேல உட்கார்ந்து ரெண்டு அறிவாளிங்க பேசிக்கிட்டிருந்தாங்க. ஒருத்தன் கேட்டான். டேய் மச்சான், ப்ளவருக்கும், லவ்வருக்கும் என்னா வித்தியாம் சொல்லு பார்க்கலாம் என்று?
மத்தவன் சொன்னான். மச்சி! ப்ளவ்வர் கொஞ்ச நேரத்தால வாடிப் போயிடும். லவ்வர் கொஞ்ச காலத்தால அடுத்தவன் கூட ஓடிப் போயிடும்!!

தான் எப்பவுமே இயக்குனரின் நடிகையாம் - நடிகை அஞ்சலி பேட்டி!

அம்மணி! நெசமாத் தான் சொல்றீங்களோ? இதில இடக்கு முடக்கு அர்த்தங்கள் ஏதும் இல்லை தானேங்க? சும்மா ஒரு டவுட்டுங்க! கோவிச்சுக்க வேணாம்.

பதிவர் முரண்!

கோலாவை புறக்கணியுங்கள் - கோத்தபாயா
மாலாவையும் புறக்கணியுங்கள் - மகிந்தா
ஷகீலாவையும் புறக்கணியுங்கள் - வீரவன்ச
ஷீராந்தியையும் புறக்கணித்து கூலான
சோனியாவை இறக்கை கொண்டு அணையுங்கள்!! 
அப்புறமா வெளங்கிரும் - ஆனந்தம் கிடைத்திடும்!!

பதிவர் ஜோதிடம் - ஸ்ருத்தி ஹாசன் போட்டோவிற்கு சூடம் காட்டும் மதுரப் பதிவர்!

பதிவுலகில் தமிழ்ல ஒரு ப்ளாக்கை தொறந்து வைச்சிட்டு, ஏலம் விடப் போவதாகக் கூறிப் பரபரப்பினை ஏற்படுத்துவதோடு, தொழில் நுட்பத் தகவல்கள் மூலமாயும் பரபரப்பினை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் தான் நம்ம மதுரப் பதிவர். மதுரப் பதிவருக்கு அண்மைக் காலமாக காதலி ஒருத்தி கிடைத்திருப்பதாக மதிசுதா தீயை பத்த வைச்சிருக்காரு.விஷயம் வில்லங்கமா போய்க்கிட்டிருக்கே என உணர்ந்த மதுரப் பதிவரோ; "காளியம்மா என்னை காப்பாத்து!" என அழுதவாறு யாழ்ப்பாணத்தில் உள்ள அம்மன் கோயில் பூரா ஏறி இறங்க ஆரம்பிச்சாரு. மதுரனுக்கும், மைந்தனுக்கும் சண்டைன்னு ஐடியா மணி ஒரு பிட்டு நியூஸை ஓஸியில போட்டதும் கடுபான மைந்தன் என்னா சொன்னார் தெரியுமா?
"நான் எல்லாம் தொப்பை பிகருக்காகத் தான் சண்டை போடுவேன்! சப்பை பிகருக்கு சண்டை போட மாட்டேன்" அப்படீன்னு பேசிப்புட்டாரு! அப்போ மதுரனோட லவ்வர் யாருங்க? அட, தெரிஞ்சா சொல்லாமலா போயிடப் போறேன்!

பதிவர் குறும்பும், பகிடிக் குசும்பும்!

ஊசி இணைப்பு: 

யாரையாச்சும் கலாய்க்கலாம் அப்படீன்னு ப்ளான் பண்ணி நம்ம பசங்க செமையா ஒரு வேலை பண்ணுவாங்கோ.  அது என்னான்ன செல்போனில பத்து நம்பர் டயல் பண்ணி யாரு மாட்டிக்கிறாங்களோ, அவங்களுக்கு அலப்பறை மேல அலப்பறையாப் பேசி கொன்னுபுடுவாங்கோ. ஆனா சென்னை Big Fm 92.7 அறிவிப்பாளர் பாலாஜி இருக்காரே...நேயர்களின் போனுக்கு கோல் பண்ணி, Cross Talk பேசியே கொன்னுபுடுவாரு. ஒரு பொண்ணுக்கு பாலாஜி போனைப் போட்டு கெட்ட வார்த்தையால எப்படியெல்லாம் ஏச்சு வாங்கியிருக்காரு அப்படீன்னு அறிய ஆவலா? இதோ...இங்கே கிளிக் செய்யுங்க. 

இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகிள் தேடல், மற்றும் பேஸ்புக் உதவியுடன் பெறப்பட்டவை.

21 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

மாலை வணக்கம் நிரூபன்!படிச்சிட்டு கருத்துரைப்போம்!

Anonymous said...
Best Blogger Tips

சிங் நியூஸ் பார்த்து...'ஷாக்' (No pun intended) ஆயிட்டேன்...பாச்சிலர் பார்டி களை கட்டட்டும்....ENZOY...

Yoga.S. said...
Best Blogger Tips

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டியில,அந்த தொலைபேசி உரையாடல்...........செம!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

மைந்தன் said:"நான் எல்லாம் தொப்பை பிகருக்காகத் தான் சண்டை போடுவேன்! சப்பை பிகருக்கு சண்டை போட மாட்டேன்" ////யாரப்பா அந்த தொப்பை பிகரு????ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!(மைந்தன் ஏன் தலைமறைவானார் என்று இப்ப தானே புரியுது,)ஹி!ஹி!ஹி!!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

//"நான் எல்லாம் தொப்பை பிகருக்காகத் தான் சண்டை போடுவேன்! சப்பை பிகருக்கு சண்டை போட மாட்டேன்"//

இத அடுத்த சூப்பர் ஸ்டார் படத்துல பஞ்சா கூட வச்சுக்கலாமே?

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

பாலாஜியின் தொலைபேசி ரெக்கார்டிங் செம. அவ்வளவு பேச்சு வாங்கியும் எப்படி அந்தாளு கலாய்ச்சாரு. அதுக்கு ஒரு பாராட்டு.

Unknown said...
Best Blogger Tips

நிரூபன் நான் ஒரு ஓட்டு போட்டுட்டேன்....நீயும் வந்து மொய் வச்சிரு ஒன்னுல்லைப்பா மூனு ஓட்டு போட்டிரு

உங்க காலை நக்கிட்டேன்....நாளைக்கு உன்னை திட்டுவேன்...அப்புறம் கொஞ்சிக்குவேன்...என்கூட சேராதப்பா ஓட்டும் போடாதிங்க உன் மேலதான் உன் நண்பன் ஐடியாமணி ராஜீவனை விட "கத்தார்" மாமாவுக்கு எம்பூட்டு கரிசனம்....

ஆத்மா said...
Best Blogger Tips

எல்லாம் முடிஞ்சு போச்சு பாஸ்....வோட்டிங் மேட்டர சொன்னன்...

செம......காமடி
கோலாவை புறக்கணியுங்கள் - கோத்தபாயா
மாலாவையும் புறக்கணியுங்கள் - மகிந்தா
ஷகீலாவையும் புறக்கணியுங்கள் - வீரவன்ச

இது எதுக்கு....

Mathuran said...
Best Blogger Tips

கலைஞரின் கற்பனா சக்திக்கு எல்லையே இல்லையா?//

சும்மா இருங்கப்பா.. கலைஞர்தான் நமக்கு தமிழீழம் வாங்கி தரப்போறார்.. நீங்க போய்,,!!

Mathuran said...
Best Blogger Tips

பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன் சிங் உறுதி!//

பாகிஸ்தானில ஏதாச்சும் சூப்பர் பிகரு மாட்டிக்கிச்சோ

Mathuran said...
Best Blogger Tips

பதிவர் ஜோதிடம் - ஸ்ருத்தி ஹாசன் போட்டோவிற்கு சூடம் காட்டும் மதுரப் பதிவர்!//

யாரவன் ஹி ஹி ஹி

சூ மீன்.......... ஓ சூடமா

Mathuran said...
Best Blogger Tips

மதுரப் பதிவருக்கு அண்மைக் காலமாக காதலி ஒருத்தி கிடைத்திருப்பதாக மதிசுதா தீயை பத்த வைச்சிருக்காரு.//

அவரு பத்த வச்சதத்தானே நாம அணைச்சிருக்கோம் ஹி ஹி ஹி

Mathuran said...
Best Blogger Tips

ஹா ஹா பாலாஜி சூப்பர்

Yoga.S. said...
Best Blogger Tips

மதுரன் said... Best Blogger Tips [Reply To This Comment]

மதுரப் பதிவருக்கு அண்மைக் காலமாக காதலி ஒருத்தி கிடைத்திருப்பதாக மதிசுதா தீயை பத்த வைச்சிருக்காரு.//

அவரு பத்த வச்சதத்தானே நாம அணைச்சிருக்கோம் ஹி ஹி ஹி////அப்பிடியெண்டா,அது ("அணைச்சிருக்கிறது")உண்மைதான் எண்டு சொல்லுறியள்?மதிசுதா பத்த வச்சார்.உங்களுக்கு எங்க போச்சு"புத்தி"????

Yoga.S. said...
Best Blogger Tips

மதுரன் said...

கலைஞரின் கற்பனா சக்திக்கு எல்லையே இல்லையா?//

சும்மா இருங்கப்பா.. கலைஞர்தான் நமக்கு தமிழீழம் வாங்கி தரப்போறார்.. நீங்க போய்,,!!///எங்க,கோபாலபுரத்திலையோ?????

Yoga.S. said...
Best Blogger Tips

மதுரன் said...

ஹா ஹா பாலாஜி சூப்பர்!/////என்ன ஒரு ரசனை?????

'பசி'பரமசிவம் said...
Best Blogger Tips

செய்திகளைச் சுவை குன்றாமல் தரும் தங்களின் ‘நடை’ யை மட்டுமல்ல, வெளியிட்டுள்ள படங்களையும் என் வயதை மறந்து ரசித்தேன்!
நன்றி.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நாட்டுக்குள்ள ஒரு மாநிலத்துக்குக் கொடுக்க மாட்டாங்க!பாகிஸ்தானுக்குக் கொடுப்பாங்களாம்!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

கலக்கல்

நிரூபன் said...
Best Blogger Tips

இந்தப் பார்ட்டியை கல கலப்பாக நடாத்துவதற்கு பல்வேறு வழிகளிலும் பங்களிப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

Unknown said...
Best Blogger Tips

அண்ணே அந்த சிங்கு அவன் கஜானாவதான் பார்ப்பான்.தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்க மாட்டான்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails