Wednesday, March 7, 2012

இன்பத்தை கூ(ஊ)ட்டும் இலக்கண காதல்!

என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுப்புட்டாளே!
நிரூபன்: சாரி நேமிசா, இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு,  உங்களைப் பார்க்க இனைக்காச்சும் கொஞ்சம் வேளைக்கு வரனும். நீ வர்ற முன்னாடியே, நான் வந்து நின்று, நீ வந்ததும் ஓடோடி வந்து உன்னைக் கட்டிப் பிடித்து ஒரு பிரெஞ்ச் கிஸ் அடிக்கனும் என ஆவல் மேலிட வந்தேன். வர்ற வழியிலை வண்டி சொதப்பிடிச்சு. அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. என்னை மன்னிக்க மாட்டியா செல்லம்?
நேமிசா: இது வழமையான ஒன்று தானே. எப்ப பார்த்தாலும் லேட்டா வருவீங்க நீரு.
நான் ஒருத்தி மட்டும் எப்பவுமே நேரத்திற்கு வந்து உங்களுக்காக காத்திருக்கனும். 
சொல்லுங்க நிரூ. என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? 
இன்னைக்கும் வழமை போல- என்னையைப் பார்க்க வரணும் என்பது தெரியாது ப்ளாக்கில கமெண்ட் போட்டுக் கொண்டு தானே இருந்தீங்க. நீங்களும் உங்க ப்ளாக்கும்.

நிரூபன்: ஏண்டா செல்லம் கோவிச்சுக்கிறாய்? 
அதான் நான் சாரி சொல்லிட்டனே ஹனிக்குட்டி. மன்னிக்க மாட்டாயா டார்லிங். 

நேமிசா: மன்னிக்கிறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். ப்ளாக்- ப்ளாக் என்று எழுதுறீங்களே, உங்களாலை தமிழ் இலக்கணத்தை வைச்சு, ஒரு கவிதை உருவாக்க முடியுமா? முடிஞ்சா இப்பவே, இந்த இடத்தில சொல்லுங்க. நீங்க சொல்லுவது கரெக்டா இருந்தால் தான், உங்களுக்கு இன்னைக்கு இதழ் பிரியாத முத்தம் கிடைக்கும். எங்கே ஆரம்பியுங்க பார்ப்போம் நிரூ. 
நிரூபன்: என்னோட ஹனிக்குட்டியெல்லே (Honey). எனக்கு இலக்கணம் தெரியாதென்பது உனக்குத் தெரியுஞ்ச பின்னாடியுமா நீ இதனைக் கேட்கிறாய். என்னையப் போயி வம்பிலை மாட்டிவுடுற வேலையா எல்லே இது இருக்கு. இருந்தாலும் உன்னோடை ஆர்வத்திற்கு என்னாலை முடிஞ்ச வரை, இலக்கணக் காதல் கவிதை ஒன்றைத் தர முயற்சி செய்கிறேன். நீ தான் சரி என்று சொல்லனும். 

நேமிசா: நான் இதனைக் கேட்டுச் சரி என்று சொல்வது இருக்கட்டும். இதனை நீங்க சொல்லச் சொல்ல நான் நோட் பண்ணித் தாறேன். உங்க ப்ளாக்கில கொண்டு போய் போடுங்க. வாசகர்கள் படித்து விட்டு என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

ன்பத்தை கூட்டும் இலக்கண காதல்!

இலக்கியப் பாவை போல்
தினமும் என் இதயத்துள்
வலம் வருபவள்; பல
இதமான கனவுகளால்
உள்ளத்தை நிதமும்
கலக்கியே திரிபவள்!

கார் வண்ணக் குழலழகி
காந்தள் மலர்(க்) கண்ணழகி
பார் போற்றும் பேரழகி; என்னில்
பாசம் கொண்ட ஓரழகி!

அந்தியிலே நிதம் வந்து
அழகான பல கனவுகளை, என்
சிந்தையிலே உதிக்க வைக்கும்
சின்ன இடைக் கவியழகி!

விந்தை பல புரிபவளாய் என்னுள்
வியாபித்திருக்கும் மேலழகி!
பந்து போல என் மனதை(த்)
துள்ள வைக்கும்
பார்வை கொண்ட கண்ணழகி!
வேதத் திருமகள்; வேள்விப் பெருமகள்
காதற் கனி மகள்; என்
கவிதை கருமகள்,
நேசக் கொடி மகள் ; என் நெஞ்சக் கவி மகள்!
பாசப் பெரு மகள்; எந்தன் இதய(ப்)
பாரின் தனி மகள்!

அவள்.......

கண்கள் இரண்டிலும் பல வண்ணங்கள்
கன்னங்களிலோ மதுக் கிண்ணங்கள்
தொட்டாலே போதை தரும் பெண்ணழகி; எனை(த்)
தோகை போல் சிலிர்க்க வைக்கும் கண்ணழகி!

வல்லினம் போன்ற முத்துப் பற்கள்; உன்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிய சொற்கள்
மெல்லினம் போன்றது உன் பேச்சு; உன்
மேனியில் தான் உள்ளது என் மூச்சு
இடையினம் போல் நெளியும் இடை; என்
இதமான கேள்விக்கு(த்) தருமா அது விடை?
உயிர் மெய் போல் தொடரும் எம் உறவு
உன்னால் இனிமையாய்க் கழிகிறது இரவு!
முற்றாயுதம் உன் முகம்; நான்
முதலிலே தொட்டது உன் நகம்
அளபெடை போலிருக்கும் மூக்கு; அதன் பின்
ஆய்தக் குறுக்கம் போல் உன் நாக்கு!

குற்றியலுகரம் உன் குறு குறுப் பார்வைகள்-அவை
குறும்பான கதை சொல்லும் நினைவுப் போர்வைகள்
இடைச் சொல்லாய் தொடரும் உன் நினைவுகள்; அவை
இதமான சுகம் தரும் கனவுகள்!

மகரக் குறுக்கம் போன்றது உன் மார்பு; அதில் நான்
விழி மூடித் தூங்கினால் இல்லைச் சோர்வு!
பாவையவள் மேனி ஒரு மோனை, உன்
பஞ்சு போன்ற விரல்கள் நான் மீட்டும் வீணை!
எளிமையான குணங்களால் நீ ஓர் எதுகை; எப்போதும்
எனை விட்டுப் பிரியக் கூடாது உன் இருகை!
என் இதயத்துள் நிறைந்தவள்
என் இனிமைக்குள் உறைந்தவள்!
உன் கன்னமதில் இருப்பது ஓர் மச்சம்; அதைக்
கை தொட்டுக் கிள்ளினால் இல்லை எச்சம்!

அன்பே நீ ஓர் இலக்கியப் பயிர்; உனை
அணைக்காமல் பிரியாது எந்தன் உயிர்!
உணர்வுகளைத் தூண்டுவதால் நீ ஓர் உம்மைத் தொகை
உனைப் பிரிந்திருக்கும் தனிமையே என் வாழ்வின் பகை!
நடையழகால் நீ ஒரு தனி வினை; என் வாழ்வில்
எப்போதும் பிரிவேனா இனி உனை?

நீயோ ஒரு இலக்கியப் பதுமை, உன்
நினைவுகளால் என்னுள் தினமும் பல பல புதுமை!
பஞ்சு போல் இருக்கும் உன் கைப் பகுதி; அதைப்
பற்றினால் என்றும் இல்லை என்னுள் விகுதி!

’நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!

’நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!

நிரூபன்: என் நேமிசா குட்டியெல்லே, இப்பவாச்சும் சொல்லேன். என் கவிதை எப்படி என்று?

நேமிசா: அதை உங்க ப்ளாக் வாசகர்கள் தான் தீர்மானிக்கனும். நான் கிளம்பனும் நிரூ....

நிரூபன்: அடிப் பாவி.....!!!

அருஞ் சொற்கள்:
*குழல்- கூந்தல்
*காந்தள் மலர்- கார்த்திகைப் பூ/ கார்த்திகை மலர்

பிற்சேர்க்கை: இப்படி ஓர் கவிதையை 2006ம் ஆண்டு எழுதியிருந்தேன். ஆனால் கவிதை கைவசம் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கலை.நம் ஊரு இடப் பெயர்வோடு கவிதையும் தன் இடம் விட்டு நகர்ந்து விட்டது. மீண்டும் நினைவில் நின்ற வரிகளைப் பொறுக்கியெடுத்து கடந்த வருடம் எழுதினேன். அதனை மீண்டும் காப்பி பேஸ்ட் பண்ணி இப் பதிவினூடாக உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். 


34 Comments:

Anonymous said...
Best Blogger Tips

2006?

இன்னும் ஒரு நூற்றாண்டு அது நிலைக்கும்..சகோதரம்...

ஹேமா said...
Best Blogger Tips

இலக்கியக் காதல் சுவையாக இருக்கிறது நிரூ.தமிழை எப்படி வளைத்தாலும் இனிமைதான் !

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

என்னங்க இது அநியாயமா இருக்கு, இப்பேர்ப்பட்ட இலக்கியப் பதிவுக்கு இது வரை இரண்டே பின்னூட்டம்தானா?

பதிவுலகம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சுங்க.

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

என்னங்க இது அநியாயமா இருக்கு, இப்பேர்ப்பட்ட இலக்கியப் பதிவுக்கு இது வரை இரண்டே பின்னூட்டம்தானா?

பதிவுலகம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சுங்க.

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

என்னங்க இது அநியாயமா இருக்கு, இப்பேர்ப்பட்ட இலக்கியப் பதிவுக்கு இது வரை இரண்டே பின்னூட்டம்தானா?

பதிவுலகம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சுங்க.

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

ஏதோ என்னால முடிஞ்சது, மூணு கமென்ட் போட்டுட்டேன்.

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

இதோட நாலு இல்லை இல்லை ஐந்து கமென்ட் ஆச்சு!!!!!!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்
நல்ல கவிதை சிறப்பாக இருக்கு

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////ப்ளாக்கில கமெண்ட் போட்டுக் கொண்டு தானே இருந்தீங்க. நீங்களும் உங்க ப்ளாக்கும்.////

ஹி.ஹி.ஹி.ஹி...............

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நேமிசா என்ற பெயரை நீங்க இன்னுமா மறக்கவில்லை முன்பு ஒரு பதிவில் உங்களுடன் கூடப் ப......சாரி படித்த பொண்ணு என்று சொன்னீங்களே நல்ல நண்பியாக பழகியதால் உங்கள் காதலை சொல்லவில்லை என்று சொன்னீங்களே அவங்க பெயர் தானே நேமிசா இன்னுமா அவங்களை மறக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்

விச்சு said...
Best Blogger Tips

காதல்'னு வந்துட்டா தலைக்கனம் இல்லாமல் இலக்கணம் புகுந்து விளையாடுது. ஆமா யாரு அந்த நேமிசா? (Name உள்ள பெண் நேமிசாவா? அப்போ எல்லாருமே நேமிசா'தான்...)

Unknown said...
Best Blogger Tips

நிரூ
இது, இலக்கியக் காதல் அல்ல!! !
நல்ல,இலக்கணக் காதல்!
அருமை!

புலவர் சா இராமாநுசம்

Thava said...
Best Blogger Tips

காதலை இலக்கிய ரீதியில் அருமையான கவிதையாக வடித்துள்ளீர்கள் நண்பரே..படிக்கவே புதுமையாக இருக்கிறது..நன்கு ரசித்தேன்.நன்றி.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ!மகளிர் தினக் கவிதையோ?நன்றாக இருந்தது,பிரெஞ் கிஸ் கிட்டியதா?அதற்கெல்லாம் "கொடுப்பனை"வேண்டும் தம்பி!(பழைய கார்.புதிதாக வர்ணம் தீட்டியிருக்கிறாராம்.)ஹி!ஹி!ஹி!!!!!

எழிலருவி said...
Best Blogger Tips

நல்ல கவிதை ... முந்தி படிச்ச இலக்கணமெல்லாம் சாதுவா நினைவுல வந்து போகுது.

முற்றாயுதம்,
அளபெடை.
இதுக்கும் விளக்கம் சொல்லிடுங்க கவிஞரே...

எழிலருவி said...
Best Blogger Tips

//காந்தள் மலர்(க்) கண்ணழகி//
எல்லோரும் காந்தள் மலரை விரலுக்கு தான் உவமிப்பார்கள். கண்ணுக்கு உவமித்தமை புதுமையாக உள்ளது. அதுவும் காந்தள் என்பது கார்த்திகை மலர் என தெரிந்த பின்பு நன்றாக உள்ளது.... தகவலுக்கு நன்றி.

எழிலருவி said...
Best Blogger Tips

//சின்ன இடைக் கவியழகி!//
கவி என்றால் குரங்கு தானே..
நேமிசா அக்கா... குறிச்சு வைச்சுக்கோங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

2006?

இன்னும் ஒரு நூற்றாண்டு அது நிலைக்கும்..சகோதரம்...
//

இப்படி ஓர் வார்த்தையை உங்களிடமிருந்து கேட்க சந்தோசமாக இருக்கு.

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா
/இலக்கியக் காதல் சுவையாக இருக்கிறது நிரூ.தமிழை எப்படி வளைத்தாலும் இனிமைதான் !
//
\

எந்த தமிழைப் பத்தி சொல்லுறீங்க?
எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற தமிழ்ப் பொண்ணை பத்தி தானே;-)))


நன்றி அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி
என்னங்க இது அநியாயமா இருக்கு, இப்பேர்ப்பட்ட இலக்கியப் பதிவுக்கு இது வரை இரண்டே பின்னூட்டம்தானா?

பதிவுலகம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சுங்க.
//

இதுக்குப் பேர் தானுங்க ஐயா பதிவுலக அரசியல்!

நான் கொஞ்சம் பிசியாகிட்டேன் அல்லவா?

மொய்க்கு மொய் இப்போது போடாத காரணத்தினால் தான் பின்னூட்டம் வரலை ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி

ஏதோ என்னால முடிஞ்சது, மூணு கமென்ட் போட்டுட்டேன்.
//


தங்கள் அன்பிற்கு நன்றி ஐயா

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி

இதோட நாலு இல்லை இல்லை ஐந்து கமென்ட் ஆச்சு!!!!!!!
//

நன்றி ஐயா

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

வணக்கம் பாஸ்
நல்ல கவிதை சிறப்பாக இருக்கு
//

வாங்க பாஸ்...எப்படி இருக்கிறீங்க.
தங்கள் கருத்திற்கு நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

நேமிசா என்ற பெயரை நீங்க இன்னுமா மறக்கவில்லை முன்பு ஒரு பதிவில் உங்களுடன் கூடப் ப......சாரி படித்த பொண்ணு என்று சொன்னீங்களே நல்ல நண்பியாக பழகியதால் உங்கள் காதலை சொல்லவில்லை என்று சொன்னீங்களே அவங்க பெயர் தானே நேமிசா இன்னுமா அவங்களை மறக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்
//

அவ்...நேமிசா பாவம் பாஸ்...அவங்க பத்தி ஒரு பெரிய கதையே இருக்கு. வெகு விரைவில எழுதுகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@விச்சு

காதல்'னு வந்துட்டா தலைக்கனம் இல்லாமல் இலக்கணம் புகுந்து விளையாடுது. ஆமா யாரு அந்த நேமிசா? (Name உள்ள பெண் நேமிசாவா? அப்போ எல்லாருமே நேமிசா'தான்...)
//

யாரு நேமிசா என்று இவ் இடத்தில சொன்னா அவங்க கோவிச்சுக்குவாங்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்
நிரூ
இது, இலக்கியக் காதல் அல்ல!! !
நல்ல,இலக்கணக் காதல்!
அருமை!

புலவர் சா இராமாநுசம்//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

காதலை இலக்கிய ரீதியில் அருமையான கவிதையாக வடித்துள்ளீர்கள் நண்பரே..படிக்கவே புதுமையாக இருக்கிறது..நன்கு ரசித்தேன்.நன்றி.
//

நன்றி நண்பா

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் நிரூ!மகளிர் தினக் கவிதையோ?நன்றாக இருந்தது,பிரெஞ் கிஸ் கிட்டியதா?அதற்கெல்லாம் "கொடுப்பனை"வேண்டும் தம்பி!(பழைய கார்.புதிதாக வர்ணம் தீட்டியிருக்கிறாராம்.)ஹி!ஹி!ஹி!!!!!
//

ஐயா ரொம்பத் தான் பகிடி பண்ணுறீங்க.
இது மகளீர் தின கவிதை அல்ல.
ஒரு லவ்சு கவிதை

நிரூபன் said...
Best Blogger Tips

@எழிலருவி
நல்ல கவிதை ... முந்தி படிச்ச இலக்கணமெல்லாம் சாதுவா நினைவுல வந்து போகுது.

முற்றாயுதம்,
அளபெடை.
இதுக்கும் விளக்கம் சொல்லிடுங்க //

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

முற்றாயுதம்: இச் சொல்லின் சரியான பதம் முற்றாய்தம்.
கவிதையின் எளிமை கருதி முற்றாயுதம் எனச் சேர்த்திருக்கேன்.

ஃ எனப்படும் (அகேனம்) ஆயுத எழுத்தினை அதன் ஒலி இயல் அடிப்படையில்
ஆய்த எழுத்து, முற்றாய்தம், வட நாட்டு எழுத்து எனப் பிரிப்பார்கள்.

முற்றாய்தம்/ முற்றாயுதம் எனப்படுவது ஆயுத எழுத்தானது தனக்கு அடுத்து வரும் வல்லின எழுத்தினை மென்மையாக குறுகி ஒலிக்கும் வண்ணம் செய்வதனை குறிக்கும்.
உதாரணமாக, அஃகு, எஃகு, கஃகு, கஃசு, பஃது, பஃறூது எனப் பலவாறான சொற்களில் ஆய்த எழுத்து வந்துள்ள போதும் அவ் எழுத்திற்குரிய ஒலி அல்லது ஓசை அடுத்து வரும் வல்லின எழுத்துக்கள் வாயிலாக வெளிப்பட்டு நிற்கிறது. அதனையே முற்றாய்தம் என்பர்.

நிரூபன் said...
Best Blogger Tips

@எழிலருவி
அளபெடை.
இதுக்கும் விளக்கம் சொல்லிடுங்க//

தமிழில் உள்ள செய்யுள்களிலும், இலக்கணக் குறியீடுகளிலும் எழுத்துக்களின் ஓசையானது நீண்டு ஒலிப்பதை அளபெடை என்று கூறுவர். இந்த அளபெடையானது உயிரளபெடை, ஒற்றளபெடை என இரு வகைப்படும், இவ் இரு அளபெடையினுள்ளும் \
ஒலிக்கும் எழுத்துக்கள் இடம் பெறும் பகுதியினைப் பொறுத்து பல பிரிவுகள் உண்டு.

இந்த அளபெடை எனும் சொல்லை வைத்து இன்னிசை அளபெடையே....என ஓர் பாடல் ஹாட்பாதர் படத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிரூபன் said...
Best Blogger Tips

@எழிலருவி


//சின்ன இடைக் கவியழகி!//
கவி என்றால் குரங்கு தானே..
நேமிசா அக்கா... குறிச்சு வைச்சுக்கோங்க.
//\

ஹே....ஹே..
குரங்கிலும் அழகியாக அவங்க இருக்கிறாங்க என்று சொல்ல வந்தேனுங்க!
எப்பூடிப் பொருள் விளக்கம்.,

எழிலருவி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
எழிலருவி said...
Best Blogger Tips

விளக்கத்துக்கு நன்றி நண்பா...
அப்புறம் பொருள் விளக்கம்... ஹி.... ஹி....
எல்லாம் அவ பாக்க மாட்டா எண்ட தைரியம் தானே..

karthikkumar.karu said...
Best Blogger Tips

i wont give positive comments. If i give you will get kiss.... so i wont give.....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails