Friday, March 23, 2012

போலீஸ் வெறியாட்டத்தால் பொசுங்கிப் போகுமா கூடங்குளம் போராட்டம்?

நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதா! நம்பி கெட்ட அப்பாவி மக்கள்!

கூடங்குளம் அணு உலையினை மூடக் கோரி கூடங்குளம் அணு மின் நிலையத்தினைச் சுற்றியுள்ள 20km தூரத்தினுள் வசிக்கும் மக்களால் கடந்த வருடம் புரட்டாதி மாதம் முதல் பல்வேறுபட்ட போராட்டங்கள் அஹிம்சை முறையில் இடம் பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இப் போராட்டங்களினை நன்கு திட்டமிட்டு நசுக்கும் நோக்கில் சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் "அணு உலை சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது. மக்கள் குடியிருப்புக்களின் மத்தியில் அணு உலையினை நிறுவி இருப்பது தவறு. தானும் கூடங்குளம் மக்களுள் ஒருவராக போராட்டக் களத்தில் வெகு விரைவில் இருப்பேன்” என அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையானது சங்கரன் கோவில் இடைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை என அப்பொழுது யாருமே நினைத்திருக்கவில்லை.
ஆனால் இன்றோ நிலமை தலை கீழாக மாறி விட்டது. சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவுற்றதும், ஜெயா அம்மையாரும் தன் வேலையினை காட்டத் தொடங்கி விட்டார் என கூடங்குளத்தில் வாழும் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனை விட, தமிழகத்தில் மின் வெட்டினை அமுல்படுத்தி, கூடங்குளம் போராட்டத்தினால் தான் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்பட்டது எனும் பொய்யான செய்தி மக்கள் மனங்களில் பரவுவதற்கும் காரணகர்த்தாவாக இந்த அம்மையாரும் விளங்குகின்றார்.

கூடங்குளத்தில் என்ன தான் நடக்கிறது என அறியும் நோக்கில் அங்கே உள்ள சக நண்பர் ஒருவருக்கு நேற்றைய தினம் தொலைபேசி அழைப்பினை மேற் கொண்டேன். நேற்றைய தினம் வரவேண்டிய பதிவு, நேரம் இன்மையால் இன்றைய தினம் உங்களை நாடி வருகின்றது. 

144 தடை உத்தரவும், மக்களை தாக்கும் போலீசும்!

கூடங்குளம் அணு உலையினை அகற்ற கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு 3km தொலைவில் உள்ள இடிந்தகரை எனும் ஊரில் உண்ணாவிராதப் போராட்டம் இடம் பெற்று வருகின்றது. அஹிம்சை முறையில் தமது பிரதேச நலனைக் கருத்திற் கொண்டு அப் பகுதி மக்களால் நடாத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பதில் சொல்லத் திராணியற்ற மத்திய - மற்றும் மாநில அரசுகள் மக்களை ஆயுத முனையில் அடக்கி, போராட்டத்தினை நசுக்கி, அப்பாவி மக்களின் ஊரில் அணு உலையினை இயங்கச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் விடாப் பிடியாக நிற்கின்றன.

இதன் பிரகாரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக 7000-10,000 வரையான போலீஸ், எல்லை காவல் படை, மற்றும் அதிரடிப் படையினரை கூடங்குளத்தின் இடிந்தகரை கிராமத்திற்குச் சமீபமாக நிறுத்தியிருக்கிறார்கள். இடிந்தகரை மக்கள் தம் உயிரைக் கூட கொடுப்பதற்கு அஞ்சமாட்டார்கள் என்பதனை உணர்ந்து தான் இடிந்தகரையில் போராட்டத்தினை மக்கள் ஆரம்பித்தார்கள் என கூறுகின்றார்கள் கூடங்குளம் வாசிகள். 

கூடங்குளச் சுற்று வட்டாரத்தில் உள்ள போலீஸார் இன்னமும் இடிந்தகரையில் போராட்டம் இடம் பெறும் பகுதிக்குள் உட்புகவில்லை. அப்படி உட்புகுந்தால் போலீசுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நிகழ வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அங்கே உள்ள மக்கள் கூறுகின்றார்கள். கூட்டப்புளி கிராமத்தில் தம் காட்டு தர்பாரை அரங்கேற்றிய போலீஸ், இரு நாட்களுக்கு முன்பதாக, ஆண், பெண் உட்பட 200 பேரை கைது செய்து, திருச்சி சிறையிலும், கடலூர் சிறையிலும் அடைத்துள்ளார்கள். சிறைச்சாலையிலும் தாம் வாழும் மண்ணின் நலனைக் கருத்திற் கொண்டு மக்கள் உண்ணாவிரதத்தினை தொடர்ந்து கொண்டிருப்பதாக கூடங்குளம் வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

144 தடை உத்தரவின் பிரகாரம் பொது இடத்தில் இருவருக்கு மேல் சந்தித்து உரையாட முடியாது. கூட்டமாக யாரும் பேச முடியாது. இந்த தடை உத்தரவின் பிரகாரம் போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து அராஜக வழியில் தண்டனை வழங்க அரசிற்கு உரிமை இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். 

அடிப்படை தேவைகளை நிறுத்தி விட்டு, பொய்யுரைக்கும் மாநில அரசு!

கூடங்குளம் சுற்று வட்டார கிராமங்களுக்கு வேண்டிய மின்சார வசதி தற்போது நிறுத்தப்பட்டிருப்பதோடு, உணவு விநியோகம், பஸ் சேவைகள், மற்றும் வெளியூர் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.கூடங்குளத்தில் போதிய வசதிகளோடு வைத்தியசாலைகள் இன்மையால், மருத்துவத் தேவைகளைக் கருத்திற் கொண்டு மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் தற்போது நோயாளர்கள் யாருமே வெளியே போக முடியாதவாறு தடுப்பரண்களை போலீஸ் ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள். நேற்று நள்ளிரவு இருதய நோயினால் பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் மேலதி சிகிச்சைகள் ஏதுமின்றி உயிரிழந்திருப்பதாகவும், மேலும் சில சிறுவர்கள் மேலதிக சிகிச்சையினை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அறிய முடிகின்றது. 

மாவட்ட செயலரோ கூடங்குளத்தில் எந்தவித வசதிகளும் நிறுத்தப்படவில்லை என, பொய்யறிக்கை வெளியிட்டு போலீஸின் செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகளின் மௌனமும், ஆதரவும்!

கூடங்குளத்தில் அஹிம்சை முறையில் போராட்டத்தில் ஈடுபடும் அப்பாவி மக்கள் மீது தம் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் போலீஸின் நடவடிக்கைகள் தொடர்பில் மாநில அரசு மௌனம் சாதித்து வருகின்றது. வைகோவும், சீமானும் இன்றைய தினம் கூடங்குளம் வாழ் மக்களைச் சந்திக்க வருவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், தாம் தமது பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வு கிடைக்கும் நோக்கில் காத்திருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாயிருக்கும்?

HRPC வழக்கறிஞர்கள் நேற்று நள்ளிரவு இடிந்தகரையில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டோரின் விபரங்களைப் பாதிக்கப்ப்பட்வர்களின் குடும்பத்தினரிடமிருந்து பெற்று, அவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழி அளித்திருக்கிறார்கள். மக்கள் விடாப் பிடியாக அணு உலையினை அகற்ற வேண்டும் எனும் கோஷங்களோடு போராட்டத்தில் உறுதியாக நிற்கிறார்கள். இராணுவம், மற்றும் போலீஸ் அதிகாரிகள் அறிவித்தல் ஏதுமின்றி (Without any arrest warrant) போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நள்ளிரவில் வீடுகளை உடைத்து கைது செய்வதில் குறியாக இருக்கிறார்கள். இனி என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்!

மக்கள் மத்தியில் காணப்படும் அச்ச நிலை!

அடிக்கடி உலங்குவானூர்திகளும், விமானங்களும் கூடங்குளத்தைச் சுற்றித் தாழப் பறந்து மக்களை அச்சத்தில் உறையச் செய்யும் வண்ணம் தமது நடவடிக்கைகலை முடுக்கி விட்டிருக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் தாம் அனைவரும் பூண்டோடு அழிக்கப்படலாம் எனும் அச்ச நிலையும் காணப்படுகின்றது. விமானங்களும், உலங்குவானூர்திகளும் கடமையில் ஈடுபடும் போலீஸிற்கும், இராணுவத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பறப்பில் ஈடுபடுகின்றனவா? அல்லது மக்களைப் பயமுறுத்திப் போராட்டத்தை நசுக்கும் நோக்கில் பறப்பில் ஈடுபடுகின்றனவா என்பதனை தீர்மானிக்க முடியாதுள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். 

இந்தச் செய்தித் தொகுப்பு உங்களை நாடி வர பங்களிப்பு நல்கியோர், 
கூடங்குளத்திலிருந்து : நண்பர் பாலா, மற்றும் நண்பர் சதீஷ்,
இவர்களோடு சென்னையிலிருந்து துவாரகன்.
எழுத்துருவாக்கம்: செல்வராஜா நிரூபன்.

இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.

24 Comments:

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

மிகவும் அச்சத்தில் இருக்கிறோம்.
எந்த நேரமும் போலிசார் கூடங்குளத்து மக்களை அழித்தொழிக்க வெறி கொண்ட வேட்டை நாய்களைப்போல காத்திருக்கின்றனர்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!உலகெங்கும்,கடந்த ஆண்டில் யப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தின் (சுனாமி)பின்னர்,உலக நாடுகள் அணு உலை குறித்த தங்கள் கொள்கைகளை(எரிபொருள் பிரச்சினை தொடர்ந்தாலும் கூட)மீள் பரிசீலனை செய்துவரும் சமயத்தில்,கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்படுதல் இயற்கையே!எனினும்,கூடங்குளம் அணு உலை இயங்குவதால் மட்டுமே மின்சாரப் பிரச்சினை தீரும் என்று விடாப்பிடியாக மத்திய,மாநில அரசுகள் செயற்படுவதன் உள் நோக்கம் என்னவென்பது தான் புரியாத புதிர்.பல "கோடி"களை கொட்டி விட்டோம் என்பதாலா?சுவிற்சர்லாந்தில் சேர்ந்திருக்கும் கோடிகளை மீட்டாலே இந்தியா வல்லரசாகி விடுமே?கூடங்குளம்"அணு"உலை இயங்கினால் தான் வல்லரசாக முடியுமோ,என்னவோ?????§§§§என் பற்றிய கவிதை?!யை எதிர்பார்த்து கண்கள் பூத்து......................?!)

Yoga.S. said...
Best Blogger Tips

உலக சினிமா ரசிகன் said...

மிகவும் அச்சத்தில் இருக்கிறோம்.
எந்த நேரமும் போலிசார் கூடங்குளத்து மக்களை அழித்தொழிக்க வெறி கொண்ட வேட்டை நாய்களைப்போல காத்திருக்கின்றனர்.////பயப்படாதீர்கள்!இடிந்தகரை மக்களே "துச்ச"மென துணிந்திருக்கையில்.

கவி அழகன் said...
Best Blogger Tips

ennatha solla , athikaram paduthum padu

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
நிலமை கை மீறிப்போய் விட்டது.?:-(

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன்,ஒரு நான்கு நாட்கள் ஊரில் இருக்கமாட்டேன்!விரும்பினால் கவி எழுதி,எல்லோரும் சேர்ந்து கும்முங்கோ, இப்ப விட்டா பிறகு கிடைக்காது,சொல்லிப்போட்டன்!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

காட்டான் said...

வணக்கம் நிரூபன்!
நிலமை கை மீறிப்போய் விட்டது.?:-(
///வணக்கம் காட்டான்!அப்படி எதுவும் தெரியவில்லையே????

Anonymous said...
Best Blogger Tips

.பல "கோடி"களை கொட்டி விட்டோம் என்பதாலா?சுவிற்சர்லாந்தில் சேர்ந்திருக்கும் கோடிகளை மீட்டாலே இந்தியா வல்லரசாகி விடுமே?கூடங்குளம்"அணு"உலை இயங்கினால் தான் வல்லரசாக முடியுமோ,என்னவோ?/////////////////////////////////////

அங்கிள் வல்லரசு ஆகணும் அணு உலை என்பதெல்லாம் சுத்த பேத்தல் ....சுவாட்சார்லந்தில் மீண்டும் கொடிகளை சேர்க்கவே இந்த அனுளை பயன்படும் பாருங்க ...

Anonymous said...
Best Blogger Tips

கூடங்குளம் அணு உலை இயங்குவதால் மட்டுமே மின்சாரப் பிரச்சினை தீரும் என்று //////////


மின்சாரப் பிரச்சனை தீர்க்க நும் அணு உலை என்பதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்ற்றும் வித்தை ....

அவங்களோட டார்கெட் வேற ....மக்களை ஏமாற்ற்ற சும்மா மினசாரத் தேவையை கையில் எடுத்து மக்களை திரட்டுறாங்க அதற்க்கு ஆதரவா ...

Anonymous said...
Best Blogger Tips

விடாப்பிடியாக மத்திய,மாநில அரசுகள் செயற்படுவதன் உள் நோக்கம் என்னவென்பது தான் புரியாத புதிர்///////////////////////

எல்லாமே ரஷ்யா ஒப்பந்தம் தான் ....

இந்திரா காந்தி அவர்கள் போட்டங்க ரஷ்யா யாவூட ...
ரஷ்யா ஒப்பந்தப்படி இந்தியாக்கு அவங்க நீர்முழ்கி போர்க்கப்பல் கொடுப்பன்கலாம் அதற்க்கு பதிலாக ருச்சிய அணு உலை இந்தியாவில் அமையனுமாம் எண்டு ....

ரஷ்யா காரங்க போர்க்கப்பலும் கொடுத்து இந்தியாக்கு அணு உலையும் எதுக்கு அமைச்சிக் கொடுக்கணும் ...இந்தியா ல இருக்க மின்சாரப் பிரச்சனை யை தீர்க்கணும் நு அவங்களுக்கு என்ன கடைமையா .....
அவிங்க எல்லாமே ப்லன்னேத் ...

அணு உலைக்கு தேவையான கதீர்வீச்சு தனிமமான யுரேனியம் வினைக்கு உட்படுத்தி மின்சாரம் தயாரிப்பாங்க ..அந்த வினையில் யுரனியம் தோரியமா மாறும் .....அந்த தோரியத்தை ரஷ்யா பெற்று அணு அழித்தலில் வல்லரசாக ஆகும் ....

Anonymous said...
Best Blogger Tips

Yoga.S.FR said...
நிரூபன்,ஒரு நான்கு நாட்கள் ஊரில் இருக்கமாட்டேன்!விரும்பினால் கவி எழுதி,எல்லோரும் சேர்ந்து கும்முங்கோ, இப்ப விட்டா பிறகு கிடைக்காது,சொல்லிப்போட்டன்!!!!!!!

March 23, 2012 12:07 பம்

ஹைஈ ஹைஏஎ ஹைஏஎ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ

Anonymous said...
Best Blogger Tips

அயயயூ அங்கிள் கிட்ட கதைக்கமா நாலு நாளா... நான் எப்புடி இருப்பேன் ...
நினைச்சாவே கஷ்டமா இருக்குதே ..

சிக்கிரமா வந்துடுங்கோ அங்கிள் .

Yoga.S. said...
Best Blogger Tips

அதிகமா சந்தோஷப்பட்டுக்காதீங்க!"அங்கிருந்தும்"வாச்(Watch)பண்ணுவேன்,ஹ!ஹ!ஹா!!!!!எக்ஸாம் முடிஞ்சிருச்சா????

Yoga.S. said...
Best Blogger Tips

கிளம்பும் நேரம் வந்து விட்டது!பாய்!!!!!!(BAY!!!)

Anonymous said...
Best Blogger Tips

!!!!எக்ஸாம் முடிஞ்சிருச்சா????///////////////
திங்கட் கிழமை தான் நேர்முகத் தேர்வு அங்கிள் ...

Anonymous said...
Best Blogger Tips

ஓகே டாடா டாடா ..

உங்கள் பயணம் இனியதாக அமைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் ...

நீங்களும் நான் சுப்பரா தேர்வு அட்டென்ட் பண்ண வேண்டிக் கொள்ளுங்க மாமா ....


வலி மேல் விழி வைத்து உங்களி எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.!
சிக்கிரம் வேலை எல்லாம் நல்லா முடிச்சிப் போட்டு வாங்கோ .....
...டாட்ட டாடா

Anonymous said...
Best Blogger Tips

அதிகமா சந்தோஷப்பட்டுக்காதீங்க!"அங்கிருந்தும்"வாச்(Watch)பண்ணுவேன்,ஹ!////////////////////////


அ வ்வ்வ்வவ்வ்வ்வ் ...அங்க போயுமா................

Anonymous said...
Best Blogger Tips

நன்றி சகோதரம்...

இந்த அறப்போராட்டத்துக்கு கை கொடுத்ததற்கு...

வழக்கமாகவே போராட்டம் நடக்கும் இடிந்தகரையில் காவலர்கள் நுழையவே அஞ்சுவார்கள்...

அமைச்சர் ஒரு முறை வந்த போதே உடன் எந்த காவலரும் வர மறுத்து விட்டனர்...

நான் நேரில் சென்று இருந்த போது அந்த ஊர் பெண்களின் வீரத்தை என்னால் நம்பவே முடியவில்லை...
எங்கள் அத்தனை உயிரும் போன பின்பு தான் அந்த உலை நடக்கும் என்று அந்த தாய்மார்கள் சொன்னதை கேட்ட பின்...

ஊர் சொத்தை கொள்ளையடித்து தின்று உடம்பை வளர்த்த அந்த பொம்பளையை அம்மா என்று காசுக்கு மாரடிக்கும் கூட்டம் சொல்லி திரிவதை பார்க்க கூசுகிறது...

தண்ணீர்..அத்தியாவசிய பொருட்கள்...மின்சாரம் எல்லாம் நிறுத்தி ராஜபக்ஷே பாணியில் நடக்கிறது அராஜகம்...

என் வாழ்நாளில் இப்படி ஒரு போராட்டம் இந்தியாவில் பார்த்ததில்லை...

இவர்கள் வாழும் மண்ணில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்...

பொல்லாதவன் said...
Best Blogger Tips

இடிந்தகரை மக்களுக்கு உணவு பொருட்கள் பக்கத்துக்கு கடலோர கிராமங்களில் இருந்து தான் கொண்டு செல்ல படுகின்றன குடிதண்ணிர் முதற்கொண்டு . அதுவும் படகு மூலம் .... வேறு வழி? வெளியே இருந்தும் ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கபடுகிறது உள்ளே இருந்து வெளியே செல்லவும் வழி இல்லை . ஏதோ தீவிரவதிகளை சுற்றி வளைப்பது போல் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது . அப்புறம் என்ன ஜனநாயக நாடு இது ? உணவு , உறைவிடம் எல்லாமே கேள்விகுறி ஆகும்போது அந்த மக்கள் என்ன செய்வார்கள் . இதில் வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்ற புரளி வேறு . புலம்புவதையும் , நொந்து கொள்வதையும் தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை .......:(

ss siva said...
Best Blogger Tips

வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது
Eanbathuthan Unmai Koodankulam Anu Ulai Kattum Poothu Eankirunthar Intha Uthaya kumar Amerikavil thane
Antha visuvasam than Intha Anu Ulai Eathiru.

பொற்கோ said...
Best Blogger Tips

பெரிய பருப்பு மாதிரி 2011 தேர்தல் பயணத்தில் தூத்துக்குடியில் வைத்து கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் நான் மக்களின் பக்கமே நிற்பேன் என்று சொன்னாரே. இப்படி தான் உளறுவார் என்பது அப்போவே தெரியும். இலைக்கு ஒட்டு போட்ட மக்கள் பாடு என்னாகப்போகுதோ தெரியல....

பொற்கோ said...
Best Blogger Tips

ஏன்? யாரும் நீதி மன்றத்தை நாடாமல் போராட்டம் மட்டுமே நடத்துகின்றனர். போலிஸ் குவித்து மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மறுக்கப்படுவதை நீதிமன்றம் கண்டிப்பாக அனுமதிக்காது என்று நம்புகிறேன். ஜெய அரசின் பல நடவடிக்கைகள் இதுபோல தடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இத் தான் நடைமுறைக்கு ஏற்றது. யாராவது செய்தால் நல்லது. செய்வார்களா?//????????!!

கூடல் பாலா said...
Best Blogger Tips

தர்மம் வெல்லும்!

muthamil said...
Best Blogger Tips

unmaggalai orupothuum maraikkamudiyathu...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails