Friday, March 16, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் கலர்புல் பார்ட்டி -16/03/2012

ஆபாசானந்தா மேல சத்தியமா இப் பதிவில் ஒரு துளி ஆபாசமும் இல்லைன்னு சொன்னாலும் நம்பவா போறீங்க? வெளியே நின்று வெட்கப்பட்டு பதிவை படிக்காம ஓடுவதை விடுத்து, அச்சப்படாம வாருங்கள்! இன்றைய பதிவினை படித்து நம்ம பார்டியை கலக்கிட ஒன்று சேருங்கள்! 
எல்லோருக்கும் இனிய வெள்ளிக் கிழமை வணக்கம் & வாழ்த்துக்களுங்கோ! 

தீக்குளிக்க தயாராகும் கலைஞர்! தீயைவைக்க ரெடியாவாரா ஜெயலலிதா?

அண்ணா நூலகம் இடிக்கப்பட்டால், அடியேன் தீக்குளிப்பேன் என இம்முறை வீராவேசத்துடன் பொங்கியெழுந்து சூளுரைத்துள்ளார் கடிதம் எழுதும் கலாய்ப்பிற்கு பேர் பெற்ற நம்ம கலைஞர் ஜி அவர்கள். தன்னுடைய வழமையான அரசியல் பாணியில் அறிக்கை விட்டு அசத்தல் காமெடிகளை அள்ளி வீசிய கலைஞர் ஜி இப்போது ஒரு படி மேலே போய், அண்ணா நூலகம் இடிக்கப்பட்டு மருத்துவமனை கட்டடம் கட்டப்படுவதை எதிர்த்து என்னால் முடிந்த வரை உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு மேல் வழக்குப் போட்டு வாதாடுவேன்! முடியலைன்னா நூலகம் இடிக்கப்படும் நாளில் தீக்குளித்து என் உயிரை மாய்ப்பேன் என சூளுரைத்துள்ளார்! ஆகா..85 வயசில ஒருத்தன் சாகப் போறார் என்றால் ஜனங்க சும்மா இருப்பாங்களா? கலைஞர் ஜி! நீங்க சந்தோசமா தீக்குளியுங்க. உங்களை யாருமே தடுக்க மாட்டாங்கோ...
நீங்க இருப்பதால் பயனேதுமில்லை என்பது மக்களுக்கு இம்புட்டு நாளா தெரியாமலா இருக்கும்! இறுதியாக ஒரு குறிப்புங்க! நீங்க ஆவேசத்தில டீ குடிப்பதாக சொன்னதை பத்திரிகைக்காரங்க தீக்குளிப்பதாக மாத்தி எழுதிட்டாங்கோ என்று மாத்திரம் சொல்லிடாதீங்க! பேச்சு பேச்சா இருக்கனும் ஜி!

அமெரிக்கா மீது போர் தொடுப்போம்! அழைப்பு விடுக்கும் இலங்கையின் வீர புருஷர்கள்! 

இலங்கையின் அரசியல் ஏமாற்று வித்தைகளை உன்னிப்பாக அவதானித்த அமெரிக்க வெள்ளை மாளிகை ராஜாங்க திணைக்களம் அண்மையில் ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையினை நிறைவேற்றும் முகமாக ஓர் தீர்மானத்தினை கொண்டு வந்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்தப் பிரேரணையினால் ரொம்பவே கடுப்பாகியிருக்கும் சிங்கள தேசமும், அதன் தீவிர இனவாதிகளும் இப்போது அமெரிக்காவை புறக்கணித்து, அமெரிக்கா மீது ஒரு நிழல் போரினை ஆரம்பிக்க முண்டியத்திருக்கிறாங்க. 

அமெரிக்காவிலிருந்து ஒரு சிறு குண்டினை ஊதி விட்டாலே அடையாளம் தெரியாம போயிடும் சைஸில இருக்கிற சிறிய நாடான இலங்கை எப்பூடி, அமெரிக்கா மீது போர் தொடுக்கும் என்று தானே எல்லோரும் யோசிக்கிறீங்க? இலங்கையில் வாழும் இனவாத அரசியல்வாதிகள் எல்லாரும் வாய்ச் சொல்லில் வீரர்கள் அல்லவா? இப்போது அமெரிக்காவிற்கு எச்சரிக்கை கொடுக்கும் முகமாக கூகிளை புறக்கணிப்போம் என கிளம்பியிருக்காங்கோ. கூகிளை இலங்கையில் தடை செய்வதன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தினை ஆட்டம் காணச் செய்ய முடியுமாம்! ஸப்பா.... இந்த கூகிள் கூட எந்த நாட்டில இருக்குதுன்னு அறிய கூகிள் மூலமா தானே தேடியிருப்பாங்க - டவுட்டு! 

இலங்கைக்கு ஆப்பு மேல ஆப்படிக்கும் பிரித்தானிய சேனல் 4 டீவி!

மூடிய தீவுக்குள் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மீது அநாகரிகமான முறையில், அராஜக வழியில் மனிதப் பேரவலத்தை கட்டவிழ்த்து விட்ட இலங்கையின் இறுதிப் போர் தொடர்பான ரகசியங்கள் வெளியே வராது எனும் நம்பிக்கையுடன் இலங்கை அரசாங்கமானது வெளிநாட்டு ஊடக நிறுவனங்களை தடை செய்திருந்ததுடன், சர்வதேச போர்க் குற்ற விசாரணை தொடர்பிலான செயற்பாடுகளையும் அனுமதிக்காது போர்க் குற்றம் என்ற ஒன்றே இலங்கையில் இடம் பெறவில்லை எனும் நோக்கில் கண் கட்டி வித்தை காட்டி வந்தது.

சனல் 4 தொலைக்காட்சியானது ஒரு படி மேலே போய் இலங்கையின் போர்க் குற்றங்கள், அராஜகங்களை வீடியோ ஆதாரங்களுடன் "SRILANKA KILLING FIELDS" எனும் பெயரில் ஏலவே வெளியிட்டிருந்தது. இப்போது இன்னும் ஓர் படி மேற் சென்று தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் "UNPUNISHED WAR CRIMES" எனும் பெயரில் மற்றுமோர் ஆவணப் படத்தினை 14.03.2012 புதன் கிழமை அன்று வெளியிட்டிருக்கிறது. கூடவே இலங்கை மீது இந்த ஆவணங்களினூடாக போர்க் குற்ற விசாரணை இடம் பெற வேண்டும் என அழுத்தமான குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. வழமை போலவே இலங்கை தரப்பிலிருந்து ஒரேயொரு பதில் மாத்திரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தங்களின் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக, இலங்கைக்கு வெளியே கிராபிக்ஸ் மூலம் இப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறதாம்! கொய்யாலே! கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடும் ஏரோப் ப்ளேன் ஓட்டுமாம்!  அதே போல உலக நாடுகள் அனைவரும் மடையர்கள் என்று நினைத்தல்லவா கோத்தபாயவாம் கோமாளி வித்தை காட்டுறார்!!!

சோக்கு செம (சோ)ஜோக்கு!!

ஒரு பள்ளியில் தமிழாசான் ஆண் பால், பெண் பால், பலர் பால், பலவின் பால் கற்பித்துக் கொண்டிருந்தார். எழுமாற்றாக ஒரு மாணவனை எழுப்பி, தம்பி! குழந்தை என்ன பாலில் அடங்கும் என்று கேட்டார்! 
மாணவன் சொன்னார் குழந்தை தகரப் பாலில் அடங்கும் என்று (Caned Milk or Tin Milk)
அதற்கு ஆசிரியரோ, ரொம்ப சமத்தா பதில் சொல்லியிருக்கே! இந்த கால குழந்தைங்க தாய்ப் பாலில் அடங்குவதை விட, தகரப் பாலில் தானே அடங்குதுங்க (தகரப் பால் - புட்டிப் பால் என்றும் சொல்லிக்கலாம்)
இடுப்பானா இடுப்பிற்கு கிடைத்த மதிப்பு!

நண்பன் படத்தில் "இருக்கானா இடுப்பிருக்கானா இலையானா இலியானா" பாடலில் தன் இடுப்பு மடிப்பைக் காட்டி கிளு கிளுப்பினை ஏற்படுத்துவார் இலியான என எதிர்பார்த்த பலருக்கு வச்சுக் கொண்டு வஞ்சகம் பண்ணினார் இலியானா எனும் நிலை தான் ஏற்பட்டது.  தமிழ் ரசிகர்களுக்கு வஞ்சம் பண்ணிட்டு இப்போது அம்மணி தெலுங்கு பக்கம் போயிருக்காராம். இடுப்பழகிக்கு இப்போது பாலிவூட்டில் வாய்ப்பு மேல வாய்ப்பு வந்து கொண்டிருக்க, அம்மணியோ தெலுங்கில் தான் ஒரு வருடத்திற்கு "புக்" ஆகிட்டேன் எனச் சொல்லி எஸ் ஆகுறாராம்! இடுப்பிற்கு இம்புட்டு மதிப்பா! இது முன்னாடி தெரிந்திருந்தா நானும் சின்ன வயசில இருந்து ஜிம்மிற்கு போயிருப்பேனே! 

பதிவர் முரண்:

தீக்குளிப்பேன் என இன்று சூளுரைத்தார் கலைஞர்
திரை மறைவில் நாடகமாடுவதில் சிறந்தவர் கொலைஞர்
நாக்கதுவும் ஓர் எழுத்து தவறி உச்சரித்ததாய் சொல்வார் 
நாளை டீக்குடிப்பேன் எனச் சொல்லியதாய் மாற்றிடுவார்
ஆத்திரத்தில் ஓர் வார்த்தை சொன்னேன் அடியேன்
அதனை பத்திரிகைக்காரங்க மாற்றிவிட்டார்- நான் ஒன்றும் அறியேன்!

பதிவர் ஜோதிடம்:

பிரான்ஸ் நாட்டில் வாழும் மணிப் பதிவர், லண்டனில் உள்ள பிரபல பெண் பதிவர் வீட்டிற்குள் விருந்தாளியாக நுழைந்து,வீட்டுக்காரம்மா தேநீர் தயாரிக்கும் சமயம் பார்த்து வீட்டிலிருந்த பூனையின் கழுத்தில் போடப்பட்டிருந்த ஐஞ்சு பவுண் சங்கிலியை லபக் என்று அடவி, கபக் என்று பிரான்ஸிற்கு கடத்தி வந்திட்டாராம்! பூசாரின் கழுத்திலிருந்த சங்கிலியை காணலையே என தேடுதல் வேட்டையில் இறங்கிய அம்மணிக்கோ, கறுப்புக் கண்ணாடி போட்ட ஐடியா ஆள் வீட்டிற்கு வந்த விடயம் வெளிச்சமாகவே, கையும் களவுமாக திருடனை பிடித்து விட்டேன் என கூப்பாடு போட்டிருக்கிறார். சக நண்பர்களிடமும் முறையிட்டிருக்கிறார்.
சங்கிலியை திருடிய பாவிப் பயலோ, பிரான்ஸில் உள்ள கனக குஜலாம்பாள் நகை கடையில் சங்கிலியை விற்று, ஒரு ஐபோட் வாங்கி தன் பிரெஞ்சு காதலிக்கு பரிசளித்திருக்கிறாராம். சங்கிலியை மீட்டுத் தா முருகா என கோயில் குளம் எல்லாம் ஏறி இறங்கா குறையாக அம்மணி முருகனுக்கும், வள்ளிக்கும் ஐஞ்சு பவுண் சங்கிலி போடுவதாக வேண்டுதல் வைச்சிட்டு திரியுறாங்களாம்! ஒரு சங்கிலியை மீட்க அம்மணி முருகன், வள்ளி, தெய்வயானை ஆகிய மூவருக்கும் ஐஞ்சு பவுண் படி பதினைஞ்சு பவுண் செலவு பண்ணுறாங்க என்றால் திருட்டுப் போன சங்கிலி கண்டிப்பா ஐஞ்சு பவுணா இருக்காது!

ஐடியா மணி திருடிய சங்கிலி ஐஞ்சு பவுணா இல்லை அம்பது பவுணா என்பது சங்கிலியை பறிகொடுத்த அம்மணிக்கும், திருடிய ஐடியாவுக்கும், வாங்கிய கடைக்காரனுக்கும் தான் வெளிச்சம்! முருகா! நீ அதிஷ்டம் செய்தவனப்பா! உனக்கு ஓசியில 15 பவுண் கிடைக்குதில்லே! வாழ்க கந்தா!!

பதிவர் குறும்பும், பதிவர் குசும்பும்!

ஊசி இணைப்பு: 


நன்றி,
வணக்கம்!

15 Comments:

K. Sethu | கா. சேது said...
Best Blogger Tips

//// நீங்க ஆவேசத்தில டீ குடிப்பதாக சொன்னதை பத்திரிகைக்காரங்க தீக்குளிப்பதாக மாத்தி எழுதிட்டாங்கோ என்று மாத்திரம் சொல்லிடாதீங்க! பேச்சு பேச்சா இருக்கனும் ஜி//

ஹி,ஹி ... கட்டிடத்தை *இடித்துவிட்டு* மீண்டும் கட்டினால் தான் தீக்குளிப்பாதாக அவர் சொன்னார் என நான் இதுவரை பார்த்த செய்திக்குறிப்புகளில் காண்கிறேன்.

ஜெயின் அதிரடித் தீர்மானம் நூலகத்தின் இட மாற்றல் மற்றும் தற்போதைய கட்டிடத்தில் மருத்துவமனை அமைத்தல் ஆகியன மட்டும்தாமன். கட்டிட இடித்தல் ஒன்றும் நடைப் பெறப்போவதில்லை.

ஆக இவர் தீக்குளிக்க வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கெல்லாம் பெப்பே... தான் ;))))

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!எல்லாமே அசத்தல்.அந்த சங்கிலிப் பிரச்சின இங்க வரைக்கும் வந்திட்டுதா?அந்தப் பூனை?!என்னையும் எல்லோ சேத்து சந்தேகப்பட்டிச்சு!நான் புறூப் பண்ண வேண்டியதாப் போச்சு,அப்ப நான் பிரான்சில தான் இருந்தனான் எண்டு!ஹி!ஹி!ஹி!!!!!!!!!

K said...
Best Blogger Tips

எல்லோருக்கும் இனிய வெள்ளிக் கிழமை வணக்கம் & வாழ்த்துக்களுங்கோ!///////

ஹா ஹா ஹா மச்சி, இதை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே?

K said...
Best Blogger Tips

யோ, அந்த சங்கிலியை நான் எடுக்கேலை! இது சம்மந்தமான வழக்கு நேற்று 15 ம் தேதி லண்டனில் உள்ள ஒரு நீதிமன்றதில் நடந்தது!

சங்கிலியைத் தொலைச்ச ஆக்கள், ஒரு வெள்ளைக்கார வக்கீலைக் கூட்டிக்கொண்டு வந்தவை! இம்முறை வக்கீல் வண்டு முருகன் மிஸ்ஸிங்!:-)))))

கோர்ட்ஸ்ல என்ன தீர்ப்பு சொல்லிச்சினம் எண்டு, இண்டைக்கு எழுதுவம் எண்டு பார்த்தன்! ஆனா, வெளியூர் போனதால எழுத முடியேலை! :-)))))))))))

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

தென்றலை தீண்டியதில்லை..
தீயை தாண்டியிருக்கிறேன்..
என்று வசனம் எழுதியவர்,
தீக்குளிப்பேன் என வசனம் பேசியிருக்கிறார்.

இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ்நாட்டை வசனம் பேசியே கொல்லப்போறாரு...

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

யோவ் மணி ... அந்த சங்கிலிய திருப்பிக் கொடய்யா ... எந்தப் பக்கம் திரும்பினாலும் அதே பேச்சாத் தான் இருக்கு. ஹையோ ஹையோ

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ....அந்தச் சங்கிலி இனி முழுசாக் கிடைக்குமெண்டு நம்பிக்கை ஆருக்காச்சும் இருக்காமோ !

நிரூபன் said...
Best Blogger Tips

@K. Sethu | கா. சேது

ஹி,ஹி ... கட்டிடத்தை *இடித்துவிட்டு* மீண்டும் கட்டினால் தான் தீக்குளிப்பாதாக அவர் சொன்னார் என நான் இதுவரை பார்த்த செய்திக்குறிப்புகளில் காண்கிறேன்.

ஜெயின் அதிரடித் தீர்மானம் நூலகத்தின் இட மாற்றல் மற்றும் தற்போதைய கட்டிடத்தில் மருத்துவமனை அமைத்தல் ஆகியன மட்டும்தாமன். கட்டிட இடித்தல் ஒன்றும் நடைப் பெறப்போவதில்லை.

ஆக இவர் தீக்குளிக்க வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கெல்லாம் பெப்பே... தான் ;))))
//

வாங்கோ நண்பரே..
நான் பத்திரிகைச் செய்தியினை கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன். காமெடியா இருக்கட்டுமே எனும் நினைப்பில் எழுதினேன். நீங்கள் அந்தச் செய்தியில் ஓர் அர்த்தம் கண்டு பிடித்து மகா காமெடி ஆக்கிட்டீங்க.

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் நிரூபன்!எல்லாமே அசத்தல்.அந்த சங்கிலிப் பிரச்சின இங்க வரைக்கும் வந்திட்டுதா?அந்தப் பூனை?!என்னையும் எல்லோ சேத்து சந்தேகப்பட்டிச்சு!நான் புறூப் பண்ண வேண்டியதாப் போச்சு,அப்ப நான் பிரான்சில தான் இருந்தனான் எண்டு!ஹி!ஹி!ஹி!!!!!!!!!
//

ஹே..ஹே.
எல்லாம் அந்த கறுப்புக் கண்ணாடி கள்ளனுக்கு தான் வெளிச்சம் ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ideamani - The Master of All

எல்லோருக்கும் இனிய வெள்ளிக் கிழமை வணக்கம் & வாழ்த்துக்களுங்கோ!///////

ஹா ஹா ஹா மச்சி, இதை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே?
//

ஆமா நீ என்ன காப்பி ரைட்டா செஞ்சு வைச்சிருக்கே. கொய்யாலே!

நிரூபன் said...
Best Blogger Tips

@Ideamani - The Master of All

சங்கிலியைத் தொலைச்ச ஆக்கள், ஒரு வெள்ளைக்கார வக்கீலைக் கூட்டிக்கொண்டு வந்தவை! இம்முறை வக்கீல் வண்டு முருகன் மிஸ்ஸிங்!:-)))))

கோர்ட்ஸ்ல என்ன தீர்ப்பு சொல்லிச்சினம் எண்டு, இண்டைக்கு எழுதுவம் எண்டு பார்த்தன்! ஆனா, வெளியூர் போனதால எழுத முடியேலை! :-)))))))))))
//

யோவ்...இன்னுமா இந்த கேஸ் தீரலை! நல்லதே நடந்தா சரி!

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்

தென்றலை தீண்டியதில்லை..
தீயை தாண்டியிருக்கிறேன்..
என்று வசனம் எழுதியவர்,
தீக்குளிப்பேன் என வசனம் பேசியிருக்கிறார்.

இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ்நாட்டை வசனம் பேசியே கொல்லப்போறாரு...
//

அட்ரா...அட்ரா...
இப்படியே காலதி காலமா இவர் வசனம் பேசி கொல்லுவதாகவே முடிவு பண்ணிட்டார் போல இருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்

தென்றலை தீண்டியதில்லை..
தீயை தாண்டியிருக்கிறேன்..
என்று வசனம் எழுதியவர்,
தீக்குளிப்பேன் என வசனம் பேசியிருக்கிறார்.

இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ்நாட்டை வசனம் பேசியே கொல்லப்போறாரு...
//

அட்ரா...அட்ரா...
இப்படியே காலதி காலமா இவர் வசனம் பேசி கொல்லுவதாகவே முடிவு பண்ணிட்டார் போல இருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

யோவ் மணி ... அந்த சங்கிலிய திருப்பிக் கொடய்யா ... எந்தப் பக்கம் திரும்பினாலும் அதே பேச்சாத் தான் இருக்கு. ஹையோ ஹையோ
//

அவன் அதை அடகு வைச்சிட்டானாம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூ....அந்தச் சங்கிலி இனி முழுசாக் கிடைக்குமெண்டு நம்பிக்கை ஆருக்காச்சும் இருக்காமோ !
//

சங்கிலியை தொலைச்சவங்க கிட்ட தான் அது சம்பந்தமா கேட்கனும்!
என் பார்வையில் சங்கிலி கிடைப்பதற்கு சான்ஸே இல்லை!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails