Tuesday, March 27, 2012

அப்பாவி என் பார்வை தப்பானதோ - மப்பாலே என் வாழ்வும் செக்கானதோ?

குணத்தை கெடுக்கும் குடிபானம்! குமரிப் பெண்ணால் வாழ்வே நாசம்!

அப்பாவியாய் இருந்தேன் - அன்றொரு நாள்
அருமை நண்பன் ஆசையாய் அழைத்தான்
தப்பாக இருக்காது மச்சான் என்றான் 
தரமான சரக்கிது அடி என்றான்
முப்பாலும் கற்காது இவ் உலகில்
மூன்றாம் பால் கற்ற நானோ
மப்பேத்தும் கள்ளதனை கண்டதுமே நெகிழ்ந்தேன்
மனதையும் பறி கொடுத்தேன் - மயக்கத்தில்
தப்பான ரூட்டில் போவேனா என்றேன்!
தரமான கள்ளு என தமிழுரைத்தேன்
அப்பாவி என் பார்வை தப்பானதோ? 
அடுத்தாத்து பெண் மீதும் ஒப்பானதோ?
மப்பாலே மனம் போன போக்கில் 
மதி கெட்டும் போய் விட்டேன்
அப்பாவாய் ஆகாத குறையாக இன்றோ
ஆருமற்ற ஜெயிலில் களி தின்றேன்!
மேக்கப் போட்டாள்! ஜாக்கெட் சைஸில் ஜன்னல் வைத்தாள்! பாக்கெட் மணியை காலி செய்தாள்! ஐயோ பரிதாபம்!

வோக்கிங் போனாள் வனஜா- தினமும்
வோட்டர் ஸ்கிப்பிங் செய்தாள் மெதுவா
ஜோக்கிங் செய்தாள் - தன் உடலும்
ஜோராய் ஆகுமென உரைத்தாள்; புதிதாய்
மேக்கப் போட்டாள் - கோதுமை மேனியில்
மெல்லிதாய் பச்சை குத்தினாள் - ரோட்டில்
லுக்கிங் விட்டாள், ஓர் பையனை
லூட்டி செய்தாள் - லவ்வினாள் - சேலையில்
ஜாக்கெட் சைஸில் ஜன்னல் வைத்தாள்
ஜாடையாய் பேசி நடிப்பால் வளைத்தாள்
பாக்கெட் மணியை காலி செய்தாள்
பாவியாய் அலையவிட்டு பறந்தே போனாள்!!
அச்சப்பட வேண்டாம்! அழகே வெட்கப்பட இதுவா நேரம்?

மச்சமுள்ள பொண்ணு எங்கேயும் பார்வையில்
மாட்டிக் கொள்ள மாட்டாளா என அலைந்தார் மயிலர்
மிச்சமுள்ள ஆசைகளை கூட்டி மீண்டும்
மீண்டும் பரிசோதிக்க மனம் நாடுதே என்றுரைத்தார் அழகர்
அச்சமில்லை என்றார் - அடுத்த வீட்டில்
ஆதரவாய் பேசலானார். ஆட்களற்ற நேரம் கன்னம் வைத்தார்
உச்சியில சனியிருக்கும் என்பதையும் அறியாது
உணர்ச்சி வசப்பட்டார் - ஊரிலுள்ளோர் இல்லா நேரம் பார்த்து
இச்சை தீர்க்க நுழைந்தார் இளையவளும்
இயன்றவரை போராடி வென்றாள் - இப்போ அவர் போலீஸில் வீழ்ந்தார்!
*******************************************************************************************************************************
வெகு விரைவில் உங்களை நாடி வரவிருக்கிறது.......


43 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

கவிதையைப் பற்றி ஒண்ணும் சொல்லத் தெரியல மச்சி. ஆனால் அடுத்த பதிவின் தலைப்பு காரசாரமா இருக்கு. வெயிட்டிங். பார்த்து ... பத்திரம்.

K said...
Best Blogger Tips

அப்பாவியாய் இருந்தேன் - அன்றொரு நாள்
அருமை நண்பன் ஆசையாய் அழைத்தான் ///////

ஐயோ அது நானில்லை....!

K said...
Best Blogger Tips

தப்பாக இருக்காது மச்சான் என்றான்
தரமான சரக்கிது அடி என்றான் .:///////////

நல்ல நண்பன் மச்சி! ஆர் அது?

K said...
Best Blogger Tips

முப்பாலும் கற்காது இவ் உலகில்
மூன்றாம் பால் கற்ற நானோ ////////

ஹி ஹி ஹி ஹி எதுவரைக்கும் கற்றாய் மச்சி?

Unknown said...
Best Blogger Tips

கானா பாட்டு உலகநாதன் ஆயிட்டீரோ...நல்லா சுதியோடதான் இருக்கு....!

Anonymous said...
Best Blogger Tips

முகாம் தொடருக்கு காத்திருக்கிறேன் சகோதரம்...

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் கவிக்கிழவர் நிரூபர்(மரியாதை!)அவர்களே!நல்லாயிருக்கீகளா?முதலில் போட்ட கந்தர்............................ அது எனக்கு எள்ளளவும் பொருந்தவேயில்லை."அந்தச்" சந்திகள் கிழக்கு மேற்குப் பார்த்தல்லவோ அமைந்திருக்கின்றன?முனியப்பர் கோவில் போன இடம் தான்!எப்படியோ,இலட்சியம்?!நிறைவேறியிருக்கும்.சந்தோஷமோ சந்தோஷமாக இருந்திருக்கும்,நன்றி!!!!இப்போ இன்று;///முப்பாலும் கற்காது இவ் உலகில்
மூன்றாம் பால் கற்ற நானோ.///முப்பால் அப்படியெண்டா என்ன?(1)தாய்ப்பால்.(2)பசும்பால் மூண்டாவது??????

Yoga.S. said...
Best Blogger Tips

"மப்பு" அப்பிடியெண்டா,ஊரில மழை வாறதுக்கு அறிகுறியா இருட்டிக்கொண்டு வரைக்கை மப்பும்,மந்தாரமுமா இருக்கெண்டு பெரிசுகள் சொல்லுங்கள்,அதுதான????

Yoga.S. said...
Best Blogger Tips

அப்பாவியாய் இருந்தேன் - அன்றொரு நாள்.///பொய் தான????

ஆத்மா said...
Best Blogger Tips

பரவாயில்ல..........

ஹேமா said...
Best Blogger Tips

பனையின் பால் குடித்தாலும் அழகு தமிழ்ப்பால்.சுவைத்தேன் மயங்கினேன்.தலையில தேசிக்காய் தேய்ச்சு தண்ணி ஊத்தி எழுப்பிவிடுங்கோ வீட்டை போகவேணும் !

சுதா SJ said...
Best Blogger Tips

ஹாய் நிரு.. :)
எப்படி இருக்கீங்க :)

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்
நலமா?

கவிதை.. கவிதை..
வார்த்தைகள் விளையாடுது போங்க....

விச்சு said...
Best Blogger Tips

நல்ல ஜாலியான ரசிக்கும்படியான கவிதை.

Riyas said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் நலமா..

நீங்க ரொம்பவே அப்பாவிதான் போலிருக்கே.. கவிதை அட்டகாசம்

//மேக்கப் போட்டாள்! ஜாக்கெட் சைஸில் ஜன்னல் வைத்தாள்! பாக்கெட் மணியை காலி செய்தாள்! ஐயோ பரிதாபம்!// ஐய்யய்யோ பரிதாபம்!!!

Yoga.S. said...
Best Blogger Tips

ஹேமா said... பனையின் பால் குடித்தாலும் அழகு தமிழ்ப்பால்.சுவைத்தேன் மயங்கினேன்.தலையில தேசிக்காய் தேய்ச்சு தண்ணி ஊத்தி எழுப்பிவிடுங்கோ வீட்டை போகவேணும் !////நீங்களுமா????ஹய்யோ,ஹய்யோ!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

கவிதையைப் பற்றி ஒண்ணும் சொல்லத் தெரியல மச்சி. ஆனால் அடுத்த பதிவின் தலைப்பு காரசாரமா இருக்கு. வெயிட்டிங். பார்த்து ... பத்திரம்.
//

தோள் கொடுப்பான் தோழன் என்று நண்பர் நீங்க இருக்கும் போது என்ன பயம் மச்சி!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Ideamani - The Master of All
அப்பாவியாய் இருந்தேன் - அன்றொரு நாள்
அருமை நண்பன் ஆசையாய் அழைத்தான் ///////

ஐயோ அது நானில்லை....!//

இதை யாராச்சும் நம்பனுமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@Ideamani - The Master of All
தப்பாக இருக்காது மச்சான் என்றான்
தரமான சரக்கிது அடி என்றான் .:///////////

நல்ல நண்பன் மச்சி! ஆர் அது?//

வேறு யார், நீ தான் அது மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ideamani - The Master of All
முப்பாலும் கற்காது இவ் உலகில்
மூன்றாம் பால் கற்ற நானோ ////////

ஹி ஹி ஹி ஹி எதுவரைக்கும் கற்றாய் மச்சி? //

அடப் பாவி..

இது அறத்துப் பால்,
பொருட்பால். காமத்துப் பா..

நான் இங்கே சொல்லவந்தது திருக்குறள் பத்தி.

நிரூபன் said...
Best Blogger Tips

@வீடு K.S.சுரேஸ்குமார்

கானா பாட்டு உலகநாதன் ஆயிட்டீரோ...நல்லா சுதியோடதான் இருக்கு....!
//

எல்லாம் டைம்மிங் நண்பா..அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

முகாம் தொடருக்கு காத்திருக்கிறேன் சகோதரம்...
//

நன்றி நண்பரே.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
வணக்கம் கவிக்கிழவர் நிரூபர்(மரியாதை!)அவர்களே!நல்லாயிருக்கீகளா?முதலில் போட்ட கந்தர்............................ அது எனக்கு எள்ளளவும் பொருந்தவேயில்லை."அந்தச்" சந்திகள் கிழக்கு மேற்குப் பார்த்தல்லவோ அமைந்திருக்கின்றன?முனியப்பர் கோவில் போன இடம் தான்!எப்படியோ,இலட்சியம்?!நிறைவேறியிருக்கும்.சந்தோஷமோ சந்தோஷமாக இருந்திருக்கும்,நன்றி!!!!இப்போ இன்று;///முப்பாலும் கற்காது இவ் உலகில்
மூன்றாம் பால் கற்ற நானோ.///முப்பால் அப்படியெண்டா என்ன?(1)தாய்ப்பால்.(2)பசும்பால் மூண்டாவது??????.//

வணக்கம் ஐயா, என்னது எனக்கும் வயசு போட்டா. அப்ப இனிமே உங்களை யோகா மச்சான் என்று கூப்பிட்டா போச்சு;-))
\
ஹே...ஹே...எனக்குச் சந்தோசம் எல்லாம் இல்லை! சும்மா கலாய்க்கும் நோக்கில் தான் எழுதினேன் ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

"மப்பு" அப்பிடியெண்டா,ஊரில மழை வாறதுக்கு அறிகுறியா இருட்டிக்கொண்டு வரைக்கை மப்பும்,மந்தாரமுமா இருக்கெண்டு பெரிசுகள் சொல்லுங்கள்,அதுதான????
//

அதுவும் ஒருவகை மப்புத் தான்..

ஆனால் கவிதையில நான் சொல்லியிருப்பது..ஓவர் மப்பு!

தண்ணி அடிப்பதால் வரும் மப்பு

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

அப்பாவியாய் இருந்தேன் - அன்றொரு நாள்.///பொய் தான????
../

அது தான் ஒருத்தருமே நம்பவில்லை என்று தெரிஞ்சு போச்சே ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிட்டுக்குருவி

பரவாயில்ல..........
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

பனையின் பால் குடித்தாலும் அழகு தமிழ்ப்பால்.சுவைத்தேன் மயங்கினேன்.தலையில தேசிக்காய் தேய்ச்சு தண்ணி ஊத்தி எழுப்பிவிடுங்கோ வீட்டை போகவேணும் !
//

நீங்கள் தான் என்னை முழுசா நம்பின ஆளு! நன்றி அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
ஹாய் நிரு.. :)
எப்படி இருக்கீங்க :)//

அடப் பாவி! கவிதையை படிச்ச பின்னருமா இப்படி கேட்கிறீங்க.
அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்
வணக்கம் நிரூபன்
நலமா?

கவிதை.. கவிதை..
வார்த்தைகள் விளையாடுது போங்க..../

ஏதோ...உங்க அன்பால நல்லா இருக்கேன்!
நன்றி அண்ணர்.

நிரூபன் said...
Best Blogger Tips

@விச்சு

நல்ல ஜாலியான ரசிக்கும்படியான கவிதை.
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas
வணக்கம் நிரூபன் நலமா..

நீங்க ரொம்பவே அப்பாவிதான் போலிருக்கே.. கவிதை அட்டகாசம்

//மேக்கப் போட்டாள்! ஜாக்கெட் சைஸில் ஜன்னல் வைத்தாள்! பாக்கெட் மணியை காலி செய்தாள்! ஐயோ பரிதாபம்!// ஐய்யய்யோ பரிதாபம்!!!//

உங்க அன்பால ஏதோ இருக்கிறேன் நண்பா...

எனக்குப் பரிதாபம் என்றால்,. உங்களுக்கும் பரிதாபமா இருக்கே! அவ்வ்வ்வ்வ்வ்வ்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

குடி குடியைக் கெடுக்கும்.அருமையாச் சொல்லிட்டீங்க!

Unknown said...
Best Blogger Tips

கவிதை நல்லாத்தான் இருக்கு!
ஆனா என் பழைய நிரூபனைக் காண ஏங்குகிறேன்!
எப்போ வருவார்?

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

ஒண்ணும் புரியல.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

///மப்பாலே மனம் போன போக்கில்
மதி கெட்டும் போய் விட்டேன்////

மச்சி களவும் கற்று மற கள்ளும் அடித்து மற....

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃComment moderation has been enabled. All comments must be approved by the blog author.ஃஃஃஃஃ

எப்ப தொடக்கம் மச்சி இது...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நம்ம பொண்ணுங்க உடம்பை மூடினாலும் கவர்ச்ச காட்டக் கூடிய ஒரே வழி ஜாக்கெட் தானே அதையும் விடமாட்டியா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...

முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்

Anonymous said...
Best Blogger Tips

ப்ரெசென்ட் நிருஸ் ....

Anonymous said...
Best Blogger Tips

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ...

அடப்பாவியாய் இருந்தேன் என்டல்லா ஆரம்பித்து இருக்கோணும் ...

Anonymous said...
Best Blogger Tips

அப்பாவியாய் இருந்தேன்////////

அடப்பாவியாய் இருதேன் எண்டல்லோ கவிதை ஆரம்பித்து இருக்கோணும் ....

அவ்வவ் ...கவிதையில் பிழை உள்ளது ...யார் அங்கே ,,,,நிரூபன் அவர்களுக்கு நூஒரு சவுக்கடி கொடுங்கூ

Anonymous said...
Best Blogger Tips

avvvvvvvvvvvvvv ..பெரியவங்க விடயமா நீங்க எழுதிப் போட்டிங்கோ ,,,என்ன சொல்லுவது எண்டே எனத் தெரியலை நான் ரொம்ப சின்னப் பொன்னாக்கும் ...அதனால் அமைதியா இருந்து விடுவினம் ....

Anonymous said...
Best Blogger Tips

கவிதை உண்மையாவே சுப்பரா இக்குது ...

Anonymous said...
Best Blogger Tips

Your comment has been saved and will be visible after blog owner approval.//////////////////////

என்னது ஒவ்நேர் அப்பளம் சுட்டத்தான் கமென்ட் போடுவாகளா ,,,,

வி திஸ் கோய வெறி

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails