Friday, March 30, 2012

Trespass - திடுக்! திடுக்! திரிலிங் பட விமர்சனம்!

கோலிவுட்/ஹாலிவூட்/ஹோலிவூட்/கொலிவூட் பட விமர்சனம்!
படம் பற்றிய அவுட் லைன் ஸ்டோரி:
ஊருக்குச் சற்றுத் தொலைவாக, அழகிய கடற்கரைக்கு அருகே ஓர் பென்னாம் பெரிய பங்களா. அங்கே, அழகும் இளமையும் குன்றாத மனைவி, அன்புக்கு இணையாக ஓர் மகள். பணத்திற்கு குறைவின்றி டைமன் வியாபாரம் என மிகவும் சந்தோசமாக இருக்கும் ஓர் பணக்கார வியாபாரியின் வீட்டினை கொள்ளையிட நீண்ட நாட்களாக கொள்ளையர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். பல்வேறு வழிகளிலும் உளவு நடவடிக்கைகள் மேற்கொண்டு, இறுதியில் போலீஸ் போன்று வேஷமிட்டு, வீட்டினுள் செல்ல காத்திருக்கிறார்கள். டைமண்ட் வியாபாரியின் ஆசை மகளோ தன் நண்பர் குழாத்துடன் அவுட்டிங் போகப் பெற்றோரிடம் பர்மிஷன் கேட்கின்றார்.
பெற்றோர் பர்மிஷன் கொடுக்காது, வீட்டினுள் உட்கார்ந்து நல்ல பழக்கம் பழகு எனத் தம் பிள்ளையிடம் சொல்லி வைக்கின்றார்கள். பெற்றோரின் கண்ணில் மண்ணைத் தூவிட்டு, அன்பு மகளோ மதிலேறி குதிச்சு நைட் டைம்மா பார்த்து அவுட்டிங் போயிடுறா. கொள்ளையர்களும் போலீஸ் போன்று வேஷமிட்டு மாஸ்டர் ப்ளான் போட்டு, டைமண்ட் வியாபாரியின் வீட்டினுள் நுழைஞ்சிடுறாங்க. டைமண்ட் வியாபாரியின் களஞ்சிய அறையினைத் திறந்து, அதனுள் இருக்கும் பணத்தினையும், வைரங்களையும் தம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே கொள்ளையர்களின் கோரிக்கையாகும். கொள்ளையர்கள் டைமண்ட் வியாபாரியைப் பணிய வைக்கும் நோக்கில் பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றுகின்றார்கள்.

கொள்ளையர்கள் வியாபாரியின் மகளைத் தேடும் நேரத்தில் மகள் வெளியே சென்றிருப்பதனை பெற்றோர் உணர்ந்து மனம் மகிழ்கிறார்கள். ஆனால் மகளும் வீட்டிற்கு வந்து விட கொள்ளையர்களின் மிரட்டல் இன்னும் அதிகமாகின்றது. டைமண்ட் வியாபாரி பணிந்தாரா? தன் வசம் உள்ள சொத்துக்களை கொள்ளையர்களிடம் வழங்கினாரா இல்லை குடும்பத்துடன் பலியானாரா என்பதனைத் திடுக் திடுக் திரிலிங் படமாகச் சொல்லி நிற்கிறது Trespass. 

இனி படம் பற்றிய சில தகவல்கள்:
2011ம் ஆண்டு செப்டெம்பர் மாதம், மில்லேனியம் பிலிம்ஸின் விநியோகத்தில், Nu Image Films And Winkler Films தயாரிப்பிப் திரைக்கு வந்திருக்கிறது இந்த ஹாலிவூட் படம். கணவனும், மனைவியுமாக நடிகர் Nicolas Cage  மற்றும், நடிகை Nicole Kidman ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன், Cam Giandet, Liana Liberato, Ben Mandelsohn உள்ளிட்ட பல ஹாலிவூட் நட்சத்திரங்கள் இப் படத்தில் நடித்திருக்கிறார்கள். விறு விறுப்பிற்குப் பஞ்சமின்றி David Buckely அவர்கள் தன் இசையினால் இப் படத்திற்கு இனிமை சேர்த்திருக்கிறார். சண்டைக் காட்சிகள், த்ரிலிங் காட்சிகள், என அனைத்தும் கலந்து விறு விறுப்பினை கொடுக்கும் வண்ணம் இப் படத்தினைத் தயாரித்திருக்கிறார் இயக்குனர், Joel Schumacher அவர்கள்.
சில சுவாரஸ்யங்கள்:
படத்தில் சுவாரஸ்யம் நிறைந்த காட்சிக்கு உதாரணமாக...கொள்ளையர்களில் ஒருவன் கோடீஸ்வரனின் வீட்டினை உளவு பார்க்கும் நோக்கில் செக்கியூரிட்டியாக வேலைக்கு வருகின்றான். காலப் போக்கில் தன் கட்டழகால் கோடீஸ்வரனின் மனைவியினை கவர்ந்திழுக்க முயற்சிக்கிறான். சந்தர்ப்ப சூழ் நிலையால் திருட வந்தவனுக்கு, தித்திக்கும் அழகுடன் இருக்கும் நடிகை Nicole Kidman மீது மோகம் ஏற்படுகின்றது. இந்த மோகத்தினைக் கொள்ளையிட வந்த போது, உன் மீது உள்ள காதலால் உன்னை மட்டும் உன் குடும்பத்தில் விட்டு வைக்கிறேன் எனவும், தனக்கும், உனக்கும் உள்ள கள்ள காதலை உன் கோடீஸ்வர கணவனிடம் சொல்லிடுவேன் எனவும் போலியாக மிரட்டுகிறான் கொள்ளையர்களில் ஒருவன். அப்புறம் என்ன நடந்திருக்கும் என ஆவலா? உடனே....ட்ரெயிலரைப் பாருங்க. ட்ரெயிலர் பிடிச்சிருந்தா படத்தினையும் பாருங்க.

Trespass: கொள்ளையிட வந்து கொல்லப்பட்ட திருடர்களின் கதை!


உங்கள் நாற்று வலைப் பதிவில் வெகு விரைவில் ஒரு புத்தம் புதிய தொடர்:

19 Comments:

bandhu said...
Best Blogger Tips

//நிஜத்தில் கணவனும், மனைவியுமான திரு.Nicolas Cage மற்றும், திருமதி Nicole Kidman ஆகியவர்//
இவர்கள் நிஜத்தில் கணவன் மனைவி இல்லை
படம் பார்க்கலாம் போலத்தான் தோன்றுகிறது, உங்கள் விமர்சனம் படித்தால். நன்றி..

நிரூபன் said...
Best Blogger Tips

@bandhu

நிஜத்தில் கணவனும், மனைவியுமான திரு.Nicolas Cage மற்றும், திருமதி Nicole Kidman ஆகியவர்//
இவர்கள் நிஜத்தில் கணவன் மனைவி இல்லை
படம் பார்க்கலாம் போலத்தான் தோன்றுகிறது, உங்கள் விமர்சனம் படித்தால். நன்றி..
//

ஏன் பிரிந்து விட்டார்களா? இருங்கள் தேடிப் பார்த்து திருத்துகிறேன் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@bandhu
உண்மை தான் நண்பா..
நிஜத்தில் அவர்காள் கணவன் மனைவி இல்லை.

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம் நிரூபன்!ம்..ம்..ம்... இங்கிலீஸ்(அமெரிக்கன்)படம்?தமிழ்ப்படம் பார்க்கவே..............................சரி விடுங்கள்.நீங்கள் பார்த்து விட்டீர்கள் தானே?(என்ன லொள்ளையா இது?படம் பாக்காமலா விமர்சிக்கிறேன்?ஹி!ஹி!ஹி!!!)

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...

@bandhu
உண்மை தான் நண்பா..
நிஜத்தில் அவர்கள் கணவன் மனைவி இல்லை.///இந்த வருஷம் வெயில் இல்லாமல் போய்விடப் போகிறது,ஹ!ஹ!ஹா!!!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
இரவு வணக்கம் நிரூபன்!ம்..ம்..ம்... இங்கிலீஸ்(அமெரிக்கன்)படம்?தமிழ்ப்படம் பார்க்கவே..............................சரி விடுங்கள்.நீங்கள் பார்த்து விட்டீர்கள் தானே?(என்ன லொள்ளையா இது?படம் பாக்காமலா விமர்சிக்கிறேன்?ஹி!ஹி!ஹி!!!) //

இரவு வணக்கம் ஐயா,
இந்தப் பெப்ரவரியில் பார்த்தது. விமர்சனம் எழுத டைம் கிடைக்கலை
அதுன் தான் லேட் ஆகிடுச்சு

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.S.FR
இரவு வணக்கம் நிரூபன்!ம்..ம்..ம்... இங்கிலீஸ்(அமெரிக்கன்)படம்?தமிழ்ப்படம் பார்க்கவே..............................சரி விடுங்கள்.நீங்கள் பார்த்து விட்டீர்கள் தானே?(என்ன லொள்ளையா இது?படம் பாக்காமலா விமர்சிக்கிறேன்?ஹி!ஹி!ஹி!!!) //

இரவு வணக்கம் ஐயா,
இந்தப் பெப்ரவரியில் பார்த்தது. விமர்சனம் எழுத டைம் கிடைக்கலை
அதுன் தான் லேட் ஆகிடுச்சு.////சரி,சரி பரவாயில்லை விடுங்கள்!இதற்கெல்லாம் போய் மன்னிப்பு,அது,இது,காலில் விழுவது என்று!நன்றாகவா இருக்கிறது?

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,
நலமா?
விமர்சனம் நல்லா இருக்குது.

Anonymous said...
Best Blogger Tips

வணக்கமுங்க நிருஸ் ....

படிக்கவே எங்களுக்கெல்லாம் நேரம் போதலை எண்டு கவலை படுவினம் ...இதுல எங்குட்டு படம் பார்க்க ....

உங்கட விமர்சனமே படம் பார்த்தே மாறி இருந்தது ...நன்றி

Anonymous said...
Best Blogger Tips

யோகா மாமா காலில் விழுந்தது போதும் எந்திரியுங்கள் ....

Anonymous said...
Best Blogger Tips

என்ர மணி அண்ணனை ஒன்டரைனாலக் காணுமே ...அவரை என்ன பண்ணீங்க...

Anonymous said...
Best Blogger Tips

ஓனர் அப்பளம் சுட்டாத்தான் கமென்ட் அப்ப்ருவல் ஆகுமேண்டு இருந்ததை மாற்றி விட்டினம் ...good

பெரிய மனுஷி சொன்னக் கேட்டுகொனும் ...

ச ச ச ச்சா இதுக்குக் கூட கால்லில் விழுவேல்லா என்ன ...என்திரிங்கோ என்திரிங்கோ ...பப்ளிக் பப்ளிக் ....

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

டவுன்லோட் செய்து விட்டு ஒரு நாள் பார்க்கத் தொடங்கினேன். ஒரு 15 நிமிடம் பார்த்தும் ஒட்டவில்லை. படம் சுமார் தான் போல. ஆனாலும் மீதியையும் பார்த்து முடிக்கிறேன்.

ஆத்மா said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம் படம் பார்க்க ஆசையாக இருக்கிறது நேரம்தான் போதவில்லை

ஆத்மா said...
Best Blogger Tips

இந்த இங்கிலிசி படம் எண்டாலே நமக்கு ஒரு மோகம்தான் எதனால் வருகுதோ தெரியல்ல......

அம்பலத்தார் said...
Best Blogger Tips

விமர்சனத்தை படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ம்.... படம் பார்க்கத்தான் நேரமில்லை

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

டவுன்லோட் செய்து விட்டு ஒரு நாள் பார்க்கத் தொடங்கினேன். ஒரு 15 நிமிடம் பார்த்தும் ஒட்டவில்லை. படம் சுமார் தான் போல. ஆனாலும் மீதியையும் பார்த்து முடிக்கிறேன்.
//

வணக்கம் மச்சி,
எனக்கென்னமோ...சுமாரான படமாக இருந்திச்சு.
அதான் எழுதினேன்.

ஆனால்...இப்படிக் கவிழ்த்துப் புட்டியே மச்சி!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும் அன்பு கலந்த நன்றி

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@ஹாலிவுட்ரசிகன்

டவுன்லோட் செய்து விட்டு ஒரு நாள் பார்க்கத் தொடங்கினேன். ஒரு 15 நிமிடம் பார்த்தும் ஒட்டவில்லை. படம் சுமார் தான் போல. ஆனாலும் மீதியையும் பார்த்து முடிக்கிறேன்.
//

வணக்கம் மச்சி,
எனக்கென்னமோ...சுமாரான படமாக இருந்திச்சு.
அதான் எழுதினேன்.

ஆனால்...இப்படிக் கவிழ்த்துப் புட்டியே மச்சி!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////அப்படிஎன்றால்????????இன்று கூட ப்ரி பாக்ஸ் இல் ஒரு படம்!3!!!மொக்கையோ மொக்கை!புரியவேயில்லை என்று பிள்ளைகள்.சி.பி யின் கமென்ட் போல் முதல் பாதி ஒ.கே.மீதி?ஹய்யோ,ஹய்யோ!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails