Monday, March 12, 2012

அதிமுக - திமுக இரண்டையும் அடியோடு விரட்டுவது எப்படி?

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தாய்த் தமிழக உறவுகளே! 
ஈழத்தின் தெருக் கோடியில் கிடக்கும் இவனுக்கு உங்கள் தாய்த் தமிழகம் மீது ஏன் இந்த அக்கறை! "இந்தப் பதிவை அழித்து விட்டு பொத்திட்டுப் போடா நிரூபன்" என்று நீங்கள் என் மீது கோபப்படலாம்! இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பற்றி நீங்கள் யாவரும் அறியாததல்ல! இலங்கையில் "ஆச்சி மாற்றம் வேண்டும்" என்று எங்கள் கொள்ளுப் பாட்டியைப் பார்த்து நாங்கள் கேட்கும் போது அருகே ஒரு சீருடை தரித்த கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந்த இராணுவ வீரன் நின்றால், "ஆட்சி மாற்றம் வேண்டும்" என நாங்கள் கூறியதாக நினைத்து எங்கள் கதையினையே முடித்து விடுவார்கள். இது பற்றி நீங்கள் அறியாதல்ல. உங்கள் ஆத்திரங்கள், கட்சி விசுவாசங்கள், பொங்கியெழும் உணர்ச்சியலைகள் என அனைத்தையும் கொஞ்சம் தூரத் தள்ளி வைத்து விட்டு இனிப் பதிவிற்குள் நுழைவோமா? 
ஐயா ஆட்சியில் இருக்கும் போது செய்யும் மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பார்! அம்மா ஆட்சியில் இருக்கும் போது பண்ணும் காமெடிகளை ஐயா பார்த்து சிரிப்பார்!
எங்களின் தமிழ் மன்னர்கள், மூதாதையர்கள் தங்களின் வளமான நாட்டில் ஆட்சி செலுத்திய காலத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவிய பல அண்டை நாடுகளுக்குத் தம் திறை சேரியிலிருந்து பணத்தினைப் பெற்று உதவி செய்திருக்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் விஜய நகர நாயக்கர்கள் காலத்தில் இலங்கை, கம்போடியா, சீனா, தாய்லாந்து, எனப் பல நாடுகளுக்குத் தம்மாலான உதவிகளை எம் மன்னர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆட்சியில் உள்ளோரின் வசமிருக்கும் எம் தமிழகத்தின் திறைசேரியினைப் பரிசோதித்துப் பார்த்தால் பல கோடிக் கணக்கான பணம் மாயமாக இருக்கும். மக்களிடம் ஓட்டுப் பெற்று மக்களிடம் வரி வாங்கி மக்களின் அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்படுகின்ற பணம் அரசியல்வாதிகளின் இரகசியச் செயற் நடவடிக்கைகளால் சூறையாடப்பட்டு அவர் தம் சுய நலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

இன்றும் நாளையும் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் வரும் திமுக கட்சியும், அதிமுக கட்சியும் பண பலத்தால் தம் கரங்களை வலுப்படுத்தி மக்கள் பணத்தினைச் சூறையாடி வெளித் தெரியாத பல இரகசிய ஊழல்கள் செய்து தம் பிள்ளைகளையும், தம் வம்சத்தினையும் மாத்திரம் வாழ வைக்கின்ற அதி உன்னதமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இது நாம் அனைவரும் அறியாத ஒன்றல்ல! அப்படியானால் இந்த அரசியல்வாதிகளை நம்பி ஓட்டளித்த மக்களின் நிலமை என்பது சந்தேகமேயில்லை கேள்விக் குறிதான்! ஓட்டளித்த மக்கள் அதே நாற்றம் வீசும் தெருக்களிலும், தூசுகள் வந்து மூக்கை அடைத்து தொற்று நோயினை உருவாக்கும் சுகந்தமற்ற காற்றினையும், போதிய வசதிகள் இல்லாத போக்குவரத்தினையும், ஏன் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய வளங்களையும் தான் தம் தேவைகளுக்காக தமிழகத்தில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

எங்கு பார்த்தாலும், சிபாரிசுகளும், ஊழல்களும் எம் பின்னே மலிந்திருந்து எம் சந்ததியின் வாழ்வினை சூறையாடிச் செல்கின்றது. கலைஞரையும், ஜெயாவையும் நாம் நம்பி எத்தனை நாளைக்குத் தான் அடிமைகளாக வாழ முடியும்? ஒரு எளிய உதாரணம் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பதாக உலக வங்கியிடமிருந்து ஐம்பது மில்லியன் ரூபாக்களை நிதியாகப் பெற்ற இந்தியாவின் குஜராத் மாநிலம் இன்று உலக வங்கிக்கே இந்தத் தொகையினைப் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு அளவுள்ள பெரிய தொகையினை உதவி செய்யுமளவிற்கு வளர்ச்சியடைந்து சிறப்பான நிலையில் இருக்கின்றது. ஆனால் எம் தாய்த் தமிழகத்தின் நிலமை என்ன? கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட உலகின் மிகத் தலை சிறந்த அபிவிருத்தியடைந்த - பொருளாதாரத்தில் செழிப்புற்று விளங்கும் மாநிலங்கள் வரிசையில் குஜராத் மாநிலமும் முதல் பத்து இடங்களைப் பெற்ற உலகளாவிய மாநிலங்கள் பட்டியலினுள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் பதவியேற்று குறுகிய காலப் பகுதியானாலும் எம் தமிழகத்தில் ஏதாவது முன்னேற்றம் நடந்ததா? கலைஞரின் பெயர் எங்கெங்கே மணக்கின்றதோ, அங்கெல்லாம் தேடித் தேடி தன் கைங்கரியத்தினைக் காட்டிக் கௌரவத்தினை நிலை நாட்ட முயற்சி செய்திருக்கிறார். இதனால் என்ன பயன்? எம் முன்னே வாழ்ந்த தமிழ் மன்னர்கள் செய்த பணிகளுக்கும், இன்று ஆட்சியில் உள்ளோர்கள் செய்கின்ற பணிகளுக்கும் எவ்வளவு வேறுபாடு? ஏன் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது, தமிழகத்தில் இடம் பெறும் அபிவிருத்தி அல்லது முன்னேற்றப் பாதையினை நோக்கிய செயற்பாடுகள் மந்த கதியில் தானே இடம் பெறுகின்றன. அரசியலுக்கு வருகின்ற அனைவருமே நாளடைவில் மிகப் பெரும் செல்வந்தர்களாக அனைத்துத் துறைகளையும் விலை கொடுத்து வாங்குகின்றளவிற்கு வளர்ந்து விடுகின்றார்கள். ஏன் எமது தமிழ் சினிமா கூட இன்று உதய நிதி மாறன், அழகிரி எனப் பல அரசியல் ஜாம்பவான்களின் கையில் அகப்பட்டுத் தானே தன் நகர்வினை மேற் கொள்கின்றது.

இவர்கள் அனைவரும் பிறக்கும் போது செல்வத்துடனா பிறந்தார்கள்? இல்லையே! இன்னோர் விடயம் ஆசியாவின் முதல் பத்துப் பணக்காரர்கள் வரிசையில் கலைஞர், ஜெயா, உதயநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் பெயர்களும் வந்து கொள்கின்றன. அவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களின் நிலமை? அதே தெருப் புழுதியினைச் சுவாசித்து செத்தொழிவது தானே? காலங் காலமாக இப்படியான அரசியல்வாதிகள் ஆட்சி பீடமேறி தம் வாழ்வை மட்டும் செழிப்படையச் செய்து விட்டு மக்கள் பணமெங்கே என வினா எழுப்பும் போது திறைசேரியில் பல திருட்டுக் கணக்குகளை உருவாக்கி அனைத்தையும் பேலன்ஸ் பண்ணி விட்டுச் செல்கின்றார்கள். ஆனால் மக்களாகிய எமது நிலமை? சரி எம்மைப் பற்றித் தான் கவலை கொள்வதனை விடுவோம்? எம் சந்ததியின் நிலமை? எம் பிள்ளைகள் எம் வம்சங்கள் என அனைவருமே இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்ந்து செத்தோழிவது தானா எம் அனைவரினதும் நோக்கம்?

"அம்மா ஜெயலலிதா மடிக் கணினி கொடுக்கிறா, இதனால் பிள்ளைகளின் கம்பியூட்டர் அறிவு வளர்கிறது” என்று யாராவது சொன்னால் அதனை விட முட்டாள்த்தனமான சிந்தனை உலகத்தில் கிடையாது. நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? எம் சந்ததியின் வளமான எதிர்காலம் பற்றி? எம் நாட்டின் எம் தமிழக மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திருக்கிறோமா? கட்சிக்கு விசுவாசமாக இருப்பதும், கருத்துச் சுதந்திரம் இருந்தும் தமிழகத்தில் மௌனமாக இருந்து மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிட்டு விட்டு தூங்குவதையும் அன்றாடம் வேலைக்குப் போய் உழைத்து இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்வதனையும் தவிர நாம் எம் வாழ்வில் ஏதாவது பயன்மிக்க சிந்தனைகளை நினைத்திருப்போமா? இல்லையே! ஏன் எம்மால் முடியாது?
இன்று தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் நமக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு என்ன தெரியுமா? கருத்துச் சுதந்திரம் - பேச்சுச் சுதந்திரம்! ஒருவன் வன்முறையினைத் தூண்டும் வகையில் பேசினால் அவனைக் கைது செய்து காவலில் அடைக்க இந்தியாவில் சட்டம் உண்டு. (இதற்கு உதாரணமாக கடந்த வருடம் சீமான் அவர்களுக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை குறிப்பிடலாம்) ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் தமது தலை விதியை அல்லது தம்மை ஆள்பவரைப் பற்றிய தெரிவிற்குப் பரிபூரண சுந்தந்திரம் உண்டல்லவா? 

இன்று பல ஆயிரம் பதிவர்கள் இருக்கின்றோம். எம் வலைப் பூக்கள் ஊடாக தமிழகத்தின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும்? எம்மையெல்லாம் ஆளுகின்ற அரசியல்வாதி எத்தகைய நோக்கில் செயற்பட வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாதா? எம் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாதா?வெறுமனே மொக்கை போடுவதற்கும் கும்மி அடிப்பதற்கும் தான் வலைப் பூ எனும் ஊடக ஆயுதம் இருக்கிறது எனும் கருத்தினைத் தூரத் தள்ளி எறிந்து விட்டு எம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையினைத் தூண்டும் வகையில் எம் வலைப் பூக்களை மாற்ற முடியாதா?

எம் தமிழக மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் நன்கு படித்த கல்வியறிவில் உயர்ந்த அதே நேரம் தொலை நோக்குப் பார்வையுடைய ஊழல் செய்யாத அரசியல்வாதி உருவாக வேண்டும்! இன்றைய காலத்தில் ஆட்சியில் இருப்போரைப் பற்றி நாம் எழுதி அவர்களை மாற்ற வேண்டும் என நினைத்தால் ஒரு வேளை எம் வீடுகளுக்கு ஆட்டோ வரும் என உங்கள் மனங்களில் அச்சம் நிகழலாம்! ஆனால் நாளைய எம் சந்ததிகளின் மனங்களில் ஒரு நல் வாழ்வினையும், தாய் மண்ணின் மீதான வளர்ச்சியினையும் நோக்கிய சிந்தனைகள் உருவாகும் வண்ணம் எம்மால் வலைப் பூக்கள்,சஞ்சிகைகள், ஊடகங்கள் ஊடாகப் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? எத்தனை காலம் தான் ஊழல் நிறைந்த பயனற்ற ஆட்சியின் கீழ் வாழ்ந்து தமிழக மக்களின் எதிர்காலத்தைத் தொலைப்பது? நாம் நினைத்தால் எம்மை ஆள்வதற்குப் புதிய ஒருவரைத் தெரிவு செய்யலாம் அல்லவா! 

சினிமாவில் நடித்தோரும், சிறப்புரையாற்றி காலத்தினைக் கவிதை பாடி - கடிதம் எழுதி வீணடிப்போரையும் அரசியல்வாதியாக்கி மகிழ்வதனை விடுத்து எமக்கான மாற்றுத் தேவை வேண்டும் என இளைஞர்கள் அனைவரும் தமிழகம் தழுவிய ரீதியில் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? நாங்கள் தான் எம் வளமான நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவில்லை என்றாலும், எம் சந்திகளாவது தம் எதிர்காலத்தில் நலமோடு நல்வாழ்வு வாழ, தமிழகத்தில் அபிவிருத்திப் புரட்சியின் கீழ் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேற உதவி செய்ய முடியாதா? சிந்தியுங்கள்! உங்கள் சிறகுகளை இன்றே விரியுங்கள்! 

இன்றைய விவாத மேடையினூடாக ஒரு விவகாரமான விடயத்தினைக் கையிலெடுத்திருக்கிறேன். அது தான் கலைஞரையும் ஜெயலலிதாவையும், அவர்களின் வாரிசுகளையும் காலாதி காலமாக ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதை விடுத்து, எம்மால் முடிந்த வரை நாட்டின் நலனுக்காய் பாடுபடும் நன்கு படித்த - தொலை நோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியினை உருவாக்குவதற்குப் பாடுபட முடியாதா? இன்று இல்லையென்றாலும், எம் வருங்காலச் சந்ததிகள் வாழ்வானது சிறப்படையும் வண்ணம் இந்தக் கொடூர சூறையாடும் ஆட்சியினை அகற்றி நல்லாட்சி மலரும் வண்ணம் நாம் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் உங்கள் நாற்று வலையின் விவாத மேடை மீண்டும் உங்களுக்காய் திறந்திருக்கிறது! உங்கள் காத்திரமான கருத்துக்களை முன் வைப்பதோடு, எம் தமிழகத்தில் கருத்துப் புரட்சி செய்யும் வண்ணம் எம் வலைப் பூக்களையும் நாம் பயன்படுத்தலாம் அல்லவா?
எண்ணம் - எழுத்து: செல்வராஜா நிரூபன்! 
தயவு செய்து இப் பதிவினை அனுமதியின்றி யாரும் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தளங்களில் வெளியிட வேண்டாம்! 
தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான படங்களைத் தன் கை வண்ணத்தால் கணினி வரை கலை மூலமாக அழகுற வடிவமைத்தவர் சகோதரன் "நிகழ்வுகள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "கந்தசாமி" அவர்கள்! அவருக்கு இந் நேரத்தில் என் உளமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.


காலத்தின் தேவை கருதியும், மக்களிடத்தே இப் பதிவு சென்று சேர வேண்டும் எனும் நோக்கிலும், ஏலவே எழுதிய இப் பதிவினை மீள் பதிவாக வழங்குகிறேன். அனைவரும் மன்னியுங்கள். புதிய பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை. 

29 Comments:

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

தன்னலமற்ற தலைவன் இளைஞர் சமூகத்தில்....
உருவாகும் வரை நாங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!பார்க்கலாம் எத்தனை சொந்தங்கள் உங்கள் கருத்துக்கு/விவாத மேடைக்கு பதில் சொல்கிறார்களென்று!

Anonymous said...
Best Blogger Tips

மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்..

ஹ ஹா ஹாஆஆஆஆஆஅ எனக்கு மொய்யே வேணாம்

SURYAJEEVA said...
Best Blogger Tips

எவனாவது ஒருவன் வந்து விடியலை கொண்டு வருவான் என்று காத்திருப்பதில் நமக்கு நிகர் நாமே... இது வரை வரலாற்று பக்கங்களில் நடந்துள்ள தவறுகளை அசைப் போட்டு, அதை சீர் படுத்தி ஒரு கொள்கையை முன்னெடுத்து வருவதில் எவருக்கும் திராணி இல்லை... சுய லாபம் கருதி தான் இந்த உலகத்தின் பெரும்பான்மை உருண்டு கொண்டு இருக்கிறது... நான் ஒருவனை சுரண்டுவத்தின் மூலம் என் குடும்பமும் என் சந்ததியினரும் நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை சுரண்டலை ஊக்குவிக்கிறது... ஆனால் என்றாவது ஒரு நாள் தன சந்ததியினர் பிறர் சுரண்டலால் பாதிக்கப் படுவார்கள் என்பது கவனத்தில் இருப்பதில்லை... விளைவு சமூக ஏற்றத் தாழ்வுகள்...

when the people becomes globally selfish rather than personally selfish then the day we are dreaming would arrive...

விடியல் வரும் என்று நம்பிக் கொண்டு கிழக்கை நோக்கி காத்திருப்பதை விட்டு விட்டு கிழக்கு நோக்கி நாம் நடைப் போடுவதிலும் பிறரை வழி நடத்தி செல்வதிலும் தான் இருக்கிறது... அதற்க்கு முதலில் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வர வேண்டும்... இணையம் மட்டுமே உலகம் என்று இராமல் இணையம் வழி ஒவ்வொரு கிராம மக்களின் மனதையும் ஒவ்வொருவரும் தொட்டு முன்னேறுவதில் தான் விடியலை நோக்கிய நம் பாதை இருக்கிறது

விவாதத்தின் முடிவில் மீண்டும் கலந்து கொள்கிறேன்... அது வரை விடை பெற்றுக் கொள்கிறேன் தோழர்

Anonymous said...
Best Blogger Tips

முதலில் நான் உங்களுக்கு மிகப் பெரிய நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன் ...ஈழத்தில் இருந்து தமிழ் நாட்டுக்காய் ஒரு நல்லப் பதிவு கொடுத்தமைக்கு அதுவும் எங்கட நாட்டுக்கு தேவையான பதிவு கொடுத்திருக்கிங்கோ ..

K said...
Best Blogger Tips

காலத்தின் தேவை கருதியும், மக்களிடத்தே இப் பதிவு சென்று சேர வேண்டும் எனும் நோக்கிலும், ஏலவே எழுதிய இப் பதிவினை மீள் பதிவாக வழங்குகிறேன். அனைவரும் மன்னியுங்கள். புதிய பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை./////////

மச்சி, உன்னோட ஜீ மெயிலுக்கு 1 கிலோ நேரம் அனுப்பியிருக்கிறேன்! எடுத்து யூஸ் பண்ணு!

K said...
Best Blogger Tips

இந்தப் பதிவு பற்றி ஏற்கனவே நான் கமெண்டு போட்டுவிட்டேன்! புதிதாக என்னத்தைப் போடுவது?

K said...
Best Blogger Tips

இந்தப் பதிவு பற்றி ஏற்கனவே நான் கமெண்டு போட்டுவிட்டேன்! புதிதாக என்னத்தைப் போடுவது?

K said...
Best Blogger Tips

@கலை
முதலில் நான் உங்களுக்கு மிகப் பெரிய நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன் ...ஈழத்தில் இருந்து தமிழ் நாட்டுக்காய் ஒரு நல்லப் பதிவு கொடுத்தமைக்கு அதுவும் எங்கட நாட்டுக்கு தேவையான பதிவு கொடுத்திருக்கிங்கோ ..///////

தங்கச்சி, இஞ்சையா நிக்கிறீங்க? அது சரி உங்க குரு ஜீ க்கு என்னாச்சு? சிலமனைக் காணேல???

Anonymous said...
Best Blogger Tips

நீங்கள் சொல்லுவது மிகச் சரியானது தான் ....
அவ்விருவரை தவிர ஆருமே வரமுடியாது எண்டு தான் நினைத்து இருந்தோம் ...உண்மையை சொல்ல வேண்டுமெண்டால் இந்த நிலை நீடித்தால் எங்கு சென்று முடியும் எண்டே தெரியாது ஆனால் எதிர்காலம் மண்ணாயி போகப் போகிறது எண்டு மட்டும் தெரியும்
ரெண்டு பெரும் அப்புடித்தான் எண்டால் முன்றவதாய் படையெடுத்து வந்த சினிமாக் காரரும் அவர்களின் அரசியலைத்தான் தாரகமாய் பின்பற்றுகிறார் கொண்டுள்ளர்ப் போலும் ...

Anonymous said...
Best Blogger Tips

தங்கச்சி, இஞ்சையா நிக்கிறீங்க? அது சரி உங்க குரு ஜீ க்கு என்னாச்சு? சிலமனைக் காணேல???////////

குருஜிக்கு தலையிடி எண்டு நினைக்கிறேன் அண்ணா

Anonymous said...
Best Blogger Tips

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
இந்தப் பதிவு பற்றி ஏற்கனவே நான் கமெண்டு போட்டுவிட்டேன்! புதிதாக என்னத்தைப் போடுவது?///////////எனக்குத் தெரியும் அண்ணா ...அவர் மொய் செய்ய மாட்டேன் எண்டு உறச்சதால் தான் நீங்கோல் கமெண்டு போடல எண்டு

K said...
Best Blogger Tips

தங்கச்சி, இஞ்சையா நிக்கிறீங்க? அது சரி உங்க குரு ஜீ க்கு என்னாச்சு? சிலமனைக் காணேல???////////

குருஜிக்கு தலையிடி எண்டு நினைக்கிறேன் அண்ணா ::::::

:-(

Anonymous said...
Best Blogger Tips

நீங்கோல் செயலும் விடயம் பெரியதே ..மாற்றம் கண்டிப்பாய் தேவை தான் ..முதலில் எம் மக்கள் மாற வேணும் ..நோட்டுக்கு விலை போகும் ஓட்டுக்கள் மாறனும் ..குடிக்காக கடமை தவறாமல் ஓட்டுப் போடும் குடி மகன் திருந்த வேண்டும் ...இண்டு எத்தனை படித்த இளைன்கர்கள் இளைகிங்கள் வெளியூரில் இருந்து ஓட்டுப் போடச் செல்வார்கள் ?எங்கட ஒரு ஒட்டு மட்டும் யாரையும் திரத்தம் செய்யது எண்டு தான் என் நண்பர் ,நண்பிகளின் பதில் .......எம் படித்த மக்களுக்கு எங்கட சி தி எஸ் யை வருடந்தோறும் உயர்த்துவதிலே கவனம் அதிகம் ..நடுத்ததர ,கீழ மக்களுக்கு எலேச்டின் வந்தால் சந்தோசம் ...ஒரு ஓட்டுக்கு1000ருப்பை வீதம் வாங்கலாம் எண்டு ...ஆரு வந்தாலும் ஒன்னும் செய்யாப் போவதில்லை என நினைத்து ....நீங்கள் சொல்லும் மாற்றம் வரவேண்டியது ....நீங்கோல் சொல்லும் அந்த நன்கு படித்த - தொலை நோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியினை உருவாக்குவதற்குப் பாடுபட யார் வருவர் ...நல்லவராய் வந்தினும் அவரைகளும் மாற வைப்பதே அரசியல் ...ஆனால் இப்போ இருக்கும் எங்கட ஊரில் அரசியல் வாதிகள் ஆருமே பொது மக்களுக்கு நல்லது செய்யனும் எண்டு நினைப்பவர்கள் இல்லை ........

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
தன்னலமற்ற தலைவன் இளைஞர் சமூகத்தில்....
உருவாகும் வரை நாங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.//

அண்ணா, இந்தக் கருத்தினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏன் நாம் காத்திருக்க வேண்டும்?
எம்மால் நினைத்தால் முடியாததா?
ஈழத்தில் சிங்களனின் நிழலின் கீழ் எம்மால் ஒரு இம்மியளவும் அசைய முடியாது. ஆனால் ஜனநாயகம் நிறைந்த தமிழகத்தில் அப்படி இல்லையே அண்ணா.

அந்த தலைவன் நாளை உங்கள் பிள்ளையாக கூட இருக்கலாம் அல்லவா?
முயன்றால் முடியாதது எதுவும் இல்லைத் தானே!!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் நிரூபன்!பார்க்கலாம் எத்தனை சொந்தங்கள் உங்கள் கருத்துக்கு/விவாத மேடைக்கு பதில் சொல்கிறார்களென்று!
//

வணக்கம் ஐயா,
பலருக்கு பதில் சொல்ல ஆசை, ஆனாலும் வங்குரோத்து அரசியல், ஊடகங்கள் மீதான அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக மௌனித்து விட்டார்கள். பதில் வரும் என காத்திருப்போம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கலை
மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்..

ஹ ஹா ஹாஆஆஆஆஆஅ எனக்கு மொய்யே வேணாம்//

வாங்கோ கலை.
முதன் முதலாக கருத்துடன் வந்திருக்கிறீங்க. வருக வருக என்று வரவேற்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva
‘வனாவது ஒருவன் வந்து விடியலை கொண்டு வருவான் என்று காத்திருப்பதில் நமக்கு நிகர் நாமே... இது வரை வரலாற்று பக்கங்களில் நடந்துள்ள தவறுகளை அசைப் போட்டு, அதை சீர் படுத்தி ஒரு கொள்கையை முன்னெடுத்து வருவதில் எவருக்கும் திராணி இல்லை... சுய லாபம் கருதி தான் இந்த உலகத்தின் பெரும்பான்மை உருண்டு கொண்டு இருக்கிறது... நான் ஒருவனை சுரண்டுவத்தின் மூலம் என் குடும்பமும் என் சந்ததியினரும் நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை சுரண்டலை ஊக்குவிக்கிறது... ஆனால் என்றாவது ஒரு நாள் தன சந்ததியினர் பிறர் சுரண்டலால் பாதிக்கப் படுவார்கள் என்பது கவனத்தில் இருப்பதில்லை... விளைவு சமூக ஏற்றத் தாழ்வுகள்...
//

சூப்பர் கருத்தினை கொடுத்திருக்கிறீங்க தோழர். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. விடியல் வரும் என்று காத்திருப்பதை விடுத்து, விடியலுக்கு நாம் என்ன செய்தோம்? நம்மால் என்ன செய்ய முடியும் என முயற்சி செய்வதே மேலான செயலாகும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை அல்லவா?

தங்களின் இனிய கருத்திற்கு நன்றி தோழா.

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva
விடியல் வரும் என்று நம்பிக் கொண்டு கிழக்கை நோக்கி காத்திருப்பதை விட்டு விட்டு கிழக்கு நோக்கி நாம் நடைப் போடுவதிலும் பிறரை வழி நடத்தி செல்வதிலும் தான் இருக்கிறது... அதற்க்கு முதலில் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வர வேண்டும்... இணையம் மட்டுமே உலகம் என்று இராமல் இணையம் வழி ஒவ்வொரு கிராம மக்களின் மனதையும் ஒவ்வொருவரும் தொட்டு முன்னேறுவதில் தான் விடியலை நோக்கிய நம் பாதை இருக்கிறது

விவாதத்தின் முடிவில் மீண்டும் கலந்து கொள்கிறேன்... அது வரை விடை பெற்றுக் கொள்கிறேன் //

சூப்பர் கருத்தினை கொடுத்திருக்கிறீங்க. நாளைய எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்று சொல்லிச் சொல்லி தலையில் நரை விழுந்த முதியவர்கள் நாட்டினை குட்டிச் சுவராக்குவதில் தம் காலத்தை கழிக்கிறார்கள். நாம் முயன்றால் நாளை எம் பிள்ளை கூட நாட்டினை முன்னேற்றும் தூணாக மாறும் என்பதில் ஐயமில்லை. ஈழத்தில் நாம் அடிமைகளாக உருமாறி விட்டோம். ஆனால் தாய்த் தேசத்தில் வீரியமுள்ள தமிழனாக அல்லவா நாம் இருக்கின்றோம். முயன்றால் முடியாதது இல்லை எனும் கருத்தினை முன்னிறுத்தி தொடர்ந்தும் சில புரட்சிகரமான பதிவுகளை எழுதலாம் என முயற்சிக்கிறேன்.

உங்களின் உறுதியான கருத்துக்களுக்கு நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கலை
முதலில் நான் உங்களுக்கு மிகப் பெரிய நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன் ...ஈழத்தில் இருந்து தமிழ் நாட்டுக்காய் ஒரு நல்லப் பதிவு கொடுத்தமைக்கு அதுவும் எங்கட நாட்டுக்கு தேவையான பதிவு கொடுத்திருக்கிங்கோ .//

ஹே..ஹே..
நானும் உங்கள் உடன் பிறப்பு அல்லவா?
நமக்குள் எதற்கு நன்றி எனும் ஒற்றை வார்த்தை. நன்றி எனும் வார்த்தை சொல்லி எம்மை நாமே பிரித்துப் பார்க்க வேணாமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW

காலத்தின் தேவை கருதியும், மக்களிடத்தே இப் பதிவு சென்று சேர வேண்டும் எனும் நோக்கிலும், ஏலவே எழுதிய இப் பதிவினை மீள் பதிவாக வழங்குகிறேன். அனைவரும் மன்னியுங்கள். புதிய பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை./////////

மச்சி, உன்னோட ஜீ மெயிலுக்கு 1 கிலோ நேரம் அனுப்பியிருக்கிறேன்! எடுத்து யூஸ் பண்ணு!
//

மச்சி Time Expire ஆகிட்டு என்று சொல்லுது மெயில்.
நீயே யூஸ் பண்ணு மச்சி. டைம் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி டா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW

இந்தப் பதிவு பற்றி ஏற்கனவே நான் கமெண்டு போட்டுவிட்டேன்! புதிதாக என்னத்தைப் போடுவது?
//

புதிதாக ஒரு கமெண்டை போடைய்யா..

நிரூபன் said...
Best Blogger Tips

@கலை

நீங்கள் சொல்லுவது மிகச் சரியானது தான் ....
அவ்விருவரை தவிர ஆருமே வரமுடியாது எண்டு தான் நினைத்து இருந்தோம் ...உண்மையை சொல்ல வேண்டுமெண்டால் இந்த நிலை நீடித்தால் எங்கு சென்று முடியும் எண்டே தெரியாது ஆனால் எதிர்காலம் மண்ணாயி போகப் போகிறது எண்டு மட்டும் தெரியும்
ரெண்டு பெரும் அப்புடித்தான் எண்டால் முன்றவதாய் படையெடுத்து வந்த சினிமாக் காரரும் அவர்களின் அரசியலைத்தான் தாரகமாய் பின்பற்றுகிறார் கொண்டுள்ளர்ப் போலும் ...
//

சகோதரி, நமக்கு வேண்டியது நன்கு படித்த புத்திஜீவிகள் தானே அன்றி, சினிமாக்காரர் அல்ல.
என்றைக்கு சினிமாவும், அரசியலும் வெவ்வேறாக பிரிகின்றதோ அன்று தான் நமக்கான விடியல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@கலை
ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
இந்தப் பதிவு பற்றி ஏற்கனவே நான் கமெண்டு போட்டுவிட்டேன்! புதிதாக என்னத்தைப் போடுவது?///////////எனக்குத் தெரியும் அண்ணா ...அவர் மொய் செய்ய மாட்டேன் எண்டு உறச்சதால் தான் நீங்கோல் கமெண்டு போடல எண்டு//

இப்படி ஒரு உற்சாகமான கருத்தினைச் சொன்ன உங்க வாய்க்கு ஐஞ்சு பூந்தி லட்டு வாங்கி தாரேன். நன்றிங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கலை
வேணும் ..நோட்டுக்கு விலை போகும் ஓட்டுக்கள் மாறனும் ..குடிக்காக கடமை தவறாமல் ஓட்டுப் போடும் குடி மகன் திருந்த வேண்டும் ...இண்டு எத்தனை படித்த இளைன்கர்கள் இளைகிங்கள் வெளியூரில் இருந்து ஓட்டுப் போடச் செல்வார்கள் ?எங்கட ஒரு ஒட்டு மட்டும் யாரையும் திரத்தம் செய்யது எண்டு தான் என் நண்பர் ,நண்பிகளின் பதில் .......எம் படித்த மக்களுக்கு எங்கட சி தி எஸ் யை வருடந்தோறும் உயர்த்துவதிலே கவனம் அதிகம் ..நடுத்ததர ,கீழ மக்களுக்கு எலேச்டின் வந்தால் சந்தோசம் ...ஒரு ஓட்டுக்கு1000ருப்பை வீதம் வாங்கலாம் எண்டு ...ஆரு வந்தாலும் ஒன்னும் செய்யாப் போவதில்லை என//

இப்படியான நிலமையினை அடியோடு அழிக்கலாம். அல்லது ஒழிக்கலாம்.,

ஒரேயொரு வழி உண்டு சகோதரி. பள்ளிகள் தோறும் ஒவ்வோர் ஆசிரியரும் மாணவர்களுக்கு அரசியல் பற்றியும், கள்ள ஓட்டினால் கிடைக்கும் விளைவு பற்றியும், எமது எதிர்காலம் பற்றியும் விழிப்புணர்வு செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் நிச்சயம் அந்த விழிப்புணர்வுச் சேதி மாணவர்கள் ஊடாக பெற்றோரைச் சென்று சேரும். இதன் மூலம் சிறு துளி மாற்றம் உருவாகும், இச் சிறு துளி மாற்றம் பெரு வெள்ளமாக, பெரும் புரட்சி அலையாக ஓர் நாள் உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை!

பூனைக்கு மணி கட்டுவது யார்?

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்ற ஒரு தலைவன் வரவேண்டும்...
அவன் தன்னலமில்லாத பொதுநலவாதி என மக்களால் அடையாளம் காணப்படவேண்டும்...
அதற்க்கு ஊடகங்கள் துணை நிற்க வேண்டும்.
அவனைப்போலவே அவனது படைத்தளபதிகளும் சுத்த சுயம்பிரகாசமாக இருக்க வேண்டும்.
இப்படி ஒரு இயக்கம் இருக்கிறது எனத்தெரிந்தாலே தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவை வாரி வழங்கி விடுவார்கள்.
அது வரை எரிகிற கொள்ளியில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் விதி மட்டுமே!

Anonymous said...
Best Blogger Tips

மீள்பதிவாயினும்...எப்போதும் பொருந்தும் சகோதரம்...

Jayakumar said...
Best Blogger Tips

Very good post.
The time has come.

Nagarajan KRISHNASAMY MUTHUSAMY said...
Best Blogger Tips

தமிழர்களின் """""நகர்வுகள்""""" தெளிவாக வேண்டும் .

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails