Tuesday, November 22, 2011

ஆணாத்திக்கத்தால் அடக்கப்படும் பெண்கள்! பெண்ணாதிக்கத்தால் கண்ணீர் விடும் ஆண்கள்!

எமது சமூகத்தில் குடும்பத் தலைவர் என்கின்ற பாரிய பொறுப்பினைக் காலாதி காலமாக ஆண்கள் தான் சுமந்து வருகின்றார்கள். ஒரு குடும்பமானது சிறப்புற தன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமாய்த் தம் பங்களிப்பினை வழங்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் பழமை வாதிகளால் விதைக்கப்பட்ட இல்லத்தரசி என்பவள் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் எனும் மூட நம்பிக்கையும், கணவனை மாத்திரம் நம்பித் தங்கி வாழ்பவளாக மனைவி வாழ வேண்டும் என்கின்ற பழமைக் கோட்பாடுகளும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மெது மெதுவாக சிதைந்து போகின்றன.
இன்றைய தினம் உங்கள் நாற்று வலைப் பதிவு ஆணாதிக்கத்தினையும், பெண்ணாதிக்கத்தினையும் எம் சமூகத்திலிருந்து அகற்ற என்ன வழி எனும் கருத்துக்களை உள்ளடக்கிய விவாத மேடைப் பதிவினைத் தாங்கி உங்களை நாடி வருகின்றது. இல்லத்தரசி ஓர் ஆண் மகனில் தங்கி வாழ்வதனை நாம் ஒரு நல்ல விடயமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நான் எழுதுவதற்கான காரணம், எல்லா ஊர்களிலும் அல்ல. இன்றைய நவீன யுகத்தில் பல இடங்களில் பெண் வேலைக்குப் போய்ச் சுயமாக உழைக்கின்ற நிலமையினை அடைந்திருந்தாலும்,ஆணின் அன்பிற்கு கட்டுப்பட்டு ஆணிற்கு கீழ் பெண் தங்கி வாழ்கின்ற நிலமை தான் எம் ஊர்களில் அதிகமாக இடம் பெறுகின்றது.

இல்லத்தரசியானவள் ஆணில் தங்கி வாழ்வதனால் அவள் அடிமை போன்று இருக்கலாம் எனும் கருத்தினை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதிகளவான குடும்பங்களில் ஆணின் ஊதியத்தை நம்பிப் பெண் வாழ்வதால் ஆண் சொல்லும் எல்லா விடயங்களுக்கும் தலையாட்டிப் பொம்மை போலப் பெண்கள் வாழ வேண்டும் எனும் இழிவான கொள்கையினை எம் சமூகம் கடைப்பிடிக்கின்றது. எப்போதாவது ஒரு நாள் பெண் கூறும் கருத்துக்களில், அர்த்தங்களும், சரியான விடயங்களும் பொதிந்திருக்கின்றன என்று இந் நிலையில் உள்ள ஆண்கள் சிந்தித்து விட்டுக் கொடுத்து நடந்திருப்பார்களா என்றால் இதற்கான பதில் இல்லை என்பதாகும்.

ஆண் விரும்பிய போது தன் உடலை அர்ப்பணிப்பவளாகவும், ஆண் நினைக்கின்ற போது அவனது விந்தணுவின் மூலம் உருவாகும் குழந்தையினைப் பத்து மாதங்கள் சுமந்து அதன் பின்னரும் ஆண் வேலைக்குச் சென்றவுடன் தன் இடுப்பிலும், தோளிலும் தன் சிசுவைச் சுமந்து செல்கின்ற நிலையினைத் தான் எம் தமிழர்கள் காலங் காலமாக ஒரு பெண்ணுக்கு வழங்குகின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல. நிற்க, இவ் இடத்தில் ஒரு கேள்வி! பத்து மாதம் பெண்கள் வயிற்றினுள் சுமந்த குழந்தையினை ஆண்கள் நினைத்தால் இடுப்பில் சுமக்க முடியாதா? எத்தனை ஆண்கள் இதற்குத் தயாராக இருக்கிறார்கள்? 
தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம். ஆனால் வெளிநாடுகளில் பெண்கள் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தையினை அக் குழந்தை தவழ்ந்து நடை பயின்று நடக்கத் தொடங்கும் வரை ஆண்கள் தானே சுமக்கின்றார்கள்.அடடா, ஆண்களின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த நிலையா? ஆணுக்கும் தன் மகவு (குழந்தை) மீது பாசம் இல்லையா? இத்தகைய வழமையான நிலையினை மாற்றி ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று ஆண்கள் தம் பிள்ளையினை ஓய்வாக இருக்கும் நேரங்களில் பரமாரிக்க முடியாதா? 

பெண்கள் வயிற்றில் சுமந்த குழந்தையினை ஆண்கள் இடுப்பில் சுமந்தோ அல்லது வண்டிலில் தள்ளிச் செல்வதற்கு ஏற்றவாறு எம் சமூகத்தினைத் தயார்படுத்த வேண்டுமெனில் எந்த மாதிரியான திட்டங்களை முன் வைக்க முடியும்? ஆணின் அன்பிற்கு கட்டுப்பட்டு வாழ்வதால், ஆணின் சம்பளத்தில் தங்கியிருப்பதால் பெண் தான் சமையல் செய்ய வேண்டும். ஆண் வேலை முடிந்து வீடு வந்ததும் பரிமாற வேண்டும் எனும் நிலமையினை நாம் கொஞ்சம் மாற்றியமைக்க முடியாதா? ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமனாய் தமக்குப் பிடித்த உணவுகளைத் தெரிவு செய்வது முதல், சமைத்துப் பரிமாறுவது வரை மாற்றங்களை எம் சமூகத்தில் ஏற்படுத்த முடியாதா?

உணவு, சமையல், குழந்தை பெறுதல், ஆடைகளைத் தோய்த்தல்/ துவைத்தல், மற்றும் இதர வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு சம்பளம் வழங்காத அன்பினால் மாத்திரம் கட்டுண்ட இதயமாகப் பெண்கள் இருப்பதனை அல்லது எம் சமூகத்தில் பெண்கள் நடாத்தப்படுவதனை நாம் மாற்ற முடியாதா? அப்படி முடியும் எனில் அதற்கான வழிகள் என்ன? ஆண்கள் குடும்பத்தில் வீரப் புருஷர்களாக இருப்பதும் மனைவியை அன்பினால் கட்டுப்படுத்தி அன்பெனும் உணர்வை இங்கே போலி ஆடையாக அணிவித்து அவளை அடிமை போல மறைமுகமாக நடாத்தும் நிலையினைத் தானே நாம் தமிழ் சமூகத்தில் நாகரிகப் பெயர் சூட்டித் தங்கி வாழுதல் என அழைக்கின்றோம்? இந் நிலையினை மாற்ற முடியாதா?

அடுத்த விடயம் பெண்ணாதிக்கம் அல்லது ஆண்களின் உணர்வுகள் புறக்கனிக்கப்படல்: இன்று பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருப்பதால் பெண்ணாதிக்கம் எனும் மறைமுகப் பெயரினால் சுட்டப்படும் அடக்குமுறையும் ஆணாதிக்கம் போன்று சில குடும்பங்களில் திணிக்கப்படுகின்றது. பெண் சுயமாக உழைக்கும் குடும்பங்களில் பலர் முகங் கொடுக்கின்ற விரும்பத்தகாத பிரச்சினை தான் பெண்ணாதிக்கம்.இக் குடும்பங்களில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமனமாய் இருந்தாலும், பெண் சில வேளைகளில் தன் அன்பின் மூலம் அடக்கு முறையினை அல்லது ஆதிக்கம் எனும் அஸ்திரத்தினைப் பிரயோகிக்க முனைகின்றாள். இது ஆண்கள் பலருக்குப் பிடிக்காத ஒரு விடயமாகும்.

ஆணாதிக்கம் போன்று பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்களில் ஆண்கள் தம் சுய கௌரவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அடி பணிந்து வாழ்வதனையோ அடங்கிப் போவதனையோ விரும்பமாட்டார்கள். இத்தகைய நிலமை உருவாகும் போது தான் விவாகரத்து எனும் விடயம் இக் குடும்பங்களில் தன் வேலையினைக் காட்டத் தொடங்குகின்றது. ஆணும் பெண்ணும் தம் உணர்வுகளைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில்; "இவள் ஒரு ஆதிக்கவாதி! அடங்காப் பிடாரி! இவளுடன் நான் வாழ முடியாது"; என்று கூறி ஆணும் பெண்ணும் நீதி மன்றத்தினை நாடி விவாகரத்துப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள்.
இத்தகைய நிலமைகளுக்கான தீர்வாக நாம் எத்தகைய வழிகளை சமூகத்தில் உள்ளோருக்கு அறிவுரைகளாக கூற முடியும்? பெண்ணாதிக்கம், ஆணாதிக்கம்; என அன்பென்ற உணர்ச்சியினைப் போலி ஆடையாக்கி எம் சமூகத்தில் இடம் பெறும் அடக்கு முறைகளை, அடிமை நிலையினை இல்லாதொழிக்க, ஏதாவது வழிகள் இருக்கின்றனவா? அல்லது பண்டைத் தமிழ் மரபின் படி இந்த நவீன யுகத்திலும் டீவி சீரியலைப் பார்த்துக் கண்ணீர் விட்ட படி வீட்டினுள்ளே அடங்கிக் கிடந்து ஆண்களுக்குச் சேவகம் புரிந்து அடிமையாக வாழ்ந்து மடிவது தான் பெண்களின் வரமா? இந்த இழி நிலையினை மாற்ற நாம் அனைவரும் என்ன செய்யப் போகின்றோம்? 

மேற்படி வினாக்களோடு நாற்று வலைப் பதிவின் விவாத மேடை உங்களை நாடி வருகின்றது. காத்திரமான உங்கள் கருத்துக்களால் இந்த விவாத மேடையினையும் ஓர் கருத்துச் சமற் களமாக மாற்றுங்கள்! 

பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் விவாத மேடைக்கு நடுவராக அடியேன் தான் இருந்து இது வரை காலமும் கருத்துச் சமர்களிற்கான தீர்ப்புக்களை வழங்கி வந்தேன். பரீட்சார்த்தமாக கடந்த மாதம் இடம் பெற்ற பதிவர்கள் நடுவர்களாகச் சிறப்பிக்கும் விவாத மேடையில் பதிவர் காட்டான் மாம்ஸ்; மற்றும் பின்னூட்டப் புயல் யோகா ஐயா அவர்கள் நடுவர்களாக கலந்து சிறப்பித்திருந்தார்கள். 

அதனைத் தொடர்ந்து இம் முறை; "ரேவா கவிதைகள்" வலைப் பூவை எழுதி வரும் சகோதரி "ரேவா" அவர்களும், "நண்பர்கள்" வலைப் பூவை எழுதிக் கொண்டிருக்கும் சகோதரன் "கே.எஸ்.எஸ் ராஜ்" அவர்களும் இந்த விவாத மேடையின் சிறப்பு நடுவர்களாக கலந்து சிறப்பிக்கின்றார்கள். உங்களின் காத்திரமான கருத்துக்களோடு இந்த விவாத மேடை சிறப்புற அமைய நீங்களும் களமிறங்கலாம் அல்லவா!

240 Comments:

«Oldest   ‹Older   201 – 240 of 240   Newer›   Newest»
ரேவா said...
Best Blogger Tips

நிரூபன் said...

@கந்தசாமி.
புரிந்துணர்வு இல்லாத இடத்தில் குடும்ப வாழ்க்கை என்பது யாரை திருப்திப்படுத்த ..பிரிவது தானே சரி!//

பெண்ணின் நடத்தையினால் தான் பிரிய வேண்டிய நிலமை ஏற்படுகின்றதெனில் ஆண் அதனை நிவர்த்தி செய்ய ஏதும் உளவியல் வழிகளை, கவுன்சிலிங், சைக்காலஜிஸ்டினை நாடலாம் அல்லவா?

நிரூபன் இந்த கவுன்சிலிங், சைக்காலஜிஸ் இதெல்லாம் தேவையே இல்லை, மனம் விட்டு பேசினாலோ, இல்லை எதிர் தரப்பு கருத்தை பொறுமையாய் கேட்க இன்னொரு தரப்பு ரெடி ஆய் இருந்தாலே பாதி பிரச்சனைகள் இல்லை...இங்கே மனம் விட்டு பேசுவதும், தன்னோடு வாழும் ஒரு உயிரை சக உயிராய் மதிப்பதை மறந்ததின் விளைவே இது..

ரேவா said...
Best Blogger Tips

எனக்கு தெரிந்து பிரிவினைகளும், ஆதிக்கங்களும் அதிகரிப்பதன் காரணம், எங்கே தனக்கான ஒன்று தனக்காய் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் விளைவு தான் இந்த ஆதிக்கம்...உன் கருத்து என்ன சகோ :P

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன்... வெளில வாங்க... செட்டப்செல்லப்பாவாம்... அவரைப் பிடிச்சு உள்ளே வையுங்க... ஒழுங்கா ஒரு பதிவு போட முடியாமல்.... அங்கின இங்கின.. ஓடுறார்:)))..

கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க நான் போட்டுப் பேந்து வாறேன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)))
..//


இப்போ உலங்கை இந்தியாவில மழை காலமில்லே!

அவருக்கு கொஞ்சம் மூளை சுகமில்ல!
பேசாமல் இருங்க.தன் பாட்டில ஆள் போயிடுவார்.

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

@காட்டான்

செட்டப் செல்லப்பா said...
தேங்ஸ் நிரூபன், என்ட கமெண்டுகளை அழித்து விடவும், நான் ப்ராப்லம் ஆகிட்டுன்னு ஏற்கனவே கிளம்பிட்டேன், பிறகு தான் வந்தேன். இப்போ போறென், கமெண்ட்டுகளை அழிச்சிடுங்க. நமக்குள்ள பிரச்சனை வேண்டாம்.

November 22, 2011 9:36 PM
என்னால்தான் பிரச்சனைன்னா என்னுடைய கொமொன்ஸயும் அழிச்சுவுடுங்கோ.. நமக்குள்ள பிரச்சனை எதுக்கு? ஆனா பதிவ பற்றி நான் போட்ட கொமொன்ஸ நீக்காதே நிருபா.. கஷ்டப்பட்டு எழுத்து கூட்டி எழுதினது..!! ஹி ஹி //////

காட்டான் அண்ணருக்கு இன்னும் என் மீது கோபம் தீரவில்லையோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா
எவரு? உங்க பதிவுகள்ல வந்து ஒருத்தன் கொஞ்சம் காத்திரமா எதிர் கருத்து சொல்ல முடியாதுல்ல? குழுவா வந்து ஓவர் ஆக்சன் பண்றீங்களே?//

அண்ணே நீங்க காத்திரமான கருத்தோட வாங்க,
நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.

ஹே...ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா
நிரூபன்... வெளில வாங்க... செட்டப்செல்லப்பாவாம்... அவரைப் பிடிச்சு உள்ளே வையுங்க... ஒழுங்கா ஒரு பதிவு போட முடியாமல்.... அங்கின இங்கின.. ஓடுறார்:)))..////

ஆமா ஆமா இங்கேதான் எதிர்கருத்து, மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல புடிச்சு கொடுப்பாங்களே. இப்போ இதுக்கே என் ஐபி நம்பர், ரேசன் கார்ட் நம்பர், செல் நம்பர் எல்லாம் தேடிட்டு இருப்பீங்களே?//

அண்ணே இங்கே எதிர் கருத்துச் சொன்னா எல்லாம் புடிக்க மாட்டோம்.

தனிமனித தாக்குதல் பண்ணினா தான் புடிப்போம்,

நீங்க எதிர்க் கருத்துக்களை வையுங்க!
தாரளமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்க!

நோ ப்ராப்ளம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
எமது சமூகத்தில் குடும்பத் தலைவர் என்கின்ற பாரிய பொறுப்பினைக் காலாதி காலமாக ஆண்கள் தான் சுமந்து வருகின்றார்கள்.//////

சுமக்கிறார்கள் என்பதை விடவும், வலிந்து இழுத்து தங்கள் தலையில் போடுகிறார்கள் என்று //

ஆமா அதனைத் தான் நானும் கேட்கிறேன்.

பாதிப் பொறுப்பை பெண்களிடம் கொடுக்க ஏதாவது வழி இருக்கா?

ஹே....ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

எங்க மச்சி சிதையுது? இங்கு வெளீநாட்டிலும் அதனை, இடைவிடாமல் கடைபிடிக்கிறார்கள்! சொன்னால் வெட்ககேடு! சொல்லாட்டி மானக் கேடு!!
//


ஹே...ஹே....

மச்சி சில இடங்களில் படித்த கணவன்மார் விட்டுக் கொடுத்து சம உரிமை பேணுகிறார்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

பெண்குரல் ஒலிக்குது நிரூபன் வடிவிலே :)
வாழ்க வளமுடன் அண்ணே!!
தாய்க்குலங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்!!
சீக்கிரமா அண்ணனுக்கு ஒரு நல்ல பொண்ணா ரெடி பண்ணுங்கப்பா
(விதானையார் பொண்ணுங்க மட்டும் வேணாம்)
//

எனக்காக அனுதாபப்படவும் ஒரு ஜீவன் இருக்கே.
ரொம்ப நன்றி மது,

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

அது சரி ஏன் இந்த “ பெரிசுகள்” இப்படி இருக்கினம்? இளைய சமூகத்தை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்களா??
//


நானும் இதனைத் தான் கேட்கிறேன்.

இந்தப் பெரிசுகளை, மூடக் கோட்பாடுகளை, பழமைவாதிகளை மாற்ற வேண்டும்!
அதற்கான வழிகள் ஏதாசும் இருந்தா சொல்லுங்க.
என்கிட்டேயே நான் கேட்ட கேள்வியை கேட்கிறியே?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஆனால் இங்கு அப்படி இல்லையே! இங்கும் பல பிற்போக்கு வாதிகள் இருக்கிறார்கள்! என்ன செய்ய?
//

சகோதரம் அந்தப் பிற்போக்கு வாதிகளை மாற்றத் தானே வழி கேட்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரெஞ்சுக்காரன்
மச்சி, செல்லப்பாவின் கமெண்டுகளுக்கு எதிர்கருத்து சொல்ல உனக்கு தில் இல்லையா? அல்லது முதுகெலும்பு இல்லையா?///

ஹே...ஹே...

இல்ல மச்சி, இங்கே செல்லப்பா என்ன எதிர்க் கருத்தா சொன்னார்?

விவாத மேடையில் விதண்டா வாதம் தானே செய்தார்.
அதான் வேலை முடிந்து வந்ததும் கொஞ்சம் சூடாகிட்டேன்.

பதில் சொல்லியிருக்கேனே.

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

உஸ்ஸ்ஸ்... அப்பாஆஆஆ... நான் இப்போ உள்ளே வரமாட்டேன்:))... ஆராவது ம்ம் என்றாலே போதும்.. உஸ் என்னமுன் உச்சிக் கொப்புக்கு ஓடிடுவேன், இருப்பினும் மனம் கேட்கேல்லை:))...

ராஜ் க்கு மங்கோ யூஸ், ரேவாக்கு ஸ்ரோபெரி யூஸ்ஸ்ஸ்.... நிரூபனுக்கு கே எவ் சி கேட்குதோ? அவ்வ்வ்வ்வ்:))).. நீங்கதான் சைவமாமே:)).... காட்டான் அண்ணந்தான் சொன்னவர்.. அதனால இந்தாங்கோ மரக்கறி சமோசா....


உண்மைதான் எங்கட நாட்டில இன்னும் ஒரு 35,40 வீதம் ஆண்கள் திருந்தியிருக்கினம் ஆனா மிகுதிப்பேர் இன்னும் திருந்த இடமிருக்கு... கிச்சினுக்குள் போவதையே தவறென நினைக்கிறார்கள்... ஆனா அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு...

அவர்களுக்கு மனமிருந்தாலும் எம் சமுதாயம் இடங்கொடுக்காது. அயலவர்களே ஏதாவது சொல்லி பகிடி பண்ணித் தடுத்திடுவார்கள்...

வெளிநாட்டில் எல்லாமே பூட்டிய வீட்டினுள் என்பதால் வெளியில் ஆருக்கும் எதுவும் தெரிய நியாயமில்லை... அதனால்தானோ என்னவோ சுகந்திரம் அதிகம்.

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

நீங்க முக்கியமா யூரோப்பில பல பிரச்சனை என திரும்பத் திரும்ப சொல்றீங்க நிரூபன்....

எனக்கு கேட்க அதிர்ச்சியாக இருக்கு.. ஆனா எமக்கும் ஒரு சில உறவுகள் அங்கும் இருக்கிறார்கள், அவர்கள் வேலைக்கும் போய் ஓக்கேயாகத்தான் இருக்கினம்.

ஆராவது சொன்னால்தான் அறியமுடியும்.

கணவன் தன்னை நன்றாக வைத்திருப்பார் என நம்பித்தானே எத்தனையோ கனவுகளோடு கழுத்தை நீட்டுகிறார்கள் பெண்கள்... அதை ஏமாற்றினால் அவர்களுக்கு தண்டனை நிட்சயம் கிடைக்கும்.... ஆண்களுக்கு மட்டுமில்லை, பெண்களுக்கும்தான்..

ஊரில் ஒரு பெண், என் வயதுதான், அவருக்கு ஒரு டொக்டரை திருமணம் பேசி... எல்லாமே முடிந்து, 1ஸ் நைட் அன்று அந்த டொக்டர் சொன்னாராம், நீ இனி சட்டை, பஞ்சாபி எதுவும் போடப்படாது, வீட்டில் கால் முட்ட மக்ஸி, வெளியில் சாறிதான் உடுக்க வேண்டும் என...

அவரும் யாழ்ப்பாண டொக்டர்தான்... திருமணம் முடித்தபோது அப்பெண்ணுக்கு 22/23 வயது, நான் அங்கிருக்கும்போதே ஜீன்ஸ்சோடு போவதைப் பார்த்து, அப்பெண்ணின் தாய் கவலைப்பட்டார், பாரம்மா.. என் பெண் திருமணத்தின் பின்பு போட என எத்தனை புதுச்சட்டை, சுரிதார் வாங்கினார் எல்லாமே வீணாகிவிட்டது. என.

ஆனா என்ன செய்வது நன்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள்... ஆனால் அப்பிள்ளைக்கு கவலைதானே... இவர்களை எல்லாம் என்ன செய்வது....

ஒருவேளை திருமணத்துக்கு முன் சொல்லியிருந்தால், பெண் மறுத்திருக்கக்கூடும், அவ வீட்டில் ஒரு பெண்பிள்ளைதான்...

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ராஜ் க்கு மங்கோ யூஸ், ரேவாக்கு ஸ்ரோபெரி யூஸ்ஸ்ஸ்.... நிரூபனுக்கு கே எவ் சி கேட்குதோ? அவ்வ்வ்வ்வ்:))).. நீங்கதான் சைவமாமே:)).... காட்டான் அண்ணந்தான் சொன்னவர்.. அதனால இந்தாங்கோ மரக்கறி சமோசா....
..//

அக்கோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

யார் சொன்னது நான் சைவம் என்று?
ஹே...ஹே...

கே எப் சீ இல்லேன்னாலும் ஒரு மக்காஸ் என்றாலும் வாங்கித் தரலாம் இல்லையா?
ஐ மீன் Mcdonald

நிரூபன் said...
Best Blogger Tips

@ athira அக்கா,

ஏலவே ஒரு பதிவிலும் எழுதினே.
ஐரோப்பா என்று நான் சொல்லும்,
பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி, சுவிஸ், ஆகிய நாடுகளில் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் பெண்களை வீட்டிற்குள் வைத்திருப்பதனையும், தாம் வேலை செய்து அதிகமாக உழைத்துப் பெண்களைப் பராமரிப்பதிலும் தான் செலவு செய்கின்றார்கள்.

இவர்கள் தான் கலாச்சாரத்தினைக் கட்டிக் காக்கின்றேன் என்று பெண்ணுக்கு விரும்பிய உடையினை அணிய அனுமதி கொடுக்காது சாறியினையும், சுடிதாரினையும் அணிந்து அழகு பார்க்க நினைப்போர்.

ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@ அதிரா அக்கா,
ஏலவே வெளியே சொன்னால் வெட்க கேடு அப்படீன்னு ஒரு பதிவு எழுதியிருந்தேனே..

அது போலத் தான், பல இடங்களில் பெண்களை மெசினாகத் தான் நோக்குகின்றார்கள் எம்மவர்கள்.

இந்த நிலை மாற வேண்டும் என்பது தான் எல்லோரினதும் அவா.

இதில் கொடுமையான விடயம் புலம் பெயர்ந்தும் நாகரிகமடையாது எம்மவர்கள் சிலர் வாழ்வது தான்.

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

இவர்கள் தான் கலாச்சாரத்தினைக் கட்டிக் காக்கின்றேன் என்று பெண்ணுக்கு விரும்பிய உடையினை அணிய அனுமதி கொடுக்காது சாறியினையும், சுடிதாரினையும் அணிந்து அழகு பார்க்க நினைப்போர்.

ஹி...ஹி...////

நிரூபன் சில திருந்தாத ஜென்மங்களை, நாம் எப்படிக் கத்தியும் திருத்திட முடியாது....

“பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் புளியமரத்தில் ஏறுஇ என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்”.. கண்ணதாசன்..

எம் பெண்கள் அடங்கி ஒடுங்கி நடக்கவே குழந்தையிலிருந்து பண்படுத்தி வளர்கிறார்கள், அதனால் கழுத்தை நீட்டி விட்டோம் என பணிந்து காலத்தை ஓட்டுகிறார்கள்... எங்காவது ஒன்றிரண்டு பேர்தான் தைரியமாக வெளியில் வந்துவிடுகிறார்கள்.

அப்படியான ஆண்களை இனித் திருத்த முடியாது... அதெல்லாம் போன ஜென்மத்தில் நாம் சேத்த சொத்து என எண்ணி அனுபவித்தே ஆக வேண்டும்...

ஆனால் இப்போதைய உங்களைப்போன்ற இளைஞர்களால் நிட்சயம் வருங்காலத்தில் இந் நிலைமையை ஒளிக்க முடியும்தானே... நீங்கள் நினைத்தால் உங்கள் மனைவியை நல்ல முறையில் வைத்திருக்கலாமில்லையா... அப்போ கடந்ததை நினைத்து என்ன செய்வது.... வருங்காலத்திலாவது நம் தலைமுறை திருந்துமாயின் மகிழ்ச்சியே...

Anonymous said...
Best Blogger Tips

////நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@கந்தசாமி.
ஆண் தன் குடும்பத்துக்காக வேலைக்கு செல்லும் போது, வீட்டில் இருக்கும் அவன் மனைவி சமைப்பதிலும் ,களைப்புடன் வரும் கணவனுக்கு பரிமாறுவதிலும் தப்பேதும் தெரியவில்லை எனக்கு...//

பெரியப்பா ஆண் வீட்டில் மனைவியை ஏன் இருத்தி வைத்து அழகு பார்க்கனும்?
மனைவியையும் வேலைக்கு அனுப்பலாம் அல்லவா?
பார்த்தீங்களா இது கூட தப்பில்லை என்று சொல்லுறீங்க.

அப்படீன்னா இப்படி மனைவி கையால உட்கார்ந்த இடத்தில இருந்து உணவு வாங்கி உண்ட கணவன்மாரில் எத்தனை பேர் மனைவி நோயுற்றுப் படுத்திருக்கும் போது பார்த்திருக்கிறாங்க?
ஹே...ஹே...//// வேலைக்கு செல்வது தன் குடும்பத்தின் நிகழ்கால ,எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யத்தானே ..இவை கணவன் வேலைக்கு செல்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது எண்டால பிறகு எதற்கு மனைவி வேலைக்கு செல்லணும்/வேலைக்கு அனுப்பனும் - தான் சோம்பேறியாக வீட்டில் இருந்து கொண்டு மனைவியை வேலைக்கு அனுப்பும் கணவன்மார்கள் மத்தியில் ???

Anonymous said...
Best Blogger Tips

@நிரூபன்//// மனிசிய வேலைக்கு அனுப்பினால் "வெளிநாட்டுக்கு மனிசிய கூப்பிட்டு குளிருக்க வேலைக்கு விடுறான் என்பார்கள், வேலைக்கு விடாட்டி 'அடிமைத்தனம்' என்கிறார்கள் ... ஆண்களை பிறப்பது இவ்வளவு பாவமா ...)

வேலைக்கு போகனுமா இல்லையோ என்பதில் முடிவெடுக்க வேண்டியது குறித்த பெண்கள் தான் ..அதை விடுத்து வேலைக்கு போ என்று துரத்துவது கூட அடிமைத்தனம் தான் ...இல்லையா ???

Yoga.S. said...
Best Blogger Tips

வந்த,வந்திருக்கிற,வரப்போகிற அத்தனை உறவுகளுக்கும் வணக்கம்.இப்போது தான் நேரம் கிட்டியது.பதிவையும்,கருத்துகளையும் படித்து விட்டே நானும் கருத்துரைக்கிறேன்!ஒரு பதிவர் தன்னுடைய சொந்த அனுபவங்கள்,கேள்விப்பட்ட/தெரிந்து கொண்ட நிகழ்வுகள் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே பதிவிடுகிறார்.எவருக்காவது அவர் தளமோ கருத்துகளோ பிடிக்கவில்லையெனில் விலகிச் சென்று விடுதல் உத்தமம் என்பது என் அபிப்பிராயம்.தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள்,தனி மனித தாக்குதல்கள் வேண்டாமே?பொது என்று வந்து விட்டாலே இவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமும் கூடவே வந்து விடுகிறது!பதிவின் பொருளில் அப்படி ஒன்றும் விகாரப்பட இல்லையே?இன்னுமா நம் சமூகம் ஐம்பதுகளில் நிற்கிறது,இல்லையே?கடந்த காலங்களில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பையே கொண்டிருந்தோமே?அதில் பெண்களும் சம பங்கில் இருந்தார்களே?சில பழமை"விரும்பிகள்"அவ்வாறு ஐம்பதுகளிலேயே இன்னமும் இருக்கக் கூடும்!அதே பழமை விரும்பிகளை வேலைக்குப் போகும்போது பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக ஏதோ தாய்,தந்தையர் மேல் அளவிலாப் பாசம் உடையோர் போல் ஊரிலிருந்து மேற்குலகுக்கு அழைத்து,அவர்களின் ஓய்வூதியப் பணத்தையும் கறந்து,குளிரிலும்,மழையிலும் அலைய விடும் தம்பதிகளும் உண்டுதான்!அதே நேரம்,மிகவும் அன்னியோன்யமாக கடமைகளைப் பகிர்ந்து பிரச்சினை இன்றி குடும்பம் நடத்துவோரும் உண்டு தான். நிரூபன் விவாதிக்கக் கேட்டது புலம்பெயர் மக்கள் குறித்து அல்லவே?காட்டன் சொன்னது போல் நான் கூட வேறு பெண்கள்,உறவினர் உதவியின்றி மூன்று பிள்ளைப்பேறு பார்த்திருக்கிறேன்!

Anonymous said...
Best Blogger Tips

/////செட்டப் செல்லப்பா said...

தேங்ஸ் நிரூபன், என்ட கமெண்டுகளை அழித்து விடவும், நான் ப்ராப்லம் ஆகிட்டுன்னு ஏற்கனவே கிளம்பிட்டேன், பிறகு தான் வந்தேன். இப்போ போறென், கமெண்ட்டுகளை அழிச்சிடுங்க. நமக்குள்ள பிரச்சனை வேண்டாம். ///

அப்பிடி சமத்தா இருக்கணும்.இத முதல சொல்லியிருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காதே! அத விட்டுட்டு சும்மா லூசுத்தனமா ((((லூசாப்பா நீ அப்படின்னு ஒரு நகைச்சுவை வசனம் இருக்கு, அதைத்தான் இங்க பயன்படுத்தி இருக்கேன்)))) எல்லாம் வந்து உளறப்படாது. கொஞ்சம் பொறுங்க உங்களுக்காக ஒரு மொக்க பதிவு நிரூபன் போடுவார் அப்போ வந்து கும்முங்க நாங்களும் வாறம்...)

Yoga.S. said...
Best Blogger Tips

நடுவர்களாக உட்கார்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்(அப்பாடி,தப்பீட்டன்!)

Yoga.S. said...
Best Blogger Tips

ஒருவரின் தளத்துக்கு பல வாசகர்கள் கருத்தும்,வாக்கும் அளித்தாலே பிரபலமாக முடியும்!இப்போ,புதிதாக வேறு எவருடைய தளத்துக்கோ வந்து நாகரீகமற்ற முறையில் கருத்துரைத்து விட்டால் பிரபலமாகி விடலாம் என்றொரு வரைவிலக்கணம் வந்துவிட்டது போலும்!அடச்சீ,இந்த டெக்னிக் தெரியாமல் போய் விட்டதே????

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம்.பணி முடிந்து விவாதத்திற்கு வருவதற்குள் என்னென்னவோ நடந்து இருக்கே?

கோகுல் said...
Best Blogger Tips

இன்னமும் நம்ம கலாச்சாரத்திலே பெண் என்பவள் ஆணுக்கு அடங்கியோ அல்லது ஆணின சொல் கேட்டோ நடக்கும் நிகழ்வு தான் பரவலாக இருக்கிறது.இதற்க்கு பழங்காலத்திலிருந்து
நமக்கு வழி வழியாக சொல்லப்பட்டோ ,கேள்விப்பட்டோ பல சமயங்களில் உணரப்பட்டோ இருக்கும் விஷயங்கள் தான் காரணம்.மனிதன் உருவாகி நாகரிகம் ஓரளவு உருவாக ஆரமித்த காலங்களில் கூட ஆணும பெண்ணும் சரி சமமாய் வேட்டையாடுதல்,உணவு சேகரிப்பது போன்றவற்றில் இணைந்தே
செயல் பட்டுக்கொண்டிருன்தனர்.இயற்கை அவர்களுக்கு கொடுத்த உடலமைப்பில் கருப்பை யை கொடுத்தமையால் பிள்ளைபேறு சமயங்களில் ஆணுடன் இணைந்து உழைக்க இயலாத சூழல்,அப்புறம் பிள்ளைகள் வந்தவுடன்
அவர்களை கவனிக்கும் பொறுப்பும் சேர்ந்தது கொள்வதால் உழைக்க நேரமின்மையோடு,நாட்டமின்மையும் இணைந்து கொண்டது.மனிதன் தோன்றிய காலங்களில் ஆண்,பெண் இரு பாலரும் உடலுறுதியில் இணையாக இருந்தார்கள் என தெரிகிறது.உழைப்பு குறைய குறைய அவர்களுக்கு உடலிலும் ,உள்ள்ளதிலும் மென்மைதன்மை கூடி விடுகிறது.இந்த சூழலில் தான் இந்த புதிய ஆணாதிக்க கலாசாரம் முளைத்ததாக எனக்குப்படுகிறது.ஆக,இயற்கை கொடுத்த உடலமைப்பை பெற்றதால் பெண் அனுக்கு கீழாக மதிக்கப்படுவது இயற்கையை வணங்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.இன்றைய சூழலில் ஓரளவு புரிந்து கொள்ளும் நிலைமை தோன்றியிருந்தால் கூட அந்த சதவிகிதத்தில் ஆணாதிக்கம் சற்று தூக்கலாகவே இருக்கிறது.
பெண்ணாதிக்க விசயத்தை பொறுத்த வரை பெண் ஆணை விட அதிகம் சம்பாதிதாலோ ,அல்லது பெண் மட்டுமே சம்பாதிதாலோ, பெண்ணால் பணம் மட்டுமே தலைமைப்பன்பை நிர்ணயிக்கும் என்றால் அப்போ நான்தான் ஆதிக்கம் செலுத்த வேணும் என்ற நினைப்பால் வருவது(இது இருபாலருக்கும் பொருந்தும).

கோகுல் said...
Best Blogger Tips

பொதுவில் இன்றைய சூழலில் பொருளீட்டுவது தலைமைப்பன்புக்கு அடையாளமாக காட்டப்படுகிறது இதனால் தான் யார் அதிகம் ஈட்டுகிரார்களோ அவர்களுக்கே ஆதிக்க உரிமை வேணும் என்பதால்தான் குடும்பங்களில் பிரிவினை வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.அதை தவிர்த்து எந்த வேலையும் யார்க்கும் ஒதுக்கி வைக்கப்பட்டதல்ல என புரிந்து பகிர்ந்து செய்து பணம் மட்டுமே தலைமைப்பன்புக்கு முக்கியமானது அல்ல என உணர்ந்தால் ஆதிக்கம் என்ற வார்த்தை ஆணுக்கோ பெண்ணுக்கோ பொருந்தாமல் போகும்!

செங்கோவி said...
Best Blogger Tips

ஆஹா...விவகாரமான தலைப்பா இருக்கே..எஸ்கேப்ப்ப்ப்ப்!

உணவு உலகம் said...
Best Blogger Tips

நல்ல விஷயமொன்றை விவாதத்திற்கு எடுத்து வைத்துள்ளீர்கள். இடையில் வந்துள்ள இடையூறுகள். சரி விடுங்கள், நிரூ. தனி மனித தாக்குதல் மட்டுமே தவிர்க்கப்படவேண்டியதொன்று.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நண்பர்களே.

ஆணோ பெண்ணோ சரியான புரிந்துணர்வு வேண்டும் சமத்துவம் பற்றி வெளியில் வாய் கிழிய பேசும் பலர் வீட்டில் பெண்களுக்கு முழுச்சுகந்திரம் கொடுக்காமல் இருந்த கதை எல்லாம் சமூகத்தில் ஏராளம் இருக்கு....

அன்பு என்ற ஆழமான பந்தத்தில் இணைக்கப்படும் உறவுகளிடையே சரியான புரிந்துணர்வு வேண்டும் ஆண் பெண் பாகுபாடு முதலில் களையப்படவேண்டும் இருவரும் மனிதர்கள் தான் இரண்டு பேருக்கும் உணர்வுகள் ஒன்றுதான் கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் விட்டுக்கொடுத்து வாழப்பழகினாலே சமூகத்தில் பாதி பெண்ணடிமைத்தனம் நீங்கும்

யார் என்ன சொன்னால் என்ன இவள் என் மனைவி இவளுக்காக நான் விட்டுக்கொடுப்பதில் என்ன தவறு என்று ஓவ்வொறு ஆண்களும் நினைத்தால் இந்த ஆணாதிக்கம் என்ற கருத்தே வராது...

பெண்களை போகப்பொருளாக பார்க்கும் பழமைவாத மனநிலையில் இருந்தும் இந்த சமூகம் விலகவேண்டும் அப்பதான் ஆண் பெண் சமத்துவம் உயிர் பெரும்

வாழ்க்கை என்னும் படகில் அன்பு என்ற நதியில் புரிந்துணர்வு என்னும் துடுப்பைக்கொண்டு பயணிக்கும் பயணம் என்றும் மூழ்குவதில்லை

ஆகவே ஆணோ பெண்னோ சரியான புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஓருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்

பழமைவாதம் பேசும் பழமைவாதிகள் மாறவேண்டும் சமூதாயத்தில் ஆண் பெண் சமத்துவம் வளரவேண்டும் சிந்தியுங்கள் நண்பர்களே

இன்றைய விவாதமேடையில் நான் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன் அதாவது விவாதமேடையில் சிறந்த கருத்துக்களை சொல்லும் ஒருவரை சிறந்த கருத்துரையாளராக தேர்ந்தெடுப்பது.

அந்தவகையில் இன்றைய விவாத மேடையில் சிறந்த கருத்துரையாளராக பல விடயங்களை சிறப்பாக சொன்ன ATHIRA மேடம் அவர்களை தேர்வு செய்கின்றேன் இனிவரும் விவாத மேடைகளிலும் நடுவர்கள் இதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கின்றேன்

இங்கே விவாதத்தில் கலந்து கொண்ட கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மீண்டும் ஒரு விவாத மேடையில் ஒரு வாசகனாக சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது
அன்புடன்
உங்கள்
கே.எஸ்.எஸ்.ராஜ்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அய்யோ, பதிவை விட கமெண்ட்ஸ் ரணகளமா இருக்கே? அவ்வ்வ்வ்வ்வ்

இம்சைஅரசன் பாபு.. said...
Best Blogger Tips

//இதில், செல்லப்பாவின் கருத்து உனது பதிலை சொல்வதை விட்டுவிட்டு, இம்சை அரசனை அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்//

நீங்க ஒருத்தராவது எனக்கு சப்போர்ட் செயதீன்களே ..

எனக்கு இங்கு மின் வெட்டு அடிகடி நிகழ்வதால் நேற்று இரவு கலந்து கொள்ள முடியவில்லை .
இருந்தாலும் என்னோட தொலைபேசி எண்ணை இங்கே வெளி இட்டவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் ..

யாரிடமோ இருந்து வாங்கிவிட்டு . இப்படி என்னை சொன்னது மிகவும் தவறு .. தொலை பேசி எண்ணை கொடுத்தவர்களின் எண்ணும் விலாசாமும் எமக்கு தெரியும்..அவர்களை போல நானும் தரம் தாழ்ந்து போக விரும்ப வில்லை .. ஏன் நானும் அவர்களும் பேரை கொடுத்து இது தான் நம்பர் என்று கொடுத்து விட்டு பின்பு ..மன்னிப்போ அல்லது ..அதை டெலீட் செய்யவோ முடியும். நான் அப்படி தரம் தாழ்ந்து போக மாட்டேன் .
நீங்க மற்ற மூன்று பேர்களுடன் எண்ணை ஏன் ஒப்பிடீர்கள். அது நான் இல்லை என்று பின்னூட்டத்தில் நாகரீகமாக தெரிவித்த பின்பும், அப்படி செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது .
நல்ல வேளை அந்த கமெண்ட் டெலீட் செய்ததால் என் கோவமும் தணிந்தது .
இனி இந்த ப்ளாக்கு ஒரு கும்பிடு .

Unknown said...
Best Blogger Tips

விவகாரமா இருக்கே! நாட்டில என்னென்ன எல்லாம் நடக்குது! குறிப்பா 'ஆதிரா' என்பவர் சொன்ன விஷயங்கள்!

Unknown said...
Best Blogger Tips

ஆணியப் புடுங்கவே வேணாம்!
நான் இமயமலைக்குப் போறதா பிளான் பண்ணியிருக்கேன்! யார் யார் கூட வாறீங்க?
காசிக்குப்போய் அகோரி ஆகிறதா இன்னொரு பிளானும் இருக்கு! :-)

நிரூபன் said...
Best Blogger Tips

அண்ணே, அப்போ அது உங்க நம்பர் இல்லையா?
நானும் குத்து மதிப்பா கூகிளில் தேடிப் போட்டேன்.

உங்க ஐபியை வைச்சு பேரை வைச்சுத் தான் நம்பர் தேடினேன்.

நீங்க இல்லையா!

அப்படீன்னா என்னை மன்னிச்சுக்குங்க.

எனக்கு புராஜெக்ட் முடிச்சு கொடுக்கனும்
ரொம்ப பிசியா இருக்கேன்!

அந்த கமெண்டுகளை நீக்கிடுறேன்.

பதிவு தொடர்பான கருத்துக்களைச் சொல்வதை வரவேற்கிறேன்.
ஆனால் தனிமனித தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

நானும் உங்க வழியில வரலை!
நீங்களும் என் வழியில வம்பிழுக்க வேணாம்!

ஓக்கே! பை பை!

இம்சைஅரசன் பாபு.. said...
Best Blogger Tips

இப்பவும் சொல்லுறேன் ..நான் அந்த மூன்று பேர் இல்லை திரும்பவும் உறுதியாக சொல்லுகிறேன் ...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்களில் ஆண்கள் தம் சுய கௌரவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அடி பணிந்து வாழ்வதனையோ அடங்கிப் போவதனையோ விரும்பமாட்டார்கள்./////

ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என வகையாற பிரிக்கப்பட்டாலும் இரண்டுமே நடைமுறையில் தானே உள்ளது... என்ன பெண்ணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் என்பதால் முன்னிலைப்படத்துகிறோமே ஒழிய வேறென்ன...

TERROR-PANDIYAN(VAS) said...
Best Blogger Tips

@நிருபன்

//இந்த முகவரியில் உங்க ப்ளாக்கை ரிஜிஸ்டர் பண்ணிட்டு
உங்க ப்ளாக்கில ஹெட்ஜெட்டில கோடிங்கை இணைச்சாலே போதும்! //

பாஸ்!! நீங்க கொடுத்து இருக்க விபரம் STATIC IP அவர் உபயோக படுத்தினா ஓ.கே. ஆனா DYNAMIC IPல எப்படி அது பாபுனு சொல்றிங்க?? முன்னாடியே நான் கேட்ட மாதிரி வேற யாரும் அந்த சுற்று வட்டாரத்தில் இருந்து உங்க ப்ளாக் வந்து இருந்தா?

அந்த ஐ.பியில் அவரோட ஜிமெயில் ஐ.டி ஏதாவது காட்டுதா? இல்லை அவர் கனைக்ட் பண்ண நம்பர்? இப்போ எல்லாம் MAC Address மறைக்கர அளவு டெக்னாலஜி வளர்ந்து போச்சி பாஸ். குத்து மதிப்பா ஒரு Dynamic IP வச்சி எப்படி குற்றம் சொல்றிங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@
பாண்டியன் அண்ணா,

அண்ணே,
பாபு அண்னா முன்னாடி டொட் போட்டிருக்கிற கமெண்டும், செட்டப் செல்லப்பா ஏனைய இருவரின் முகவரிகளும் இராமநாதபுரம் அப்படீன்னு தான் காண்பிச்சுது,
அதான் உணர்ச்சிவசப்பட்டு அவரோட ஐபியை தேடினேன்.

ஒரு முகவரியில இருந்து எத்தனை புரோபைல் எல்லாம் அக்டீவ் ஆகினாலும் காண்பிக்கும் அண்ணா.

இப்போ நமக்குள் பிரச்சினை வேணாம்.

என்னால் இடம் பெற்ற குழப்பங்களுக்கு மன்னிக்கவும்,

நான் வேலையாக இருக்கேன்!
ப்ளீஸ்

பாபு அண்ணாவிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.

அனைத்துக் கமெண்டுகளையும் நீக்கி விடுகிறேன்.

K said...
Best Blogger Tips

@athira

ஊரில் ஒரு பெண், என் வயதுதான், அவருக்கு ஒரு டொக்டரை திருமணம் பேசி... எல்லாமே முடிந்து, 1ஸ் நைட் அன்று அந்த டொக்டர் சொன்னாராம், நீ இனி சட்டை, பஞ்சாபி எதுவும் போடப்படாது, வீட்டில் கால் முட்ட மக்ஸி, வெளியில் சாறிதான் உடுக்க வேண்டும் என...://////

இந்த மாதிரி, ஜென்மங்களை நடு ரோட்டில கட்டி வைச்சு.......!!!!

«Oldest ‹Older   201 – 240 of 240   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails