Monday, April 23, 2012

American Pie Reunion - அடல்ஸ் ஒன்லி - சிரிப்போ சில்லி

ஹாலிவூட்/ கோலிவுட்/ ஹாலிவுட்/ ஹொலொவூட் திரைப் பட விமர்சனம்:
கண்டிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்க்க கூடிய படம்!
அமெரிக்கன் பை படத்தின் பாகம் ஒன்று, பாகம் ரெண்டு பார்த்தவங்களுக்கு இப் படத்தின் தலைப்பை பார்த்ததுமே புரிஞ்சிருக்கும். அட ஏலவே வந்த ரெண்டு பாகங்களிலும் அசத்தினவங்களோட மீள் இணைவு தான் இந்தப் படம் என்கிற மேட்டர். சுருங்கச் சொல்லின் காலேஜ்ஜில படித்து கலாட்டா பண்ணிய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின்னர் ஒன்றாகச் சேர்ந்தா என்னா பண்ணுவாங்க என்பதனை காமெடியா சொல்லும் படம் தான் இந்த அமெரிக்கன் பை Reunion ஆகும். 
இணை பிரியாத பசங்களாக காலேஜ் லைப்பில தண்ணி, தம் என இளமையை அனுபவித்துக் கொண்டிருந்தவங்க காலேஜ் முடிஞ்சதும் திசைக்கு ஒன்றாக தத்தம் தொழில் நிமித்தம் பிரிந்திடுறாங்க. இந்த ஐஞ்சு பேரும் மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்து தம் மலரும் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது என்னாகும் என்பதனை இளமைத் ததும்பலுடன் இனிமையான வயசுப் பசங்களுக்குரிய காமெடி கலந்து சொல்லி நிற்கிறது இந்தப் படம். 

படத்தின் இறுதியில் தம்முடன் படித்த அனைத்து ஸ்கூல் நண்பர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மெகா காமெடி திருவிழாவினைப் பண்ணி எம் எல்லோரையும் சிரிக்கப் பண்றாங்கள் படக் குழுவினர். காதல், சோகம், பிரிவு, பாலியல், தனிமை, இளமை மற்றும் முதுமைக்கு இடையிலான பாலியல் குறைபாடுகள், பாலியலில் அக்கறை இல்லாத மனித மன உணர்வுகள், மனிதனுக்கு மனிதன் வேறுபடும் உடலியல் உணர்வுகள் என பலதரப்பட்ட உணர்வுகளையும் கலந்து ஆங்கிலேயர்களின் அன்றாட எண்டர்டெய்மன் (Entertainment) வாழ்க்கையினைப் பேசி நிற்கிறது இப் படம். 

இப் படத்தில் சாமியாக வரும் நம்ம ஊர்க்காரர் வெள்ளை இன மக்களின் களியாட்ட நிகழ்வில் இருந்து வேறுபட்டு எந் நேரம் தனி மனித சந்தோசத்திற்கு நேரம் ஒதுக்காது எப்போதுமே வேலை! வேலை என அலையும் இலங்கை இந்திய மக்களினை அப்படியே கண் முன்னே கொண்டு வருகின்றார். சபாஷ் சாமி! ஏனைய நடிகர்களும் தம் பங்களிப்பினைச் சிறப்புற ஆற்றியிருக்கிறார்கள். பொழுது போக்கு நோக்கில் நாம் அனைவரும் பார்த்து சிரித்து மகிழக் கூடிய சூப்பர் படம். 

ஏப்ரல் 05ம் திகதி 2012ம் ஆண்டு ரிலீஸாகியிருக்கும் இப் படத்தினை யுனிவேர்சல் பிக்ஸர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டிருக்காங்கோ.Jason Biggs, Chris Klein, Seann William Scott, Eddie Kaye Thomas, Eugene Levy ஆகிய காலேஜ் கலாட்டா பசங்களுடன் இன்னும் பல முன்னணி ஹாலிவூட் நட்சத்திரங்கள் நடித்திருக்காங்கோ. படத்தில் ஸ்ரிபன் (Steve) எனும் கதா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் Seann William Scott இன் நடிப்பிற்காக இப் படத்தினை மறுபடியும் மறுபடியும் பார்க்கலாமுங்கோ. ஏன்னா காமெடியில் செமையா வெளுத்து கட்டியிருக்காருங்கோ. 

113 நிமிடங்கள் தான் படத்தோட மொத்த டைம். 
வசூலிலும் இப் படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.


American Pie Reunion: அடல்ஸிற்கு ஏத்த அசத்தல் காமெடிப் படம். 
கண்டிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்க்க கூடிய படம்!


5 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

பாத்துட்டியாப்பா? நான் தான் லேட்டா? நமக்கு நல்ல ப்ரிண்ட்டு வரணுமே?

மற்ற ஏழும் பார்த்தாச்சு. இது மட்டும் தான் பாக்கி. ஆனாலும் முதல் மூன்றும் தான் பெஸ்ட். மத்தது எல்லாம் சும்மா ... டம்மி பீஸு. முடிஞ்சா இந்த சீரீஸ் பத்தி எழுதுறேன்.

Unknown said...
Best Blogger Tips

காமெடி படமா?

பார்க்கலாம்

Thava said...
Best Blogger Tips

இனிய இரவு வணக்கம் நண்பரே..நலமா ?
நல்ல விமர்சனம்..காமெடி படம் என்பதால் பார்க்க டிரை பண்றேன்..

///.. ஹாலிவுட் ரசிகன் - மற்ற ஏழும் பார்த்தாச்சு. இது மட்டும் தான் பாக்கி. ஆனாலும் முதல் மூன்றும் தான் பெஸ்ட். மத்தது எல்லாம் சும்மா ... டம்மி பீஸு. முடிஞ்சா இந்த சீரீஸ் பத்தி எழுதுறேன். ///

என்னாது, ஏழும் பார்த்தாச்சா ? நான் ஏழுல ஒரு பீஸ் க்கூட பாக்கிலியே,,தப்பு பண்ணிட்டேனா..இல்ல நான் அவ்வளவு இன்னசென்ஸா.. புரிலியே..

மீண்டும் சந்திக்கலாம் நண்பரே..மிக்க நன்றி.

Yoga.S. said...
Best Blogger Tips

HOLYWOOD,POLYWOOD.....Hum.....!!!!!

Anonymous said...
Best Blogger Tips

கண்டிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்க்க கூடிய படம்!//

அப்பம் எப்படி நீங்க பார்த்தீங்க...? -:)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails