Thursday, April 26, 2012

சிங்களனின் சித்திரவதை முகாம்!

இளகிய மனமுடையோருக்கும், குழந்தைகளுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
பாகம் 01
ஈழ வள நாட்டின் வட புலத்தில் அமைந்துள்ள பலாலி எனும் சிற்றூர் விவசாயத்திற்கு நன்கு பெயர் பெற்றது. இன்று வரை தம் சொந்த இடத்திற்குப் போக முடியாது 22 வருடங்களுக்கும் மேலாக அகதி என்ற நாமத்தோடு இலங்கை முழுதும் அடுத்தவர்களின் குடிலுக்கு கீழ் ஒதுங்கி வாழும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வலி வடக்கு மக்கள். பலாலியிலிருந்து இடம் பெயர்ந்து மீசாலையில் குடி புகுந்தவர்கள் தான் சின்னமணி குடும்பத்தினர்.
சின்னமணியின் மகன்களுள் ஒருவர் ஜெயபாலன். ஜெயபாலனுக்கு பேர் சொல்லுவதற்கென்று ஓர் மகன் மாத்திரம் உண்டு. ஜெயபாலன் தன் மனைவி வனஜாவுடனும், மகன் குமணன் உடனும் இணைந்து தம் தகப்பன் வீட்டிற்கு அண்மையாக மீசாலைப் பகுதியில் வசித்து வந்தார். சரசாலை கனகம்புளியடிச் சந்திக்கு சமீபமாக (ஐந்து சந்தியடிய) அமைந்திருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்ற ஜெயபாலன் மாலையாகுவதனை உணர்ந்தவராக  சைக்கிளை வேகம் - வேகமாக மிதித்தவாறு தன் வீட்டினை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கின்றார்.

சூரியன் தன் பொற் கரங்களை நீரினுள் அமிழ்த்தி சூட்டினைத் தணித்துக் கொள்ளவதற்காக தயாராகும் வேளை! இருள்வதற்கு முன்பதாக எப்படியாச்சும் வேம்பிராய் இராணுவ முகாமினைக் கடந்து செல்ல வேண்டும் எனும் நோக்கில் சைக்கிளை வேகமாக உழக்க ஆரம்பிக்கின்றார் ஜெயபாலன். வேம்பிராய்ச் சுடலை பற்றி ஈழத்தில் வாழும் பலரும் அறிந்திருப்பார்கள். சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சமாதான தேவதை எனும் சந்தர்ப்ப மகுடம் தாங்கி அம்மையார் மாமனாருன் இணைந்து தமிழர்களின் பகுதிகளைச் சூறையாடி வந்த காலப் பகுதியில் - யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினர் வசம் வீழ்ச்சியுற்ற பின்னர் வேம்பிராய்ச் சுடலைக்கு சமீபமாக அவல ஒலிகளும், அழு குரல்காளும் விடாது கேட்கும் காலப் பகுதி அது! 

1996ம் ஆண்டு! வைகாசி மாதம். வேம்பிராயில் பேய்களின் நடமாட்டமும், சாந்தியடையாத ஆத்மாக்களின் நடமாட்டங்களும் அதிகரித்துள்ளதாக மக்கள் பேசிக் கொண்டனர். ஜெயபாலனின் சாவு பற்றிய செய்தி வெளி உலகிற்கு தெரிய வரும் வரை வேம்பிராய்ச் சுடலைக்குச் சமீபமாக வேம்பிராய் இராணுவ முகாமில் கொலைக் களம் அமைந்திருந்த விடயம் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயபாலன் சுடலையினைக் கடந்து சைக்கிளை மிதிக்கையில் தன்னைப் பேய் பிசாசுகள் பின் தொடரக் கூடாது எனும் நம்பிக்கையில் மூன்று முறை காறித் துப்பி விட்டு சைக்கிளை மிதித்து பயணிக்கின்றார். 

வேம்பிராய் இராணுவ முகாமினை அண்மிக்கும் போது..."அடோ மல்லி! எங்கே போறது? "கொஞ்சம் இங்கே வர்றது” என்றவாறு இராணுவ வீரன் துமிந்த சமரக்கோன் ஜெயபாலனின் சைக்கிளை மறிக்கின்றான்! துமிந்த சமரக்கோனுக்கு அருகே லக்மாலி ரத்னபால எனும் இராணுவப் பெண்ணும், வசந்த ஹப்புகாராச்சி எனும் இராணுவ வீரனும் நிற்கிறார்கள்! "அடோய் நீ கொட்டியா?" ஜெயபாலன் ஆச்சரியத்துடன் தான் பொது மகன் என்பதனைச் சிங்களப் படையினருக்குப் புரிய வைக்கும் நோக்கில் ஐடியினை எடுத்துக் காண்பிக்கின்றார். இப்பொழுது ஜெயபாலனின் சைக்கிள் கான்டிலில் கை வைத்த லக்மாலி "ஒன்ன நாம கொஞ்சம் செக் பண்ணனும்! கேம்பிற்க வர்றது” என்று அழைக்கின்றாள்!

ஜெயபாலன்! அச்சத்துடன் என் மனைவியும், பிள்ளைகளும் காத்திட்டிருப்பாங்க எனச் சொல்கிறார். ஆனால் மூன்று இராணுவத்தினரும் கேட்பதாக இல்லை! ஜெயபாலனை வலுக்கட்டாயப்படுத்தி முகாமினுள் அழைத்துச் செல்கின்றார்கள். முகாமினுள் சைக்கிளிலிருந்து பலவந்தமாக இழுக்கப்பட்டு ஜெயபாலன் சித்திரவதைக் கூடத்தை நோக்கி நாயினை இழுப்பது போன்று இழுத்துச் செல்லப்படுகின்றார். அடுத்தது என்ன நடந்திருக்கும்? அடுத்த பாகத்தில் அறிவோமா? 

ஜெயபாலனின் மகன் இன்று லண்டனில் இருக்கின்றார். அவரின் எதிர்கால நன்மை கருதி அவர் மகனின் பெயர் இங்கே மாற்றப்பட்டிருக்கிறது.

அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்:
சைக்கிளை உழக்குதல்: சைக்கிளை மிதித்தல்.
மல்லி: தம்பி
அடோய் நீ கொட்டியா: நீ ஓர் புலியா?
முகாமினுள் வர்றது: முகாமினுள் வரவும்!
செக் பண்ணனும்: பரிசோதிக்கனும் (உடற் சோதனை செய்யனும்)

கடந்த சில வாரங்களாக பாகம் இரண்டினை உங்களோடு பகிர முடியவில்லை. இத் தொடரின் முதற் பாகத்தினை மீள் பதிவாக வழங்கி விட்டு, பாகம் இரண்டோடு உங்களைச் சந்திக்கிறேன்.


3 Comments:

ரெவெரி said...
Best Blogger Tips

மீள் பதிவு.......................

Yoga.S.FR said...
Best Blogger Tips

ஹும்!!!!!அரச்ச மாவு!(மீள்-பதிவு!)

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நிரூபன் இனி நீங்கள் ஒய்வெடுக்கலாம்.

தமிழ் ஈழத்துக்காக...டாக்டர் கலைஞர் போராட வந்து விட்டார்.

டிபனுக்கும்...லஞ்சுக்கும் உள்ள இடைவெளியில் உண்ணாவிரதம் இருந்து தமிழ் ஈழம் வாங்கி தந்து விடுவார்.

ஒய்வெடுங்கள்...மக்களே.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

இங்கேயும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமே

Related Posts with Thumbnails