Saturday, April 28, 2012

திமுக அல்லக்கைஸை முட்டாளாக்கும் கருநாய்நிதி!

கழக கண் மணிகளே! குவாட்டர் கட்டிங் செய்வோம்! ஓடியாங்க! 
இன்று உலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் பொருளாதார நிலமைகளை உன்னிப்பாக அவாதானித்தால் ஒவ்வோர் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அந் நாடுகளில் ஆட்சியில் உள்ளோரின் சிறப்பான திட்டமிடலும், வழி நடத்தலும் தான் காரணமாக இருக்கும். ஆனால் நம்ம இலங்கை, இந்திய நாடுகளில் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளோட புள்ளைங்க நிலமை தான் சிறப்பாக இருக்கும். இதற்கான காரணம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மந்திரிகளின் சீரிய பணியும், குடும்ப அரசியலுமே ஆகும். என்றைக்கு எம் தலைவர்கள் மக்கள் மேல் தீவிர அக்கறை கொண்டு நாட்டின் முன்னேற்றம் பத்தி சிந்திக்கிறாங்களோ, அன்றைக்கு தான் நம்ம நாடுகளின் வீதிகள் பள பளக்கும், ஏழைகள் இல்லாது நம்ம நாடுகள் பொருளாதாரத்தில் வலுவாக வளர்சியடையும்.
வெளிநாட்டு அரசியல் ஆட்சிப் பீடங்களில் அல்லக்கைஸ், அடிவருடிகள், செம்பு தூக்கிகள், கழக கண்மணிகள் மாதிரி ஆளுங்க கெடையவே கெடையாது. அப்படி யாராச்சும் எந்த நாட்டிலையாச்சும் இருந்தாங்க என்றா, தமது கட்சியை அவமதித்து விட்டார்களே எனும் காரணத்தால் என்றாவது ஓர் நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களே அன்றி எம்மைப் போல கேவலமாக கட்சியை வேட்டித் துண்டாக கட்டி, ஐயோ என் வேட்டி அவுந்து போச்சே என கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டாங்க. நம்ம நாடுகளில் மாத்திரம் இந்த விசித்திரம் நடந்தேறுதுங்க. ஒவ்வோர் அரசியல்வாதியும் சாதாரண மக்களை முட்டாளாக்கி தன் சொந்த மக்களை சொகுசு வாழ்க்கை வாழப் பண்றான். இதனை அறியாத அற்ப பதர்களாக இலங்கை, இந்திய வாழ் அப்பாவி மக்களும் கட்சி தொண்டர்களும் தம் வாழ்க்கையினை தொலைக்கின்றார்கள்.

ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் செம்பு தூக்கும்/ பஞ்சாயத்து பஞ்சர் மணிகள், அல்லக்கைஸ், அடிவருடிகள் என்னைக்காச்சும் ஓருவாட்டி, நம் தலைவனிடம் சொந்தமா டீவி ஸ்டேசன் இருக்கே, பத்திரிக்கை இருக்கே, நெரம்ப பணம் இருக்கே இது போல பணம் எப்போது நம்ம கைக்கு வரும்? நம்ம புள்ளைங்களை நாம எப்போது முன்னேற்றலாம் என்று சிந்தித்திருப்பாங்களா? அரசியல்வாதிகளின் காலை நக்கி, அவர்களுக்கு துதி பாடல் செய்யும் இலங்கை இந்திய வாழ் புத்தி ஜீவிகள் செய்யும் மகா தவறு! ஒரு குருவி ரொட்டிக்கும், குச்சி மிட்டாய்க்கும், குவாட்டர் போத்தலுக்கும் ஆசைப்பட்டு ஒட்டு மொத்த இனத்தையுமே கூட்டி கொடுப்பதாகும்! 

நம்ம தலைவர் இம்புட்டு பணம் வச்சிருக்காரே! ஆசியாவிலே முதல் பத்து இடத்தினுள் வரக் கூடிய பணக்காரர் வரிசைல நம்ம தலைவர் இருக்காரே! அவர் வசம் உள்ள சொத்துக்களை தமிழ் நாட்டில் உள்ள ஏழைங்களுக்கு வாரி வழங்கினாலே நாட்டில உள்ள ஏழைங்க எண்ணிக்கை குறைஞ்சிடும். தொழில் வாய்ப்புக்கள் பெருகும், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும், இன்னும் கொஞ்ச காலத்தில நாட்டில் அனைத்து மக்களும் சரி நிகர் சமனாய் மதிக்கப்படுவாங்க. தமிழகம், இலங்கை என்றால் அனைத்து மேலை நாட்டவரும் அடடா... அபிவிருத்தியில் புரட்சி செய்த அதிசய நாடுகள் என்று வியப்படைவாங்க என்றெல்லாம் எண்ணியிருப்பாங்களா?

தங்க புள்ளைங்களும் வாழ கூடாது! தங்க சொந்த பந்தங்கள், ஊர்க்காரங்க, உறவுக்காரங்களும் முன்னேற கூடாது. மக்களை பல காலமாக ஏமாற்றி கொண்டிருக்கும் மஞ்சள் துண்டு மகான் மட்டும் முன்னேறனும் எனும் ஆசைல குவாட்டருக்கு ஆசைப்பட்டு ஒரு இனத்தையே முட்டாளாக்கிறோம் எனும் உண்மையினை உணராது இந்த அல்லக்கைஸ் இருப்பதனை நினைக்கையில் சிரிப்பு சிரிப்பா வருதுங்க. சாகப் போற 90 வயசிலையும் நம்ம கழக கொழுந்து கருநாய்நிதி ஒட்டு மொத்த தொண்டர்களையும் முட்டாளாக்கி சுவிஸ் பேங்கில முதலீடு செய்து சொகுசா தன்னோட வாழ்க்கையினை ஓட்டுறாரு! ஆனா குவாட்டருக்கு ஆசைப்பட்ட நாம மட்டும் கலைஞரை நம்புங்க மக்களே! உங்களுக்கு விடிவு பொறக்கும் எனச் சொல்லி எம்மை நாமே முட்டாளாக்கி கொண்டிருக்கிறோம்! 

திமுக அல்லக்கைஸ்களே! அடிவருடிகளே! முட்டாள்களே! நீங்க பண்ண வேண்டியது யாதெனில் மல்லாக்கா படுத்து எச்சில் துப்பி பாருங்க. அந்த எச்சில் உங்க மேல தான் விழுகிறது எனும் உண்மையாச்சும் உங்க மர மண்டைக்கு வந்தா ஓடிப் போயி கழக கொழுந்தை கட்சியை விட்டு விரட்டுங்க. உங்க கட்சில எவன் ஒருத்தன் ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல், சுய நலம் இல்லாம இருக்கானோ அவனை கழகத்திற்கு தலைவனாக்கி அழகு பாருங்க. அப்புறமா பாருங்க கழகமும் ஒளி பெறும். எம் தாய்த் தேசமும் விடிவு பெறும்! இந்த மாதிரி அரசியல்வியாதிங்க எப்போது ஒழிவாங்க என்று ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்பார்த்திட்டு இருக்கு. அந்த நல்ல நாள் என்னைக்கு வருதோ... அன்னைக்கு தான் இலங்கை இந்திய மக்கள் வாழ்வில் விடியல் பிறக்கும்! 

இது குவாட்டருக்கும், கவுன்சிலர் பதவிக்கும் ஆசை கொள்ளும் கழக கண் மணிகளுக்கு புரியுமா?

கழக கண்மணிகளின் தொல்லையினைச் சகிக்க முடியாத நம் பதிவர்கள் எழுதிய இரு பதிவுகளை உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்கின்றேன்,

இன்றைய தினம் பதிவுலகில் படித்த பதிவுகளுள் பிடித்த வார்த்தை!

சீனாவின் துயரம் மஞ்சள் ஆறு (குவாங்கோ நதி)
தமிழர்களின் துயரம் மஞ்சள் துண்டு! 

6 Comments:

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு.. இன்றைக்கு செம பிஸி.... நான் வாறத்துக்குள்ள அடுத்த பதிவா???? ஹா ஹா.......... :)

நிஜமாவே ஈழ தமிழனுக்கும் இந்திய தமிழனுக்கும் பிடிச்ச ஏழரை சனியன் இந்த கருணாநிதி...... ஈழ தமிழன் இப்போத்தான் சுதாரித்து சனியனை தட்டி விட்டு தப்பித்துவிட்டான்... பாவம் சில இந்திய தமிழன்.......... இன்னும் இந்த மஞ்சள் துண்டை நம்பீட்டு இருக்காங்கப்பா........ :(((

மஞ்சள் துண்டு இப்போ இருக்கும் நிலை அந்தோ பரிதாபம்.... ஆட்சியில் இருப்பது அல்லது எதிர் கட்சியாக இருப்பது என்ற நிலை போய் இப்போ மூன்றாம் நிலையில் இது ஆரம்பம் தான் போக போக டி.ராஜேந்தரின் கட்சிக்கு பின்னால் போனால் கூட ஆச்சரியம் இல்லை..... இனி ஆட்சியில் அமர்வது என்பது திமுகாவுக்கும் பகல் கனவுதான் :))))))

இந்த கிழவனின் பாவ மூட்டைகள் இப்போத்தான் அவிழ தொடங்கியுள்ளது......... இன்னும் கொஞ்ச நாளில் பாருங்கள் திமுகா எப்படி சிதற போகுது என்று.. அன்றுதான் தமிழனுக்கு தீபாவளி :)

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
இந்த அம்மா தொடர்ந்து செய்து வரும் தவறுகள் கிழவனை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி விடும் போலிருக்கிறது.

இரண்டு பேருமே நாட்டை நாசப்படுத்துவதில் யார் முதலிடம் என்பதில் போட்டி போடுகிறார்கள்.

ஆனால்...கருணாநிதி என்ற விஷச்செடியை விட ஜெ என்னும் போஹன் வில்லா...பரவாயில்லை.

Unknown said...
Best Blogger Tips

சரியான செருப்படி...

இந்த மானங்கெட்ட அல்லக்கைகளின் இந்த செயலுக்கு...பேசாம பிச்சை எடுத்து பொழைக்கலாம்...இனி எவன் எங்க எல்லாம் அடிவரிடின்னு சொல்லி கிட்டு ஜிங்சக் பதிவு போட்டாலும் இனி ரணகளம் தான்!

Unknown said...
Best Blogger Tips

யோவ்! நிரூ சுத்தி சுத்தி அடிக்கிறாங்கய்யா....?பாவம்ய்யா அந்த ஆளு! பார்க்கிறதுக்கே பரிதாபமா இருக்கு!

நாங்க மாநில அரசுதான் மத்திய அரச எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்று சப்பைகட்டு வேற....

அப்படியென்றால் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது சர்வாதிகார ஆட்சி நடத்திய இந்திராவை எதிர்த்து எப்படி வெற்றிபெற்றார்கள்.

அப்ப காங்கிரஸ் கூட கூட்டணி கிடையாது இப்ப கொள்ளையடிப்பதிலிருந்து, கொலைசெய்வது வரை கூட்டணி எப்படி எதிர்ப்பது

எதிர்த்து கேள்வி கேட்டா அதிமுக அனுதாபி என்பது, ஒடன்பிறப்புக்கு மட்டும் மூளையிருக்கு மத்தவன் எல்லாம் முட்டாள் என்று நினைப்பது.என்ன கொடுமை சார் இது?

Unknown said...
Best Blogger Tips

நடுநிலையா நாம கமெண்ட் போட்டா வாந்தியெடுக்கிறோம் நாறுமாம்!
இவர்கள் பன்னீரா வாந்தியெடுக்கிறாங்க
மணக்கும்.....நல்ல சாராயம் வாசம் அடிக்கும் அதுதான் உண்மை!

முத்தரசு said...
Best Blogger Tips

இந்த அல்லக்கைகள் எப்பூடீ இவ்வளவு கண்மூடிதனமாக இருகக்காயங்க..

பிரியாணியும் குவாட்டரும் அம்புட்டு வேலை செய்யுமா என்னா?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails