Friday, April 6, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் கலர்புல் பார்ட்டி - 06/04/2012

இணைய வலையினூடே இப் பக்கம் வந்திருக்கும் அனைவருக்கும் இனிய இந் நேர வணக்கம், ஈஸ்டர் ஹாலிடேயில் இதமான ஓர் பார்ட்டியினை ரசிக்க, படிக்க ஆவலாக இருக்கிறீங்களா? வாருங்கள் பார்ட்டியினுள் நுழைவோம்!  அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்!
பேச்சிலர் பாக்ஸ்:

சீடி விடயம் தொடர்பில் சிபிஐ விசாரணை வேண்டும் - சுவாமி நித்யானந்தா! 

நாராயணா! அந்த சீடில இருப்பது நான் இல்லைன்னு சொன்னாலும் விடுறாங்க இல்லே! நான் என்று சொன்னாலும் விடுறாங்க இல்லேன்னு புலம்பாத குறையா புலம்பிட்டிருந்த நித்திஜி; இப்போது ஞானஸ்தானம் பெற்றவராக தன் மேல் உள்ள கறைகளைக் களையும் பொருட்டு சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்து அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலை சாமியோவ்! 
ஏன்பா! கையைப் புடிச்சு இழுத்தியா? இல்லே சாமி! ரஞ்சிதா மேடம் கூட ராத்திரி லோக மந்திரம் சொல்லிக்கிட்டிருந்தேன்! 

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழி நிலை! 

இலங்கையின் பொருளாதாரம் இன்றளவில் அதள பாதாளத்தினை நோக்கி மீளவும் சரிய ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இது இப்படியே நீடித்தால் இனவாதப் பற்றை ஊட்டி நாட்டைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கும் மந்திரிகள் மாரடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது உண்மை! ஊரெல்லாம் புரட்சி, கிளர்ச்சி ஏற்படுது. ஊரையே ஏமாத்தி உறங்கும் மக்கள் மேல குண்டு போட்டு கொன்ன இந்த உபத்திரக்காரர் மேல மட்டும் ஒண்ணுமே ஏற்பட மாட்டேங்குதே!!

இந்தியாவிற்கு  எண்ணெய் அகழ்வு தொடர்பில் சீனா எச்சரிக்கை!

சீனாவிற்குச் சொந்தமான தென் சீனக் கடற் பகுதியில் அழையா விருந்தாளியாக இந்தியா காலூன்ற முயற்சிப்பதாக சீனா குற்றம் சுமத்தியிருப்பதோடு, தமது பகுதிக்குள் எண்ணெய் அகழ்வு செய்வதனை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது! 
 வல்லரசும், வல்லரசும் மோதிக்கிட்டா சாதா மக்கள் நிலமை என்னாவதுங்கோ? சட்டு புட்டென்று பேசி சமரசமாகிடுங்க மக்கா! 

சோக்கு செம சோ(ஜோ)க்கு! இது கொஞ்சம் ரீமேக்கு! 

ஐடியா மணி வாத்யாரு, முன்னொரு காலத்தில வகுப்பறையில பாடம் எடுத்துக்கிட்டிருந்தாரு. சட்டென்று சுய நினைவிற்கு வந்தவராக, இங்கே உள்ள மாணவர்களுள் யாரோ ஒருத்தன் என்னயப் பார்த்து எருமைன்னு திட்டியிருக்கான். திட்டிவன் மட்டும் எந்திருக்கலை, இப்போ உங்க எல்லோருக்கும் செமையா அடி கொடுக்க வேண்டி ஏற்படும் என கோபத்துடன் திட்டியிருக்காரு. 
ஒரு மாணவன் எந்திருச்சு, சார் என்னை மன்னிசிடுங்க. நான் தான் அப்படிச் சொன்னேன் என்று சொல்லியிருக்கான். 
நம்ம புத்திசாலி வாத்யாரும், உண்மையைச் சொன்னதற்காக சும்மா விடுகிறேன்! இல்லையென்றால் அடிச்சு நொருக்கிடுவேன் என்று சொன்னது தான் தாமதம்! வகுப்பறை முழுதும் சிரிப்பொலியால் அதிர்ச்சுதுங்க

டிப்பது என்ன சமூக சேவையா? ஹன்சிகா கடுஞ்ச் சீற்றம்! 

நம்ம ஹன்சிகா அம்மணி அண்மையில் ஓர் பேட்டி கொடுத்திருக்காங்கோ! அதில அம்மணி என்னா சொல்லியிருக்காங்க என்றால், என்ன கேரக்டரா இருந்தாலும் தான் நடிச்சுப் பார்க்கனும் என்று ஆசையாம்.  தனக்கு இந்த ரோல் தான் எப்பவும் வேணும் என்று அடம் புடிக்க மாட்டேன் என்று அம்மணி மனந் திறந்திருக்காங்கோ. அப்புறமா, நடிப்பது என்ன சமூக சேவையா என்றும் கேட்டிருக்காங்கோ! 
அம்மணியின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஹன்சிகா மேடம் சமூக சேவை தானே பண்றாங்கோ! வேண்ணா ஒங்க ரசிகர்களிடமே கேட்டுப் பாருங்களேன் மேடம்! 

திவர் முரண்: 

கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஐடியா மணி சொல்றான்
பலியாடு நானாக பார்த்து சிரிக்கவோ?
விலையின்றி மோதிரங்கள் தினமும்
விளையாடப் பல பொருட்கள்
சுளையாக கிடைத்திடுமாம் - ஆனாலும் அவனோ
சும்மா கிடந்த சங்கை ஊதி(க்)
கெடுத்திடப் போடுகிறான் திட்டம்
சுதந்திரத்தை இழந்து பெட்டிப் பாம்பாய்
நானும் ஆகுவதில் அவனுக்கும் இருக்கிறதாம் இஷ்டம்!
திவர் ஜோதிடம்:

ஐரோப்பிய நாடுகளில் சமர் காலம் ஆரம்பித்து விட்டதாம். இதனால் பேரீச்சம் பழத்திற்கு தமிழனின் பழைய தேசிய உடை அப்படீன்னு கூவாத குறையா தன் தேசிய உடையினை விற்பதற்கு பதிவர் காட்டான் அவர்கள் படாதபாடு படுவதாக ஐரோப்பிய பதிவர் வட்டத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "முருகா நீயும் பழைய கோவணத்துடனும் எனும் பாடலைப் பாடியவாறு பதிவரும் ஊரெல்லாம் இப்போது பவனி வருவதாகவும், முருகனுக்கு நிகராக தானும் ஆவதற்கு ஏதோ ஒண்ணு குறைவதாக பதிவர் அடிக்கடி பெருமூச்சு விடுவதாகவும் புரளிகள் கிளம்பியிருக்கு! இந்தப் புரளிகளையெல்லாம் அந்த தேசிய உடைப் பதிவர் நீக்கனும் என ஊரெல்லாம் பேசிக்கிறாங்கோ! உண்மை பொய் எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தானேங்க வெளிச்சம்;-))

திவர் குறும்பும் - பகிடிக் குசும்பும்!
கல கல கவர்மென்ட் ஜாப் வேண்டுமா? கார்ட்ஸ் வெளையாட்டு இலவசம்!
(அம்மா ஆட்சியின் அதிரடித் திட்டம்)

சி இணைப்பு: 

உங்கள் மனங் குளிர ஓர் காதல் பாடலைப் பார்த்து மகிழ வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்க! இப்பவே ப்ளான் பண்ணிட்டேனுங்க. எனக்கு கலியாண ரிஷப்சன் நடந்தா, இப்படித் தான் ஒரு சாங்க்ஸ் எடுக்கனும் என்று! இது பத்தி நீங்க என்னா சொல்லுறீங்க? (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! என்ன கொடுமை! அப்படீன்னு நீங்க பேசுவது கேட்குதுங்க!)

இப் பதிவிற்குரிய படங்கள் கூகிள், மற்றும் பேஸ்புக் தேடல் மூலம் பெறப்பட்டவையே!

12 Comments:

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

ரசித்தேன்.

சமுத்ரா said...
Best Blogger Tips

ரசித்தேன்.

Unknown said...
Best Blogger Tips

உங்களுக்கும், அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்..

கவி அழகன் said...
Best Blogger Tips

Kanravi thalippai mathunkaiya

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன்(நிருபன்?)!ஓ.....பார்ட்டி நல்ல பார்ட்டி தான்!காட்டானை சந்திக்கு இழுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!கலியாணம் கட்டி நாம் பெற்ற( துன்பம்?)இன்பம் பெற்று உய்யுமாறு வாழ்த்துகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி

ரசித்தேன்.
//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சமுத்ரா

ரசித்தேன்.
//

நன்றி நண்பரே.

நிரூபன் said...
Best Blogger Tips

@பாரத்... பாரதி...

உங்களுக்கும், அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்..
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@yathan Raj

Kanravi thalippai mathunkaiya
//

எல்லாம் ஒரு விளம்பரம் தான்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

காலை வணக்கம் நிரூபன்(நிருபன்?)!ஓ.....பார்ட்டி நல்ல பார்ட்டி தான்!காட்டானை சந்திக்கு இழுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!கலியாணம் கட்டி நாம் பெற்ற( துன்பம்?)இன்பம் பெற்று உய்யுமாறு வாழ்த்துகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!
.//

காட்டான் இழுத்தேனா? என்னா சொல்லுறீங்கோ! அவ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி ஐயா.

Yoga.S. said...
Best Blogger Tips

முருகனுக்கு நிகராக தானும் ஆவதற்கு ஏதோ ஒண்ணு குறைவதாக..........////ஏய்யா இப்பிடி குடும்பத்தில குழப்பத்த உருவாக்கிறீங்க?ஹ!ஹ!ஹா!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

Blogger நிரூபன் said...

காட்டான் இழுத்தேனா? என்னா சொல்லுறீங்கோ! அவ்வ்வ்வ்வ்வ்வ்.../////இல்ல கோவணத்த இழுத்தீங்களே ?அதான்,ஹ!ஹ!ஹா!!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails