Sunday, April 22, 2012

ஆஸ்திரேலிய தலை நகரின் அழகில் மயங்க ஆசையா?

இப்போதே பறந்து வாருங்கள்!
ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தலை நகராக விளங்கும் இடம் தான் கான்பரா எனும் அழகிய நகராகும். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா (மெல்பேண்) மாநிலத்திற்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கும் (சிட்னி) இடையில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது.1908ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தலை நகரமாக இந்த கன்பரா நகரம் பிரகடனப்படுத்தப்பட்டது. மெல்பேணிலிருந்து 640km தொலைவிலும், சிட்னியிலிருந்து 280km தொலைவிலும் இந் நகரம் அமைந்திருக்கிறது. சுருங்க கூறின் ஓர் நாட்டின் அரசியல், வெளிவிவகாரா விடயங்களிற்கென்று தனியாக அமைக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட நகராக இந்த கன்பரா விளங்குகின்றது. 
கன்பரா மாநிலத்தில் அதிகளவில் உலக நாடுகளின் தூதரகங்களும், அரசியல் தலமை அலுவலகங்களும், தலமைச் செயலகங்களும் அமைந்திருக்கின்றன. மக்கள் தொகை அண்ணளவாக மூன்றரை இலட்சமாகும். கன்பரா நகரமானது ஆஸ்திரேலியாவின் ஏனைய நகரங்களை விடச் சிறப்பாகவும், விசேட கட்டட வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க அரசியல் தலமைப் பீடமான வாஷிங்டன் டீசியினைப் போன்று கன்பரா நகரும் அதி உயர் தொழில் நுட்ப டிசைன் வேலைப்பாடுகளுடன் அமெரிக்க கட்டட கலை நிபுணர் Walter Burley Griffin அவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது.

கன்பரா நகரமானது ஆஸ்திரேலியாவின் ஏனைய நகரங்களைப் போல் அல்லாது மென்மையான, குளிரான காலநிலை கொண்டதாக விளங்குகின்றது. இங்கே உங்கள் கண்ணைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களாக பின் வரும் விடயங்கள் விளங்குகின்றன,
*Parliament House Of Australia (ஆஸ்திரேலிய பாராளுமன்றம்)
*High Court Of Australia (தலமை நீதிமன்றம்)
*Black Mountain Tower.(கன்பரா நகரை முழுமையாக ரசிக்க கூடிய உயர்ந்த கோபுரம்)
*Discovery Drive - Space Communication Complex (பூமியிலிருந்து விண்ணில் நடப்பவற்றை ஆராயும் ஆராய்ச்சி மையம்)
*Australian National Gallery (ஆஸ்திரேலியாவின் தேசிய காட்சிப் பீடம்)
*Australian Institute of Sport
* Australian Botanic Garden
*Australian War memorial Place / Anzac Pared
*Balloon Aloft
*Blundells Cottage
*Australian Art Space
*Australian National Museum
*Gold Greek Village
*Australian National Park
*National Archives of Australia
*Australian National Film And Archives
*National Library of Australia
*National Zoo And Aquarium
*Royal Australian Mint
*Old Parliament House
*Australian Government Funded Media Centre (SBS & ABC Corporation)
இதனை விட இன்னும் பல சுவாரஸ்யமான இடங்கள் இருக்குங்க. கன்பரா போகும் போது கண்டிப்பாக இந்த இடங்களைப் பார்க்க மறந்திடாதீங்க. இந்த இடங்களைப் பற்றியும், இவ் இடங்களின் சிறப்புக்களைப் பற்றியும் படங்களுடன் உங்களுக்கு ஒவ்வோர் பதிவுகள் வாயிலாகவும் பகிர்கிறேன்.

ஆஸ்திரேலியாவின் பூர்விக இனங்களுள் ஒன்றான Ngabri இன மக்களின் பேச்சு மொழியில் பொதுவாக ஒன்று கூடும் இடத்தினை Kambera என அழைப்பார்கள். இந்தச் சொல்லில் இருந்து மருவியது தான் கன்பரா எனும் சொல்லாகும். கம்பீராவை கன்பரா ஆக ஆஸ்திரேலியர்கள் தேர்ந்தெடுத்து தம் தலை நகரத்திற்குச் சூட்டியுள்ளார்கள். 
கன்பரா நகரத்தினை Black Mountain Tower / Telstra Tower இல் இருந்து 360 பாகை வியூவில் பார்க்க முடியுமுங்க. அப்படிப் பார்க்கும் போது கன்பரா நகர் எப்படித் தெரியும் என்பதற்கு சான்றாக கீழே உள்ள படங்களை இணைத்திருக்கிறேன்.

இது தானுங்க Black Mountain Tower.



























18 Comments:

ரேவா said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிருபன், நீயும் ரஜூவன் மாதிரி ஊர் சுத்தி காட்ட கிளம்பிட்டையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

காலை வணக்கம் ரேவா,
அப்படி எல்லாம் இல்லைங்கோ..
நான் இருக்குமிடம் இது என்பதால் அப்படியே சுட்டு போட்டிருக்கேன்.

ரேவா said...
Best Blogger Tips

இயற்கையோடு போட்டி போடும் செயற்கை... படங்கள் அழகோ அழகு எனக்கு ரெண்டாவது படம் ரொம்ப பிடித்தது சகோ :)

ரேவா said...
Best Blogger Tips

நிரூபன் said...

@ரேவா

காலை வணக்கம் ரேவா,
அப்படி எல்லாம் இல்லைங்கோ..
நான் இருக்குமிடம் இது என்பதால் அப்படியே சுட்டு போட்டிருக்கேன்.

நிரூபன் அப்படியென்டால் அவர்கள் கலாச்சாரம், பழக்கவழக்கம் சார்ந்த பல புகைப்படங்களையும் பகிரலாமே... traveller சேனலில் மட்டும் காண கிடைக்கும் விசயங்களை நீங்களும் பகிரலாம்ல....

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

நிறைய போட்டோ எடுத்து வைத்திருக்கேன். இதற்கு முன்னாடி அவர்கள் கல்வியில் எப்படி முன்னேறினார்கள் என்றோர் பதிவு போட்டேன்.

இனிவரும் பதிவுகளிலும் நிறைய விடயங்களைப் பகிர்கிறேன்.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
நீங்கள் அவுஸ்ரேயாவிலா இருக்கிறீர்கள் இல்லை சுற்றுலாவுக்கு இங்கு வந்தீர்களா.?
படங்கள் அருமை..

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் அங்கிள்,
ரொம்ப நக்கலு
இப்போ தான் வந்தேன்.
சுற்றுலா அல்ல..மேல படிக்க

Yoga.S.FR said...
Best Blogger Tips

மாலை வணக்கம்,நிரூபன்!(அங்கே மாலை தானே?)படங்கள் அருமை.தெரியாத பலருக்கு,குறிப்பாக இளம் சமூகத்தினருக்கு உதவும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள்.

koodal bala said...
Best Blogger Tips

இயற்கை அழகு மயக்குகிறது!

Yoga.S.FR said...
Best Blogger Tips

நிரூபன் said...

@காட்டான்

வணக்கம் அங்கிள்,
ரொம்ப நக்கலு
இப்போ தான் வந்தேன்.
சுற்றுலா அல்ல.."மேல படிக்க."////அது தான் "மேல" படிச்சுட்டுத்தான கீழ வந்து கருத்து/கேள்வி கேக்கிறார்!ஹி!ஹி!ஹி!!!!

சிட்டுக்குருவி said...
Best Blogger Tips

ஆ....ஆ....ஆ...என்னது யாரயோமாதிரி இழுக்குற என்னு நெனைக்கவெனாம்...

உண்மையில் சூப்பரான படங்கள்...

தனிமரம் said...
Best Blogger Tips

நிரூபன் பாஸ் !
ஆஸ்திரேலியா எல்லாம் அழகாய் சுற்றுலா வழிகாட்டி போல சுற்றிக்காட்டியது கண்டு மகிழ்ந்தேன்.படங்கள் அருமை.

விச்சு said...
Best Blogger Tips

ஊர் சுத்தி... ஆஸ்திரேலிய படங்களில் மயங்கிவிட்டேன்.

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

நிரு... புகைப்படங்கள் எல்லாம் கொள்ளை அழகா இருக்கே...!!

ஹும்.... சார் ரெம்பத்தான் அங்கே என்ஜாய் பண்ணுறீங்க போல...... ரியலி சூப்பர் போட்டோஸ்... போட்டோசை பார்க்கும் போதே அங்கே வரணும் போலவே இருக்கே......... :))))

பரவால்ல பரவால்ல ..... இதனத மாதிரி இடங்களுக்கு எல்லாம் தனியே வந்தா கடுப்பு.... சோ நான் பிறகு ஜோடியாவே வாறன் :)))

எல்லாம் சரி.... நீங்க இந்த இடங்களுக்கு எல்லாம் தனியாவா போனீங்க........ ஹீ ஹீ ..... நீங்க ஆவது தனிய போறதாவது....... "அவங்க" கூடத்தானே போனீங்க....... :) :) ஹும் செம ரொமான்ஸ் தான் போல..... நடக்கட்டும் நடக்கட்டும் :)))

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

முதலாவது படம் செம அழகு :))))

Yoga.S.FR said...
Best Blogger Tips

துஷ்யந்தன் said...

நிரு... புகைப்படங்கள் எல்லாம் கொள்ளை அழகா இருக்கே...!!

பரவால்ல பரவால்ல .....இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் தனியே வந்தா கடுப்பு.... சோ நான் பிறகு ஜோடியாவே வாறன் :)))///தம்பி நினைப்பு புழைப்பைக் கெடுத்துப் போடும்!தனிய முதல்ல போங்க,பிறகு "சோடியாப்"போகலாம்,ஹி!ஹி!ஹி!!!!

கலைவிழி said...
Best Blogger Tips

எனக்கு ஏற்ற பதிவு தான் நிரூபா....

இயற்கையை ரசிப்பதற்கும், புகைப்படங்களை ரசிப்பதற்கும் கொள்ளைப் பிரியம் எனக்கு....

பகிர்ந்தமைக்கு நன்றி

Vairai Sathish said...
Best Blogger Tips

அண்ணே படம் சூப்பர்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

இங்கேயும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமே

Related Posts with Thumbnails