Sunday, April 22, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் கேலர் புல் பார்ட்டி - 24/04/2012

காலாச்சார காவலர்கள் தலை மேல அடிச்சு, சுவாமி ஆபாசானந்தா முன்னாடி தேங்கா ஒடைச்சு சொல்றேன்! சத்தியமா இது ஓர் பாபாச பதிவு கெடையாதுங்க. தலைப்பு மட்டும் தான் சும்மா தக தகன்னு ஜொலிக்கும் வண்ணம் வைச்சிருக்குங்க. உள்ளே கள்ளூறும் விடயம் எதும் கெடையவே கெடையாதுங்க. வாருங்கள் பேச்சிலர் பார்ட்டியினுள் இறங்கி நீராடுவோம். சாரி பார்ட்டியை லூட்டியாய் கலக்குவோம்.
பேச்சிலர் பாக்ஸ்: மூக்கினை துளைக்குது நாறின சாக்ஸ்!

கனிமொழிக்கு சம்மன் - இனி கலைஞரோட காதில் கம்மல்!

2G வழக்கில் திஹார் செயிலில் குளிர் காஞ்ச கனிமொழி ஜாமீனில் வெளியே வந்து கோபாலபுரத்தில் கோமகனார் மாளிகையில் இருப்பது நம்ம எல்லோருக்கும் நல்லா தெரியும் இல்லையா. ஆனா இப்போ கனியின் பின்னே மறைந்திருக்கும் டோட்டல் மணிக்கும் என்னாச்சு என்பதனை அறியும் நோக்கில் வழக்கு விசாரணைக்காக மீண்டும் ஏப்ரல் 26ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருக்காங்க. அப்பன் செய்த பாவம் எல்லாம் அப்பாவி புள்ளையை பின் தொடரும் என்று சும்மாவா சொல்லி வைச்சாங்கோ! 

லண்டன் ஒலிம்பிக் விளம்பரத்தில் எம் லட்சியத் தமிழ்!

உலகின் மூத்த மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்றென்பது ஆய்வாளர்களின் முடிவாகும். இன்று தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பன்மொழிகளில் அமைந்த லண்டன் ஒலிம்பிக் விளம்பரத்தில் தமிழ் முதன்மையிடத்தில் அழகிய மென்மையான ஒலியுடன் வணக்கம் என ஒலித்து அகிலமெல்லாம் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழர்கள் உள்ளம் குளிரும் நல்ல சேதி கேட்கையில் நெஞ்சமெல்லாம் புல்லரிக்கிறதே! 

தமிழரின் பூர்வீக நிலத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாதாம்! 

இன்று நேற்றல்ல பல வருடங்களாக வளம் நிறைந்த தமிழர்களின் பூர்விக பகுதிகளிலிருந்து இராணுவத்தினரை மீளப் பெறுவதில்லை எனும் இறுமாப்புடன் இலங்கையின் அரச இயந்திரம் செயற்பட்டு வருவகின்றது. அண்மையில் தமிழர்களின் போருக்கு பின்னரான நிலமை குறித்து ஆராய வந்த இந்திய தூதுக் குழுவிடம் இலங்கையின் சங்கடபதி மகிந்த ராஜபக்ஸே அவர்கள் கடுஞ் சீற்றத்துடன் இராணுவத்தை வெளியேற்ற முடியாது என காட்டமாக பதிலுரைத்துள்ளார். 
அடப் பாவிங்களா! நம்ம ஊருல ஆமி கேம்ப் போட்டு, கேம்பிற்கு உள்ளே இப்ப விவசாயம் செய்ய ஆரம்பிச்ச நீங்க ஈஸியா ஊரை விட்டுப் போவீங்களா? ஹி..ஹி... எப்படி மனசு வரும்! பொழைச்சுப் போங்க! தமிழன் இளிச்ச வாயன் என்று ஒங்களுக்கு மட்டும் தெரியாமலா போயிருக்கும்?

சோக்கு செம சோ(ஜோ)க்கு! இது கொஞ்சம் ரியல் வேர்ட்டு! 

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிந்ததும் அபையில் இருந்த மாணவன் ஒருவன் எழுந்து அறிஞர் அண்ணாவிடம், "நீங்கள் தமிழில் அடுக்கு மொழியில் பேசுவது போன்று ஆங்கிலத்திலும் பேச முடியுமா?" என்று கேட்டான். அறிஞர் அண்ணா தனக்கே உரித்தான வழமையான புன் சிரிப்புடன் பின்வருமாறு பேசினாராம்.
"Dear Student, I'm very sorry, Because I have no lorry to carry your worry". 
அண்ணா அவர்கள் பேசி முடிச்சிட்டு உட்காரலாம் என்று நினைக்கும் போது இன்னோர் மாணவன் எந்திருச்சு, நீங்க Because எனும் சொல்லை ஒரே வசனத்தில் பல முறை யூஸ் பண்ணி பேச முடியுமா என்று கேட்டார், அதற்கும் அண்ணாவோ சளைக்காது பின்வருமாறு பதிலளித்தார்.
"I don't like the word Because, Because because is a conjunction. 

குஷ்பூவின் கணவன் என்று சொல்லிப்பதால் கிளு கிளுப்பாம்!

இட்லி பூஸ் மேடத்தின் கணவர் சுந்தர்சீ சார் பேட்டி கொடுத்திருக்காரு. என்ன தான் மூணு ஹிட்டு படம் கொடுத்த இயக்குனரா இருந்தாலும் அம்மணி குஷ்புவோட கணவன் என்று அறியப்படுவதில் தான் ரொம்ப த்ரிலிங் இருப்பதாக அம்மணி பெருமையை புகழ்ந்திருக்காரு. 
ஆமா இல்லே! இட்லி பூஸ் மேடம் என்றா சும்மாவா? முன்னொரு காலத்தில கருத்து குத்து கூறி தொடப்பங் கட்டை போராட்டத்தில மாட்டிக்கிட்டவா ஆச்சே!!!

பதிவர் முரண்!

சந்தனத்து நிறத்தினிலே சவர்க்காரம் நெறைஞ்சிருக்கு
அந்தியிலே கனவு வந்தாலும் அணைக்க பிகரிருக்கு
மந்தியினைப் போல குளிக்காம மரம் தாவ ஐடியா மணிக்கோ
சொந்தமாக நாலேஜ் இருக்கு - ஆனால் சொந்தமாக யோசித்து
குளிக்க வழி தெரியலையே - செத்த பொண நாத்தம் 
பக்கம் நிற்பவர்க்கு அடிப்பதனை தடுத்திடவும் முடியலையே! 

பதிவர் ஜோதிடம்: 

பதிவுலகில் பயங்கர டேட்டா, பஞ்சாயத்து உட்பட பல வெவகாரமான விடயங்களால் பிரபலமாகி ப்ராப்ளத்திற்கு ஆளான பதிவர் இப்போது ப்ளாக்கினைப் பூட்டி விட்டு பேஸ்புக்கில் நம்பர் ஜோஸியம் பார்க்கும் பணியில் இறங்கியிருக்காராம். சற்று முன்னாடி அவரிடம் ஜோதிடம் கேட்க பதிவர் மதுரன் போயிருக்காரு. 
"அண்ணே மணி! எனக்கு அதிஷ்டமான கல்லு என்ன? அம்பாலிக்கான நம்பர் என்ன?" என்று கேள்வி கேட்டிருக்காரு.
பாவிப் பயல் ஜோசிஜம் என்ற பேர்ல என்னா சொன்னான் தெரியுமா?
"அதிஷ்டமான கல்லு: ஆட்டுக் கல்லு"
"அம்பாலிக்கான நம்பர்: ஏழரை"
இனிமேலும் இவனிட்ட ஜோதிடம் கேட்க போனீங்கோ..உங்களுக்கு சங்கு தான் என்று நாற்று குழுமத்தில உள்ளவங்க எல்லோரும் பொலம்புறாங்கோ.

பதிவர் குறும்பும் - பகிடி குசும்பும்:
ஸ்பைடர் மேன் தமிழ் வேர்சனில தலைவர் நடிக்கிறாராம்! 
ஊசி இணைப்பும் பதிவுலகை கலக்க போகும் சூப்பர் ஸ்டாரும்!

பதிவுலக சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன கொழந்தையும் சொல்லிக்கும் அப்படீன்னு ஒரு மூணு மாசமா ஓவர் சீன் காட்டிக்கிட்டிருந்த நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் தாமரைக்குட்டி இன்றைய தினம் சாந்தி முகூர்த்தம் பார்த்து தன் முதல் பதிவோட களமிறங்கியிருக்காரு. வாசகர்கள், தாமரைக் குட்டியின் பதிவினை படித்து தற்கொலை செய்ய நினைப்போர் யாராக இருப்பினும் இங்கே கிளிக் செய்வதன் மூலம் பதிவர் தாமரைக் குட்டியின் ப்ளாக் - ப்லாக்காய் - ப்லாக்கிற்கு செல்ல முடியுமுங்க. 
இவர் தானுங்க பதிவுலக சூப்பர் ஸ்டார் தாமரைக் குட்டி! ஙே!
இப் பதிவினைப் படித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி, மீண்டும் மற்றுமோர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, விடை பெற்றுக் கொள்கிறேனுங்க
நேசமுடன்,
செ,நிரூபன்,

நன்றி, 
வணக்கம்,

இப் பதிவிற்குரிய படங்கள் யாவும் கூகிள் தேடல், மற்றும் பேஸ்புக் திருடல் மூலம் பெறப்பட்டவை. 

10 Comments:

Anonymous said...
Best Blogger Tips

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Anonymous said...
Best Blogger Tips

மீ தி பிர்ஸ்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

Anonymous said...
Best Blogger Tips

வணக்கமுங்க !!!


சுப்பெரானா பதிவுங்க ...

ஊர் பற்றி தெரிந்து கொண்டேன் ..அப்புடியே ரொம்பநாள காணாமப் போன என்ர அன்னனார் பற்றியும் தெரிந்து கொண்டினேன் ,,மிக்க நன்றிங்க பகிர்வுக்கு

Yoga.S. said...
Best Blogger Tips

நள்ளிரவு வணக்கம்,நிரூபன்!நல்லாயிருக்கு!ஆரம்பத்தில் அநேக எழுத்துப் பிழைகள்,கவனியுங்கள்.பவர் ஸ்டாரை நீங்களும் விடுறேல்ல எண்டு தான் நிக்கிறியள்!!!!(கலைக்கு இரவு வணக்கம்,தூங்குங்கள்,குட் நைட்.)

நிரூபன் said...
Best Blogger Tips

Hi.....hi......

நிரூபன் said...
Best Blogger Tips

Yessu......::
Welcome backku

நிரூபன் said...
Best Blogger Tips

@ kalai
வணக்கமுங்க, இது தான் நல்ல புள்ளைக்கு அழகு. அண்ணனை இப்பயும் தேடிக்கிட்டா இருக்கீங்க:-))))))))^~~^

நிரூபன் said...
Best Blogger Tips

@ yoga ஐயா,
ஹி...ஹி.... முதல் பந்தியில் உள்ள இந்த சொற்களைத் தானே சொல்றீங்கோ. // பாபாச பதிவு , செயிலில், டோட்டல்...தொடப்பங் கட்டை, பொலம்புறாங்கோ
அன்பிற்கு நன்றி ஐயா.
பதிவிற்கு கொஞ்சம் காமெடி சேர்க்கும் வண்ணம் நான் வேணும்னே மாத்தி எழுதிருக்கேன்.

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

நல்லா இருக்குங்க, நல்லா இருங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி

நன்றி ஐயா

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails