Thursday, April 5, 2012

பதிவுலக பெண் சூப்பர் ஸ்டாரின் பல்சுவைப் பதிவுகள் ஓர் அலசல்!

பதிவுலகில் ஹிட்ஸ் பத்தியும், ரேங் பத்தியும், திரட்டிகள் பத்தியும் கவலைப் படாது மனத் திருப்திக்காகவும், தன்னை நாடி வரும் பதிவர் உள்ளங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நோக்கிலும் பல பெண் பதிவர்கள் எழுதி வருகின்றார்கள். பெண் பதிவர்களுள் சகலகலா வல்லவர்களாக விளங்கும் பதிவர்களுள் புன்னகை வலையின் சொந்தக்காரியும் வந்து கொள்வார். உங்கள் நாற்று வலைப் பதிவில், அம்பலத்தார் பக்கம் வலைப் பதிவின் சொந்தக்காரர் அம்பலத்தார் அவர்கள் எழுதி வரும் பதிவர்களின் படைப்புக்கள் விமர்சனப் பகுதி இன்று எந்த வலைப் பூவினை உங்களிடம் கொண்டு வருகின்றது என்று படித்துப் பார்ப்போமா? வாருங்கள் பதிவர்களே! அம்பலத்தாரின் விமர்சனத்திற்குச் செல்வோம்!
"அம்பலத்தார், என்ன இது? பெண்களுக்குரிய உரிமைகளையும் மரியாதையையும் கொடுக்கவேண்டும் என்று சொல்வது எல்லாம் வெறும் பேச்சுக்குத்தானா? நாங்க எழுதுவதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா? எப்பபாரு ஆம்பளை பதிவருங்களையே அறிமுகப்படித்திட்டு........" என்று சொல்லிக்கொண்டு பெண்பதிவருங்களெல்லாம் சேர்ந்து இல்லாத மீசையை முறுக்கிகொண்டு அரிவாள் தூக்கிறது தெரியுது..

அம்மாடி இந்த கிழவன் உடம்பு தாங்காதம்மா. தூக்கின அரிவாளை மெதுவா கீழை வச்சிட்டு இந்தப்பதிவை கொஞ்சம் படிச்சுப்பாருங்கோ. அப்புறமா கிழவனை வெட்டிச்சாய்கணுமா வேணாமா என முடிவு பண்ணலாம்.

என்றென்றும் 16 என்கிற புன்னகை வலை வலைப்பூவின் பெயரே புன்னகையோடு ஒரு கிளுகிளுப்பாக இருக்கே.
ஹீ ஹீ இது நம்ம வயசுக்கு ஏற்ற வலைப்பூபோல் இருக்கிறதே என நினைத்து, படித்து பார்கலாம் என்று திறந்தால்,
பூவின் சொந்தக்காரர் இல்லை! இல்லை! சொந்தக்காரி அரபு நாடொன்றில் வசிக்கும் நம்ம தமிழ்நாட்டு பெண்.
பெண் பதிவர் எழுதினாலும் வலைப்பூவின் பெயரில் சமையல், சாப்பாடுபோன்ற விடயங்கள் சேர்க்கப்படாமல் 
புன்னகையோடு அட்டகாசமாக இருந்ததில் சமையல் குறிப்புகளிற்கான பக்கமாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் படிக்கத்தொடங்கினேன்.

யம்மா பானு பேஷ் பேஷ் நீங்க பாஸாயிட்டிங்க!
சும்மா சொல்லவேணுமே என்பதற்காக சொல்லவில்லை.
உங்களிற்கு சின்னச்சின்ன விடயங்களைக்கூட வாசகர் ரசிக்கும்படி எழுதுவது நன்றாகவே தெரிந்திருக்கிறது.

தனது அனுபவங்களை, பார்த்ததை சுவாரசியமாக பதிவிட்டிருக்கிறார் பானு.
தாய்ப்பாலின் மகிமை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவைக்கூட "பூமியில் கிடைக்கும் அமுது" எனும் பதிவினூடாகச் சுவாரசியமான ஒரு பதிவாக தந்திருக்கிறார்.

திறந்து பார்.. அப்படின்னு ஒரு பதிவு எழுதியிருந்தார்.
அப்படி என்னதான் எழுதியிருக்கார் என்று திறந்துபார்த்தால் காதலர் தினம் என்கிற வலன்டைன்ஸ் டே பற்றிய சுவாரசியமான பதிவு அது.
விடலை பருவ பசங்களும் பெஒண்ணுங்களும் இந்த காதலர்தின சமயத்தில அடிக்கிற லூட்டிகளை தாமாசாக இதில் பதிவிட்டிருக்கார் http://enrenrum16.blogspot.com/2011/01/blog-post_24.html இந்த லிங்கில் கிளிக்கினல் நீங்களும் என்னதான் எழுதியிருக்கா நம்ம பானு என திறந்து பார்த்திடலாம்.

ஆஷா இருக்கிறா பேஷா..! http://enrenrum16.blogspot.com/2012/02/blog-post.html அடடா பேஷ் பேஷ் இந்தப் பதிவின்பெயரே ரொம்ப நன்னா இருக்கே மொழி வழக்கை பார்த்தால் எதோ ஐயராத்து சமாச்சாரமாக இருக்குமோ என படிக்கத்தொடங்கினால் ஒரு டாக்டரின் நல்லதொரு முயற்சியினால் தாய்ப் பாலின்றி இறக்கும் தறுவாயிலிருந்த ஒரு சிறுகுழந்தைக்கு பல தாய்மாரும் தாப்பாலை தானமாக கொடுத்துக் குழந்தையின் உயிரை காப்பாற்றிய விடயத்தை அந்தப் பதிவில் பதிவிட்டிருக்கிறார்.

சில சிறு குழந்தைகள் எப்பபார்த்தாலும் துருதுருவென கேள்வி கேட்டிட்டிருப்பாங்களே, அப்படி ஒரு வாண்ண்டுப் பையன் அவங்கம்மாவை திணறடிச்ச விசயங்களை படிக்க இதில் கிளிக் பாண்ணுங்கோ. கேள்விக்கென்ன பதில்?! http://enrenrum16.blogspot.com/2011/02/blog-post_14.html
மொத்தத்தில் புன்னகை வலை என்ற பெயருக்கேற்ப கிண்டலும் கேலியும் நகைச்சுவையும் கலந்து படிக்கிறவங்களிற்கு புன்னகையை வரவைக்கிறது இந்த வலைப்பக்கம். என்ன ஒரு வருத்தமென்றால் அடிக்கடி எங்களையெல்லாம் புன்னகை செய்யவிடாமல் ரொம்ப இடைவிட்டுத்தான் பதிவுகள் எழுதுகிறார். அம்மா பானு உங்க ஆத்துக்காரர்தான் ரொம்ப நல்லவர் என்று சொல்லியிருக்கிறிங்களே. அவரோட ஜாலியா பேசிட்டிருக்கிற நேரத்தை கொஞ்சம் குறைத்து வாரம் ஒரு பதிவாவது எழுதுங்கோ. 

மீண்டும் மற்றுமோர் விமர்சனப் பகுதியூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, 
அன்பு வணக்கம் கூறி விறை பெறுவது
நேசமுடன்,
பொ.அம்பலத்தார்.
நன்றி. வணக்கம்!!

6 Comments:

ஆத்மா said...
Best Blogger Tips

மிகவும் அருமையான எழுத்துநடை....
மிக நன்றாக சொல்லவந்த விடயத்தை சொல்லியுள்ளார்...திறந்துபார் மேட்டரில்

பகிர்வுக்கு நன்றி நண்பா

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்&அம்பலத்தார்!இந்த வலைக்குச் சென்றதில்லை!பார்ப்போம்.

கவி அழகன் said...
Best Blogger Tips

nalla vidayam

வலையுகம் said...
Best Blogger Tips

அண்ணே அம்பலத்தார்
/
//அவரோட ஜாலியா பேசிட்டிருக்கிற நேரத்தை கொஞ்சம் குறைத்து வாரம் ஒரு பதிவாவது எழுதுங்கோ.///

நியாயமான வேண்டுகோள் தான்
பெண்கள் சமூக பிரச்சனைகளை எழுத வேண்டும் என்பது என் ஆசையும் கூட

Anonymous said...
Best Blogger Tips

நானும் சென்று பார்க்கிறேன் அம்பலத்தாரே...

Anonymous said...
Best Blogger Tips

நானும் சென்று பார்க்கிறேன் அம்பலத்தாரே...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails