Thursday, September 8, 2011

அப்பீட் ஆகப் போகும் ஜெயலலிதாவும், அடித்தாடப் போகும் கேப்டனும்!

ப்பீட்டாகப் போகும் ஜெயலிலிதா


பலமான சீட்டுக்கள் பெற்று
தாத்தா கட்சிக்கு தமிழகத்தில்
வேட்டுக்கள் வைத்து
ஊழலைக் காட்டி;
உருப்படியான சேவைகள் வழங்காத
காரணம் காட்டி மக்கள்
திமுக கட்சியை உதறித் தள்ளிட
காரிருள் அகற்றும் உதய சூரியனாய்
தள்ளாடிக் கொண்டிருந்த
சூரியனை தள்ளி வைத்து நிரூபனின் நாற்று வலையின் COPY
அம்மா கண் திறந்தார்,
ஆட்சியைப் பிடித்து
அமோக வெற்றி பெற்று
தானுமோர் அதிரடிப் பெண்
என்பதை மீண்டும் நிரூபித்தார்!
வெற்றியின் மமதை
கர்வமாகி தலைவி மேனியில்
ஏதேதோ செய்து விட
"ஜெ" அவர்கள் கலைஞரின் திட்டத்தை
கவிழ்த்திட வேண்டுமென
கரிசனை கொண்டார்!
மக்களுக்கு நன்மை பயப்பதுவாய்
இருந்த மகத்தான திட்டங்களை
தூக்கி நான் எறிகையில்
துணிந்தவள் பெண் என(க்)
காட்டலாம் என நினைத்திருப்பாவோ?
அனுமதியின்றி நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்யப்படுகின்றது
சமச்சீர் கல்வி, சட்டமன்றம் என
சட சடவென்று புறக்கணிப்பு வைத்து
கலைஞரின் கால் தூசி
எங்கெல்லாம் பட்டதுவோ
அங்கெல்லாம் நான் போகேன
அரசியல் உரைத்தார்,
அனுமதியின்றி நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்யப்படுகின்றது
ஏழைகள் உள்ளமோ அம்மாவின்
இரு கண்களிலிருந்தும்
கண்ணீராய் கல்வி மழை
பொழியாதா என காத்திருக்கையில்;
உச்ச நீதிமன்றம்
உருவம் கொடுத்து
ஏழைகள் உள்ளத்திற்கு
மீண்டும் சமச்சீர் கல்வி வரும்
எனும் சேதியை
உணர்சி ததும்பச் சொல்லியது!
மகிழ்ந்தனர் மக்கள்- ஆனால்
மக்களின் தலைவி
எது செய்யினும்
எதிர்க் கட்சி வரிசையோ
மௌனமாய் இருப்பதால்
மகிழ்ந்தது "ஜெ" உள்ளம்!

ஆட்சிக்கு வருவோர்
அரசியல் தோற்றோரை
கூண்டுக்குள் அடைப்பது
இங்கே சகஜம் என்பதால்
நில அபகரிப்பு வழக்குப் போட்டு
திமுக புள்ளிகளை
நிலை குலையச் செய்தார் அம்மா!
அனுமதியின்றி நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்யப்படுகின்றது
அம்மாவும் பதவியேற்று
அசத்தலாய் சேவை செய்வா
என நினைத்த மக்களுக்கோ ஏமாற்றம்!
"அட யார் என்னை இன்னும்
ஐந்து வருடத்திற்கு அசைக்க முடியும்"?
எனும் இறுமாப்பால் இப்போ
மக்கள் மனதில்
அடுத்த தேர்தலுக்கான
மாற்றுத் தெரிவு இன்றி தடுமாற்றம்!

டித்தாடப் போகும் கேப்டன்!

போதையில் பல செய்தி
சட்ட மன்றம் வர
முன்னர் சொன்னார்- இப்போ
தன் பாதையை மறந்தார் கேப்டன்;
திராவிட கட்சிகளுக்கு
ஜால்ரா அடிக்கும் தமிழன்
தான் இல்லையென பொங்கினார்
அதிரடி வசனங்களை
அது கொடுத்த உற்சாகத்தில்
ஆவேசமாய் உதிர்த்தார்!

கூட்டணி வைத்தார்,
இப்போ கும்பிட்டு
மன்றாடி நிற்கின்றார்,
எதிர்க் கட்சி என்றாலும்
அடியேன் நான் அம்மாவிற்கு
அடிமை என்பதுவாய்
அமைதியாய் இருக்கின்றார்,
ஒவ்வோர் செய்கைக்கும்
ஜால்ரா போட்டு
ஒட்டியே இருக்க
விரும்பிடும் கேப்டன்;
ஒரு வேளை அம்மா
அசருகின்ற நேரமதில்
மெதுவாக ஆட்சியைத் தூக்கிட
வழி பார்த்திருப்பாரோ புரியலையே!
அனுமதியின்றி நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்யப்படுகின்றது
அப்பீட் ஆக வைத்து ஜெ அவர்களை
தான் அடித்தாடலாம் என
நினைக்கும் கப்டனுக்கும்
யோகம் அடிக்காமலா போகும்?
அரசியல் ஒரு புரியாத புதிர் எனில்
கப்டனோ அதை விடப்
புரியாத புதிராக இருக்கிறாரே!!!
**************************************************************************************************************************************
தமிழில் நுழைந்து தொல்லை தரும் வேற்று மொழி மூலம் மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனப் பலர் சொல்லித் திரியும் வேளையிலும், இளையோர்கள் நாம் தமிழை அழிய விட மாட்டோம் என இறுமாப்புடன் தலை நிமிர்ந்து நிற்கையில் மனதில் எத்தகைய சந்தோசம் கிடைக்கும்? 

மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனச் சொல்லும் பலர் முன்னிலையில், மெல்லத் தமிழ் இனி வாழும் என தமிழை வாழ வைக்க இணையத்தில் புறப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வலைப் பதிவு எழுத்தாளர்களுள் ரேவரி அவர்களும் ஒருவர்.

தன்னுடைய இனித் தமிழ் மெல்ல வாழும் வலைப் பதிவின் ஊடாக காத்திரமான கவிதைகள், சமூக சேவைகள்- நல்லுதவித் திட்டங்கள் பற்றிய குறிப்புக்கள்- தொழில் நுட்பத் தகவல்கள் இவை அனைத்தோடும், இடையிடையே சில அசத்தலான சினிமா விமர்சனங்களையும் பகிர்ந்து வருகிறார். 

ரேவரி அவர்களின் வலைப் பதிவிற்குச் சென்று மெல்லத் தமிழோடு கதை பேசி மகிழ்ந்திட:
http://reverienreality.blogspot.com/
**************************************************************************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன்.                                                                                                        இன்ட்லியில் ஓட்டளிக்க:

118 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பதவி, பணம் எல்லாமே வந்திருச்சு கேப்டனுக்கு... இனி யார் வசம் இருந்தா அவருக்கு என்ன?

கூடல் பாலா said...
Best Blogger Tips

கேப்டன் யோசிக்கிறார் ...யோசித்துக்கொண்டே இருக்கிறார் ...

கூடல் பாலா said...
Best Blogger Tips

பர பரப்பான அரசியலைக்கூட கவிதையாகக் கொடுத்து அசத்திட்டீர் ஓய்!

ஆகுலன் said...
Best Blogger Tips

அது எப்படி அண்ணே உங்களால மட்டும் இப்படி கவிதை எழுத முடியுது........

கவிதை அருமை...

K said...
Best Blogger Tips

வணக்கம் சார், கும்புடுறேனுங்க! இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

கேப்டன் அவர்கள்...

பாய்வதற்க்கு பதுங்குகிறாறா அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கி செட்டில் ஆகிவிட்டாரா என்று தெரியவில்லை

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

கேப்டனிடம் நிறைய எதிர்ப்பார்த்தது தமிழகம் ஆனால் அவற்றை அவர் தரைமட்டமாக்கிவிட்டார்..

இன்னும் என்ன நடக்கும் பொருத்திருந்து பார்ப்போம்

K said...
Best Blogger Tips

அப்பீட் ஆகப் போகும் ஜெயலலிதாவும், அடித்தாடப் போகும் கேப்டனும்!:////

எதுல? எப்போ? எங்கே?

K said...
Best Blogger Tips

பலமான சீட்டுக்கள் பெற்று
தாத்தா கட்சிக்கு தமிழகத்தில்
வேட்டுக்கள் வைத்து
ஊழலைக் காட்டி;
உருப்படியான சேவைகள் வழங்காத
காரணம் காட்டி மக்கள்
திமுக கட்சியை உதறித் தள்ளிட
காரிருள் அகற்றும் உதய சூரியனாய்
தள்ளாடிக் கொண்டிருந்த
சூரியனை தள்ளி வைத்து
அம்மா கண் திறந்தார்,///

ஆமா, தொறந்தார்! ஓக்கே!

K said...
Best Blogger Tips

ஆட்சியைப் பிடித்து
அமோக வெற்றி பெற்று
தானுமோர் அதிரடிப் பெண்
என்பதை மீண்டும் நிரூபித்தார்!////

ஆமா, அதுவும் உண்மை! நெக்ஸ்டு?

K said...
Best Blogger Tips

வெற்றியின் மமதை
கர்வமாகி தலைவி மேனியில்
ஏதேதோ செய்து விட
ஜே அவர்கள் கலைஞரின் திட்டத்தை
கவிழ்த்திட வேண்டுமென
கரிசனை கொண்டார்!////

இத முழுமையா ஒத்துக்க முடியாது! இருந்தாலும் ஓக்கே! நெக்ஸ்ட்?

K said...
Best Blogger Tips

மக்களுக்கு நன்மை பயப்பதுவாய்
இருந்த மகத்தான திட்டங்களை
தூக்கி நான் எறிகையில்
துணிந்தவள் பெண் என(க்)
காட்டலாம் என நினைத்திருப்பாவோ?///

அப்படி அம்மா என்னதான் பண்ணினாங்கோ?

K said...
Best Blogger Tips

சமச்சீர் கல்வி, சட்டமன்றம் என
சட சடவென்று புறக்கணிப்பு வைத்து
கலைஞரின் கால் தூசி
எங்கெல்லாம் பட்டதுவோ
அங்கெல்லாம் நான் போகேன
அரசியல் உரைத்தார்,////

இது மீடியாக்கள் செய்த நாரதர் வேலை! அம்மா, அவசியமான நடவடிக்கைகளையே எடுத்தார்!

K said...
Best Blogger Tips

ஏழைகள் உள்ளமோ அம்மாவின்
இரு கண்களிலிருந்தும்
கண்ணீராய் கல்வி மழை
பொழியாதா என காத்திருக்கையில்;
உச்ச நீதிமன்றம்
உருவம் கொடுத்து
ஏழைகள் உள்ளத்திற்கு
மீண்டும் சமச்சீர் கல்வி வரும்
எனும் சேதியை
உணர்சி ததும்பச் சொல்லியது!
மகிழ்ந்தனர் மக்கள்- ஆனால்
மக்களின் தலைவி
எது செய்யினும்
எதிர்க் கட்சி வரிசையோ
மௌனமாய் இருப்பதால்
மகிழ்ந்தது ஜே உள்ளம்!////

அப்படியே, கேப்டன் எதிர்த்திருந்தாலும்........!!!

ஜே இல்ல சார், ஜெ!

Ashwin-WIN said...
Best Blogger Tips

அருமை அய்யா.. ஒரு வெண்பா ரேஞ்சுல தமிழக அரசியல புட்டுவச்சிருக்குரியல். நல்லாருக்கு. நிருபனின் தமிழ் எப்போதும் எனக்கு பிடிக்கும். வாழ்த்துக்கள்.

இவ்வளவுனாலும் இந்த பக்கம் வராததுக்கு வருந்துகிறேன் தோழா..
இனிமே வந்துடுரன்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

அரசியல் ஆய்விற்கும் கவிநடையா? அசத்தீட்டீர் தம்பி

அம்பலத்தார் said...
Best Blogger Tips

அரசியலில் பதவிக்கு வரமுன் பதவிக்கு வந்தபின் இரண்டையும் முடிச்ச்ப்போட்டுப் பார்க்கக்கூடாது . எதையோ சொல்லுவாங்க எதையோ செய்வாங்க. அதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியது வாக்காளனோட தலைவிதி

Unknown said...
Best Blogger Tips

கேப்டன் ஏற்கனவே 'அடிச்சுட்டு' 'ஆடி'ட்டிருக்கிறதா சொல்றாய்ங்களே?

Prabu Krishna said...
Best Blogger Tips

சில விஷயங்கள் அம்மா செய்வது சரிதான். விஜயகாந்த் அமைதிக்கு காரணமே வேறு.

Unknown said...
Best Blogger Tips

இயல்பாய் நடைமுறை அரசியலை கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள் நிரூ..

நன்று...

*anishj* said...
Best Blogger Tips

Nenga kavithaila solra alavukku ADMK aatchi mosama illa... nenga DMK kaarar nu nenaikkuren ;)

M.R said...
Best Blogger Tips

ஆட்சி மாற்றத்தையும் ,தற்காலிக அரசியல் நிலவரத்தையும் அழகான கவிதையாக தந்துள்ளீர்கள் .

அறிமுகம் செய்த நண்பர் ரெவரிக்கு வாழ்த்துக்கள்

சமுதாய கடமை செய்தாச்சி

K said...
Best Blogger Tips

ஆட்சிக்கு வருவோர்
அரசியல் தோற்றோரை
கூண்டுக்குள் அடைப்பது
இங்கே சகஜம் என்பதால்
நில அபகரிப்பு வழக்குப் போட்டு
திமுக புள்ளிகளை
நிலை குலையச் செய்தார் அம்மா!:///

அப்படியானால் குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லையா?

M.R said...
Best Blogger Tips

indli
ulavu
tamil manam
tamil 10
votted

K said...
Best Blogger Tips

அம்மாவும் பதவியேற்று
அசத்தலாய் சேவை செய்வா
என நினைத்த மக்களுக்கோ ஏமாற்றம்!
"அட யார் என்னை இன்னும்
ஐந்து வருடத்திற்கு அசைக்க முடியும்"?
எனும் இறுமாப்பால் இப்போ
மக்கள் மனதில்
அடுத்த தேர்தலுக்கான
மாற்றுத் தெரிவு இன்றி தடுமாற்றம்!////

சார், நீங்கள் ஏன் எப்ப பார்த்தாலும் அம்மாவையே சாடிவருகிறீர்கள்?

மூன்று பேரின் தூக்குத் தண்டனை விஷயத்தில், அம்மா நடந்துகொண்ட விதத்தை உலகமே பாராட்டுகிறதே!

K said...
Best Blogger Tips

சார், நீங்கள் அம்மாவைச் சாடுவதன் காரணம் புரியவில்லை! அதனால் இக்கவிதையை என்னால் ரசிக்க முடியவில்லை!

நண்பர் ரெவெரிக்கு எனது வாழ்த்துக்கள்!

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///கலைஞரின் கால் தூசி
எங்கெல்லாம் பட்டதுவோ
அங்கெல்லாம் நான் போகேன
அரசியல் உரைத்தார்,//// ரொம்ப நல்ல கொள்கைகள் )))

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///போதையில் பல செய்தி
சட்ட மன்றம் வர
முன்னர் சொன்னார்/// ஹிஹி விடுங்க விடுங்க

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///ஜால்ரா அடிக்கும் தமிழன்/// உண்மையிலே அவர் ஒரு தமிழன் இல்லையே )))

kobiraj said...
Best Blogger Tips

''அப்பீட் ஆக வைத்து ஜெ அவர்களை
தான் அடித்தாடலாம் என
நினைக்கும் கப்டனுக்கும்
யோகம் அடிக்காமலா போகும்?
அரசியல் ஒரு புரியாத புதிர் எனில்
கப்டனோ அதை விடப்
புரியாத புதிராக இருக்கிறாரே!!!''
கப்டனின் வெற்றியே பலருக்கு புரியாதபுதிர்தான் அண்ணா

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ரேவேரிக்கு வாழ்த்துகள் ..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

எந்த ஒரு மேட்டரை எடுத்தாலும் அதைல் தாத்தாவை ஒதுக்கமுடியாத அளவுக்கு தலைவரு...காமடி பீஸ் ஆகிட்டாரு....

///போதையில் பல செய்தி
சட்ட மன்றம் வர
முன்னர் சொன்னார்- இப்போ
தன் பாதையை மறந்தார் கேப்டன்;
திராவிட கட்சிகளுக்கு
ஜால்ரா அடிக்கும் தமிழன்
தான் இல்லையென பொங்கினார்
அதிரடி வசனங்களை
அது கொடுத்த உற்சாகத்தில்
ஆவேசமாய் உதிர்த்தார்///
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி போங்க பாஸ் 100 வடிவேல் காமடி பார்த்த பீலிங்கா சிரிப்பு வருது............ஹி.ஹி.ஹி.ஹி


இன்று இரவு(இலங்கை,இந்திய நேரப்படி)என் கடையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவு வர இருக்கின்றது..அவனைவரும் மறக்காமல கலந்து கொள்ளவும்(ஹி.ஹி.ஹி.ஹி இப்ப எல்லாம் எதுகும் விளம்பரம் செய்பது பேசன்)

ஆமினா said...
Best Blogger Tips

அரசியல்- புரியாத/பிடிக்காத விஷயம் :-)

ரெவரி செம எழுத்தாளர்...... பயங்கரமா தொழில்நுட்ப பதிவுலாம் எழுதுவார் :-)

வாழ்த்துக்கள்

Sivakumar said...
Best Blogger Tips

தற்போதைய ஆட்சியின் முதல் ரவுண்டில் ஜெ சில சிக்சர்களை அடித்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கும் உள்ளாட்சி தேர்தலும் போடப்போகும் பவுன்சர்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று பார்ப்போம். அதுவரை திரையுலக கேப்டன் வெறும் வைஸ் கேப்டனாகத்தான் அரசியல் களத்தில் இருந்தாக வேண்டும்.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அவர் பெட்டி வாங்கிட்டு தண்ணி அடிச்சுட்டு தூங்குரார்ந்னு நினைக்கிறேன்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

தமிழ் டென் ஐ காணோம்?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இது கவிதையா அல்லது அறம் பாடுறீங்களா ஹே ஹே ஹே ஹே....

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////ஆட்சிக்கு வருவோர்
அரசியல் தோற்றோரை
கூண்டுக்குள் அடைப்பது
இங்கே சகஜம் என்பதால்
நில அபகரிப்பு வழக்குப் போட்டு
திமுக புள்ளிகளை
நிலை குலையச் செய்தார் அம்மா!////

வினை விதைக்கும் போது தினை அறுக்க நினைத்த விதைப்பாங்க ?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அரசியலும் சாக்கடையும் நாறாமல் இருக்காது போங்க....!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

இது ஆரம்பம் இன்னும் இருக்கும் என நினைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

Unknown said...
Best Blogger Tips

மாப்ள ஹிஹி!

Mathuran said...
Best Blogger Tips

சரியா சொன்னீங்க நிரூபன்.. ஆனா இன்னமும் பல பேர் ஜெ செய்யிறது சரி என்று வாதாடிக்கொண்டிருக்கிறாங்களே

Mathuran said...
Best Blogger Tips

//ஒரு வேளை அம்மா
அசருகின்ற நேரமதில்
மெதுவாக ஆட்சியைத் தூக்கிட
வழி பார்த்திருப்பாரோ புரியலையே//

ஆமா
அம்மா அசருகிற நேரம் “இவங்க பாகிஸ்தான சேர்ந்த தீவிரவாதி என்று சொல்லாம இருந்தா சரி

Mathuran said...
Best Blogger Tips

ரெவரிக்கு வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

வாழ்க ஜனநாயகம்!!வாழ்க செந்தமிழ்நாட்டு குடிமக்கள்!!!!

செங்கோவி said...
Best Blogger Tips

ரெவரியிடம் நானும் நிறைய எதிர்பார்க்கின்றேன்..என் நம்பிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

KANA VARO said...
Best Blogger Tips

அம்மாக்கு ஜே!

Unknown said...
Best Blogger Tips

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா
எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்
என்பதற்கேற்ப செயல்படும் சகோ
நீர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
புவர் சா இராமாநுசம்

monica said...
Best Blogger Tips

கலைஞருக்கு ஜே ஜே

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

பதவி, பணம் எல்லாமே வந்திருச்சு கேப்டனுக்கு... இனி யார் வசம் இருந்தா அவருக்கு என்ன?//

அவ்....ஆனாலும் நம்பி ஓட்டுப் போட்ட மக்களையும் கேப்டன் கொஞ்சம் கவனத்தில் கொள்ளலாமே...

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

கேப்டன் யோசிக்கிறார் ...யோசித்துக்கொண்டே இருக்கிறார் .../

நன்றி பாலா அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

கேப்டன் யோசிக்கிறார் ...யோசித்துக்கொண்டே இருக்கிறார் ...//

ஹா...ஹா.....
அவ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

பர பரப்பான அரசியலைக்கூட கவிதையாகக் கொடுத்து அசத்திட்டீர் ஓய்!//

அவ்..... இவை எல்லாம் உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் தரும் ஊக்கத்தினால் தான் சாத்தியமாகின்றது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆகுலன்
அது எப்படி அண்ணே உங்களால மட்டும் இப்படி கவிதை எழுத முடியுது........

கவிதை அருமை..//

ஏன் மச்சி, ஏதும் தப்பா,
நான் சிம்பிளான கவிதை தானே எழுதியிருக்கேன்.
நன்றி...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

வணக்கம் சார், கும்புடுறேனுங்க! இருங்க படிச்சுட்டு வர்ரேன்!//

வாங்க சார், வாங்க. நான் இருக்கிறேன்.

உங்களுக்கும் வணக்கம் சார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@< கவிதை வீதி சௌந்தர் said... >

கேப்டன் அவர்கள்...

பாய்வதற்க்கு பதுங்குகிறாறா அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கி செட்டில் ஆகிவிட்டாரா என்று தெரியவில்லை//

எல்லாம் அவனுக்குத் தான் வெளிச்சம் மச்சி,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

இத முழுமையா ஒத்துக்க முடியாது! இருந்தாலும் ஓக்கே! நெக்ஸ்ட்?//

ஏன் சார் அப்படிச் சொல்லுறீங்க...

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

பதிவுலகில் வேகமாக வளர்ந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

ஜே இல்ல சார், ஜெ!//

ஒரு சின்னத் தவறு சார்,
மன்னிக்கவும்
திருத்திட்டேன்.
மிக்க நன்றி சுட்டிக் காட்டியமைக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ashwin-WIN

அருமை அய்யா.. ஒரு வெண்பா ரேஞ்சுல தமிழக அரசியல புட்டுவச்சிருக்குரியல். நல்லாருக்கு. நிருபனின் தமிழ் எப்போதும் எனக்கு பிடிக்கும். வாழ்த்துக்கள்.

இவ்வளவுனாலும் இந்த பக்கம் வராததுக்கு வருந்துகிறேன் தோழா..
இனிமே வந்துடுரன்.//

உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி பாஸ்,,

இதற்கெல்லாம் ஏன் வருத்தப்படனும்,

உங்களுக்கு டைம் உள்ள போது வாங்க.
ஆமா உங்க அடுத்த பதிவு எப்போ வரும்?

வேலாயுதம் ஸ்பேசல் ஷோ பார்த்த பின்னாடியா...
அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

அரசியல் ஆய்விற்கும் கவிநடையா? அசத்தீட்டீர் தம்பி//

ஏதோ என்னால முடிஞ்சதை, உங்களுக்காக எழுதியிருக்கேன், ரொம்ப நன்றி ஐயா..

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

அரசியலில் பதவிக்கு வரமுன் பதவிக்கு வந்தபின் இரண்டையும் முடிச்ச்ப்போட்டுப் பார்க்கக்கூடாது . எதையோ சொல்லுவாங்க எதையோ செய்வாங்க. அதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியது வாக்காளனோட தலைவிதி//

ஹா...ஹா...அரசியலில் பழம் தின்று....போட்டிருக்கிறீங்களே...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

கேப்டன் ஏற்கனவே 'அடிச்சுட்டு' 'ஆடி'ட்டிருக்கிறதா சொல்றாய்ங்களே?//

அது சும்மா ட்ரெயிலர் பாஸ்.இனிமேத் தான் மெயில் பிக்ஸரே காட்டுவாரு என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Prabu Krishna (பலே பிரபு)

சில விஷயங்கள் அம்மா செய்வது சரிதான். விஜயகாந்த் அமைதிக்கு காரணமே வேறு.//

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் நண்பா.
ஆனாலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து மேலும் மேலும் அரிய சேவைகளை அம்மா புரியலாமே.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு
இயல்பாய் நடைமுறை அரசியலை கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள் நிரூ..

நன்று..//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@*anishj*

Nenga kavithaila solra alavukku ADMK aatchi mosama illa... nenga DMK kaarar nu nenaikkuren ;)//


சகோதரம், நான் கவிதையில் சொல்ல வந்த விடயம் உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன், மீண்டும் ஒரு தரம் கவிதையினைப் படித்துப் பாருங்களேன்.

நான் அம்மா செய்த நன்மைகளை விட, அம்மா விட்ட ஒரு சில சறுக்கல்களைத் தான் சுட்டியுள்ளேன்.

Can you please stop bothering my self? Because I'm not a Admk or Dmk Supporter?
Can you tell me a Popper reason? why do you want to eliminate my self?
Am i making any propaganda thorough this poem?

உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R
ஆட்சி மாற்றத்தையும் ,தற்காலிக அரசியல் நிலவரத்தையும் அழகான கவிதையாக தந்துள்ளீர்கள் .

அறிமுகம் செய்த நண்பர் ரெவரிக்கு வாழ்த்துக்கள்

சமுதாய கடமை செய்தாச்சி//

உங்களின் மேலான கருத்துக்களிற்கும், அன்பிற்கும் நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

அப்படியானால் குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லையா?//

குற்றவாளிக்குத் தண்டனை ஓக்கே..ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அம்மா திமுக கட்சியினர் மீது பாய வேண்டியதன் காரணம் என்ன?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சார், நீங்கள் ஏன் எப்ப பார்த்தாலும் அம்மாவையே சாடிவருகிறீர்கள்?

மூன்று பேரின் தூக்குத் தண்டனை விஷயத்தில், அம்மா நடந்துகொண்ட விதத்தை உலகமே பாராட்டுகிறதே//

இல்லையே சார்,
என் பதிவுகளில் கலைஞர், தங்கபாலு, ஏன் மன்மோகன் சோனியா, கனிமொழியைக் கூடச் சாடியிருக்கிறேனே,

மக்களுக்குச் சேவை செய்வோர் ட்
தவறு விடும் போது அதனை விமர்சிப்பதும்,

நல்ல பணி செய்யும் போது பாராட்டுவதும் எம் கடமை தானே..
என் பழைய பதிவுகளை நீங்கள் படித்திருப்பீங்க என்று நினைக்கிறேன் சார்,.,


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்ல முடியாதே சார்,

தூக்குத் தண்டனை விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அம்மாவின் சேவையில் எல்லாமே நன்றாக இடம் பெறுகின்றது என்று சொல்ல முடியாதே...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், நீங்கள் அம்மாவைச் சாடுவதன் காரணம் புரியவில்லை! அதனால் இக்கவிதையை என்னால் ரசிக்க முடியவில்லை!

நண்பர் ரெவெரிக்கு எனது வாழ்த்துக்கள்!//

உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயமகா ரேவரியைப் போய்ச் சேரும் நண்பா.

உங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

///ஜால்ரா அடிக்கும் தமிழன்/// உண்மையிலே அவர் ஒரு தமிழன் இல்லையே )))//

அவர் உணர்வால் தமிழன் தானே சார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@kobiraj

கப்டனின் வெற்றியே பலருக்கு புரியாதபுதிர்தான் அண்ணா//

ஆமா நண்பா..
ரொம்ப நன்றி

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி போங்க பாஸ் 100 வடிவேல் காமடி பார்த்த பீலிங்கா சிரிப்பு வருது............ஹி.ஹி.ஹி.ஹி//

அவ்.....நிஜமாவா பாஸ்..

ஓவராச் சிரித்து ஊரைக் கூட்டிடாதீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
அரசியல்- புரியாத/பிடிக்காத விஷயம் :-)

ரெவரி செம எழுத்தாளர்...... பயங்கரமா தொழில்நுட்ப பதிவுலாம் எழுதுவார் :-)

வாழ்த்துக்கள்//

உங்கள் வாழ்த்துக்கள் நிசாயம் ரேவரியைச் சென்றடையும்,

உங்கள் வருகைக்கு நன்றி அக்காச்சி.

தனிமரம் said...
Best Blogger Tips

அம்மாவின் தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறீங்க!
விஜய்காந்த் இப்போது தானே களத்தில் இறங்கியிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கள் மக்கள் நாடகமேடையில் இனித்தான் நடிப்பார் அதற்குள் இப்படிக் குத்தலாமா பாஸ்! 
உயிர் மூச்சில் கூட அவர் தடைகளைத் தாண்டனும் இல்லையா ! தமிழக அரசியல் தவலும் கவிதை!

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

தற்போதைய ஆட்சியின் முதல் ரவுண்டில் ஜெ சில சிக்சர்களை அடித்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கும் உள்ளாட்சி தேர்தலும் போடப்போகும் பவுன்சர்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று பார்ப்போம். அதுவரை திரையுலக கேப்டன் வெறும் வைஸ் கேப்டனாகத்தான் அரசியல் களத்தில் இருந்தாக வேண்டும்.//

ம்ம்
நண்பா உங்கள் கருத்திற்கு நன்றி..
கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போமே...

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அவர் பெட்டி வாங்கிட்டு தண்ணி அடிச்சுட்டு தூங்குரார்ந்னு நினைக்கிறேன்..//

பாஸ், என்னமோ சொல்லுறீங்க. நான் இந்த சீனுக்கு அரைத் தூக்கம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

தமிழ் டென் ஐ காணோம்?//

இப்போ இருக்கே.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

இது கவிதையா அல்லது அறம் பாடுறீங்களா ஹே ஹே ஹே ஹே....//

அவ்....இரெண்டும் தான் பாஸ்..

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

வினை விதைக்கும் போது தினை அறுக்க நினைத்த விதைப்பாங்க ?//

இதுக்குப் பின்னாடி இப்படி ஓர் தத்துவமும் இருக்கா..

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மச்சி,

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

மாப்ள ஹிஹி!//

நன்றி மாம்ஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

சரியா சொன்னீங்க நிரூபன்.. ஆனா இன்னமும் பல பேர் ஜெ செய்யிறது சரி என்று வாதாடிக்கொண்டிருக்கிறாங்களே//

மதுரன் நீங்க துஸியைப் பற்றி இங்கே ஏதும் குறிப்பிடலைத் தானே..

அவ்.........;-)))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

ஆமா
அம்மா அசருகிற நேரம் “இவங்க பாகிஸ்தான சேர்ந்த தீவிரவாதி என்று சொல்லாம இருந்தா சரி//

ஹே...ஹே....அவ்........

நிரூபன் said...
Best Blogger Tips

@R.Elan.

வாழ்க ஜனநாயகம்!!வாழ்க செந்தமிழ்நாட்டு குடிமக்கள்!!!!//

அவ்....நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

ரெவரியிடம் நானும் நிறைய எதிர்பார்க்கின்றேன்..என் நம்பிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.//

ஆமாம் மச்சி,
நிச்சயம் அவர் கலக்குவார்,
ஆமா பதிவைப் பற்றி ஏதும் சொல்லாம போயிட்டீங்களே.

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO

அம்மாக்கு ஜே!//

என்ன பாஸ், நாம இங்கே என்ன ஊர்வலாம போறோமே..

இல்லே கொடி பிடிக்கிறோமா.

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா
எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்
என்பதற்கேற்ப செயல்படும் சகோ
நீர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
புவர் சா இராமாநுசம்//

நன்றி ஐயா..

Mathuran said...
Best Blogger Tips

@நிரூபன்மதுரன் நீங்க துஸியைப் பற்றி இங்கே ஏதும் குறிப்பிடலைத் தானே..

அவ்.........;-)))))))//

அடிங் கொய்யாலே
நல்லாத்தான் மூட்டுறீங்கய்யா..

இருங்க இருங்க... ரைம் வரட்டும் பார்த்துக்கிறேன்..

நல்ல வேள துஷி வரல்ல

நிரூபன் said...
Best Blogger Tips

@jinglibingli

கலைஞருக்கு ஜே ஜே//

அட இதுவும் நல்லாத் தானே இருக்கு,
ஆமா நாம இங்கே என்ன கட்சி ஊர்வலாம நடாத்துறோம்;-)))))))))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@astroசதீஷ்குமார்

பதிவுலகில் வேகமாக வளர்ந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்..//

இல்ல பாஸ்...நான் இப்பவும் 172Cm உயரத்தில தான் இருக்கேன்...
அவ்..

உங்களைப் போன்ர நல் உள்ளங்களின் அன்பும், ஆதரவும் தான் இதற்கான காரணம் அண்ணாச்சி,
ரொம்ப நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

அம்மாவின் தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறீங்க!
விஜய்காந்த் இப்போது தானே களத்தில் இறங்கியிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கள் மக்கள் நாடகமேடையில் இனித்தான் நடிப்பார் அதற்குள் இப்படிக் குத்தலாமா பாஸ்!
உயிர் மூச்சில் கூட அவர் தடைகளைத் தாண்டனும் இல்லையா ! தமிழக அரசியல் தவலும் கவிதை!//

ம்...நீங்கள் சொல்வது போல பொறுத்திருப்போம் நண்பா.

உங்களின் புரிதலுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

@நிரூபன்மதுரன் நீங்க துஸியைப் பற்றி இங்கே ஏதும் குறிப்பிடலைத் தானே..

அவ்.........;-)))))))//

அடிங் கொய்யாலே
நல்லாத்தான் மூட்டுறீங்கய்யா..

இருங்க இருங்க... ரைம் வரட்டும் பார்த்துக்கிறேன்..

நல்ல வேள துஷி வரல்ல//

இது கூட உங்களுக்காகப் பண்ணலைன்னா நண்பன் என்று எப்படி பாஸ் இருக்கிறது..
ஹே..ஹே...

செங்கோவி said...
Best Blogger Tips

சென்ற ஆட்சியை ஒப்பிடும்போது, இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை நிரூ.

செங்கோவி said...
Best Blogger Tips

விஜயகாந்த்தை மாற்றாக மக்கள் இன்னும் எண்ணவில்லை என்றே நினைக்கின்றேன். அவர் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக திறம்பட செயலாற்றினால் மட்டுமே வருங்காலத்தில் வாய்ப்பு.

Anonymous said...
Best Blogger Tips

அம்மாவை லேசாக இடது கையால் கவிதையால் கொட்டிவிட்டு...
என்னை உங்கள் மோதிரக்கையால் கொட்டி விட்டீர்கள்...இது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி...
பான்யன் பற்றிய என் பதிவு வெளியான நேரத்தில் இதை செய்வதை என்னால் மறக்கமுடியாது...
இதனால் அவர்கள் பெயரும் பரவும்...என் தோள்களில் பளுவும் அதிகம் ஆகிறது....

நன்றி சொல்வதை விட உங்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி
செய்வதே சரியென்று எனக்கு படுகிறது...சகோதரரே...

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

அருமை வாழ்த்துக்கள் சகோ .......

ezhilan said...
Best Blogger Tips

க்விதை வடிவம் நன்றாக உள்ளது. ஆனால் எந்த ஆட்சியையும் ஆறு மாதங்கள் ஆவதுற்குள் விமர்சனம் செய்வது பண்பாடு அல்ல.கருனநிதி பேசுகிறார் என்றால் அது விரக்தியின் வெளிப்பாடு.தங்களுக்குமா?

Yoga.s.FR said...
Best Blogger Tips

அந்த "அம்மா" வின் கட்டளைப்படி கேப்புட்டன் வாய் மூடியிருக்கிறாரோ?(டவுட்டு!)

Yoga.s.FR said...
Best Blogger Tips

தி.மு.க விலிருந்து "ஆள்" வரும் என்று அடக்கி வாசிக்கிறாரோ?

Yoga.s.FR said...
Best Blogger Tips

டாக்குட்டர் ராமதாஸ் மாதிரி ஆயிடக் கூடாதுன்னு..........................................!ச்சீ,என்ன கொரங்கு மனமிடா இது?

shanmugavel said...
Best Blogger Tips

தமிழக அரசியலை என்னை விட தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.இணைய இணைப்பு மோசம்,விரிவாக பேச முடியவில்லை,

www.eraaedwin.com said...
Best Blogger Tips

அருமை அருமை அருமை நிரூபன்

மகேந்திரன் said...
Best Blogger Tips

அரசியல் நாடகம் ஒன்று
கவிதையில் அரங்கேற்றம்
நல்லா இருக்குது அண்ணாச்சி

மகேந்திரன் said...
Best Blogger Tips

எம் அருமை நண்பர்
ரெவேரி அவர்களை இங்கு அறிமுகப்படுத்தியது
சாலச் சிறந்தது...
நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

நிகழ்கால அரசியலை கவிதை நடையில் சொன்னது அழகாயிருந்தது.

சில விசயங்களை கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்காக நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை.
சமச்சீர் கல்வியில் ஒவ்வொருவரின் அபிப்ராயமும் வேறுவேறு.

இப்பொழுதுதானே ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். உடனே விமர்சிப்பதைவிட சிறிது காத்திருக்கலாமே தோழரே.

ஆனால் முடிவு தெரியாத பல பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் செய்தது முதலமைச்சரின் சாதனை. இதில் ஒன்று மி்ன்சாரத் தடை. அப்பப்பா....போன ஆட்சியில் இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது என்று அடித்துக்கூறினார்களே.. இப்போது எங்கள் ஏரியாவில் மி்ன்தடையே கிடையாது. இப்போ மட்டும் எப்படி மின்விநியோகம் தடையில்லாமல் நடக்கிறது???.

இதுபோல் நிறைய பிரச்சனைகள்...இருந்த இடம் தெரியாமல் மறைந்தது உண்மையே.

குறைகளை சொல்லுமிடத்தில் நிறைகளை நிறைவாக பாராட்டவும்் செய்யலாமே...

சுதா SJ said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ், ஏன் கருத்துக்களை பதிய ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறீர்கள், ஆனாலும் வேலையின் காரணமாக
பிந்திய வருகையை நினைத்து கவலையாக இருக்கு, இருந்தாலும் இதுவும் நல்லதுக்கே காரணம் பலரின் கருத்துக்களையும்
அறிய முடிந்ததே.......

உண்மையில் சந்தோசமாய் இருக்கு......
ஜெயலலிதாவை புரிந்துகொண்டவர்களும்
அவரை விமர்சிக்க மட்டும் தெரிந்தவர்கள் மத்தியிலும்
அவரை பாராட்டவும் உங்கள் கவிதைக்கு எதிர்கருத்தை முன் வைக்கவும்
இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது.

உங்கள் கவிதை மிக அழகாக இருக்கு பாஸ், ஆனால் இந்த கவிதைக்கு ஜெயலலிதா முழுதாக பொருத்தமானவர் அல்ல.
ஐடியா மணி சொன்னது போல் அவர் அப்படி என்ன செய்து விட்டார் என்று எனக்கே புரியாமல் உள்ளது,
இனி உங்கள் கவிதையை பாப்போம்......................

சுதா SJ said...
Best Blogger Tips

//வெற்றியின் மமதை
கர்வமாகி தலைவி மேனியில்
ஏதேதோ செய்து விட
"ஜெ" அவர்கள் கலைஞரின் திட்டத்தை
கவிழ்த்திட வேண்டுமென
கரிசனை கொண்டார்!
மக்களுக்கு நன்மை பயப்பதுவாய்
இருந்த மகத்தான திட்டங்களை
தூக்கி நான் எறிகையில்
துணிந்தவள் பெண் என(க்)
காட்டலாம் என நினைத்திருப்பாவோ?//




அப்படி தாத்தா செய்ததை என்னத்தை தூக்கி போட்டார்,
சமசீர் கல்வியை சொல்கிறீர்களா??? தாத்தாவின் வரலாற்றை படிக்கவா பிள்ளைகளை பெற்றோர் பள்ளி அனுப்புகிறார்கள், அதுக்கு பதில் வீட்ட இருந்து கலைஞர் டிவி பார்த்தாலே போதுமே.....

சட்டமன்ற கட்டிடம் என்றால்....... அதை அவர் எதுக்கு பயன் படுத்தின என்ன , பிரயோசனமாய் பயன் படுத்துகிறார் என்பதுதானே முக்கியம்.
தாத்தா ஜெயா இடத்தில் இருந்து இருந்தால் இதை விட அதிகம் மாற்றி இருப்பார் தெரிந்துகொள்ளுங்கள் பாஸ்.
இதற்க்கு முந்தைய கலைஞர் ஆட்சி சாட்சி

சுதா SJ said...
Best Blogger Tips

//சமச்சீர் கல்வி, சட்டமன்றம் என
சட சடவென்று புறக்கணிப்பு வைத்து
கலைஞரின் கால் தூசி
எங்கெல்லாம் பட்டதுவோ
அங்கெல்லாம் நான் போகேன
அரசியல் உரைத்தார்,//


இதற்க்கு முதல் கமெண்ட்ஸ் லேயே பதில் சொல்லிட்டேன் என்று நினைக்குறேன்.

சுதா SJ said...
Best Blogger Tips

///ஏழைகள் உள்ளமோ அம்மாவின்
இரு கண்களிலிருந்தும்
கண்ணீராய் கல்வி மழை
பொழியாதா என காத்திருக்கையில்;
உச்ச நீதிமன்றம்
உருவம் கொடுத்து
ஏழைகள் உள்ளத்திற்கு
மீண்டும் சமச்சீர் கல்வி வரும்
எனும் சேதியை
உணர்சி ததும்பச் சொல்லியது!
மகிழ்ந்தனர் மக்கள்- ஆனால்
மக்களின் தலைவி
எது செய்யினும்
எதிர்க் கட்சி வரிசையோ
மௌனமாய் இருப்பதால்
மகிழ்ந்தது "ஜெ" உள்ளம்!///



எதிர் கட்சி என்றால் எப்பவும் நல்ள்ளது செய்தாலும் கேட்டது செய்தாலும் ஒரே மாதிரி விமர்சிக்க வேண்டுமா??
அப்படி செய்ய விஜயகாந்த் ஒன்றும் கருணாநிதி இல்லை.
அதை விட சமசீர் பாட புத்தக விடயத்தில் ஜெயா-விஜயகாந்த் இருவரும் ஒரே முடிவே...
இப்படி இருக்கையில் விஜயகாந்த் எப்படி விமர்சிப்பார்????????????????????????????

சுதா SJ said...
Best Blogger Tips

///ஆட்சிக்கு வருவோர்
அரசியல் தோற்றோரை
கூண்டுக்குள் அடைப்பது
இங்கே சகஜம் என்பதால்
நில அபகரிப்பு வழக்குப் போட்டு
திமுக புள்ளிகளை
நிலை குலையச் செய்தார் அம்மா!//

தேர்தல் பிரச்சாரத்திலேயே ஜெயா இதை சொன்னார், சொன்னதை செய்வதுதானே முதல்வருக்கு அழகு, இதனால் ஜெயா செல்வாக்கு உயர்ந்ததுதான் உண்மை.

சுதா SJ said...
Best Blogger Tips

///ஆட்சிக்கு வருவோர்
அரசியல் தோற்றோரை
கூண்டுக்குள் அடைப்பது
இங்கே சகஜம் என்பதால்
நில அபகரிப்பு வழக்குப் போட்டு
திமுக புள்ளிகளை
நிலை குலையச் செய்தார் அம்மா!//

தேர்தல் பிரச்சாரத்திலேயே ஜெயா இதை சொன்னார், சொன்னதை செய்வதுதானே முதல்வருக்கு அழகு, இதனால் ஜெயா செல்வாக்கு உயர்ந்ததுதான் உண்மை.

சுதா SJ said...
Best Blogger Tips

//அம்மாவும் பதவியேற்று
அசத்தலாய் சேவை செய்வா
என நினைத்த மக்களுக்கோ ஏமாற்றம்!
"அட யார் என்னை இன்னும்
ஐந்து வருடத்திற்கு அசைக்க முடியும்"?
எனும் இறுமாப்பால் இப்போ
மக்கள் மனதில்
அடுத்த தேர்தலுக்கான
மாற்றுத் தெரிவு இன்றி தடுமாற்றம்!//



இது அபத்தம் பாஸ் அநியாயம்
உங்கள் ஒருவரின் முடிவையே மக்கள் முடிவாக சொல்லபடாது....??
ஜெயா ஆட்சியில் மக்கம் கொஞ்சம் கடுப்பானது என்றால் அது சமசீர் புத்தள விடயத்தி மட்டுமே,
அதை கூட உச்ச நீதி மன்ற முடிவை மதிக்குறேன் என்று பணிந்து போய் கொஞ்சம் சமரசம் செய்துவிட்டார்....
ஜெயாவின் 100 ஆட்சியை விமர்சித்த மீடியாக்களும் அண்மையில் இதைதான் சொன்னது.

பாஸ்..... தப்பா சொல்லி இருந்தா சாரி.... இது முழுக்க முழுக்க என் கருத்து
எனக்கு சரி என்று பட்டதை உங்களிடம் சொல்ல உரிமை இருக்கு நீங்கள் அந்த உரிமையை தந்து இருக்கீறீர்கள் என்ற
முறையில் சொல்லி இருக்கேன், தப்புண்ண சாரி

சுதா SJ said...
Best Blogger Tips

கடைசியா ஒரே ஒரு கேள்வி

ஜெயாவை விமர்சித்து பல கவிதைகள் எழுதிவிட்டீர்கள், தவறு செய்தார் விமர்சித்தீர்கள்.... ஏன் பாஸ் ஜெயா ஆட்சிக்கு வந்து இவ்ளோ நல்லது செய்துவிட்டார் இந்த 100 நாட்களுக்குள், அப்போது எல்லாம் ஏன் உங்களால் ஒரு பாராட்டு கவிதை எழுதமுடியவில்லை..??????????????????????????????????????????????????????????????????????

சுதா SJ said...
Best Blogger Tips

//மதுரன் said...
சரியா சொன்னீங்க நிரூபன்.. ஆனா இன்னமும் பல பேர் ஜெ செய்யிறது சரி///



ஆமாம் மதுரன்... நீங்கள் சொல்வது சரியே....
இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தாரே...
ராஜபக்சாவை போர் குற்றவாளியாக அறிவித்தாரே.......
ராஜ பக்சா அழைத்தும் அவர் அழைப்பை அலட்சிய படுத்தினாரே.....
இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு மாதம் மாதம் உதவிப்பணம் கொடுக்க சட்டம் கொண்டுவந்தாரே...
இப்போ கூட தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்ற சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தாரே....
இவரை ஆதரிப்பது தப்புத்தான், ஆனாலும் இந்த தப்பை கடைசி வரை செய்யலாம் என்று இருக்கேன்.
காரணம் எனக்கு மனசாட்சி இருக்கு..... என்று வாதாடிக்கொண்டிருக்கிறாங்களே//

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

கேப்டன் தொலை நோக்குப்பார்வைல தின்ங்கிங்க்

*anishj* said...
Best Blogger Tips

நான் சொல்ல வந்த விடயமும் உங்களுக்கு புரியலை தலைவா...
நீங்க “சறுக்கல்” என குறிப்பிட்டவற்றை தான் நான் எதுனு கேக்குறேன்...
I CAN TELL U A PROPPER REASON


//மக்களுக்கு நன்மை பயப்பதுவாய்
இருந்த மகத்தான திட்டங்களை
தூக்கி நான் எறிகையில்//

கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பின்னணியில் நடந்தது என்னவென்று உங்களுக்கு முழுமையாக தெரியுமா?

//சமச்சீர் கல்வி, சட்டமன்றம் என
சட சடவென்று புறக்கணிப்பு வைத்து//

தமிழ்நாட்டின் தற்பொழுதையா(சமச்சீர்கல்வி வருவதற்கு முன்பு இருந்ததையும் சேர்த்துதான்) கல்வியின் தரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

//கூண்டுக்குள் அடைப்பது
இங்கே சகஜம் என்பதால்
நில அபகரிப்பு வழக்குப் போட்டு
திமுக புள்ளிகளை
நிலை குலையச் செய்தார் அம்மா!//

இந்த வரிகளுக்காக தான் உங்களை திமுக காரரோ என சந்தேகப்பட்டேன்... உங்களுக்கு இங்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே இன்னும் புரியவில்லை தெரியவில்லை

//அம்மாவும் பதவியேற்று
அசத்தலாய் சேவை செய்வா
என நினைத்த மக்களுக்கோ ஏமாற்றம்!//

எந்த மக்களுக்கு ஏமாற்றம்.? திமுக வின் மக்களுக்கா? ஒரு அரசு 3 மாதத்தில் என்னவெல்லாம் சாதித்திருக்கலாம் என நினைக்கிறீர்கள்?

பின்குறிப்பு: நான் திமுக அல்லது அதிமுக ஆரதவாளனோ அல்ல. நல்லவற்றை பாரட்டவும், ஒரு கருத்தில் தவறு என தெரிந்தால் எதிர் கருத்து சொல்லவும் தெரிந்த ஒரு சாதரணமான மனிதன். உங்க கவிதை முரசொலியில் கருணாநிதி எழுதும் கவிதை போல் இருந்தது அதான் கேட்டேன். அவ்வளவு தான்....

சுதா SJ said...
Best Blogger Tips

/////*anishj* said... ///

நீங்கள் சொல்வது மிக சரியே

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
கடைசியா ஒரே ஒரு கேள்வி

ஜெயாவை விமர்சித்து பல கவிதைகள் எழுதிவிட்டீர்கள், தவறு செய்தார் விமர்சித்தீர்கள்.... ஏன் பாஸ் ஜெயா ஆட்சிக்கு வந்து இவ்ளோ நல்லது செய்துவிட்டார் இந்த 100 நாட்களுக்குள், அப்போது எல்லாம் ஏன் உங்களால் ஒரு பாராட்டு கவிதை எழுதமுடியவில்லை..?????????//

பாஸ், உங்களுக்கு சந்தேகம் இல்லைனா,
இந்த இரண்டு பதிவுகளையும் படித்து விட்டு வாங்கோ.

http://www.thamilnattu.com/2011/08/blog-post_6243.html

http://www.thamilnattu.com/2011/07/blog-post_08.html


இங்கே நான் என்ன எழுதியிருக்கேன் என்று பாருங்க.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails