Tuesday, September 6, 2011

ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!

மெல்லிதாய் மேலெழும்பி
நாள் தோறும் புலர்ந்து மறையும்
வலையுலக நாழிகைகள் நடுவே
தொலைந்து போகின்றன
எங்களின் உணர்வலைகள்!
நிரூபனின் நாற்று
ஆண்கள் மட்டும் தான்
அதிகம் எழுதலாம் என்பதும்
அவர்கள் மட்டும் தான்
தம் உணர்வுகளை
உச்சுக் கொட்டலாம்
என்று கூறுவதும்
யார் இங்கு இயற்றி வைத்த
சட்டமோ தெரியவில்லை!
எங்களுக்குள்ளும் சாதாரண
மனிதர்களைப் போன்ற
மன உணர்விருக்கும்,
எம் உணர்வுகளுக்கு
உருவம் கொடுத்து
எழுதிட இணையம்
வாய்ப்புத் தந்தது- ஆனால்
எம் இடையே உள்ள
பச்சோந்திகளும், நரிகளும்
காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்;
காம சுகம் தேடும்
மோகத்தில் அலைந்து
காறி உமிழ நினைக்கிறார்கள்!நிரூபனின் நாற்று 

நாளைய பெண்களின் விடுதலை
நம் உளத்தில் தோன்றும்
இன்றைய வாழ்வின் சிந்தனை
மனதில் எழும் இன்ப
உணர்வுகள் இவை யாவும்
எழுதினாலும்,
எமக்கான பட்டம் வேசை!
சமையல் குறிப்போடு
சங்கதிகள் பல சொல்லின்
எமக்கான பெயர்
சக்களத்தி!

காதலைப் பற்றி பெண்
கவிதை பாடினால்
அவளைப் பின் தொடர்ந்து வந்து
காமத்திற்காய் சுகம் தேடி
அலைந்து இம்சையை கூட்டுகின்றன
இதயமற்ற நெஞ்சங்கள்!

முதலில் எம்மைப் பின் தொடர்ந்து
அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர்
மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி
எம் மின்னஞ்சல் எடுத்து
அதில் அன்பெனும் களிம்பு தடவி
சகோதரனாய் உறவாடி,
சற்றே நாம் நிலை தளர்ந்து
ஒரு பொதுவான விடயத்தை
வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும்,
உனக்கும் அனுபவமோ என கேட்டு
காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்!
நிரூபனின் நாற்று
மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில்
உனக்கு பீரியட்ஸ் வந்தால்
பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என
பிளிறுகின்றன சிலம்போசை
எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்!

பெண்கள் இத்தகைய வரையறைக்குள்
வாழ வேண்டும் என்பதில்
மட்டும் கருமமே கருத்தாய் உள்ள
சீழ் கட்டிய செத்து விட்ட
உக்கி உலர்ந்த மனங் கொண்ட
கீழ்த் தரமான ஆண்களோ,
வெளி உலகின் பார்வைக்கு
முக்காடு போட்டு நடந்து,
உள் உலகில்
எம் மெயில் பெட்டி தேடி
மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம்
விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!!
இன்பமெனும் வார்த்தை
எம் பதிவுகளில் வந்தால்
உனக்கும் அனுபவமோ என
ஆளைக் கொல்லும்
சுனாமியாய் பொங்குகிறார்கள்!
உடலுறவு எனும்
வார்த்தையை கையாண்டால்
உனக்கும் விருப்பம் இருந்தால்
வெளியே சொல்லென
உணர்ச்சி பொங்க(ப்)
பேசுகிறது இந்தச் சமூகம்!
நிரூபனின் நாற்று
நாம் எது எழுதினாலும்
ஒரு அளவீடு கொண்டு
எம் மனங்களை மட்டும்
அளக்கத் துடிக்கும்
ஆணாதிக்கவாதிகளால்
காற்றில் பறந்து தொலைகின்றன
எம் கற்பனைச் சிதறல்கள்!

பெண் ஒரு வரம்பினுள்
வாழ வேண்டும் என(க்)
கூப்பாடு போட்டு
வெளியே சமூக காவலர்களாய்
நடிக்கும் சிறிய மனங்களின்
நரகச் செயல்களால்
நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம்
எழுத்துக் கிறுக்கல்கள்!

ஆணாதிக்கம் என்றால்
வெளியே நல்லவர் போல் நடித்து
பெண் பதிப்புக்களை
நல்லவராய் விமர்சித்து
பின் அவள் மெயில் பெட்டியூடே
அந்தரங்கம் கிளறுவது தான் என்பது
என்னைப் போல்
எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ?

எதிர்காலம் தொலைக்கப்பட்டு
எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்
நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும்
பெண்களின் உணர்வுகளில்
எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ!

ஐயகோ ஆணாதிக்கமே
காலாச்சாரம் கட்டி(க்)
காக்கத் துணியும்
காவல் போலிசுகளே!
இப்படி எத்தனை பெண்களின்
வாழ்க்கையினை சீரழித்து(ச்)
சுகம் காண்பீர்!!

பண்டைய நாகரிக மரபில் திளைத்து
படித்து பட்டம் பெற்றும்
பெண்ணுக்கான வரம்பு
இது என நிர்ணயம் செய்யும்
இன்றைய ஆணாதிக்கவாதிகள்
இருக்கும் வரை
எம் உணர்வுகள்
வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!!

பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்! 
****************************************************************************
அன்பு இவ் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிறைந்திருந்தால் வன்முறைகள் நிகழாதல்லவா. அது போலத் தான் அன்பு உலகத்தில் நாம் வாழ்ந்தால் எம் வாழ்வில் சிக்கல்கள் தோன்றாதல்லவா. 


அன்பு உலகம் பதிவுலகில் எங்கே இருக்கிறது என்று கேட்டால், நீங்கள் அதிகம் யோசிக்கத் தேவை இல்லை. காரணம் விடை உங்கள் கண் முன்னே இருக்கின்றது. 


பதிவர்கள் அனைவருக்கும் தேவையான ஆரோக்கியமான தகவல்கள், மருத்துவக் குறிப்புகள், இடையிடையே தொழில்நுட்பத் தகவல்கள் எனப் பல தகவல்களையும் தன் அன்பு உலகத்தில் பகிர்ந்து வருகிறார் சகோதரன் ரமேஷ் அவர்கள். (M.R)


சகோதரன் ரமேஷ் அவர்களின் அன்பு உலகம் வலைப் பூவிற்கு விஜயம் செய்து உங்கள் ஆதரவினையும் அவருக்கு வழங்கிட:
http://thulithuliyaai.blogspot.com/
*******************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன். 
இன்ட்லியில் ஓட்டளிக்க:

231 Comments:

«Oldest   ‹Older   201 – 231 of 231   Newer›   Newest»
K said...
Best Blogger Tips

அப்புறம் நிரூபன் சார், இன்னிக்கு காலைல நான் ஒரு கடுப்பு கமெண்ட் போட்டேன் தானே!

அதற்கான வி்ளக்கம்! -

அதாவது சார், நம்ம பதிவ படிச்சுட்டு யாரெல்லாம் கமெண்டு போடுறாங்களோ அவங்க அனைவருமே மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை!

ஆனால், நீங்க போடும் கமெண்டில் சம்திங் ஸ்பெஷல் இருக்கும்! என்னதான் ஆயிரம் கமெண்டு வந்தாலும், உங்க கமெண்டு வந்தால் தான் திருப்தியாக இருக்கும்!

அதாவது, ஒரு தலையாக அனுஷ்காவ லவ் பண்ணுற ஒருத்தனுக்கு, அனுஷ்காவே மனைவியா வந்தா எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும் உங்க கமெண்டு பார்க்கும் போது! ( ஹி ஹி ஹி அதுக்கேன் சார், அப்படி மொறைச்சுப் பார்க்கிறீங்க? )

இதுக்காக மத்தவங்க போடுற கமெண்டு மட்டமா இருக்கும்னு சொல்ல வரல!

ஒவ்வொருத்தர்கிட்ட ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும்! ஆனா உங்க கமெண்ட்ஸ்ல சம்திங் ஸ்பெஷல் இருக்கு!!

என்னோட லேட்டஸ்ட் பதிவுக்கு நீங்க கமெண்ட்ஸ் போடலியா? அந்தக் கடுப்புலதான் அப்படி ஒரு கடுப்பு கமெண்டு போட்டேன்!

அதே மாதிரி எனக்கு ஒரு சின்ன ஆசை!அது என்னான்னா,....

நிரூபன் said...
Best Blogger Tips

சொல்லுங்க சார்,
உங்க ஆசை என்னவென்று?

K said...
Best Blogger Tips

அதை சொல்லுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி!

சார், நான் போடுற கமெண்டால உங்களுக்கு ஏதாச்சும் பிரியோசனம் இருக்கா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

அதை சொல்லுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி!

சார், நான் போடுற கமெண்டால உங்களுக்கு ஏதாச்சும் பிரியோசனம் இருக்கா?..//

ஆமா பாஸ்,
போன தடவை பிசி காரணமாக உங்க வலைக்கு கமெண்ட் போட முடியலை, அதான் எஸ் ஆகிட்டேன், அதனை மனசிலை வைச்சிருந்து தான் ஏதோ பேசப் போறீங்க போல இருக்கு,
நான் சாப்ட் ஆன பையன் பாஸ்,
பார்த்து.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

அதை சொல்லுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி!

சார், நான் போடுற கமெண்டால உங்களுக்கு ஏதாச்சும் பிரியோசனம் இருக்கா?//

நான் உங்களைக் கோவிச்சுக்கலை பாஸ்,
நீங்க கடுப்பில கமெண்ட் போட்டாலும் ஒரு காமெடி இருகுமில்லே.
சொல்லுங்க பாஸ்.
நீங்க பின்னூட்டம் போடுவதில் பிரயோசன் இல்லேன்னா நான் ஏன் பதில் போட்டுக் கொண்டிருக்கப் போறேன்?

K said...
Best Blogger Tips

சார், நான் உங்களவிட சாஃப்ட்! நான் அனுஷ்காவ லவ் பண்றேன்னு தெரிஞ்சும் கூட, பியா எங்கிட்ட வந்து லவ்வ சொன்னப்போ, அவ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு, பியாவோட லவ்வையும் ஏத்துக்கிட்டேன்! அப்டீன்னா பாத்துக்குங்க சார் நான் எவ்வளவு சாஃப்டுன்னு!

ஸாரி ஸார்! வாயைத் தொறந்தாலே மொக்கைதான் வருது!

இப்ப சீரியசாவே சொல்லுறேன்!

சார், எனனோட ஆசை என்னான்னா,

நான் போடுற கமெண்டு உங்களுக்கு , ஒரு வித்தியாசமான திருப்திய தரணும்! என்னதான் ஆயிரம் கமெண்டுகள் உங்களுக்கு வந்தாலும், என்னோட கமெண்டுல ஏதோ ஒரு சம்திங் இருக்குறதா நீங்க ஃபீல் பண்ணனும்!

அப்படி உங்கள கவருற மாதிரி, எப்படி எப்படியெல்லாம் கமெண்டு போடலாம்னு ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ஸார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், நான் உங்களவிட சாஃப்ட்! நான் அனுஷ்காவ லவ் பண்றேன்னு தெரிஞ்சும் கூட, பியா எங்கிட்ட வந்து லவ்வ சொன்னப்போ, அவ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு, பியாவோட லவ்வையும் ஏத்துக்கிட்டேன்! அப்டீன்னா பாத்துக்குங்க சார் நான் எவ்வளவு சாஃப்டுன்னு!

ஸாரி ஸார்! வாயைத் தொறந்தாலே மொக்கைதான் வருது!

இப்ப சீரியசாவே சொல்லுறேன்!

சார், எனனோட ஆசை என்னான்னா,

நான் போடுற கமெண்டு உங்களுக்கு , ஒரு வித்தியாசமான திருப்திய தரணும்! என்னதான் ஆயிரம் கமெண்டுகள் உங்களுக்கு வந்தாலும், என்னோட கமெண்டுல ஏதோ ஒரு சம்திங் இருக்குறதா நீங்க ஃபீல் பண்ணனும்!

அப்படி உங்கள கவருற மாதிரி, எப்படி எப்படியெல்லாம் கமெண்டு போடலாம்னு ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ஸார்!//

நீங்க ஒரு புதுப் பதிவரா இருந்தாலும்,
என் கூட இவ்வளவு அன்பா இருக்கிறீங்களே,
புல்லரிக்குது சார்.
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியலை.
நான் கூட உங்களுக்கு அப்படித் தான் கமெண்ட் போடுவேன்.
ஆனால் நான் டைம் ஒதுக்கி யோசித்துக் க்மெண்ட் போடும் அளவிற்கு எனக்கு டைம் இல்லை பாஸ்.,
ஆனாலும் என்னால் திருப்திகரமாகப் போட முடிந்த கமெண்டுகளை உங்களுக்கு வழங்குவேன் பாஸ்,

நோ ப்ராப்ளம்.
பீ ஹேப்பி!
ஹா...ஹா...

K said...
Best Blogger Tips

அப்புறம் இன்னுமொரு மேட்டர் சார்!

K said...
Best Blogger Tips

சார், ஆரம்பத்துல நீங்க எங்கிட்ட பழகும் போது, நான் தான் ஓட்ட வட நாராயணன் அப்டீன்னு நெனைச்சு பழகினீங்க இல்லையா?

நீங்க அப்படி பழகும் போது, எனக்கு மனசுக்குள்ள ஒரே குற்ற உணர்ச்சியா இருந்திச்சு சார்!

நீங்க என்னைய, அவருன்னு நெனைச்சு எக்கச்சக்கமான கமெண்டுகள் போட்டீங்க! அதுனால நான் மிகவும் நொந்திட்டேன்!

ஏன்னா, எங்க ஒருவேளை உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னைய வெறுத்து ஒதுக்கிடுவீங்களோன்னு நெனைச்சுப் பயந்துக்கிட்டு இருந்தேன்!

ஆனா நல்ல வேளை, உண்மை தெரிஞ்சும் கூட நீங்க என்னைய வெறுக்கல!

அதுக்காக ரொம்ப தேங்க்ஸ் சார்!

K said...
Best Blogger Tips

சார், அவரு கஷ்டப்பட்டு வலையுலகில ஒரு உயர்ந்த இடத்துக்கு வந்தாரு! அவரோட உழைப்புல நான் குளிர் காயுற மாதிரி ஃபீல் பண்ணினேன்!

என்னோட எழுத்துப் பாணியும், அவரோட எழுத்துப் பாணியும் ஒரே மாதிரி இருக்குறதால தானே இந்தக் கன்ஃபியூஷன் அப்டீன்னு நெனைச்சு, பதிவு எழுதுறத நிறுத்திடுவோமோன்னு கூட நெனைச்சேன் சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், ஆரம்பத்துல நீங்க எங்கிட்ட பழகும் போது, நான் தான் ஓட்ட வட நாராயணன் அப்டீன்னு நெனைச்சு பழகினீங்க இல்லையா?

நீங்க அப்படி பழகும் போது, எனக்கு மனசுக்குள்ள ஒரே குற்ற உணர்ச்சியா இருந்திச்சு சார்!

நீங்க என்னைய, அவருன்னு நெனைச்சு எக்கச்சக்கமான கமெண்டுகள் போட்டீங்க! அதுனால நான் மிகவும் நொந்திட்டேன்!

ஏன்னா, எங்க ஒருவேளை உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் என்னைய வெறுத்து ஒதுக்கிடுவீங்களோன்னு நெனைச்சுப் பயந்துக்கிட்டு இருந்தேன்!

ஆனா நல்ல வேளை, உண்மை தெரிஞ்சும் கூட நீங்க என்னைய வெறுக்கல!

அதுக்காக ரொம்ப தேங்க்ஸ் சார்!//

சார். எனக்கு அவரும் நண்பர் தான், நீங்களும் நண்பன் தான்...
ஆகவே நான் தப்பா நெனைக்க மாட்டேன் பாஸ்.

K said...
Best Blogger Tips

ஓகே சார் கெளம்புறேன்! என்னோட ப்ளாக்குல நீங்க போட்ட கமெண்ட்சுக்கு பதில் போடப் போறேன்! ஓகே பாய்!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//’ ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!’//

”பெண்பதிவர்களால் அவமானப்படுத்தப்படும் ஆண் பதிவர்கள்” இது எப்பூடி? எப்பூடி? எப்பூடி?:)))))..


//பெண்கள் ஒரு எல்லையை உருவாக்கிட்டா பாதி பிரச்சனை தீர்ந்துடும்னு நெனைக்கிறேன்!///

விடிய விடிய ராமன் கதை என்பது போலிருக்கிறது, இந்தக் கமெண்ட்!

பெண்கள் சுதந்திரமாகவும், விடுதலை உணர்வோடும் வலையுலகில் செயற்பட வேண்டும் என்று, நாமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!

மறுபடியும் பெண்களுக்கு எல்லை வகுக்க வேண்டுமாம்! என்ன கொடுமை சார், இது?

ஆமா, அதை ஏன் நிரூபன் சார்

‘ நன்றாகச் சொன்னீங்க அக்கா.’

என்று வழி மொழிந்தீர்கள்?///

நிரூபன்... நிரூபன்... இளைய தளபதி நிரூபன்.. வெளியில வாங்க.. எதுக்காக வழிமொழிந்தீங்க?:))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))... விடமாட்டமில்ல... பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிருபரை சே சே என்னப்பா இது ஸ்பெலிங் மிஸ்ரேக்காக இருக்கே... நிருபனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.....:))))


ஆஆஆஆ..... முருங்ஸ்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூ?:)) மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

வருங்காலத்தில எனக்கு ஏதாவது பதிவர் பிரச்சனை வந்தால் நான் “இளைய தளபதி நிரூபனைத்தான்” அழைப்பேன்.... ஓடிவந்து பிரச்சனையைத் தீர்க்கோணும்:)))) ஓக்கேயா நிரூபர்... சே..சே.. நிரூபன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

அடடா வாழ்த்த மறந்திட்டனே.... எம் ரமேஸ்ஸ்ஸ்ஸ் வாழ்த்துக்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன்... நிரூபன்... இளைய தளபதி நிரூபன்.. வெளியில வாங்க.. எதுக்காக வழிமொழிந்தீங்க?:))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))... விடமாட்டமில்ல... பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நிருபரை சே சே என்னப்பா இது ஸ்பெலிங் மிஸ்ரேக்காக இருக்கே... நிருபனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.....:))))


ஆஆஆஆ..... முருங்ஸ்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூ?:)) மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).//

நான் பதில் போட்டிட்டேனே...
அவ்.............

ஏன் முருங்கையில் தான் பூனை இருக்குமோ...
முள்ளுக் குத்தாதா;-)))))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
வருங்காலத்தில எனக்கு ஏதாவது பதிவர் பிரச்சனை வந்தால் நான் “இளைய தளபதி நிரூபனைத்தான்” அழைப்பேன்.... ஓடிவந்து பிரச்சனையைத் தீர்க்கோணும்:)))) ஓக்கேயா நிரூபர்... சே..சே.. நிரூபன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))//

சொல்லிட்டீங்க எல்லே..
பஞ்சாயத்தைக் கூட்டினாப் போச்சு,

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அடடா வாழ்த்த மறந்திட்டனே.... எம் ரமேஸ்ஸ்ஸ்ஸ் வாழ்த்துக்கள்.//

உங்கள் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அவரைப் போய்ச் சேரும்.
நன்றி பூஸாரே.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//ஏன் முருங்கையில் தான் பூனை இருக்குமோ...
முள்ளுக் குத்தாதா;-))))))))) //

இல்ல இது குத்தாத முருங்கை:))(இது வேற குத்தாத:)).

ஆ.... நிரூபன் இண்டைக்குத்தான் உடனடிப் பதில் தந்திருக்கிறீங்க, மற்றும்படி எல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான் சொல்றனான், இண்டைக்கு நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஒன்லி மியாவ்வ்வ்வ்வ்:))).

K said...
Best Blogger Tips

நானும் திரு.ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்!

முதலாவது பதிவிலே, தலைப்ப மட்டும் போட்டு பதிவ போடாமல் ஏமாற்றி, ரெண்டாவது பதிவில் ஒரு அழகான பெண்ணின் கைகையைப் போட்டு எம்மை குளிர்வித்து, 3 வது பதிவில், எங்கோ படித்து சுவைத்த ஒரு கிளுகிளுப்பான கதையைப் போட்டு எம்மை சூடேற்றி,

4 வது பதிவில் வெறும் 3 வரியில் கீதாசாரம் போட்டு சிந்திக்க வைத்து,

5 வது பதிவில் 3 வரியில் ஆங்கிலத்தில் பதிவு போட்டு எமது தலைகளைச் சுற்ற வைத்து,

6 வது பதிவில் புளிச்ச கீரை பற்றி பதிவு போட்டு எமக்கு அறிவூட்டி,

7 வது பதிவில் பலவீனம் பற்றி ஒரு அழகிய தத்துவம் போட்டு,

8 வது பதிவில் தியானம் பற்றி மிக நீளமான பதிவு போட்டு, சிந்திக்க வைத்து,

9 வது பதிவில் மன அழுத்தம் பற்றி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளமான அருமையான பதிவு போட்டு எமது மன அழுத்தத்தைக் குறைத்து

இந்த ஒன்பது பதிவுகளோடு தான் ஆரம்பித்த மே மாதத்தை நிறைவு செய்து,

ஜூன் மாதத்தில் 24 பதிவுகள், ஜூலை மாதத்தில் 47 பதிவுகள் என முன்னேறி ஆகஸ்டில் 29 பதிவுகளாக திடீரென்று குறைந்து, செப்டம்பரில் இதுவரை 7 பதிவுகளை வலையேற்றி,

85 ஃபாலோயர்ஸ்சும், கிட்டத்தட்ட 4450 விசிட்டர்சை பெற்று, முனைவர் ரா.குணசீலன் அவர்களிடம் விருது ஒன்றையும் பெற்று,

அழகிய பதிவுகளை இன்னும் இரண்டு ப்ளாக்குகளில் எழுதி வரும், விசில் கலைஞராகிய, எம் ஆர் என்று அழைக்கப்படும் நண்பர் ரமேஷ் அவர்கள்,

வலையுலகில் மேலும் மேலும் வெற்றிபெற வேண்டுமென அன்புடன் வாழ்த்துகிறேன்!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//

நானும் திரு.ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்///

எப்பூடித்தான் பெரீஈஈஈஈஈஈஈய பின்னூட்டம் போட்டு பூசி மெழுகினாலும்:))), முதலில் வாழ்த்துச் சொல்லாதது குற்றம் குற்றமே:))))....


ஆ.... நிரூபன்... நான் ஒரு பெண் பதிவர்:)))... என்னைக் காப்பாத்துங்கோ:)))).

K said...
Best Blogger Tips

@athira

நானும் திரு.ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்///

எப்பூடித்தான் பெரீஈஈஈஈஈஈஈய பின்னூட்டம் போட்டு பூசி மெழுகினாலும்:))), முதலில் வாழ்த்துச் சொல்லாதது குற்றம் குற்றமே:))))....


ஆ.... நிரூபன்... நான் ஒரு பெண் பதிவர்:)))... என்னைக் காப்பாத்துங்கோ:)))).:///

நிரூபன் சார், அவங்ககிட்ட சொல்லுங்க - நான் லேட்டா கமெண்டு போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கேன்னு!

அப்புறம், என்னால பெண் பதிவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல! நானும் பெண்கள் சகல சுதந்திரங்களோடயும் இருக்கணும்னு தினம் தினம் கடவுளை வேண்டிக்கறேன்! ஹி ஹி ஹி !!

நான் கடைசியா போட்டிருக்கிறதுக்கு முந்தைய பதிவ படிக்கச்சொல்லி சொல்லுங்க நிரூபன் சார்!

ஜெய்லானி said...
Best Blogger Tips

//நாம் எது எழுதினாலும்
ஒரு அளவீடு கொண்டு
எம் மனங்களை மட்டும்
அளக்கத் துடிக்கும்
ஆணாதிக்கவாதிகளால்
காற்றில் பறந்து தொலைகின்றன
எம் கற்பனைச் சிதறல்கள்!

பெண் ஒரு வரம்பினுள்
வாழ வேண்டும் என(க்)
கூப்பாடு போட்டு
வெளியே சமூக காவலர்களாய்
நடிக்கும் சிறிய மனங்களின்
நரகச் செயல்களால்
நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம்
எழுத்துக் கிறுக்கல்கள்!//


100 சதம் சரி :-)

Anonymous said...
Best Blogger Tips

அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர் எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்... தரமான படைப்பு நிரூபன்...

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//நான் கடைசியா போட்டிருக்கிறதுக்கு முந்தைய பதிவ படிக்கச்சொல்லி சொல்லுங்க நிரூபன் சார்! //

வெடி சொடி:), இருட்டில எனக்கு கண் தெரியாது:), நாளைக்கு காலையில வெளிச்சம் வந்தபிறகுதான் படிப்பேன்:))))...

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//ஜெய்லானி said...


100 சதம் சரி :-)///

ஹா..ஹா..ஹா... ஜெய்... அது சதமா? வீதமா??:)) இல்ல சும்மா ஒரு டவுட்டூஊஊஊஊ:)).

sarujan said...
Best Blogger Tips

இப்படி பதிவு நான் எழுத வேண்டும் என நினைத்தேன். எல்லாமே அருமை செக்கை அடி

AshIQ said...
Best Blogger Tips

எல்லாம் எல்லாப்பயலுகளும் திருட்டு பயலுவதான், எவனும் சுத்தம் கிடையாதுங்க. சும்ம எல்லா வேஷம்தாங்க. எப்படியாவது பேசி மூளைச்சலவை செய்து எதாவது ஒரு பென்னோட ஐடி வாங்குறது, அப்பறம் அந்த பென்னோட நெருக்கமா இருக்கிற மாதிரி தன்னுடைய ப்ளாகல பதிவுல காட்டிகிட்டு அதை வச்சே அடுத்த பென்னுக்கு ப்ராக்கெட் போடுறது, இப்படியே ஒவ்வொரு பென்னா பிடிக்கிறது..இதான் இப்ப லேட்டஸ்ட் ஸ்டைல். இதனிடையே குறிப்பிட்ட அந்த பென்னுக்கு பெர்ஷனலா மெயில் அல்லது அப்பென்னுடைய ப்ளாக்கில் கமெண்ட் பாக்ஸில் நான் என்னுடைய ப்ளாக்கின் பதிவில் உங்களை குறிப்பிட்டுள்ளேன் எதுவும் ஆட்சேபனை இருக்கானு நாகரீகமா கேட்கிறமாதிரி கேட்டுகிறது..இதை வச்சே அடுத்த பென்களை நெருங்கிறது.
சில பேர் பக்திமான் மாதிரி வேஷம் போட்டுகிட்டு வருவானுங்க, சில பேர் சீர்திருத்தவாதி மாதிரி, சில பேர் பென்கள் உரிமையை கையில எடுத்துகிட்டு நயவஞ்சகத்தோட வர்ரது..
அதாங்க நான் பாத்தவரை எல்லா நாய்களும் திருட்டு நாய்கள்தான். (சில பென்களும் கூட).
நன்றி
-ஆஷிக்

Unknown said...
Best Blogger Tips

அருமையானப் பதிவு
அனல் கக்கும் வரிகள்
அர்த்தமுள்ள கோபம்
அற்பர்களுக்கு இனியாவது புரியும்
உண்மை சகோதரர்கள்
உயிரோடு இருக்கிறார்கள் என்று..
வாழ்த்துகள், நன்றி நண்பரே!

அன்புடன்
தமிழ் விரும்பி.

"பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

- உலக மகாகவி பாரதியார்.

ஆமினா said...
Best Blogger Tips

@ஐடியா மணி
//விடிய விடிய ராமன் கதை என்பது போலிருக்கிறது, இந்தக் கமெண்ட்!

பெண்கள் சுதந்திரமாகவும், விடுதலை உணர்வோடும் வலையுலகில் செயற்பட வேண்டும் என்று, நாமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!

மறுபடியும் பெண்களுக்கு எல்லை வகுக்க வேண்டுமாம்! என்ன கொடுமை சார், இது?

ஆமா, அதை ஏன் நிரூபன் சார்

‘ நன்றாகச் சொன்னீங்க அக்கா.’

என்று வழி மொழிந்தீர்கள்?//

ஐடியா மணி
இப்ப தான் சார் உங்க பதில பார்த்தேன். சாரி லேட்டா பதில் சொல்றதுக்கு......

நான் ஒன்னும் நிரூ சொன்ன ராமன் கதைய விடிய விடிய கேட்டு அந்த கருத்தை வைக்கவில்லை. அதற்கு என் தம்பி நிரூவும் வழிமொழியவில்லை :-)
என்னான்னா..........
இந்த மாதிரியான பாலியல் தொல்லைல இருந்து தப்பிக்குறதுக்கு நமக்கு நாமே எல்லைய உருவாக்கிட்டா பாதி பிரச்சனை தீருமே.........
என்ன தான் அந்த ஆண் தவறு பண்ணியிருந்தாலும் ஊசி இடம் கொடுக்காம எப்படி நூல் நுழையும்னு கேட்டவங்கள நீங்க கவனிச்சீங்களா??? (இந்த பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பதிவில் வந்த பின்னூட்டத்தின் மறைமுக பொருள் இது). ஆனா இதான் நிதர்சனம். இங்கேயிருக்குறவங்க அந்த பொண்ணுக்காக குரல்கொடுக்குறவங்க தான். ஆனா எத்தன பேருக்கு "அந்த பொண்ணு தப்பு பண்ணாமலா,........?"ன்னு நெனைப்பு வராம இருக்கும்? ஏன் இந்த மாதிரியான விஷயங்களில் வலிய போய் மாட்டணும்?

மத்தபடி ஐடியா மணி நினைக்கிற மாதிரி பதிவையும் தன் உணர்வுகளையும் ஒரு எல்லைக்குள் கொண்டு வர நான் சொல்லலைங்கோ....

மேலும் நான் பெண்களை அடக்கும் பெண்பதிவரும் இல்ல :-) இந்த மாதிரி தான் எழுதணும்னு எனக்கு வந்த பல மிரட்டல்களையும் மீறி என் எழுத்தின் வட்டத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திட்டு தான் இருக்கேன். ஆனா தனிபட்ட வாழ்க்கையில் எல்லைக்கு உட்பட்டே சுத்திட்டு இருக்கேன்... ஏன்னா அதே ஊசி,நூல் கதைய எனக்கு சொல்லிட கூடாது பாருங்க

இப்ப புரிஞ்சதா பாஸ்? ராமன் கதைக்கு சீதைக்கு கணவன் ராமன்னும் சொல்லல..... சித்தப்பன் தான் ராமன்னும் சொல்லல.....
சீதை கோட்ட தாண்டாம இருந்தா பிரச்சனையே வந்துருக்காதுன்னு சொல்லியிருக்கேன் :-)

AshIQ said...
Best Blogger Tips

டியர் ஐடியா,
வரைமுறை வகுத்துக்கொள்ளுதல் என்பது, முடங்கிகிடப்பது அல்ல, அது ஒரு தற்காப்பு செயல்தானே அன்றி வேறொன்றும் இல்லை. உங்களுக்கு ஒத்துவராத செயல்களை நீங்கள் தவிர்ப்பது இல்லையா? உங்களால் சமாளிக்கமுடியும் என்ற செயல்களை முனைப்புடன் செய்வது இல்லையா? அதே கான்சப்ட்தான் இதுவும். முடிந்ததை செய், முடியாதை முயற்சி செய், முரணாக இருந்தால் தவிர்த்துக்கொள், டைம் வேஸ்ட் பன்னாதே இதான் யதார்த்தம்.
சட்டம் போட்டு, சமுதாயம் கூடி ஒரு கட்டுப்பாடு விதித்தால்தான் அது அடக்குமுறை, சும்ம எல்லாத்தையுமே அடக்குமுறை அடக்குமுறைனு எடுத்துக்கிட்டா என்ன பன்றது. ஆனலைன்ல ஒரு பென்னிடம் ஒருத்தம் ஆபாசமா பேசினால் அது ஒரு குற்ற செயல், அநாகரீகம், அதற்கான நடவடிக்கை என்ன என்ற அளவில்தான் யோசிக்கனுமே தவிர, உடனே இதை அடக்கு முறை என்று கத்தக்கூடாது. இது ஒரு தனிமனித பிரச்சனை.பென்னுரிமை பென்னுரிமைனு சொல்லி சொல்லியே இப்ப எதை எடுத்தாலும் பென்னுரிமை, அடக்குமுறை என்ற தொனியில் பேச ஆரம்பிச்சாச்சு
இதுக்கு மேல என்ன சொல்றது.
-ஆஷிக்
தூக்கத்தை கெடுத்து விடிய விடிய உக்காரவச்சு கதை சொன்னா எப்படி மண்டையில ஏறும்? இதுல விடிஞ்ச பிறகு கேள்வி வேற. கேள்வி கேட்டா எப்படி சரியான பதில் வரும் கொட்டாவிதான் வரும்.

«Oldest ‹Older   201 – 231 of 231   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails