Saturday, July 7, 2012

ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்கள்!

அன்பிற்குரிய சொந்தங்களே.. எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
உங்க எல்லோருக்கும் அட்வைசு செஞ்சு எழுதுமளவிற்கு நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லைங்க. என் மனசில பட்ட சில விசயங்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதுகின்றேன். வாங்க பதிவுக்கு போகலாம். எம் தமிழர்களிற்கு என சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. அவ் இயல்புகள் உலகினில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இல்லாத தனித்துவ இயல்புகள் என்றும் கூட சொல்லிக்கலாமுங்க. 
தமிழர்கள் பூர்வீகமாக அதிகளவில் செறிந்து வாழும் நம்ம இலங்கையும், தமிழ் நாடும் ஏன் இன்னமும் உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது பெரும் வளர்ச்சியடையவில்லை அப்படீன்னு யாராச்சும் என்னைக்காச்சும் நெனைச்சு பார்த்திருக்கீங்களா? வாருங்க..உட்கார்ந்து பேசுவோம். நான் ரூம் போட்டு யோசித்து பார்த்தேனுங்க. ஒரு சில உண்மைகள் என் மனதில் தென்பட்டது. தமிழர்களிடம் பாலியல் வெறித்தனமும், மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனமான அரசியல் வெறியும் இருக்கும் வரை தமிழினம் இந்த ஜென்மம் அல்ல, இன்னும் இருபது ஜென்மம் எடுத்தாலும் உருப்படாதுங்க.

"மறைக்கின்ற பொருளுக்குத் தான் மதிப்பதிகம் என்பார்கள்” இது கவிஞர் வைரமுத்துவின் வரி. இந்த வரியைப் படிச்சனும் அச்சச்சோ நிரூபன் எல்லா தமிழர்களையும் கலாச்சாரத்தை பத்தி கவலைப்படாது மறைக்காம வீதி உலா வாங்கன்னு சொல்றாருன்னு தப்பா நெனைச்சுப்புடாதீங்க. வெள்ளைக்காரனைப் பொறுத்த வரை ஒவ்வொரு மனித உணர்வுகளுக்கும் தனியான நேரம், தனியான நாள், தனித்துவமான அம்சங்கள் எனப் பல உண்டு. நம்ம ஊரில வயசுக்கு வந்ததும் பொண்ணுங்க கூட நாம பேசவே முடியாது. பொண்ணுங்களும் நம்ம கூட பேசமாட்டாங்க.

நம்மாளுங்க கலாச்சரத்தின் பெயரால் செய்யும் மிக மிக இழிவான மூட நம்பிக்கை ஆணையும் பெண்ணையும் நண்பர்கள் போல பழக அனுமதிக்காது ஓர் ஆணுடன் பெண் பேசுவதோ அல்லது பெண்ணுடன் ஆண் பேசுவதோ தவறு என்று கூறி காமக் கண் கொண்டு ஆணும் பெண்ணும் பேசினால் காமத்துடன் நோக்குகின்றது எம் சமூகம். ஆண்களும் பெண்களும் சின்ன வயசு முதல் ஒன்னாக கல்வி கற்கும் காலத்தில நம்ம சமூகம் எதிர்த்தாப்பில இருக்கிற ஸ்கூல் பொண்ணை எதிர்ப்பாலின ஆளாகச் சித்தரிக்கின்றதேயன்றி அந்தப் பெண்ணும் சக மனுசி - சக தோழி எனும் உண்மையினை உரைத்து சகஜமாக ஆணையும் பெண்ணையும் பழக அனுமதி வழங்க மறுக்கிறது எம் சமூகம்.

இங்கே சகஜமாக என்றோர் வார்த்தையினை பார்த்ததும் நீங்க விபரீதமான அர்த்தத்தில் இரட்டை அர்த்தத்துடன் நீங்கள் நோக்கினால் நான் அதற்கு பொறுப்பாளி கிடையாது. ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகுறாங்க என்று சொன்னாலே அட.. அவர்கள் தம் பாலியல் தேவையினை நிறைவேற்ற தான் பழகுறாங்க என்று பேசிக்கிறது நம்ம சமூகம். சின்ன வயசில இருந்து எதிர்ப்பாலாரை இவர் நீ திருமணம் செய்யப் போகும் எதிர்ப் பால் வர்க்கம் எனக் கூறி கூறியே ஒரு மாணவனை காமுகன் போல எதிர்த்தாப்பில இருக்கும் பெண்ணை பார்த்து சிந்திக்க வைக்கிறது எம் சமூகம். 

ஆணைப் பெண் சக மனுசனாகவும், பெண்ணை ஆண் சக மனித ஜென்மமாகவும் உணரும் காலம் என்னைக்கு நம்ம நாடுகளில் வருதோ அன்னைக்கு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், பாலியல் வல்லுறவுகள், ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்களின் உணர்வுகள் யாவும் ஒடுங்கி தமிழன் நாட்டை முன்னேற்றுவது பத்தி சிந்திக்க ஆரம்பிப்பானுங்க. இந்த உணர்வுகளையெல்லாம் எப்படி உதறித் தள்ளுவது என்று அடுத்த பதிவில் சொல்றேனுங்க. அதுவரை புரட்சி இணைய வானொலியுடன் இணைஞ்சிருங்க நண்பர்களே...

******************************************************************************************************************
நண்பர்களே.. வாசகர்களே...
******************************************************************************************************************15 Comments:

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

//இந்த உணர்வுகளையெல்லாம் எப்படி உதறித் தள்ளுவது//

எனக்கு ஒரு ஐடியா தோணுது நிரூபன். இதுக்கு ஏதாவது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கோணும். அது வரைக்கும் எல்லாத்துக்கும் "ஸ்டெரிலைசேஷன்" பண்ணீடணும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி

வணக்கம் ஐயா..
இந்த உணர்வுகளை உளவியல் சிகிச்சை மூலம் உதறித் தள்ள முடியும்.
வெகு விரைவில் அது பற்றி ஓர் பதிவு எழுதுகிறேன்.

நன்றி ஐயா.. வருகைக்கும் கருத்திற்கும்.

Anonymous said...
Best Blogger Tips

உண்மைத் தான் சகோ. தமிழர்கள் செக்ஸ் விடயத்தில் ரொம்ப வீக்கான ஒரு இனமாகும் ... !!! காரணம் ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது இல்லை .. பல நேரங்களில் சகஜமாக பழகும் போது அவர்களின் மனதே சஞ்சலமடைகின்றது காரணம் சமூக சிக்கல்களே !!!

நல்லதொரு பதிவு !!! செக்ஸ் விடயங்களில் வெளிப்படைத் தன்மைகளும் மிகவும் குறைவு ...

விளைவுகள் கற்பழிப்பு, சிறுவர் பாலியல் துன்புறுத்தல், கள்ளக் காதல், ஈவ் டீசிங்க், என எங்கேயோ செல்கின்றது .... !!!

Unknown said...
Best Blogger Tips

இதில் தமிழர்களை மட்டும் கூறுவது... ஆனால் நாங்கள் எங்களைப் பற்றி எங்கள் பிழைகளைப் பற்றி மட்டும்தான் பேச முடியும்! தமிழர்களிடம் பாலியல் வறட்சி இருக்கிறது என்பது தெரிந்த விடயம்தான். ஆனால் ஹிந்தி வாலாக்கள் ஆண்-பெண் சகஜமாகவே பழகி வருபவர்கள். அவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. அது அவர்களிடம் சகஜமும்கூட! அப்படியிருந்தும், அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதை மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தோழர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

எனக்குத் தெரிந்த ஒரு தோழி - மத்தியகிழக்கில் உயர்ந்த பதவியொன்றில் பணியாற்றச் சென்றார். கொழும்பில் உடுத்துவது போலவே ஸ்டைலான உடைகள் வாங்கிப் போனவர், ஒரு வாரத்திலேயே வீட்டிலிருந்து உடலை முழுதம் மறைக்கும் சுடிதார் வகையறாக்களை வாங்கி அனுப்பச் சொன்னதாக கூறினார். காரணம் -இந்திவாலாக்கள், மலையாளிகளின் பார்வை தாங்க முடியாமல்!

என்னமோ போங்க பாஸ்! ஆப்புறம் பாத்து ரொம்ப நாளாச்சு! :-)

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம்,நிரூபன்!நலமா?சிந்தனையைத் தூண்டும்/சிந்திக்கத் தூண்டும் பதிவு/பகிர்வு!புலம் பெயர்ந்த(பெயர்விக்கப்பட்ட) பின்னும் சிலர்...............!சிலர்,புரிந்திருக்கிறார்கள்!

Veerarajan said...
Best Blogger Tips

தமிழர்கள் என்னவோ ஆபாஸ வெறிகொண்டு அலைகிறார்கள், மற்ற மொழிகாறர்கள் உத்தமரகள் போல சாடி இருக்கின்றீரகள். வெளி உலகத்தை சென்று பாருங்கள் தெரியும். என் பனியின் நிமித்தமாக இநதியாவின் அனைத்து மாநிலஙகளிலும் பயணித்துள்ளேன். கலாசார சீற்கேடு எல்லா இடங்களிலும் தலைவிறி்த்து ஆடுகின்றது. நம் தமிழ் மக்கள் எவ்வளவோ தேவலாம் என்று சொல்ல தோன்றும. முதலில் தமிழனை சாடுவதை நிறுத்துங்கள். ஒடடுமொதத தமிழர்களின் சார்பாக இதை வண்மையாக கண்டிக்கிறேன். தமிழன்தான் தமிழனுக்கு எதிரி.

கலைவிழி said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்,

உங்கள் மனதில் பட்ட சில விடயங்கள் என்று சொல்லிவிட்டு ஒரே ஒரு விடயத்தை மட்டுமே பகிந்துள்ளீர்கள். அது மட்டுமே தமிழர்கள் வளர்ச்சியடையாமைக்கு காரணமாக.

கட்டுப்பாடுகள் இருக்கத்தான் வேண்டும்,. இல்லையேல் காட்டாறு அடித்துக் கொண்டு போவது போல்தான் இருக்கும். இங்கு தமிழர்கள் ஆபாச வெறியோடு அலைவதாக நீங்கள் ஒரு முடிவுக்கு வரும்படியாக எழுதியிருப்பது ஒரு சமூகத்தின் மீது மட்டுமே உங்கள் பார்வை உள்ளதை வெளிப்படுத்துகிறது. பொதுவாக மனிதனாகப் பிறந்த எல்லா சமூகத்திடமும் இந்த குறைபாடு உள்ளது.

இப்படியும் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்படி மட்டுமே இருக்கிறார்கள் என்ற உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்.

இலங்கையில் அண்மைய சம்பவங்கள் தொடர்பில் நான் எழுதிய பதிவை சற்று பாருங்கள்.

http://kalaivili.blogspot.com/2012/07/blog-post.html

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

நல்ல கருத்துக்களைப் பகிர்ந்திருப்பதற்கு நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...
நல்லா இருக்கீங்களா பாஸ்..
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி..
உலகில் எல்லா இனங்களோடும் ஒப்பிடுகையில் தமிழனிடமும் இத்தகைய குணங்கள் உள்ளன என்பதை விளக்கவே இப் பதிவினை எழுதினேன்.
உலகில் வாழும் ஏனைய சமூகங்களிடமும் இத்தகைய குணாதிசயங்கள் இருக்கின்றது தான். மறுப்பதற்கில்லை.

ஆனால் தமிழன் இந்த மாதிரியான செயற்பாடுகளுக்கு தன் முழு நேரத்தையும் அல்லவா அர்ப்பணிக்கின்றான்.

உதாரணமாக தமிழனின் இந்த வெறி காரணமாக தானே எம் சினிமா நடிகைகள் கொஞ்சம் காட்டியும், கொஞ்சம் காட்டாதும் படம் நடித்து இத்தகைய வெறி உள்ளவர்களின் தேடலுக்கு விருந்து கொடுத்து தம் பிழைப்பையும் அல்லவா ஓட்டுகிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.
மாலை வணக்கம் ஐயா,
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Veerarajan
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா.

இப் பதிவின் மையக் கருத்து உலகில் வாழும் ஏனைய இனங்களின் பாலியல் வெறி பற்றி அலசுவது அல்லவே..
நாம் இங்கே ஏனைய இனங்களோடு ஒப்பிட்டு தமிழர்களை அலசியிருக்கிறோமேயன்றி இந்தியாவிலோ அல்லது உலகின் ஏனைய நாடுகளிலோ உள்ள மக்களின் உணர்வுகளை மையப்படுத்தி பேசுவது இப் பதிவின் நோக்கம் அல்லவே..

தமிழன் பல துறைகளிலும் பின் தங்கியிருப்பதற்கு இத்தகைய செயற்பாடும் ஓர் காரணம் என்று எழுதியுள்ளேனே தவிர
இந்த காரணங்களின் அடிப்படையில் தமிழன் தாழ்ந்துவிடவில்லை என்று கூறுவது இப் பதிவின் நோக்கம் அல்லவே.. நண்பர்களே..

நிரூபன் said...
Best Blogger Tips

@கலைவிழி
வாங்கோ..வாங்கோ..
இங்கே தனி ஓர் விடயத்தை ஒரு பதிவில் மாத்திரம் பகிர்ந்திருக்கிறேனேயன்றி..
பதிவின் கீழ் என்ன சொல்லியிருக்கேன்..
ஏனைய காரணங்கள் அடுத்தடுத்த பதிவில் வரும் என்றல்லவா சொல்லியிருக்கிறேன்.

மனிதனாகப் பிறந்த எல்லா சமூகத்திடமும் இருக்கிறது. ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஏனைய சமூகங்களில் இறுக்கமான சட்டங்கள் இருக்கின்றன.

எம் சமூகத்தை தாழ்த்தி எழுதனும் என்பது இப் பதிவின் நோக்கம் அல்ல..
ஆனால் எம் தமிழர்கள் உலகில் முன்னேறிய நாடுகளோடு ஒப்பிட்டு நோக்கும் போது
இம் மாதிரியான சில காரணங்களால் பின் தங்கியிருக்கிறார்களே.. என்பதனை உணர்த்துவதே இப் பதிவு நோக்கம் சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவினைப் படித்த அன்பு உறவுகளுக்கும், கருத்துரை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி..

Veerarajan said...
Best Blogger Tips

இலங்கையும், தமிழ் நாடும் ஏன் வளர்ச்சியடையவில்லை அப்படீன்னு நீங்க ரூம் போட்டு யோசித்து பார்தது தமிழன் முட்டாள் என்று பட்டம் கட்டுவீர்களா?தமிழினம் உருப்படாது என்று சொல்ல நீர் என்ன வஸிஷ்டரா? 
''ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்களின் உணர்வுகள் யாவும் ஒடுங்கி தமிழன் நாட்டை முன்னேற்றுவது பத்தி சிந்திக்க ஆரம்பிப்பானுங்க'' என்று சகடடுமேனிககு சொல்லும் நீர் எந்த மொழிக்காறர்.
தமிழ்நாட்டை பற்றி கவலைபட உமக்கு எந்த தகுதியும் கிடையாது. உணர்வுகளையெல்லாம் எப்படி உதறித் தள்ளுவது என்று நீர் எமக்கு சொல்லி தருகிறீரா, இத்தோடு இந்த விடய்த்தை மூட்டைகட்டி வைத்து, வேறு நல்ல மாற்று மொழிகாறர்களை பற்றி பாறாட்டி எழுதவும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

நிரூபன் said...
Best Blogger Tips

@Veerarajan
நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு பாஸ்..
ஏனுங்க இப்படி உணர்ச்சிவசப்படுறீங்க?
நான் யாரு..நானும் தமிழ் நாட்டு தமிழன் தான். எங்கள் அனைவரின் எச்சமும் தமிழ் நாட்டில் இருந்து தானே வந்தது.

தமிழனுக்குள் பிரித்துப் பார்த்தல் சரியா?
தமிழனை முட்டாள் என்று யாருமே பட்டங் கட்டலைங்க.
மொதல்ல ஓவரா உணர்ச்சிவசப்படுவதை நிறுத்திட்டு ரொம்ப பொறுமையா, சமத்து புள்ளயா இந்த பதிவில என்ன சொல்லியிருக்கேன் என்பதை புரிந்து கொள்ள முயற்சி பண்ணுங்க.
அப்புறமா வாங்க பேசுவோம்..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails