Wednesday, July 4, 2012

பிரபாகரனுக்குப் பின்னர் நட்டாற்றில் ஈழ மக்கள்!

அன்பிற்குரிய உறவுகளே, நலமாக இருக்கிறீர்களா?
ஈழ மக்களினுடைய இலட்சிய வேட்கையினை, தமிழீழக் கனவினை தன் தோள் மீது தாங்கி தமிழர்களுக்கான விடுதலைப் பாதையில் ஓயாது உழைத்து ஓர் படையணியினை உருவாக்கி உலகில் தமிழர்களை தலை நிமிரச் செய்த பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனையே சாரும். ஈழ மக்கள் இளிச்ச வாயர்கள் என வாயாரச் சொல்லி சிங்கள அரசும், அதன் அமைச்சர்களும் ஈழ மக்களின் தலையில் தாம் விரும்பிய எதையாவது திணித்து விட்டு செல்லலாம் என்றிருந்த போது அவர்களுக்கெல்லாம் பிரபாகரனும், தமிழ் மக்களும் வேண்டுவது தமீழமேயன்றி வேறேதும் இல்லை என்கின்ற தார்மீக ரீதியான கொள்கையினை கொண்டிருந்த பெரும் பேறிற்கு உரியவர் தேசிய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். 
பிரபாரன் என்கின்ற தனி மனிதன் வெறுமனே ஆயுதப் போராட்டத்தில் மாத்திரம் தேர்ச்சி பெற்றிருக்காது தமிழர்களின் தேவை என்ன என்று அலசி, நீண்ட காலத் திட்டமிட்டு ஒரு வளமான நாட்டினை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டார் தன்னுடைய காலப் பகுதியில். ஏன் பிரிந்து கிடந்த தமிழ் கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் குடையின் கீழ் தமிழர்களின் விடுதலைக்குரிய பாதையில் தமிழ் கட்சிகள் செல்ல வேண்டும் எனும் நிலைக்கு கூட பிரபாகரன் அவர்களே காரணகர்த்தாவாக விளங்கினார். ஆனால் அவரது பிரசன்னம் அற்ற இன்றைய காலத்தில் தமிழரசு கட்சியும், தமிழ் கூட்டமைப்பும் திசைக்கு ஒன்றாகி தமிழர்களின் விடுதலை நோக்கிய பாதையில் தாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையே மறந்து நிற்கின்றன.

பிரபாகரனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல சிங்கள அரசும் தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் செயற்பாடுகளில் அக்கறை ஏதும் காட்டாது உலக நாடுகளையும், தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றது. ஈழ மக்கள் விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தமிழ்க் கூட்டமைப்பு உட் பூசல்களால் நிறைந்து கட்சியே உக்கிப் போய் விடும் நிலைக்கு ஆளாகி நிற்கின்றது. முதிர்ந்த அரசியல்வாதிகள் தம் இறுமாப்பான ஈகோ கொள்கையில் இன்றும் நிற்கும் நிலையில் இள ரத்தம் பாய்ச்சப்படாது தமிழரசுக் கட்சி தலை நிமிராது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழர்களின் வாக்குகளில் தம் வயிற்றை நிரப்பி தமிழர்களுக்கு வேண்டிய தீர்வு என்ன என்பதனையே மறந்து நிற்கும் தமிழரசு கட்சி இனியாவது விழித்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே... 

இன்றைய சூழலில் பூனைக்கு யார் மணி கட்டுவது எனும் நிலையில் ஈழ மக்கள் இருக்கின்றார்கள். ஏன் புலம் பெயர்ந்த தமிழார்வலர்கள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் விசனமடைந்துள்ளார்கள். இந்த ஜென்மத்திலாவது தன் தவறை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு சேவை செய்யுமா என்பது கேள்வியே...


7 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம்,நிரூபன்!புதிதாக தமிழரசுக் கட்சியை புனர் நிர்மாணம் செய்கிறார்கள்.விடுதலைக்கு உழைத்தவர்கள் ஆண்டுக் கணக்காக சிறையில் இருக்கையில்,வேண்டியது தான்!கூட்டமைப்பை வேரோடு பிடுங்க வேண்டுமென்று பேரினவாதிகள் மூளையைக் குழப்ப வேண்டியதில்லை,நாமே நம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வோம்!!!!

Athisaya said...
Best Blogger Tips

வணக்கம் அண்ணா..தணிக்கைகளற்ற இப்பதிவு ஏதோ ஒரு பெருமூச்சையும் கூடவே சிறிதான ஆறுதலையும் தருகிறது..!
ஆன்ட இனம் மாண்டளிய அருள்வாயோ??ஃவெய்யோனே செந்துருகி சாகின்றோம்..வேரறுந்து வீழ்கின்றோம் விதி தானோ???

இது தான் நம் நிலையும்.அநாதைகளாக இன்று சுயம் இழந்து தவிக்கிறோம்...:::(

http://www.youtube.com/watch?v=FIDMyYUUXM8

Easy (EZ) Editorial Calendar said...
Best Blogger Tips

வாருத்தாமான உண்மையான செய்திநன்றி,
~ஜோ
எங்கள் வலைத்தளத்தை (http://www.ezedcal.com/ta) பயன்பாடுத்தி உங்கள் வலைப்பூவின் தலையங்கம் காலண்டரை எளிதாக நிர்வகித்து கொள்ளாலம். விருப்பமானால் உங்கள் வலைப்பூவில் அதை எளிதாக வெளியிடலாம்.

Anonymous said...
Best Blogger Tips

ஒற்றுமை இல்லாமல் போனால் தமிழர் என்ற இனம் ஒருக் காலத்தில் இலங்கைத் தீவில் வாழ்ந்தது என்றாகி விடும் ... சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டியப் பதிவிது !

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.
வணக்கம் ஐயா,
என்ன சொல்ல ஐயா,
நல்ல திட்டமிடல் ஏதுமற்ற நிலையில் தமிழினம் இன்றும் அல்லாடுவதை தமிழரசுக் கட்சி கூட உணராதிருக்கிறதே..

நிரூபன் said...
Best Blogger Tips

@Easy (EZ) Editorial Calendar
நன்றி நண்பரே..

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
நன்றி நண்பா..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails