Tuesday, August 23, 2011

கனவுகளைத் தொலைத்த ஈழச் சிறுமியின் கண்ணீர் கதை!

ஈழப் போர், பல துயரங்களை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் விடை காண முடியாத வினாக்களின் எச்சங்களாக எம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது. ஈழப் போர்ச் சூழலில் வாழ்ந்த வயதானவர்களிடம் கூட, சில காட்சிகளை, சில கொடூரங்களைத் தாங்குகின்ற சக்தி இல்லாத போது, சிறியவர்களிடம் எப்படி இக் கொடூரங்களைத் தாங்கிக் கொள்கின்ற பக்குவம் வந்திருக்கும்? ஈழப் போரில் தம் கனவுகளை, எதிர்காலத்தைத் தொலைத்த பல மனிதர்களுள், சிறுவர்கள் தான் தம் வாழ் நாள் முழுவதும் ஆற்றுப்படுத்த முடியாத வடுக்களைத் தாங்கியவாறு இன்றும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தின்(இலங்கையின்) வட கிழக்குப் பகுதிகளை அடிப்படையாக வைத்து வெளியாகிய பல குறும்படங்கள் போராட்டத்திற்கான பிரச்சாரக் கருத்துக்களைத் தம் மையக் கருத்தாகக் கொண்டிருந்தாலும், அத்தி பூத்தாற் போல, ஒரு சில படங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை, ஓர் இனத்தின் மீது போர் விட்டுச் சென்ற சாபங்களைத் தம் உள்ளக் கருத்தாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன.

வன்னிப் பகுதியில் வாழ்கின்ற பெரும்பாலான நடுத்தரப் பொருளாதார வர்க்கத்தினைச் சேர்ந்த குடும்பங்களின் ஜீவனோபாயத் தொழில் வயல் விதைப்பு, விறகு வெட்டி விற்றுச் சந்தைப்படுத்துதல், கடற்றொழில், விவசாயம் முதலியவையாகும். அன்றாடங்க் காய்ச்சிகளாகத் தம் காலத்தினைக் கடத்தும் ஒரு குடும்பத்தில் வாழுகின்ற சிறுமிக்கு, சமூகத்தில் உள்ள ஏனைய பெண் பிள்ளைகளைப் போன்று ஆசா பாசங்கள் இருப்பது இயல்பான ஓர் விடயம்.

ஆனால் பொருளாதாரச் சூழ் நிலைகளின் காரணமாகத் தன் ஆசைகளை நிறைவேற்றி விட முடியாது, அக் குழந்தையின் மன உணர்வுகள் எவ்வளவு பாடுபடுமென்பதையும், சிறுகச் சிறுகப் பணம் சேர்த்துத் தன் நீண்ட நாள் கனவினை நிறைவேற்றப் போகும் வேளையில்; மிதிவெடியில் கால் வைத்து தன் ஒரு காலினை இழந்த பின்னர் கனவுகளைக் காற்றில் பறக்க விட்டு, மனதில் உள்ள நினைவுகளோடு வாழுகின்ற சிறுமியின் உணர்வுகளைத் தாங்கி வெளிவந்திருக்கின்ற படம் தான் செருப்பு.

ராஜ்குமாரின் தயாரிப்பில். கௌதமனின் எண்ணம்-எழுத்துருவாக்கம் இயக்கத்திலும்,
ஞானதாஸின் இணைத் தயாரிப்பிலும்,
முரளியின் இசையிலும் வெளிவந்திருக்கும் படம் தான் ‘செருப்பு’.

கௌரி, பிரகலதா, வினோத், செல்லையா, டிலானி, ஆகியோர் ஈழத்து மண் வாசனையோடு கூடிய உணர்வின் மூலம் இக் குறும்படத்திற்கு உயிர்ப்பளித்துள்ளார்கள்.  விறகு வெட்டித் தன் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையினைத் தாங்கிக் கொள்ளும் தந்தை, அவருக்கு ஆதரவாய் இருக்கும் இல்லத்தரசி, தன் பிஞ்சு வயசுக்கேயுரிய கனவுகளோடு நடைபோடும் சிறுமி, அன்றாடங்காய்ச்சிகளாய் வாழும் இக் குடும்பத்திற்கு கடனாகச் சிறு தொகைப் பணத்தினைக் கொடுத்து விட்டு, அடிக்கடி கேட்டு நச்சரிக்கும் நாயகனின் நண்பன் இவர்களை வைத்து, தனது உயிர்ப்புள்ள, உணர்வின் வரிகள் பேசும் கதையினை நகர்த்தியுள்ளார் இயக்குனர் கௌதமன்.

இராணுவத்தினரால் தம் நிலப் பகுதி களவாடப்பட்ட(கைப்பற்றப்பட்ட) பின்னர், மீண்டும் தமது ஊர் புலிகளிடம் வந்து கொள்ள அங்கே சென்று குடியேறித் தமது வாழ்க்கையினை நகர்த்தத் தொடங்கும் ஓர் குடும்பத்தின் உணர்வுகளோடு காட்சிகள் விரிந்து கொள்கிறது. போர்ச் சூழலிலில், (புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்) வாழ்ந்த மக்கள் மீது இலங்கையின் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த பொருளாதாரத் தடையனாது, பல அத்தியாவசியப் பொருட்களை புலிகள் கட்டுப்பாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத ஒரு சூழலினை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய சூழ் நிலையின் போது எமக்கு ஏதாவது ஆடம்பரப் பொருட்கள் தேவைப்படும் பட்சத்தில் யாராவது இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியான தென்னிலங்கைப் பக்கம்(இலங்கையின் தலை நகர்ப் பக்கம்) செல்லுவோரிடம் சொல்லித் தான் எம் ஆசைப் பொருட்களை அதிஷ்ட ரேகை நம் பக்கம் இருக்கும் பட்சத்தில் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தன் பள்ளித் தோழி ஒருத்தி அழகிய செருப்பினை அணிந்திருப்பதனைப் பார்த்து, அவளிடம் எங்கே வாங்கினனீ? என்று ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நோக்கில் வினாவினைத் தொடக்க
‘என் மாமா கொழும்பிற்குப் போகும் போது வாங்கி வந்தது’ என்று சொல்லி, வறிய பொருளாதாரச் சூழலில் தன் காலத்தினைக் கடத்தும் சிறுமியின் கனவில் கைக்கெட்டாத கனவினை செருப்பு எனும் ஆசையாக விதைத்து விடுகிறாள் அவளின் பள்ளித் தோழி.

தந்தையார் விறகு வெட்டி விட்டு வீடு வரும் ஒவ்வோர் இரவும், அவரிடமிருந்து இரண்டு ரூபாய்க் குற்றிகளை வாங்கித் தன் தேங்காய் உண்டியலில் போட்டுச் செருப்பு வாங்குவதற்காகச் சேமித்து வைக்கும் பிஞ்சு மனம், தன் உண்டியலை எடுத்துப் பார்த்து,
‘இது எப்போது நிறைந்து கொள்ளும்’ எனும் ஏக்கம் கலந்த பார்வையினை வெளிப்படுத்தும் காட்சியானது வரும் சமயத்தில் உணர்வுள்ள அனைவரின் கண்களிலும் நீர் சொரியப் போவது நிச்சயம்.

கொடுத்த கடனை வாங்குவதற்காக வீடு தேடி வந்து நச்சரிக்கும் கடன்காரனின் செயற்பாடுகள், செருப்பு வாங்கி என் காலில் போட்டு அழகு பார்க்க மாட்டேனா என எண்ணும் சிறுமியின் உணர்வில் மண் தூவிச் செல்கின்றது.
காலுக்கு மருதாணிக் கோலமிட்டு அழகு பார்க்கும், சிறுமியின் உள்ளம்,
தன் தாயிடம்
‘அம்மா அப்படியே இந்தக் காலுக்கு ஒரு செருப்பு வாங்கிப் போட்டால் எப்படி இருக்கும்’ எனக் கேட்பதும்,
‘அப்படியே ஒரு கால் கொலுசும் வாங்கிப் போட்டால் எப்படி இருக்கும்? என்று அடுத்த வினாவினை முன் வைக்க,
தன் மகளின் ஆசையினை நிறைவேற்ற முடியாதவளாய் அந்தத் தாய் பார்க்கும் பார்வை இருக்கிறதே.. அதனைத் தாங்கிக் கொள்ளும் சக்தி உள்ளவர்கள் மாத்திரம் இந்தப் படத்தினைப் பார்க்க நுழையுங்கள்.

நீண்ட நாட்களாகச் செருப்பு வாங்கி அணிவிப்பதற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தினைச் சந்தைக்குப் போகும் தந்தையிடம் கொடுத்து விட்டு, தன் தந்தையின் வரவினை எதிர்பார்த்துக் காத்திருந்து, அவர் வரும் வழியில் அவரை வழிமறித்து, தன் புதுச் செருப்பினை அணிந்து பார்க்க வேண்டும் எனும் ஆவலில் செருப்புப் பற்றிய கனவுகளோடு; மனதில் மகிழ்ச்சி பொங்க போர்ச் சூழல் காரணமாக கைவிடப்பட்ட காணியினூடு ஓடிச் செல்லும் சிறுமியின் காலினை மிதிவெடி பதம் பார்க்கின்றது. மிதிவெடியில் கால் வைத்து தன் ஒருகாலை இழந்த சிறுமி....இறுதி வரை செருப்பினைத் தன் இரு கால்களிலும் அணிந்து அழகு பார்க்க முடியாதவாறு ஏக்கங்களோடு நகரப் போகும் வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது செருப்பு.

இன்றும் போர்ச் சூழலின் பின்னரான ஈழத்தில் பல சிறுமிகள் தம் உடல் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகின்றோம்?

பின்னணி இசையினை முரளி அவர்கள், வேண்டிய இடங்களில் ஏற்ற இறக்கங்கள் கொடுத்து, மென்மையான இசை கலந்து படத்திற்கேற்றாற் போல வழங்கியிருக்கிறார். ஈழத்தின் இடிந்து போன கட்டங்களையும், செம்புழுதித் தெருக்களின் தடம் மாறாத ஒற்றையடிப் பாதையினையும் காட்சிப்படுத்திக் காட்சியமைப்பினை கதை நிகழ் களத்திற்கேற்றாற் போல, நகர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

செருப்பு: ஈழத்தின் இன்னல்களினூடே, தம் கனவுகளைத் தொலைத்த பிஞ்சு உள்ளமொன்றின் உணர்வுகளைச் சொல்லுகின்ற உயிர்ச் சித்திரம்.

மனதில் உணர்வுகளைத் தாங்கும் சக்தியுள்ளோர் மாத்திரம் இப் படத்தினைப் பார்க்கவும். 
15 நிமிடங்கள் மாத்திரம் கொண்ட இப் படத்தினைப் பார்க்க,
இவ் இணைப்பினூடாகச் செல்லவும்.
செருப்புhttp://thiraikadsi.blogspot.com/2011/08/blog-post.html
http://thiraikadsi.blogspot.com/2011/08/blog-post.html

50 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

முதல் வருகை...

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

காலையில் வீடியோ பார்த்துட்டு பின்னூட்டம் போடுகிறேன் சகோ..

மாய உலகம் said...
Best Blogger Tips

சகோ நீங்கள் பதிவில் செருப்பு குரும்படத்தை பற்றி சொன்னவிதமே மனதை கணக்க வைத்துவிட்டது... காணொளியை கண்டுவிட்டுவருகிறேன் சகோ

சுதா SJ said...
Best Blogger Tips

ஆஹா... அதுக்குள்ளே மூணு பேரா??அவ்வ் முந்திட்டான்களே

சுதா SJ said...
Best Blogger Tips

வெயிட் படிச்சுட்டு வோட் போட்டுட்டு வாறோம்

சுதா SJ said...
Best Blogger Tips

நல்ல விமைசனம் பாஸ், படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது உங்கள் விமர்சனம், ஆனால் என்ன உணர்வுகளை தாங்குவோர் மட்டும் பார்க்கலாம் என்று சொல்லியதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்குது. இருந்தாலும் நாளை படத்தை பார்த்துவிட்டு மீண்டும என் கருத்துக்கு நாளை வருகுறேன்

Anonymous said...
Best Blogger Tips

கனத்த மனம்...விழியோரம் ஈரம்...அறிமுகத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றி நிரூபன்,,,

KANA VARO said...
Best Blogger Tips

அடடே! நம்ம படம்.

KANA VARO said...
Best Blogger Tips

நான் அப்பிடி சொன்னதுக்கு காரணம், ஞானதாஸ் எனக்கு ஒரு விதத்தில் ஆசான். குறும்பட பயிட்சிக்காக அவருடைய பயிற்ச்சி பட்டறைக்கு சென்று சிறிது காலம் இருந்தேன், தொடர முடியவில்லை.

KANA VARO said...
Best Blogger Tips

நான் சென்ற முதல் நாளில் இந்த செருப்பு குறும்படத்தை திரையிட்டார். இன்னொரு குறும்படமும் போட்டார் பெயர் ஞாபகம் இல்லை,

ஆகுலன் said...
Best Blogger Tips

விமர்சனத்தை பார்த்தபோதே மனம் கஷ்டமா இருக்குது படம் பார்த்தால்.......
படம் பார்க்க முயற்சி செய்கிறேன்...

Mathuran said...
Best Blogger Tips

விமர்சனமே நன்றாக இருக்கிறது நிரூபன்.. மாலை படத்தை பார்த்துவிட்டு மிகுதி பின்னூட்டங்களோடு வருகிறேன்

உணவு உலகம் said...
Best Blogger Tips

//செருப்பு: ஈழத்தின் இன்னல்களினூடே, தம் கனவுகளைத் தொலைத்த பிஞ்சு உள்ளமொன்றின் உணர்வுனைச் சொல்லுகின்ற உயிர்ச் சித்திரம்.//
பல மனங்களை கணக்க வைக்கும்.

shanmugavel said...
Best Blogger Tips

மனதைக்கசக்கிப் பிழிகிறது நிரூபன்,பகிர்வுக்கு நன்றி

கவி அழகன் said...
Best Blogger Tips

அருமையான படத்தை இனன்காடியமைக்கு நன்றிகள்
விமர்சனமும் அருமை தரம்
தரமான படைப்பு

நடிப்பு இசை காட்சிகள் மனசை கலங்கவைக்கும் படியாக இருந்தது

தயவு செய்து அடுத்த பதிவை மூ ன் று நாட்ட்களுக்கு பின் போடவும்

நேற்ரய பதிவை படித்தேன் வாக்கும் போட்டேன் இன்று கருத்து போடுவம் எண்டா புதுசா ஒரு பதிவு வந்தது நிக்குது

என்னய்யா அப்படி அவசரம் எண்டு பேசி ஒரு கமென்ட் போடுவம் எண்டு
நினச்சுகொண்டு இந்த பதிவை பார்க்க
எல்லா கோவமும் போய் சோகம் தான் வந்தது

கவி அழகன் said...
Best Blogger Tips

தரமான படைப்புகளுக்கிடையில் அளவான இடைவழி விடுக

வாசகர்களுக்கு வாசிக்க நேரம் கொடுக்க

செல்ல நாய்க்குட்டி மனசு said...
Best Blogger Tips

"வெயில் சுட்டா ஓடித் தான வருவாங்க " சாட்டையடியாய் குழந்தையின் சொற்களும் பார்வையும்

காட்டான் said...
Best Blogger Tips

தரமான படைப்புகளுக்கிடையில் அளவான இடைவழி விடுக 

வாசகர்களுக்கு வாசிக்க நேரம் கொடுக்க
August 23, 2011 8:08 AM

மாப்பிள இத உனக்கு போனபதிவிலேயே சொன்னேனே.. அப்பிடி என்னையா அவசரம் உனக்கு....

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள கொஞ்சக்காலத்திற்கு முன்னர் இந்த குறும்படத்தைப்பார்தேன் எதேர்சையாக.. போர் சிறுவர்களின் மேல் விட்டுச்சென்ற எச்சங்கள் கொடுமையானவை.. இதற்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம்..?  இந்த குறும்படத்தை   மீண்டும் எனக்கு உங்கட விமர்சன பார்வைமூலம் பார்க்கவைத்துவிட்டீர்கள்..

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள கொஞ்சக்காலத்திற்கு முன்னர் இந்த குறும்படத்தைப்பார்தேன் எதேர்சையாக.. போர் சிறுவர்களின் மேல் விட்டுச்சென்ற எச்சங்கள் கொடுமையானவை.. இதற்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம்..?  இந்த குறும்படத்தை   மீண்டும் எனக்கு உங்கட விமர்சன பார்வைமூலம் பார்க்கவைத்துவிட்டீர்கள்..

ஆமினா said...
Best Blogger Tips

விமர்சனத்துக்கே மனம் கணத்துவிட்டது

சசிகுமார் said...
Best Blogger Tips

வீடியோ பார்த்துட்டு வரேன்

குறையொன்றுமில்லை. said...
Best Blogger Tips

மனதை உலுக்கி எடுத்த
பதிவு. வீடியோ காட்சிகள்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் இந்தக்குறும்படம் வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும்.இப்போது உங்கள் பதிவின் மூலம் பலர் மீண்டும் பார்ப்பார்கள்.நல்ல பதிவு,வாழ்த்துக்கள்

இன்னு என் பதிவில்-தோனிக்கு சனி பிடித்துவிட்டதா(சிறப்பு பார்வை)http://cricketnanparkal.blogspot.com/2011/08/blog-post_23.html

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ.... மனது கணக்கும் படம் அது. அதற்கு உங்கள் விமர்சனம் மனதை என்னவோ செய்கிறது...

M.R said...
Best Blogger Tips

படிக்கும் பொழுதே மனம் கனத்து போகிறது .கண்களில் பார்வை மங்குகிறது கண்ணீரால்.

வாக்களித்தேன் ,வருகிறேன் நண்பரே.

கனமாய் போன இதயத்துடன்

எம்.ஆர்

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

மனதை வாட்டும் மறக்க முடியாத உணர்வுகளின்
பகிர்வு .நன்றி சகோ பகிர்வுக்கு .அத்தோடு மறக்காமல்
என் தளத்தில் உங்கள் கருத்தினை இணைத்தமைக்கும் .
இன்றும் உங்கள் வரவுக்காக கவிதை காத்திருக்கின்றது .

rajamelaiyur said...
Best Blogger Tips

மனசு வலிக்கிறது

rajamelaiyur said...
Best Blogger Tips

அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

மனதை கனக்க வைக்கும் விஷயம், வீடியோ பிறகுதான் பார்க்கனும்!

Unknown said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி....வீடியோ என்னால் பார்க்க முடியவில்லை...பின்பு பார்க்கிறேன்!

Prabu Krishna said...
Best Blogger Tips

பார்த்து விடுகிறேன்...

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ஏற்க்கனவே இந்த குறும்படம் படம் பார்த்திருந்தான். கனவுகள் கலைக்கப்பட்டு, எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் அந்த சிறுமியின் நிலையில் இன்னும் எத்தனையோ..(

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மனதை கணக்க வைக்கும் பதிவு,,

கோகுல் said...
Best Blogger Tips

மனம் கணக்க வைக்கும் காணொளி!

Unknown said...
Best Blogger Tips

இன்னொரு ஒரு சிறந்த கனமான பதிவு நிரூ

மனம் ரணமானது..

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...
Best Blogger Tips

உங்கள் எழுத்தே மனதைக் கனக்கச் செய்கிறது.படம் பார்க்கத் துணிவு இல்லை.பார்க்க முயல்கிறேன்.

ரேவா said...
Best Blogger Tips

மனதை கனக்க வைக்கும் பதிவு சகோ

செங்கோவி said...
Best Blogger Tips

போரின் தழும்புகள் தலைமுறை பல கடக்கும்வரை நிற்கும்!

செங்கோவி said...
Best Blogger Tips

அத்தியாவசியப் பொருட்கள்கூட வாங்க நீங்கள் பட்ட கஷ்டங்களைப் பார்க்கும்போது, மனது கனக்கிறது.

செங்கோவி said...
Best Blogger Tips

கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் தான்.

கார்த்தி said...
Best Blogger Tips

கவலைதான் நண்பரே :(

Unknown said...
Best Blogger Tips

ஓட்டுகள் மட்டும்...பின்னூட்டம் இல்லை...காரணம் வழமையானது அல்ல

நிரூபன் said...
Best Blogger Tips

இப் பதிவிற்குத் தற்போது வரை வாக்குகளை அளித்த அன்பு உறவுகள்,

megalakshmi kaddaan aavuraan Mathuran007 thooyaraji raasalingam akulan pannikkuttir venkatkumar mohdamina23@gmail.com sengoviblog r.jaghamani@gmail.com varothayan nirupans rameshbabu_jr nekalvukal@gmail.com reverie yamsasi2003 ksvel kavippuyal007@yahoo.com mahi75 r.elanchezhiyanchezhiyan@yahoo.com salemdeva2010 thusyanthan01@gmail.com prakashin chennaipithan rajeshnedveera80@gmail.com kkarun09 NANDUnorandu kavikkilavan jeyachanthuruj@gmail.com


இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Anonymous said...
Best Blogger Tips

தமிழ்மணம் 32

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

இந்த பதிவுக்கு இதை விட எளிமையான , கிளாமரான டைட்டில் வைத்து விட முடியாது

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை, படம் இனி தான் பாக்கனும்

நிரூபன் said...
Best Blogger Tips

தொடர்ச்சியாக என் பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டு போட்டு வருவது போன்று, இப் பதிவிற்கும், காரணமின்றிக் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் இப் பதிவிற்கும் மைனஸ் ஓட்டுப் போட்ட, Birundan அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ!இது மாதிரியான பதிவுகளுக்கு வெறுமனே பின்னூட்டம் போடுவதில் மனம் குறுகுறுக்கிறது:(

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails