Monday, August 1, 2011

கண்ணீரில் மூழ்கி கதறியழும் க(கொ)லைஞர்!

ன் வினையால் தத்தளிக்கும் க(கொ)லைஞர்!

தன் மகளின் நிலையெண்ணி வாடுகிறார் கலைஞர்
தமிழர்களின் கண்ணீரால் நொந்து போனார் கவிஞர்
இன்னலது தன் உடலை வாட்டவில்லை என்றாலும்;
ஈழ மக்கள்- மீனவர்கள் கனவில்; தொல்லைதனை
அண்ணலுக்குத் தந்து விட்டுப் போகின்றார்;
தன் மகளும் கைதாகி தத்தளித்து வாடுகின்றார்
என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே
எட்டிக் கொஞ்சம் கூப்பிட்டால் வந்திடுவேன் தனியே!!
ஜாக்கிரதை இல்லேன்னா பணம் காலி!

உத்தமியின் பெயரோ 
உடுப்பிமலை ஊர்மிளா
அத்தையோடு சேர்ந்து 
அவுட்டிங் போவாளாம்
உத்தியோகம் ஏதுமில்லை; 
உடலிழைத்து வருவாளாம்
மொத்தமாக ஆண்கள் பாக்கட்டினை
மோகத்தினால் காலியாக்கி விடுவாளாம்! 

சீரியலால் சிக்கல் பட்ட சிங்காரி!

வாரியே சுருட்டி தலை 
வாரினாள் சுகந்தா
வாசலில் உட்கார்ந்து
வாஞ்சையோடு பார்த்தாள் தென்றல்
காரிருள் படர, கைக்குழந்தையோ தொலைய
கண்களில் நீர் குளமாய் வழிய
கூப்பாடு போட்டழுதாள் சுகந்தா
சாப்பாட்டு நேரத்தின் பின்னர்- நாதஸ்வரம்
சத்தமாய் ஆரம்பிக்கும் என்பதனால்
பெத்திட்டாப் போச்சு ஒரு குழந்தை- தொலைந்து
போனது போகட்டும் என தேற்றினாள் 
அவள் சீரியல் மடந்தை- சீரியஸ் மங்கை!!

காற்றில் பறக்கும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள்!

அம்மா ஜெயலிலிதா, நீ வரும் போது சொன்ன தென்னம்மா
சும்மா இருந்த மக்களுக்கு மிக்ஸி தந்து சொக்கவைத்த தே(ன்)னம்மா
இன்றோ நீ பதவியேற்ற பின் காலம் வேகமாய் ஓடுதம்மா
நன்றாய் ஏழைகள் வாழ்வும் உன் அருளால் ஒளிருதம்மா
அன்றில் நீ தான், அடுத்த தேர்தல் வருகையிலும்-எம்
முன்றல் வந்து கையெடுத்து வணங்கு- மறக்க மாட்டோம்
மீண்டும் இலவசத்தை தந்து நீயும் ஜெயித்து விடு
வேண்டும் வரம் தருவேன் என சொல்லி ஏமாற்றி விடு! 

பிற் சேர்க்கை: இக் கவிதைகளைத் தமிழகத்தில் வாழ்ந்து எழுதுவது போன்ற, உணர்வோடு எழுதியிருக்கிறேன். 

56 Comments:

பலே பிரபு said...
Best Blogger Tips

வந்தாச்சு

பலே பிரபு said...
Best Blogger Tips

நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first
நாந்தான் first

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Best Blogger Tips

சகோ..
எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க..
அருமை..

பலே பிரபு said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா எல்லாமே சூப்பர் நிரூ

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Best Blogger Tips

விரிவான பின்னூட்டம் பிறகு எழுதுகிறேன்...

! ஸ்பார்க் கார்த்தி @ said...
Best Blogger Tips

சரியா சொன்னீங்க சார்!!! தன்வினை தன்னை சுடும்.....

மருதமூரான். said...
Best Blogger Tips

நிரூ..!

////தன் வினையால் தத்தளிக்கும் க(கொ)லைஞர்!

தன் மகனின் நிலையெண்ணி வாடுகிறார் கலைஞர்
தமிழர்களின் கண்ணீரால் நொந்து போனார் கவிஞர்
இன்னலது தன் உடலை வாட்டவில்லை என்றாலும்;
ஈழ மக்கள்- மீனவர்கள் கனவில்; தொல்லைதனை
அண்ணலுக்குத் தந்து விட்டுப் போகின்றார்;
தன் மகனும் கைதாகி தத்தளித்து வாடுகின்றார்
என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே
எட்டிக் கொஞ்சம் கூப்பிட்டால் வந்திடுவேன் தனியே!!////

இதுதான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

பயபுள்ள என்னமா கவித்தமிழ்ழ விளையாடுது. எங்களுக்கும் கொஞ்சம் கத்துக்குடுங்கப்பா.

சூபப்ர் பாஸ்.

ரியாஸ் அஹமது said...
Best Blogger Tips

நீங்க தமிழத்தில் தான் இருக்கீங்க நண்பா ....
எல்லாமே அருமை அருமை

ரியாஸ் அஹமது said...
Best Blogger Tips

சீரியல் மங்கை
சீரியஸ் காமெடி ...

koodal bala said...
Best Blogger Tips

எப்படி மாப்ள ...என்ன ஒரு கவிதை ...ஒண்ணே ஒண்ணு பண்ணுங்க கலைஞர் பாடுற மாதிரியும் ஒரு கவிதை ரெடி பண்ணுங்க ...ஏண்ணா அவர் இப்போ கவிதை எழுதுற மூடுல இல்ல...

கந்தசாமி. said...
Best Blogger Tips

நம்ம தாத்தாவை ஒரு வழி பண்ணுறன் எண்டு தான் நிக்கிறீங்க ,,))

கந்தசாமி. said...
Best Blogger Tips

////உத்தமியின் பெயரோ
உடுப்பிமலை ஊர்மிளா
அத்தையோடு சேர்ந்து
அவுட்டிங் போவாளாம்
உத்தியோகம் ஏதுமில்லை;
உடலிழைத்து வருவாளாம்
மொத்தமாக ஆண்கள் பாக்கட்டினை
மோகத்தினால் காலியாக்கி விடுவாளாம்! /// மகாகவி உருத்திர மூர்த்தி வந்துட்டார்....

கந்தசாமி. said...
Best Blogger Tips

சீரியல் பெண்களை பற்றி ஒரு நச் ...

கந்தசாமி. said...
Best Blogger Tips

///மீண்டும் இலவசத்தை தந்து நீயும் ஜெயித்து விடு
வேண்டும் வரம் தருவேன் என சொல்லி ஏமாற்றி விடு!/// மக்கள் தலை விதி ...

கந்தசாமி. said...
Best Blogger Tips

அப்புறம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பாஸ்...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நண்பர் தின வாழ்த்துகள் நிரூபா

angelin said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் .நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
(வர வர கமென்ட் எழுதவே பயம்ம்மா இருக்கு ஊருக்கு வேறு புறப்பட்டு கொண்டிருக்கேன் ).

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
Best Blogger Tips

நன்று நிரூ

கலக்குறீங்க வாழ்த்துக்கள்..

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

முதலாவது கவிதை சோகமயம் என்றாலும்
எனக்கு படிக்கும் போது சும்மா ஜிலு ஜிலு என்று இருக்குப்பா
யோவ் இங்க ஒரே வெயிலா இருக்குப்பா
இப்புடி அடிகடி ஜிலு ஜிலு கவிதை போடுப்பா
(என்ன ஒரு வில்லத்தனம் தாத்தா மேல)

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//ஜாக்கிரதை இல்லேன்னா பணம் காலி!//

இதே நான் படிக்க மாட்டேன்
நான் இன்னும் வயசுக்கு வரல்லப்பாlol

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//சீரியலால் சிக்கல் பட்ட சிங்காரி//!ஹி ஹி
நாமளும் பார்ப்போம் இல்ல
தென்றல் சூப்பர் மச்சி

கார்த்தி said...
Best Blogger Tips

சார் நீங்க சகலகலா வல்லவர்! என்னெண்டு இப்பிடி கவிதையெல்லாம்....

கலைஞர் சொறி கொலைஞருக்கு நல்லஅடி!

சுகந்தாவின்ர பெயரை பெயர் சொல்லி சுகந்”தா” என்று கூப்பிட்டது தப்பாகி போய்விட்டது!! ஹிஹிஹி

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//காற்றில் பறக்கும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள்!//

நிருபன் பாஸ்
கொஞ்சம் அவசர பட்டுட்டிங்க போல இருக்கு
இன்னும் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம்
ஜெயா ஆட்சி இன்னும் குழந்தை பாஸ்
நான் அவதானித்த வரை சொன்னவற்றை வழமைக்கு மாறாக
நிறைவேற்ற முயர்சிக்குறார் செய்கிறார் என்றே படுகிறது
( ஹி ஹி அம்மா விசுவாசம் பாஸ்)

சேட்டைக்காரன் said...
Best Blogger Tips

//தன் மகனும் கைதாகி தத்தளித்து வாடுகின்றார்
என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே//

மகனில்லை சகோ! மகள்! :-)

எனக்கும் கவுஜக்கும் ரொம்ப தூரம் சகோ! :))
அப்பப்போ டிரை பண்ணுவேன்!

காட்டான் said...
Best Blogger Tips

நிரூபன் உங்களை போன்றோர் சபித்ததால்தான் தாத்தா இப்படி ஆகிற்றார் என்ன வடிவா மாப்பிள முடுக்கில திரிந்தவரை இப்படி ஆக்கிட்டாங்களே..?எப்படி இருந்தமனிசன் இப்பிடி ஆகிற்றாரே..? பாரு மாப்பிள அம்மா இன்னும் அடிக்கவில்லை இந்தாளு வலிக்குது வலிக்குதென்னு கூவுறார்..அப்ப அம்மா அடிக்க தொடங்கினா இந்தாளு எப்பிடி மாப்பிள கூவுவார் இது நல்லாவா இருக்குது..!!!!??

ஆர்.கே.சதீஷ்குமார் said...
Best Blogger Tips

நிரூபன் ஜயலலிதா சொன்ன வாக்குறுதிகள் காற்றில் பறக்கவில்லை..ஆகஸ்ட் 15 அரசு கேபிள்,செப்டம்பர் 15 இலவச மிக்ஸி,ஃபேன் என அறிவித்தாகிவிட்டது.தமிழகம் முழுவதும் கொடுக்க தயாரிக்க காலம் ஆகும் அல்லவா..இலங்கையில் இருப்பதால் உங்களுக்கு தெரிந்திரிக்க வாய்ப்பில்லை

தேவைகளற்றவனின் அடிமை said...
Best Blogger Tips

nice.......

மகேந்திரன் said...
Best Blogger Tips

ஒருவர் வினையறுக்கிறார்
ஒருவர் வினை விதைக்கிறார்.

அருமையான கட்டுரை நண்பரே.

FOOD said...
Best Blogger Tips

// இக் கவிதைகளைத் தமிழகத்தில் வாழ்ந்து எழுதுவது போன்ற, உணர்வோடு எழுதியிருக்கிறேன்.//
தற்போது தாங்கள் உணர்வால், உள்ளத்தால் தமிழ்நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறீர்கள்.

# கவிதை வீதி # சௌந்தர் said...
Best Blogger Tips

பிரமாதம்....

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...

செங்கோவி said...
Best Blogger Tips

கலக்கல் கவிதைகள்..கொலைஞருக்கு தன் வினை தன்னைச் சுடும்னு தெரியாமப் போயிடுச்சே.

shanmugavel said...
Best Blogger Tips

கவிதைகளில் அசத்துகிறீர்கள் சகோ!

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//தன் மகனும் கைதாகி தத்தளித்து வாடுகின்றார்
என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே//
ஹிஹி அவர் வாலண்டியரா போனவராமே உண்மையா?

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//மொத்தமாக ஆண்கள் பாக்கட்டினை
மோகத்தினால் காலியாக்கி விடுவாளாம்! /
எவரது எவரது??

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//சாப்பாட்டு நேரத்தின் பின்னர்- நாதஸ்வரம்
சத்தமாய் ஆரம்பிக்கும் என்பதனால்
பெத்திட்டாப் போச்சு ஒரு குழந்தை- தொலைந்து
போனது போகட்டும் என தேற்றினாள் //
இப்பிடி தான் கொடுமைகள் ஆரம்பமாகுது பாஸ்!!அப்புறம் கஷ்டப்படுங்கள்!

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//
அம்மா ஜெயலிலிதா, நீ வரும் போது சொன்ன தென்னம்மா
சும்மா இருந்த மக்களுக்கு மிக்ஸி தந்து சொக்கவைத்த தே(ன்)னம்மா/
அட அட அட!!!!!

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//பிற் சேர்க்கை: இக் கவிதைகளைத் தமிழகத்தில் வாழ்ந்து எழுதுவது போன்ற, உணர்வோடு எழுதியிருக்கிறேன். /
அவ்வவ்வ்வ்வ்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்லதொரு கவிதைச் சரம் தொடுத்தீர்!
நன்று நன்று நிரூ,நாலும் மிக நன்று!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
J.P Josephine Baba said...
Best Blogger Tips

அருமை அர்த்தமுள்ள வரிகள். வாழ்த்துக்கள் சகோதரா!

M.R said...
Best Blogger Tips

அருமையான கவிதைகள் நண்பரே

ஆங்காங்கே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றி இருக்கிறீர்கள் .

சம்மந்த பட்டவர்களுக்கு வலித்தால் சரி

ஆகுலன் said...
Best Blogger Tips

அருமை அண்ணா......

ஷீ-நிசி said...
Best Blogger Tips

எசப்பாட்டு எல்லாம் நெசப்பாட்டுங்கோ! :)

Chitra said...
Best Blogger Tips

காரசாரமா இருக்குதே.....

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பிற்கினிய உறவுகளே, அனைவரின் கவனத்திற்கும்,
முதலாவது கவிதையில்- கலைஞர் பற்றிய கவிதையில்- மகளின் என்று வர வேண்டிய இடத்தில், மகனின் நிலை என்று தவறுதலாக எழுதி விட்டேன். இத் தவறினைச் சகோதரன் சேட்டைக்காரன் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Nesan said...
Best Blogger Tips

கருணாநிதியை ஒரு வழி செய்வது என்ற முடிவோடு  வந்த கவிதை நக்கல் நண்பா!

KANA VARO said...
Best Blogger Tips

கலக்குறீங்கள்

Reverie said...
Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...நண்பரே...
அர்த்தமுள்ள வரிகள்...
கதம்ப கவிதைகள்...அருமை

கவி அழகன் said...
Best Blogger Tips

கவிதைகள் அசத்துது

கவி அழகன் said...
Best Blogger Tips

என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே
எட்டிக் கொஞ்சம் கூப்பிட்டால் வந்திடுவேன் தனியே!!

செம கலக்கள் மச்சி

தமிழ்வாசி - Prakash said...
Best Blogger Tips

மாப்ளே... கொஞ்சம் லேட்.. கொலைஞர் பேரை நிரந்தரமா ஆக்கிடுவிங்க போல...உங்க கவிதை பாவம் கொலைஞர்.

ரியாஸ் அஹமது said...
Best Blogger Tips

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

ஜீ... said...
Best Blogger Tips

//தன் மகனின் நிலையெண்ணி வாடுகிறார் கலைஞர்
தமிழர்களின் கண்ணீரால் நொந்து போனார் கவிஞர்
இன்னலது தன் உடலை வாட்டவில்லை என்றாலும்;
ஈழ மக்கள்- மீனவர்கள் கனவில்; தொல்லைதனை
அண்ணலுக்குத் தந்து விட்டுப் போகின்றார்;//

SUPER!!!! :-)

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
பிரணவன் said...
Best Blogger Tips

இந்த பிரிமாணங்கள் எல்லாம், ஊரை ஏமாற்றுபவர்கள் பற்றிய கருத்து பதிவாய் இருக்கின்றன. நிச்சயம் ஒரு நாள் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள். . .நன்றி நிரூ. . .

mohan said...
Best Blogger Tips

வணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..

என்னுடைய பக்கமும் வாருங்கள்..
http://desiyamdivyam.blogspot.com/

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails