Wednesday, August 24, 2011

பட்டய கெளப்ப போகும் தளபதி விஜய் இன் வேலாயுதம்- போஸ்டர் விமர்சனம்!

வலையுலக வரலாற்றில் முதன் முறையாகத் திரைப்படத்தின் போஸ்டருக்கு அதிரடி விமர்சனம் வழங்கி அசத்திய மாத்தியோசி வலைப்பதிவின் ஓனரும், நண்பனுமான ஓட்டவடை நாராயணனின் முயற்சியினைத் தொடர்ந்து, உங்களை நாடி வருகின்றது வேலாயுதம் போஸ்டர் விமர்சனம். தொடர்ச்சியாகப் பல படங்கள் மூலம் தன் ரசிகர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த இளைய தளபதி அவர்களின் திரையுலக வாழ்வில் திருப்பு முனையாக அமையவுள்ள படம் தான் இந்த வேலாயுதம்.
இளைய தளபதி விஜய் படம் என்றதும் தலைவலி மருந்தினைத் தம்முடன் எடுத்துச் சென்று படம் பார்க்கப் போகும் ஒரு கூட்டத்தினரையும், ’ஏன்டா இந்தப் படத்தினைப் பார்க்க வந்தோம் எனத் தலை தலையாகப் படத்தின் இடை நடுவில் அடித்துக் கொ(ல்)ளும் ரசிகர்களையும்,
‘சே...குடுத்த காசிற்கு தெருக் கடையிலை சமோசா வாங்கிச் சாப்பிட்டாலாச்சும் வயிறு நெரம்பிடும் என’ நொந்து கொள்ளும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கிலும், தனது புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும், மேலும் அதிகமாக வேண்டும் எனும் நோக்கிலும் விஜய் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இம் முறை வேலாயுதம் பட போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
இந்திய, இலங்கை மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் குற்றமிழைப்போருக்குத் தண்டணையாக ஒரே நேரத்தில் ஏழு தொலைக்காட்சிகளின் உதவியோடு விஜய் இன் பட டீவீடிக்கள் போட்டுக் காண்பிக்கப்பட்டு, இம்சையினைக் கூட்டிக் குற்றவாளிகள் நல் வழிப்படுத்தப்படுவதால்;
இத்தகைய எழுதப்படாத தண்டனையினை இல்லாதொழிக்கும் வகையில் இம் முறை விஜய் அவர்களின் முற்று முழுதான பங்களிப்போடு தயாராகிக் கொண்டிருக்கிறது வேலாயுதம்.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
தமிழகத்தில் ஈஸ்ட்மெண்ட் கலர்த் திரைப்படங்களின் கால கட்டத்தினைத் தொடர்ந்து வந்த
’கலர்த் திரைப்படங்களுக்கான போஸ்டரினைப் போல, இவ் வேலாயுதத்தின் போஸ்டரும் சிவகாசியில் கணினிப் பிரிண்டில் அச்சடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். திரையுலகில் வெளியாகும் அனைத்துப் படங்களின் போஸ்டர்களைப் போல 1024*768 சைஸில் இந்தப் போஸ்டரும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றது. விஜய் இன் அதிஷ்ட எண் "6" இந்த அளவினுள் உள்ளடங்குவதால், விஜய்க்கு இப் படத்தின் மூலம் வசூல் மழை என்பது யாராலும் மறுக்க முடியாத வெளிப்படையான உண்மையாகும்.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
இலங்கை- இந்தியப் பகுதிகளில் நிலவும் கத்தரி வெய்யிலினைக் கருத்திற் கொண்டு- போஸ்டரினைப் பார்ப்போரின் கண்ணைக் குத்தாத வகையில் கடுங் கலர் கொடுக்கப்படாது மென்மையான கலரில் போஸ்டர் அச்சடிக்கப்பட்டிருக்கின்றமையானது வழமையாக விஜய் படப் போஸ்டர் மூலம் பல ரசிகர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க உதவியாக இருக்கும் எனும் நோக்கத்திலாகும்.

 ஏற்கனவே வில்லுப் பட போஸ்டரில் சிகப்பு நிற மையினை தளபதி விஜய் அவர்களின் கந்தலான சேட்டினைப் புதுப் பொலிவுடன் காட்டும் நோக்கில் ஊற்றிப் போஸ்டர் அடித்து வெளியிட்ட காரணத்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள மாடுகள் அனைத்தும் மிரண்டு ஓட்டமெடுத்த காரணத்தினைக் கருத்திற் கொண்டு, மிகுந்த கவனத்தோடு, சூழலுக்குப் பாதிப்பேற்படாத வகையில் இந்தப் போஸ்டரினை அச்சடித்து வெளியிட்டுள்ளார்கள் வேலாயுதம் பட போஸ்டர் டிசைனர்.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
தன் உள்ளங்கையினைப் போன்று, இப் படமும் வெள்ளையாகவும், பார்ப்போரை நிச்சயம் கொள்ளை கொள்ளும் வகையிலும் அமைந்து கொள்ளும் எனும் உண்மையினைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் விஜய் அவர்களின் போஸ்டருக்கான போஸிங் அமைந்துள்ளது. ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், ராஜாவின் இயக்கத்தில், விஜய் ஆன்டனியின் இசையில் வேலாயுதம் தயாராகிக் கொண்டிருக்கிறது எனும் எதிர்பார்ப்பினை இப் போஸ்டர் நமக்குத் தந்து கொண்டிருக்கிறது.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
வேலாயுதத்தில் நடிக்கும் குழைத்து வைத்த கோதுமை மாக் கன்னக்காரி ஹன்சிகாவினைப் பற்றிய தகவலினையோ, அல்லது, ஜெனெலியா அவர்களைப் பற்றிய தகவலினையோ, இப் போஸ்டரில் குறிப்பிடாமலும், கதாநாயகிகளின் படங்களை இணைக்காமலிருப்பதும்;
விஜய் அவர்களின் படம் ஒரு ஆணாதிக்கவாத- அடி தடி ஆக்சன் படம் எனும் உணர்வினை போஸ்டரினைப் பார்ப்போருக்கு நிச்சயம் தரும் என்பதில் ஐயமில்லை.

 வழமையாகத் தனது படங்களில் இளைஞர்களுக்குச் சேதி சொல்ல முயற்சிக்கும் விஜய், வேலாயுதம் மூலம் இம் முறை வயசான பாட்டிமார்களின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் அருமையான பல திட்டங்களை அவிழ்த்து விடப் போகின்றார் என்பதற்குச் சாட்சியாக, அவர் வயசான பாட்டிகளின் தோள் மேல் கை போட்டு, அன்பைச் சொரியும் ஸ்டில்ஸ் போஸ்டரோடு போனஸாக(BONUS) குழந்தைங்க உள்ள வீடுகளில் நப்பி (NAPPY) மாற்றும் போது பயன்படும் நோக்கில் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளது. காப்புரிமை: நிரூபனின் நாற்று

வழமையான விஜய் படங்களின் பாணியிலிருந்து வேலாயுதம் போஸ்டர், மற்றும் வேலாயுதம் படத்தின் கதையும் மாறுபட்டிருந்தாலும், "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" எனும் பழமொழியினை நிரூபிக்கும் வகையில், போஸ்டர் அச்சடித்தவர் வில்லுப் படத்தில் விஜய் மாட்டு வண்டிலில் வரும் சீனை மறக்க முடியாதவராய், இந்தப் படத்தில் மீண்டுமொருதரம் விஜய் அவர்களையும் மாட்டு வண்டிலில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்.

போஸ்டர் டிசைனர்(பிரிண்டர்) பாராட்டுப் பெறும் இடங்கள்:

* இருளிலிருந்து மக்களை ஒளிக்கு கூட்டிச் செல்லவுள்ளார் விஜய் எனும் உண்மையினை உணர்த்தும் வகையில்;
தமிழ் நாட்டு எலக்சனில் விஜய் எதிர்காலத்தில் நிற்கவுள்ளார் எனும் சேதியினை மறைமுகமாக மக்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் போஸ்டரின் பின்ணனியில் இருளினைக் காட்டி, விஜய் கையினூடாக வெள்ளை நிறத்தினைக் காட்டியுள்ளார் டிசைனர்.

*தல ரசிகர்களைச் சூடேற்றும் வகையிலும், மங்காத்தா படத்திற்கு எப்போதுமே வேலாயுதம் சவாலாக அமையும் எனும் சேதியினைச் சொல்லும் வகையிலும்,
மங்காத்தாவில் துப்பாக்கியோடும், தீப் பிளம்பு பேக்ரவுண்டோடும் காட்சியளிக்கும் அஜித்திற்கு,
‘தனது இரு கைகளையும் திருப்பிக் காட்டிப் பொறுமை! பொறுமை! எனச் சொல்ல வைக்கும் விதமாக இப் போஸ்டரை இலக்கியத் தரத்தோடு, குறிப்பால் உணர்த்தும் வகையில் டிசைன் பண்ணியுளமை.

*சீட்டுக் கட்டு விளையாட்டில் வரும் குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ள மங்காத்தா போஸ்டருக்குச் சவால் விடும் வகையில் கத்தி போன்ற கூரிய ஆயுதக் குறியீட்டினை வேலாயுதத்தில் கையாண்டுள்ளார் டிசைனர். இதன் மூலம் தல ரசிகர்களுக்கும், தல அஜித்திற்கும் வேலாயுதம் சிம்ம சொப்பமனாக அமையும் என்பதனை அறிவித்துள்ளார் போஸ்டர் டிசைனர்.


போஸ்டரில் டிசைனர் பல்பு வாங்குமிடங்கள்:

*கோபத்தோடு எதிரியினை எதிர் கொள்ளத் தயாராகும் பாணியில் மங்காத்தாவில் காட்சி தரும் அஜித்தை, விஜய் சிரித்தபடி எதிர் கொள்வது போன்று காட்டி, ‘இப் போஸ்டரினைப் பார்ப்போரை ‘விஜய் இன் வீரம் இவ்வளவு தானா’ என எண்ணி முகம் சுளிக்க வைத்துள்ளமை.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
*பின்னணியில் கறுப்பு கலர் கொடுத்ததற்குப் பதிலாக, ஹன்சிகாவினையும், ஜெனலியாவையும் அருவாளோடு நிறுத்தி ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் எனும் பாரதியின் தத்துவத்தினை வேலாயுதம் மூலம் உணர்த்தாது, வேலாயுதம் ஓர் ஆணாதிக்கப் படம் என்பதைப் பறைசாற்றியுள்ளமை.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
வேலாயுதம் போஸ்டர்: இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்வது போல, ஊழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்கும் நோக்கில்;
 தேர்தலில் போட்டியிட்டு, ஜெயிக்கப் போகும் இளைய தளபதி விஜய் இன் எதிர்கால வாழ்க்கையினைக் கூறி நிற்கும் ஆருடம்!!

பிற் சேர்க்கை: இப் பதிவில் உள்ள இரண்டு படங்களைத் தன் கை வண்ணத்தின் மூலம் டிசைனிங் செய்து, நகைச்சுவை வசனங்களைச் சேர்த்தவர், நாற்று வலையின் புகைப்பட எடிற்றர், சகோதரன் நிகழ்வுகள் வலைப் பதிவின் ஓனர் கந்தசாமி. 
*******************************************************************************
நாளாந்தம் மலரும் மொட்டுக்களாய் பல புதிய பதிவர்களைத் தாங்கி நறுமணம் பரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பதிவுலகில் அண்மையில் பதிவுலகிற்கு வந்து நகைச்சுவை, போட்டோக் கமெண்ட், பாடல் விமர்சனம், சிறுகதை, எனப் பல்சுவை அம்சங்களையும் தனது வலைப் பதிவில் பதிவேற்றிக் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் மாய உலகம் வலைப் பதிவின் சொந்தக்காரர் ராஜேஷ் அவர்கள். காப்புரிமை: நிரூபனின் நாற்று

பதிவுலகில் இதுவரை யாருமே எழுதியிருக்காத, முயற்சிக்காதா போட்டோக்கள் மூலம் முற்று முழுதாக எடிற்றிங் செய்யப்பட்ட ஒரு நகைச்சுவை நாடகத்தினையும் வலையேற்றியிருக்கிறார் ராஜேஷ். வித்தியாசமான கிரியேட்டிவிட்டி மைண்ட் கொண்ட பதிவர், பின்னூட்டங்களினைக் கூட வர்ணமயமான பின்னூட்டங்களாக HTML கோட் உதவியோடு எழுதக் கூடிய பதிவர்.
காப்புரிமை: நிரூபனின் நாற்று
ராஜேஷ் அவர்களின் வலைப் பதிவு முகவரி:
http://maayaulagam-4u.blogspot.com/

அப்புறம் என்ன....ஓடோடிச் சென்று ராஜேஷ் அவர்களுக்கும் எமது ஆதரவினை வழங்கி, அவரது எழுத்துக்கள் சிறப்படைய எம்மாலான ஒத்துழைப்புக்களையும் வழங்குவோமா. காப்புரிமை: நிரூபனின் நாற்று


டிஸ்கி: தமிழ் மண ஓட்டுப் பட்டையில் உங்களின் இடது கைப் பக்கம், மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் கையினைக் கிளிக்கினால் ப்ளஸ் ஓட்டுக் கிடைக்கும். வலது கைப் பக்கம் உள்ள கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் கையினைக் கிளிக்கினால் மைனஸ் ஓட்டுக் கிடைக்கு. ஏலேய்...மைனஸ் ஓட்டுப் போடுறவங்க, சரியாகப் பார்த்துப் போடலாமில்லே!!!

111 Comments:

ஆகுலன் said...
Best Blogger Tips

ஆகா விஜய்யா....

ஆகுலன் said...
Best Blogger Tips

நானும் விஜய் ரசிகன் இதை வம்மையாக கண்டிக்கிறேன்........ஒர்தனையும் உதவிக்கு காணோமே.....

ஆகுலன் said...
Best Blogger Tips

///வலது கைப் பக்கம் உள்ள கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் கையினைக் கிளிக்கினால் மைனஸ் ஓட்டுக் கிடைக்கு. ///

அடடா எனக்கு இது தெரியாம போச்சே..இவ்வளவு நாளா நான் மாறி குதிப்புட்டன்..........(சும்மா காமெடி ஆ)

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

வந்துட்டான்யா ஆகுலன். நான் முகநூலில ஷேர் பண்னேக்கையே நெனச்சேன்..))

ஆகுலன் said...
Best Blogger Tips

//நிகழ்வுகள் said...
வந்துட்டான்யா ஆகுலன். நான் முகநூலில ஷேர் பண்னேக்கையே நெனச்சேன்..))//

உங்களுக்கு நல்ல மனசு பாஸ்....

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள எப்பையா பள்ளிகூடம் தொடங்குது அமெரிக்காவில...!!??

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///தனது புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும், மேலும் அதிகமாக வேண்டும் எனும் நோக்கிலும் விஜய் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இம் முறை வேலாயுதம் பட போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்./// ஹிஹி போஸ்ட்டர் சரிதான் ஆனா படம் ;-)

காட்டான் said...
Best Blogger Tips

மன்னிச்சுகோ மாப்பிள தமிழ் மணத்தில கையில குத்துன்னு சொன்னாங்க எந்தக்கையின்னு சொல்லித்தரவில்லை..!!?
இனிமே பாத்துக்குத்திறன்.. இப்ப நீ கும்மிபதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டா..!?? ரெம்பத்தான் கடுப்பிள இருக்காங்க போல...!!!???))))))

சார்வாகன் said...
Best Blogger Tips

வணக்கம் தலைவா
போஸ்டருக்கே இவ்வளவு விமர்சனமாஆஆஆஆ!!!!!!!!!!
கலக்கல்

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///ஏற்கனவே வில்லுப் பட போஸ்டரில் சிகப்பு நிற மையினை தளபதி விஜய் அவர்களின் கந்தலான சேட்டினைப் புதுப் பொலிவுடன் காட்டும் நோக்கில் ஊற்றிப் போஸ்டர் அடித்து வெளியிட்ட காரணத்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள மாடுகள் அனைத்தும் மிரண்டு ஓட்டமெடுத்த காரணத்தினைக் கருத்திற் கொண்டு// யோ, மாடுகள் மிரண்டு ஓடினதுக்கு போஸ்டர் காரணமில்ல அதில இருந்த ஒருவர் தானாம் ஹிஹி

ஆகுலன் said...
Best Blogger Tips

///காட்டான் said...
மாப்பிள எப்பையா பள்ளிகூடம் தொடங்குது அமெரிக்காவில...!!??//

இந்த மாதம் 31 திகதி... அப்புறம் இப்பிடி சுடு சோறெல்லாம் கேக்க மாட்டன்....

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

வேலாயுதத்தில் நடிக்கும் குழைத்து வைத்த கோதுமை மாக் கன்னக்காரி ஹன்சிகாவினைப் பற்றிய தகவலினையோ, அல்லது, ஜெனெலியா அவர்களைப் பற்றிய தகவலினையோ, இப் போஸ்டரில் குறிப்பிடாமலும், கதாநாயகிகளின் படங்களை இணைக்காமலிருப்பதும்;
விஜய் அவர்களின் படம் ஒரு ஆணாதிக்கவாத-/// கோத்துவிட்டுடானே, கோத்துவிட்டுட்டானே... ஹஹஹா

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இம் முறை வயசான பாட்டிமார்களின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் அருமையான பல திட்டங்களை அவிழ்த்து விடப் போகின்றார் என்பதற்குச் சாட்சியாக, அவர் வயசான பாட்டிகளின் தோள் மேல் கை போட்டு, அன்பைச் சொரியும் ஸ்டில்ஸ் போஸ்டரோடு போனஸாக(BONUS) குழந்தைங்க உள்ள வீடுகளில் நப்பி (NAPPY) மாற்றும் போது பயன்படும் நோக்கில் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளது./// ஹஹஹா இது ரொம்ப ஓவர்,

யாரப்பா அங்க விஜய் ரசிகர் யாரும் இல்லையா;-)

காட்டான் said...
Best Blogger Tips

இனி வீட்ட போய்தான் கும்முறது அடையான் கறுவள் டெலிபோன பறிச்சுபோடுவாங்கையா...

ஆகுலன் said...
Best Blogger Tips

ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இருளிலிருந்து மக்களை ஒளிக்கு கூட்டிச் செல்லவுள்ளார் விஜய் எனும் உண்மையினை உணர்த்தும் வகையில்;
தமிழ் நாட்டு எலக்சனில் விஜய் எதிர்காலத்தில் நிற்கவுள்ளார் எனும் சேதியினை மறைமுகமாக மக்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் போஸ்டரின் பின்ணனியில் இருளினைக் காட்டி, விஜய் கையினூடாக வெள்ளை நிறத்தினைக் காட்டியுள்ளார் டிசைனர்.// ஓகோ! இவ்வளவு விஷயம் இருக்கா ,

போஸ்டர் அடிச்சவன் மட்டும் இத பார்த்தால் ஆனந்த கண்ணீர் வடிப்பான்யா;-)

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///*கோபத்தோடு எதிரியினை எதிர் கொள்ளத் தயாராகும் பாணியில் மங்காத்தாவில் காட்சி தரும் அஜித்தை, விஜய் சிரித்தபடி எதிர் கொள்வது போன்று காட்டி, ‘இப் போஸ்டரினைப் பார்ப்போரை ‘விஜய் இன் வீரம் இவ்வளவு தானா’ என எண்ணி முகம் சுளிக்க வைத்துள்ளமை./// ஹிஹி எப்பிடியாவது ரண்டுபேரையும் அடிபட வைக்காமல் விட மாட்டிங்க போல

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

தமிழ் மணம் ஓட்டு போடுறத்திலையும் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கா ;-)

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

முக்கிய குறிப்பு ;- அன்பார்ந்த விஜய் ரசிகர்களே எதோ பொழுது போக்குக்காக கும்மிவிட்டன், தப்ப நினச்சிடாதேங்கோ.. அந்த படங்கள் கூடா ச்சும்மா..... ஜாலிக்கு தான்..))

அப்புறம் கோபத்த வச்சுக்கொண்டு என்ர பக்கம் வந்து மைனஸ் ஓட்டு குத்திவிடக்கூடாது பாருங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பட்டய கெளப்ப போகும் தளபதி விஜய் இன் வேலாயுதம்- போஸ்டர் விமர்சனம்!>>>

உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவாஆஆஅ....

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாத்தியோசி வலைப்பதிவின் ஓனரும், நண்பனுமான ஓட்டவடை நாராயணனின் முயற்சியினைத் தொடர்ந்து, உங்களை நாடி வருகின்றது வேலாயுதம் போஸ்டர் விமர்சனம். >>>

இந்த பதிவுக்கும் அவர் ஐடியா கொடுத்திருப்பார்

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

விஜய் இன் அதிஷ்ட எண் "6" இந்த அளவினுள் உள்ளடங்குவதால், விஜய்க்கு இப் படத்தின் மூலம் வசூல் மழை என்பது யாராலும் மறுக்க முடியாத வெளிப்படையான உண்மையாகும்.>>>

புள்ளி விவரம் சூப்பரு

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

விஜய் அவர்களின் படம் ஒரு ஆணாதிக்கவாத- அடி தடி ஆக்சன் படம் எனும் உணர்வினை போஸ்டரினைப் பார்ப்போருக்கு நிச்சயம் தரும் என்பதில் ஐயமில்லை.>>>>

ரொம்ப சரியா சொல்லியிருகிங்க சகோ

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

போஸ்டரில் டிசைனர் பல்பு வாங்குமிடங்கள்:>>>>

இப்படி வேற ஒண்ணு இருக்கா?

சுதா SJ said...
Best Blogger Tips

ஆரம்பிச்ட்டாங்கய்யா ஆராம்பிசிட்டாங்க
அவ்வ்வவ்வ்வ்வ்

சுதா SJ said...
Best Blogger Tips

நானும் செமையா கண்டிக்குறேன்,
விஜயை கும்மியதுக்கு அல்ல.
நம்ம செல்லங்கள் ஜெனிலியா ஹன்சிகாவை பற்றி எவ்வித தகவலும் பகிராமைக்கு.

சுதா SJ said...
Best Blogger Tips

அட இன்னும் மைனஸ் ஒட்டு விழவில்லை.
அவங்க எல்லாம் ஊருக்கு போய்ட்டான்களோ

சுதா SJ said...
Best Blogger Tips

கொஞ்சம் திருத்தம்... ஜெனிலியா ஹன்சிகா பற்றி குறிப்பிட்டு இருந்தாலும் அவங்க இருக்கும் போட்டோ போஸ்டல் போடாததுக்கு என் கண்டனங்கள்
( முதல் நித்திரை தூக்கத்தில் கொஞ்சம் அசந்து கமெண்ட்ஸ் போட்டுட்டன்ய்யா, அவ்வ்வவ்வ் )

KANA VARO said...
Best Blogger Tips

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
அட இன்னும் மைனஸ் ஒட்டு விழவில்லை.//

நான் குத்தியிருப்பன். நம்ம நிரூ தானே! எண்டு விட்டுடன். ஹீ ஹீ (பிறகு அவன் எனக்கு தனிப்பதிவு போட்டுடுவன்)

KANA VARO said...
Best Blogger Tips

ஆகுலன் இந்த மாதிரியான இடங்களில அடங்கி போகணும். ஆத்திர படக்கூடாது. பிறகு காரைகுடியில விஜய் செயற்கையா பொங்கின போல ஆயிடும்.

KANA VARO said...
Best Blogger Tips

நிரூவுக்கு கோபம் விஜய் மேல கிடையாது எண்டு எனக்கு நல்லாத்தெரியும். அதால பிழைச்சு போகட்டும். ஹீ ஹீ

KANA VARO said...
Best Blogger Tips

ஒரு போஸ்டரை வைச்சு விமர்சம் எழுதிற அளவுக்கு எங்க தளபதி இருக்கார் (இப்பிடியாச்சும் சமாளிப்பம்)

KANA VARO said...
Best Blogger Tips

ஆமா நம்ம தமிழ் வாசி எரியுற விளக்கில என்னை ஊத்துறார்.

KANA VARO said...
Best Blogger Tips

மங்காத்தா பட போஸ்டர் விமர்சனம் எழுதாவிடில் தமிழ்வாசி தீக்குளிப்பார் என அறிவிக்கிறேன்!

மகேந்திரன் said...
Best Blogger Tips

போஸ்டர் விமர்சனத்துக்கே இவ்வளவு ஆர்பாட்டமா.....
யப்பா......

நண்பர் மாய உலக ராஜேஷ் அவர்களின் அறிமுகம் நன்று....
வாழ்த்துக்கள் நண்பர் ராஜேஷ்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

போஸ்டர் விமர்சனத்துக்கே இவ்வளவு ஆர்பாட்டமா.....
யப்பா......

நண்பர் மாய உலக ராஜேஷ் அவர்களின் அறிமுகம் நன்று....
வாழ்த்துக்கள் நண்பர் ராஜேஷ்.

Unknown said...
Best Blogger Tips

ஹிஹி என்ன தான் சொன்னாலும் பாருங்க பய எவனோ மைனஸ் குத்தி இருக்கான்.,அக்மார்க் விசை ரசிகன் வரோ மீது தான் எனக்கு பலத்த சந்தேகம் ஹிஹி கோர்த்து விடுவம்லே!!

Unknown said...
Best Blogger Tips

தளபதியை வைச்சு காமெடி பண்ணிய நிருவுக்கு அண்ணா ஹாசரேயிடம் சொல்லி கண்டன போராட்டம் நடத்தலாம்னு இருக்கேன்!

Unknown said...
Best Blogger Tips

என்ன தான் இருந்தாலும் நல்லா சமாளிக்கிறீங்க வரோ!!உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு ஹிஹி

கவி அழகன் said...
Best Blogger Tips

தம்பி ஆகுலா

நம்ம இளையதளபதி விஜய் வச்சு சன் டிவி முதல் பிளாக்கர் வரை உள்ள அத்தனை பேரும் பேமசாகிரான்கப்பா

இப்பட்டி எழுதினாத்தான் பார்பார்கள் என்ற மூடனம்பிக்கை வலை உலகில் காணப்படுகிறது

ஆனால் முண்டி அடிச்சு முதல் ஷோ பாக்கிரவங்களும் இவங்கள் தான்

தளபதியை பற்றி குற்றம் சொல்பவர்கள் கொஞ்சபெயர் தான். அப்ப மற்றவங்கள் எல்லாம் விரும்புரான்கள். தலை யாய் பற்றி புகழ்ந்து எழுதுரவங்களும் கொஞ்சபெயர்தான் அப்ப மற்றவங்கள் எல்லாம் விரும்பிறதே இல்லை .

இது லாஜிக்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பேசாம விசய்....காதலுக்கு மரியாதை.துள்ளாத மனமும் துள்ளும்,பூவே உனக்காக ரேஞ்சிலேயே இருந்து இருக்கலாம்...அதைவிட்டுட்டு......
எங்க ஊர்(சொந்த ஊர் இல்லை/வாழவைத்த ஊர்) தியட்டரில விசய் படம் வந்தா உடனே வெளியிடுவாங்க.அப்படித்தான் சுறா படத்தை அடிபட்டு டிக்கெட் வாங்கி போய் பார்த்து,2 நாள் ஆஸ்பத்திரியில் இருந்தான் ஜயா என் நண்பர் ஒருத்தன் இது பேசாம...சு.சு...........ம்மா இருந்து இருக்கலாம் என்று சொல்லவந்தன்...ஹி.ஹி.ஹி.ஹி

அனாலும் வியச் அண்ணன் உடைய காமடி,அவரது டான்ஸ் எல்லாம் பிரமாதம்யா.ரஜனிக்குப்பிறகு....நான் ரசிக்கும்..ஹீரோக்களின் காமடி என்றால்..தலைவர் விசய் காமடிதான்

கோகுல் said...
Best Blogger Tips

*சீட்டுக் கட்டு விளையாட்டில் வரும் குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ள மங்காத்தா போஸ்டருக்குச் சவால் விடும் வகையில் கத்தி போன்ற கூரிய ஆயுதக் குறியீட்டினை வேலாயுதத்தில் கையாண்டுள்ளார் டிசைனர். இதன் மூலம் தல ரசிகர்களுக்கும், தல அஜித்திற்கும் வேலாயுதம் சிம்ம சொப்பமனாக அமையும் என்பதனை அறிவித்துள்ளார் போஸ்டர் டிசைனர்.//

அப்பறம் என்னை சிண்டு முடிச்சாச்சு!

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன்........................ அட்ரஸ் பிளீஸ்

Mathuran said...
Best Blogger Tips

எலேய்... ஊரில இருக்கிற நம்ம மொத்த ரவுடிகளயும் வண்டியில ஏத்துங்கலேய்..

ஒருந்தன் நம்மள சீண்டிட்டான்

தினேஷ்குமார் said...
Best Blogger Tips

ஹையோ அம்மா எல்லாரும் ஓடுங்க ஓடுங்க ..... டாகுடர் வர்ராரு ...

Mathuran said...
Best Blogger Tips

// இப் பதிவில் உள்ள இரண்டு படங்களைத் தன் கை வண்ணத்தின் மூலம் டிசைனிங் செய்து, நகைச்சுவை வசனங்களைச் சேர்த்தவர், நாற்று வலையின் புகைப்பட எடிற்றர், சகோதரன் நிகழ்வுகள் வலைப் பதிவின் ஓனர் கந்தசாமி. //

ஓ அவற்ற வேலயா இது..
இருக்கட்டும் இருக்கட்டும்.. தனியா சிக்குவாரில்ல.. அப்ப கிறீஸ் மனிதன அவர் வீட்டுக்கு விடுவம்

கோகுல் said...
Best Blogger Tips

போஸ்டரில் டிசைனர் பல்பு வாங்குமிடங்கள்://

இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே!

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன் நம்ம தளபதிய கேவலப்படுத்திட்டார்

அன்பான ரசிகப் பெருமக்களே...
நாளை மாபெரும் கண்டனப் பேரணி, கடையடைப்பு, மறியல் போராட்டம் அனைத்தும் இடம்பெறும். முக்கியமாக கோல்பேஸில் எங்கள் தளபதி ரசிகன் மைந்தன் சிவாவும், கானா வரோவும் ஒரே நேரத்தில் தீக்குளிப்பார்கள்.

அப்போதும் நிரூபன் தன் கருத்தை வாபஸ் வாங்காவிட்டால் பிரான்ஸில் இருக்கும் நம் தளபதி ரசிகன் ஆகுலன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.

ஹி ஹி

Mathuran said...
Best Blogger Tips

அது சரி....

என்ன நிரூபன் நீங்களும் இதுக்குள்ள இறங்கீட்டிங்க

Mathuran said...
Best Blogger Tips

அறிமுக பதிவர் ராஜேஷுக்கு வாழ்த்துக்கள்...

கோகுல் said...
Best Blogger Tips

என்ன போஸ்டரில் ஹன்சிகா இல்லையா!
ஐயகோ!மைந்தன் சிவா அதிர்ச்சி!

vidivelli said...
Best Blogger Tips

போஸ்டருக்கே இத்தனை விமர்சனம் என்றால்??
விஜய் ரசிகர்கள் குழம்பிட்டாங்க..
விஜய் பேய்காட்ட அதை ஆவெண்டுபாக்கிற ஆக்களை என்ன செய்ய ...hahahhaa
நல்ல பகிர்வு....

அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிவருக்கு வாழ்த்துக்கள்..

ஆகுலன் said...
Best Blogger Tips

////மதுரன் said...
நிரூபன் நம்ம தளபதிய கேவலப்படுத்திட்டார்

அன்பான ரசிகப் பெருமக்களே...
நாளை மாபெரும் கண்டனப் பேரணி, கடையடைப்பு, மறியல் போராட்டம் அனைத்தும் இடம்பெறும். முக்கியமாக கோல்பேஸில் எங்கள் தளபதி ரசிகன் மைந்தன் சிவாவும், கானா வரோவும் ஒரே நேரத்தில் தீக்குளிப்பார்கள்.

அப்போதும் நிரூபன் தன் கருத்தை வாபஸ் வாங்காவிட்டால் பிரான்ஸில் இருக்கும் நம் தளபதி ரசிகன் ஆகுலன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.

ஹி ஹிமதுரன் said...
நிரூபன் நம்ம தளபதிய கேவலப்படுத்திட்டார்

அன்பான ரசிகப் பெருமக்களே...
நாளை மாபெரும் கண்டனப் பேரணி, கடையடைப்பு, மறியல் போராட்டம் அனைத்தும் இடம்பெறும். முக்கியமாக கோல்பேஸில் எங்கள் தளபதி ரசிகன் மைந்தன் சிவாவும், கானா வரோவும் ஒரே நேரத்தில் தீக்குளிப்பார்கள்.

அப்போதும் நிரூபன் தன் கருத்தை வாபஸ் வாங்காவிட்டால் பிரான்ஸில் இருக்கும் நம் தளபதி ரசிகன் ஆகுலன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்.

ஹி ஹி////

பாஸ் எல்லாம் சரி எனக்கு முன்னுக்கு இரண்டு பேர் போறது சரி நீங்க என்ன மாதிரி.....

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அடேங்கப்பா, ஃபேஸ் புக் ஷேர்ல 93!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உணவு உலகம் said...
Best Blogger Tips

போஸ்டருக்கே விமரிசனமா? இன்னும் என்னவெல்லாம் வரபோகுதோ!

M.R said...
Best Blogger Tips

மாய உலகம் சகோவிற்கு வாழ்த்துக்கள் .

விமர்சனம் ஒரு அலசல்

M.R said...
Best Blogger Tips

தமிழ் மணம் பதினாறு

Unknown said...
Best Blogger Tips

நண்பா கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் ...அதுதான் வர முடியலை .. மனிக்கவும்
நல்ல பதிவு நண்பா

maruthamooran said...
Best Blogger Tips

நிரூ……!

பட்டையைக் கிளப்பிறீங்களே!. எப்பிடீங்க இப்படியெல்லாம் முடியுது. அதுவும், போஸ்டர் விமர்சனத்திலேயே ‘ஆணாதிக்க வெளிப்பாட்டை’ வெளிச்சம் போட்டுக் காட்டி விளிப்புணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.

கலக்குங்க. ஹிஹிஹி.

Prabu Krishna said...
Best Blogger Tips

நானும் ஒரு (முன்னால்) விஜய் ரசிகன்.. இருந்தாலும் நல்ல காமெடி. வேலாயுதம் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இல்லை. விஜய் ஆண்டனி. (நீங்கள் வடிவமைத்த போஸ்டரில் தவறாக உள்ளது )

rajamelaiyur said...
Best Blogger Tips

//
ஒரே நேரத்தில் ஏழு தொலைக்காட்சிகளின் உதவியோடு விஜய் இன் பட டீவீடிக்கள் போட்டுக் காண்பிக்கப்பட்டு, இம்சையினைக் கூட்டிக் குற்றவாளிகள் நல் வழிப்படுத்தப்படுவதால்;
இத்தகைய எழுதப்படாத தண்டனையினை இல்லாதொழிக்கும் வகையில் இம் முறை விஜய் அவர்களின் முற்று முழுதான பங்களிப்போடு தயாராகிக் கொண்டிருக்கிறது வேலாயுதம்.

//

ரொம்ப கொடுமையான தண்டனை

சசிகுமார் said...
Best Blogger Tips

போட்டோக்கல்ல வசனங்கள் ரசிக்க வைக்குது சூப்பர் மச்சி

Unknown said...
Best Blogger Tips

அடுத்து என்ன போஸ்டர் உருவான விதம் பத்தி எதுனா போட போறீங்களா நிரூ ..

சன் டிவி க்கு போட்டி மாதிரி தெரியுதே...

settaikkaran said...
Best Blogger Tips

ஒரு ஜெனிலியா படம் கூட போடலே. போங்க நிரூபன். நான் உங்களோட டூ....!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

ரைட் ...

நிரூபன் said...
Best Blogger Tips

தொடர்ச்சியாக என் பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டு போட்டு வருவது போன்று, இப் பதிவிற்கும், காரணமின்றிக் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் இப் பதிவிற்கும் மைனஸ் ஓட்டுப் போட்ட, Birundan அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

செங்கோவி said...
Best Blogger Tips

என்னய்யா அக்கிரமம் இது..போஸ்டருக்கே விமர்சனமா.....

செங்கோவி said...
Best Blogger Tips

டாகுடர் படத்தையே மதிக்காத ஒலகத்துல அவரு போஸ்டருக்கே விமர்சனம் போடுறீங்கன்னா, நீங்க பெரிய ஆளு தாங்கண்ணோவ்!

செங்கோவி said...
Best Blogger Tips

சிபியை ஏன்யா இப்படி ஓட்டி இருக்கீங்க..

செங்கோவி said...
Best Blogger Tips

ஆஃபீஸ்ல இருக்கறதால இதுக்கு மேல ஆராய்ச்சி பண்ண முடியல..வர்றேன்!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மச்சி தமிழ் டென் ஓட்டு பட்டை காணோம்.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

போஸ்டரில் டிசைனர் பல்பு வாங்குமிடங்கள்://


haa ..haa namma CP... avvvvvvvvvvvvvv.

தனிமரம் said...
Best Blogger Tips

ஒரு பால்கோப்பி கிடைக்குமா பாஸ் ?

தனிமரம் said...
Best Blogger Tips

கலக்கல் பதிவு தொடருங்கள்!

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா.... அசத்தீட்டிங்க அண்ணா.. சூப்பர்... விஜயின் சுறா படத்தைப் பார்த்து நான்கு நாள் மயக்கத்தில் இருந்தவன் நான். (எதுவுமே புரியாம).. வேலாயுதம் அந்த நான்கு நாட்களா அட்லீஸ்ட் ஒரு நாளா குறைத்தால் கூட சந்தோசம் தான். என்னா பாடு படுதிரானையா படம்பாக்க போறவங்கள... ஐயோ ஐயோ...

தனிமரம் said...
Best Blogger Tips

கலக்கல் பதிவு தொடருங்கள்!

Unknown said...
Best Blogger Tips

அகில உலக வலைப்பூ வரலாற்றில் என்று இந்த பதிவுக்கு விளம்பரம் செய்யலாமா?

Unknown said...
Best Blogger Tips

சாதாரண விஷயத்தை வைத்து , மலையளவு பதிவு எழுதியிருக்கிறீர்கள்.., அதுவும் சுவாரஸியம் குறையாமல்...
பாராட்டுகள் ..

Unknown said...
Best Blogger Tips

SUPER!!!! :-)

shanmugavel said...
Best Blogger Tips

ஓட்டவடை இல்லாத குறையை நீங்கள் தீர்த்துவைக்கிறீர்கள்.என்ன இருந்தாலும் தம்பி,தம்பி தான்.சும்மா சொன்னேன்,நன்று

மாய உலகம் said...
Best Blogger Tips

நண்பரே, சகோ, பாஸ் ,மாம்ஸ், மச்சி என அனைத்து உறவுகளுமாகிவிட்ட உங்களுக்கு...எனது மனமார்ந்த நன்றிகள்

மாய உலகம் said...
Best Blogger Tips

என்னை தங்களது தளத்தில் அறிமுகப்படுத்தியதில் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டுள்ளது... என்றும் உங்களை மறவேன் நண்பரே... இதய பூர்வமான நன்றி நன்றி நன்றி

மாய உலகம் said...
Best Blogger Tips

பின்னூட்டங்களினைக் கூட வர்ணமயமான பின்னூட்டங்களாக HTML கோட் உதவியோடு எழுதக் கூடிய பதிவர்.//

இப்படி எழுத காரணமாயிருந்தவர்கள் நண்பர்கள் நீச்சல்காரன் மற்றும் பிளாக்கர் நண்பன்...இருவருக்கும் எனது நன்றிகள்

மாய உலகம் said...
Best Blogger Tips

பட்டய கெளப்ப போகும் தளபதி விஜய் இன் வேலாயுதம்- போஸ்டர் விமர்சனம்!//


முதல் முறையாக நான் இப்பொழுதுதான் போஸ்டருக்கே விமர்சனம் பார்க்கிறேன்...ஹா ஹா கலக்கல்.

Anonymous said...
Best Blogger Tips

அதான் சிட்டில ஒரு போஸ்டரைக்கூட காணோம்...படம் வந்தா...விமர்சனம் தொடரா வரும் போல...
கலக்கல்...

kobiraj said...
Best Blogger Tips

நாங்களும் உயிரோட இருக்கம் அண்ணே

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

போஸ்டருக்கே ஒரு விமரிசனமா?ஒரு புதிய ஆரம்பம்!

Unknown said...
Best Blogger Tips

ஆர்வமில்லா தலைப்பு
மன்னிக்க!
சரி! நலமா தலைவரே!
பதிவுதோறும் ஓட்டம்
கட்டுரையில் காட்டம்

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...
Best Blogger Tips

சகோ M.R,சகோ விடிவெள்ளி செம்பகம் மற்றும் நண்பர்கள் ஆகுலன், மகேந்திரன், மதுரன், நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

Yoga.s.FR said...
Best Blogger Tips

சின்ன டாகுடரை அரியாசனம் ஏற்றிப் பார்க்க நினைக்கும் நிரூபன் வாழ்க!

கார்த்தி said...
Best Blogger Tips

அய்யோ சார் தாங்க முடியல!!!
உங்கட 2வது போஸ்டர் பிழை. அது பழையது. அதில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று அல்லவா இருக்கிறது!!! உண்மையில் தற்போது இசை விஜய் அண்டனி

மாய உலகம் said...
Best Blogger Tips

தாமதத்திற்கு மன்னிக்கவும் சகோ சிஸ்டம் பிராப்ளம் என்பதால் என்னால் கவனிக்க இயலாமல் போய் விட்டது எனது கமண்ட்ஸ் காணவில்லையே

மாய உலகம் said...
Best Blogger Tips

விஜயின் வேலாயுதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... விஜய்க்கும் எனக்கும் ஒரே நட்சத்திரம்.. அதனால் தான் அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

தங்களுடைய முழுமையான விபரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது. எனக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?
கொஞ்சம் நாகரிகமாகப் பொது இடத்தில் கருத்துக்களை எழுதலாம் தானே.

விஜய் இன் படப் போஸ்டர் எழுதியது தவறா? ஏன் இவ்வாறு காழ்ப்புணர்ச்சியில் கமெண்ட் எழுதுகிறீர்கள்?
வலையுலகில் இப்படி எத்தனை பேர் பதிவெழுதுகிறார்கள்.
உங்கள் வேலை என்ன எரிந்து விழுவதா?

உங்களின் காழ்ப்புணர்ச்சியினை இங்கே காண்பிக்க வேண்டாம்,.

மனிதாபிமான நாகரிகத்தோடு நடந்தால் மிக்க நன்மையாக இருக்கும்.

நேசமுடன்,
செ.நிரூபன்.

Unknown said...
Best Blogger Tips

மாப்ள....போஸ்டர பாத்த நீயே இப்படியாயிட்டியே...படம் பாக்கரவங்களோட கதி என்னவோ!

Unknown said...
Best Blogger Tips

//நிரூபன் நம்ம தளபதிய கேவலப்படுத்திட்டார்//

சரி... அடுத்து அஜீத்தை கொஞ்சம் கவனித்து விடுங்கள்..

கூடல் பாலா said...
Best Blogger Tips

நலமா மாப்ளை ....நீண்ட நாட்களுக்கு பிறகு இதோ ...மீண்டும் வந்துட்டேன் போராட்டங்களுக்கு சின்ன ரெஸ்ட் ..

ஆமினா said...
Best Blogger Tips

//இளைய தளபதி விஜய் படம் என்றதும் தலைவலி மருந்தினைத் தம்முடன் எடுத்துச் சென்று படம் பார்க்கப் போகும் ஒரு கூட்டத்தினரையும்//
ஹி...ஹி...ஹி.....

Unknown said...
Best Blogger Tips

//இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்வது போல, ஊழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்கும் நோக்கில்;
தேர்தலில் போட்டியிட்டு, ஜெயிக்கப் போகும் இளைய தளபதி விஜய் இன் எதிர்கால வாழ்க்கையினைக் கூறி நிற்கும் ஆருடம்!!//

இப்படியும் விளக்கம் கொடுப்பான்களோ????
உங்க நகைசுவைக்கு அளவில்லையா???

:-)

athira said...
Best Blogger Tips

விஜயை வச்சே நீங்க பட்டயக் கிளப்புறீங்க நிரூபன்...:).

மேல பாருங்க கரெக்ட்டா 130 ஆவதும், 9 ஆவதும் நாந்தேன் வோட் பண்ணியிருக்கிறேன், மீ ட லாஸ்ட்டூஊஊஊஊ:))... ஏதாவது பரிசுண்டா?:)). ஏனையவை யூசர் நேமாமே.... போட்டால்தான் உள்ளே விடுவினமாம்... என்கிட்டயேவா? நான் வெளில வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்:)).

athira said...
Best Blogger Tips

ஊசி ஊட்டத்தை அனுப்பிப்போட்டு தேடுறேன் தேடுறேன்... தேடுறேன் நான் போட்டதைக் காணவில்லை... அட அதுக்குள்ள ஆரோ களவெடுத்திட்டினமே எனப் பார்த்தால்.. ஓனரின் அப்புறூவல் வேணுமாமே...:)) இது எப்ப தொடக்கம்?:))...அவ்வ்வ்வ்வ்வ்வ்:)

Yoga.s.FR said...
Best Blogger Tips

ATHIRA......எங்கள் இனத்தில் மிகவும் மதிக்கக் கூடிய ஜென்மங்கள் இருக்கின்றனவே?அதனால் தான் அவ்வாறு செய்திருக்கிறார்."ஒரு"ஜென்மம் தொடர்ந்தும் மைனஸ் வோட் போடுவதும் கீழ்த்தரமாக விமர்சிப்பதுமாக "பொழுது" போக்குகிறது.அதனால் தான் இப்படி.

நிரூபன் said...
Best Blogger Tips

யோகா ஐயா, இருக்கீறீங்களே
எப்படிச் சுகம்?

நிரூபன் said...
Best Blogger Tips

உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், எனக்கு மெயில் அனுப்புங்கோ.

பிரணவன் said...
Best Blogger Tips

இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்வது போல, ஊழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்கும் நோக்கில்;
தேர்தலில் போட்டியிட்டு, ஜெயிக்கப் போகும் இளைய தளபதி விஜய் இன் எதிர்கால வாழ்க்கையினைக் கூறி நிற்கும் ஆருடம்!!
படத்திலேயே வெற்றி பெற முடியல, இதுல அரசியல் வேற பாவம். . .விவீ

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன்said...
யோகா ஐயா, "இருக்கீறீங்களே"
எப்படிச் சுகம்?///எப்பிடியும் பேப்பர்ல போடுவங்கள் தான?

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன்said...
உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்,எனக்கு "மெயில்" அனுப்புங்கோ.////பொறுங்கோ இனிமைத் தான்"தண்டவாளமே"போடப் போறாங்களாம்!அதுக்குப் பிறகு பாப்பம்!!!!!!!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு

நானும் ஒரு (முன்னால்) விஜய் ரசிகன்.. இருந்தாலும் நல்ல காமெடி. வேலாயுதம் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இல்லை. விஜய் ஆண்டனி. (நீங்கள் வடிவமைத்த போஸ்டரில் தவறாக உள்ளது )//

ஆமாம் நண்பா. இது காமெடிக்கு டிசைன் பண்ணிய போட்டோ தானே.
டிசைனர் கந்தசாமி அவர்கள் தவறுதலாக டிசைன் பண்ணி விட்டார்,
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி

அய்யோ சார் தாங்க முடியல!!!
உங்கட 2வது போஸ்டர் பிழை. அது பழையது. அதில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று அல்லவா இருக்கிறது!!! உண்மையில் தற்போது இசை விஜய் அண்டனி//


ஆமாம் நண்பா. இது காமெடிக்கு டிசைன் பண்ணிய போட்டோ தானே.
டிசைனர் கந்தசாமி அவர்கள் தவறுதலாக டிசைன் பண்ணி விட்டார்,
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்//

தங்களின் புரிந்துணர்விற்கும், அன்பிற்கும் நன்றி பாஸ்.

chandru said...
Best Blogger Tips

Vijay pahi eluthavum thaney ivvalavu comment kedaikuthu posterkay ivvalavu eluthuringana ungalayay ariyama avara ellarum rasikiringa edukuda indha manam ketta polappu

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails