Sunday, April 3, 2011

ஈழத்தில் சாதியம்- (பாகம் 02) பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

வணக்கம் உறவுகளே, ஈழத்தில் சாதியம் எனும் இத் தொடரின் இரண்டாவது பகுதியினை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு ஆய்வுக் கட்டுரையினைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமானது என்பதனை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

இத் தொடரின் ஒரு சில கருத்துக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காரணத்தாலும், இத் தொடர் பற்றிப் பல நூல்களை வாசிக்க வேண்டிய காரணத்தினாலும், இத் தொடரின் இரண்டாவது அங்கத்தை ஒரு மாதம் கழித்துப் பகிர்ந்து கொள்கிறேன்.


இவ் வேளையில் ஆசிரியர் ச. கருணாகரன், கு.கிரிதரன்,  கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ச. முகுந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கி.விசாகரூபன், திருமதி பிரேம்குமார், ஆகியோருக்கும் இந்தப் பதிவினூடாக நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

ஈழத்தில் சாதியம் எனும் தொடரின் முதலாவது அங்கத்தினூடாக வரலாற்றுக் காலங்களின் அடிப்படையில் இலங்கையில் தமிழரின் இனப் பரம்பல், இலங்கையில் தமிழர்கள் எப்போது வரலாறுகளை எழுதத் தொடங்கினார்கள், இலங்கையில் தமிழ் மக்களிடத்தே காணப்பட்ட, இன்றும் காணப்படுகின்ற சாதிப் பிரிவுகள் பற்றி விளக்கியிருந்தேன்..  இத் தொடரின் முதலாவது பகுதியினைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்.

இலங்கைக்கு 1505ம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் வருகிறார்கள். இந்தப் போர்த்துக்கேயர் இலங்கைக்கு காலடி எடுத்து வைத்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம், கோட்டை(கொழும்பு) கண்டி எனும் மூன்று பெரும் இராச்சியப் பிரிவுகளும், வன்னி என்கின்ற ஒரு சிறு(சிற்றரசு) இராச்சியப் பிரிவும் காணப்பட்டது.  கோட்டை இராச்சியத்தில் காணப்பட்ட உட் பூசல்கள் இலங்கை யின் கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேயர்களின் கால்களை வலிமையாக ஊன்றுவதற்கு ஏதுவாக அமைந்து கொள்கிறது.

இதனடிப்படையில் 1621ம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்கள் தமது வலிமையினைப் பயன்படுத்தி யாழ்ப்பாண இராச்சியத்தினையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறார்கள். இப் போர்த்துக்கேயர்களால் யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றபடும் வரைக்கும் அல்லது தமிழர்களின் நிலங்கள் போர்த்துகேயர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் வரும் வரைக்கும் பிராமணியக் கொள்கைகளே தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மேலோங்கிக் காணப்படுகின்றது.

பிராமணர்களின் வம்சத்தினைச் சேர்ந்தவர்களே மன்னர்களாகவும், சமூகத்தில் மூட நம்பிக்கைகளை விதைப்பதற்குத் தூண்டு கோலாகவும் காணப்பட்டிருக்கிறார்கள்.  சமூகத்தில் கல்வியறிவிலும் உயர்ந்தவர்களாக காணப்பட்டோரும் இந்தப் பிராமணர்களே. மன்னர்களின் அரச சபைகளில் இருந்த அல்லது வாழ்ந்த பிராமணர்கள் வரலாறுகளையும், வானியல், சோதிடம் போன்ற கலைகலையும் எழுதத் தொடங்குகிறார்கள். ஆங்கிலேயர் வருகை வரை யாழ்ப்பாண இராச்சியத்தில் அரச கருமங்களில்பிராமணர்கள் முதன்மை வகித்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.  


போர்த்துக்கேயர் ஆட்சியின் போது, கரையோரங்களை அண்டி வாழ்ந்த கரையார் என மக்களால் சுட்டப்படும் சாதியினைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களிடையேயும் , வறிய மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் போர்த்துகேயர்கள் பழகி, உதவிகள் செய்து, நன்மதிப்பைப் பெற்றவர்களாக தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பத் தொடங்குகிறார்கள்.

இலங்கையில் போர்த்துக்கேயர்கள் வருகை தந்து மதம் பரப்பி, புரட்சிகரமான சிந்தனைகளை வளர்க்க முற்பட்ட காலப் பகுதியிலோ அல்லது ஆலயங்களை இடித்து கத்தோலிக்க மதம் மட்டுமே வழக்கத்தில் இருக்க வேண்டும் என்கின்ற ஆதிக்க கொள்கைகள் வழக்கத்திலிருந்த காலத்திலோ; எமது சாதிப் பாகுபாடுகள் நீங்கி விடவில்லை. மாறாக ஒல்லாந்தர் வருகையினைத் தொடர்ந்து, ஆலயங்கள் மீளவும் கட்டப்படுகின்றன, ஆலயங்களில் மீண்டும்  மந்திரம் தெரிந்தவர்கள், சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனும் கொள்கையின் அடிப்படையில் பூசகர்களாகவும், நிர்வாகம் செய்பவர்களாகவும் பிராமணர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலேயர்களின் வருகையினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்தட்டு வர்க்கம் எனத் தமக்குத் தாமே பெயர் சூட்டிக் கொண்ட வெள்ளாளர் எனப்படும் இனத்தினர் தமது ஆதிக்கத்தினை மெது மெதுவாகத் தம்மிடம் உள்ள பண பலத்தின் அடிப்படையில் பரவலாக்கத் தொடங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் விவசாயம், வேளாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வெள்ளாளர் தமது திடீர் பொருளாதார வளர்ச்சியினால் சமூகத்தில் பிராமணர்களுக்கு இருந்த மதிப்பை விடத் தம்மைத் தாமே பெரியவர்களாக, சமூகத்தில் உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

ஆயிரத்து எண்ணூற்றி ஐம்பதுகளின் பிற்பகுதியினைத் தொடர்ந்து இந்த வெள்ளாளருக்கு களனி நடுதல், பாத்தி கட்டுதல், நீர்பாய்ச்சுதல், மலசல கூடங்களைச் சுத்தம் செய்தல் முதலிய இதர பல வேலைகளில் ஈடுபடும் சமூக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தொழிலின் அடிப்படையில் சமூகத்தில் இருந்து தனித் தனிக் குழுக்காளாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

சமூகத்தில் தாழ்ந்த சாதி எனச் சொல்லப்படும் சாதிகளைச் சார்ந்தவர்கள் வெள்ளார்களை, அவர்களின் சாதியின் பெயரால் அழைக்க வேண்டிய தேவைக்கு ஆளாகின்றார்கள். வெள்ளாளன் இங்கே வாங்கோ... எனப் பணிவாக அழைத்து ஏவல் வேலை செய்யும் அடிமைகளாக; வெள்ளாள வெறி பிடித்த சாதிய மேல்தட்டு வர்க்க கொள்கையின் கீழ் ஏனைய மக்கள் மிதிக்கப்பட்டார்கள்.

ஆலயங்களில் வெள்ளாளருக்கு என்று இருக்கும் ஆலயத்தினுள் ஏனைய சாதியினைச் சேர்ந்த நபர்கள் செல்லக் கூடாது எனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆங்கிலேய மரபில் ஆங்கிலேயர்களின் கால்களை நக்கி தனது கல்வி ஞானத்தைப் பெருக்கிய ’ஆறுமுக நாவலர்’ எனும் மேதை வெள்ளாளருக்குரிய கோவிலாக யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணையில் உள்ள வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஏனைய சாதிகளையும் புறக்கணிக்கத் தொடங்கினார்.

குடா நாட்டில் மக்கள் தொழில் ரீதியாகப் பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட இச் சாதிய முறைக்கு வித்திட்டவராக சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்தவர் என அறிஞர்களால் சிறப்பிக்கப்படும் ஆறுமுக நாவலர் விளங்கினார். இதனால் இவ் இழி குலங்கள், அல்லது கீழ் சாதி எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் இன்று வரை இதே கீழ் சாதி மரபிலே இருக்கின்றன, அவர்களைச் சமூகம் புறக்கணிக்கத் தொடங்குகிறது. இவர்களுடன் திருமணம் செய்தால் அது தமது முழுக் குடிக்குமே தீங்கானது என்று சொல்லி, விலகிக் கொள்கிறார்கள், விலக்கி வைக்கப்படுகிறார்கள்.

ஈழத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டுகள் வரை, இச் சாதியத்திற்கு எதிராக எவருமே புரட்சிகளைச் செய்யவுமில்லை, இச் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுக்கவுமில்லை. இந்து சமய ஆதிக்க வாத சைவர்களின் மேற் தட்டு வர்க்க கொள்கைகளின் விளைவாக காலதி காலமாக வீடுகளிற்கு வேலைக்காகவோ அல்லது ஏதேச்சையாகவோ வருகை தரும் கீழ்ச் சாதி மக்களிற்கு உயர் சாதி எனத் தமது வம்சங்களைச் சொல்லிக் கொள்வோர் தாம் எடுத்தாளும் பாத்திரங்களில் உணவு பரிமாறுவதனைத் தவிர்க்கிறார்கள். இன்றும் ஒரு சில இடங்களில் தவிர்த்து வருகிறார்கள்.

தெருவில் போகும் நாயிற்கு வைக்கும் உணவினை விட கேவலமான முறையில் இந்தக் கீழ் சாதி என இவர்களாச் சித்திரிக்கப்படும் மக்களுக்கு பழைய ஒரு கோப்பையினையும், ஒரு சில்வர் குவளையினையும் வீட்டின் ஒரு மூலையில் வைத்து அதனை அந்த மக்களைக் கொண்டே கழுவி, உணவினைப் பிச்சை போடுவது போலப் போட்டு வீட்டுக்கு வெளியே இருத்திச் சாப்பிடச் செய்வார்கள். இன்றும் செய்கிறார்கள்.

இந்த சாதிய வெறி பிடித்தவர்களின் பிள்ளைகள் ஒன்றும் அறியாதவர்களாய் கீழ்ச்சாதியினைச் சேர்ந்த பிள்ளைகளுடன் உரையாடுவதைக் கண்டால், மேற் சாதியினைச் சேர்ந்தவர்கள் அடித்து, திட்டிப் பேசி, ஏனைய மக்களோடு பழகக் கூடாது எனும் ஒரு வரையறைக்குள் வாழ வைத்திருக்கிறார்கள்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் கீழ்ச் சாதிப் பெண்ணை உயர் சாதியினைச் சேர்ந்தவன் காதல் கொண்டால், இறுதியில் தனது காரியத்தினை முடித்த பின்னர் சாதியினைக் காரணம் காட்டி அப் பெண்ணைக் கைகழுவி விடும் சம்பவங்களும் எமது சமூகங்களில் அடிக்கடி இடம் பெற்றிருந்தன. அதிலும் முகம் சுழிக்கும் படியாக மேல் சாதி ஆதிக்க வெறியர்கள் சமூகத்தில் உள்ள அழகான கீழ்ச் சாதிப் பெண்களைத் தமது உடல் இச்சைக்கு ஆளாக்கும் நோக்கில் காதலித்து, பின்னர் காரியங்களை முடித்து விட்டு, சாதியினைக் காரணம் காட்டி, ஏமாற்றி விடுவார்கள். இதனால் மனமுடையும் ஒரு சில பெண்கள் மருந்து குடித்தோ அல்லது அலரி விதைகளை உட் கொண்டோ
‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்’’ எனும் கொள்கைக்கு அமைவாக தற்கொலை செய்திருக்கிறார்கள்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தியாறுகளைத் தொடர்ந்து தமிழீழம் வேண்டிய போராட்டங்கள் வீறு கொள்ளத் தொடங்க, இச் சாதிய வெறி தன் வலிமையினை ஓரளவு குறைத்துக் கொள்கிறது எனலாம். சாதிய அடிப்படையில் போராட்டத்தினை நகர்த்தினால் தமது போராட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்க முடியாது எனும் தந்திரத்தின் அடிப்படையில் ஈழத்துச் சாதிய வெறி உடைத்தெறியப்படுகிறது. ஆனாலும் மேல் தட்டு வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள பண பலத்தை அள்ளி வீசி போராடும் உள்ளங்களைப் பலிக்கடாக்கள் ஆக்கியதோடு, போராட்டத்தில் இணையாது புலம் பெயர்ந்து வாழுதல் அடிப்படையில்,  தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொள்ளுதல் எனும் முறையினைக் கைக் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

ஈழத்தின் கரையோரப் பகுதியினைச் சார்ந்த கரையார் இனத்தவரும், நளவர், பள்ளர் என மேற் சாதி வெறியர்களால் அழைக்கப்படுகின்றவர்களுமே போராட்டத்தில் அதிகளவு பங்களிப்புக்களைச் செய்திருந்தார்கள். பணபலத்தில் உயர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட வெள்ளாள மற்றும் ஏனைய மேலாதிக்க சாதிய வெறி பிடித்தவர்கள் தமது வியாபாரங்களைப் பெருக்குவதிலும், தமது பிள்ளைகளைப் போரில் இருந்து பாதுகாத்து, வெளி நாடுகளுக்கு அனுப்புவது, போராட்டத்திற்கு நிதிப் பங்களிப்பு வழங்கி தங்களைத் தற் காத்து, ஊரார் பிள்ளைகளைச் சாகடிப்பது’’ முதலிய அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள்.

போராட்ட காலங்களில் சாதிச் சண்டைகள் நடந்தாலோ, சாதி வெறியுடன் கூடிய சம்பாஷணைகள் நடந்தாலோ அவை உரியவர்களின் செவிகளுக்கு எட்டப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் எனும் ஒரே நோக்கத்தின் காரணமாக இவை யாவும் உறக்கத்திலிருந்தன. ஆனால் இன்று மீண்டும் சாதிச் சண்டைகள் மெது மெதுவாக தலை விரித்தாடத் தொடங்கி விட்டன.

‘நீ பிள்ளை அவருக்குச் சொந்தமே? நீங்கள் அவரின்ரை ஆளே?
நீங்கள் இருக்கிறது முதலாளியின் வீட்டிற்கு அருகிலா....’’
எனும் வக்கிரமான கேள்விகள் தான் ஒருவரைப் புதிதாக எங்காவது கண்டால் அவரைச் சாதி அடிப்படையில் பிரித்தறியப் பயன்படுகின்றன. ஈழத்தில் இன்றும் சாதியம் வாழ்கிறது, புலம் பெயர்ந்தும் எம்மவர்கள் திருந்தவில்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக;
கனடாவைச் சேர்ந்த யாழ் உயர் குல வேளாள இனத்தைச் சேர்ந்த மண மகனுக்கு அதே இனத்தைச் சேர்த மணமகள் தேவை...’’ எனும் தொனியில் இன்றும் பத்திரிகைகளில் வரு விளம்பரங்களைக் குறிப்பிடலாம்..

*யாழ்ப்பாணத்தில் உள்ள சந்நிதி கோயில் கரையார் எனும் சாதிய வம்ச வழி வரும் கப்புறாளை(வாய் கட்டிப் பூசை செய்பவர்) என்பவரால் காலாதி காலமாக பூசை செய்யப்பட்டு வருகின்றது.

*அச்சுவேலி காட்டு மலைக் கந்த சுவாமி கோவில், வாதரவத்தை அம்மன் கோவில், சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில், கைதடிப் பிள்ளையார் கோயில், நீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் கோயில்,  உட்பட பல ஆலயங்கள் இன்றும் ஈழத்தில் தாழ்ந்த சாதியினர் என முத்திரை குத்தப்படும் நளவர், பள்ளர் ஆகிய இனங்களினால் அவர்களின் சொந்த ஆலயங்கள் என்ற அடிப்படையில் வணங்கப்படுகிறது..

இவ் ஆலயங்கள் இன்றும் இந்தச் சாதியினைச் சேர்ந்த மக்களுக்கென்று தனியாக இருக்கின்றதென்றால், நாகரிகமடைந்த, தமக்கெனத் தனி நாடு வேண்டுமென்று வாய் கிழியக் கதறுகின்ற மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இந்த மக்களை உள்ளே நுழைய அனுமதிக்காத மேல்ச் சாதியினரின் ஆலயங்கள் இன்றும் சமூகத்தில் உள்ளன என்பது யதார்த்தம் தானே!

சாதியத்திற்கெதிரான இலக்கியங்களைப் படைத்தவர்களாக பின் வரும் படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.
 மலையகத்தில் ஒடுக்கப்படும் மக்கள் வாழ்க்கையினை ஜீவா(ஈழத்தில் அன்று தொடக்கம் இன்று வரை வெளியாகும் மல்லிகை எனும் பிரபலமான இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்)
டானியல், கணேசலிங்கம், நீலாவணன் முதலியோரைக் குறிப்பிடலாம். பஞ்ச கோணங்கள், கோவிந்தன், முருங்கை இலை கஞ்சி, அடிமைகள், தண்ணீர், போராளிகள் காத்திருக்கிறார்கள் முதலிய படைப்புக்களே ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்கும் நோக்கில் ஈழத்து இலக்கியப் பரப்பின் மறு மலர்ச்சிக் காலம் என்று சொல்லப்படுகின்ற காலப் பகுதியில் வெளிவந்தவையாகும்.

ஆனாலும் இவ் மறு மலர்ச்சிக் கால இலக்கியங்கள் மேற் சாதி வெறியர்களின் கிறுக்குப் பிடித்த இறுக்கமான கொள்கைகள் காரணமாகச் சமூகத்தில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.

தாம் உயர் சாதியினரின் போலியான வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறோம் எனும் உண்மையினைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட மக்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து கல்வி கற்று, உயர் பதவிகளை நோக்கித் தமது வாழ்க்கையினை நகர்த்துகிறார்கள்.
இத்தகைய கல்வி வளர்ச்சியினால் ஏனைய மேற் சாதியினரையே வீழ்த்திச் சாதனைகள் புரியும் அளவிற்கு இந்த மக்கள் முன்னேறி விட்டார்கள் எனும் ஒரே ஒரு உட் காரணத்தினை உணர்ந்து தான் யாழ்ப்பாண உயர் சமூகத்தில் உள்ள ஒரு சிலர் இவர்களுடன் சாதிகளேதுமற்ற கலப்புத் திருமண உறவுகளை இக் காலப் பகுதியில் பேணத் தொடங்குகிறார்கள்.

உயர்ந்த சாதியில் பிறந்து விட்டு, தாழ்ந்த சாதிப் பெண்ணைக் கட்டினால் என்னுடைய வம்சம் அழிந்து விடும், என்னுடைய பிள்ளைக்கு நான் எந்தச் சாதியில் திருமணம் செய்து வைப்பேன் என்று எண்ணுவோர் இருக்கும் வரைக்கும் இச் சாதியம் ஈழத்தில் காலாதி காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உடையார், முதலியார், குஞ்சியார் எனும் வெறி பிடித்த பெயர்களால் உயர் சாதியினைச் சேர்ந்த நபர்களை அழைத்து ஆலவட்டம் பிடிப்பதாலும் இந்தச் சாதியம் இன்றும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நீங்கள் அவற்றை ஆளே, நீங்கள் அவருக்குச் சொந்தமே எனத் துருவித் துருவிக் கேட்கப்படும் கேள்விகளும் உங்களின் பின் புலம் சார்ந்த பரம்பரையலகு சாராத இந்தச் சாதிய வெறியினையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இத்தனை கருத்துக்களுக்குப் பிறகும் ஈழத்தில் சாதியம் இல்லை என்று யாராவது எதிர் வாதம் புரிய முன் வந்தால், ஒரே ஒரு தடவை எங்கள் குடா நாட்டு வீடுகளிற்கு வாருங்கள், எங்கள் கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ உள்ள ஒரு வீட்டிலாவது ‘வாசலின் மேற் கூரையினுள் செருகி வைத்திருக்கும் பழைய சாப்பாட்டுக் கோப்பையினையும், தண்ணி குடிப்பதற்காக வைத்திருக்கும் டம்ளர் அல்லது சில்வர் குவளையினையும் பார்த்து விட்டு மனச்சாட்சியைத் தொட்டுப் பேசுங்கள்!


106 Comments:

Ramesh said...
Best Blogger Tips

நல்லதொரு இடுகை. சென்றவாரம் தான் இதுபற்றி கேள்விப்பட்டேன். இந்தப்பதிவு உறுதிப்படுத்திவிட்டது.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நீண்ட ஆய்வுக்குரிய எழுத்தாக இருக்கிறது.சென்ற வாரம் GTV யில் கருத்துரையாடல் ஒன்றில் புலம் பெயர்ந்தவர்களில் இளம் தலைமுறையினர் சாதிய அடையாளங்கள் தவிர்த்து வளர்ந்தாலும் திருமணம் என்கிற சடங்கு வரும் போது சாதியம் முக்கியமாகிப் போகிறதென ஒருவர் சொன்னார்.

விடுதலைப்புலிகளின் ஆட்சிமுறைக் காலத்தில் சாதியக் குரல்கள் ஒலிக்காதது அல்லது அதற்கான நேரமின்மை ஈழத்தின் சமூக மாற்றத்தின் பெரும் புரட்சியெனலாம்.

சென்ற பதிவின் கரு ஆழம் கருதி மீண்டுமொரு வாசிப்பு தேவைப்படுகிறது.எனவே கருத்து சொல்ல இயலவில்லை.

Anonymous said...
Best Blogger Tips

///ஆலயங்களில் வெள்ளாளருக்கு என்று இருக்கும் ஆலயத்தினுள் ஏனைய சாதியினைச் சேர்ந்த நபர்கள் செல்லக் கூடாது எனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. /// சில கிராம புறங்களில் இது உண்மை

Anonymous said...
Best Blogger Tips

யாழில் இருந்து இன்றையக் காலக்கட்டத்தில் இப்படியான இருந்துக் கொண்டு இப்பதிவை எழுதிய உங்களுக்கு ஒரு பெரிய சபாஷ் !!! கொஞ்சம் மேம்போக்காக எழுதி விட்டீர்களோ எனத் தோன்றுகிறது. இருந்தாலும் crispy ஆக உள்ளது எனலாம்.

சென்ற முறை தாங்கள் எழுதிய முதற்பதிவுக்கு பல பன்னூட்டங்களைப் போட்டேன் அதன் பின் நானும் சில தீர்க்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன் அவை சரியா பிழையா என வரலாற்று ஆசிரியர்கள் தீர்மானிக்கட்டும் அவற்றில் நான் கற்றுப் பெற்றவற்றை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

1. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் எனப்படுவோர் ஒரே சாதியே அல்ல

2. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போரில் பெரும்பான்மையானவர்கள் சோழ நாட்டில் இருந்து குடியேறிய பள்ளரும், பாண்டிய - சேர நாட்டில் இருந்து குடியேறிய ஈழவருமே அதிகமானோர்.

3. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போரில் ஒரு சில குடும்பம் மட்டுமே வெள்ளாளாராக புகார் போன்ற ஊர்களில் இருந்து வந்தவை.

4. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் சாதியினை மறைக்க வெள்ளாளராக காட்டிக் கொண்டு டச்சு அரசின் துணையோடு பல நிலங்களையும், புலங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

5. ஈழத்தமிழர்களில் வெள்ளாள சாதி வெறியானது ஆங்கிலேயேர் காலத்தில் சைவ மத எழுச்சியோடு பெருகுகின்றது.

6. யாழ்ப்பாணத் தமிழர்களில் தலித்கள் அம்மண்ணின் மைந்தர்களாவர்கள். அவர்கள் 9-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களவர்களாக வாழ்ந்து வந்தவர்கள். இதற்கு சாட்சியே யாழ்ப்பாணம் முதலான ஊர்களில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்களே ஆகும்.

7. ஈழத்தமிழர்களில் கரையார்கள் தமிழர்களாகவும், சிங்களவர்களாகவும் இடத்துக்கு ஏற்ப வாழ்ந்துள்ளனர்.

8. இதனால் தான் விவசாயம் சாராத யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் எனும் விவசாயக் குடிகள் பெருகியமைக்கு காரணம். இதனை டச்சுக் கால மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் உறுதி செய்துள்ளதாக தெரிகின்றது. அதாவது டச்சுக் காலத்தில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த பள்ளர் இன மக்கள் உட்பட பல்வேறு குடியேற்ற சாதிகள் தம்மை வெள்ளாளர்களாக அறிவித்துக் கொண்டு மண்ணின் மைந்தர்களை ஓரம் கட்டிய தகவல்கள் பல கூறுகின்றன.

9. இதனால் தான் யாழ்ப்பாண வெள்ளாளர் பலர் இந்தியாவை வெறுக்கின்றனர். அதாவது இந்தியாவில் தாம் மதிக்கபடாமல் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்டதால், தாம் புகுந்த நாட்டில் தம்மை உயர்வாகக் காட்டிக் கொண்டு அதே சமயம் மண்ணின் மைந்தர்களை வெறுத்தும் உள்ளனர்.

10. நழவர், கோவியர், தானைக்காரர் ஆகியோர் சோழர்களின் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் கலந்த மக்கள் எனவும் தெரிகின்றது.

மேலும் பல ஆய்வுகளும் தகவல்களும் வெளிவர வேண்டும் . தொடர்க உமது பணி !!!

வேளாளர் தம்மை உயர்ந்தவர்களாக கருத வேண்டியதே இல்லை. சொல்லப் போனால் தாம் புகுந்த நாட்டில் கிடைத்த ஒரு சந்தர்பத்தை வைத்துக் கொண்டு தம்மை உயர்வாகக் காட்டிக் கொண்டார்கள் அவ்வளவே !!!

Anonymous said...
Best Blogger Tips

புலிகளை ஏனைய மாற்று இயக்கங்கள் வெறுத்ததுக்கு சாதி வேறுபாடும் ( புலிகளின் தலைவர் மற்றும் உயர்மட்டம் குறைந்த சாதி என்று ) ஒரு காரணம் என்று பரவலாக கூறப்படுகிறதே அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Anonymous said...
Best Blogger Tips

///*அச்சுவேலி காட்டு மலைக் கந்த சுவாமி கோவில், வாதரவத்தை அம்மன் கோவில், சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில், கைதடிப் பிள்ளையார் கோயில், நீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் கோயில், உட்பட /// சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில் - அட நம்மூர் கோவில்

Anonymous said...
Best Blogger Tips

சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில்
சுழிபுரம் பறாளை முருகன் கோயில் என்று வாளால் வெளியில் அருகருகே இரண்டு கோவில்கள் உள்ளது. தற்சமயம் பெரிதாக சாதி சண்டை இடம்பெறுவதில்லை. பிரபலமான கோவில் என்பதால் திருவிழா காலங்களிலே சனக்கூட்டம் அலை மோதும்....

Anonymous said...
Best Blogger Tips

///ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் எனப்படுவோர் ஒரே சாதியே அல்ல/// ஈழத்திலே சாதிகள் அவர்கள் செய்யும் தொழில்களை வைத்து கூறுபோடப்பட்டது... வெள்ளாளர் என்பதும் ஒரு சாதி ஆக தான் இருக்க வேண்டும் .

Anonymous said...
Best Blogger Tips

///அவர்கள் 9-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களவர்களாக வாழ்ந்து வந்தவர்கள். இதற்கு சாட்சியே யாழ்ப்பாணம் முதலான ஊர்களில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்களே ஆகும்./// இதுவரை சிங்கள ஊர் பெயர்களை அறியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் சகோ..?????????

Anonymous said...
Best Blogger Tips

///////இதனால் தான் யாழ்ப்பாண வெள்ளாளர் பலர் இந்தியாவை வெறுக்கின்றனர். //// இது புதுக்கதையாய் இருக்கே ???

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு! நீ என்னதான் பறையன்! நான் கோவியன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஹி...... ஹி.... ஹி...... சும்மா பகிடிக்குச் சொன்னேன் !! நிரு! நான் உண்மையாகவே, மனதார சொல்லுகிறேன் இந்தப் பதிவு மிக மிக துணிச்சலான, அருமையான பதிவு!! உங்களது துணிச்சல் பற்றி நான் ஏற்கவே குறிப்பிட்டிருக்கிறேன்!! இந்தப் பதிவுக்காக ஹாட்ஸ் ஆப் நிரு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

/////////// இதனடிப்படையில் 1621ம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்கள் தமது வலிமையினைப் பயன்படுத்தி முழு இலங்கையினையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறார்கள்///////////////

இந்தத் தகவலை ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ளவும்! போர்த்துக்கேயர் இலங்கையை முழுமையாக ஆளுகை செய்யவில்லை என்று நினைக்கிறேன்!! அவர்களது ஆளுகைக்கு கட்டுப்படாது சில பல சிற்றரசுகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது!!



அத்துடன் 1812 ல் தான் ஆங்கிலேயர்கள் இலங்கையை முழுமையாக கைப்பற்றினர் என்று நினைக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

. ஆங்கிலேய மரபில் ஆங்கிலேயர்களின் கால்களை நக்கி தனது கல்வி ஞானத்தைப் பெருக்கிய ’ஆறுமுக நாவலர்’ எனும் மேதை வெள்ளாளருக்குரிய கோவிலாக யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணையில் உள்ள வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஏனைய சாதிகளையும் புறக்கணிக்கத் தொடங்கினார்.


எனக்கும் இந்த ஆறுமுக நாவலரைப் பிடிப்பதில்லை!! சின்ன வயதில் இந்த மனுஷனைப் பற்றி படிச்சது, இப்ப நினைக்க வெறுப்பா இருக்கு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஈழத்தின் கரையோரப் பகுதியினைச் சார்ந்த கரையார் இனத்தவரும், நளவர், பள்ளர் என மேற் சாதி வெறியர்களால் அழைக்கப்படுகின்றவர்களுமே போராட்டத்தில் அதிகளவு பங்களிப்புக்களைச் செய்திருந்தார்கள். பணபலத்தில் உயர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட வெள்ளாள மற்றும் ஏனைய மேலாதிக்க சாதிய வெறி பிடித்தவர்கள் தமது வியாபாரங்களைப் பெருக்குவதிலும், தமது பிள்ளைகளைப் போரில் இருந்து பாதுகாத்து, வெளி நாடுகளுக்கு அனுப்புவது, போராட்டத்திற்கு நிதிப் பங்களிப்பு வழங்கி தங்களைத் தற் காத்து, ஊரார் பிள்ளைகளைச் சாகடிப்பது’’ முதலிய அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள்.


இது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை!! இப்படி ஒரு துணிவான கருத்தைச் சொன்ன உங்களுக்கு எனது நன்றிகள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஈழத்தின் கரையோரப் பகுதியினைச் சார்ந்த கரையார் இனத்தவரும், நளவர், பள்ளர் என மேற் சாதி வெறியர்களால் அழைக்கப்படுகின்றவர்களுமே போராட்டத்தில் அதிகளவு பங்களிப்புக்களைச் செய்திருந்தார்கள். பணபலத்தில் உயர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட வெள்ளாள மற்றும் ஏனைய மேலாதிக்க சாதிய வெறி பிடித்தவர்கள் தமது வியாபாரங்களைப் பெருக்குவதிலும், தமது பிள்ளைகளைப் போரில் இருந்து பாதுகாத்து, வெளி நாடுகளுக்கு அனுப்புவது, போராட்டத்திற்கு நிதிப் பங்களிப்பு வழங்கி தங்களைத் தற் காத்து, ஊரார் பிள்ளைகளைச் சாகடிப்பது’’ முதலிய அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள்.


இது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை!! இப்படி ஒரு துணிவான கருத்தைச் சொன்ன உங்களுக்கு எனது நன்றிகள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஈழத்தில் இன்றும் சாதியம் வாழ்கிறது, புலம் பெயர்ந்தும் எம்மவர்கள் திருந்தவில்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக;
கனடாவைச் சேர்ந்த யாழ் உயர் குல வேளாள இனத்தைச் சேர்ந்த மண மகனுக்கு அதே இனத்தைச் சேர்த மணமகள் தேவை...’’ எனும் தொனியில் இன்றும் பத்திரிகைகளில் வரு விளம்பரங்களைக் குறிப்பிடலாம்..


இதுவும் நூறுவீதம் உண்மை நிரு! இங்கு தான் சாதிப்பிரச்சனை படு மோசம்!! இதற்கென ஒரு பதிவு போட்டு கிழி கிழி என்று கிழிக்க இருக்கிறேன்!! வெளிநாடுகளில் வாழ இம்மியளவும் தகுதியில்லாத கூட்டம், இஞ்ச நிறைய இருக்குது!!

Anonymous said...
Best Blogger Tips

@ கந்தசாமி - ///ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் எனப்படுவோர் ஒரே சாதியே அல்ல/// ஈழத்திலே சாதிகள் அவர்கள் செய்யும் தொழில்களை வைத்து கூறுபோடப்பட்டது... வெள்ளாளர் என்பதும் ஒரு சாதி ஆக தான் இருக்க வேண்டும் .

நான் சொன்னது அவர்கள் ஒரே சாதியாக இருந்திருக்க வில்லை பல்வேறு இனக்குழுக்களாக குடியேறிய மக்கள் பின்னாளில் வெள்ளாளர் என அறிவித்துக் கொண்டார்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@கந்தசாமி.

புலிகளை ஏனைய மாற்று இயக்கங்கள் வெறுத்ததுக்கு சாதி வேறுபாடும் ( புலிகளின் தலைவர் மற்றும் உயர்மட்டம் குறைந்த சாதி என்று ) ஒரு காரணம் என்று பரவலாக கூறப்படுகிறதே அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


இதுல என்ன சந்தேகம் வேண்டிக்கிடக்கு!! அவ்வளவும் உண்மை!!

Anonymous said...
Best Blogger Tips

/////அவர்கள் 9-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களவர்களாக வாழ்ந்து வந்தவர்கள். இதற்கு சாட்சியே யாழ்ப்பாணம் முதலான ஊர்களில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்களே ஆகும்./// இதுவரை சிங்கள ஊர் பெயர்களை அறியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் சகோ..?????????//

பல ஊர்ப் பெயர்கள் இருக்கின்றன - குறிப்பாக ஒன்றே ஒன்று சாம்பிளுக்கு சொல்கிறேன்.. வலிகாமம் என்ற பகுதியின் பெயர் தமிழே இல்லை. அது அப்பட்டமான சிங்களப் பெயர் வெலி கம என்னும் சிங்கள ஊர்ப்பெயராகும். வெலி கம என்பது வெலி என்றால் மணல் எனவும், கம என்பது கிராமம் என்ற வடமொழியில் இருந்து வந்த சிங்கள சொல்லான கம என்பதாகும். இது போதுமா இன்னும் வேணுமா ???

சிங்களவரே இல்லாத ஒரு ஊரில் எப்படிச் சிங்களப் பெயர் காலம் காலமாக இருந்து வந்துள்ளது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு இதன் தொடர்ச்சியை விரைவில் எழுதுங்கள்!! அத்துடன் ' சாதிப்புத்தி ' என்று ஒன்று இருக்கிறதா? இதுபற்றியும் விளக்கம் தாருங்கள்!! தொடர்ந்து பேசுவோம்!!!

Anonymous said...
Best Blogger Tips

///////இதனால் தான் யாழ்ப்பாண வெள்ளாளர் பலர் இந்தியாவை வெறுக்கின்றனர். //// இது புதுக்கதையாய் இருக்கே ???

இது புதுக்கதையே இல்லை... இந்தியாவில் இருந்து வந்தவர்களை யாழ்ப்பாண வெள்ளாளர்கள் வடக்கத்தியான் எனக் கூறி இகழ்வதும், மலைநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களை தோட்டக்காட்டான் என வெறுப்பதும் யாழ் வெள்ளாளார்களிடம் வெகு இயல்பான ஒன்று நிரூபனுக்கு நன்று தெரிந்திருக்க வேண்டும் ........... அந்த வெறுப்பின் உச்சம் புலம் பெயர் நாடுகளிலும் உண்டு. பொதுவாக யாழ்ப்பாண வெள்ளாளர் சிங்களவரோடு கூட மண உறவு ஏற்படுத்துவார்கள், ஆனால் தப்பித் தவறியும் இந்தியத் தமிழர்களோடு ஏற்படுத்த மாட்டார்கள். அனைவரும் இல்லை, ஆனால் பெரும்பாலோனோர் அப்படித்தான் ..

Anonymous said...
Best Blogger Tips

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி // இந்தத் தகவலை ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ளவும்! போர்த்துக்கேயர் இலங்கையை முழுமையாக ஆளுகை செய்யவில்லை என்று நினைக்கிறேன்!! அவர்களது ஆளுகைக்கு கட்டுப்படாது சில பல சிற்றரசுகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது!!



அத்துடன் 1812 ல் தான் ஆங்கிலேயர்கள் இலங்கையை முழுமையாக கைப்பற்றினர் என்று நினைக்கிறேன்!//

உண்மைத்தான். போர்த்துகல் அரசு கண்டி அரசினை கைப்பற்ற வில்லை. ஆங்கிலேயேரே கைப்பற்றினர். ஆங்கிலேயேர் கண்டி அரசினை கைப்பற்றிய போது அங்கு ஆட்சியில் இருந்தவர் ஒரு மதுரை நாயக்கர் வழி வந்த அரசர் ஆவார். அவரது வாரிசுகள் வேலூரில் இருக்கின்றார்கள். அவரது கல்லறையும் வேலூரில் இருக்கின்றது.

Anonymous said...
Best Blogger Tips

//கனடாவைச் சேர்ந்த யாழ் உயர் குல வேளாள இனத்தைச் சேர்ந்த மண மகனுக்கு அதே இனத்தைச் சேர்த மணமகள் தேவை...’’ எனும் தொனியில் இன்றும் பத்திரிகைகளில் வரு விளம்பரங்களைக் குறிப்பிடலாம்..


இதுவும் நூறுவீதம் உண்மை நிரு! இங்கு தான் சாதிப்பிரச்சனை படு மோசம்!! இதற்கென ஒரு பதிவு போட்டு கிழி கிழி என்று கிழிக்க இருக்கிறேன்!! வெளிநாடுகளில் வாழ இம்மியளவும் தகுதியில்லாத கூட்டம், இஞ்ச நிறைய இருககு //

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி அது மட்டும் இல்லை, சாதி ரீதியாக தனித்தனிக் கோயில்களும் உண்டு. அதே போல சாதி சங்கங்கள் வைத்தால் கனடாவில் பிரச்சனை வரும் என்பதால் அவற்றை ஊர் சங்கங்களாக வைத்து சாதி வளர்க்கிறார்கள்.

Anonymous said...
Best Blogger Tips

இலங்கையில் சிங்களவர் தமிழர் இருவருமே வேறு வேறு காலங்களில் படிமுறையாக தமிழ்நாட்டில் இருந்து குடியேறிய மக்கள் தான். இவற்றில் யாழ்ப்பாண வெள்ளாளர் அல்லது ஈழ வெள்ளாளர் என்போர் மிகவும் பிற்காலத்தில் குடியேறி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டவர்கள். இவர்களில் பலர் உண்மையான வேளாளரே இல்லை எனலாம். பல சாதியினர் இங்கிருந்து ஈழ நாட்டுக்கு குடியேறி தம்மை ஒரே சாதியாக பின்னாளில் மாற்றிக் கொண்டு ஆரம்பம் முதலே அல்லது பல காலம் அங்கு வாழ்ந்து வந்த மக்களை தலித்கள் என ஒத்துக்கவும் செய்தார்கள். இது உண்மையான தகவல்கள் ...................

Anonymous said...
Best Blogger Tips

அடுத்தப் பதிவில் ஆராய்ச்சி செய்ய வேண்டியவை. ஈழத்தலித்கள் யார்? 10 ம் நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாணம் உட்பட்ட தமிழ் பகுதிகளில் யார் வாழ்ந்தார்கள் எந்த மன்னர்கள் ஆண்டார்கள் ? ஏன் யாழ்ப்பாண சொற்களில் மலையாள சொற்கள் சரளமாக இருக்கின்றன? ஈழத்தமிழர் மாவட்டங்களில் பல ஊர் பெயர்கள் சிங்கள வேர்ச்சொல்லாக இருப்பதன் காரணம் என்ன? ஏன் கிழக்கு மாநிலத் தமிழர்கள் வடக்குத் தமிழர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் ? ஏன் ஈழத்துக் கடற்கரை ஊர்களில் தமிழ் ஊர்ப்பெயர்கள் பலவும் இல்லாமல் இருக்கின்றன? போன்று பலவற்றை ஆராய வேண்டி இருக்கு ...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மிகவும் துணிச்சலான பதிவு.. தொடரட்டும் உங்கள் பணி..

Unknown said...
Best Blogger Tips

மிகத்துணிச்சலான பதிவு! வாழ்த்துக்கள்! எனக்கு ஆறுமுக நாவலனை சின்னவயதில இருந்தே பிடிக்காது! அப்புறமா வளர்ந்ததும் கேவலமான மறுபக்கம் தெரிந்தது!

நிரூபன் said...
Best Blogger Tips

@றமேஸ்-Ramesh
நல்லதொரு இடுகை. சென்றவாரம் தான் இதுபற்றி கேள்விப்பட்டேன். இந்தப்பதிவு உறுதிப்படுத்திவிட்டது.//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்
நீண்ட ஆய்வுக்குரிய எழுத்தாக இருக்கிறது.சென்ற வாரம் GTV யில் கருத்துரையாடல் ஒன்றில் புலம் பெயர்ந்தவர்களில் இளம் தலைமுறையினர் சாதிய அடையாளங்கள் தவிர்த்து வளர்ந்தாலும் திருமணம் என்கிற சடங்கு வரும் போது சாதியம் முக்கியமாகிப் போகிறதென ஒருவர் சொன்னார்.

விடுதலைப்புலிகளின் ஆட்சிமுறைக் காலத்தில் சாதியக் குரல்கள் ஒலிக்காதது அல்லது அதற்கான நேரமின்மை ஈழத்தின் சமூக மாற்றத்தின் பெரும் புரட்சியெனலாம்.//

சகோதரம், விடுதலைப் புலிகள் ஆட்சிக் காலத்திலும் ஈழத்தில் சாதி இருந்தது, சாதிச் சண்டைகள் நடந்தன. ஆனால் பெரிய அளவில் சாதியக் கொள்கைகளை இறுமாப்போடு கடைப் பிடிக்கும் அளவிற்கு யாரும் முன்வரவில்லை. காரணம் புலிகளின் சட்டங்களுக்குப் பயந்து மக்கள் வாழ்ந்தமையே ஆகும்.

//சென்ற பதிவின் கரு ஆழம் கருதி மீண்டுமொரு வாசிப்பு தேவைப்படுகிறது.எனவே கருத்து சொல்ல இயலவில்லை.//

வாசித்து விட்டு அப்படியே போகாமல் உங்களின் மனக் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
///ஆலயங்களில் வெள்ளாளருக்கு என்று இருக்கும் ஆலயத்தினுள் ஏனைய சாதியினைச் சேர்ந்த நபர்கள் செல்லக் கூடாது எனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. /// சில கிராம புறங்களில் இது உண்மை//

ஆமாம் நண்பா, அது மட்டுமன்றி சாதி அடிப்படையில் பல கோயில் திருவிழாக்களை இந்த வெள்ளாள இனத்தவர்களே தம் கைவசப்படுத்தி வைத்திருந்தார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
புலிகளை ஏனைய மாற்று இயக்கங்கள் வெறுத்ததுக்கு சாதி வேறுபாடும் ( புலிகளின் தலைவர் மற்றும் உயர்மட்டம் குறைந்த சாதி என்று ) ஒரு காரணம் என்று பரவலாக கூறப்படுகிறதே அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

இவ் இடத்தில் சகோ உங்களுக்கு இருக்கும் ஒரு சில தவறான புரிதல்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஈழத்தில் உயர்ந்த சாதியினர் எனத் தம்மைட் தாமே கூறி வரும் வெள்ளாள இனத்தவர்களாலோ இல்லை ஏனைய உயர் சாதி என அழைக்கப்படும் மக்களாலோ விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை..

தமிழரசுக் கட்சி ஆவரங்கால் சின்னத்துரையின் வெள்ளாள ஆதிக்க குடையின் கீழ் குளிர் காய்ந்த கட்சி.
இதனை விடுத்து ஈழத்தில் ஆயுதப் போராட்ட காலத்தில் தோன்றிய ஈபிடிபி கட்சி நளவர் எனும் இனத்தினை அடிப்படையாக வைத்தும், ஒரு ஊரினைச் சார்ந்துமே தோற்றம் பெற்றது.

ரெலோ போராட்ட அமைப்பாக தோற்றம் பெற்றதும் சிறி சபாரத்தினத்தை வைத்து தானே?
வல்வெட்டித் துறையினைச் சேர்ந்த கரையார் இன மக்கள் தானே இந்தக் கட்சிகளில் இருந்திருக்கிறார்கள்.

இதே போலத் தான் வரதராஜப் பெருமாள், மண்டையன் குழுக்களின் தோற்றுவாயான சுரேஷ் பிரேமச்சந்திரன் முதலிய இன்ன பிற குழுக்களும் ஒரு சமூகத்தை பின்னிறுத்தி அவர்களின் படை, பண ஆதரவோடுகளோடு சாதியினைச் சார்ந்து தான் தோற்றம் பெற்றன.

புலிகளை வெறுத்ததற்கு சாதி வேறுபாடு ஒரு காரணம் என்றூ கூற முடியாது 1980களைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தினுள் வல்வெட்டித்துறைப் பகுதியினரைப் போல் ஏனைய சாவகச்சேரி, மட்டுவில், கைதடி ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களும் சரி சமான அளவில் சாதி வேறுபாடுகள் ஏதுமின்றி நடத்தப்பட்டார்கள் என்றே கூறலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில்
சுழிபுரம் பறாளை முருகன் கோயில் என்று வாளால் வெளியில் அருகருகே இரண்டு கோவில்கள் உள்ளது. தற்சமயம் பெரிதாக சாதி சண்டை இடம்பெறுவதில்லை. பிரபலமான கோவில் என்பதால் திருவிழா காலங்களிலே சனக்கூட்டம் அலை மோதும்....//

தற்சமயம் பெரிதாக சாதிச் சண்டை இடம் பெறுவதில்லை. ஆனால் ஒரு சில உரசல்களும் விரிசல்களும் இடம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
/////////// இதனடிப்படையில் 1621ம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்கள் தமது வலிமையினைப் பயன்படுத்தி முழு இலங்கையினையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறார்கள்///////////////

இந்தத் தகவலை ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ளவும்! //
போர்த்துக்கேயர் இலங்கையை முழுமையாக ஆளுகை செய்யவில்லை என்று நினைக்கிறேன்!! அவர்களது ஆளுகைக்கு கட்டுப்படாது சில பல சிற்றரசுகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது!!//

ஆமாம் சகோ, இலங்கையின் பெருமளவான பகுதிகளைப் போர்த்துகேயர் கைப்பற்றியிருந்தனர், நீங்கள் சுட்டிக் காட்டிய வர்லாற்றுத் தவறினைத் திருத்துகிறேன்.



//
அத்துடன் 1812 ல் தான் ஆங்கிலேயர்கள் இலங்கையை முழுமையாக கைப்பற்றினர் என்று நினைக்கிறேன்!//



இலங்கையில் போர்த்துக்கேயர் காலம் கி.பி 1505 தொடக்கம் கி.பி 1658 வரை
ஒல்லாந்தர் காலம் கி.பி 1658- 1796 வரையான காலப் பகுதி
ஆங்கிலேயர் காலம் 1769-1948 வரையான காலப் பகுதி

1815ம் ஆண்டு பிரித்தானியர் கண்டி அரசைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இதன் மூலம் 1815ம் ஆண்டு முழு இலங்கையினையும் தங்கள் வசம் வீழ்ச்சியுறச் செய்கிறார்கள்.


போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த பொழுது இங்கு கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்ற மூன்று பெரும் இராட்சியப் பிரிவுகளும் வன்னி என்னும் சிற்றரசும் காணப்பட்டிருக்கின்றது. இவற்றுள் கோட்டையுடன் போர்த்துக்கேயர் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தனர். கோட்டை இராட்சியத்தில் காணப்பட்ட உட்பூசல்களும் இவற்றின் விளைவாக ஏற்பட்ட விஜயபாகு கொலைச் சம்பவமும் இவர்கள் கோட்டையில் மட்டுமன்றி முழு இலங்கைத் தீவையும் தம் ஆளுகைக்குக் கீழ்க் கொண்டு வர முயற்சிப்பதற்குத் தூண்டியது. முடிவில் கரையோரப் பகுதி எங்கணும் தமது ஆதிக்கத்தைப் பரப்ப முடிந்தது. அந்தவகையில் இங்கு இருந்த இராச்சியங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாண இராச்சியம் 1621 இல் போர்த்துக்கேயர் வசம் வந்தது.

Unknown said...
Best Blogger Tips

//ஆங்கிலேய மரபில் ஆங்கிலேயர்களின் கால்களை நக்கி தனது கல்வி ஞானத்தைப் பெருக்கிய ’ஆறுமுக நாவலர்’ எனும் மேதை //
??????

Unknown said...
Best Blogger Tips

//சந்தர்ப்ப சூழ் நிலையால் கீழ்ச் சாதிப் பெண்ணை உயர் சாதியினைச் சேர்ந்தவன் காதல் கொண்டால், இறுதியில் தனது காரியத்தினை முடித்த பின்னர் சாதியினைக் காரணம் காட்டி அப் பெண்ணைக் கைகழுவி விடும் சம்பவங்களும் எமது சமூகங்களில் அடிக்கடி இடம் பெற்றிருந்தன. அதிலும் முகம் சுழிக்கும் படியாக மேல் சாதி ஆதிக்க வெறியர்கள் சமூகத்தில் உள்ள அழகான கீழ்ச் சாதிப் பெண்களைத் தமது உடல் இச்சைக்கு ஆளாக்கும் நோக்கில் காதலித்து, பின்னர் காரியங்களை முடித்து விட்டு, சாதியினைக் காரணம் காட்டி, ஏமாற்றி விடுவார்கள். //
உண்மை தான்...நான் நேரிலேயே கண்டிருக்கிறேன்...

Unknown said...
Best Blogger Tips

விரிவான தெளிவான ஆக்கம்...
நிறைய முயற்சி செய்திருக்கிறீர்கள் நண்பரே...
வாழ்த்துக்கள்...
அனைத்தையும் கோடிட்டு காட்டி அனைத்தும் உண்மை என்று கூறத்தான் மனம் முன்வருகிறது!!

Anonymous said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

I think you have to recall few facts from your writing. jut go through the history and write what it says, not what you think.

firstly , your name is confusing here.

ஹேமா said...
Best Blogger Tips

நிரூபன்...உண்மையை அப்படியே அலசியெடுக்கிறீர்கள்.ஆனால் என்ன பிரயோசனம்.நான் போன பதிவிலேயே சொல்லியிருந்தேன்.கொஞ்சம் மறைத்து வைத்திருக்கிறார்களே தவிர தங்கள் கைகளோடு கொண்டுதான் திரிகிறார்கள் சாதியை.வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் சாதிப்பால் ஊட்டுகிறார்கள்.அவர்கள் அதன் சுவை தெரியாமல் முழிக்கிறார்கள்.சொன்னாலும் புரிந்துகொள்ளவும் கஸ்டப்படுகிறார்கள்.
ஏனென்றால் உணர்வோடு அவர்கள் சாதித்தொழில் செய்பவர்களைப் பார்க்கவில்லை.

எனக்குத்தெரிந்த குடும்பத்தில் 2 வருடங்களுக்கு முன் இங்கு பிறந்த மரமேறும் குடும்பத்துப் பையன் தங்களைவிட உயர்ந்த சாதியில் காதல்.பெற்றவர்கள் தடுத்தும் திருமணமாகி இப்போ கர்ப்பிணியாக இருக்கிறாள் அந்தப் பெண்.ஆனால் பெண்வீட்டில் நக்கல் நளினமான போக்குகள் அந்தப் பையனுக்கு.மனம் தளர்ந்து என்ன ஆகுமோ என்கிற சூழ்நிலைதான் அந்த இளம் குடும்பம் இப்போ !

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

இக்பால் செல்வன் said... [Reply to comment]
யாழில் இருந்து இன்றையக் காலக்கட்டத்தில் இப்படியான இருந்துக் கொண்டு இப்பதிவை எழுதிய உங்களுக்கு ஒரு பெரிய சபாஷ் !!! கொஞ்சம் மேம்போக்காக எழுதி விட்டீர்களோ எனத் தோன்றுகிறது. இருந்தாலும் crispy ஆக உள்ளது எனலாம்.

சென்ற முறை தாங்கள் எழுதிய முதற்பதிவுக்கு பல பன்னூட்டங்களைப் போட்டேன் அதன் பின் நானும் சில தீர்க்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன் அவை சரியா பிழையா என வரலாற்று ஆசிரியர்கள் தீர்மானிக்கட்டும் அவற்றில் நான் கற்றுப் பெற்றவற்றை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.//

வணக்கம் சகோதரம், இப் பதிவு நீண்டு விடக் கூடாது எனும் காரணத்தினாலும், வாசகர்கள் மத்தியில் நீண்ட பதிவு என்றால் படிக்காது தவிர்க்க வேண்டும் எனும் ஒரு வித அலர்ஜி காணப்படுவதாலும் வெட்டி, கொத்தி, தேவையற்ற விடயங்களை நீக்கி கொஞ்சம் Crispy ஆகத் தரவேண்டியதாகி விட்டது. அடுத்த பகுதிகளை கொஞ்சம் yummy ஆகத் தர முயற்சிக்கிறேன். நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

1. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் எனப்படுவோர் ஒரே சாதியே அல்ல//

நிச்சயமாக உண்மை, இலங்கையானது பூகோள ரீதியில் துண்டாடப்பட்ட பின்னர் தமிழ் நாட்டிலிருந்து வணிக நோக்கில் தென் இந்தியாவின் பல்வேறு தொழில்களைச் செய்கின்ற மக்களும் வந்திருக்கிறார்கள். அவர்களில் விவாசயம் செய்யும் இனத்த்வர் அல்லது வேளாண்மை செய்வோரே தம்மை நிலை நிறுத்தும் நோக்கில் வெள்ளாளர் எனும் சாதியினை உருவாக்கினார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று, இதுவே நிஜமும் கூட..

பதிவின் நான்காவது பந்தியினுள் எப்படி வெள்ளாளர் ஈழத்தில் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள் என்று விளக்கியுள்ளேன். அதனைப் பார்த்தால் உங்களுக்கு இன்னும் போதிய விபரங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

4. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் சாதியினை மறைக்க வெள்ளாளராக காட்டிக் கொண்டு டச்சு அரசின் துணையோடு பல நிலங்களையும், புலங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.//

ஆம் நிச்சயாமாக உண்மை, டச்சுக்காரர் காலத்தில் அரச கருமங்களில் இருந்த முதலியார்(Mudaliyar) தலையார்(Talaiyar,) மணியகாரர்(maniyakarar) விதானைமார்(Vidane) போன்றவர்கள் தமது சேவை வழங்கலின் நிமித்தம் பல அரச காணிகளை டச்சுக்காரனின் துணையோடு நன்கொடையாகப் பெறுகிறார்கள்.

போர்த்துக்கீசரும், டச்சுக்காரரும் தாம் கையகப்படுத்தி வைத்திருந்த அரச காணிகளை விற்ற போது, இவர்களின் பரம்பரையினர் அக் காணிகளை வாங்கி நிலச் சொந்தக்காரர்கள் ஆகினர்.

அக் காணிகளில் அடிமைகளை அல்லது கீழ் சாதியினைச் சேர்ந்தவர்களை வைத்து உற்பத்திகளைப் பெருக்கினர். அதன் மூலம் பெரும் செல்வாக்கு உள்ள சாதியினராக சமூகத்தின் கீழ் நிலையில் இருந்த சாதிகளில் உள்ள பணக்காரர்களும், ஏனைய வேளாண்மை செய்யும் மக்களும், மாறினர்.

1670ம் ஆண்டு டச்சுக்காரர் புதுப்பித்த தோம்பில்(காணிப்பதிவேட்டில்) 12,000 அடிமை குடிகளை யாழ்ப்பாண வெள்ளாளச் சாதியினர் தமது காணிகளில் சேவைக்காக அமர்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.............


மேற்படி குறிப்பு கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் எனும் நூலின் 238வது பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு உங்களுக்காக இங்கே தரப்படுகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

5. ஈழத்தமிழர்களில் வெள்ளாள சாதி வெறியானது ஆங்கிலேயேர் காலத்தில் சைவ மத எழுச்சியோடு பெருகுகின்றது. //

இதனைப் பற்றியும் நான் என் பதிவில் இந்தியாவின் திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டம் பெற்ற சொற்செல்வர், சாதிய வெறியர் நாவலர், போன்ற அறிஞர்களின் செயற்பாடுகளை மேற் கோளிட்டு என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

6. யாழ்ப்பாணத் தமிழர்களில் தலித்கள் அம்மண்ணின் மைந்தர்களாவர்கள். அவர்கள் 9-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களவர்களாக வாழ்ந்து வந்தவர்கள். இதற்கு சாட்சியே யாழ்ப்பாணம் முதலான ஊர்களில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்களே ஆகும்.//

இவ் இடத்தில் நீங்கள் சுட்டும் வரலாற்றுத் திரிபை அல்லது பிழையான தகவலை நான் மறுத்துரைக்கிரேன், என்னுடைய இத் தொடரின் முதலாவது பாகத்திலும் சிங்களவர் இலங்கைக்கு எப்போது வந்தார்கள் என்பது பற்றி விளக்கியிருந்தேன்.
கி.மு 500களிற்கு முற்பட்ட காலத்தில் தான் இலங்கைகு விஜயனும், அவனது தோழர்களும் வருகை தருகிறார்கள்.  யாழ்ப்பாண இராச்சியத்தைப் பொறுத்தவரை, அங்கு 1700ம் ஆண்டு வரையோ சிங்கள இன மக்களின் ஆதிக்கமோ, கலப்புக்களோ காணப்படவில்லை. யாழ்ப்பாணத்தவர்கள் இந்தியாவின் தென் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதே வேளை யாழ்ப்பாணம் முதலிய ஊர்களில் இருக்கும் பெயர்களைச் சாட்சியாக வைத்து, சிங்களப் பெயர்கள் எனக் கூறி நீங்கள் 9ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களவர்களாக இத் தமிழர்களே வாழ்ந்து வந்தார்கள் எனும் கூற்றினையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


7. ஈழத்தமிழர்களில் கரையார்கள் தமிழர்களாகவும், சிங்களவர்களாகவும் இடத்துக்கு ஏற்ப வாழ்ந்துள்ளனர்.//

சகோதரம், கரையோரத்தைச் சேர்ந்து வாழும் மக்களை பொதுவாக கரையார் என்றே சொல்லுவார்கள். இலங்கைக்கு சிங்கள இனம் வாழ்வதற்கு முன்பே தமிழர்கள் கரையோரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள், இந்தியாவரைக்கும் படகுகளில் சென்று வியாபாரம் செய்திருக்கிறார்கள்.

இலங்கையின் கரையோரத்தினை அண்டி வாழ்பவர்கள் தமிழர்களாகவும், சிங்களவர்களாகவும் இடத்துக்கிடம் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் கூற்று இப் பதிவில் அதிகளவு தாக்கத்தையோ, அல்லது எதிர்க் கருத்துக்களையோ வெளிப்படுத்தும் ஒரு விடையாக இருக்காது என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

8. இதனால் தான் விவசாயம் சாராத யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் எனும் விவசாயக் குடிகள் பெருகியமைக்கு காரணம். இதனை டச்சுக் கால மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் உறுதி செய்துள்ளதாக தெரிகின்றது. அதாவது டச்சுக் காலத்தில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த பள்ளர் இன மக்கள் உட்பட பல்வேறு குடியேற்ற சாதிகள் தம்மை வெள்ளாளர்களாக அறிவித்துக் கொண்டு மண்ணின் மைந்தர்களை ஓரம் கட்டிய தகவல்கள் பல கூறுகின்றன. //

யாழ்ப்பாணத்தில் விவசாயம் சாராமல் வெள்ளாளக் குடிகள் பெருகின என்பது தவறு, விவசாயம் சார்ந்தே வெள்ளாளக் குடிகள் பரவின.
ஏனைய குடிகளாக சைவர்... பிராமணர் முதலியோர் சமூகத்தில் அறிவிற் சிறந்தவர்களாக விளங்கி, ஏனைய சமூகங்களை இருட்டில் வாழச் செய்து விட்டு மறைந்து விட்டார்கள்.

ஈழத்தின் கரையோரங்களை அண்டிய கரையார் அல்லது மீன்பிடித் தொழிலைச் செய்த மக்களும் வெள்ளாளராகத் தமது பண பலத்தின் அடிப்படையில் மாறினார்கள். உதாரணமாக மயிலிட்டி, காங்கேசன் துறை, பலாலி, வசாவிளான், அராலி, காரைநகர், நயினாதீவு, புங்குடுதீவு முதலிய பகுதிகளில் காலாதி காலமாக வாழ்ந்த கரையார் எனும் இன மக்களே அல்லது மீன் பிடித் தொழிலில் ஈடுபட்ட மக்களே தமது பண பலத்தால் ஏனைய சாதிகளை அடிமைகளாக்கி வெள்ளாளர் எனும் குடையின் கீழ் மாறியிருக்கிறார்கள்.

இப்போது இந்த ஊர்களில் இருக்கும் வெள்ளாளர் எனுன் நபர்களின் மூலக் கொடி அல்லது வேர் மீன் பிடித் தொழிலைச் செய்து வந்த வம்சங்களில் இருந்தே துளிர் விட்டது அல்லது பரவியதாகும்.

விவசாயம் சாராத வெள்ளாளக் குடிகள் என்னும் கருத்து தவறானது.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


9. இதனால் தான் யாழ்ப்பாண வெள்ளாளர் பலர் இந்தியாவை வெறுக்கின்றனர். அதாவது இந்தியாவில் தாம் மதிக்கபடாமல் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்டதால், தாம் புகுந்த நாட்டில் தம்மை உயர்வாகக் காட்டிக் கொண்டு அதே சமயம் மண்ணின் மைந்தர்களை வெறுத்தும் உள்ளனர். //

இந்தியாவுடன் காலாதி காலமாக வர்த்தக நடவடிக்கைகளுடனும் பொருளீட்டல் நடவடிக்கைகளிலும் கரையோரங்களை அண்டி வாழும் மக்களே ஈடுபட்டுள்ளார்கள். வெள்ளாளரைப் பற்றி நீங்கள் இவ் இடத்தில் கூறும் கூற்றினைச் சரியாக நிரூபிக்க முடியவில்லை.

10. நழவர், கோவியர், தானைக்காரர் ஆகியோர் சோழர்களின் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் கலந்த மக்கள் எனவும் தெரிகின்றது.//

சோழர்களின் வருகைக்கு முன்னரோ இல்லைப் பின்னரோ யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழவில்லை என்பதனை ஆதாரப்படுத்தப் பல ஆதாரங்கள் உள்ளன. யாழ்ப்பாணம் காலாதி காலமாக இந்தியாவினைச் சேர்ந்த பிராமணர் வம்சத்தால் ஆளப்பட்டிருக்கிறது, தமிழைப் பேசும் மக்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள். இதற்குச் சான்றாக எனது கடந்த பதிவில் பல ஆதாரங்களை முன் வைத்துள்ளேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
///அவர்கள் 9-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களவர்களாக வாழ்ந்து வந்தவர்கள். இதற்கு சாட்சியே யாழ்ப்பாணம் முதலான ஊர்களில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்களே ஆகும்./// இதுவரை சிங்கள ஊர் பெயர்களை அறியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் சகோ..?????????//

சகோதரம் கந்தசாமி, இவ் இடத்தில் நானும் சகோதரன் இக்பால் செல்வனின் கருத்துக்களை நிராகரிக்கிறேன். யாழ்ப்பாணம் முதலான ஊர்களில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்களை அடிப்படையாக வைத்து ஒன்பதாம் நூற்றண்டளவில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் எனக் கூறுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///அவர்கள் 9-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்களவர்களாக வாழ்ந்து வந்தவர்கள். இதற்கு சாட்சியே யாழ்ப்பாணம் முதலான ஊர்களில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்களே ஆகும்./// இதுவரை சிங்கள ஊர் பெயர்களை அறியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் சகோ..?????????//

சகோதரம் இக்பால் செல்வன் அவர்களே, இலங்கையில் இன்று வரை தொல்லியல் அல்லது வரலாற்று ஆய்வாளர்களால் வெளியிடப்படாது அல்லது முழுமை பெறாது இருக்கும் கந்தரோடை ஆய்வுகள், ஈமச் சின்னங்கள், தாழிகள் பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கந்தரோடை ஆய்வுகளின் ஊடாக தமிழர்களின் தொன்மையான வரலாறு வெளி உலகிற்குத் தெரிந்து விடும் எனும் காரணத்தினால் இன்று வரை இவ் ஆய்வினை இழுத்தடித்து, முற்றுப் பெறாதபடி காலத்தைக் கடத்திச் சிங்கள இனம் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆய்வுகளையே நிரூபிக்க தென்னிலங்கை ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள்.

இவ் இடத்தில் உங்களுக்காக பெருங் கற்கால யாழ்ப்பாணம் எனும் பொ.ரகுபதி அவர்கள் எழுதிய வரலாற்று நூலிலிருந்து ஒரு சில குறிப்புக்களைத் தருவது பொருத்தம் என நினைக்கிறேன்.

‘’யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரகால இலங்கைக்கும் இருந்த தொடர்பு என்ன? இக்காலத்தில் அநுராதபுரம் இலங்கையின் பலம்வாய்ந்த மைய நகரமாக விளங்கியதென்பதில் ஐயமில்லை. ஆயினும், யாழ்ப்பாணம் முழுமையாக அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உள்ளடங்கியிருந்ததா என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட பாளி இலக்கிய ஆதாரங்கள் தொலைவில் இருக்கும் மகாகமை பற்றி அதிகம் கூறும் அதே நேரத்தில் யாழ்ப்பாணம் குறித்து மிகக் குறைந்த விபரங்களைக் கூடத் தரவில்லை யெனலாம். யாழ்ப்பாணம் இக்கால கட்டத்தில், தென்னிந்தியாவிற்கும் தென்னிலங்கைக்குமிடையில் பண்பாடுகள் சந்திக்கும் இடைக்குறுநிலமாகவும் இந்திய உபகண்டத்தில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தோன்றிய புதிய அலைகளை முதலில் ஏற்றுக் கொள்ளும் படிக்கல்லாகவும் இருந்திருக்கலாம். இந்நாட்டிற்குப் பௌத்தத்தின் வருகை யாழ்ப்பாணத்தின் சம்புத் துறையூடாக வந்தமை போலவே பின்னர் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பிராமணீய மறுமலர்ச்சியும் இங்கு வந்திருத்தல் கூடும். எவ்வாறாயினும் யாழ்ப்பாண வரலாற்றியல் இலக்கியங்கள் யாவும் புகை படர்ந்த ஆனால் ஏகோபித்த ஒரு தகவலைத் தருகின்றன. அது ஆரியச் சக்கரவர்த்திகள் கால யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முன்னரே கதிரைமலையில் இருந்து யாழ்ப்பாணம் ஆளப்பட்ட ஒரு செய்தியாகும்.(21) சோழர் வருகையுடன் இவ்வரசு முடிவடைந்ததை இவ்விலக்கியங்கள் சூசகமாகத் தெரிவிக்கின்றன. கதிரைமலையில் இருந்து அரசாண்ட உக்கிரசிங்கன் சோழ இளவரசி மாருதப்புரவல்லியைத் திருமணம் செய்தபின்னர் கதிரைமலை இந் நூல்களால் மறக்கப்பட்டு விடுகின்றது.

Anonymous said...
Best Blogger Tips

ஈழம் தொடர்பான செய்திகளை எங்களுக்கு பகிர்ந்து வருவதற்கு நன்றி நண்பா!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிரு! நீ என்னதான் பறையன்! நான் கோவியன்!!//

ஹா...ஹா....ஹா.... நானும் ஒரு மனிதன், நீங்களும் ஒரு மனிதன் என என் உள் மனதை மறைத்துப் போலியான பதிலை வழங்க விருப்பமில்லை.

நான் யாரா? என்ன வேடிக்கை இது. வீட்டுக்கு வெளியே வேலைக்காரரை இருத்தி என் பாட்டனும், என் தந்தையும் நெளிந்த சில்வரிலும் சிரட்டையிலும் தேநீர் கொடுத்து மக்களை அடிமைகளாக நடாத்துவதை பார்த்து வளர்ந்த ஒரு உயர் சாதியெனப் பெற்றோரால் சொல்லி வளர்க்கப்பட்ட மனிதாபிபானமற்ற குலத்தில் பிறந்த சாதாரண மனிதன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஈழத்தில் இன்றும் சாதியம் வாழ்கிறது, புலம் பெயர்ந்தும் எம்மவர்கள் திருந்தவில்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக;
கனடாவைச் சேர்ந்த யாழ் உயர் குல வேளாள இனத்தைச் சேர்ந்த மண மகனுக்கு அதே இனத்தைச் சேர்த மணமகள் தேவை...’’ எனும் தொனியில் இன்றும் பத்திரிகைகளில் வரு விளம்பரங்களைக் குறிப்பிடலாம்..


இதுவும் நூறுவீதம் உண்மை நிரு! இங்கு தான் சாதிப்பிரச்சனை படு மோசம்!! இதற்கென ஒரு பதிவு போட்டு கிழி கிழி என்று கிழிக்க இருக்கிறேன்!! வெளிநாடுகளில் வாழ இம்மியளவும் தகுதியில்லாத கூட்டம், இஞ்ச நிறைய இருக்குது!//

உங்களின் முன்னேற்றகரமான சிந்தனையினை நோக்கிய இப் பதிவினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

காமராஜ் said...
Best Blogger Tips

ஆகத்துணிச்சலான கட்டுரை.பெட்டகம். வாழ்த்துக்கள் நிரு.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மிகவும் துணிச்சலான பதிவு.. தொடரட்டும் உங்கள் பணி..//

நன்றிகள் சகோ, எமது வாழ்வில் நடந்த விடயங்களை, வரலாறுகளைச் சொல்லத் துணிச்சல் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...


மிகத்துணிச்சலான பதிவு! வாழ்த்துக்கள்! எனக்கு ஆறுமுக நாவலனை சின்னவயதில இருந்தே பிடிக்காது! அப்புறமா வளர்ந்ததும் கேவலமான மறுபக்கம் தெரிந்தது!//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா
விரிவான தெளிவான ஆக்கம்...
நிறைய முயற்சி செய்திருக்கிறீர்கள் நண்பரே...
வாழ்த்துக்கள்...
அனைத்தையும் கோடிட்டு காட்டி அனைத்தும் உண்மை என்று கூறத்தான் மனம் முன்வருகிறது!!//

நன்றிகள் சகோ, எங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற தடயங்களை நாங்கள் இப்போது கிளறிப் பார்க்கிறோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூபன்...உண்மையை அப்படியே அலசியெடுக்கிறீர்கள்.ஆனால் என்ன பிரயோசனம்.நான் போன பதிவிலேயே சொல்லியிருந்தேன்.கொஞ்சம் மறைத்து வைத்திருக்கிறார்களே தவிர தங்கள் கைகளோடு கொண்டுதான் திரிகிறார்கள் சாதியை.வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் சாதிப்பால் ஊட்டுகிறார்கள்.அவர்கள் அதன் சுவை தெரியாமல் முழிக்கிறார்கள்.சொன்னாலும் புரிந்துகொள்ளவும் கஸ்டப்படுகிறார்கள்.
ஏனென்றால் உணர்வோடு அவர்கள் சாதித்தொழில் செய்பவர்களைப் பார்க்கவில்லை.

எனக்குத்தெரிந்த குடும்பத்தில் 2 வருடங்களுக்கு முன் இங்கு பிறந்த மரமேறும் குடும்பத்துப் பையன் தங்களைவிட உயர்ந்த சாதியில் காதல்.பெற்றவர்கள் தடுத்தும் திருமணமாகி இப்போ கர்ப்பிணியாக இருக்கிறாள் அந்தப் பெண்.ஆனால் பெண்வீட்டில் நக்கல் நளினமான போக்குகள் அந்தப் பையனுக்கு.மனம் தளர்ந்து என்ன ஆகுமோ என்கிற சூழ்நிலைதான் அந்த இளம் குடும்பம் இப்போ !//

நன்றிகள் சகோதரி, வெளி நாட்டிலும் இதே நிலமை தானா? எம்மவர்கள் எங்கு போனாலும் திருந்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

உங்களின் கருத்தினைப் படிக்கும் போது எனக்கும் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.

ஊரிலை சாதியைக் காரணம் காட்டித் திருமணம் செய்ய முடியாத இரண்டு ஜோடிகள் ஓடிப்போய்த் திருமணம் செய்து ஒன்றாக ஓரிரு வாரங்கள் வாழ்ந்து விட்டு, பின்னர் பெற்றோர் சொற் கேட்டுப் பிரிந்திருக்கிறார்கள்.
காலம் மாறினாலும், எம்மவர்களின் கட்டுப்பாடுகள் மாறாது என்பது உங்களது பின்னூட்டத்தினைப் படிக்கும் போது நிரூபணமாகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

ஈழம் தொடர்பான செய்திகளை எங்களுக்கு பகிர்ந்து வருவதற்கு நன்றி நண்பா!//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி
நிறைய முயற்சி செய்திருக்கிறீர்கள் .
வாழ்த்துக்கள்...//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காமராஜ்

ஆகத்துணிச்சலான கட்டுரை.பெட்டகம். வாழ்த்துக்கள் நிரு.//

ஆஹா.. ஆஹா... இதிலை என்ன துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது சகோதரம்.
எங்கள் வாழ்வில் எம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட புதையல்களை நாங்கள் கிளறி எடுக்கிறோம். அவ்வளவே.
நன்றிகள் சகோதரம்.

www.eraaedwin.com said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,
ஈழத்தில் சாதியம் படித்தேன். அருமையாக வந்திருக்கிறது. ஈழ எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன் எழுதிய "லோமியா" என்ற நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியட நான் அந்த நாவல் குறித்து பேசினேன்.

அந்த நாவலில் ஈழத்தில் காணப்படும் (குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தில் )சாதியப் படிநிலைகளின் கொடூரம் காணக் கிடைத்தது. அதன் பிறகு " ஒன்று என்பது இரண்டு" என்று அந்த நாவல் குறித்த பதிவினை எனது முதல் நூலான " அந்தக் கேள்விக்கு வயது 98 " என்ற நூலினில் வைத்தேன்.

அந்த நாவலை நீங்கள் வாசித்திருக்கக் கூடும்.

" ஒன்று என்பது இரண்டு" என்ற எனது பதிவினை இன்று இரவு தட்டச்சு செய்து எனது வலையில் வைத்து விடுகிறேன். அவசியம் பார்த்து சொல்லுங்கள்.

Jana said...
Best Blogger Tips

பிடிக்காதவர்கள் படிக்கவேண்டாம் என்று நீங்கள் போட்டதால் படிக்கவில்லைதான் என்றாலும் படித்தேன்..இருந்தாலும் என்று பல இடங்களில் மனதில் சில கருத்துக்கள் என்னிடம் உண்டு. விரைவில் நாம் நேரில் சந்திக்கும்போது பல விடயங்கள் பற்றி நிறைய பேசலாம் என நினைத்துள்ளேன்.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

உள்ளேன் ஐயா...
எதுக்கும் ஒரு வணக்கத்தை போட்டு வச்சிருவோம்....

Anonymous said...
Best Blogger Tips

///கந்தரோடை ஆய்வுகளின் ஊடாக தமிழர்களின் தொன்மையான வரலாறு வெளி உலகிற்குத் தெரிந்து விடும் எனும் காரணத்தினால் இன்று வரை இவ் ஆய்வினை இழுத்தடித்து, முற்றுப் பெறாதபடி காலத்தைக் கடத்திச் சிங்கள இனம் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆய்வுகளையே நிரூபிக்க தென்னிலங்கை ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள்.//// ஆமாம்..நான் கூட அறிந்துள்ளேன்

Anonymous said...
Best Blogger Tips

///பல ஊர்ப் பெயர்கள் இருக்கின்றன - குறிப்பாக ஒன்றே ஒன்று சாம்பிளுக்கு சொல்கிறேன்.. வலிகாமம் என்ற பகுதியின் பெயர் தமிழே இல்லை. அது அப்பட்டமான சிங்களப் பெயர் வெலி கம என்னும் சிங்கள ஊர்ப்பெயராகும். வெலி கம என்பது வெலி என்றால் மணல் எனவும், கம என்பது கிராமம் என்ற வடமொழியில் இருந்து வந்த சிங்கள சொல்லான கம என்பதாகும். இது போதுமா இன்னும் வேணுமா ???/// அவ்வாறு தான் இருந்தது என்றதற்கு என்ன ஆதாரம்?

Anonymous said...
Best Blogger Tips

சோழியபுரம் என்பதே சுழிபுரமாக பிற்காலத்தில் மரபியதாக ஊர்காரர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். வலிகாமம் பிரதேசத்திலே தொன்மை வாய்ந்த இக்கிராமமும் உள்ளடங்கியுள்ளது

shanmugavel said...
Best Blogger Tips

மிகச்சிறப்பான பதிவு.என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரம்.பொறுமையாக படிக்க மீண்டும் வருகிறேன்.

Anonymous said...
Best Blogger Tips

@ நிரூபன் தங்களது பதில்களுக்கு மிக்க நன்றிகள் !!! ஆனால் ஈழத்தமிழ் வரலாறு என்பது பல இடங்களில் யூகங்களில் அடிப்படையில் தெளிவற்ற ஆராய்ச்சிகளில் இருப்பதால் முற்றிலுமாக நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆனால் இருபக்கமும் சீர் தூக்கி ஆராய்வது நன்று. ஒரு வழிச்சாலையாக சிங்களவரும், தமிழரும் தமது கற்பிதங்களை வரலாற்றில் திணிக்க முனைவது வருத்தம் தான்.

வடக்கு கிழக்கு தமிழீழ மாநிலத்தில் சிங்களவர் இடைக்காலத்தில் வாழவே இல்லை என நிரூபிக்க முடியுமா?

அதே போல ஈழத்தமிழர் வரலாற்றினை நான் எடுத்து ஆராயும் போது எழுந்த இரண்டு சிக்கல்கள் இது தான்

1. வடக்கு கிழக்கில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்கள் - அவை டச்சு , போர்த்துகேயர், பிரிடிஷ் குறிப்புகளிலும், நிலவரைகளிலும் இருக்கின்றன. அவை எப்படி வந்தன? ஏன் வந்தன ? என்பதன் விடை எனக்கு கிட்டவில்லை

2. ஏன் ஈழத்தமிழர்களிடம் தொடர்ச்சியான மன்னராட்சி இருந்திருக்க வில்லை. அதிலும் குறிப்பாக கிமு 1ம் நூற்றாண்டு முதல் கிபி 9 நூற்றாண்டு வரை தமிழ் மன்னர்கள் நீண்டு வடக்கு இலங்கையை ஆண்டதாக தெரியவில்லை. இடையிடையில் ஆட்சி செய்த சிற்சில தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்து அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவர்கள். அதே போல 9ம் நூற்றாண்டில் இருந்து 12 நூற்றாண்டு வரையும் சோழர்கள், பாண்டியர்களின் கீழ் தான் வடக்கு இலங்கை இருந்துள்ளது. இது ஆராய்ச்சி செய்யப்படவேண்டியவை.

Anonymous said...
Best Blogger Tips

// யாழ்ப்பாண இராச்சியத்தைப் பொறுத்தவரை, அங்கு 1700ம் ஆண்டு வரையோ சிங்கள இன மக்களின் ஆதிக்கமோ, கலப்புக்களோ காணப்படவில்லை.//

நிரூபன் இத்தகவல் முற்றிலும் உண்மை இல்லை ... 16 நூற்றாண்டில் சங்கிலி மூன்றாம் மன்னன் பல சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றிய செய்தியும் வரலாற்றில் உண்டு. அதே போல 13ம் நூற்றாண்டில் தமிழ் இளவரசன் தலைமையில் சிங்கள வீரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளார்கள். அழகம் பெருமாள் என்னும் அந்த இளவரசன் தான் நல்லூர் முருகன் கோயிலை செப்பனிட்டதாகவும் வரலாறு உண்டு. தாங்கள் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை போலும்.

எனது ஆய்வே சாவக மன்னன் 9 நூற்றாண்டில் வடக்கு இலங்கையை கைப்பற்ற முன் அங்கு வாழ்ந்தவர்கள் யார்? அவர்களின் மொழி, பண்பாடு, மதம், அரசுகள் யாவை > இதுவே எனதுக் கேள்வி. அவர்கள் சிங்கள அரசுக்கோ, பாண்டிய- சோழ அரசுக்கோ திறை செலுத்துபவர்களாக இருந்திருக்க வேண்டும்.

அதே போல சாவக மன்னனோடு யாழ்ப்பாணத்தில் குடியேறிய சாவகர்கள், அவர்களுக்கு துணையாக குடியேறிய கேரளர்கள், பின்னர் வடுமராட்சிப் பகுதியி குடியேறிய தெலுங்கு பேசும் மக்கள் இவர்களைப் பற்றிய ஆய்வும் தேவைப்படுகின்றது. தகவல் இருந்தால் தாருங்கள் !!!

தனிமரம் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் உங்களின் பொன்னான நேரத்தை நல்லபதிவுக்காக மினக்கெட்டு செய்திருக்கிறீர்கள் ஆனால் மேல்தட்டு வெள்ளார்கள் மட்டும் புலம்பெயர்ந்தார்கள் என்ற தெனிப்படுவதில் உடன்பாடுகிடையாது புலம்பெயர்ந்தவரில் எல்லாறும் உண்டு இன்று சாதியத்தை உயர்த்திப்பிடித்து இன்னும்50 வருடங்கள் பின் செல்லுவதா ஆசியாவில் இனக்குழுமங்கள் காலகாலமாக இருந்துவருகிறது.முஸ்ஸிம் இனத்தில் சியா,சுன்னி(இது ஆண்குறிச்சொல் அல்ல)கிறிஸ்தவத்தில் றோமன் கத்தோலிக்கம்:றோமன்கத்தோலிக்கம் அல்லாதவர்,சிங்களவர் இடையே உடரட்ட/பாதரட்ட இன்றைய நாடாளும் குடும்பம் பாதரட்ட(சந்திரிக்கா-சுட்டிக்காட்டியது) இப்படி இன்னும் ஒற்றுமை இல்லாமல் வாழுவதால்தான் எதிரி பிரித்தாலும்  தந்திரம் மூலம் அடிமை கொள்கிறான் ஆனால்தமிழர் இடையே  பலபிரிவுகள்  ஆதிக்க சக்திகள் உருவாக்கிவிட்டார்கள்.மலையகத்தில் அந்தனிஜீவா,தெளிவத்தை  ஜோசப்,கிலக்கில் வ.ஆ.இராசரத்தினம்.(மறைந்துவிட்டார்)துறைநீலாவணனன்(முன்னால் வர்த்தகசேவை ஒலிபரப்பு/சக்தியின் பணிப்பாளர்/லோசனின் குரு எழில்வேந்தன் தந்தை)போன்றோர் இந்தவிடயமாக கதை/கவிதையில் பதிவு செய்துள்ளனர்.இன்று இதை மீட்டும் நிலையில் வரும்காலம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வோம்.பாரதி சொல்வதுபோல் சாதிகள் இல்லையடி பாப்பா".

உணவு உலகம் said...
Best Blogger Tips

மிக துணிச்சலான பதிவு

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

சூப்பர் ஹிட் போஸ்ட் போல.. சாரி ஃபார் லேட்..

Unknown said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி நண்பா

வஞ்சிக்கப்படும் சமூகம் என்பதை தெளிவு படுத்தியுள்ளீர்கள் நன்றி

Anonymous said...
Best Blogger Tips

அருமையான தொகுப்பு நல்ல அலசல்

Anonymous said...
Best Blogger Tips

ஈழம் பற்றிய நிறைய செய்திகள் தெரிந்துகொள்ள முடிந்தது நண்பரே

Anonymous said...
Best Blogger Tips

மகுடத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

கவி அழகன் said...
Best Blogger Tips

நலூர் சங்கிலியன் அரண்மனைக்கு மேல ஏறி நின்று எட்டுத்திசையும் பார்த்தல் ஒவௌறு திசையிலும் ஒவொரு தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மன்னனுக்கு சேவை செய்ய அமர்தபட்டர்வர்கள் அது சாதி எனும் பெயரால் வேறுப்பட்டு காணப்படுகிறது

ஏன் கடவுளிலும் சாதி உண்டு
நல்ல சாதி வாழும் இடத்தில் ஞான வைரவர்
குறைந்த சாதி வாழும் இடத்தில் சுடலை வைரவர்

அனால் இப்பொழுது சாதி என்பது முன்பை விட மருகிவிட்டது என் நினைக்கிறான்
ஏன் மருகியது எப்படி மரிகியது இப்பொழுது என்ன நிலை என்பது பற்றியும் எழுதினால் தற்கால சிந்தைனகள் நிறைய கிடைக்கும்

சசிகுமார் said...
Best Blogger Tips

அனுபவிக்கும் போது தான் தெரியும் உண்மையான வலி.

ஆனந்தி.. said...
Best Blogger Tips

ம்ம்...படிச்சேன் நிருபன்...எப்படி இருக்கீங்க சகோ...உங்கள் ப்லாக் கின் தோற்றம் இப்ப ரொம்ப அழகு சகோ...நாற்று க்கு தகுந்த related விஷயங்கள் ப்லாக் முழுசும் பரவி.பச்சை எழுத்துகளில் நாற்று கம்பீரமாய்...மகிழ்ச்சி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
Best Blogger Tips

அசத்தலான பதிவு. உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் நிரூபன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இரா.எட்வின்

வணக்கம் நிரூபன்,
ஈழத்தில் சாதியம் படித்தேன். அருமையாக வந்திருக்கிறது. ஈழ எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன் எழுதிய "லோமியா" என்ற நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியட நான் அந்த நாவல் குறித்து பேசினேன்.

அந்த நாவலில் ஈழத்தில் காணப்படும் (குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தில் )சாதியப் படிநிலைகளின் கொடூரம் காணக் கிடைத்தது. அதன் பிறகு " ஒன்று என்பது இரண்டு" என்று அந்த நாவல் குறித்த பதிவினை எனது முதல் நூலான " அந்தக் கேள்விக்கு வயது 98 " என்ற நூலினில் வைத்தேன்.

அந்த நாவலை நீங்கள் வாசித்திருக்கக் கூடும்.

" ஒன்று என்பது இரண்டு" என்ற எனது பதிவினை இன்று இரவு தட்டச்சு செய்து எனது வலையில் வைத்து விடுகிறேன். அவசியம் பார்த்து சொல்லுங்கள்.//

நன்றிகள் சகோதரம், நிச்சயமாய் படிக்க வருகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jana

பிடிக்காதவர்கள் படிக்கவேண்டாம் என்று நீங்கள் போட்டதால் படிக்கவில்லைதான் என்றாலும் படித்தேன்..இருந்தாலும் என்று பல இடங்களில் மனதில் சில கருத்துக்கள் என்னிடம் உண்டு. விரைவில் நாம் நேரில் சந்திக்கும்போது பல விடயங்கள் பற்றி நிறைய பேசலாம் என நினைத்துள்ளேன்.//

உங்கள் கருத்துக்களுக்காக நான் காத்திருக்கிறேன் சகோதரம். உங்களது எதிர்க் கருத்துக்களை முன் வைத்தால் என்னுடைய வாதம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அனைவரது கருத்துக்களையும் நான் வ்ரவேற்கிறேன். நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
உள்ளேன் ஐயா...
எதுக்கும் ஒரு வணக்கத்தை போட்டு வச்சிருவோம்...//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel
மிகச்சிறப்பான பதிவு.என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரம்.பொறுமையாக படிக்க மீண்டும் வருகிறேன்//

நன்றிகள் சகோதரம்..

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

@ நிரூபன் தங்களது பதில்களுக்கு மிக்க நன்றிகள் !!! ஆனால் ஈழத்தமிழ் வரலாறு என்பது பல இடங்களில் யூகங்களில் அடிப்படையில் தெளிவற்ற ஆராய்ச்சிகளில் இருப்பதால் முற்றிலுமாக நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆனால் இருபக்கமும் சீர் தூக்கி ஆராய்வது நன்று. ஒரு வழிச்சாலையாக சிங்களவரும், தமிழரும் தமது கற்பிதங்களை வரலாற்றில் திணிக்க முனைவது வருத்தம் தான்.//

சகோதரம் ஈழத்தமிழர் வரலாறு பற்றிய ஆரம்ப கால விடயங்களையும், ஏன் ஈழத்தமிழர் வரலாறு தொன்மைக் காலம் தொடக்கம் முழுமையாகத் தொகுக்க முடியாமல் போனது என்பதனையும் நான் எனது முதலாவது பதிவில் விளக்கியுள்ளேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


//வடக்கு கிழக்கு தமிழீழ மாநிலத்தில் சிங்களவர் இடைக்காலத்தில் வாழவே இல்லை என நிரூபிக்க முடியுமா?//

நிரூபிக்க முடியும் சகோதரம். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப் படி சிங்களவர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்குப் படையெடுத்திருக்கிறார்கள் சகோதரா. ஆனால் எப்போது தெரியுமா? நீங்கள் கூறுவது போல ஒன்பதாம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முற்பட்ட காலத்திலோ அல்ல.

கிபி 1450இல் இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட முதலாவது மன்னனான ஆறாம் பராக்கிரமபாகு என்பவன் தனது சிங்கள படைத் தளபதியும், வளர்ப்பு மகனுமாகிய மலையாள இனத்தைச் சேர்ந்த (மலையாள இளவரசன்) செண்பகப் பெருமாளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி யாழ்ப்பாணம் முழுவதையும் கைப்பற்றிக் கொள்கிறான். இந்தப் படையெடுப்பின் போது தான் சிங்களவர்கள் முதன் முதலாக யாழ்ப்பாண இராச்சியத்தினுள் நுழைந்து வாழத் தொடங்குகிறார்கள்.


//அதே போல ஈழத்தமிழர் வரலாற்றினை நான் எடுத்து ஆராயும் போது எழுந்த இரண்டு சிக்கல்கள் இது தான்

1. வடக்கு கிழக்கில் இருக்கும் சிங்கள ஊர்ப் பெயர்கள் - அவை டச்சு , போர்த்துகேயர், பிரிடிஷ் குறிப்புகளிலும், நிலவரைகளிலும் இருக்கின்றன. அவை எப்படி வந்தன? ஏன் வந்தன ? என்பதன் விடை எனக்கு கிட்டவில்லை//

விடை கிடைத்துள்ளன. இதோ சகோதரம்.

யாழ்ப்பாண வைபவ மாலையின் கூற்றுப் படி இந்தியாவின் கலிங்க தேசத்தைச் சேர்ந்த மாகன் என அழைக்கப்படும் மன்னன் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபாகத்தை ஆட்சி செய்திருக்கிறான்.
கலிங்க மாகன் இந்தியாவின் கலிங்க தேசத்தில் இருந்து வந்த காரணத்தால், யாழ்ப்பாணத்தில் அவன் உருவாக்கிய இராசியத் தலைநகரங்களுக்கு கலிங்க நாட்டின் பாளி மொழிப் பெயர்களையே வைத்திருக்கிறான்.

கலிங்க தேசத்திற் சில வம்சங்களின் தலைநகராக அமைந்த ‘ஸிங்கபுர’ என்ற நகரத்தின் பெயரை ஒத்ததாக சிங்கை நகர் எனும் ஊர் யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது.
கலிங்கரகள் தங்கள் நாட்டின் பெயரை ஒத்ததாகப் புதிய தலைநகர்களுக்கும், ஊர்களுக்கும் பெயர்களை வைத்தார்கள். ஆகவே இந்த கலிங்கர்களால் வைக்கப்பட்ட பெயர்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து சிங்கள இனம் வாழ்ந்தது எனும் வரலாற்றுத் திரிபினை மேற்கொள்வதை ஏற்க முடியாது சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
2. ஏன் ஈழத்தமிழர்களிடம் தொடர்ச்சியான மன்னராட்சி இருந்திருக்க வில்லை. அதிலும் குறிப்பாக கிமு 1ம் நூற்றாண்டு முதல் கிபி 9 நூற்றாண்டு வரை தமிழ் மன்னர்கள் நீண்டு வடக்கு இலங்கையை ஆண்டதாக தெரியவில்லை. இடையிடையில் ஆட்சி செய்த சிற்சில தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்து அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவர்கள். அதே போல 9ம் நூற்றாண்டில் இருந்து 12 நூற்றாண்டு வரையும் சோழர்கள், பாண்டியர்களின் கீழ் தான் வடக்கு இலங்கை இருந்துள்ளது. இது ஆராய்ச்சி செய்யப்படவேண்டியவை.//

இவற்றையெல்லாம் கலாநிதி முருகர் குணசிங்கம் ஆராய்ச்சி செய்திருக்கிறார் சகோதரம், கி.மு300- கி.பி 300வரையான காலப் பகுதி தமிழர் ஆட்சியமைப்பு பற்றியும், அதனுடன் தொடர்புடைய வரலாறுகளையும் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் எனும் நூலில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.

ISBN 978-0-646-49455-5

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
// யாழ்ப்பாண இராச்சியத்தைப் பொறுத்தவரை, அங்கு 1700ம் ஆண்டு வரையோ சிங்கள இன மக்களின் ஆதிக்கமோ, கலப்புக்களோ காணப்படவில்லை.//

இக் கூற்றுக்குரிய விளக்கத்தை நான் மேலே விபரித்துள்ளேன் சகோதரம்.

//
நிரூபன் இத்தகவல் முற்றிலும் உண்மை இல்லை ... 16 நூற்றாண்டில் சங்கிலி மூன்றாம் மன்னன் பல சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றிய செய்தியும் வரலாற்றில் உண்டு. அதே போல 13ம் நூற்றாண்டில் தமிழ் இளவரசன் தலைமையில் சிங்கள வீரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளார்கள். அழகம் பெருமாள் என்னும் அந்த இளவரசன் தான் நல்லூர் முருகன் கோயிலை செப்பனிட்டதாகவும் வரலாறு உண்டு. தாங்கள் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை போலும். //

பதின்னான்காம் நூற்றாண்டில் தான் சிங்கள மன்னனின் கட்டளைக்கமைய செண்பகப் பெருமாள் என அழைக்கப்படும் இந்தியாவின் கேராளவைச் சேர்ந்த மலையாள இளவரசன் தான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான். வரலாற்று நூல்களில் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்திற்கு வந்ததாக கூறப்படவில்லை.
நான் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும் போது தான் இந்த விடயங்கள் நினைவில் வந்தன.

சாவக மன்னன் வட இலங்கையினைக் கைப்பற்றியது பற்றிய குறிப்புக்களும், அப்போது தமிழர், சிங்களவர் இலங்கையில் வாழ்ந்ததற்கான குறிப்புக்களும் சூளவம்சத்திலும், பாண்டியருடைய கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்படுள்ளன.

நிரூபன் said...
Best Blogger Tips

தென் கிழக்காசியாவிலுள்ள இன்றைய இந்தோனேசியாவின் சாவக அரசிலிருந்து வந்த சந்திரபானு என்பவன், பாண்டி நாட்டிலிருந்தும், சோழ நாட்டிலிருந்தும், தமிழ்க் கூலிப் படைகளைத் திரட்டிக் கொண்டு மாதோட்டம்(இன்று இயற்கைத் துறைமுகம் உள்ள இடமான திருகோணமலை) எனுமிடத்தில் வந்திறங்கி, அனுராதபுரத்தில் உள்ள சிங்களவர்களையும் சேர்த்துக் கொண்டு பராக்கிரமபாகு ஆட்சி செய்த தம்பதெனியா இராச்சியத்தைத் தாக்கியதாக சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளது சகோதரம்.

என்னுடைய வரலாற்றுத் தவறைத் திருத்திச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றிகள் சகோதரா.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

//எனது ஆய்வே சாவக மன்னன் 9 நூற்றாண்டில் வடக்கு இலங்கையை கைப்பற்ற முன் அங்கு வாழ்ந்தவர்கள் யார்? அவர்களின் மொழி, பண்பாடு, மதம், அரசுகள் யாவை > இதுவே எனதுக் கேள்வி. அவர்கள் சிங்கள அரசுக்கோ, பாண்டிய- சோழ அரசுக்கோ திறை செலுத்துபவர்களாக இருந்திருக்க வேண்டும்.

அதே போல சாவக மன்னனோடு யாழ்ப்பாணத்தில் குடியேறிய சாவகர்கள், அவர்களுக்கு துணையாக குடியேறிய கேரளர்கள், பின்னர் வடுமராட்சிப் பகுதியி குடியேறிய தெலுங்கு பேசும் மக்கள் இவர்களைப் பற்றிய ஆய்வும் தேவைப்படுகின்றது. தகவல் இருந்தால் தாருங்கள் !!!




மேற்படி தம்பதெனியா மீதான படையெடுப்பில் சாவக மன்னன் வெற்றி பெறவில்லை.
சாவக மன்னன் மாகனின் ஆதரவினைப் பெற்று, யாழ்ப்பாண இராச்சிய மன்னனாகியிருக்கலாம் என அறியமுடிகின்றது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் இலங்கை மீது படையெடுத்த போது அங்கு ஆட்சி நடத்தியோரை வெற்றி கொண்டு, தனக்குத் திறை செலுத்தும் படி செய்தான். இந்தப் போரில் தோற்கடிக்கப்படு, பதவி நீக்கப்பட்ட மன்னர்கள் கைதிகளாக்கப்பட்டோ, கொல்லப்பட்டோ இருக்கவில்லை என்பது பாண்டியர் கல்வெட்டில் கூறப்படும் விடயமாகும்.

ஜடாவர்மன் இலங்கை மீது படையெடுத்த போது தம்பதெனியாவில் சிங்கள மன்னனாகிய இரண்டாம் பராக்கிரமபாகுவும், வடபகுதியில் சாவக மன்னனும் ஆட்சி செலுத்தினார்கள் எனக் சூளவம்ச வரலாறும் கூறுகிறது . சாவக மன்னனின் ஆட்சியின் கீழ் யார் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தனர் என்று கூறப்படவில்லை.

ஆனால் சாவக மன்னன் வருவதற்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற குறிப்புக்களை வைத்துப் பார்க்கையில் சாவக மன்னன் காலத்திலும் யாழ்ப்பாணத்தில் தமிழர்களே வாழ்ந்தார்கள் எனும் முடிவுக்கு வரமுடியாதா சகோதரம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
வாழ்த்துக்கள் உங்களின் பொன்னான நேரத்தை நல்லபதிவுக்காக மினக்கெட்டு செய்திருக்கிறீர்கள் ஆனால் மேல்தட்டு வெள்ளார்கள் மட்டும் புலம்பெயர்ந்தார்கள் என்ற தெனிப்படுவதில் உடன்பாடுகிடையாது புலம்பெயர்ந்தவரில் எல்லாறும் உண்டு //

சகோதரன் நேசன் அவர்களே! நான் இங்கு சொல்ல வரும் விடயம், முதலில் புலம் பெயர்ந்தவர்கள் யார் என்பதனைத் தான். போராட்டம் ஆரம்பித்த பின்னரோ, அதற்கு முற்பட்ட காலங்களிலோ வேளாண்மை செய்து பணக்காரராக இருப்பவர்கள் அல்லாத, அன்றாடம் காய்ச்சிகளும், கூலி வேலை செய்பவர்களும் எப்படிப் புலம் பெயர முடியும்?

அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்களும் கீழ்ச்சாதி என முத்திரை குத்தப்படும் மக்களும் புலம் பெயர்ந்து வாழ பணம் எங்கேயிருந்து வந்தது?
முதலில் மேற் சாதியினர் புலம் பெயர்ந்தார்கள் எனும் கருத்தில் தவறு இல்லைத் தானே சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

மிக துணிச்சலான பதிவு//

இதில் என்ன துணிச்சல் இருக்கிறது சகோதரம். எங்களின் குப்பைகளை நாங்களே கிளறிப் பார்க்கிறோம். அவ்வளவும் தான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

மிக துணிச்சலான பதிவு//

இதில் என்ன துணிச்சல் இருக்கிறது சகோதரம். எங்களின் குப்பைகளை நாங்களே கிளறிப் பார்க்கிறோம். அவ்வளவும் தான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


சூப்பர் ஹிட் போஸ்ட் போல.. சாரி ஃபார் லேட்..//

நன்றிகள் சகோ.

//ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
ஈழம் பற்றிய நிறைய செய்திகள் தெரிந்துகொள்ள முடிந்தது நண்பரே//

நன்றிகள் சகோதரம்.//

விக்கி உலகம் said... [Reply to comment]
பகிர்வுக்கு நன்றி நண்பா

வஞ்சிக்கப்படும் சமூகம் என்பதை தெளிவு படுத்தியுள்ளீர்கள் நன்றி.//

உங்களுக்கும் நன்றிகள் சகோதரம்.

//ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
மகுடத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//

மகுடத்தில் இடம் பெற வேண்டும் என்பதனை விட இத்தகைய அழுக்குகள் பலவற்றைக் கடந்து தான் ஈழத் தமிழினம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது எனும் நிஜத்தினை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்
நலூர் சங்கிலியன் அரண்மனைக்கு மேல ஏறி நின்று எட்டுத்திசையும் பார்த்தல் ஒவௌறு திசையிலும் ஒவொரு தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மன்னனுக்கு சேவை செய்ய அமர்தபட்டர்வர்கள் அது சாதி எனும் பெயரால் வேறுப்பட்டு காணப்படுகிறது//

ஆமாம் சகோதரம், அவை இன்றும் காணப்படுகிறது என்பதில் தவறில்லைத் தானே?


//ஏன் கடவுளிலும் சாதி உண்டு
நல்ல சாதி வாழும் இடத்தில் ஞான வைரவர்
குறைந்த சாதி வாழும் இடத்தில் சுடலை வைரவர்//

அட இந்த விசயம் என் நினைவிற்கு வரமால் போய்விட்டதே. அருமையான் கருத்து சகோதரம், நன்றிகள்.

//அனால் இப்பொழுது சாதி என்பது முன்பை விட மருகிவிட்டது என் நினைக்கிறான்
ஏன் மருகியது எப்படி மரிகியது இப்பொழுது என்ன நிலை என்பது பற்றியும் எழுதினால் தற்கால சிந்தைனகள் நிறைய கிடைக்கும்//

இப்பொழுது மருகி விட்டது எனும் கூற்றினை ஏற்க முடியாது சகோதரா. காரணம் இன்று பத்திரிகைகளில் வரும் மணமகன் மணமகள் தேவை விளம்பரங்களும், அடிக்கடி மந்துவில், வேம்பிராய், வ்டமாரட்சி, தென்மராட்சி, இடைக்காடு, கதிரிப்பாய், முதலிய பகுதிகளில் இடம் பெறும் சாதிச் சண்டைகளும் இப்பொழுதும் மருக வில்லை என்பதனை நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றன..
தற்கால சிந்தனைகளையும் விரைவில் எழுதலாம் என்றிருக்கிறேன். நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்
சசிகுமார் said... [Reply to comment]
அனுபவிக்கும் போது தான் தெரியும் உண்மையான வலி.//

நன்றிகள் சகோதரம்.//

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆனந்தி..
ம்ம்...படிச்சேன் நிருபன்...எப்படி இருக்கீங்க சகோ...உங்கள் ப்லாக் கின் தோற்றம் இப்ப ரொம்ப அழகு சகோ...நாற்று க்கு தகுந்த related விஷயங்கள் ப்லாக் முழுசும் பரவி.பச்சை எழுத்துகளில் நாற்று கம்பீரமாய்...மகிழ்ச்சி சகோ...//

உங்களைப் போன்ற பல ரசிகர்களின் ஊக்கங்களினாலும், கருத்துக்களாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சகோதரம்.
நாற்று பற்றிய கருத்துக்களுக்கும், உங்களின் குறிப்புக்களிற்கும் நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தோழி பிரஷா

அசத்தலான பதிவு. உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் நிரூபன்.//

நன்றிகள் சகோதரம், துணிச்சலான பதிவு என்பதனை விட இப்படியான தகவல்களைத் தேடி, பல நூல்களைப் படிக்கும் போது எங்களின் கடந்த கால வரலாறுகள், எம் முன்னோர்கள் விட்ட பிழைகளை நினைக்கையில் பயங்கர கோபமும், சினமும் தான் தோன்றுகிறது சகோதரி.

Anonymous said...
Best Blogger Tips

@ நிரூபன் - //வடக்கு கிழக்கு தமிழீழ மாநிலத்தில் சிங்களவர் இடைக்காலத்தில் வாழவே இல்லை என நிரூபிக்க முடியுமா?//

// நிரூபிக்க முடியும் சகோதரம். //

இல்லை சகோ. சிங்களவர்கள் ஒரு காலத்திலும் அதாவது 13 நூற்றாண்டுக்கு முன் வட கிழக்கில் வாழவே இல்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. காரணம் சிங்கள ஊர்களின் இருப்பு மட்டுமில்லை, இலங்கைத் தமிழர்களின் ஜெனிடிக் ஆய்வும் இதனை நிரூபிக்கின்றது. எப்படி தற்கால சிங்களவர்கள் தமது தமிழ்நாட்டுத் தொடர்பினை மறைக்க முற்படுகின்றார்களோ அதே அளவுக்கு ஈழத்தமிழ் வரலாற்று ஆசிரியர் பலரும் கற்பிதங்களை வரலாற்றில் புகுத்த முனைகிறார்கள். ஈழத்தமிழர் - சிங்களவர்களுக்கு இடையிலான தொடர்புகள் பன்னெடுங்காலமாக இருந்து வருவன. அதனை மொழி, புவியியல், தொல் பொருள், மற்றும் இரத்தத் தொடர்புகள் உறுதி செய்கின்றன

Anonymous said...
Best Blogger Tips

// யாழ்ப்பாண வைபவ மாலையின் கூற்றுப் படி இந்தியாவின் கலிங்க தேசத்தைச் சேர்ந்த மாகன் என அழைக்கப்படும் மன்னன் கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபாகத்தை ஆட்சி செய்திருக்கிறான். கலிங்க மாகன் இந்தியாவின் கலிங்க தேசத்தில் இருந்து வந்த காரணத்தால், யாழ்ப்பாணத்தில் அவன் உருவாக்கிய இராசியத் தலைநகரங்களுக்கு கலிங்க நாட்டின் பாளி மொழிப் பெயர்களையே வைத்திருக்கிறான். //

யாழ்ப்பாண வைபவ மாலையின் கூற்றுப்படி கலிங்க மாகன் 13 நூற்றாண்டில் வந்து இலங்கையின் வடபாகத்தைக் கைப்பற்றினான் என்பது உண்மையே ஆனால் அதனால் அவன் பாளி மொழிப் பெயர்களை வைத்தான் என்பது வரலாற்று அறியாமைத்தனம் ஆகும்.

ஏனெனில் 13 நூற்றாண்டில் கலிங்க நாட்டில் பாளி மொழி வழக்கொழிந்து விட்டது. 7ம் நூற்றாண்டிலேயே அங்கு ஒரியா மொழி உருவாகிவிட்டது. ஒரிய மொழியின் பாளியின் தாக்கம் குறைந்தும் விட்டது. சிற்சில சொற்களைத் தவிர்த்து ஏனையவை ஒரிய மொழியில் தான் இருந்து வந்ததை ஏற்கனவே ஒரிய வரலாறுகள் மூலம் அறிந்துக் கொண்டேன். கலிங்க மாகன் உருவாக்கிய நகரங்கள் வடமொழியில் பெயரிட்டாலும் பல்வேறு ஊர்ப் பெயர்கள் ஏற்கனவே இருந்து வந்த ஊர்ப் பெயர்களே !!! அங்கு குடியேறிய கேரளர்களும், தமிழர்களும் அந்த ஊர்ப்பெயர்களை தமிழ்மயப்படுத்தி வழங்கி வந்தனர் என்பதே உண்மை. அவற்றில் நோக்கப்படவேண்டியவை பழைய ஊர்ப்பெயர்கள் தமிழ்ப்படுத்தப்பட்டும், புதிய ஊர்ப்பெயர்கள் தமிழ்ப் பெயராலும், சில ஊர்ப்பெயர்கள் பாதி தமிழிலும் - பாதி சிங்களத்திலும் இருந்தன.. இருக்கின்றன... இந்த ஊர்ப்பெயர்களை விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கின்றன.

Anonymous said...
Best Blogger Tips

// இவற்றையெல்லாம் கலாநிதி முருகர் குணசிங்கம் ஆராய்ச்சி செய்திருக்கிறார் சகோதரம், கி.மு300- கி.பி 300வரையான காலப் பகுதி தமிழர் ஆட்சியமைப்பு பற்றியும், அதனுடன் தொடர்புடைய வரலாறுகளையும் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் எனும் நூலில் நீங்கள் கண்டு கொள்ளலாம். ISBN 978-0-646-49455-5 //



கலாநிதி முருகர் குணசிங்கத்தின் நூலினை தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்தேன் ஆனால், அவை யாவும் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும், எப்படியாவது தமிழர்களின் வரலாற்றை அந்தக் காலக் கட்டத்தில் புகுத்தலாம் என்றக் கோணத்தில் தான் இருக்கின்றது. அவற்றை ஒரு ஓப்பீட்டுக்கு பயன்படுத்தலாமே தவிர முழுமையான ஒரு வரலாறாக அந்நூலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.



அதே போல தமிழர்கள் கி.மு. 1 முதல் கிபி 9 வரை இடையிலான பகுதியில் ஆட்சி செலுத்தி இருந்திருந்தால்



ஏன் ஒரு தமிழ் கல்வெட்டினையும் விட்டுச் செல்லவில்லை,



ஏன் அந்தக் காலத்தில் ஒரு தமிழ் கோயிலையும் கட்டவில்லை,



தமிழர்கள் ஆட்சி செலுத்தி இருந்திருந்தால் ஏன் பழந்தமிழ் ஊர்ப் பெயர்கள் வட இலங்கையில் காணப்படவில்லை. (எ-டு) பாக்கம், சேரி, போன்ற மீனவ தமிழ் ஊர்ப்பெயர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காண முடியவில்லை. சாவகச்சேரி என்ற ஊர்ப் பெயரே பிற்கால சாவகரின் படையெடுப்பின் பின் வந்தவை ஆகும்.



ஏன் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கியங்கள் வடக்கு இலங்கையில் இருந்து எழவில்லை?



ஏன் தமிழகத்தில் களப்பிரர் - பல்லவர் காலத்தின் சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களிலும்,  கல்வெட்டுகளிலும் வடக்கு இலங்கையின் தமிழ் அரசுகளைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல் போனது.



இந்தக் கேள்விகளுக்கு தக்கதொரு ஆதாரமான பதில் கிடைத்தால் மட்டுமே அவற்றை உலக வரலாறுகளோடும், சிங்கள வரலாற்று வாதிகளோடும் அடித்துப் பேச முடியும்.



நிச்சயம் வரலாறுகளை தெளிவாக ஆராய்ந்தால் மட்டுமே சாதியத்தின் ஆணிவேரையும் கழற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை.. தேடுவோம்..... பதில் கிடைக்காமலா போகும்.

Anonymous said...
Best Blogger Tips

//சாவக மன்னன் வருவதற்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற குறிப்புக்களை வைத்துப் பார்க்கையில் சாவக மன்னன் காலத்திலும் யாழ்ப்பாணத்தில் தமிழர்களே வாழ்ந்தார்கள் எனும் முடிவுக்கு வரமுடியாதா சகோதரம்? //



@ நிரூபன் - சாவக மன்னன் வருகையின் போது இலங்கையின் வடக்கில் தமிழர்கள் இல்லை என நான் கூறவில்லை ..... காரணம் 9ம் நூற்றாண்டின் இறுதியிலே சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கையின் வட பகுதி, ஆகக் குறைந்தது யாழ்ப்பாண தீபகம் வந்துவிட்டன. அதனால் அக்காலத்தில் தமிழர்களின் குடியேற்றம் சோழர் காலத்திலேயே எழுந்துவிட்டன. அது மட்டுமின்றி சோழ நாட்டில் இருந்து வடக்கு கிழக்கு மத்திய இலங்கை வரை மக்கள் குடியேறினார்கள் என்பதையும் அவர்களில் பெரும்பாலானோர் சிங்கள மக்களோடும் கலந்துவிட்டனர். இதனை நான் மறுக்கவில்லை. எனது ஆய்வே பிற்கால சோழப் பேரரசு உருவாக முன்னர் தமிழர்கள் வடக்கில் செறிந்து வாழவில்லை... அங்கு எப்படியான மக்கள் வாழ்ந்தார்கள் - அவர்கள் சிங்கள மக்களோடு தொடர்புடையவர்களாகவோ அல்லது கலப்புற்றவர்களாகவோ இருந்திருக்க வேண்டும். ஒரு வேளை தமிழ் - சிங்களம் இரண்டுக்கு இடைப்பட்ட இனமாக இருந்தத்தா> போன்ற கேள்விகள் எழுகின்றது.

moovendar said...
Best Blogger Tips

4. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் சாதியினை மறைக்க வெள்ளாளராக காட்டிக் கொண்டு டச்சு அரசின் துணையோடு பல நிலங்களையும், புலங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

நண்பர் இக்பால் செல்வன் அவர்களே உங்கள் தரவுகள் வரலாறின் அடிப்படையில் மிகவும் உண்மை.பள்ளர்கள் தான் அதிகம்
வெள்ளாளர் ஆகினர்.

moovendar said...
Best Blogger Tips

4. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போர் தமது பள்ளர் சாதியினை மறைக்க வெள்ளாளராக காட்டிக் கொண்டு டச்சு அரசின் துணையோடு பல நிலங்களையும், புலங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

நண்பர் இக்பால் செல்வன் அவர்களே உங்கள் தரவுகள் வரலாறின் அடிப்படையில் மிகவும் உண்மை.பள்ளர்கள் தான் அதிகம்
வெள்ளாளர் ஆகினர்.

moovendar said...
Best Blogger Tips

1. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் எனப்படுவோர் ஒரே சாதியே அல்ல

2. ஈழத்தமிழர்களில் வெள்ளாளர் என்போரில் பெரும்பான்மையானவர்கள் சோழ நாட்டில் இருந்து குடியேறிய பள்ளரும், பாண்டிய - சேர நாட்டில் இருந்து குடியேறிய ஈழவருமே அதிகமானோர்.
நண்பர் இக்பால் செல்வன் அவர்களே உங்கள் தரவுகள் வரலாறின் அடிப்படையில் மிகவும் உண்மை.பள்ளர்கள் தான் அதிகம்
வெள்ளாளர் ஆகினர்.

jeya said...
Best Blogger Tips

யாழ்ப்பாணத்தில் முன்பு இருந்த ஜாதிகள்.இப்போ அவர்கள் அநேகமாக வெள்ளாளர் ஆகிவிட்டனர்
Burgher -------477
Bramman -------1935
Chetty --------- 1807
Madappally ---12995
Moors ---2166
Paradesy --- 1830
Mallagam --- 1501
--
Cariar ---- 7562
Brassfounder --- 105
Masons ---- 47
Tuners -- 76
Welper ---50
Cycolas --- 1043
Chandar ---- 2173
Dyers ---902
Chevia --- 1593
Pandaram---- 41
Parawa --- 35
Tannecaras --- 1371
Silversmith --- 899
Blacksmith --- 904
Carpenters --- 1371
Barbers --- 1024
slave of Burgher -- 18
Washermen --- 2152
Moquah ---2532
Malayalam ---210
Covias --- 6401
Company Nalum --- 739
Pallas ---6313
Parayars --- 1621
Torampas --- 197
Weavers -- 272
Cawere chetty ---18
Tawesy --- 437
Nattowen --- 22
Oil monger --- 4
Tunmilah --- 1291
Pallevely ---376
Simpadawer --- 40
cadia ---970
Nallua --- 7559
Potters --- 329
Ship carpenter -- 33
Marava --- 54
Choyaroot-Digger ---408
Paramber --- 362
-
Free slaves --- 348

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails